Sunday, February 18, 2024

7.41 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - (திருக்கச்சூர்)

140) 7.41 - முதுவாய் ஓரி - mudhuvAy Ori - (திருக்கச்சூர்)

சுந்தரர் தேவாரம் - 7.41 – முதுவாய் ஓரி - திருக்கச்சூர் ஆலக்கோயில்

sundarar tēvāram - 7.41 – muduvāy ōri - tirukkaccūr ālakkōyil


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1W_GyQp0AywNkI7H8zRSlsZ0bRutshMJp/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/kThNKsEWDos

Part-2: https://youtu.be/qTXoBEDZvI8

Part-3: https://youtu.be/Fhj297xGATk

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_041.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.41 – திருக்கச்சூர் ஆலக்கோயில் - (பண் - கொல்லிக் கௌவாணம்)


திருக்கச்சூர் : செங்கல்பட்டு அருகே உள்ள தலம். இங்கே இரு கோயில்கள். ஊரினுள் ஒரு பெரிய கோயிலும், மேட்டுப்பகுதியில் (சிறிய மலை?) ஓரளவு சிறிய கோயிலும் உள்ளன. விஷ்ணு கச்சபமாய் ஈசனை வழிபட்ட தலம். கச்சூர் - ஊர்ப்பெயர்; ஆலக்கோயில் - கோயிற்பெயர்; ஈசன் பெயர் - கச்சபேஸ்வரர்; மலைக்கோயிலில் ஈசன் பெயர் - மருந்தீஸ்வரர்;


பதிக வரலாறு : சுந்தரர் திருக்கழுக்குன்றத்திலிருந்து திருக்கச்சூர் சென்றார். அங்கே ஆலக்கோயிலில் பெருமானைத் தொழுதார். பகல் உணவு உண்ணும் வேளை வந்தது. ஆனால் உணவு சமைக்கும் பரிசனங்கள் இன்னும் வந்துசேர்ந்திலர். பசியோடு கோயிலின் வெளியே தங்கினார். சிவபெருமான், அந்தணர் வடிவில் ஒரு திருவோட்டைக் கையில் தாங்கி வந்து, "பசியால் வருந்தியுள்ளீர்; இங்கேயே இரும்; உம் பசிதீரச், சோறு இரந்து கொணர்கின்றேன்" என்று கூறி, அந்த உச்சிவேளையில் வீடுதொறும் சென்று பலியேற்றுக் கொணர்ந்து கொடுத்தருளினார். சுந்தரரும் அன்போடு தொழுது வாங்கித் தொண்டர்களுடன் உண்டு மகிழ்ந்தார். அந்தணர் வடிவில் வந்த பெருமானும் சுந்தரர் அறியாமல் மறைந்தருளினார். அப்பொழுது சுந்தரர் தமக்கு உணவு தந்தருளியவர் சிவபெருமானே என்று உணர்ந்து பாடியருளியது இப்பதிகம்.


My notes:

பாடல் 1 & 2 - இவற்றில் சொன்ன கருத்தை இப்பதிகத்தின் பிற பாடல்களிலும் சேர்த்துப் பொருள்கொள்ளவேண்டும்;

பாடல்-1: கது-வாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?

பாடல்-2: பலிக்கு என்று உச்சம்போதா ஊர்-ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே?

----------


Sundarar goes to Thirukkachur (tirukkaccūr), worships Siva in the temple, and comes outside

# 3328 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 174

பாடியவப் பதியின்க ணினிதமர்ந்து பணிந்துபோய்

நாடியநல் லுணர்வினொடுந் திருக்கச்சூர் தனைநண்ணி

ஆடகமா மதில்புடைசூ ழாலக்கோ யிலினமுதைக்

கூடியமெய் யன்புருகக் கும்பிட்டுப் புறத்தணைந்தார்.


Word separated:

பாடிய அப்-பதியின்கண் இனிது-அமர்ந்து பணிந்து-போய்,

நாடிய நல்-உணர்வினொடும் திருக்-கச்சூர்தனை நண்ணி,

ஆடக-மா-மதில் புடைசூழ் ஆலக்கோயிலின் அமுதைக்

கூடிய மெய்-அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார்.


It was lunch-time and Sundarar was hungry. He awaited the arrival of his entourage.

# 3329 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 175

அணைந்தருளு மவ்வேலை யமுதுசெயும் பொழுதாகக்

கொணர்ந்தமுது சமைத்தளிக்கும் பரிசனமுங் குறுகாமைத்

தணந்தபசி வருத்தத்தாற் றம்பிரான் றிருவாயிற்

புணர்ந்தமதிற் புறத்திருந்தார் முனைப்பாடிப் புரவலனார்.


Word separated:

அணைந்தருளும் அவ்-வேலை அமுதுசெயும் பொழுது ஆகக்,

கொணர்ந்து அமுது சமைத்து-அளிக்கும் பரிசனமும் குறுகாமைத்

தணந்த பசி வருத்தத்தால், தம்பிரான் திருவாயில்

புணர்ந்த மதிற்-புறத்து இருந்தார் முனைப்பாடிப் புரவலனார்.


Siva takes the form of a brahmana and approaches Sundarar

# 3330 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 176

வன்றொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார்

மின்றங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி

அன்றங்கு வாழ்வாரோ ரந்தணராய்ப் புறப்பட்டுச்

சென்றன்பர் முகநோக்கி யருள்கூரச் செப்புவார்,


Word separated:

வன்-தொண்டர் பசி-தீர்க்க மலையின்மேல் மருந்து ஆனார்,

மின் தங்கு வெண்-தலையோடு ஒழிந்து, ஒரு வெற்றோடு ஏந்தி,

அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச்

சென்று, அன்பர் முகம் நோக்கி அருள்-கூரச் செப்புவார்,


The brahmana (Siva) tells Sundarar that he will gather alms and bring food to him

# 3331 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 177

"மெய்ப்பசியான் மிகவருந்தி யிளைத்திருந்தீர்; வேட்கைவிட

இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்;

அப்புறநீ ரகலாதே சிறிதுபொழு தமரு"மெனச்

செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறுஞ் சென்றிரப்பார்,


Word separated:

"மெய்ப்-பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர்; வேட்கை விட

இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்குக் கொணர்கின்றேன்;

அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும்" எனச்

செப்பியவர், திருக்கச்சூர் மனைதோறும் சென்று இரப்பார்,


Siva seeks alms at various houses there and brings food to Sundarar

# 3332 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 178

வெண்டிருநீற் றணிதிகழ விளங்குநூ லொளிதுளங்கக்

கண்டவர்கண் மனமுருகக் கடும்பகற்போ திடும்பலிக்குப்

புண்டரிகக் கழல்புவிமேற் பொருந்தமனை தொறும்புக்குக்

கொண்டுதாம் விரும்பியாட் கொண்டவர்முன் கொடுவந்தார்.


