126) 4.92 – சிந்திப்பரியன - திருவையாறு - sindhippariyana - thiruvaiyARu
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.92 – சிந்திப்பரியன - (திருவையாறு)
tirunāvukkarasar tēvāram - padigam 4.92 – sindippariyana - (tiruvaiyāṟu)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1f0Obpy8aFSMyG97Fh2MxtLmGqrhZL1-s/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/0_fvI6wdFng
Part-2: https://youtu.be/btvOT4WUIFY
Part-3: https://youtu.be/ECZUz63CT3o
Part-4: https://youtu.be/viCo_tailtU
English:
***
English translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_092.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.92 – திருவையாறு - (திருவிருத்தம்)
திருவையாறு: இத்தலம் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 12 கிமீ தூரத்தில் உள்ளது. பெரிய கோயில்.
பதிக வரலாறு:
கயிலையைக் காணச் சென்று உடல் உறுப்புகளெல்லாம் தேய்ந்து அழிந்த நிலையில் கிடந்த திருநாவுக்கரசர், ஈசன் ஆணைப்படி அங்கே இமயமலைச் சாரலில் ஒரு பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் திருக்குளத்தில் எழுந்தார். திருவையாற்றில் எல்லா ஜீவராசிகளும் சிவமும் சக்தியுமாக அவருக்குக் காட்சியளித்தன. திருவையாற்றிலிருந்தே கயிலைக்காட்சியை கண்டு மகிழ்ந்தார். சில போற்றித் திருத்தாண்டகங்கள் பாடினார். "மாதர்ப் பிறைக்கண்ணியானை" என்ற பதிகம் பாடினார். பின்னர்த் திருவையாற்றில் தங்கிப் பல பதிகங்கள் பாடித் திருத்தொண்டு செய்து மகிழ்ந்தார். அவற்றுள் ஒன்று இப்பதிகம்.
இப்பதிகத்தில் 20 பாடல்கள் உள்ளன.
Background:
Siva revealed the Kailasa darsanam to Thirunavukkarasar in Thiruvaiyaru. Thirunavukkarasar sang some more padhigams praising Siva and describing what he experienced. (6.56, 6.57 - both "pōṭri tiruttāṇḍagam" padhigams). He sang the 4.3 padhigam - "mādarp piṟaik kaṇṇiyānai" at that time. Then he stayed in Thiruvaiyaru for some period and sang several more padhigams. One of those padhigams is this padhigam.
This padhigam has 20 songs.
--------
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 385
கண்டு தொழுது வணங்கிக் கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள் குறுந்தொகை நேரிசை யன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்றிரு வையா றமர்ந்தனர் நாவுக் கரசர்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.92 – திருவையாறு - (திருவிருத்தம்)
(கட்டளைக் கலித்துறை - meter)
சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடுமை யாற னடித்தலமே.
இழித்தன வேழேழ் பிறப்பு மறுத்தன வென்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன வாறங்க மானவை யாற னடித்தலமே.
மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை யாற னடித்தலமே.
இருடரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருடரு கண்ணிழந் துண்பொரு ணாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்
றருடரு கைகொடுத் தேற்றுமை யாற னடித்தலமே.
எழுவா யிறுவா யிலாதன வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய்
விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கவை யாற னடித்தலமே.
துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர் தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய் பொருந்தா
அன்பர்க் கணியன காண்கவை யாற னடித்தலமே.
களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே.
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்துமை யாற னடித்தலமே.
பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய் *
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வைய நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.
(* பறண்டை - Was it originally - பகண்டை ? - as in 11.2.6 & 11.2.11)
நின்போ லமரர்க ணீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட விலையு முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளு மையனை யாற னடித்தலமே.
பாடல் எண் : 11
மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தவை யாற னடித்தலமே.
பாடல் எண் : 12
பொலம்புண்ட ரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனையாள்
சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும்
அலம்புந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.
பாடல் எண் : 13
உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன வோதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கவை யாற னடித்தலமே.
பாடல் எண் : 14
வானைக் கடந்தண்டத் தப்பான் மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன வுத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கவை யாற னடித்தலமே.
பாடல் எண் : 15
மாதிர மானில மாவன வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கவை யாற னடித்தலமே.
பாடல் எண் : 16
பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்குமை யாற னடித்தலமே.
பாடல் எண் : 17
ஓதிய ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணும்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ
டாதியு மந்தமு மானவை யாற னடித்தலமே.
பாடல் எண் : 18
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கு மரவிந்த மொக்குமை யாற னடித்தலமே.
பாடல் எண் : 19
சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்றும் நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த
அழலா ரொளியன காண்கவை யாற னடித்தலமே.
பாடல் எண் : 20
வலியான் றலைபத்தும் வாய்விட்டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கண்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலரிகழ
அலியா நிலைநிற்கு மையனை யாற னடித்தலமே.
