116) 6.55 – வேற்றாகி விண்ணாகி - (போற்றித் திருத்தாண்டகம்) - vEtRAgi viNNAgi - (pOtRi thiruththANdagam)
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.55 – வேற்றாகி விண்ணாகி - "போற்றித் திருத்தாண்டகம்" - கயிலாயம்
tirunāvukkarasar tēvāram - padigam 6.55 – vēṭrāgi viṇṇāgi - "pōṭrit tiruttāṇḍagam" - kayilāyam
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF:
https://drive.google.com/file/d/18jXa9B0IuEYLiJ-410MBWD4hjk5acvy2/view?usp=sharing
***
On
YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/qpZWuhF6XLQ
Part-2: https://youtu.be/swpdYPDkxP8
Part-3: https://youtu.be/3CHTXLr1CzU
Part-4: https://youtu.be/vsrzMoRuZ2M
English:
***
English translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_055.HTM
V.
Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.55 – கயிலாயம் - "போற்றித் திருத்தாண்டகம்"
கயிலாயம்: இது வடநாட்டுத் தலங்களுள் ஒன்று. சுந்தரர் தேவாரத்தில் "நொடித்தான்மலை" என்று கூறப்பெறுவதும் இத்தலமே. இம்மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாட்டின் மேற்பால் அமைந்துள்ளது. இங்கு இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடிய சிகரமே சிவலிங்கமாகக்
காட்சியளிக்கின்றது.
குறிப்பு : போற்றித் திருத்தாண்டகம் - போற்றியையுடைய தாண்டகம். இதில், "போற்றி" என்பது அச்சொல்லைக் குறித்தது. "போற்றினார்" என்பதனைப், "போற்றி செய்தார்" என்றல் வழக்காதலின், "போற்றி" என்பது இகர ஈற்றுத் தொழிற்பெயராகக் கொள்ளப்படும். அது "வணக்கம்" எனப் பொருள் தரும். வடமொழியில் "நம:" என்பதை ஒத்தது.
Background:
Thirunavukkarasar visited various temples in the north and reached Kasi. He left all the accompanying devotees in Kasi and proceeded alone toward Kailasam. As he climbed up the mountains, his legs became weak and he could not walk anymore. Still he persisted on going to Kailasam. He crawled and using his hands pushed himself forward on his chest but soon his skin, muscles, bones all were severely injured and he was totally unable to move. He was lying motionless on the ground.
Siva assumed the form of a rishi and appeared in front of him. He asked Thirunavukkarasar the reason for his coming there. Thirunavukkarasar told his intention to go to Kailasam to worship Siva and Parvathi. The rishi told him to go back saying that Kailasam is not reachable by humans. Thirunavukkarasar was steadfast in his goal and replied that this body would anyway perish one day and hence he would not go back without seeing Kailasam.
The rishi (Siva) disappeared and His divine voice said, "O Thirunavukkarasu! Get up!" At once, Thirunavukkarsar's body healed. Thirunavukkarasar got up and prayed for Kailasa darsanam. Siva said, "Take a dip in the lake nearby and you will have the Kailasa darsanam from Thiruvaiyaru".
Thirunavukkarasar felt extreme joy and sang the padhigam "6.55 - vēṭrāgi viṇṇāgi". Then he took a dip in that lake in the Himalayas. He came out in the temple tank in Thiruvaiyaru. Siva revealed the Kailasa darsanam to Thirunavukkarasar there. Thirunavukkarasar sang some more padhigams praising Siva and describing what he experienced. (6.56, 6.57 - both "pōṭri tiruttāṇḍagam" padhigams; & 4.3 - "mādarp piṟaik kaṇṇiyānai" padhigam).
--------
Thirunavukkarasar continues his quest to reach Kailasam - by rolling his body on the ground
# 1624 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 359
(தான தானன தான தானன தான தானன தானன - Rhythm)
மார்ப முந்தசை நைந்து சிந்தி வரிந்த வென்பு முரிந்திட
நேர்வ ருங்குறி நின்ற சிந்தையி னேச மீசனை நேடுநீ
டார்வ மங்குயிர் கொண்டு கைக்கு முடம்ப டங்கவு மூன்கெடச்
சேர்வ ரும்பழு வம்பு ரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்;
Thirunavukkarasar lies motionless on the ground after his body is worn out
# 1625 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 360
அப்பு றம்புரள் கின்ற நீளிடை யங்க மெங்கு மரைந்திடச்
செப்ப ருங்கயி லைச்சி லம்படி சிந்தை சென்றுறு மாதலான்
மெய்ப்பு றத்திலு றுப்ப ழிந்தபின் மெல்ல வுந்து முயற்சியுந்
தப்பு றச்செய லின்றி யந்நெறி தங்கி னார்தமி ழாளியார்.
Siva appears there assuming the form of a rishi
# 1626 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 361
(கலித்துறை - "மா கூவிளம் விளம் விளம் மா" - Meter)
அன்ன தன்மையார் கயிலையை யணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற் பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனற் றடமுமொன் றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர் முனிவராம் படியால்;
He asks Thirunavukkarasar about his reason for coming to that inhospitable place
# 1627 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 362
வந்து மற்றவர் மருங்குற வணைந்து,நேர் நின்று,
நொந்து நோக்கி,மற் றவரெதிர் நோக்கிட, நுவல்வார்,
"சிந்தி யிவ்வுறுப் பழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத் தெய்திய தென்?"னென விசைத்தார்.
Thirunavukkarasar replies stating his desire to worship Siva and Parvathi in Kailasam
# 1628 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 363
மாசில் வற்கலை யாடையு மார்பின்முந் நூலுந்
தேசு டைச்சடை மவுலியு நீறுமெய் திகழ
ஆசின் மெய்த்தவ ராகிநின் றவர்தமை நோக்கிப்
பேச வுற்றதொ ருணர்வுற விளம்புவார் பெரியோர்,
# 1629 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 364
"வண்டு லாங்குழன் மலைமக ளுடன்வட கயிலை
யண்டர் நாயக ரிருக்குமப் பரிசவ ரடியேன்
கண்டு கும்பிட விருப்பொடுங் காதலி னடைந்தேன்;
கொண்ட வென்குறிப் பிதுமுனி யே!"யெனக் கூற,
The rishi says that it is not possible for humans to go Kailasam
# 1630 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 365
"கயிலை மால்வரை யாவது காசினி மருங்கு
பயிலு மானுடப் பான்மையோ ரடைவதற் கெளிதோ?