Word separated:

வெண்-திருநீற்று அணி திகழ, விளங்கு-நூல் ஒளி துளங்கக்,

கண்டவர்கள் மனம் உருகக், கடும்-பகற்போது இடும் பலிக்குப்,

புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனைதொறும் புக்குக்

கொண்டு, தாம் விரும்பி ஆட்கொண்டவர்முன் கொடுவந்தார்.


Sundarar gratefully accepts the food

# 3333 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 179

இரந்துதாங் கொடுவந்த வின்னடிசி லுங்கறியும்

"அரந்தைதரும் பசிதீர வருந்துவீ" ரெனவளிப்பப்

பெருந்தகையார் மறையவர்தம் பேரருளின் றிறம்பேணி

நிரந்தபெருங் காதலினா னேர்தொழுது வாங்கினார்.


Word separated:

இரந்து தாம் கொடுவந்த இன்-அடிசிலும் கறியும்

"அரந்தை தரும் பசி தீர அருந்துவீர்" என அளிப்பப்,

பெருந்தகையார் மறையவர்தம் பேரருளின் திறம் பேணி,

நிரந்த பெரும்-காதலினால் நேர் தொழுது வாங்கினார்.


The brahmana (Siva) quietly disappears without anyone noticing

# 3334 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 180

வாங்கியவத் திருவமுது வன்றொண்டர் மருங்கணைந்த

ஓங்குதவத் தொண்டருட னுண்டருளி யுவந்திருப்ப

ஆங்கருகு நின்றார்போ* லவர்தம்மை யறியாமே

நீங்கினா ரெப்பொருளு நீங்காத நிலைமையினார்.

(* நின்றார்போல்? நின்றாற்போல்? )


Word separated:

வாங்கிய அத்-திருவமுது வன்-தொண்டர் மருங்கு அணைந்த

ஓங்கு-தவத்-தொண்டருடன் உண்டருளி உவந்திருப்ப,

ஆங்கு அருகு நின்றார்போல்* அவர் தம்மை அறியாமே

நீங்கினார், எப்-பொருளும் நீங்காத நிலைமையினார்.

(* நின்றார்போல்? நின்றாற்போல்? )


Sundarar relaizes that it was Siva who had come and given him food

# 3335 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 181

திருநாவ லூராளி சிவயோகி யார்நீங்க

வருநாம மறையவனா ரிறையவனா ரெனமதித்தே

"பெருநாதச் சிலம்பணிசே வடிவருந்தப் பெரும்பகற்கண்

உருநாடி யெழுந்தருளிற் றென்பொருட்டா" மெனவுருகி,


Word separated:

திருநாவலூராளி சிவயோகியார் நீங்க,

வரு-நாம மறையவனார் இறையவனார் என மதித்தே,

"பெரு-நாதச் சிலம்பு அணி-சேவடி வருந்தப் பெரும்-பகற்கண்

உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம்" என உருகி,


Sundar sings the padhigam "mudhuvAy Ori" (mudu-vāy ōri)

# 3336 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 182

"முதுவா யோரி" யென்றெடுத்து முதல்வ னார்தம் பெருங்கருணை

"யதுவா மிது"வென் றதிசயம்வந் தெய்தக் கண்ணீர் மழையருவிப்

புதுவார் புனலின் மயிர்ப்புளகம் புதையப் பதிகம் போற்றிசைத்து

மதுவா ரிதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.


Word separated:

"முது-வாய் ஓரி" என்று எடுத்து, முதல்வனார்தம் பெருங்கருணை

"அதுவாம் இது" என்று அதிசயம் வந்து-எய்தக், கண்ணீர்-மழை-அருவிப்

புது வார்-புனலின் மயிர்ப்புளகம் புதையப், பதிகம் போற்றிசைத்து,

மது-ஆர்-இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.41 – திருக்கச்சூர் ஆலக்கோயில் - (பண் - கொல்லிக் கௌவாணம்)

("தானா தானா - தானா தானா - தானா தானா தனதானா" - என்ற சந்தம்)

(தானா - may also come as - தனனா / தான / தனன)

(தனதானா - may also come as - தானானா)

பாடல் எண் : 1

முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே

மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா

கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே

அதுவே யாமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.


Word separated:

முது-வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி-கொண்டு ஆடல் முயல்வானே;

மது ஆர் கொன்றைப் புது வீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா;

கது-வாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?

அதுவே ஆமாறு இதுவோ, கச்சூர் ஆலக்கோயில் அம்மானே.


பாடல் எண் : 2

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்

றுச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே

இச்சை யறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்

அச்சம் மில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே.


Word separated:

கச்சு ஏர் அரவு-ஒன்று அரையில் அசைத்துக், கழலும் சிலம்பும் கலிக்கப், பலிக்கு என்று

உச்சம்போதா ஊர்-ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே?

இச்சை அறியோம், எங்கள் பெருமான்; ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்;

அச்சம் இல்லாக், கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே.


பாடல் எண் : 3

சாலக் கோயில் உளநின் கோயில் அவைஎன் தலைமேற் கொண்டாடி

மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் வானோ ரறியா நெறியானே

கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர்பூங் கச்சூர் வடபாலை

ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் அறங்க ளுரைத்த அம்மானே.


Word separated:

சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலைமேற் கொண்டாடி

மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்; வானோர் அறியா நெறியானே;

கோலக் கோயில், குறையாக் கோயில், குளிர்-பூங்கச்சூர் வட-பாலை

ஆலக்கோயில், கல்லால் நிழற்கீழ் அறங்கள் உரைத்த அம்மானே.


