139) 3.10 - அலைவளர் தண்மதி - alaivaLar thaNmadhi - (Rameswaram)
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.10 - அலைவளர் தண்மதி - (திருவிராமேச்சுரம்)
sambandar tēvāram - padigam 3.10 – alai vaḷar-taṇ-madi - (tiruvirāmēccuram)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1sPaLB6R9cpUQEXLxE6aYtXTzPtbkdvit/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/ZIlxjCvjEPw
Part-2: https://youtu.be/X2ZJrIk50rE
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_010.HTM
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.10 – திருவிராமேச்சுரம் - (பண் - காந்தார பஞ்சமம்)
இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) - இராமனால் ஸ்தாபிக்கப்பட்ட தலம். மிகுந்த புகழுடைய தலம். மிகப் பெரிய கோயில். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.
குறிப்புகள்:
இப்பதிகத்தில் பாடல்கள் 1, 5, 8 இவற்றைத் தவிர மற்றப் பாடல்கள் எல்லாவற்றிலும் இராமாயணச் செய்திகள் பல வருகின்றன. இராமன் கட்டி வழிபட்ட கோயில் ராமேஸ்வரம் என்ற குறிப்பைக் காணலாம்.
இராவணன் தீயவன் என்றாலும் அவன் சிவபக்தன் என்றபடியால் அவனைக் கொன்றதால் வந்த வினை தீரவேண்டி இராமன் இங்கே ஈசனை வழிபாடு செய்த குறிப்பைக் காணலாம்.
இப்பதிகத்தில் 9-ஆம் பாடல் கிட்டவில்லை என்று பதிப்புகளில் குறிக்கின்றனர்.
(My thinking: இப்பதிகத்தில் 8-ஆம் பாடலில் இராவணன் பற்றிய குறிப்பும், பிரமனும் திருமாலும் ஈசனை வழிபடும் குறிப்பும் உள்ளன. (பிரமன் திருமால் அடிமுடி தேடிய வரலாறு பொதுவாக 9-ஆம் பாடலில் வரும்). இதனை நோக்கும்பொழுது, இப்பதிகத்தில் சம்பந்தர் 10 பாடல்களே பாடியிருப்பார் என்று தோன்றுகின்றது).
உலகில் ஒருவர் எங்கே இருந்தாலும் அந்த இடத்திலிருந்தே மனம் ஒன்றி இப்பதிகத்தை ஓதினால் அவர்கள் துன்பம் தீரும் என்று 11-ஆம் பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.
Notes:
In this padhigam, Sambandar mentions in almost every song that this temple (Rameswaram) was built by Rama after his victory over Ravana.
Rama worshiped Siva here to expiate any sins he incurred by killing Ravana and his clan.
----------
Sambandar worshiped in Tirunelveli and went to Rameswaram
# 2785 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 887
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
.. புரிசடையார் திருப்பதிகள் பிறவுஞ் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்து பாடி,
.. நற்றொண்ட ருடனாளும் போற்றிச் செல்வார்,
விண்ணவரைச் செற்றுகந்தா னிலங்கை செற்ற
.. மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை யிராமன் செய்த
.. திருவிரா மேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்.
Word separated:
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்,
.. புரி-சடையார் திருப்-பதிகள் பிறவும் சென்று
நண்ணி, இனிது-அமர்ந்து அங்கு நயந்து பாடி,
.. நல்-தொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார்,
விண்ணவரைச் செற்று-உகந்தான் இலங்கை செற்ற
.. மிக்க பெரும் பாதகத்தை நீக்கவேண்டித்,
திண்ணிய பொற்சிலைத்-தடக்-கை இராமன் செய்த
.. திரு-இராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்.
Sambandar worshiped Siva at Rameswaram and sang padhigam
# 2786 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 888
செங்கண்மால்
வழிபட்ட கோயி னண்ணித்
..
திருமுன்பு
தாழ்ந்தெழுந்து தென்ன
னோடும்
மங்கையர்க்கு
நாயகியார் தாமு மெய்ம்மை
..
மந்திரியா
ருஞ்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும்
விருப்பினா லுடனே புக்குப்
..
புடைவலங்கொண்
டுள்ளணைவார் போற்றி
செய்து
பங்கயச்செங்
கைகுவித்துப் பணிந்து நின்று
..