வயில்கொள் வேற்படை யமரரு மணுகுதற் கரிதால்;
வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர் வந்!"தென விளம்பி,
He asks him to go back. Thirunavukkarasar refuses to go back without seeing Siva in Kailasam
# 1631 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 366
"மீளு மத்தனை யுமக்கினிக் கட"னென விளங்குந்
தோளு மாகமுந் துவளுமுந் நூன்முனி சொல்ல,
"வாளு நாயகன் கயிலையி லிருக்கைகண் டல்லான்
மாளு மிவ்வுடல் கொண்டுமீ ளே"னென மறுத்தார்;
Rishi disappears and Siva's voice is heard. Thirunavukkarasar's body is restored to full glory
# 1632 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 367
ஆங்கு மற்றவர் துணிவறிந் தவர்தமை யறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீண் மொழியா
"லோங்கு நாவினுக் கரசனே! யெழுந்தி"ரென் றுரைப்பத்,
தீங்கு நீங்கிய யாக்கைகொண் டெழுந்தொளி திகழ்வார்,
Thirunavukkarasar prays for Kailasa darsanam
# 1633 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 368
"அண்ண லே!யெனை யாண்டுகொண் டருளிய வமுதே!
விண்ணி லேமறைந் தருள்புரி வேதநா யகனே!
கண்ணி னாற்றிருக் கயிலையி லிருந்தநின் கோலம்
நண்ணி நான்றொழ நயந்தருள் புரி"யெனப் பணிந்தார்;
Siva tells Thirunavukkarasar to take a dip in the lake nearby and see Kailasa darsanam from Thiruvaiyaru
# 1634 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 369
தொழுதெ ழுந்தநற் றொண்டரை நோக்கிவிண் டலத்தி
லெழுபெ ருந்திரு வாக்கினா லிறைவ"ரிப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையி லிருந்தவம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற் கா"ணெனப் பணித்தார்.
Thirunavukkarasar sings "vēṭrāgi viṇṇāgi" padhigam and takes a dip in the lake
# 1635 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 370
ஏற்றி னாரரு டலைமிசைக் கொண்டெழுந் திறைஞ்சி
"வேற்று மாகிவிண் ணாகிநின் றார்"மொழி விரும்பி,
ஆற்றல் பெற்றவ ரண்ணலா ரஞ்செழுத் தோதிப்,
பாற்ற டம்புனற் பொய்கையின் மூழ்கினார் பணியால்;
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.55 – கயிலாயம் - "போற்றித் திருத்தாண்டகம்"
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
.. மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
.. ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
.. ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
.. பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
.. மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
.. போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
.. மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
.. உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
.. தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
.. வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
.. ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
.. தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
ஊராகி நின்ற உலகே போற்றி
.. ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
.. பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
.. நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
.. தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
.. போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
.. பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
.. பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
.. என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
.. மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
இமையா துயிரா திருந்தாய் போற்றி
.. என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
.. ஊழியே ழான வொருவா போற்றி
அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி
.. ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
.. முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
.. சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவாய் அடியேனுக் கெல்லாம் போற்றி *
.. அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
(* தருமை ஆதீன நூலில் காணும் பாடம்: ஆவா)
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
.. நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியு மிகலிப் போற்றி
.. யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
.. கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடல் எண் : 11
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
.. ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
.. இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
.. பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
=============================
Word separated version:
Thirunavukkarasar continues his quest to reach Kailasam - by rolling his body on the ground
# 1624 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 359
(தான தானன தான தானன தான தானன தானன - Rhythm)
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட,
நேர்வரும் குறி நின்ற சிந்தையில் நேசம் ஈசனை நேடு நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெடச்
சேர்வரும் பழுவம் புரண்டு-புரண்டு சென்றனர் செம்மையோர்;
Thirunavukkarasar lies motionless on the ground after his body is worn out
# 1625 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 360
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்பரும் கயிலைச்-சிலம்படி சிந்தை சென்று உறும்-ஆதலால்
மெய்ப்-புறத்தில் உறுப்பு அழிந்த-பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழாளியார்.
Siva appears there assuming the form of a rishi
# 1626 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 361
(கலித்துறை - "மா கூவிளம் விளம் விளம் மா" - Meter)
அன்ன தன்மையார் கயிலையை அணைவதற்கு அருளார்,
மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த,
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன்-கொடு நடந்தார்,
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர்-ஆம் படியால்;
He asks Thirunavukkarasar about his reason for coming to that inhospitable place
# 1627 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 362
வந்து மற்று-அவர் மருங்கு-உற அணைந்து, நேர் நின்று,
நொந்து நோக்கி, மற்றவர் எதிர் நோக்கிட, நுவல்வார்,
"சிந்தி இவ்வுறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது என்?" என இசைத்தார்.
Thirunavukkarasar replies stating his desire to worship Siva and Parvathi in Kailasam
# 1628 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 363
மாசு-இல் வற்கலை ஆடையும் மார்பில் முந்நூலும்
தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ,
ஆசு-இல் மெய்த்-தவராகி நின்றவர்தமை நோக்கிப்
பேச உற்றதொர் உணர்வு-உற விளம்புவார் பெரியோர்,
# 1629 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 364
"வண்டு உலாம் குழல் மலைமகளுடன் வட-கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அப்-பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்;
கொண்ட என் குறிப்பு இது முனியே!" எனக் கூற,
The rishi says that it is not possible for humans to go Kailasam
# 1630 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 365
"கயிலை மால்-வரை ஆவது காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ?
அயில்கொள் வேற்படை அமரரும் அணுகுதற்கு அரிதால்;
வெயில்கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து!" என விளம்பி,
He asks him to go back. Thirunavukkarasar refuses to go back without seeing Siva in Kailasam
# 1631 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 366
"மீளும்; அத்தனை உமக்கு இனிக் கடன்" என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல்-முனி சொல்ல,
"ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்
மாளும் இவ்வுடல்-கொண்டு மீளேன்" என மறுத்தார்;
Rishi disappears and Siva's voice is heard. Thirunavukkarasar's body is restored to full glory
# 1632 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 367
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து, அவர் தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்து நீள்-மொழியால்
"ஓங்கு நாவினுக்கரசனே! எழுந்திரென்று உரைப்பத்,
தீங்கு நீங்கிய யாக்கை-கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்,
Thirunavukkarasar prays for Kailasa darsanam
# 1633 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 368
"அண்ணலே! எனை ஆண்டுகொண்டு அருளிய அமுதே!