=============================
Word separated version:
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 385
கண்டு தொழுது வணங்கிக் கண்ணுதலார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பில்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர்-பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.92 – திருவையாறு - (திருவிருத்தம்)
(கட்டளைக் கலித்துறை - meter)
சிந்திப்பரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன; முத்தி கொடுப்பன; மொய்த்து இருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன; பாம்பு சுற்றி
அந்திப் பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே.
இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன; என் மனத்தே
பொழித்தன; போர்-எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய்க்;
கிழித்தன தக்கன் கிளர்-ஒளி வேள்வியைக்; கீழ முன் சென்று
அழித்தன; ஆறங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே.
(Can also be interpreted as :
போர்-எழில் கூற்றை உதைத்தன, போற்றவர்க்காய்க், கிழித்தன;
தக்கன் கிளர்-ஒளி வேள்வியைக் கீழ முன் சென்று அழித்தன;)
மணி-நிறம் ஒப்பன; பொன்-நிறம் மன்னின; மின் இயல் வாய்
கணி-நிறம் அன்ன; கயிலைப் பொருப்பன; காதல் செய்யத்
துணிவன; சீலத்தராகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு
அணியன; சேயன தேவர்க்கு; ஐயாறன் அடித்தலமே.
இருள் தரு துன்பப் படலம் மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள் தரு கண் இழந்து உண்பொருள் நாடிப் புகல் இழந்த
குருடரும் தம்மைப் பரவக் கொடு-நரகக்-குழி-நின்று
அருள் தரு கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.
எழுவாய் இறுவாய் இலாதன; வெங்கண் பிணி தவிர்த்து
வழுவா மருத்துவம் ஆவன; மா-நரகக்-குழி-வாய்
விழுவார்-அவர்தம்மை வீழ்ப்பன; மீட்பன; மிக்க அன்போடு
அழுவார்க்கு அமுதங்கள் காண்க; ஐயாறன் அடித்தலமே.
துன்பக்-கடலிடைத் தோணித்-தொழில் பூண்ட; தொண்டர் தம்மை
இன்பக்-கரை முகந்து ஏற்றும் திறத்தன; மாற்று அயலே
பொன்-பட்டு ஒழுகப், பொருந்து-ஒளி செய்யும் அப்-பொய் பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.
களித்துக் கலந்ததொர் காதல் கசிவொடு, காவிரிவாய்க்
குளித்துத், தொழுது, முன் நின்ற இப்-பத்தரைக் கோது-இல்-செந்தேன்
தெளித்துச், சுவை-அமுது ஊட்டி, அமரர்கள் சூழிருப்ப
அளித்துப், பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே.
திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச், செறுத்து, உடலை
வருத்திக், கடி-மலர் வாள் எடுத்து ஓச்சி, மருங்கு சென்று
விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண்-பட்டிகை இடுமால்
அருத்தித்து அரும்-தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே.
பாடும் பறண்டையும் * ஆந்தையும் ஆர்ப்பப், பரந்து பல்-பேய்
கூடி முழவக் குவி-கவிழ் கொட்டக், குறுநரிகள்
நீடும் குழல்செய்ய, வையம் நெளிய, நிணப்-பிணக்காட்டு
ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே.
(* பறண்டை - Was it originally - பகண்டை? - as in 11.2.6 & 11.2.11)
நின்போல் அமரர்கள் நீள்முடி சாய்த்து நிமிர்த்து உகுத்த
பைம்போது உழக்கிப் பவளம் தழைப்பன; பாங்கு அறியா
என்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும்-எல்லாம்
அம்போது எனக் கொள்ளும் ஐயன், ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 11
மலையார் மடந்தை மனத்தன; வானோர் மகுடம் மன்னி
நிலையாய் இருப்பன; நின்றோர் மதிப்பன; நீள்-நிலத்துப்
புலை-ஆடு புன்மை தவிர்ப்பன; பொன்னுலகம் அளிக்கும்,
அலை ஆர் புனல்-பொன்னி சூழ்ந்த, ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 12
பொலம்-புண்டரீகப் புதுமலர் போல்வன; "போற்றி" என்பார்
புலம்பும் பொழுதும் புணர்-துணை ஆவன; பொன்-அனையாள்
சிலம்பும், செறி-பாடகமும், செழும் கிண்கிணித்-திரளும்
அலம்பும் திருவடி காண்க; ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 13
உற்றார் இலாதார்க்கு உறுதுணை ஆவன; ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன; காதல்
செய்யகிற்பார் தமக்குக் கிளர்-ஒளி வானகந்தான் கொடுக்கும்;
அற்றார்க்கு அரும்பொருள் காண்க; ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 14
வானைக் கடந்து, அண்டத்து அப்பால் மதிப்பன; மந்திரிப்பார்
ஊனைக் கழித்து உய்யக்கொண்டு அருள் செய்வன; உத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே உதிப்பன; நங்கை அஞ்ச
ஆனை உரித்தன காண்க; ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 15
மாதிரம் மால்-நிலம் ஆவன; வானவர் மா-முகட்டின்
மீதன; மென்-கழல் வெங்கச்சு வீக்கின; வெந்நமனார்
தூதரை ஓடத் துரப்பன; துன்பு அறத் தொண்டு-பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க; ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 16
பேணித் தொழும்-அவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு-அருளால்
ஏணிப்படி நெறி இட்டுக்கொடுத்து, இமையோர் முடிமேல்
மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி,
ஆணிக்-கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 17
ஓதிய ஞானமும், ஞானப்-பொருளும், ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன; விண்ணும், மண்ணும்,
சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன தூ-மதியோடு;
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 18
சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை, சுரும்பொடு வண்டு
அணங்கும் குழலி, அணி ஆர் வளைக்கரம் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும், வருடும் பொழுதும், வண்-காந்தள் ஒண்-போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 19
சுழல் ஆர் துயர்-வெயில் சுட்டிடும் போது, அடித்தொண்டர் துன்னும்
நிழல் ஆவன; என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்,
கழலா வினைகள் கழற்றுவ; கால-வனம் கடந்த
அழல் ஆர் ஒளியன காண்க; ஐயாறன் அடித்தலமே.
