130) 9.29 - மன்னுக தில்லை (திருப்பல்லாண்டு) - mannuga thillai (thiruppallANdu)
சேந்தனார் - திருப்பல்லாண்டு - பதிகம் 9.29 - மன்னுக தில்லை - (கோயில்)
sēndanār - tiruppallāṇḍu - padigam 9.29 - mannuga tillai - (kōyil)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF:
https://drive.google.com/file/d/1wCHDzmknq76H4Ny8p9_xRQk8pXiRRzyj/view
***
On
YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/jaVSGm5WJPE
Part-2: https://youtu.be/YBbGXEhgR10
Part-3: https://youtu.be/zQqpy8Rt6xM
***
V.
Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சேந்தனார் - திருப்பல்லாண்டு - பதிகம் 9.29 - (கோயில்) - (பண் : பஞ்சமம்)
சேந்தனார் தில்லைக் கூத்தனைப் போற்றிப் பாடிய பதின்மூன்று பாடல்களால் அமைந்தது இப்பதிகம். இவை ஈசனைப் "பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்துவன. ஆதலால், இப்பதிகம் "திருப்பல்லாண்டு" என்று வழங்கப்பெறுகின்றது. வழிபாட்டில் பஞ்சபுராணம் பாடும் பொழுது அவ்வைந்து பாடல்களில் ஒரு திருப்பல்லாண்டுப் பாடலும் இடம்பெறும்.
யாப்புக் குறிப்பு:
இப்பதிகப் பாடல்கள் அறுசீர் அடிகளால் ஆனவை. சில பாடல்களில் சில அடிகள் சீர் மிக்கும் குறைந்தும் வரப்பெற்றுள்ளன. (கொச்சக ஒருபோகு - கலித்தாழிசை)
பன்னிரு திருமுறை வரலாறு (8 முதல் 12 வரை) - Volume-2 - (by வெள்ளைவாரணனார்) - Pages 360 - 369:
மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் மழை பெய்தமையால் திருத்தேர் சேற்றில் அழுந்தி ஓடாது நின்ற பொழுது, "சேந்தா! தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" என்றதொரு வானொலி எல்லாரும் கேட்கும்படி தோன்றியது. தேரிழுக்கும் அடியார் குழுவில் நின்ற சேந்தனர், "மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்" எனத் தொடங்கும் திருப்பல்லாண்டுத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். வடம் பிடியாமலே தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இவ்வற்புதத்தைக் கண்டார் அனைவரும் சேந்தனாரது பேரன்பின் திறத்தை எண்ணி நெஞ்சம் நெக்குருகினர். இதுவே திருவிசைப்பா ஆசிரியராகிய சேந்தனாரைக் குறித்து நெடுநாள்களாக வழங்கப்பெற்று வரும் கதை.
----------
சேந்தனார் - திருப்பல்லாண்டு - பதிகம் 9.29 - (கோயில்) - (பண் : பஞ்சமம்)
(கொச்சக ஒருபோகு / கலித்தாழிசை - meter)
பாடல் எண் : 1
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல *
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
மன்னுக தில்லை; வளர்க நம் பத்தர்கள்; வஞ்சகர் போயகல; *
பொன்னின்-செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி-எல்லாம் விளங்க;
அன்ன-நடை மடவாள் உமை-கோன் அடியோமுக்கு அருள்-புரிந்து,
பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
(* Dharmapuram edition shows - போயகலப் - with an "ப்" at the end.
