Sunday, April 10, 2022

1.123 - பூவியல் புரிகுழல் - pooviyal purikuzhal

108) 1.123 - பூவியல் புரிகுழல் - pooviyal purikuzhal

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.123 – பூவியல் புரிகுழல் - திருவலிவலம் - (திருவிராகம்) (பண் - வியாழக்குறிஞ்சி)

sambandar tēvāram - padigam 1.123 – pūviyal purikuḻal - tiruvalivalam - (tiruvirāgam) (paṇ - viyāḻakkuṟiñji)

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 1.123 – பூவியல் புரிகுழல் - pūviyal purikuḻal

English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_123.HTM

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/_rRGgec08Lk

Part-2: https://youtu.be/V2H6VdTsfYE

English discussion:

Part-1:

Part-2:

***

V. Subramanian

===================== ================

 This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.123 – திருவலிவலம் - (திருவிராகம்) (பண் - வியாழக்குறிஞ்சி)


திருவலிவலம் -

த்தலம் திருவாரூரிலிருந்து தென்கிழக்கே சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. சுவாமி சந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது.

இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. கோயிலைச் சுற்றிக் கிழக்குப்பக்கம் தவிர அகழி சூழ்ந்திருக்கிறது.

No special notes in Periyapuranam about the context of this padhigam.


My notes of this padhigam:

The 5th song of this padhigam is popular. It refers to Ganapathi (Vinayaka). The 4th song has nice poetic imagery of Siva's matted locks, Ganga river, moon, and snake on His head.


This padhigam is in a highly rhythmic meter - consisting of short-vowelled syllables that can be sung in a fast pace. (i.e. there are no pure strong consonants - or nasal consonant followed by strong consonant syllable - that stop the fast flow).


திருவிராகம் - Some info:

My note: There are several padhigams in Sambandar Thevaram that are classified as "thiruvirAgam". These padhigams have fast moving rhythmic meters - such as "தனதன தனதன ....", "தானதன தானதன ....", etc.

பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் சேக்கிழார் சொல்வது - 12.28.277 - "மேன்மை நடையின் முடுகும் இராகம்"; ( = மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த 'திருவிராகம்' என்ற பதிகங்களும்); குறிப்புரையில் காண்பது: "இவ்வாறு முடுகி வரும் ஓசை அமைப்பை அராகம் என்பர். காலப்போக்கில் அது இராகம் என மாறிற்று."

----------


# 2413 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 515

மல்ல னீடிய வலிவலங் கோளிலி முதலாந்

தொல்லை நான்மறை முதல்வர்தம் பதிபல தொழுதே,

யெல்லை யில்திருப் பதிகங்க ளாற்பணிந் தேத்தி

யல்ல றீர்ப்பவர் மீண்டுமா ரூர்தொழ வணைந்தார்.

Word Separated:

மல்லல் நீடிய வலிவலம் கோளிலி முதலாம்

தொல்லை நான்மறை முதல்வர்தம் பதி பல தொழுதே,

எல்லை-இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி,

அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.123 – திருவலிவலம் - (திருவிராகம்) (பண் - வியாழக்குறிஞ்சி)

(தனதன தனதன தனதன தனதன - என்ற சந்தம்;

In some songs, the line beginnings can come as - "தானன";

In all songs, at the end of the song it is - "தனனா")

பாடல் எண் : 1

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்

ஏவியல் கணைபிணை யெதிர்விழி உமையவள்

மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்

மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

பூ-இயல் புரி-குழல், வரி-சிலை நிகர் நுதல்,

ஏவு-இயல் கணை பிணை எதிர் விழி உமையவள்

மேவிய திருவுரு உடையவன் விரை-மலர்

மா-இயல் பொழில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 2

இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு

பட்டவிர் பவளநன் மணியென வணிபெறு

விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்

மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

இட்டமது அமர்-பொடி இசைதலின் நசை-பெறு

பட்டு-அவிர் பவள-நன் மணி-என அணி-பெறு

விட்டு-ஒளிர் திருவுரு உடையவன் விரை-மலர்

மட்டு-அமர் பொழில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 3

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்

வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி

கருமணி நிகர்கள முடையவன் மிடைதரு

மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

உரு-மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்

வெருவுறு வகை எழு விடம் வெளி-மலை அணி

கரு-மணி நிகர் களம் உடையவன் மிடைதரு

மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 4

அனனிகர் சடையழ லவியுற வெனவரு

புனனிகழ் வதுமதி நனைபொறி யரவமும்

எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை

மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

Word Separated:

அனல் நிகர் சடை அழல் அவியுற என வரு

புனல் நிகழ்வது மதி நனை-பொறி அரவமும்

என நினைவொடு வரும் இது மெல; முடிமிசை

மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 5

பிடியத னுருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

பிடி-அதன் உரு உமை கொள, மிகு கரி-அது

வடிகொடு தனது-அடி வழிபடும் அவர்-இடர்

கடி கணபதி வர அருளினன்; மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 6

தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக

விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து

நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்

வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

தரை-முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,

விரை-மலி குழல் உமையொடு விரவது செய்து,

நரை திரை கெடு தகையது அருளினன்; எழில்

வரை-திகழ் மதில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 7

நலிதரு தரைவர நடைவரு மிடையவர்

பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு

பலிகொள வருபவ னெழின்மிகு தொழில்வளர்

வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

நலிதரு தரை வர நடை வரும் இடையவர்,

பொலிதரு மடவரலியர் மனை-அது புகு

பலி-கொள வருபவன்; எழில்-மிகு தொழில்-வளர்

வலி-வரு மதில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 8

இரவண னிருபது கரமெழின் மலைதனின்

இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து

இரவண மமர்பெய ரருளின னகநெதி

இரவண நிகர்வலி வலமுறை யிறையே.

Word Separated:

இரவணன் இருபது கரம் எழில்-மலைதனின்

இரவணம் நினைதர அவன் முடி பொடி-செய்து,

இரவணம் அமர் பெயர் அருளினன் நகநெதி *

இரவணம் நிகர் வலிவலம் உறை இறையே.

(* அருளின னகநெதி = அருளினன் அகநெதி? அருளினன் நகநெதி? )


பாடல் எண் : 9

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்

ஏனம தாய்நில மகழரி யடிமுடி

தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி

வானணை மதில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

தேன் அமர் தரு மலர் அணைபவன், வலி மிகும்

ஏனமதாய் நிலம் அகழ் அரி அடிமுடி

தான் அணையா உரு உடையவன்; மிடை-கொடி

வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 10

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்

நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது

தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்

மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.

Word Separated:

இலை மலி-தர மிகு துவர்-உடை அவர்களும்,

நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது

தொலை, வலி நெடு மறை தொடர்-வகை உருவினன்;

மலை-மலி மதில் வலிவலம் உறை இறையே.


பாடல் எண் : 11

மன்னிய வலிவல நகருறை யிறைவனை

இன்னியல் கழுமல நகரிறை யெழின்மறை

தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை

உன்னிய வொருபது முயர்பொருள் தருமே.

Word Separated:

மன்னிய வலிவல நகர் உறை இறைவனை

இன்-இயல் கழுமல நகர் இறை எழில்-மறை

தன்-இயல் கலை வல தமிழ்-விரகனது உரை

உன்னிய ஒருபதும் உயர்-பொருள் தருமே.