பாடினார்
மன்னவனும் பரவி யேத்த.
Word separated:
செங்கண்-மால்
வழிபட்ட கோயில் நண்ணித்,
..
திருமுன்பு
தாழ்ந்து-எழுந்து,
தென்னனோடும்
மங்கையர்க்கு
நாயகியார்தாமு(ம்)
மெய்ம்மை
..
மந்திரியாரும்
சூழ, மணி-நீள்-வாயில்
பொங்கி
எழும் விருப்பினால் உடனே
புக்குப்,
..
புடை-வலங்கொண்டு
உள் அணைவார்,
போற்றிசெய்து
பங்கயச்-செங்கை
குவித்துப் பணிந்து நின்று
..
பாடினார்,
மன்னவனும்
பரவி ஏத்த.
# 2787 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 889
சேதுவின்கட் செங்கண்மால் பூசை செய்த
.. சிவபெருமான் றனைப்பாடிப் பணிந்து போந்து,
காதலுட னந்நகரி லினிது மேவிக்
.. கண்ணுதலான் றிருத்தொண்ட ரானார்க் கெல்லாங்
கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க்
.. குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல
நாதர்தமை நாடோறும் வணங்கி யேத்தி
.. நளிர்வேலைக் கரையினயந் திருந்தா ரன்றே.
Word separated:
சேதுவின்கண் செங்கண்-மால் பூசை செய்த
.. சிவபெருமான்-தனைப் பாடிப் பணிந்து போந்து,
காதலுடன் அந்நகரில் இனிது மேவிக்,
.. கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு-எல்லாம்
கோது-இல் புகழ்ப் பாண்டி-மாதேவியார் மெய்க்-
.. குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல,
நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி,
.. நளிர்-வேலைக்-கரையில் நயந்து இருந்தார்-அன்றே.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.10 – திருவிராமேச்சுரம் - (பண் - காந்தார பஞ்சமம்)
(தானன தானன தானன தானன தானன - Rhythm)
(தானன தானன தான தான தனதானன - Rhythm - another view)
பாடல் எண் : 1
அலைவளர் தண்மதி யோடய லேஅடக் கிஉமை
முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.
Word separated:
அலை வளர்-தண்-மதியோடு அயலே அடக்கி, உமை
முலை வளர் பாக(ம்) முயங்க-வல்ல முதல்வன், முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
தலை வளர் கோல-நன்-மாலையன் தான் இருந்து ஆட்சியே.
பாடல் எண் : 2
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.
Word separated:
தேவியை வவ்விய தென்-இலங்கைத் தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போயற
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள்தம் மேல்வினை வீடுமே.
பாடல் எண் : 3
மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால் **
கானதில் வவ்விய காரரக் கன்உயிர் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.
(** IFP edition - variant reading - மானன நோக்கி வைதேவி... )
(** CKS book - variant reading - மானன நோக்கி வைதேகி... )
(Sathgurunathan sings as - வைதேவி...)
(Dharmapuram Swaminathan sings as - வைதேகி...)
Word separated:
மான் அன நோக்கியை தேவி-தன்னை ஒரு மாயையால் **
கானதில் வவ்விய கார்-அரக்கன் உயிர் செற்றவன்,
ஈனம் இலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன்-பொருள் ஆகி-நின்றது ஒரு நன்மையே.
(** Dharmapuram Adheenam edition - மான் அன நோக்கு-இயை தேவி-தன்னை)
(** IFP edition - variant reading - மான் அன நோக்கி வைதேவி-தன்னை)
(** CKS book - variant reading - மான் அன நோக்கி வைதேகி-தன்னை)
பாடல் எண் : 4
உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே.
Word separated:
உரை உணராதவன் காமம் என்னும் உறு-வேட்கையான் **
வரை பொரு-தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து-ஏத்திய
விரை மருவும் கடல்-ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆடநின்று ஆடல் பேணும் அம்மான் நல்லனே.
** (உணராதவன்காமம் = 1. உணராதவன், காமம்; 2. உணராத, வன்-காமம்;)
பாடல் எண் : 5
ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே.
Word separated:
ஊறுடை வெண்-தலை கையில் ஏந்திப் பல ஊர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு-உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே.
பாடல் எண் : 6
அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.