I think that is incorrect)
பாடல் எண் : 2
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
மிண்டு மனத்தவர் போமின்கள்; மெய்யடியார்கள் விரைந்து வம்மின்;
கொண்டும் கொடுத்தும் குடி-குடி ஈசற்கு ஆட்செய்மின்; குழாம் புகுந்து,
"அண்டம் கடந்த பொருள், அளவு இல்லதோர் ஆனந்த வெள்ளப்-பொருள்,
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்" என்றே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 3
நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந் திறங்களு மேசிந்தித்
தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகர்-இலா வண்ணங்களும்,
சிட்டன் சிவன் அடியாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்து,
அட்டமூர்த்திக்கு, என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு, ஆல-நிழல்
பட்டனுக்கு, என்னைத் தன்பால்-படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 4
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
சொல்-ஆண்ட சுருதிப்-பொருள் சோதித்த தூய்-மனத் தொண்டர் உள்ளீர்;
சில்லாண்டில் சிதையும் சில தேவர் சிறு-நெறி சேராமே,
வில் ஆண்ட கனகத்-திரள் மேரு விடங்கன், விடைப்பாகன்,
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 5
புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக் கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய்
இரந்து-இரந்து அழைப்ப, என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம்? என்றும்
கரந்தும் கரவாத கற்பகன் ஆகிக், கரை-இல் கருணைக்-கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பு-இலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 6
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
சேவிக்க வந்து அயன் இந்திரன் செங்கண்மால் எங்கும் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாம்-குழாமாய் நின்று கூத்தாடும்
ஆவிக்கு அமுதை, என் ஆர்வத் தனத்தினை, அப்பனை, ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத்து அப்-புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 7
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்; பெற்றது ஆர் பெறுவார் உலகில்?
ஊரும் உலகும் கழற உழறி, உமை-மணவாளனுக்கு ஆள்
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 8
சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங் கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
சேலும் கயலும் திளைக்கும் கண்ணார் இளம் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றிசைப்ப,
மாலும் அயனும் அறியா நெறி தந்து, வந்து என் மனத்து-அகத்தே
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 9
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்;
மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன்; மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து, நட்டம் பயில-வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 10
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
தாதையைத் தாள் அற வீசிய சண்டிக்கு அவ்-அண்டத்தொடும் உடனே
பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச்,
சோதி மணி-முடித் தாமமும், நாமமும், தொண்டர்க்கு நாயகமும்,
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 11
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
குழல்-ஒலி, யாழ்-ஒலி, கூத்து-ஒலி, ஏத்து-ஒலி எங்கும் குழாம் பெருகி,
விழவொலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரில்,
மழ-விடையாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்-பிறந்த
பழ-அடியாரொடும் கூடி, எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 12
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
ஆர் ஆர் வந்தார், அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்?
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்;
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை-அனைத்தும் நிறைந்து,
பார் ஆர் தொல்-புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
பாடல் எண் : 13
எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு தாமெம் பிரான்என்றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரை *
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேற் *
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று பல்லாண்டு கூறுதுமே.
Word separated:
"எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுது ஆம் எம்பிரான்" என்றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரை *
அந்தம்-இல் ஆனந்தச் சேந்தன் எனைப் புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர்மேல் *
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே.
(* Lines 2 and 3 in this song appear corrupted. Original version might have been something like
சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் சேந்தன் செப்புரை
அந்தம்-இல் ஆனந்தச் செந்தேன் எனப் புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர்மேல்
as per the note in Dharmapuram edition)
==================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
sēndanār - tiruppallāṇḍu - padigam 9.29 - (kōyil) - (paṇ : pañjamam)
(koccaga orubōgu / kalittāḻisai - meter)
pāḍal eṇ : 1
mannuga tillai; vaḷarga nam pattargaḷ; vañjagar pōyagala; *
ponnin-sey maṇḍabattu uḷḷē pugundu buvani-ellām viḷaṅga;
anna-naḍai maḍavāḷ umai-kōn aḍiyōmukku aruḷ-purindu,
pinnaip piṟavi aṟukka neṟi tanda pittaṟkup pallāṇḍu kūṟudumē.
(* Dharmapuram edition shows - pōyagalap - with an "p" at the end.