விண்ணிலே மறைந்து அருள்-புரி வேத-நாயகனே!
கண்ணினால் திருக்-கயிலையில் இருந்த நின் கோலம்
நண்ணி நான் தொழ நயந்து அருள்-புரி" எனப் பணிந்தார்;
Siva tells Thirunavukkarasar to take a dip in the lake nearby and see Kailasa darsanam from Thiruvaiyaru
# 1634 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 369
தொழுதெழுந்த நல் தொண்டரை நோக்கி, விண்டலத்தில்
எழு பெரும் திரு-வாக்கினால் இறைவர் "இப்-பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம்-முறைமை
பழுது-இல் சீர்த்-திருவையாற்றில் காண்" எனப் பணித்தார்.
Thirunavukkarasar sings "vēṭrāgi viṇṇāgi" padhigam and takes a dip in the lake
# 1635 - பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 370
ஏற்றினார் அருள் தலைமிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி,
"வேற்றுமாகி விண்ணாகி நின்றார்" மொழி விரும்பி,
ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்து ஓதிப்,
பால்-தடம்-புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்;
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.55 – கயிலாயம் - "போற்றித் திருத்தாண்டகம்"
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
.. மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
.. ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
.. ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
.. பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
.. மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி
.. போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி
.. மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
.. உள்-ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
.. தேசம் பரவப்படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
.. வந்து என்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
.. ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
.. தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
ஊராகி நின்ற உலகே போற்றி
.. ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
.. பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி ஆன நிழலே போற்றி
.. நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
சில்-உருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
.. தேவர் அறியாத தேவே போற்றி
புல்-உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
.. போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்-உயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
.. பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்-உயிராய் நின்ற கனலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
.. பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
.. என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
.. மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
இமையாது உயிராது இருந்தாய் போற்றி
.. என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
.. ஊழி-ஏழான ஒருவா போற்றி
அமையா அரு-நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
.. ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
.. முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி
.. சென்று-ஏறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவாய் அடியேனுக்கு எல்லாம் போற்றி *
.. அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
(* Dharmapuram Adheenam version: ஆவா)
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
.. நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி
.. அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி
.. கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
பாடல் எண் : 11
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
.. ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
.. இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி
பண்-ஆர் இசை இன்-சொல் கேட்டாய் போற்றி
.. பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
.. கயிலை மலையானே போற்றி போற்றி.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Thirunavukkarasar continues his quest to reach Kailasam - by rolling his body on the ground
# 1624 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 359
(tāna tānana tāna tānana tāna tānana tānana - Rhythm)
mārbamum tasai naindu sindi varinda enbu murindiḍa,
nērvarum kuṟi niṇḍra sindaiyil nēsam īsanai nēḍu nīḍu
ārvam aṅgu uyir koṇḍu ugaikkum uḍambu aḍaṅgavum ūn keḍac
cērvarum paḻuvam puraṇḍu-puraṇḍu seṇḍranar semmaiyōr;
Thirunavukkarasar lies motionless on the ground after his body is worn out
# 1625 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 360
appuṟam puraḷgiṇḍra nīḷ iḍai aṅgam eṅgum araindiḍac
cepparum kayilaic-cilambaḍi sindai seṇḍru uṟum-ādalāl
meyp-puṟattil uṟuppu aḻinda-pin mella undu muyaṟciyum
tappuṟac ceyal iṇḍri anneṟi taṅginār tamiḻāḷiyār.
Siva appears there assuming the form of a rishi
# 1626 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 361
(kalittuṟai - "mā kūviḷam viḷam viḷam mā" - Meter)
anna tanmaiyār kayilaiyai aṇaivadaṟku aruḷār,
mannu tīndamiḻ puviyinmēl pinnaiyum vaḻutta,
nanneḍum punal taḍamum oṇḍru uḍan-koḍu naḍandār,
pannagam punai paramar ōr munivar-ām paḍiyāl;
He asks Thirunavukkarasar about his reason for coming to that inhospitable place
# 1627 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 362
vandu maṭru-avar maruṅgu-uṟa aṇaindu, nēr niṇḍru,
nondu nōkki, maṭravar edir nōkkiḍa, nuvalvār,
"sindi ivvuṟuppu aḻindiḍa varundiya tiṟattāl
inda veṅgaḍattu eydiyadu en?" ena isaittār.
Thirunavukkarasar replies stating his desire to worship Siva and Parvathi in Kailasam
# 1628 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 363
māsu-il vaṟkalai āḍaiyum mārbil munnūlum
tēsuḍaic caḍai mavuliyum nīṟum mey tigaḻa,
āsu-il meyt-tavarāgi niṇḍravardamai nōkkip
pēsa uṭrador uṇarvu-uṟa viḷambuvār periyōr,
# 1629 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 364
"vaṇḍu ulām kuḻal malaimagaḷuḍan vaḍa-kayilai
aṇḍar nāyagar irukkum ap-parisu avar aḍiyēn
kaṇḍu kumbiḍa viruppoḍum kādalin aḍaindēn;
koṇḍa en kuṟippu idu muniyē!" enak kūṟa,
The rishi says that it is not possible for humans to go Kailasam
# 1630 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 365
"kayilai māl-varai āvadu kāsini maruṅgu
payilum mānuḍap pānmaiyōr aḍaivadaṟku eḷidō?
ayilgoḷ vēṟpaḍai amararum aṇugudaṟku aridāl;
veyilgoḷ veñjurattu en seydīr vandu!" ena viḷambi,
He asks him to go back. Thirunavukkarasar refuses to go back without seeing Siva in Kailasam
# 1631 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 366
"mīḷum; attanai umakku inik kaḍan" ena viḷaṅgum
tōḷum āgamum tuvaḷum munnūl-muni solla,
"āḷum nāyagan kayilaiyil irukkai kaṇḍallāl
māḷum ivvuḍal-koṇḍu mīḷēn" ena maṟuttār;
Rishi disappears and Siva's voice is heard. Thirunavukkarasar's body is restored to full glory
# 1632 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 367
āṅgu maṭravar tuṇivu aṟindu, avar tamai aṟiya
nīṅgu mādavar visumbiḍaik karandu nīḷ-moḻiyāl
"ōṅgu nāvinukkarasanē! eḻundireṇḍru uraippat,
tīṅgu nīṅgiya yākkai-koṇḍu eḻundu oḷi tigaḻvār,
Thirunavukkarasar prays for Kailasa darsanam
# 1633 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 368
"aṇṇalē! enai āṇḍugoṇḍu aruḷiya amudē!
viṇṇilē maṟaindu aruḷ-puri vēda-nāyaganē!
kaṇṇināl tiruk-kayilaiyil irunda nin kōlam
naṇṇi nān toḻa nayandu aruḷ-puri" enap paṇindār;
Siva tells Thirunavukkarasar to take a dip in the lake nearby and see Kailasa darsanam from Thiruvaiyaru
# 1634 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 369
toḻudeḻunda nal toṇḍarai nōkki, viṇḍalattil
eḻu perum tiru-vākkināl iṟaivar "ip-poygai
muḻugi nammai nī kayilaiyil irunda am-muṟaimai
paḻudu-il sīrt-tiruvaiyāṭril kāṇ" enap paṇittār.