பாடல் எண் : 4

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னேர் உருவத் தொளியானே

கடையும் புடைசூழ் மணிமண் டபமுங் கன்னி மாடங் கலந்தெங்கும்

புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் பூமேல் திருமா மகள்புல்கி

அடையுங் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.


Word separated:

விடையும் கொடியும் சடையும் உடையாய்; மின்னேர் உருவத்து-ஒளியானே;

கடையும் புடைசூழ் மணி-மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும்,

புடையும் பொழிலும் புனலும் தழுவிப், பூமேல் திருமாமகள் புல்கி

அடையும், கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே.

(மின்னேர் = மின் நேர் / மின் ஏர் = like lightning)


பாடல் எண் : 5

மேலை விதியே விதியின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய்

காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா

மாலை மதியே மலைமேல் மருந்தே மறவே னடியேன் வயல்சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.


Word separated:

மேலை விதியே; விதியின் பயனே; விரவார் புரம் மூன்று எரிசெய்தாய்;

காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய்; கறைக்கண்டா;

மாலை மதியே; மலைமேல் மருந்தே; மறவேன் அடியேன், வயல் சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே.


பாடல் எண் : 6

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்ற மேறிப் பேய்சூழ்தல்

துறவாய் மறவாய் சுடுகா டென்றும் இடமாக் கொண்டு நடமாடி

ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே

அறவே யொழியாய் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே.


Word separated:

பிறவாய்; இறவாய்; பேணாய்; மூவாய்; பெற்றம் ஏறிப், பேய் சூழ்தல்

துறவாய்; மறவாய்; சுடுகாடு என்றும் இடமாக் கொண்டு நடம் ஆடி,

ஒறு-வாய்த்-தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே?

அறவே ழியாய், கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே.


பாடல் எண் : 7

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே

மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்

மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த

ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.


Word separated:

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே;

மெய்யே, எங்கள் பெருமான் உன்னை, நினைவார் அவரை நினை-கண்டாய்;

மை ஆர் தடங்கண் மடந்தை பங்கா; கங்கார்* மதியம் சடை வைத்த

ஐயா; செய்யாய்; வெளியாய்; கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

(* கங்கார் - கங்கை ஆர் - as interpreted in the commentaries)


பாடல் எண் : 8

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்

கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்

மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட

ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே.


Word separated:

ஊனைப் பெருக்கி உன்னை நினையாதொழிந்தேன், செடியேன், உணர்வு இல்லேன்;

கானக் கொன்றை கமழ மலரும் கடி-நாறு உடையாய்; கச்சூராய்;

மானைப் புரையும் மட-மென்-நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட

ஆனைத்-தோலாய்; ஞானக்-கண்ணாய்; ஆலக் கோயில் அம்மானே.


பாடல் எண் : 9

காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனையேத்தி

ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்ளல் அழகிதே

ஓதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா எனையாள்வாய்

ஆதற் கழனிப் பழனக்* கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

(* Variant reading: ஆதற் பழனக் கழனிக் கச்சூர்)


Word separated:

காதல் செய்து, களித்துப், பிதற்றிக், கடி-மா-மலர் இட்டு, உனை ஏத்தி

ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்ளல் அழகிதே?

ஓதக் கண்டேன் உன்னை மறவேன்; உமையாள் கணவா; எனை ஆள்வாய்;

ஆதற்-கழனிப் பழனக்* கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

(* Variant reading: ஆதற்-பழனக் கழனிக் கச்சூர்)


பாடல் எண் : 10

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக் கோயில் அம்மானை

உன்ன முன்னு மனத்தா ரூரன் ஆரூ ரன்பேர் முடிவைத்த

மன்னு புலவன் வயல்நா வலர்கோன் செஞ்சொல் நாவன் வன்றொண்டன்

பன்னு தமிழ்நூல் மாலை வல்லா ரவர்என்* தலைமேற் பயில்வாரே.

(* Variant reading: எம்)


Word separated:

அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக் கோயில் அம்மானை

உன்ன முன்னு மனத்து-ஆரூரன், ஆரூரன் பேர் முடி-வைத்த

மன்னு புலவன், வயல்-நாவலர்-கோன், செஞ்சொல் நாவன், வன்-தொண்டன்

பன்னு தமிழ்-நூல்-மாலை வல்லார் அவர் என்* தலைமேல் பயில்வாரே.

(* Variant reading: எம்)

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sundarar goes to Thirukkachur (tirukkaccūr), worships Siva in the temple, and comes outside

# 3328 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 174

pāḍiya ap-padiyingaṇ inidu-amarndu paṇindu-pōy,

nāḍiya nal-uṇarvinoḍum tiruk-kaccūrdanai naṇṇi,

āḍaga-mā-madil puḍaisūḻ ālakkōyilin amudaik

kūḍiya mey-anbu urugak kumbiṭṭup puṟattu aṇaindār.


It was lunch-time and Sundarar was hungry. He awaited the arrival of his entourage.

# 3329 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 175

aṇaindaruḷum av-vēlai amuduseyum poḻudu āgak,

koṇarndu amudu samaittu-aḷikkum parisanamum kuṟugāmait

taṇanda pasi varuttattāl, tambirān tiruvāyil

puṇarnda madiṟ-puṟattu irundār munaippāḍip puravalanār.


Siva takes the form of a brahmana and approaches Sundarar

# 3330 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 176

van-toṇḍar pasi-tīrkka malaiyinmēl marundu ānār,

min taṅgu veṇ-talaiyōḍu oḻindu, oru veṭrōḍu ēndi,

aṇḍru aṅgu vāḻvār ōr andaṇarāyp puṟappaṭṭuc

ceṇḍru, anbar mugam nōkki aruḷ-kūrac ceppuvār,


The brahmana (Siva) tells Sundarar that he will gather alms and bring food to him

# 3331 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 177

"meyp-pasiyāl miga varundi iḷaittu irundīr; vēṭkai viḍa

ippoḻudē sōṟu irandu iṅgu yān umakkuk koṇargiṇḍrēn;

appuṟam nīr agalādē siṟidu poḻudu amarum" enac

ceppiyavar, tirukkaccūr manaidōṟum seṇḍru irappār,


Siva seeks alms at various houses there and brings food to Sundarar

# 3332 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 178

veṇ-tirunīṭru aṇi tigaḻa, viḷaṅgu-nūl oḷi tuḷaṅgak,

kaṇḍavargaḷ manam urugak, kaḍum-pagaṟpōdu iḍum palikkup,

puṇḍarigak kaḻal puvimēl porunda manaidoṟum pukkuk

koṇḍu, tām virumbi āṭkoṇḍavarmun koḍuvandār.