I think that is incorrect)
pāḍal eṇ : 2
miṇḍu manattavar pōmingaḷ; meyyaḍiyārgaḷ viraindu vammin;
koṇḍum koḍuttum kuḍi-kuḍi īsaṟku āṭceymin; kuḻām pugundu,
"aṇḍam kaḍanda poruḷ, aḷavu illadōr ānanda veḷḷap-poruḷ,
paṇḍum iṇḍrum eṇḍrum uḷḷa poruḷ" eṇḍrē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 3
niṭṭai ilā uḍal nīttu ennai āṇḍa nigar-ilā vaṇṇaṅgaḷum,
siṭṭan sivan aḍiyāraic cīrāṭṭum tiṟaṅgaḷumē sindittu,
aṭṭamūrttikku, en agam nega ūṟum amirdinukku, āla-niḻal
paṭṭanukku, ennait tanbāl-paḍuttānukkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 4
sol-āṇḍa surudip-poruḷ sōditta tūy-manat toṇḍar uḷḷīr;
sillāṇḍil sidaiyum sila dēvar siṟu-neṟi sērāmē,
vil āṇḍa kanagat-tiraḷ mēru viḍaṅgan, viḍaippāgan,
pallāṇḍu ennum padam kaḍandānukkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 5
purandaran māl ayan pūsaliṭṭu ōlamiṭṭu innam pugal aridāy
irandu-irandu aḻaippa, en uyir āṇḍa kōvinukku en seya vallam? eṇḍrum
karandum karavāda kaṟpagan āgik, karai-il karuṇaik-kaḍal
parandum nirandum varambu-ilāp pāṅgaṟkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 6
sēvikka vandu ayan indiran seṅgaṇmāl eṅgum disaidisaiyana
kūvik kavarndu neruṅgik kuḻām-kuḻāmāy niṇḍru kūttāḍum
āvikku amudai, en ārvat tanattinai, appanai, oppamarar
pāvikkum pāvagattu ap-puṟattānukkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 7
sīrum tiruvum poliyac civalōga nāyagan sēvaḍikkīḻ
ārum peṟāda aṟivu peṭrēn; peṭradu ār peṟuvār ulagil?
ūrum ulagum kaḻaṟa uḻaṟi, umai-maṇavāḷanukku āḷ
pārum visumbum aṟiyum parisu nām pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 8
sēlum kayalum tiḷaikkum kaṇṇār iḷam koṅgaiyil seṅguṅgumam
pōlum poḍi aṇi mārbu ilaṅgum eṇḍru puṇṇiyar pōṭrisaippa,
mālum ayanum aṟiyā neṟi tandu, vandu en manattu-agattē
pālum amudamum ottu niṇḍrānukkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 9
pālukkup pālagan vēṇḍi aḻudiḍap pāṟkaḍal īnda pirān;
mālukkuc cakkaram aṇḍru aruḷ seydavan; manniya tillaidannuḷ
ālikkum andaṇar vāḻgiṇḍra siṭrambalamē iḍamāgap
pālittu, naṭṭam payila-vallānukkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 10
tādaiyait tāḷ aṟa vīsiya saṇḍikku av-aṇḍattoḍum uḍanē
būdalattōrum vaṇaṅgap poṟkōyilum pōnagamum aruḷic,
cōdi maṇi-muḍit tāmamum, nāmamum, toṇḍarkku nāyagamum,
pādagattukkup parisu vaittānukkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 11
kuḻal-oli, yāḻ-oli, kūttu-oli, ēttu-oli eṅgum kuḻām perugi,
viḻavoli viṇ aḷavum seṇḍru vimmi migu tiruvārūril,
maḻa-viḍaiyāṟku vaḻivaḻi āḷāy maṇañjey kuḍip-piṟanda
paḻa-aḍiyāroḍum kūḍi, emmānukkē pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 12
ār ār vandār, amarar kuḻāttil aṇiyuḍai ādiraināḷ?
nārāyaṇanoḍu nānmugan aṅgi iraviyum indiranum;
tēr ār vīdiyil dēvar kuḻāṅgaḷ disai-anaittum niṟaindu,
pār ār tol-pugaḻ pāḍiyum āḍiyum pallāṇḍu kūṟudumē.
pāḍal eṇ : 13
"endai endāy suṭram muṭrum emakku amudu ām embirān" eṇḍreṇḍru
sindai seyyum sivan sīraḍiyār aḍināy seppurai *
andam-il ānandac cēndan enaip pugundu āṇḍugoṇḍu āruyirmēl *
pandam piriyap parindavanē eṇḍru pallāṇḍu kūṟudumē.