==================== ===============


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


# 2413 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 515

mallal nīḍiya valivalam kōḷili mudalām

tollai nānmaṟai mudalvardam padi pala toḻudē,

ellai-il tiruppadigaṅgaḷāl paṇindu ētti,

allal tīrppavar mīṇḍum ārūr toḻa aṇaindār.


sambandar tēvāram - padigam 1.123 – tiruvalivalam - (tiruvirāgam) (paṇ - viyāḻakkuṟiñji)

(tanadana tanadana tanadana tanadana - Rhythm;

In some songs, the line beginnings can come as - "tānana";

In all songs, at the end of the song it is - "tananā")

pāḍal eṇ : 1

pūviyal purikuḻal varisilai nigarnudal

ēviyal kaṇaipiṇai yedirviḻi umaiyavaḷ

mēviya tiruvuru vuḍaiyavan viraimalar

māviyal poḻilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

pū-iyal puri-kuḻal, vari-silai nigar nudal,

ēvu-iyal kaṇai piṇai edir viḻi umaiyavaḷ

mēviya tiruvuru uḍaiyavan virai-malar

mā-iyal poḻil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 2

iṭṭama damarpoḍi yisaidali nasaipeṟu

paṭṭavir pavaḷanan maṇiyena vaṇipeṟu

viṭṭoḷir tiruvuru vuḍaiyavan viraimalar

maṭṭamar poḻilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

iṭṭamadu amar-poḍi isaidalin nasai-peṟu

paṭṭu-avir pavaḷa-nan maṇi-ena aṇi-peṟu

viṭṭu-oḷir tiruvuru uḍaiyavan virai-malar

maṭṭu-amar poḻil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 3

urumali kaḍalkaḍai vuḻiyula gamaruyir

veruvuṟu vagaiyeḻu viḍamveḷi malaiyaṇi

karumaṇi nigarkaḷa muḍaiyavan miḍaidaru

marumali poḻilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

uru-mali kaḍal kaḍaivuḻi ulagu amar uyir

veruvuṟu vagai eḻu viḍam veḷi-malai aṇi

karu-maṇi nigar kaḷam uḍaiyavan miḍaidaru

maru mali poḻil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 4

ananigar saḍaiyaḻa laviyuṟa venavaru

punanigaḻ vadumadi nanaipoṟi yaravamum

enaninai voḍuvaru midumela muḍimisai

manamuḍai yavarvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

anal nigar saḍai aḻal aviyuṟa ena varu

punal nigaḻvadu madi nanai-poṟi aravamum

ena ninaivoḍu varum idu mela; muḍimisai

manam uḍaiyavar valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 5

piḍiyada nuruvumai koḷamigu kariyadu

vaḍigoḍu tanadaḍi vaḻibaḍu mavariḍar

kaḍigaṇa badivara varuḷinan migukoḍai

vaḍivinar payilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

piḍi-adan uru umai koḷa, migu kari-adu

vaḍigoḍu tanadu-aḍi vaḻibaḍum avar-iḍar

kaḍi kaṇabadi vara aruḷinan; migu koḍai

vaḍivinar payil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 6

taraimuda lulagini luyirpuṇar tagaimiga

viraimali kuḻalumai yoḍuvira vaduseydu

naraitirai keḍudagai yaduvaru ḷinaneḻil

varaitigaḻ madilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

tarai-mudal ulaginil uyir puṇar tagai miga,

virai-mali kuḻal umaiyoḍu viravadu seydu,

narai tirai keḍu tagaiyadu aruḷinan; eḻil

varai-tigaḻ madil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 7

nalidaru taraivara naḍaivaru miḍaiyavar

polidaru maḍavara liyarmanai yadupugu

palikoḷa varubava neḻinmigu toḻilvaḷar

valivaru madilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

nalidaru tarai vara naḍai varum iḍaiyavar,

polidaru maḍavaraliyar manai-adu pugu

pali-koḷa varubavan; eḻil-migu toḻil-vaḷar

vali-varu madil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 8

iravaṇa nirubadu karameḻin malaidanin

iravaṇa ninaidara vavanmuḍi poḍiseydu

iravaṇa mamarpeya raruḷina naganedi

iravaṇa nigarvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

iravaṇan irubadu karam eḻil-malaidanin

iravaṇam ninaidara avan muḍi poḍi-seydu,

iravaṇam amar peyar aruḷinan naganedi *

iravaṇam nigar valivalam uṟai iṟaiyē.