Sundarar gratefully accepts the food

# 3333 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 179

irandu tām koḍuvanda in-aḍisilum kaṟiyum

"arandai tarum pasi tīra arunduvīr" ena aḷippap,

perundagaiyār maṟaiyavardam pēraruḷin tiṟam pēṇi,

niranda perum-kādalināl nēr toḻudu vāṅginār.


The brahmana (Siva) quietly disappears without anyone noticing

# 3334 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 180

vāṅgiya at-tiruvamudu van-toṇḍar maruṅgu aṇainda

ōṅgu-tavat-toṇḍaruḍan uṇḍaruḷi uvandiruppa,

āṅgu arugu niṇḍrārbōl* avar tammai aṟiyāmē

nīṅginār, ep-poruḷum nīṅgāda nilaimaiyinār.

(* niṇḍrārbōl? niṇḍrāṟpōl? )


Sundarar relaizes that it was Siva who had come and given him food

# 3335 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 181

tirunāvalūrāḷi sivayōgiyār nīṅga,

varu-nāma maṟaiyavanār iṟaiyavanār ena madittē,

"peru-nādac cilambu aṇi-sēvaḍi varundap perum-pagaṟkaṇ

uru nāḍi eḻundaruḷiṭru en poruṭṭām" ena urugi,


Sundar sings the padhigam "mudhuvAy Ori" (mudu-vāy ōri)

# 3336 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 182

"mudu-vāy ōri" eṇḍru eḍuttu, mudalvanārdam peruṅgaruṇai

"aduvām idu" eṇḍru adisayam vandu-eydak, kaṇṇīr-maḻai-aruvip

pudu vār-punalin mayirppuḷagam pudaiyap, padigam pōṭrisaittu,

madu-ār-idaḻi muḍiyāraip pāḍi magiḻndu vaṇaṅginār.


sundarar tēvāram - padigam 7.41 – tirukkaccūr ālakkōyil - (paṇ - kollik kauvāṇam)

("tānā tānā - tānā tānā - tānā tānā tanadānā" - Rhythm)

(tānā - may also come as - tananā / tāna / tanana)

(tanadānā - may also come as - tānānā)


pāḍal eṇ : 1

mudu-vāy ōri kadaṟa, mudugāṭṭu eri-koṇḍu āḍal muyalvānē;

madu ār koṇḍraip pudu vī sūḍum malaiyān magaḷdan maṇavāḷā;

kadu-vāyt talaiyil pali nī koḷḷak kaṇḍāl aḍiyār kavalārē?

aduvē āmāṟu iduvō, kaccūr ālakkōyil ammānē.


pāḍal eṇ : 2

kaccu ēr aravu-oṇḍru araiyil asaittuk, kaḻalum silambum kalikkap, palikku eṇḍru

uccambōdā ūr-ūr tiriyak kaṇḍāl aḍiyār urugārē?

iccai aṟiyōm, eṅgaḷ perumān; ēḻēḻ piṟappum enai āḷvāy;

accam illāk, kaccūr vaḍa-pāl ālakkōyil ammānē.


pāḍal eṇ : 3

sālak kōyil uḷa nin kōyil; avai en talaimēṟ koṇḍāḍi

mālait tīrndēn; vinaiyum turandēn; vānōr aṟiyā neṟiyānē;

kōlak kōyil, kuṟaiyāk kōyil, kuḷir-pūṅgaccūr vaḍa-pālai

ālakkōyil, kallāl niḻaṟkīḻ aṟaṅgaḷ uraitta ammānē.


pāḍal eṇ : 4

viḍaiyum koḍiyum saḍaiyum uḍaiyāy; minnēr uruvattu-oḷiyānē;

kaḍaiyum puḍaisūḻ maṇi-maṇḍabamum kannimāḍam kalandu eṅgum,

puḍaiyum poḻilum punalum taḻuvip, pūmēl tirumāmagaḷ pulgi

aḍaiyum, kaḻanip paḻanak kaccūr ālakkōyil ammānē.

(minnēr = min nēr / min ēr = like lightning)


pāḍal eṇ : 5

mēlai vidiyē; vidiyin payanē; viravār puram mūṇḍru eriseydāy;

kālai eḻundu toḻuvār-taṅgaḷ kavalai kaḷaivāy; kaṟaikkaṇḍā;

mālai madiyē; malaimēl marundē; maṟavēn aḍiyēn, vayal sūḻnda

ālaik kaḻanip paḻanak kaccūr ālakkōyil ammānē.


pāḍal eṇ : 6

piṟavāy; iṟavāy; pēṇāy; mūvāy; peṭram ēṟip, pēy sūḻdal

tuṟavāy; maṟavāy; suḍugāḍu eṇḍrum iḍamāk koṇḍu naḍam āḍi,

oṟu-vāyt-talaiyil pali nī koḷḷak kaṇḍāl aḍiyār urugārē?

aṟavē oḻiyāy, kaccūr vaḍabāl ālakkōyil ammānē.


pāḍal eṇ : 7

poyyē unnaip pugaḻvār pugaḻndāl aduvum poruḷāk koḷvānē;

meyyē, eṅgaḷ perumān unnai, ninaivār avarai ninai-kaṇḍāy;

mai ār taḍaṅgaṇ maḍandai paṅgā; gaṅgār* madiyam saḍai vaitta

aiyā; seyyāy; veḷiyāy; kaccūr ālak kōyil ammānē.