பாடல் எண் : 20
வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து,
மெலியா வலியுடைக் கூற்றை உதைத்து, விண்ணோர்கள் முன்னே
பலி-சேர் படுகடைப் பார்த்துப், பன்னாளும், பலர் இகழ
அலி ஆம் நிலை நிற்கும், ஐயன் ஐயாறன் அடித்தலமே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 385
kaṇḍu toḻudu vaṇaṅgik kaṇṇudalārdamaip pōṭrik
koṇḍa tiruttāṇḍagaṅgaḷ kuṟundogai nērisai anbil
maṇḍu viruttaṅgaḷ pāḍi vaṇaṅgit tiruttoṇḍu seydē
aṇḍar-pirān tiruvaiyāṟu amarndanar nāvukkarasar.
tirunāvukkarasar tēvāram - padigam 4.92 – tiruvaiyāṟu - (tiruviruttam)
(kaṭṭaḷaik kalittuṟai - meter)
pāḍal eṇ : 1
sindippariyana; sindippavarkkuc ciṟandu sendēn
mundip poḻivana; mutti koḍuppana; moyttu iruṇḍu
pandittu niṇḍra paḻavinai tīrppana; pāmbu suṭri
andip piṟai aṇindu āḍum aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 2
iḻittana ēḻēḻ piṟappum aṟuttana; en manattē
poḻittana; pōr-eḻil kūṭrai udaittana pōṭravarkkāyk;
kiḻittana takkan kiḷar-oḷi vēḷviyaik; kīḻa mun seṇḍru
aḻittana; āṟaṅgam āna aiyāṟan aḍittalamē.
(Can also be interpreted as :
pōr-eḻil kūṭrai udaittana, pōṭravarkkāyk, kiḻittana;
takkan kiḷar-oḷi vēḷviyaik kīḻa mun seṇḍru aḻittana;)
pāḍal eṇ : 3
maṇi-niṟam oppana; pon-niṟam mannina; min iyal vāy
kaṇi-niṟam anna; kayilaip poruppana; kādal seyyat
tuṇivana; sīlattarāgit toḍarndu viḍāda toṇḍarkku
aṇiyana; sēyana dēvarkku; aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 4
iruḷ taru tunbap paḍalam maṟaippa, meyññānam ennum
poruḷ taru kaṇ iḻandu uṇboruḷ nāḍip pugal iḻanda
kuruḍarum tammaip paravak koḍu-naragak-kuḻi-niṇḍru
aruḷ taru kaigoḍuttu ēṭrum aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 5
eḻuvāy iṟuvāy ilādana; veṅgaṇ piṇi tavirttu
vaḻuvā maruttuvam āvana; mā-naragak-kuḻi-vāy
viḻuvār-avardammai vīḻppana; mīṭpana; mikka anbōḍu
aḻuvārkku amudaṅgaḷ kāṇga; aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 6
tunbak-kaḍaliḍait tōṇit-toḻil pūṇḍa; toṇḍar tammai
inbak-karai mugandu ēṭrum tiṟattana; māṭru ayalē
pon-paṭṭu oḻugap, porundu-oḷi seyyum ap-poy porundā
anbarkku aṇiyana kāṇga aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 7
kaḷittuk kalandador kādal kasivoḍu, kāvirivāyk
kuḷittut, toḻudu, mun niṇḍra ip-pattaraik kōdu-il-sendēn
teḷittuc, cuvai-amudu ūṭṭi, amarargaḷ sūḻiruppa
aḷittup, perum selvam ākkum aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 8
tiruttik karuttinaic cevvē niṟuttic, ceṟuttu, uḍalai
varuttik, kaḍi-malar vāḷ eḍuttu ōcci, maruṅgu seṇḍru
viruttikku uḻakka vallōrgaṭku viṇ-paṭṭigai iḍumāl
aruttittu arum-tavar ēttum aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 9
pāḍum paṟaṇḍaiyum * āndaiyum ārppap, parandu pal-pēy
kūḍi muḻavak kuvi-kaviḻ koṭṭak, kuṟunarigaḷ
nīḍum kuḻalseyya, vaiyam neḷiya, niṇap-piṇakkāṭṭu
āḍum tiruvaḍi kāṇga aiyāṟan aḍittalamē.