(* aruḷina naganedi = aruḷinan aganedi? aruḷinan naganedi? )


pāḍal eṇ : 9

tēnamar tarumala raṇaibavan valimigum

ēnama dāynila magaḻari yaḍimuḍi

tānaṇai yāvuru vuḍaiyavan miḍaikoḍi

vānaṇai madilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

tēn amar taru malar aṇaibavan, vali migum

ēnamadāy nilam agaḻ ari aḍimuḍi

tān aṇaiyā uru uḍaiyavan; miḍai-koḍi

vān aṇai madil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 10

ilaimali taramigu tuvaruḍai yavargaḷum

nilaimaiyi luṇaluḍai yavargaḷu ninaivadu

tolaivali neḍumaṟai toḍarvagai yuruvinan

malaimali madilvali valamuṟai yiṟaiyē.

Word Separated:

ilai mali-tara migu tuvar-uḍai avargaḷum,

nilaimaiyil uṇal uḍaiyavargaḷum ninaivadu

tolai, vali neḍu maṟai toḍar-vagai uruvinan;

malai-mali madil valivalam uṟai iṟaiyē.


pāḍal eṇ : 11

manniya valivala nagaruṟai yiṟaivanai

inniyal kaḻumala nagariṟai yeḻinmaṟai

tanniyal kalaivala tamiḻvira ganadurai

unniya vorubadu muyarporuḷ tarumē.

Word Separated:

manniya valivala nagar uṟai iṟaivanai

in-iyal kaḻumala nagar iṟai eḻil-maṟai

tan-iyal kalai vala tamiḻ-viraganadu urai

unniya orubadum uyar-poruḷ tarumē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


# 2413 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 515

मल्लल् नीडिय वलिवलम् कोळिलि मुदलाम्

तॊल्लै नान्मऱै मुदल्वर्दम् पदि पल तॊऴुदे,

ऎल्लै-इल् तिरुप्पदिगङ्गळाल् पणिन्दु एत्ति,

अल्लल् तीर्प्पवर् मीण्डुम् आरूर् तॊऴ अणैन्दार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.123 – तिरुवलिवलम् - (तिरुविरागम्) (पण् - वियाऴक्कुऱिञ्जि)

(तनदन तनदन तनदन तनदन - Rhythm;

In some songs, the line beginnings can come as - "तानन";

In all songs, at the end of the song it is - "तनना")