Word separated:
அணை அலை சூழ்-கடல் அன்று அடைத்து வழி செய்தவன்,
பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய
இணையிலி, என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்
துணையிலி தூ-மலர்ப்-பாதம் ஏத்தத் துயர் நீங்குமே.
பாடல் எண் : 7
சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.
Word separated:
சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன
முனிவது செய்து-உகந்தானை வென்றவ்வினை மூடிட, *
"இனி அருள் நல்கிடு" என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்
பனி-மதி சூடி நின்று ஆட-வல்ல பரமேட்டியே.
* (வென்றவ்வினை - 1. வென்ற அவ்வினை; 2. வென்று அவ்வினை)
பாடல் எண் : 8
பெருவரை யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.
Word separated:
பெரு-வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட
அரு-வரையால் அடர்த்து அன்று நல்கி, அயன் மால் எனும்
இருவரும் நாடிநின்று ஏத்து, கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே.
பாடல் எண் : 9
**** This verse is lost ****
(My thinking: As the 8th song in this padhigam contains the usual reference to Siva crushing Ravana under mount Kailasa & also has the reference to Brahma and Vishnu worshiping Siva - which usually comes in the 9th song. So, maybe Sambandar sang only 10 songs in this padhigam - and hence no song is missing in it)
பாடல் எண் : 10
சாக்கியர் வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.
Word separated:
சாக்கியர் வன்-சமண் கையர் மெய்-இல் தடுமாற்றத்தார்
வாக்கு இயலும் உரை பற்று விட்டு, மதி-ஒண்மையால்,
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின், அருள் ஆகவே.
பாடல் எண் : 11
பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை
இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை யல்லலே.
Word separated:
பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்-தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால்
அகலிடம்-எங்கும்-நின்று ஏத்த-வல்லார்க்கு இல்லை அல்லலே.
=====================================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar worshiped in Tirunelveli and went to Rameswaram
# 2785 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 887
puṇṇiyanār nelvēli paṇindu pōṭrip,
.. puri-saḍaiyār tirup-padigaḷ piṟavum seṇḍru
naṇṇi, inidu-amarndu aṅgu nayandu pāḍi,
.. nal-toṇḍaruḍan nāḷum pōṭric celvār,
viṇṇavaraic ceṭru-ugandān ilaṅgai seṭra
.. mikka perum pādagattai nīkkavēṇḍit,
tiṇṇiya poṟcilait-taḍak-kai irāman seyda
.. tiru-irāmēccurattaic ceṇḍru sērndār.
Sambandar worshiped Siva at Rameswaram and sang padhigam
# 2786 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 888
seṅgaṇ-māl vaḻibaṭṭa kōyil naṇṇit,
.. tirumunbu tāḻndu-eḻundu, tennanōḍum
maṅgaiyarkku nāyagiyārdāmu(m) meymmai
.. mandiriyārum sūḻa, maṇi-nīḷ-vāyil
poṅgi eḻum viruppināl uḍanē pukkup,
.. puḍai-valaṅgoṇḍu uḷ aṇaivār, pōṭriseydu
paṅgayac-ceṅgai kuvittup paṇindu niṇḍru
.. pāḍinār, mannavanum paravi ētta.
# 2787 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 889
sēduvingaṇ seṅgaṇ-māl pūsai seyda
.. sivaberumān-tanaip pāḍip paṇindu pōndu,
kādaluḍan annagaril inidu mēvik,
.. kaṇṇudalān tiruttoṇḍar ānārkku-ellām
kōdu-il pugaḻp pāṇḍi-mādēviyār meyk-
.. kulacciṟaiyār kuṟaivaṟuttup pōṭric cella,
nādardamai nāḷdōṟum vaṇaṅgi ētti,
.. naḷir-vēlaik-karaiyil nayandu irundār-aṇḍrē.
sambandar tēvāram - padigam 3.10 – tiruvirāmēccuram - (paṇ - kāndāra pañjamam)
(tānana tānana tānana tānana tānana - Rhythm)
(tānana tānana tāna tāna tanatānana - Rhythm - another view)
pāḍal eṇ : 1
alai vaḷar-taṇ-madiyōḍu ayalē aḍakki, umai
mulai vaḷar pāga(m) muyaṅga-valla mudalvan, muni;
ilai vaḷar tāḻaigaḷ vimmu kānal irāmēccuram
talai vaḷar kōla-nan-mālaiyan tān irundu āṭciyē.