(* Lines 2 and 3 in this song appear corrupted. Original version might have been something like
sindai seyyum sivan sīraḍiyār aḍināy sēndan seppurai
andam-il ānandac cendēn enap pugundu āṇḍugoṇḍu āruyirmēl
as per the note in Dharmapuram edition)
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
सेन्दनार् - तिरुप्पल्लाण्डु - पदिगम् 9.29 - (कोयिल्) - (पण् : पञ्जमम्)
(कॊच्चग ऒरुबोगु / कलित्ताऴिसै - meter)
पाडल् ऎण् : 1
मन्नुग तिल्लै; वळर्ग नम् पत्तर्गळ्; वञ्जगर् पोयगल; *
पॊन्निन्-सॆय् मण्डबत्तु उळ्ळे पुगुन्दु बुवनि-ऎल्लाम् विळङ्ग;
अन्न-नडै मडवाळ् उमै-कोन् अडियोमुक्कु अरुळ्-पुरिन्दु,
पिन्नैप् पिऱवि अऱुक्क नॆऱि तन्द पित्तऱ्कुप् पल्लाण्डु कूऱुदुमे.
(* Dharmapuram edition shows - पोयगलप् - with an "प्" at the end.
I think that is incorrect)
पाडल् ऎण् : 2
मिण्डु मनत्तवर् पोमिन्गळ्; मॆय्यडियार्गळ् विरैन्दु वम्मिन्;
कॊण्डुम् कॊडुत्तुम् कुडि-कुडि ईसऱ्कु आट्चॆय्मिन्; कुऴाम् पुगुन्दु,
"अण्डम् कडन्द पॊरुळ्, अळवु इल्लदोर् आनन्द वॆळ्ळप्-पॊरुळ्,
पण्डुम् इण्ड्रुम् ऎण्ड्रुम् उळ्ळ पॊरुळ्" ऎण्ड्रे पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 3
निट्टै इला उडल् नीत्तु ऎन्नै आण्ड निगर्-इला वण्णङ्गळुम्,
सिट्टन् सिवन् अडियारैच् चीराट्टुम् तिऱङ्गळुमे सिन्दित्तु,
अट्टमूर्त्तिक्कु, ऎन् अगम् नॆग ऊऱुम् अमिर्दिनुक्कु, आल-निऴल्
पट्टनुक्कु, ऎन्नैत् तन्बाल्-पडुत्तानुक्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 4
सॊल्-आण्ड सुरुदिप्-पॊरुळ् सोदित्त तूय्-मनत् तॊण्डर् उळ्ळीर्;
सिल्लाण्डिल् सिदैयुम् सिल देवर् सिऱु-नॆऱि सेरामे,
विल् आण्ड कनगत्-तिरळ् मेरु विडङ्गन्, विडैप्पागन्,
पल्लाण्डु ऎन्नुम् पदम् कडन्दानुक्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 5
पुरन्दरन् माल् अयन् पूसलिट्टु ओलमिट्टु इन्नम् पुगल् अरिदाय्
इरन्दु-इरन्दु अऴैप्प, ऎन् उयिर् आण्ड कोविनुक्कु ऎन् सॆय वल्लम्? ऎण्ड्रुम्
करन्दुम् करवाद कऱ्पगन् आगिक्, करै-इल् करुणैक्-कडल्
परन्दुम् निरन्दुम् वरम्बु-इलाप् पाङ्गऱ्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 6
सेविक्क वन्दु अयन् इन्दिरन् सॆङ्गण्माल् ऎङ्गुम् दिसैदिसैयन
कूविक् कवर्न्दु नॆरुङ्गिक् कुऴाम्-कुऴामाय् निण्ड्रु कूत्ताडुम्
आविक्कु अमुदै, ऎन् आर्वत् तनत्तिनै, अप्पनै, ऒप्पमरर्
पाविक्कुम् पावगत्तु अप्-पुऱत्तानुक्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 7
सीरुम् तिरुवुम् पॊलियच् चिवलोग नायगन् सेवडिक्कीऴ्
आरुम् पॆऱाद अऱिवु पॆट्रेन्; पॆट्रदु आर् पॆऱुवार् उलगिल्?