पाडल् ऎण् : 1

पूवियल् पुरिकुऴल् वरिसिलै निगर्नुदल्

एवियल् कणैपिणै यॆदिर्विऴि उमैयवळ्

मेविय तिरुवुरु वुडैयवन् विरैमलर्

मावियल् पॊऴिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

पू-इयल् पुरि-कुऴल्, वरि-सिलै निगर् नुदल्,

एवु-इयल् कणै पिणै ऎदिर् विऴि उमैयवळ्

मेविय तिरुवुरु उडैयवन् विरै-मलर्

मा-इयल् पॊऴिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 2

इट्टम दमर्-पॊडि यिसैदलि नसैपॆऱु

पट्टविर् पवळनन् मणियॆन वणिपॆऱु

विट्टॊळिर् तिरुवुरु वुडैयवन् विरैमलर्

मट्टमर् पॊऴिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

इट्टमदु अमर्-पॊडि इसैदलिन् नसै-पॆऱु

पट्टु-अविर् पवळ-नन् मणि-ऎन अणि-पॆऱु

विट्टु-ऒळिर् तिरुवुरु उडैयवन् विरै-मलर्

मट्टु-अमर् पॊऴिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 3

उरुमलि कडल्कडै वुऴियुल गमरुयिर्

वॆरुवुऱु वगैयॆऴु विडम्वॆळि मलैयणि

करुमणि निगर्कळ मुडैयवन् मिडैदरु

मरुमलि पॊऴिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

उरु-मलि कडल् कडैवुऴि उलगु अमर् उयिर्

वॆरुवुऱु वगै ऎऴु विडम् वॆळि-मलै अणि

करु-मणि निगर् कळम् उडैयवन् मिडैदरु

मरु मलि पॊऴिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 4

अननिगर् सडैयऴ लवियुऱ वॆनवरु

पुननिगऴ् वदुमदि ननैपॊऱि यरवमुम्

ऎननिनै वॊडुवरु मिदुमॆल मुडिमिसै

मनमुडै यवर्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

अनल् निगर् सडै अऴल् अवियुऱ ऎन वरु

पुनल् निगऴ्वदु मदि ननै-पॊऱि अरवमुम्

ऎन निनैवॊडु वरुम् इदु मॆल; मुडिमिसै

मनम् उडैयवर् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 5

पिडियद नुरुवुमै कॊळमिगु करियदु

वडिगॊडु तनदडि वऴिबडु मवरिडर्

कडिगण बदिवर वरुळिनन् मिगुकॊडै

वडिविनर् पयिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

पिडि-अदन् उरु उमै कॊळ, मिगु करि-अदु

वडिगॊडु तनदु-अडि वऴिबडुम् अवर्-इडर्

कडि कणबदि वर अरुळिनन्; मिगु कॊडै

वडिविनर् पयिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 6

तरैमुद लुलगिनि लुयिर्पुणर् तगैमिग

विरैमलि कुऴलुमै यॊडुविर वदुसॆय्दु

नरैतिरै कॆडुदगै यदुवरु ळिननॆऴिल्

वरैदिगऴ् मदिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

तरै-मुदल् उलगिनिल् उयिर् पुणर् तगै मिग,

विरै-मलि कुऴल् उमैयॊडु विरवदु सॆय्दु,

नरै तिरै कॆडु तगैयदु अरुळिनन्; ऎऴिल्

वरै-तिगऴ् मदिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 7

नलिदरु तरैवर नडैवरु मिडैयवर्

पॊलिदरु मडवर लियर्मनै यदुपुगु

पलिकॊळ वरुबव नॆऴिन्मिगु तॊऴिल्वळर्

वलिवरु मदिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

नलिदरु तरै वर नडै वरुम् इडैयवर्,

पॊलिदरु मडवरलियर् मनै-अदु पुगु

पलि-कॊळ वरुबवन्; ऎऴिल्-मिगु तॊऴिल्-वळर्

वलि-वरु मदिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 8

इरवण निरुबदु करमॆऴिन् मलैदनिन्

इरवण निनैदर ववन्मुडि पॊडिसॆय्दु

इरवण ममर्पॆय ररुळिन नगनॆदि

इरवण निगर्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

इरवणन् इरुबदु करम् ऎऴिल्-मलैदनिन्

इरवणम् निनैदर अवन् मुडि पॊडि-सॆय्दु,

इरवणम् अमर् पॆयर् अरुळिनन् नगनॆदि *

इरवणम् निगर् वलिवलम् उऱै इऱैये.

(* अरुळिन नगनॆदि = अरुळिनन् अगनॆदि? अरुळिनन् नगनॆदि? )


पाडल् ऎण् : 9

तेनमर् तरुमल रणैबवन् वलिमिगुम्

एनम दाय्निल मगऴरि यडिमुडि

तानणै यावुरु वुडैयवन् मिडैकॊडि

वानणै मदिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

तेन् अमर् तरु मलर् अणैबवन्, वलि मिगुम्

एनमदाय् निलम् अगऴ् अरि अडिमुडि

तान् अणैया उरु उडैयवन्; मिडै-कॊडि

वान् अणै मदिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 10

इलैमलि तरमिगु तुवरुडै यवर्गळुम्

निलैमैयि लुणलुडै यवर्गळु निनैवदु

तॊलैवलि नॆडुमऱै तॊडर्वगै युरुविनन्

मलैमलि मदिल्वलि वलमुऱै यिऱैये.

Word Separated:

इलै मलि-तर मिगु तुवर्-उडै अवर्गळुम्,

निलैमैयिल् उणल् उडैयवर्गळुम् निनैवदु

तॊलै, वलि नॆडु मऱै तॊडर्-वगै उरुविनन्;

मलै-मलि मदिल् वलिवलम् उऱै इऱैये.