pāḍal eṇ : 2
dēviyai vavviya ten-ilaṅgait tasamāmugan
pū iyalum muḍi poṇḍruvitta paḻi pōyaṟa
ē iyalum silai aṇṇal seyda irāmēccuram
mēviya sindaiyinārgaḷdam mēlvinai vīḍumē.
pāḍal eṇ : 3
mān ana nōkkiyai dēvi-tannai oru māyaiyāl **
kānadil vavviya kār-arakkan uyir seṭravan,
īnam ilāp pugaḻ aṇṇal seyda irāmēccuram
ñānamum nan-poruḷ āgi-niṇḍradu oru nanmaiyē.
(** Dharmapuram Adheenam edition - mān ana nōkku-iyai dēvi-tannai)
(** IFP edition - variant reading - mān ana nōkki vaidēvi-tannai)
(** CKS book - variant reading - māṇ ana nōkki vaidēgi-tannai)
pāḍal eṇ : 4
urai uṇarādavan kāmam ennum uṟu-vēṭkaiyān **
varai poru-tōḷ iṟac ceṭra villi magiḻndu-ēttiya
virai maruvum kaḍal-ōdam malgum irāmēccurattu
arai aravu āḍaniṇḍru āḍal pēṇum ammān nallanē.
** (uṇarādavangāmam = 1. uṇarādavan, kāmam; 2. uṇarāda, van-kāmam;)
pāḍal eṇ : 5
ūṟuḍai veṇ-talai kaiyil ēndip pala ūrdoṟum
vīṟuḍai maṅgaiyar aiyam peyya, viṟal ārndadōr
ēṟuḍai velgoḍi endai mēya irāmēccuram
pēṟu-uḍaiyān peyar ēttum māndar piṇi pērumē.
pāḍal eṇ : 6
aṇai alai sūḻ-kaḍal aṇḍru aḍaittu vaḻi seydavan,
paṇai ilaṅgum muḍi pattu iṟutta paḻi pōkkiya
iṇaiyili, eṇḍrum irunda kōyil irāmēccuram
tuṇaiyili tū-malarp-pādam ēttat tuyar nīṅgumē.
pāḍal eṇ : 7
sani budan ñāyiṟu veḷḷi tiṅgaḷ pala tīyana
munivadu seydu-ugandānai veṇḍravvinai mūḍiḍa, *
"ini aruḷ nalgiḍu" eṇḍru aṇṇal seyda irāmēccuram
pani-madi sūḍi niṇḍru āḍa-valla paramēṭṭiyē.
* (veṇḍravvinai - 1. veṇḍra avvinai; 2. veṇḍru avvinai)
pāḍal eṇ : 8
peru-varai aṇḍru eḍuttu ēndinān-tan peyar sāy keḍa
aru-varaiyāl aḍarttu aṇḍru nalgi, ayan māl enum
iruvarum nāḍiniṇḍru ēttu, kōyil irāmēccurattu
oruvanumē pala āgi niṇḍradu oru vaṇṇamē.
pāḍal eṇ : 9
**** This verse is lost ****
(My thinking: As the 8th song in this padhigam contains the usual reference to Siva crushing Ravana under mount Kailasa & also has the reference to Brahma and Vishnu worshiping Siva - which usually comes in the 9th song. So, maybe Sambandar sang only 10 songs in this padhigam - and hence no song is missing in it)
pāḍal eṇ : 10
sākkiyar van-samaṇ kaiyar mey-il taḍumāṭrattār
vākku iyalum urai paṭru viṭṭu, madi-oṇmaiyāl,
ēkku iyalum silai aṇṇal seyda irāmēccuram
ākkiya selvanai ētti vāḻmin, aruḷ āgavē.
pāḍal eṇ : 11
pagalavan mīdu iyaṅgāmaik kātta padiyōn-tanai
igal aḻivittavan ēttu kōyil irāmēccuram
pugaliyuḷ ñānasambandan sonna tamiḻ pundiyāl
agaliḍam-eṅgum-niṇḍru ētta-vallārkku illai allalē.