Thirunavukkarasar sings "vēṭrāgi viṇṇāgi" padhigam and takes a dip in the lake
# 1635 - periya purāṇam - tirunāvukkarasar purāṇam - 370
ēṭrinār aruḷ talaimisaik koṇḍu eḻundu iṟaiñji,
"vēṭrumāgi viṇṇāgi niṇḍrār" moḻi virumbi,
āṭral peṭravar aṇṇalār añjeḻuttu ōdip,
pāl-taḍam-punal poygaiyil mūḻginār paṇiyāl;
tirunāvukkarasar tēvāram - padigam 6.55 – kayilāyam - "pōṭrit tiruttāṇḍagam"
pāḍal eṇ : 1
vēṭrāgi viṇṇāgi niṇḍrāy pōṭri
.. mīḷāmē āḷ ennaik koṇḍāy pōṭri
ūṭrāgi uḷḷē oḷittāy pōṭri
.. ōvāda sattattu oliyē pōṭri
āṭrāgi aṅgē amarndāy pōṭri
.. āṟaṅgam nālvēdam ānāy pōṭri
kāṭrāgi eṅgum kalandāy pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 2
piccāḍal pēyōḍu ugandāy pōṭri
.. piṟavi aṟukkum pirānē pōṭri
vaiccāḍal naṇḍru magiḻndāy pōṭri
.. maruvi en sindai pugundāy pōṭri
poyccār puram mūṇḍrum eydāy pōṭri
.. pōgādu en sindai pugundāy pōṭri
kaccāga nāgam asaittāy pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 3
maruvār puram mūṇḍrum eydāy pōṭri
.. maruvi en sindai pugundāy pōṭri
uruvāgi ennaip paḍaittāy pōṭri
.. uḷ-āvi vāṅgi oḷittāy pōṭri
tiruvāgi niṇḍra tiṟamē pōṭri
.. tēsam paravappaḍuvāy pōṭri
karuvāgi ōḍum mugilē pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 4
vānattār pōṭrum marundē pōṭri
.. vandu eṇḍran sindai pugundāy pōṭri
ūnattai nīkkum uḍalē pōṭri
.. ōṅgi aḻalāy nimirndāy pōṭri
tēnattai vārtta teḷivē pōṭri
.. dēvarkkum dēvanāy niṇḍrāy pōṭri
kānattī āḍal ugandāy pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 5
ūrāgi niṇḍra ulagē pōṭri
.. ōṅgi aḻalāy nimirndāy pōṭri
pērāgi eṅgum parandāy pōṭri
.. peyarādu en sindai pugundāy pōṭri
nīrāvi āna niḻalē pōṭri
.. nērvār oruvaraiyum illāy pōṭri
kārāgi niṇḍra mugilē pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 6
sil-uruvāyc ceṇḍru tiraṇḍāy pōṭri
.. dēvar aṟiyāda dēvē pōṭri
pul-uyirkkum pūṭci puṇarttāy pōṭri
.. pōgādu en sindai pugundāy pōṭri
pal-uyirāyp pārdōṟum niṇḍrāy pōṭri
.. paṭri ulagai viḍādāy pōṭri
kal-uyirāy niṇḍra kanalē pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 7
paṇṇin isai āgi niṇḍrāy pōṭri
.. pāvippār pāvam aṟuppāy pōṭri
eṇṇum eḻuttum sol ānāy pōṭri
.. en sindai nīṅgā iṟaivā pōṭri
viṇṇum nilanum tī ānāy pōṭri
.. mēlavarkkum mēl āgi niṇḍrāy pōṭri
kaṇṇin maṇi āgi niṇḍrāy pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 8
imaiyādu uyirādu irundāy pōṭri
.. en sindai nīṅgā iṟaivā pōṭri
umaibāgam āgattu aṇaittāy pōṭri
.. ūḻi-ēḻāna oruvā pōṭri
amaiyā aru-nañjam ārndāy pōṭri
.. ādi purāṇanāy niṇḍrāy pōṭri
kamaiyāgi niṇḍra kanalē pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 9
mūvāy piṟavāy iṟavāy pōṭri
.. munnamē tōṇḍri muḷaittāy pōṭri
dēvādi dēvar toḻum dēvē pōṭri
.. seṇḍru-ēṟi eṅgum parandāy pōṭri
āvāy aḍiyēnukku ellām pōṭri *
.. allal naliya alandēn pōṭri
kāvāy kanagat tiraḷē pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
(* Dharmapuram Adheenam version: āvā)
pāḍal eṇ : 10
neḍiya visumboḍu kaṇṇē pōṭri
.. nīḷa agalam uḍaiyāy pōṭri
aḍiyum muḍiyum igalip pōṭri
.. aṅgu oṇḍru aṟiyāmai niṇḍrāy pōṭri
koḍiya van kūṭram udaittāy pōṭri
.. kōyilā en sindai koṇḍāy pōṭri
kaḍiya urumoḍu minnē pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
pāḍal eṇ : 11
uṇṇādu uṟaṅgādu irundāy pōṭri
.. ōdādē vēdam uṇarndāy pōṭri
eṇṇā ilaṅgaikkōn tannaip pōṭri
.. iṟai viralāl vaittu uganda īsā pōṭri
paṇ-ār isai in-sol kēṭṭāy pōṭri
.. paṇḍē en sindai pugundāy pōṭri
kaṇṇāy ulagukku niṇḍrāy pōṭri
.. kayilai malaiyānē pōṭri pōṭri.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Thirunavukkarasar continues his quest to reach Kailasam - by rolling his body on the ground
# 1624 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 359
(तान तानन तान तानन तान तानन तानन - Rhythm)
मार्बमुम् तसै नैन्दु सिन्दि वरिन्द ऎन्बु मुरिन्दिड,
नेर्वरुम् कुऱि निण्ड्र सिन्दैयिल् नेसम् ईसनै नेडु नीडु
आर्वम् अङ्गु उयिर् कॊण्डु उगैक्कुम् उडम्बु अडङ्गवुम् ऊन् कॆडच्
चेर्वरुम् पऴुवम् पुरण्डु-पुरण्डु सॆण्ड्रनर् सॆम्मैयोर्;
Thirunavukkarasar lies motionless on the ground after his body is worn out
# 1625 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 360
अप्पुऱम् पुरळ्गिण्ड्र नीळ् इडै अङ्गम् ऎङ्गुम् अरैन्दिडच्
चॆप्परुम् कयिलैच्-चिलम्बडि सिन्दै सॆण्ड्रु उऱुम्-आदलाल्
मॆय्प्-पुऱत्तिल् उऱुप्पु अऴिन्द-पिन् मॆल्ल उन्दु मुयऱ्चियुम्
तप्पुऱच् चॆयल् इण्ड्रि अन्नॆऱि तङ्गिनार् तमिऴाळियार्.