(* gaṅgār - gaṅgai ār - as interpreted in the commentaries)


pāḍal eṇ : 8

ūnaip perukki unnai ninaiyādoḻindēn, seḍiyēn, uṇarvu illēn;

kānak koṇḍrai kamaḻa malarum kaḍi-nāṟu uḍaiyāy; kaccūrāy;

mānaip puraiyum maḍa-men-nōkki maḍavāḷ añja maṟaittiṭṭa

ānait-tōlāy; ñānak-kaṇṇāy; ālak kōyil ammānē.


pāḍal eṇ : 9

kādal seydu, kaḷittup, pidaṭrik, kaḍi-mā-malar iṭṭu, unai ētti

ādal seyyum aḍiyār irukka, aiyam koḷḷal aḻagidē?

ōdak kaṇḍēn unnai maṟavēn; umaiyāḷ kaṇavā; enai āḷvāy;

ādaṟ-kaḻanip paḻanak* kaccūr ālak kōyil ammānē.

(* Variant reading: ādaṟ-paḻanak kaḻanik kaccūr)


pāḍal eṇ : 10

annam mannum vayal sūḻ kaccūr ālak kōyil ammānai

unna munnu manattu-ārūran, ārūran pēr muḍi-vaitta

mannu pulavan, vayal-nāvalar-kōn, señjol nāvan, van-toṇḍan

pannu tamiḻ-nūl-mālai vallār avar en* talaimēl payilvārē.

(* Variant reading: em)

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


Sundarar goes to Thirukkachur (tirukkaccūr), worships Siva in the temple, and comes outside

# 3328 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 174

पाडिय अप्-पदियिन्गण् इनिदु-अमर्न्दु पणिन्दु-पोय्,

नाडिय नल्-उणर्विनॊडुम् तिरुक्-कच्चूर्दनै नण्णि,

आडग-मा-मदिल् पुडैसूऴ् आलक्कोयिलिन् अमुदैक्

कूडिय मॆय्-अन्बु उरुगक् कुम्बिट्टुप् पुऱत्तु अणैन्दार्.


It was lunch-time and Sundarar was hungry. He awaited the arrival of his entourage.

# 3329 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 175

अणैन्दरुळुम् अव्-वेलै अमुदुसॆयुम् पॊऴुदु आगक्,

कॊणर्न्दु अमुदु समैत्तु-अळिक्कुम् परिसनमुम् कुऱुगामैत्

तणन्द पसि वरुत्तत्ताल्, तम्बिरान् तिरुवायिल्

पुणर्न्द मदिऱ्‌-पुऱत्तु इरुन्दार् मुनैप्पाडिप् पुरवलनार्.


Siva takes the form of a brahmana and approaches Sundarar

# 3330 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 176

वन्-तॊण्डर् पसि-तीर्क्क मलैयिन्मेल् मरुन्दु आनार्,

मिन् तङ्गु वॆण्-तलैयोडु ऒऴिन्दु, ऒरु वॆट्रोडु एन्दि,

अण्ड्रु अङ्गु वाऴ्वार् ओर् अन्दणराय्प् पुऱप्पट्टुच्

चॆण्ड्रु, अन्बर् मुगम् नोक्कि अरुळ्-कूरच् चॆप्पुवार्,


The brahmana (Siva) tells Sundarar that he will gather alms and bring food to him

# 3331 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 177

"मॆय्प्-पसियाल् मिग वरुन्दि इळैत्तु इरुन्दीर्; वेट्कै विड

इप्पॊऴुदे सोऱु इरन्दु इङ्गु यान् उमक्कुक् कॊणर्गिण्ड्रेन्;

अप्पुऱम् नीर् अगलादे सिऱिदु पॊऴुदु अमरुम्" ऎनच्

चॆप्पियवर्, तिरुक्कच्चूर् मनैदोऱुम् सॆण्ड्रु इरप्पार्,


Siva seeks alms at various houses there and brings food to Sundarar

# 3332 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 178

वॆण्-तिरुनीट्रु अणि तिगऴ, विळङ्गु-नूल् ऒळि तुळङ्गक्,

कण्डवर्गळ् मनम् उरुगक्, कडुम्-पगऱ्‌पोदु इडुम् पलिक्कुप्,

पुण्डरिगक् कऴल् पुविमेल् पॊरुन्द मनैदॊऱुम् पुक्कुक्

कॊण्डु, ताम् विरुम्बि आट्कॊण्डवर्मुन् कॊडुवन्दार्.


Sundarar gratefully accepts the food

# 3333 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 179

इरन्दु ताम् कॊडुवन्द इन्-अडिसिलुम् कऱियुम्

"अरन्दै तरुम् पसि तीर अरुन्दुवीर्" ऎन अळिप्पप्,

पॆरुन्दगैयार् मऱैयवर्दम् पेररुळिन् तिऱम् पेणि,

निरन्द पॆरुम्-कादलिनाल् नेर् तॊऴुदु वाङ्गिनार्.


The brahmana (Siva) quietly disappears without anyone noticing

# 3334 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 180

वाङ्गिय अत्-तिरुवमुदु वन्-तॊण्डर् मरुङ्गु अणैन्द

ओङ्गु-तवत्-तॊण्डरुडन् उण्डरुळि उवन्दिरुप्प,

आङ्गु अरुगु निण्ड्रार्बोल्* अवर् तम्मै अऱियामे

नीङ्गिनार्, ऎप्-पॊरुळुम् नीङ्गाद निलैमैयिनार्.

(* निण्ड्रार्बोल्? निण्ड्राऱ्‌पोल्? )


Sundarar relaizes that it was Siva who had come and given him food

# 3335 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 181

तिरुनावलूराळि सिवयोगियार् नीङ्ग,

वरु-नाम मऱैयवनार् इऱैयवनार् ऎन मदित्ते,

"पॆरु-नादच् चिलम्बु अणि-सेवडि वरुन्दप् पॆरुम्-पगऱ्‌कण्

उरु नाडि ऎऴुन्दरुळिट्रु ऎन् पॊरुट्टाम्" ऎन उरुगि,


Sundar sings the padhigam "mudhuvAy Ori" (mudu-vāy ōri)

# 3336 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 182

"मुदु-वाय् ओरि" ऎण्ड्रु ऎडुत्तु, मुदल्वनार्दम् पॆरुङ्गरुणै

"अदुवाम् इदु" ऎण्ड्रु अदिसयम् वन्दु-ऎय्दक्, कण्णीर्-मऴै-अरुविप्

पुदु वार्-पुनलिन् मयिर्प्पुळगम् पुदैयप्, पदिगम् पोट्रिसैत्तु,

मदु-आर्-इदऴि मुडियारैप् पाडि मगिऴ्न्दु वणङ्गिनार्.