पाडल् ऎण् : 11

मन्निय वलिवल नगरुऱै यिऱैवनै

इन्नियल् कऴुमल नगरिऱै यॆऴिन्मऱै

तन्नियल् कलैवल तमिऴ्विर गनदुरै

उन्निय वॊरुबदु मुयर्पॊरुळ् तरुमे.

Word Separated:

मन्निय वलिवल नगर् उऱै इऱैवनै

इन्-इयल् कऴुमल नगर् इऱै ऎऴिल्-मऱै

तन्-इयल् कलै वल तमिऴ्-विरगनदु उरै

उन्निय ऒरुबदुम् उयर्-पॊरुळ् तरुमे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

# 2413 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 515

మల్లల్ నీడియ వలివలం కోళిలి ముదలాం

తొల్లై నాన్మఱై ముదల్వర్దం పది పల తొఴుదే,

ఎల్లై-ఇల్ తిరుప్పదిగంగళాల్ పణిందు ఏత్తి,

అల్లల్ తీర్ప్పవర్ మీండుం ఆరూర్ తొఴ అణైందార్.


సంబందర్ తేవారం - పదిగం 1.123 – తిరువలివలం - (తిరువిరాగం) (పణ్ - వియాఴక్కుఱింజి)

(తనదన తనదన తనదన తనదన - Rhythm;

In some songs, the line beginnings can come as - "తానన";

In all songs, at the end of the song it is - "తననా")