ऊरुम् उलगुम् कऴऱ उऴऱि, उमै-मणवाळनुक्कु आळ्
पारुम् विसुम्बुम् अऱियुम् परिसु नाम् पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 8
सेलुम् कयलुम् तिळैक्कुम् कण्णार् इळम् कॊङ्गैयिल् सॆङ्गुङ्गुमम्
पोलुम् पॊडि अणि मार्बु इलङ्गुम् ऎण्ड्रु पुण्णियर् पोट्रिसैप्प,
मालुम् अयनुम् अऱिया नॆऱि तन्दु, वन्दु ऎन् मनत्तु-अगत्ते
पालुम् अमुदमुम् ऒत्तु निण्ड्रानुक्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 9
पालुक्कुप् पालगन् वेण्डि अऴुदिडप् पाऱ्कडल् ईन्द पिरान्;
मालुक्कुच् चक्करम् अण्ड्रु अरुळ् सॆय्दवन्; मन्निय तिल्लैदन्नुळ्
आलिक्कुम् अन्दणर् वाऴ्गिण्ड्र सिट्रम्बलमे इडमागप्
पालित्तु, नट्टम् पयिल-वल्लानुक्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 10
तादैयैत् ताळ् अऱ वीसिय सण्डिक्कु अव्-अण्डत्तॊडुम् उडने
बूदलत्तोरुम् वणङ्गप् पॊऱ्कोयिलुम् पोनगमुम् अरुळिच्,
चोदि मणि-मुडित् ताममुम्, नाममुम्, तॊण्डर्क्कु नायगमुम्,
पादगत्तुक्कुप् परिसु वैत्तानुक्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 11
कुऴल्-ऒलि, याऴ्-ऒलि, कूत्तु-ऒलि, एत्तु-ऒलि ऎङ्गुम् कुऴाम् पॆरुगि,
विऴवॊलि विण् अळवुम् सॆण्ड्रु विम्मि मिगु तिरुवारूरिल्,
मऴ-विडैयाऱ्कु वऴिवऴि आळाय् मणञ्जॆय् कुडिप्-पिऱन्द
पऴ-अडियारॊडुम् कूडि, ऎम्मानुक्के पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 12
आर् आर् वन्दार्, अमरर् कुऴात्तिल् अणियुडै आदिरैनाळ्?
नारायणनॊडु नान्मुगन् अङ्गि इरवियुम् इन्दिरनुम्;
तेर् आर् वीदियिल् देवर् कुऴाङ्गळ् दिसै-अनैत्तुम् निऱैन्दु,
पार् आर् तॊल्-पुगऴ् पाडियुम् आडियुम् पल्लाण्डु कूऱुदुमे.
पाडल् ऎण् : 13
"ऎन्दै ऎन्दाय् सुट्रम् मुट्रुम् ऎमक्कु अमुदु आम् ऎम्बिरान्" ऎण्ड्रॆण्ड्रु
सिन्दै सॆय्युम् सिवन् सीरडियार् अडिनाय् सॆप्पुरै *
अन्दम्-इल् आनन्दच् चेन्दन् ऎनैप् पुगुन्दु आण्डुगॊण्डु आरुयिर्मेल् *
पन्दम् पिरियप् परिन्दवने ऎण्ड्रु पल्लाण्डु कूऱुदुमे.