(* paṟaṇḍai - Was it originally - pagaṇḍai? - as in 11.2.6 & 11.2.11)
pāḍal eṇ : 10
ninbōl amarargaḷ nīḷmuḍi sāyttu nimirttu ugutta
paimbōdu uḻakkip pavaḷam taḻaippana; pāṅgu aṟiyā
enbōligaḷ paṟittu iṭṭa ilaiyum mugaiyum-ellām
ambōdu enak koḷḷum aiyan, aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 11
malaiyār maḍandai manattana; vānōr maguḍam manni
nilaiyāy iruppana; niṇḍrōr madippana; nīḷ-nilattup
pulai-āḍu punmai tavirppana; ponnulagam aḷikkum,
alai ār punal-ponni sūḻnda, aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 12
polam-puṇḍarīgap pudumalar pōlvana; "pōṭri" enbār
pulambum poḻudum puṇar-tuṇai āvana; pon-anaiyāḷ
silambum, seṟi-pāḍagamum, seḻum kiṇgiṇit-tiraḷum
alambum tiruvaḍi kāṇga; aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 13
uṭrār ilādārkku uṟuduṇai āvana; ōdi nannūl
kaṭrār paravap perumai uḍaiyana; kādal
seyyagiṟpār tamakkuk kiḷar-oḷi vānagandān koḍukkum;
aṭrārkku arumboruḷ kāṇga; aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 14
vānaik kaḍandu, aṇḍattu appāl madippana; mandirippār
ūnaik kaḻittu uyyakkoṇḍu aruḷ seyvana; uttamarkku
ñānac cuḍarāy naḍuvē udippana; naṅgai añja
ānai urittana kāṇga; aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 15
mādiram māl-nilam āvana; vānavar mā-mugaṭṭin
mīdana; men-kaḻal veṅgaccu vīkkina; vennamanār
tūdarai ōḍat turappana; tunbu aṟat toṇḍu-paṭṭārkku
ādaram āvana kāṇga; aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 16
pēṇit toḻum-avar ponnulagu āḷap piṟaṅgu-aruḷāl
ēṇippaḍi neṟi iṭṭukkoḍuttu, imaiyōr muḍimēl
māṇikkam ottu, maragadam pōṇḍru, vayiram manni,
āṇik-kanagamum okkum aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 17
ōdiya ñānamum, ñānap-poruḷum, oli siṟanda
vēdiyar vēdamum vēḷviyum āvana; viṇṇum, maṇṇum,
sōdiyum señjuḍar ñāyiṟum oppana tū-madiyōḍu;
ādiyum andamum āna aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 18
suṇaṅgu mugattut tuṇaimulaip pāvai, surumboḍu vaṇḍu
aṇaṅgum kuḻali, aṇi ār vaḷaikkaram kūppiniṇḍru
vaṇaṅgum poḻudum, varuḍum poḻudum, vaṇ-kāndaḷ oṇ-pōdu
aṇaṅgum aravindam okkum aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 19
suḻal ār tuyar-veyil suṭṭiḍum pōdu, aḍittoṇḍar tunnum
niḻal āvana; eṇḍrum nīṅgāp piṟavi nilai keḍuttuk,
kaḻalā vinaigaḷ kaḻaṭruva; kāla-vanam kaḍanda
aḻal ār oḷiyana kāṇga; aiyāṟan aḍittalamē.
pāḍal eṇ : 20
valiyān talai pattum vāyviṭṭu alaṟa varai aḍarttu,
meliyā valiyuḍaik kūṭrai udaittu, viṇṇōrgaḷ munnē
pali-sēr paḍugaḍaip pārttup, pannāḷum, palar igaḻa
ali ām nilai niṟkum, aiyan aiyāṟan aḍittalamē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 385
कण्डु तॊऴुदु वणङ्गिक् कण्णुदलार्दमैप् पोट्रिक्
कॊण्ड तिरुत्ताण्डगङ्गळ् कुऱुन्दॊगै नेरिसै अन्बिल्
मण्डु विरुत्तङ्गळ् पाडि वणङ्गित् तिरुत्तॊण्डु सॆय्दे
अण्डर्-पिरान् तिरुवैयाऱु अमर्न्दनर् नावुक्करसर्.