Siva appears there assuming the form of a rishi
# 1626 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 361
(कलित्तुऱै - "मा कूविळम् विळम् विळम् मा" - Meter)
अन्न तन्मैयार् कयिलैयै अणैवदऱ्कु अरुळार्,
मन्नु तीन्दमिऴ् पुवियिन्मेल् पिन्नैयुम् वऴुत्त,
नन्नॆडुम् पुनल् तडमुम् ऒण्ड्रु उडन्-कॊडु नडन्दार्,
पन्नगम् पुनै परमर् ओर् मुनिवर्-आम् पडियाल्;
He asks Thirunavukkarasar about his reason for coming to that inhospitable place
# 1627 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 362
वन्दु मट्रु-अवर् मरुङ्गु-उऱ अणैन्दु, नेर् निण्ड्रु,
नॊन्दु नोक्कि, मट्रवर् ऎदिर् नोक्किड, नुवल्वार्,
"सिन्दि इव्वुऱुप्पु अऴिन्दिड वरुन्दिय तिऱत्ताल्
इन्द वॆङ्गडत्तु ऎय्दियदु ऎन्?" ऎन इसैत्तार्.
Thirunavukkarasar replies stating his desire to worship Siva and Parvathi in Kailasam
# 1628 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 363
मासु-इल् वऱ्कलै आडैयुम् मार्बिल् मुन्नूलुम्
तेसुडैच् चडै मवुलियुम् नीऱुम् मॆय् तिगऴ,
आसु-इल् मॆय्त्-तवरागि निण्ड्रवर्दमै नोक्किप्
पेस उट्रदॊर् उणर्वु-उऱ विळम्बुवार् पॆरियोर्,
# 1629 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 364
"वण्डु उलाम् कुऴल् मलैमगळुडन् वड-कयिलै
अण्डर् नायगर् इरुक्कुम् अप्-परिसु अवर् अडियेन्
कण्डु कुम्बिड विरुप्पॊडुम् कादलिन् अडैन्देन्;
कॊण्ड ऎन् कुऱिप्पु इदु मुनिये!" ऎनक् कूऱ,
The rishi says that it is not possible for humans to go Kailasam
# 1630 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 365
"कयिलै माल्-वरै आवदु कासिनि मरुङ्गु
पयिलुम् मानुडप् पान्मैयोर् अडैवदऱ्कु ऎळिदो?
अयिल्गॊळ् वेऱ्पडै अमररुम् अणुगुदऱ्कु अरिदाल्;
वॆयिल्गॊळ् वॆञ्जुरत्तु ऎन् सॆय्दीर् वन्दु!" ऎन विळम्बि,
He asks him to go back. Thirunavukkarasar refuses to go back without seeing Siva in Kailasam
# 1631 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 366
"मीळुम्; अत्तनै उमक्कु इनिक् कडन्" ऎन विळङ्गुम्
तोळुम् आगमुम् तुवळुम् मुन्नूल्-मुनि सॊल्ल,
"आळुम् नायगन् कयिलैयिल् इरुक्कै कण्डल्लाल्
माळुम् इव्वुडल्-कॊण्डु मीळेन्" ऎन मऱुत्तार्;
Rishi disappears and Siva's voice is heard. Thirunavukkarasar's body is restored to full glory
# 1632 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 367
आङ्गु मट्रवर् तुणिवु अऱिन्दु, अवर् तमै अऱिय
नीङ्गु मादवर् विसुम्बिडैक् करन्दु नीळ्-मॊऴियाल्
"ओङ्गु नाविनुक्करसने! ऎऴुन्दिरॆण्ड्रु उरैप्पत्,
तीङ्गु नीङ्गिय याक्कै-कॊण्डु ऎऴुन्दु ऒळि तिगऴ्वार्,
Thirunavukkarasar prays for Kailasa darsanam
# 1633 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 368
"अण्णले! ऎनै आण्डुगॊण्डु अरुळिय अमुदे!
विण्णिले मऱैन्दु अरुळ्-पुरि वेद-नायगने!
कण्णिनाल् तिरुक्-कयिलैयिल् इरुन्द निन् कोलम्
नण्णि नान् तॊऴ नयन्दु अरुळ्-पुरि" ऎनप् पणिन्दार्;
Siva tells Thirunavukkarasar to take a dip in the lake nearby and see Kailasa darsanam from Thiruvaiyaru
# 1634 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 369
तॊऴुदॆऴुन्द नल् तॊण्डरै नोक्कि, विण्डलत्तिल्
ऎऴु पॆरुम् तिरु-वाक्किनाल् इऱैवर् "इप्-पॊय्गै
मुऴुगि नम्मै नी कयिलैयिल् इरुन्द अम्-मुऱैमै
पऴुदु-इल् सीर्त्-तिरुवैयाट्रिल् काण्" ऎनप् पणित्तार्.