పాడల్ ఎణ్ : 1

పూవియల్ పురికుఴల్ వరిసిలై నిగర్నుదల్

ఏవియల్ కణైపిణై యెదిర్విఴి ఉమైయవళ్

మేవియ తిరువురు వుడైయవన్ విరైమలర్

మావియల్ పొఴిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

పూ-ఇయల్ పురి-కుఴల్, వరి-సిలై నిగర్ నుదల్,

ఏవు-ఇయల్ కణై పిణై ఎదిర్ విఴి ఉమైయవళ్

మేవియ తిరువురు ఉడైయవన్ విరై-మలర్

మా-ఇయల్ పొఴిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 2

ఇట్టమ దమర్పొడి యిసైదలి నసైపెఱు

పట్టవిర్ పవళనన్ మణియెన వణిపెఱు

విట్టొళిర్ తిరువురు వుడైయవన్ విరైమలర్

మట్టమర్ పొఴిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

ఇట్టమదు అమర్-పొడి ఇసైదలిన్ నసై-పెఱు

పట్టు-అవిర్ పవళ-నన్ మణి-ఎన అణి-పెఱు

విట్టు-ఒళిర్ తిరువురు ఉడైయవన్ విరై-మలర్

మట్టు-అమర్ పొఴిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 3

ఉరుమలి కడల్కడై వుఴియుల గమరుయిర్

వెరువుఱు వగైయెఴు విడమ్వెళి మలైయణి

కరుమణి నిగర్కళ ముడైయవన్ మిడైదరు

మరుమలి పొఴిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

ఉరు-మలి కడల్ కడైవుఴి ఉలగు అమర్ ఉయిర్

వెరువుఱు వగై ఎఴు విడం వెళి-మలై అణి

కరు-మణి నిగర్ కళం ఉడైయవన్ మిడైదరు

మరు మలి పొఴిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 4

అననిగర్ సడైయఴ లవియుఱ వెనవరు

పుననిగఴ్ వదుమది ననైపొఱి యరవముం

ఎననినై వొడువరు మిదుమెల ముడిమిసై

మనముడై యవర్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

అనల్ నిగర్ సడై అఴల్ అవియుఱ ఎన వరు

పునల్ నిగఴ్వదు మది ననై-పొఱి అరవముం

ఎన నినైవొడు వరుం ఇదు మెల; ముడిమిసై

మనం ఉడైయవర్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 5

పిడియద నురువుమై కొళమిగు కరియదు

వడిగొడు తనదడి వఴిబడు మవరిడర్

కడిగణ బదివర వరుళినన్ మిగుకొడై

వడివినర్ పయిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

పిడి-అదన్ ఉరు ఉమై కొళ, మిగు కరి-అదు

వడిగొడు తనదు-అడి వఴిబడుం అవర్-ఇడర్

కడి కణబది వర అరుళినన్; మిగు కొడై

వడివినర్ పయిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 6

తరైముద లులగిని లుయిర్పుణర్ తగైమిగ

విరైమలి కుఴలుమై యొడువిర వదుసెయ్దు

నరైతిరై కెడుదగై యదువరు ళిననెఴిల్

వరైదిగఴ్ మదిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

తరై-ముదల్ ఉలగినిల్ ఉయిర్ పుణర్ తగై మిగ,

విరై-మలి కుఴల్ ఉమైయొడు విరవదు సెయ్దు,

నరై తిరై కెడు తగైయదు అరుళినన్; ఎఴిల్

వరై-తిగఴ్ మదిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 7

నలిదరు తరైవర నడైవరు మిడైయవర్

పొలిదరు మడవర లియర్మనై యదుపుగు

పలికొళ వరుబవ నెఴిన్మిగు తొఴిల్వళర్

వలివరు మదిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

నలిదరు తరై వర నడై వరుం ఇడైయవర్,

పొలిదరు మడవరలియర్ మనై-అదు పుగు

పలి-కొళ వరుబవన్; ఎఴిల్-మిగు తొఴిల్-వళర్

వలి-వరు మదిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 8

ఇరవణ నిరుబదు కరమెఴిన్ మలైదనిన్

ఇరవణ నినైదర వవన్ముడి పొడిసెయ్దు

ఇరవణ మమర్పెయ రరుళిన నగనెది

ఇరవణ నిగర్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

ఇరవణన్ ఇరుబదు కరం ఎఴిల్-మలైదనిన్

ఇరవణం నినైదర అవన్ ముడి పొడి-సెయ్దు,

ఇరవణం అమర్ పెయర్ అరుళినన్ నగనెది *

ఇరవణం నిగర్ వలివలం ఉఱై ఇఱైయే.

(* అరుళిన నగనెది = అరుళినన్ అగనెది? అరుళినన్ నగనెది? )


పాడల్ ఎణ్ : 9

తేనమర్ తరుమల రణైబవన్ వలిమిగుం

ఏనమ దాయ్నిల మగఴరి యడిముడి

తానణై యావురు వుడైయవన్ మిడైకొడి

వానణై మదిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

తేన్ అమర్ తరు మలర్ అణైబవన్, వలి మిగుం

ఏనమదాయ్ నిలం అగఴ్ అరి అడిముడి

తాన్ అణైయా ఉరు ఉడైయవన్; మిడై-కొడి

వాన్ అణై మదిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 10

ఇలైమలి తరమిగు తువరుడై యవర్గళుం

నిలైమైయి లుణలుడై యవర్గళు నినైవదు

తొలైవలి నెడుమఱై తొడర్వగై యురువినన్

మలైమలి మదిల్వలి వలముఱై యిఱైయే.

Word Separated:

ఇలై మలి-తర మిగు తువర్-ఉడై అవర్గళుం,

నిలైమైయిల్ ఉణల్ ఉడైయవర్గళుం నినైవదు

తొలై, వలి నెడు మఱై తొడర్-వగై ఉరువినన్;

మలై-మలి మదిల్ వలివలం ఉఱై ఇఱైయే.


పాడల్ ఎణ్ : 11

మన్నియ వలివల నగరుఱై యిఱైవనై

ఇన్నియల్ కఴుమల నగరిఱై యెఴిన్మఱై

తన్నియల్ కలైవల తమిఴ్విర గనదురై

ఉన్నియ వొరుబదు ముయర్పొరుళ్ తరుమే.

Word Separated:

మన్నియ వలివల నగర్ ఉఱై ఇఱైవనై

ఇన్-ఇయల్ కఴుమల నగర్ ఇఱై ఎఴిల్-మఱై

తన్-ఇయల్ కలై వల తమిఴ్-విరగనదు ఉరై

ఉన్నియ ఒరుబదుం ఉయర్-పొరుళ్ తరుమే.

================ ============

No comments:

Post a Comment