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.92 – तिरुवैयाऱु - (तिरुविरुत्तम्)
(कट्टळैक् कलित्तुऱै - meter)
पाडल् ऎण् : 1
सिन्दिप्परियन; सिन्दिप्पवर्क्कुच् चिऱन्दु सॆन्देन्
मुन्दिप् पॊऴिवन; मुत्ति कॊडुप्पन; मॊय्त्तु इरुण्डु
पन्दित्तु निण्ड्र पऴविनै तीर्प्पन; पाम्बु सुट्रि
अन्दिप् पिऱै अणिन्दु आडुम् ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 2
इऴित्तन एऴेऴ् पिऱप्पुम् अऱुत्तन; ऎन् मनत्ते
पॊऴित्तन; पोर्-ऎऴिल् कूट्रै उदैत्तन पोट्रवर्क्काय्क्;
किऴित्तन तक्कन् किळर्-ऒळि वेळ्वियैक्; कीऴ मुन् सॆण्ड्रु
अऴित्तन; आऱङ्गम् आन ऐयाऱन् अडित्तलमे.
(Can also be interpreted as :
पोर्-ऎऴिल् कूट्रै उदैत्तन, पोट्रवर्क्काय्क्, किऴित्तन;
तक्कन् किळर्-ऒळि वेळ्वियैक् कीऴ मुन् सॆण्ड्रु अऴित्तन;)
पाडल् ऎण् : 3
मणि-निऱम् ऒप्पन; पॊन्-निऱम् मन्निन; मिन् इयल् वाय्
कणि-निऱम् अन्न; कयिलैप् पॊरुप्पन; कादल् सॆय्यत्
तुणिवन; सीलत्तरागित् तॊडर्न्दु विडाद तॊण्डर्क्कु
अणियन; सेयन देवर्क्कु; ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 4
इरुळ् तरु तुन्बप् पडलम् मऱैप्प, मॆय्ञ्ञानम् ऎन्नुम्
पॊरुळ् तरु कण् इऴन्दु उण्बॊरुळ् नाडिप् पुगल् इऴन्द
कुरुडरुम् तम्मैप् परवक् कॊडु-नरगक्-कुऴि-निण्ड्रु
अरुळ् तरु कैगॊडुत्तु एट्रुम् ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 5
ऎऴुवाय् इऱुवाय् इलादन; वॆङ्गण् पिणि तविर्त्तु
वऴुवा मरुत्तुवम् आवन; मा-नरगक्-कुऴि-वाय्
विऴुवार्-अवर्दम्मै वीऴ्प्पन; मीट्पन; मिक्क अन्बोडु
अऴुवार्क्कु अमुदङ्गळ् काण्ग; ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 6
तुन्बक्-कडलिडैत् तोणित्-तॊऴिल् पूण्ड; तॊण्डर् तम्मै
इन्बक्-करै मुगन्दु एट्रुम् तिऱत्तन; माट्रु अयले
पॊन्-पट्टु ऒऴुगप्, पॊरुन्दु-ऒळि सॆय्युम् अप्-पॊय् पॊरुन्दा
अन्बर्क्कु अणियन काण्ग ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 7
कळित्तुक् कलन्ददॊर् कादल् कसिवॊडु, काविरिवाय्क्
कुळित्तुत्, तॊऴुदु, मुन् निण्ड्र इप्-पत्तरैक् कोदु-इल्-सॆन्देन्
तॆळित्तुच्, चुवै-अमुदु ऊट्टि, अमरर्गळ् सूऴिरुप्प
अळित्तुप्, पॆरुम् सॆल्वम् आक्कुम् ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 8
तिरुत्तिक् करुत्तिनैच् चॆव्वे निऱुत्तिच्, चॆऱुत्तु, उडलै
वरुत्तिक्, कडि-मलर् वाळ् ऎडुत्तु ओच्चि, मरुङ्गु सॆण्ड्रु
विरुत्तिक्कु उऴक्क वल्लोर्गट्कु विण्-पट्टिगै इडुमाल्
अरुत्तित्तु अरुम्-तवर् एत्तुम् ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 9
पाडुम् पऱण्डैयुम् * आन्दैयुम् आर्प्पप्, परन्दु पल्-पेय्
कूडि मुऴवक् कुवि-कविऴ् कॊट्टक्, कुऱुनरिगळ्
नीडुम् कुऴल्सॆय्य, वैयम् नॆळिय, निणप्-पिणक्काट्टु
आडुम् तिरुवडि काण्ग ऐयाऱन् अडित्तलमे.