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.41 – तिरुक्कच्चूर् आलक्कोयिल् - (पण् - कॊल्लिक् कौवाणम्)

("ताना ताना - ताना ताना - ताना ताना तनदाना" - Rhythm)

(ताना - may also come as - तनना / तान / तनन)

(तनदाना - may also come as - तानाना)

पाडल् ऎण् : 1

मुदु-वाय् ओरि कदऱ, मुदुगाट्टु ऎरि-कॊण्डु आडल् मुयल्वाने;

मदु आर् कॊण्ड्रैप् पुदु वी सूडुम् मलैयान् मगळ्दन् मणवाळा;

कदु-वाय्त् तलैयिल् पलि नी कॊळ्ळक् कण्डाल् अडियार् कवलारे?

अदुवे आमाऱु इदुवो, कच्चूर् आलक्कोयिल् अम्माने.


पाडल् ऎण् : 2

कच्चु एर् अरवु-ऒण्ड्रु अरैयिल् असैत्तुक्, कऴलुम् सिलम्बुम् कलिक्कप्, पलिक्कु ऎण्ड्रु

उच्चम्बोदा ऊर्-ऊर् तिरियक् कण्डाल् अडियार् उरुगारे?

इच्चै अऱियोम्, ऎङ्गळ् पॆरुमान्; एऴेऴ् पिऱप्पुम् ऎनै आळ्वाय्;

अच्चम् इल्लाक्, कच्चूर् वड-पाल् आलक्कोयिल् अम्माने.


पाडल् ऎण् : 3

सालक् कोयिल् उळ निन् कोयिल्; अवै ऎन् तलैमेऱ्‌ कॊण्डाडि

मालैत् तीर्न्देन्; विनैयुम् तुरन्देन्; वानोर् अऱिया नॆऱियाने;

कोलक् कोयिल्, कुऱैयाक् कोयिल्, कुळिर्-पूङ्गच्चूर् वड-पालै

आलक्कोयिल्, कल्लाल् निऴऱ्‌कीऴ् अऱङ्गळ् उरैत्त अम्माने.


पाडल् ऎण् : 4

विडैयुम् कॊडियुम् सडैयुम् उडैयाय्; मिन्नेर् उरुवत्तु-ऒळियाने;

कडैयुम् पुडैसूऴ् मणि-मण्डबमुम् कन्निमाडम् कलन्दु ऎङ्गुम्,

पुडैयुम् पॊऴिलुम् पुनलुम् तऴुविप्, पूमेल् तिरुमामगळ् पुल्गि

अडैयुम्, कऴनिप् पऴनक् कच्चूर् आलक्कोयिल् अम्माने.

(मिन्नेर् = मिन् नेर् / मिन् एर् = like lightning)


पाडल् ऎण् : 5

मेलै विदिये; विदियिन् पयने; विरवार् पुरम् मूण्ड्रु ऎरिसॆय्दाय्;

कालै ऎऴुन्दु तॊऴुवार्-तङ्गळ् कवलै कळैवाय्; कऱैक्कण्डा;

मालै मदिये; मलैमेल् मरुन्दे; मऱवेन् अडियेन्, वयल् सूऴ्न्द

आलैक् कऴनिप् पऴनक् कच्चूर् आलक्कोयिल् अम्माने.


पाडल् ऎण् : 6

पिऱवाय्; इऱवाय्; पेणाय्; मूवाय्; पॆट्रम् एऱिप्, पेय् सूऴ्दल्

तुऱवाय्; मऱवाय्; सुडुगाडु ऎण्ड्रुम् इडमाक् कॊण्डु नडम् आडि,

ऒऱु-वाय्त्-तलैयिल् पलि नी कॊळ्ळक् कण्डाल् अडियार् उरुगारे?

अऱवे ऴियाय्, कच्चूर् वडबाल् आलक्कोयिल् अम्माने.


पाडल् ऎण् : 7

पॊय्ये उन्नैप् पुगऴ्वार् पुगऴ्न्दाल् अदुवुम् पॊरुळाक् कॊळ्वाने;

मॆय्ये, ऎङ्गळ् पॆरुमान् उन्नै, निनैवार् अवरै निनै-कण्डाय्;

मै आर् तडङ्गण् मडन्दै पङ्गा; गङ्गार्* मदियम् सडै वैत्त

ऐया; सॆय्याय्; वॆळियाय्; कच्चूर् आलक् कोयिल् अम्माने.

(* ङ्गार् - ङ्गै आर् - as interpreted in the commentaries)


पाडल् ऎण् : 8

ऊनैप् पॆरुक्कि उन्नै निनैयादॊऴिन्देन्, सॆडियेन्, उणर्वु इल्लेन्;

कानक् कॊण्ड्रै कमऴ मलरुम् कडि-नाऱु उडैयाय्; कच्चूराय्;

मानैप् पुरैयुम् मड-मॆन्-नोक्कि मडवाळ् अञ्ज मऱैत्तिट्ट

आनैत्-तोलाय्; ञानक्-कण्णाय्; आलक् कोयिल् अम्माने.


पाडल् ऎण् : 9

कादल् सॆय्दु, कळित्तुप्, पिदट्रिक्, कडि-मा-मलर् इट्टु, उनै एत्ति

आदल् सॆय्युम् अडियार् इरुक्क, ऐयम् कॊळ्ळल् अऴगिदे?

ओदक् कण्डेन् उन्नै मऱवेन्; उमैयाळ् कणवा; ऎनै आळ्वाय्;

आदऱ्‌-कऴनिप् पऴनक्* कच्चूर् आलक् कोयिल् अम्माने.