Thirunavukkarasar sings "vēṭrāgi viṇṇāgi" padhigam and takes a dip in the lake
# 1635 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 370
एट्रिनार् अरुळ् तलैमिसैक् कॊण्डु ऎऴुन्दु इऱैञ्जि,
"वेट्रुमागि विण्णागि निण्ड्रार्" मॊऴि विरुम्बि,
आट्रल् पॆट्रवर् अण्णलार् अञ्जॆऴुत्तु ओदिप्,
पाल्-तडम्-पुनल् पॊय्गैयिल् मूऴ्गिनार् पणियाल्;
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.55 – कयिलायम् - "पोट्रित् तिरुत्ताण्डगम्"
पाडल् ऎण् : 1
वेट्रागि विण्णागि निण्ड्राय् पोट्रि
.. मीळामे आळ् ऎन्नैक् कॊण्डाय् पोट्रि
ऊट्रागि उळ्ळे ऒळित्ताय् पोट्रि
.. ओवाद सत्तत्तु ऒलिये पोट्रि
आट्रागि अङ्गे अमर्न्दाय् पोट्रि
.. आऱङ्गम् नाल्वेदम् आनाय् पोट्रि
काट्रागि ऎङ्गुम् कलन्दाय् पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 2
पिच्चाडल् पेयोडु उगन्दाय् पोट्रि
.. पिऱवि अऱुक्कुम् पिराने पोट्रि
वैच्चाडल् नण्ड्रु मगिऴ्न्दाय् पोट्रि
.. मरुवि ऎन् सिन्दै पुगुन्दाय् पोट्रि
पॊय्च्चार् पुरम् मूण्ड्रुम् ऎय्दाय् पोट्रि
.. पोगादु ऎन् सिन्दै पुगुन्दाय् पोट्रि
कच्चाग नागम् असैत्ताय् पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 3
मरुवार् पुरम् मूण्ड्रुम् ऎय्दाय् पोट्रि
.. मरुवि ऎन् सिन्दै पुगुन्दाय् पोट्रि
उरुवागि ऎन्नैप् पडैत्ताय् पोट्रि
.. उळ्-आवि वाङ्गि ऒळित्ताय् पोट्रि
तिरुवागि निण्ड्र तिऱमे पोट्रि
.. तेसम् परवप्पडुवाय् पोट्रि
करुवागि ओडुम् मुगिले पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 4
वानत्तार् पोट्रुम् मरुन्दे पोट्रि
.. वन्दु ऎण्ड्रन् सिन्दै पुगुन्दाय् पोट्रि
ऊनत्तै नीक्कुम् उडले पोट्रि
.. ओङ्गि अऴलाय् निमिर्न्दाय् पोट्रि
तेनत्तै वार्त्त तॆळिवे पोट्रि
.. देवर्क्कुम् देवनाय् निण्ड्राय् पोट्रि
कानत्ती आडल् उगन्दाय् पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 5
ऊरागि निण्ड्र उलगे पोट्रि
.. ओङ्गि अऴलाय् निमिर्न्दाय् पोट्रि
पेरागि ऎङ्गुम् परन्दाय् पोट्रि
.. पॆयरादु ऎन् सिन्दै पुगुन्दाय् पोट्रि
नीरावि आन निऴले पोट्रि
.. नेर्वार् ऒरुवरैयुम् इल्लाय् पोट्रि
कारागि निण्ड्र मुगिले पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 6
सिल्-उरुवाय्च् चॆण्ड्रु तिरण्डाय् पोट्रि
.. देवर् अऱियाद देवे पोट्रि
पुल्-उयिर्क्कुम् पूट्चि पुणर्त्ताय् पोट्रि
.. पोगादु ऎन् सिन्दै पुगुन्दाय् पोट्रि
पल्-उयिराय्प् पार्दोऱुम् निण्ड्राय् पोट्रि
.. पट्रि उलगै विडादाय् पोट्रि
कल्-उयिराय् निण्ड्र कनले पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 7
पण्णिन् इसै आगि निण्ड्राय् पोट्रि
.. पाविप्पार् पावम् अऱुप्पाय् पोट्रि
ऎण्णुम् ऎऴुत्तुम् सॊल् आनाय् पोट्रि
.. ऎन् सिन्दै नीङ्गा इऱैवा पोट्रि
विण्णुम् निलनुम् ती आनाय् पोट्रि
.. मेलवर्क्कुम् मेल् आगि निण्ड्राय् पोट्रि
कण्णिन् मणि आगि निण्ड्राय् पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 8
इमैयादु उयिरादु इरुन्दाय् पोट्रि
.. ऎन् सिन्दै नीङ्गा इऱैवा पोट्रि
उमैबागम् आगत्तु अणैत्ताय् पोट्रि
.. ऊऴि-एऴान ऒरुवा पोट्रि
अमैया अरु-नञ्जम् आर्न्दाय् पोट्रि
.. आदि पुराणनाय् निण्ड्राय् पोट्रि
कमैयागि निण्ड्र कनले पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 9
मूवाय् पिऱवाय् इऱवाय् पोट्रि
.. मुन्नमे तोण्ड्रि मुळैत्ताय् पोट्रि
देवादि देवर् तॊऴुम् देवे पोट्रि
.. सॆण्ड्रु-एऱि ऎङ्गुम् परन्दाय् पोट्रि
आवाय् अडियेनुक्कु ऎल्लाम् पोट्रि *
.. अल्लल् नलिय अलन्देन् पोट्रि
कावाय् कनगत् तिरळे पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
(* Dharmapuram Adheenam version: आवा)
पाडल् ऎण् : 10
नॆडिय विसुम्बॊडु कण्णे पोट्रि
.. नीळ अगलम् उडैयाय् पोट्रि
अडियुम् मुडियुम् इगलिप् पोट्रि
.. अङ्गु ऒण्ड्रु अऱियामै निण्ड्राय् पोट्रि
कॊडिय वन् कूट्रम् उदैत्ताय् पोट्रि
.. कोयिला ऎन् सिन्दै कॊण्डाय् पोट्रि
कडिय उरुमॊडु मिन्ने पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
पाडल् ऎण् : 11
उण्णादु उऱङ्गादु इरुन्दाय् पोट्रि
.. ओदादे वेदम् उणर्न्दाय् पोट्रि
ऎण्णा इलङ्गैक्कोन् तन्नैप् पोट्रि
.. इऱै विरलाल् वैत्तु उगन्द ईसा पोट्रि
पण्-आर् इसै इन्-सॊल् केट्टाय् पोट्रि
.. पण्डे ऎन् सिन्दै पुगुन्दाय् पोट्रि
कण्णाय् उलगुक्कु निण्ड्राय् पोट्रि
.. कयिलै मलैयाने पोट्रि पोट्रि.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Thirunavukkarasar continues his quest to reach Kailasam - by rolling his body on the ground
# 1624 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 359
(తాన తానన తాన తానన తాన తానన తానన - Rhythm)
మార్బముం తసై నైందు సింది వరింద ఎన్బు మురిందిడ,
నేర్వరుం కుఱి నిండ్ర సిందైయిల్ నేసం ఈసనై నేడు నీడు
ఆర్వం అంగు ఉయిర్ కొండు ఉగైక్కుం ఉడంబు అడంగవుం ఊన్ కెడచ్
చేర్వరుం పఴువం పురండు-పురండు సెండ్రనర్ సెమ్మైయోర్;
Thirunavukkarasar lies motionless on the ground after his body is worn out
# 1625 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 360
అప్పుఱం పురళ్గిండ్ర నీళ్ ఇడై అంగం ఎంగుం అరైందిడచ్
చెప్పరుం కయిలైచ్-చిలంబడి సిందై సెండ్రు ఉఱుం-ఆదలాల్
మెయ్ప్-పుఱత్తిల్ ఉఱుప్పు అఴింద-పిన్ మెల్ల ఉందు ముయఱ్చియుం
తప్పుఱచ్ చెయల్ ఇండ్రి అన్నెఱి తంగినార్ తమిఴాళియార్.