(* पऱण्डै - Was it originally - पगण्डै? - as in 11.2.6 & 11.2.11)
पाडल् ऎण् : 10
निन्बोल् अमरर्गळ् नीळ्मुडि साय्त्तु निमिर्त्तु उगुत्त
पैम्बोदु उऴक्किप् पवळम् तऴैप्पन; पाङ्गु अऱिया
ऎन्बोलिगळ् पऱित्तु इट्ट इलैयुम् मुगैयुम्-ऎल्लाम्
अम्बोदु ऎनक् कॊळ्ळुम् ऐयन्, ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 11
मलैयार् मडन्दै मनत्तन; वानोर् मगुडम् मन्नि
निलैयाय् इरुप्पन; निण्ड्रोर् मदिप्पन; नीळ्-निलत्तुप्
पुलै-आडु पुन्मै तविर्प्पन; पॊन्नुलगम् अळिक्कुम्,
अलै आर् पुनल्-पॊन्नि सूऴ्न्द, ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 12
पॊलम्-पुण्डरीगप् पुदुमलर् पोल्वन; "पोट्रि" ऎन्बार्
पुलम्बुम् पॊऴुदुम् पुणर्-तुणै आवन; पॊन्-अनैयाळ्
सिलम्बुम्, सॆऱि-पाडगमुम्, सॆऴुम् किण्गिणित्-तिरळुम्
अलम्बुम् तिरुवडि काण्ग; ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 13
उट्रार् इलादार्क्कु उऱुदुणै आवन; ओदि नन्नूल्
कट्रार् परवप् पॆरुमै उडैयन; कादल्
सॆय्यगिऱ्पार् तमक्कुक् किळर्-ऒळि वानगन्दान् कॊडुक्कुम्;
अट्रार्क्कु अरुम्बॊरुळ् काण्ग; ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 14
वानैक् कडन्दु, अण्डत्तु अप्पाल् मदिप्पन; मन्दिरिप्पार्
ऊनैक् कऴित्तु उय्यक्कॊण्डु अरुळ् सॆय्वन; उत्तमर्क्कु
ञानच् चुडराय् नडुवे उदिप्पन; नङ्गै अञ्ज
आनै उरित्तन काण्ग; ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 15
मादिरम् माल्-निलम् आवन; वानवर् मा-मुगट्टिन्
मीदन; मॆन्-कऴल् वॆङ्गच्चु वीक्किन; वॆन्नमनार्
तूदरै ओडत् तुरप्पन; तुन्बु अऱत् तॊण्डु-पट्टार्क्कु
आदरम् आवन काण्ग; ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 16
पेणित् तॊऴुम्-अवर् पॊन्नुलगु आळप् पिऱङ्गु-अरुळाल्
एणिप्पडि नॆऱि इट्टुक्कॊडुत्तु, इमैयोर् मुडिमेल्
माणिक्कम् ऒत्तु, मरगदम् पोण्ड्रु, वयिरम् मन्नि,
आणिक्-कनगमुम् ऒक्कुम् ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 17
ओदिय ञानमुम्, ञानप्-पॊरुळुम्, ऒलि सिऱन्द
वेदियर् वेदमुम् वेळ्वियुम् आवन; विण्णुम्, मण्णुम्,
सोदियुम् सॆञ्जुडर् ञायिऱुम् ऒप्पन तू-मदियोडु;
आदियुम् अन्दमुम् आन ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 18
सुणङ्गु मुगत्तुत् तुणैमुलैप् पावै, सुरुम्बॊडु वण्डु
अणङ्गुम् कुऴलि, अणि आर् वळैक्करम् कूप्पिनिण्ड्रु
वणङ्गुम् पॊऴुदुम्, वरुडुम् पॊऴुदुम्, वण्-कान्दळ् ऒण्-पोदु
अणङ्गुम् अरविन्दम् ऒक्कुम् ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 19
सुऴल् आर् तुयर्-वॆयिल् सुट्टिडुम् पोदु, अडित्तॊण्डर् तुन्नुम्
निऴल् आवन; ऎण्ड्रुम् नीङ्गाप् पिऱवि निलै कॆडुत्तुक्,
कऴला विनैगळ् कऴट्रुव; काल-वनम् कडन्द
अऴल् आर् ऒळियन काण्ग; ऐयाऱन् अडित्तलमे.
पाडल् ऎण् : 20
वलियान् तलै पत्तुम् वाय्विट्टु अलऱ वरै अडर्त्तु,
मॆलिया वलियुडैक् कूट्रै उदैत्तु, विण्णोर्गळ् मुन्ने
पलि-सेर् पडुगडैप् पार्त्तुप्, पन्नाळुम्, पलर् इगऴ
अलि आम् निलै निऱ्कुम्, ऐयन् ऐयाऱन् अडित्तलमे.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 385
కండు తొఴుదు వణంగిక్ కణ్ణుదలార్దమైప్ పోట్రిక్
కొండ తిరుత్తాండగంగళ్ కుఱుందొగై నేరిసై అన్బిల్
మండు విరుత్తంగళ్ పాడి వణంగిత్ తిరుత్తొండు సెయ్దే
అండర్-పిరాన్ తిరువైయాఱు అమర్న్దనర్ నావుక్కరసర్.