(* Lines 2 and 3 in this song appear corrupted. Original version might have been something like
सिन्दै सॆय्युम् सिवन् सीरडियार् अडिनाय् सेन्दन् सॆप्पुरै
अन्दम्-इल् आनन्दच् चॆन्देन् ऎनप् पुगुन्दु आण्डुगॊण्डु आरुयिर्मेल्
as per the note in Dharmapuram edition)
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
సేందనార్ - తిరుప్పల్లాండు - పదిగం 9.29 - (కోయిల్) - (పణ్ : పంజమం)
(కొచ్చగ ఒరుబోగు / కలిత్తాఴిసై - meter)
పాడల్ ఎణ్ : 1
మన్నుగ తిల్లై; వళర్గ నం పత్తర్గళ్; వంజగర్ పోయగల; *
పొన్నిన్-సెయ్ మండబత్తు ఉళ్ళే పుగుందు బువని-ఎల్లాం విళంగ;
అన్న-నడై మడవాళ్ ఉమై-కోన్ అడియోముక్కు అరుళ్-పురిందు,
పిన్నైప్ పిఱవి అఱుక్క నెఱి తంద పిత్తఱ్కుప్ పల్లాండు కూఱుదుమే.
(* Dharmapuram edition shows - పోయగలప్ - with an "ప్" at the end.
I think that is incorrect)
పాడల్ ఎణ్ : 2
మిండు మనత్తవర్ పోమిన్గళ్; మెయ్యడియార్గళ్ విరైందు వమ్మిన్;
కొండుం కొడుత్తుం కుడి-కుడి ఈసఱ్కు ఆట్చెయ్మిన్; కుఴాం పుగుందు,
"అండం కడంద పొరుళ్, అళవు ఇల్లదోర్ ఆనంద వెళ్ళప్-పొరుళ్,
పండుం ఇండ్రుం ఎండ్రుం ఉళ్ళ పొరుళ్" ఎండ్రే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 3
నిట్టై ఇలా ఉడల్ నీత్తు ఎన్నై ఆండ నిగర్-ఇలా వణ్ణంగళుం,
సిట్టన్ సివన్ అడియారైచ్ చీరాట్టుం తిఱంగళుమే సిందిత్తు,
అట్టమూర్త్తిక్కు, ఎన్ అగం నెగ ఊఱుం అమిర్దినుక్కు, ఆల-నిఴల్
పట్టనుక్కు, ఎన్నైత్ తన్బాల్-పడుత్తానుక్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 4
సొల్-ఆండ సురుదిప్-పొరుళ్ సోదిత్త తూయ్-మనత్ తొండర్ ఉళ్ళీర్;
సిల్లాండిల్ సిదైయుం సిల దేవర్ సిఱు-నెఱి సేరామే,
విల్ ఆండ కనగత్-తిరళ్ మేరు విడంగన్, విడైప్పాగన్,
పల్లాండు ఎన్నుం పదం కడందానుక్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 5
పురందరన్ మాల్ అయన్ పూసలిట్టు ఓలమిట్టు ఇన్నం పుగల్ అరిదాయ్
ఇరందు-ఇరందు అఴైప్ప, ఎన్ ఉయిర్ ఆండ కోవినుక్కు ఎన్ సెయ వల్లం? ఎండ్రుం
కరందుం కరవాద కఱ్పగన్ ఆగిక్, కరై-ఇల్ కరుణైక్-కడల్
పరందుం నిరందుం వరంబు-ఇలాప్ పాంగఱ్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 6
సేవిక్క వందు అయన్ ఇందిరన్ సెంగణ్మాల్ ఎంగుం దిసైదిసైయన
కూవిక్ కవర్న్దు నెరుంగిక్ కుఴాం-కుఴామాయ్ నిండ్రు కూత్తాడుం
ఆవిక్కు అముదై, ఎన్ ఆర్వత్ తనత్తినై, అప్పనై, ఒప్పమరర్
పావిక్కుం పావగత్తు అప్-పుఱత్తానుక్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 7
సీరుం తిరువుం పొలియచ్ చివలోగ నాయగన్ సేవడిక్కీఴ్
ఆరుం పెఱాద అఱివు పెట్రేన్; పెట్రదు ఆర్ పెఱువార్ ఉలగిల్?