Siva appears there assuming the form of a rishi
# 1626 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 361
(కలిత్తుఱై - "మా కూవిళం విళం విళం మా" - Meter)
అన్న తన్మైయార్ కయిలైయై అణైవదఱ్కు అరుళార్,
మన్ను తీందమిఴ్ పువియిన్మేల్ పిన్నైయుం వఴుత్త,
నన్నెడుం పునల్ తడముం ఒండ్రు ఉడన్-కొడు నడందార్,
పన్నగం పునై పరమర్ ఓర్ మునివర్-ఆం పడియాల్;
He asks Thirunavukkarasar about his reason for coming to that inhospitable place
# 1627 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 362
వందు మట్రు-అవర్ మరుంగు-ఉఱ అణైందు, నేర్ నిండ్రు,
నొందు నోక్కి, మట్రవర్ ఎదిర్ నోక్కిడ, నువల్వార్,
"సింది ఇవ్వుఱుప్పు అఴిందిడ వరుందియ తిఱత్తాల్
ఇంద వెంగడత్తు ఎయ్దియదు ఎన్?" ఎన ఇసైత్తార్.
Thirunavukkarasar replies stating his desire to worship Siva and Parvathi in Kailasam
# 1628 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 363
మాసు-ఇల్ వఱ్కలై ఆడైయుం మార్బిల్ మున్నూలుం
తేసుడైచ్ చడై మవులియుం నీఱుం మెయ్ తిగఴ,
ఆసు-ఇల్ మెయ్త్-తవరాగి నిండ్రవర్దమై నోక్కిప్
పేస ఉట్రదొర్ ఉణర్వు-ఉఱ విళంబువార్ పెరియోర్,
# 1629 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 364
"వండు ఉలాం కుఴల్ మలైమగళుడన్ వడ-కయిలై
అండర్ నాయగర్ ఇరుక్కుం అప్-పరిసు అవర్ అడియేన్
కండు కుంబిడ విరుప్పొడుం కాదలిన్ అడైందేన్;
కొండ ఎన్ కుఱిప్పు ఇదు మునియే!" ఎనక్ కూఱ,
The rishi says that it is not possible for humans to go Kailasam
# 1630 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 365
"కయిలై మాల్-వరై ఆవదు కాసిని మరుంగు
పయిలుం మానుడప్ పాన్మైయోర్ అడైవదఱ్కు ఎళిదో?
అయిల్గొళ్ వేఱ్పడై అమరరుం అణుగుదఱ్కు అరిదాల్;
వెయిల్గొళ్ వెంజురత్తు ఎన్ సెయ్దీర్ వందు!" ఎన విళంబి,
He asks him to go back. Thirunavukkarasar refuses to go back without seeing Siva in Kailasam
# 1631 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 366
"మీళుం; అత్తనై ఉమక్కు ఇనిక్ కడన్" ఎన విళంగుం
తోళుం ఆగముం తువళుం మున్నూల్-ముని సొల్ల,
"ఆళుం నాయగన్ కయిలైయిల్ ఇరుక్కై కండల్లాల్
మాళుం ఇవ్వుడల్-కొండు మీళేన్" ఎన మఱుత్తార్;
Rishi disappears and Siva's voice is heard. Thirunavukkarasar's body is restored to full glory
# 1632 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 367
ఆంగు మట్రవర్ తుణివు అఱిందు, అవర్ తమై అఱియ
నీంగు మాదవర్ విసుంబిడైక్ కరందు నీళ్-మొఴియాల్
"ఓంగు నావినుక్కరసనే! ఎఴుందిరెండ్రు ఉరైప్పత్,
తీంగు నీంగియ యాక్కై-కొండు ఎఴుందు ఒళి తిగఴ్వార్,
Thirunavukkarasar prays for Kailasa darsanam
# 1633 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 368
"అణ్ణలే! ఎనై ఆండుగొండు అరుళియ అముదే!
విణ్ణిలే మఱైందు అరుళ్-పురి వేద-నాయగనే!
కణ్ణినాల్ తిరుక్-కయిలైయిల్ ఇరుంద నిన్ కోలం
నణ్ణి నాన్ తొఴ నయందు అరుళ్-పురి" ఎనప్ పణిందార్;
Siva tells Thirunavukkarasar to take a dip in the lake nearby and see Kailasa darsanam from Thiruvaiyaru
# 1634 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 369
తొఴుదెఴుంద నల్ తొండరై నోక్కి, విండలత్తిల్
ఎఴు పెరుం తిరు-వాక్కినాల్ ఇఱైవర్ "ఇప్-పొయ్గై
ముఴుగి నమ్మై నీ కయిలైయిల్ ఇరుంద అం-ముఱైమై
పఴుదు-ఇల్ సీర్త్-తిరువైయాట్రిల్ కాణ్" ఎనప్ పణిత్తార్.