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.92 – తిరువైయాఱు - (తిరువిరుత్తం)
(కట్టళైక్ కలిత్తుఱై - meter)
పాడల్ ఎణ్ : 1
సిందిప్పరియన; సిందిప్పవర్క్కుచ్ చిఱందు సెందేన్
ముందిప్ పొఴివన; ముత్తి కొడుప్పన; మొయ్త్తు ఇరుండు
పందిత్తు నిండ్ర పఴవినై తీర్ప్పన; పాంబు సుట్రి
అందిప్ పిఱై అణిందు ఆడుం ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 2
ఇఴిత్తన ఏఴేఴ్ పిఱప్పుం అఱుత్తన; ఎన్ మనత్తే
పొఴిత్తన; పోర్-ఎఴిల్ కూట్రై ఉదైత్తన పోట్రవర్క్కాయ్క్;
కిఴిత్తన తక్కన్ కిళర్-ఒళి వేళ్వియైక్; కీఴ మున్ సెండ్రు
అఴిత్తన; ఆఱంగం ఆన ఐయాఱన్ అడిత్తలమే.
(Can also be interpreted as :
పోర్-ఎఴిల్ కూట్రై ఉదైత్తన, పోట్రవర్క్కాయ్క్, కిఴిత్తన;
తక్కన్ కిళర్-ఒళి వేళ్వియైక్ కీఴ మున్ సెండ్రు అఴిత్తన;)
పాడల్ ఎణ్ : 3
మణి-నిఱం ఒప్పన; పొన్-నిఱం మన్నిన; మిన్ ఇయల్ వాయ్
కణి-నిఱం అన్న; కయిలైప్ పొరుప్పన; కాదల్ సెయ్యత్
తుణివన; సీలత్తరాగిత్ తొడర్న్దు విడాద తొండర్క్కు
అణియన; సేయన దేవర్క్కు; ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 4
ఇరుళ్ తరు తున్బప్ పడలం మఱైప్ప, మెయ్ఞ్ఞానం ఎన్నుం
పొరుళ్ తరు కణ్ ఇఴందు ఉణ్బొరుళ్ నాడిప్ పుగల్ ఇఴంద
కురుడరుం తమ్మైప్ పరవక్ కొడు-నరగక్-కుఴి-నిండ్రు
అరుళ్ తరు కైగొడుత్తు ఏట్రుం ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 5
ఎఴువాయ్ ఇఱువాయ్ ఇలాదన; వెంగణ్ పిణి తవిర్త్తు
వఴువా మరుత్తువం ఆవన; మా-నరగక్-కుఴి-వాయ్
విఴువార్-అవర్దమ్మై వీఴ్ప్పన; మీట్పన; మిక్క అన్బోడు
అఴువార్క్కు అముదంగళ్ కాణ్గ; ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 6
తున్బక్-కడలిడైత్ తోణిత్-తొఴిల్ పూండ; తొండర్ తమ్మై
ఇన్బక్-కరై ముగందు ఏట్రుం తిఱత్తన; మాట్రు అయలే
పొన్-పట్టు ఒఴుగప్, పొరుందు-ఒళి సెయ్యుం అప్-పొయ్ పొరుందా
అన్బర్క్కు అణియన కాణ్గ ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 7
కళిత్తుక్ కలందదొర్ కాదల్ కసివొడు, కావిరివాయ్క్
కుళిత్తుత్, తొఴుదు, మున్ నిండ్ర ఇప్-పత్తరైక్ కోదు-ఇల్-సెందేన్
తెళిత్తుచ్, చువై-అముదు ఊట్టి, అమరర్గళ్ సూఴిరుప్ప
అళిత్తుప్, పెరుం సెల్వం ఆక్కుం ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 8
తిరుత్తిక్ కరుత్తినైచ్ చెవ్వే నిఱుత్తిచ్, చెఱుత్తు, ఉడలై
వరుత్తిక్, కడి-మలర్ వాళ్ ఎడుత్తు ఓచ్చి, మరుంగు సెండ్రు
విరుత్తిక్కు ఉఴక్క వల్లోర్గట్కు విణ్-పట్టిగై ఇడుమాల్
అరుత్తిత్తు అరుం-తవర్ ఏత్తుం ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 9
పాడుం పఱండైయుం * ఆందైయుం ఆర్ప్పప్, పరందు పల్-పేయ్
కూడి ముఴవక్ కువి-కవిఴ్ కొట్టక్, కుఱునరిగళ్
నీడుం కుఴల్సెయ్య, వైయం నెళియ, నిణప్-పిణక్కాట్టు
ఆడుం తిరువడి కాణ్గ ఐయాఱన్ అడిత్తలమే.