(* Variant reading: आदऱ्‌-पऴनक् कऴनिक् कच्चूर्)


पाडल् ऎण् : 10

अन्नम् मन्नुम् वयल् सूऴ् कच्चूर् आलक् कोयिल् अम्मानै

उन्न मुन्नु मनत्तु-आरूरन्, आरूरन् पेर् मुडि-वैत्त

मन्नु पुलवन्, वयल्-नावलर्-कोन्, सॆञ्जॊल् नावन्, वन्-तॊण्डन्

पन्नु तमिऴ्-नूल्-मालै वल्लार् अवर् ऎन्* तलैमेल् पयिल्वारे.

(* Variant reading: ऎम्)

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Sundarar goes to Thirukkachur (tirukkaccūr), worships Siva in the temple, and comes outside

# 3328 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 174

పాడియ అప్-పదియిన్గణ్ ఇనిదు-అమర్న్దు పణిందు-పోయ్,

నాడియ నల్-ఉణర్వినొడుం తిరుక్-కచ్చూర్దనై నణ్ణి,

ఆడగ-మా-మదిల్ పుడైసూఴ్ ఆలక్కోయిలిన్ అముదైక్

కూడియ మెయ్-అన్బు ఉరుగక్ కుంబిట్టుప్ పుఱత్తు అణైందార్.


It was lunch-time and Sundarar was hungry. He awaited the arrival of his entourage.

# 3329 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 175

అణైందరుళుం అవ్-వేలై అముదుసెయుం పొఴుదు ఆగక్,

కొణర్న్దు అముదు సమైత్తు-అళిక్కుం పరిసనముం కుఱుగామైత్

తణంద పసి వరుత్తత్తాల్, తంబిరాన్ తిరువాయిల్

పుణర్న్ద మదిఱ్-పుఱత్తు ఇరుందార్ మునైప్పాడిప్ పురవలనార్.


Siva takes the form of a brahmana and approaches Sundarar

# 3330 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 176

వన్-తొండర్ పసి-తీర్క్క మలైయిన్మేల్ మరుందు ఆనార్,

మిన్ తంగు వెణ్-తలైయోడు ఒఴిందు, ఒరు వెట్రోడు ఏంది,

అండ్రు అంగు వాఴ్వార్ ఓర్ అందణరాయ్ప్ పుఱప్పట్టుచ్

చెండ్రు, అన్బర్ ముగం నోక్కి అరుళ్-కూరచ్ చెప్పువార్,


The brahmana (Siva) tells Sundarar that he will gather alms and bring food to him

# 3331 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 177

"మెయ్ప్-పసియాల్ మిగ వరుంది ఇళైత్తు ఇరుందీర్; వేట్కై విడ

ఇప్పొఴుదే సోఱు ఇరందు ఇంగు యాన్ ఉమక్కుక్ కొణర్గిండ్రేన్;

అప్పుఱం నీర్ అగలాదే సిఱిదు పొఴుదు అమరుం" ఎనచ్

చెప్పియవర్, తిరుక్కచ్చూర్ మనైదోఱుం సెండ్రు ఇరప్పార్,


Siva seeks alms at various houses there and brings food to Sundarar

# 3332 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 178

వెణ్-తిరునీట్రు అణి తిగఴ, విళంగు-నూల్ ఒళి తుళంగక్,

కండవర్గళ్ మనం ఉరుగక్, కడుం-పగఱ్పోదు ఇడుం పలిక్కుప్,

పుండరిగక్ కఴల్ పువిమేల్ పొరుంద మనైదొఱుం పుక్కుక్

కొండు, తాం విరుంబి ఆట్కొండవర్మున్ కొడువందార్.


Sundarar gratefully accepts the food

# 3333 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 179

ఇరందు తాం కొడువంద ఇన్-అడిసిలుం కఱియుం

"అరందై తరుం పసి తీర అరుందువీర్" ఎన అళిప్పప్,

పెరుందగైయార్ మఱైయవర్దం పేరరుళిన్ తిఱం పేణి,

నిరంద పెరుం-కాదలినాల్ నేర్ తొఴుదు వాంగినార్.


The brahmana (Siva) quietly disappears without anyone noticing

# 3334 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 180

వాంగియ అత్-తిరువముదు వన్-తొండర్ మరుంగు అణైంద

ఓంగు-తవత్-తొండరుడన్ ఉండరుళి ఉవందిరుప్ప,

ఆంగు అరుగు నిండ్రార్బోల్* అవర్ తమ్మై అఱియామే

నీంగినార్, ఎప్-పొరుళుం నీంగాద నిలైమైయినార్.

(* నిండ్రార్బోల్? నిండ్రాఱ్పోల్? )


Sundarar relaizes that it was Siva who had come and given him food

# 3335 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 181

తిరునావలూరాళి సివయోగియార్ నీంగ,

వరు-నామ మఱైయవనార్ ఇఱైయవనార్ ఎన మదిత్తే,

"పెరు-నాదచ్ చిలంబు అణి-సేవడి వరుందప్ పెరుం-పగఱ్కణ్

ఉరు నాడి ఎఴుందరుళిట్రు ఎన్ పొరుట్టాం" ఎన ఉరుగి,


Sundar sings the padhigam "mudhuvAy Ori" (mudu-vāy ōri)

# 3336 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 182

"ముదు-వాయ్ ఓరి" ఎండ్రు ఎడుత్తు, ముదల్వనార్దం పెరుంగరుణై

"అదువాం ఇదు" ఎండ్రు అదిసయం వందు-ఎయ్దక్, కణ్ణీర్-మఴై-అరువిప్

పుదు వార్-పునలిన్ మయిర్ప్పుళగం పుదైయప్, పదిగం పోట్రిసైత్తు,

మదు-ఆర్-ఇదఴి ముడియారైప్ పాడి మగిఴ్న్దు వణంగినార్.


సుందరర్ తేవారం - పదిగం 7.41 – తిరుక్కచ్చూర్ ఆలక్కోయిల్ - (పణ్ - కొల్లిక్ కౌవాణం)

("తానా తానా - తానా తానా - తానా తానా తనదానా" - Rhythm)

(తానా - may also come as - తననా / తాన / తనన)

(తనదానా - may also come as - తానానా)

పాడల్ ఎణ్ : 1

ముదు-వాయ్ ఓరి కదఱ, ముదుగాట్టు ఎరి-కొండు ఆడల్ ముయల్వానే;

మదు ఆర్ కొండ్రైప్ పుదు వీ సూడుం మలైయాన్ మగళ్దన్ మణవాళా;

కదు-వాయ్త్ తలైయిల్ పలి నీ కొళ్ళక్ కండాల్ అడియార్ కవలారే?