Thirunavukkarasar sings "vēṭrāgi viṇṇāgi" padhigam and takes a dip in the lake
# 1635 - పెరియ పురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 370
ఏట్రినార్ అరుళ్ తలైమిసైక్ కొండు ఎఴుందు ఇఱైంజి,
"వేట్రుమాగి విణ్ణాగి నిండ్రార్" మొఴి విరుంబి,
ఆట్రల్ పెట్రవర్ అణ్ణలార్ అంజెఴుత్తు ఓదిప్,
పాల్-తడం-పునల్ పొయ్గైయిల్ మూఴ్గినార్ పణియాల్;
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.55 – కయిలాయం - "పోట్రిత్ తిరుత్తాండగం"
పాడల్ ఎణ్ : 1
వేట్రాగి విణ్ణాగి నిండ్రాయ్ పోట్రి
.. మీళామే ఆళ్ ఎన్నైక్ కొండాయ్ పోట్రి
ఊట్రాగి ఉళ్ళే ఒళిత్తాయ్ పోట్రి
.. ఓవాద సత్తత్తు ఒలియే పోట్రి
ఆట్రాగి అంగే అమర్న్దాయ్ పోట్రి
.. ఆఱంగం నాల్వేదం ఆనాయ్ పోట్రి
కాట్రాగి ఎంగుం కలందాయ్ పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 2
పిచ్చాడల్ పేయోడు ఉగందాయ్ పోట్రి
.. పిఱవి అఱుక్కుం పిరానే పోట్రి
వైచ్చాడల్ నండ్రు మగిఴ్న్దాయ్ పోట్రి
.. మరువి ఎన్ సిందై పుగుందాయ్ పోట్రి
పొయ్చ్చార్ పురం మూండ్రుం ఎయ్దాయ్ పోట్రి
.. పోగాదు ఎన్ సిందై పుగుందాయ్ పోట్రి
కచ్చాగ నాగం అసైత్తాయ్ పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 3
మరువార్ పురం మూండ్రుం ఎయ్దాయ్ పోట్రి
.. మరువి ఎన్ సిందై పుగుందాయ్ పోట్రి
ఉరువాగి ఎన్నైప్ పడైత్తాయ్ పోట్రి
.. ఉళ్-ఆవి వాంగి ఒళిత్తాయ్ పోట్రి
తిరువాగి నిండ్ర తిఱమే పోట్రి
.. తేసం పరవప్పడువాయ్ పోట్రి
కరువాగి ఓడుం ముగిలే పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 4
వానత్తార్ పోట్రుం మరుందే పోట్రి
.. వందు ఎండ్రన్ సిందై పుగుందాయ్ పోట్రి
ఊనత్తై నీక్కుం ఉడలే పోట్రి
.. ఓంగి అఴలాయ్ నిమిర్న్దాయ్ పోట్రి
తేనత్తై వార్త్త తెళివే పోట్రి
.. దేవర్క్కుం దేవనాయ్ నిండ్రాయ్ పోట్రి
కానత్తీ ఆడల్ ఉగందాయ్ పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 5
ఊరాగి నిండ్ర ఉలగే పోట్రి
.. ఓంగి అఴలాయ్ నిమిర్న్దాయ్ పోట్రి
పేరాగి ఎంగుం పరందాయ్ పోట్రి
.. పెయరాదు ఎన్ సిందై పుగుందాయ్ పోట్రి
నీరావి ఆన నిఴలే పోట్రి
.. నేర్వార్ ఒరువరైయుం ఇల్లాయ్ పోట్రి
కారాగి నిండ్ర ముగిలే పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 6
సిల్-ఉరువాయ్చ్ చెండ్రు తిరండాయ్ పోట్రి
.. దేవర్ అఱియాద దేవే పోట్రి
పుల్-ఉయిర్క్కుం పూట్చి పుణర్త్తాయ్ పోట్రి
.. పోగాదు ఎన్ సిందై పుగుందాయ్ పోట్రి
పల్-ఉయిరాయ్ప్ పార్దోఱుం నిండ్రాయ్ పోట్రి
.. పట్రి ఉలగై విడాదాయ్ పోట్రి
కల్-ఉయిరాయ్ నిండ్ర కనలే పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 7
పణ్ణిన్ ఇసై ఆగి నిండ్రాయ్ పోట్రి
.. పావిప్పార్ పావం అఱుప్పాయ్ పోట్రి
ఎణ్ణుం ఎఴుత్తుం సొల్ ఆనాయ్ పోట్రి
.. ఎన్ సిందై నీంగా ఇఱైవా పోట్రి
విణ్ణుం నిలనుం తీ ఆనాయ్ పోట్రి
.. మేలవర్క్కుం మేల్ ఆగి నిండ్రాయ్ పోట్రి
కణ్ణిన్ మణి ఆగి నిండ్రాయ్ పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 8
ఇమైయాదు ఉయిరాదు ఇరుందాయ్ పోట్రి
.. ఎన్ సిందై నీంగా ఇఱైవా పోట్రి
ఉమైబాగం ఆగత్తు అణైత్తాయ్ పోట్రి
.. ఊఴి-ఏఴాన ఒరువా పోట్రి
అమైయా అరు-నంజం ఆర్న్దాయ్ పోట్రి
.. ఆది పురాణనాయ్ నిండ్రాయ్ పోట్రి
కమైయాగి నిండ్ర కనలే పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 9
మూవాయ్ పిఱవాయ్ ఇఱవాయ్ పోట్రి
.. మున్నమే తోండ్రి ముళైత్తాయ్ పోట్రి
దేవాది దేవర్ తొఴుం దేవే పోట్రి
.. సెండ్రు-ఏఱి ఎంగుం పరందాయ్ పోట్రి
ఆవాయ్ అడియేనుక్కు ఎల్లాం పోట్రి *
.. అల్లల్ నలియ అలందేన్ పోట్రి
కావాయ్ కనగత్ తిరళే పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
(* Dharmapuram Adheenam version: ఆవా)
పాడల్ ఎణ్ : 10
నెడియ విసుంబొడు కణ్ణే పోట్రి
.. నీళ అగలం ఉడైయాయ్ పోట్రి
అడియుం ముడియుం ఇగలిప్ పోట్రి
.. అంగు ఒండ్రు అఱియామై నిండ్రాయ్ పోట్రి
కొడియ వన్ కూట్రం ఉదైత్తాయ్ పోట్రి
.. కోయిలా ఎన్ సిందై కొండాయ్ పోట్రి
కడియ ఉరుమొడు మిన్నే పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
పాడల్ ఎణ్ : 11
ఉణ్ణాదు ఉఱంగాదు ఇరుందాయ్ పోట్రి
.. ఓదాదే వేదం ఉణర్న్దాయ్ పోట్రి
ఎణ్ణా ఇలంగైక్కోన్ తన్నైప్ పోట్రి
.. ఇఱై విరలాల్ వైత్తు ఉగంద ఈసా పోట్రి
పణ్-ఆర్ ఇసై ఇన్-సొల్ కేట్టాయ్ పోట్రి
.. పండే ఎన్ సిందై పుగుందాయ్ పోట్రి
కణ్ణాయ్ ఉలగుక్కు నిండ్రాయ్ పోట్రి
.. కయిలై మలైయానే పోట్రి పోట్రి.
=============================