(* పఱండై - Was it originally - పగండై? - as in 11.2.6 & 11.2.11)
పాడల్ ఎణ్ : 10
నిన్బోల్ అమరర్గళ్ నీళ్ముడి సాయ్త్తు నిమిర్త్తు ఉగుత్త
పైంబోదు ఉఴక్కిప్ పవళం తఴైప్పన; పాంగు అఱియా
ఎన్బోలిగళ్ పఱిత్తు ఇట్ట ఇలైయుం ముగైయుం-ఎల్లాం
అంబోదు ఎనక్ కొళ్ళుం ఐయన్, ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 11
మలైయార్ మడందై మనత్తన; వానోర్ మగుడం మన్ని
నిలైయాయ్ ఇరుప్పన; నిండ్రోర్ మదిప్పన; నీళ్-నిలత్తుప్
పులై-ఆడు పున్మై తవిర్ప్పన; పొన్నులగం అళిక్కుం,
అలై ఆర్ పునల్-పొన్ని సూఴ్న్ద, ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 12
పొలం-పుండరీగప్ పుదుమలర్ పోల్వన; "పోట్రి" ఎన్బార్
పులంబుం పొఴుదుం పుణర్-తుణై ఆవన; పొన్-అనైయాళ్
సిలంబుం, సెఱి-పాడగముం, సెఴుం కిణ్గిణిత్-తిరళుం
అలంబుం తిరువడి కాణ్గ; ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 13
ఉట్రార్ ఇలాదార్క్కు ఉఱుదుణై ఆవన; ఓది నన్నూల్
కట్రార్ పరవప్ పెరుమై ఉడైయన; కాదల్
సెయ్యగిఱ్పార్ తమక్కుక్ కిళర్-ఒళి వానగందాన్ కొడుక్కుం;
అట్రార్క్కు అరుంబొరుళ్ కాణ్గ; ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 14
వానైక్ కడందు, అండత్తు అప్పాల్ మదిప్పన; మందిరిప్పార్
ఊనైక్ కఴిత్తు ఉయ్యక్కొండు అరుళ్ సెయ్వన; ఉత్తమర్క్కు
ఞానచ్ చుడరాయ్ నడువే ఉదిప్పన; నంగై అంజ
ఆనై ఉరిత్తన కాణ్గ; ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 15
మాదిరం మాల్-నిలం ఆవన; వానవర్ మా-ముగట్టిన్
మీదన; మెన్-కఴల్ వెంగచ్చు వీక్కిన; వెన్నమనార్
తూదరై ఓడత్ తురప్పన; తున్బు అఱత్ తొండు-పట్టార్క్కు
ఆదరం ఆవన కాణ్గ; ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 16
పేణిత్ తొఴుం-అవర్ పొన్నులగు ఆళప్ పిఱంగు-అరుళాల్
ఏణిప్పడి నెఱి ఇట్టుక్కొడుత్తు, ఇమైయోర్ ముడిమేల్
మాణిక్కం ఒత్తు, మరగదం పోండ్రు, వయిరం మన్ని,
ఆణిక్-కనగముం ఒక్కుం ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 17
ఓదియ ఞానముం, ఞానప్-పొరుళుం, ఒలి సిఱంద
వేదియర్ వేదముం వేళ్వియుం ఆవన; విణ్ణుం, మణ్ణుం,
సోదియుం సెంజుడర్ ఞాయిఱుం ఒప్పన తూ-మదియోడు;
ఆదియుం అందముం ఆన ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 18
సుణంగు ముగత్తుత్ తుణైములైప్ పావై, సురుంబొడు వండు
అణంగుం కుఴలి, అణి ఆర్ వళైక్కరం కూప్పినిండ్రు
వణంగుం పొఴుదుం, వరుడుం పొఴుదుం, వణ్-కాందళ్ ఒణ్-పోదు
అణంగుం అరవిందం ఒక్కుం ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 19
సుఴల్ ఆర్ తుయర్-వెయిల్ సుట్టిడుం పోదు, అడిత్తొండర్ తున్నుం
నిఴల్ ఆవన; ఎండ్రుం నీంగాప్ పిఱవి నిలై కెడుత్తుక్,
కఴలా వినైగళ్ కఴట్రువ; కాల-వనం కడంద
అఴల్ ఆర్ ఒళియన కాణ్గ; ఐయాఱన్ అడిత్తలమే.
పాడల్ ఎణ్ : 20
వలియాన్ తలై పత్తుం వాయ్విట్టు అలఱ వరై అడర్త్తు,
మెలియా వలియుడైక్ కూట్రై ఉదైత్తు, విణ్ణోర్గళ్ మున్నే
పలి-సేర్ పడుగడైప్ పార్త్తుప్, పన్నాళుం, పలర్ ఇగఴ
అలి ఆం నిలై నిఱ్కుం, ఐయన్ ఐయాఱన్ అడిత్తలమే.
=============================