ఊరుం ఉలగుం కఴఱ ఉఴఱి, ఉమై-మణవాళనుక్కు ఆళ్
పారుం విసుంబుం అఱియుం పరిసు నాం పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 8
సేలుం కయలుం తిళైక్కుం కణ్ణార్ ఇళం కొంగైయిల్ సెంగుంగుమం
పోలుం పొడి అణి మార్బు ఇలంగుం ఎండ్రు పుణ్ణియర్ పోట్రిసైప్ప,
మాలుం అయనుం అఱియా నెఱి తందు, వందు ఎన్ మనత్తు-అగత్తే
పాలుం అముదముం ఒత్తు నిండ్రానుక్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 9
పాలుక్కుప్ పాలగన్ వేండి అఴుదిడప్ పాఱ్కడల్ ఈంద పిరాన్;
మాలుక్కుచ్ చక్కరం అండ్రు అరుళ్ సెయ్దవన్; మన్నియ తిల్లైదన్నుళ్
ఆలిక్కుం అందణర్ వాఴ్గిండ్ర సిట్రంబలమే ఇడమాగప్
పాలిత్తు, నట్టం పయిల-వల్లానుక్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 10
తాదైయైత్ తాళ్ అఱ వీసియ సండిక్కు అవ్-అండత్తొడుం ఉడనే
బూదలత్తోరుం వణంగప్ పొఱ్కోయిలుం పోనగముం అరుళిచ్,
చోది మణి-ముడిత్ తామముం, నామముం, తొండర్క్కు నాయగముం,
పాదగత్తుక్కుప్ పరిసు వైత్తానుక్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 11
కుఴల్-ఒలి, యాఴ్-ఒలి, కూత్తు-ఒలి, ఏత్తు-ఒలి ఎంగుం కుఴాం పెరుగి,
విఴవొలి విణ్ అళవుం సెండ్రు విమ్మి మిగు తిరువారూరిల్,
మఴ-విడైయాఱ్కు వఴివఴి ఆళాయ్ మణంజెయ్ కుడిప్-పిఱంద
పఴ-అడియారొడుం కూడి, ఎమ్మానుక్కే పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 12
ఆర్ ఆర్ వందార్, అమరర్ కుఴాత్తిల్ అణియుడై ఆదిరైనాళ్?
నారాయణనొడు నాన్ముగన్ అంగి ఇరవియుం ఇందిరనుం;
తేర్ ఆర్ వీదియిల్ దేవర్ కుఴాంగళ్ దిసై-అనైత్తుం నిఱైందు,
పార్ ఆర్ తొల్-పుగఴ్ పాడియుం ఆడియుం పల్లాండు కూఱుదుమే.
పాడల్ ఎణ్ : 13
"ఎందై ఎందాయ్ సుట్రం ముట్రుం ఎమక్కు అముదు ఆం ఎంబిరాన్" ఎండ్రెండ్రు
సిందై సెయ్యుం సివన్ సీరడియార్ అడినాయ్ సెప్పురై *
అందం-ఇల్ ఆనందచ్ చేందన్ ఎనైప్ పుగుందు ఆండుగొండు ఆరుయిర్మేల్ *
పందం పిరియప్ పరిందవనే ఎండ్రు పల్లాండు కూఱుదుమే.
(* Lines 2 and 3 in this song appear corrupted. Original version might have been something like
సిందై సెయ్యుం సివన్ సీరడియార్ అడినాయ్ సేందన్ సెప్పురై
అందం-ఇల్ ఆనందచ్ చెందేన్ ఎనప్ పుగుందు ఆండుగొండు ఆరుయిర్మేల్
as per the note in Dharmapuram edition)
================ ============