=====================================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar worshiped in Tirunelveli and went to Rameswaram
# 2785 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 887
पुण्णियनार् नॆल्वेलि पणिन्दु पोट्रिप्,
.. पुरि-सडैयार् तिरुप्-पदिगळ् पिऱवुम् सॆण्ड्रु
नण्णि, इनिदु-अमर्न्दु अङ्गु नयन्दु पाडि,
.. नल्-तॊण्डरुडन् नाळुम् पोट्रिच् चॆल्वार्,
विण्णवरैच् चॆट्रु-उगन्दान् इलङ्गै सॆट्र
.. मिक्क पॆरुम् पादगत्तै नीक्कवेण्डित्,
तिण्णिय पॊऱ्चिलैत्-तडक्-कै इरामन् सॆय्द
.. तिरु-इरामेच्चुरत्तैच् चॆण्ड्रु सेर्न्दार्.
Sambandar worshiped Siva at Rameswaram and sang padhigam
# 2786 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 888
सॆङ्गण्-माल् वऴिबट्ट कोयिल् नण्णित्,
.. तिरुमुन्बु ताऴ्न्दु-ऎऴुन्दु, तॆन्ननोडुम्
मङ्गैयर्क्कु नायगियार्दामु(म्) मॆय्म्मै
.. मन्दिरियारुम् सूऴ, मणि-नीळ्-वायिल्
पॊङ्गि ऎऴुम् विरुप्पिनाल् उडने पुक्कुप्,
.. पुडै-वलङ्गॊण्डु उळ् अणैवार्, पोट्रिसॆय्दु
पङ्गयच्-चॆङ्गै कुवित्तुप् पणिन्दु निण्ड्रु
.. पाडिनार्, मन्नवनुम् परवि एत्त.
# 2787 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 889
सेदुविन्गण् सॆङ्गण्-माल् पूसै सॆय्द
.. सिवबॆरुमान्-तनैप् पाडिप् पणिन्दु पोन्दु,
कादलुडन् अन्नगरिल् इनिदु मेविक्,
.. कण्णुदलान् तिरुत्तॊण्डर् आनार्क्कु-ऎल्लाम्
कोदु-इल् पुगऴ्प् पाण्डि-मादेवियार् मॆय्क्-
.. कुलच्चिऱैयार् कुऱैवऱुत्तुप् पोट्रिच् चॆल्ल,
नादर्दमै नाळ्दोऱुम् वणङ्गि एत्ति,
.. नळिर्-वेलैक्-करैयिल् नयन्दु इरुन्दार्-अण्ड्रे.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.10 – तिरुविरामेच्चुरम् - (पण् - कान्दार पञ्जमम्)
(तानन तानन तानन तानन तानन - Rhythm)
(तानन तानन तान तान तनतानन - Rhythm - another view)
पाडल् ऎण् : 1
अलै वळर्-तण्-मदियोडु अयले अडक्कि, उमै
मुलै वळर् पाग(म्) मुयङ्ग-वल्ल मुदल्वन्, मुनि;
इलै वळर् ताऴैगळ् विम्मु कानल् इरामेच्चुरम्
तलै वळर् कोल-नन्-मालैयन् तान् इरुन्दु आट्चिये.
पाडल् ऎण् : 2
देवियै वव्विय तॆन्-इलङ्गैत् तसमामुगन्
पू इयलुम् मुडि पॊण्ड्रुवित्त पऴि पोयऱ
ए इयलुम् सिलै अण्णल् सॆय्द इरामेच्चुरम्
मेविय सिन्दैयिनार्गळ्दम् मेल्विनै वीडुमे.
पाडल् ऎण् : 3
मान् अन नोक्कियै देवि-तन्नै ऒरु मायैयाल् **
कानदिल् वव्विय कार्-अरक्कन् उयिर् सॆट्रवन्,
ईनम् इलाप् पुगऴ् अण्णल् सॆय्द इरामेच्चुरम्
ञानमुम् नन्-पॊरुळ् आगि-निण्ड्रदु ऒरु नन्मैये.
(** Dharmapuram Adheenam edition - मान् अन नोक्कु-इयै देवि-तन्नै)
(** IFP edition - variant reading - मान् अन नोक्कि वैदेवि-तन्नै)
(** CKS book - variant reading - माण् अन नोक्कि वैदेगि-तन्नै)
पाडल् ऎण् : 4
उरै उणरादवन् कामम् ऎन्नुम् उऱु-वेट्कैयान् **
वरै पॊरु-तोळ् इऱच् चॆट्र विल्लि मगिऴ्न्दु-एत्तिय
विरै मरुवुम् कडल्-ओदम् मल्गुम् इरामेच्चुरत्तु
अरै अरवु आडनिण्ड्रु आडल् पेणुम् अम्मान् नल्लने.