అదువే ఆమాఱు ఇదువో, కచ్చూర్ ఆలక్కోయిల్ అమ్మానే.


పాడల్ ఎణ్ : 2

కచ్చు ఏర్ అరవు-ఒండ్రు అరైయిల్ అసైత్తుక్, కఴలుం సిలంబుం కలిక్కప్, పలిక్కు ఎండ్రు

ఉచ్చంబోదా ఊర్-ఊర్ తిరియక్ కండాల్ అడియార్ ఉరుగారే?

ఇచ్చై అఱియోం, ఎంగళ్ పెరుమాన్; ఏఴేఴ్ పిఱప్పుం ఎనై ఆళ్వాయ్;

అచ్చం ఇల్లాక్, కచ్చూర్ వడ-పాల్ ఆలక్కోయిల్ అమ్మానే.


పాడల్ ఎణ్ : 3

సాలక్ కోయిల్ ఉళ నిన్ కోయిల్; అవై ఎన్ తలైమేఱ్ కొండాడి

మాలైత్ తీర్న్దేన్; వినైయుం తురందేన్; వానోర్ అఱియా నెఱియానే;

కోలక్ కోయిల్, కుఱైయాక్ కోయిల్, కుళిర్-పూంగచ్చూర్ వడ-పాలై

ఆలక్కోయిల్, కల్లాల్ నిఴఱ్కీఴ్ అఱంగళ్ ఉరైత్త అమ్మానే.


పాడల్ ఎణ్ : 4

విడైయుం కొడియుం సడైయుం ఉడైయాయ్; మిన్నేర్ ఉరువత్తు-ఒళియానే;

కడైయుం పుడైసూఴ్ మణి-మండబముం కన్నిమాడం కలందు ఎంగుం,

పుడైయుం పొఴిలుం పునలుం తఴువిప్, పూమేల్ తిరుమామగళ్ పుల్గి

అడైయుం, కఴనిప్ పఴనక్ కచ్చూర్ ఆలక్కోయిల్ అమ్మానే.

(మిన్నేర్ = మిన్ నేర్ / మిన్ ఏర్ = like lightning)


పాడల్ ఎణ్ : 5

మేలై విదియే; విదియిన్ పయనే; విరవార్ పురం మూండ్రు ఎరిసెయ్దాయ్;

కాలై ఎఴుందు తొఴువార్-తంగళ్ కవలై కళైవాయ్; కఱైక్కండా;

మాలై మదియే; మలైమేల్ మరుందే; మఱవేన్ అడియేన్, వయల్ సూఴ్న్ద

ఆలైక్ కఴనిప్ పఴనక్ కచ్చూర్ ఆలక్కోయిల్ అమ్మానే.


పాడల్ ఎణ్ : 6

పిఱవాయ్; ఇఱవాయ్; పేణాయ్; మూవాయ్; పెట్రం ఏఱిప్, పేయ్ సూఴ్దల్

తుఱవాయ్; మఱవాయ్; సుడుగాడు ఎండ్రుం ఇడమాక్ కొండు నడం ఆడి,

ఒఱు-వాయ్త్-తలైయిల్ పలి నీ కొళ్ళక్ కండాల్ అడియార్ ఉరుగారే?

అఱవే ఴియాయ్, కచ్చూర్ వడబాల్ ఆలక్కోయిల్ అమ్మానే.


పాడల్ ఎణ్ : 7

పొయ్యే ఉన్నైప్ పుగఴ్వార్ పుగఴ్న్దాల్ అదువుం పొరుళాక్ కొళ్వానే;

మెయ్యే, ఎంగళ్ పెరుమాన్ ఉన్నై, నినైవార్ అవరై నినై-కండాయ్;

మై ఆర్ తడంగణ్ మడందై పంగా; గంగార్* మదియం సడై వైత్త

ఐయా; సెయ్యాయ్; వెళియాయ్; కచ్చూర్ ఆలక్ కోయిల్ అమ్మానే.

(* గంగార్ - గంగై ఆర్ - as interpreted in the commentaries)


పాడల్ ఎణ్ : 8

ఊనైప్ పెరుక్కి ఉన్నై నినైయాదొఴిందేన్, సెడియేన్, ఉణర్వు ఇల్లేన్;

కానక్ కొండ్రై కమఴ మలరుం కడి-నాఱు ఉడైయాయ్; కచ్చూరాయ్;

మానైప్ పురైయుం మడ-మెన్-నోక్కి మడవాళ్ అంజ మఱైత్తిట్ట

ఆనైత్-తోలాయ్; ఞానక్-కణ్ణాయ్; ఆలక్ కోయిల్ అమ్మానే.


పాడల్ ఎణ్ : 9

కాదల్ సెయ్దు, కళిత్తుప్, పిదట్రిక్, కడి-మా-మలర్ ఇట్టు, ఉనై ఏత్తి

ఆదల్ సెయ్యుం అడియార్ ఇరుక్క, ఐయం కొళ్ళల్ అఴగిదే?

ఓదక్ కండేన్ ఉన్నై మఱవేన్; ఉమైయాళ్ కణవా; ఎనై ఆళ్వాయ్;

ఆదఱ్-కఴనిప్ పఴనక్* కచ్చూర్ ఆలక్ కోయిల్ అమ్మానే.

(* Variant reading: ఆదఱ్-పఴనక్ కఴనిక్ కచ్చూర్)


పాడల్ ఎణ్ : 10

అన్నం మన్నుం వయల్ సూఴ్ కచ్చూర్ ఆలక్ కోయిల్ అమ్మానై

ఉన్న మున్ను మనత్తు-ఆరూరన్, ఆరూరన్ పేర్ ముడి-వైత్త

మన్ను పులవన్, వయల్-నావలర్-కోన్, సెంజొల్ నావన్, వన్-తొండన్

పన్ను తమిఴ్-నూల్-మాలై వల్లార్ అవర్ ఎన్* తలైమేల్ పయిల్వారే.

(* Variant reading: ఎం)

=====================================