** (उणरादवन्गामम् = 1. उणरादवन्, कामम्; 2. उणराद, वन्-कामम्;)
पाडल् ऎण् : 5
ऊऱुडै वॆण्-तलै कैयिल् एन्दिप् पल ऊर्दॊऱुम्
वीऱुडै मङ्गैयर् ऐयम् पॆय्य, विऱल् आर्न्ददोर्
एऱुडै वॆल्गॊडि ऎन्दै मेय इरामेच्चुरम्
पेऱु-उडैयान् पॆयर् एत्तुम् मान्दर् पिणि पेरुमे.
पाडल् ऎण् : 6
अणै अलै सूऴ्-कडल् अण्ड्रु अडैत्तु वऴि सॆय्दवन्,
पणै इलङ्गुम् मुडि पत्तु इऱुत्त पऴि पोक्किय
इणैयिलि, ऎण्ड्रुम् इरुन्द कोयिल् इरामेच्चुरम्
तुणैयिलि तू-मलर्प्-पादम् एत्तत् तुयर् नीङ्गुमे.
पाडल् ऎण् : 7
सनि बुदन् ञायिऱु वॆळ्ळि तिङ्गळ् पल तीयन
मुनिवदु सॆय्दु-उगन्दानै वॆण्ड्रव्विनै मूडिड, *
"इनि अरुळ् नल्गिडु" ऎण्ड्रु अण्णल् सॆय्द इरामेच्चुरम्
पनि-मदि सूडि निण्ड्रु आड-वल्ल परमेट्टिये.
* (वॆण्ड्रव्विनै - 1. वॆण्ड्र अव्विनै; 2. वॆण्ड्रु अव्विनै)
पाडल् ऎण् : 8
पॆरु-वरै अण्ड्रु ऎडुत्तु एन्दिनान्-तन् पॆयर् साय् कॆड
अरु-वरैयाल् अडर्त्तु अण्ड्रु नल्गि, अयन् माल् ऎनुम्
इरुवरुम् नाडिनिण्ड्रु एत्तु, कोयिल् इरामेच्चुरत्तु
ऒरुवनुमे पल आगि निण्ड्रदु ऒरु वण्णमे.
पाडल् ऎण् : 9
**** This verse is lost ****
(My thinking: As the 8th song in this padhigam contains the usual reference to Siva crushing Ravana under mount Kailasa & also has the reference to Brahma and Vishnu worshiping Siva - which usually comes in the 9th song. So, maybe Sambandar sang only 10 songs in this padhigam - and hence no song is missing in it)
पाडल् ऎण् : 10
साक्कियर् वन्-समण् कैयर् मॆय्-इल् तडुमाट्रत्तार्
वाक्कु इयलुम् उरै पट्रु विट्टु, मदि-ऒण्मैयाल्,
एक्कु इयलुम् सिलै अण्णल् सॆय्द इरामेच्चुरम्
आक्किय सॆल्वनै एत्ति वाऴ्मिन्, अरुळ् आगवे.
पाडल् ऎण् : 11
पगलवन् मीदु इयङ्गामैक् कात्त पदियोन्-तनै
इगल् अऴिवित्तवन् एत्तु कोयिल् इरामेच्चुरम्
पुगलियुळ् ञानसम्बन्दन् सॊन्न तमिऴ् पुन्दियाल्
अगलिडम्-ऎङ्गुम्-निण्ड्रु एत्त-वल्लार्क्कु इल्लै अल्लले.
=====================================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar worshiped in Tirunelveli and went to Rameswaram
# 2785 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 887
పుణ్ణియనార్ నెల్వేలి పణిందు పోట్రిప్,
.. పురి-సడైయార్ తిరుప్-పదిగళ్ పిఱవుం సెండ్రు
నణ్ణి, ఇనిదు-అమర్న్దు అంగు నయందు పాడి,
.. నల్-తొండరుడన్ నాళుం పోట్రిచ్ చెల్వార్,
విణ్ణవరైచ్ చెట్రు-ఉగందాన్ ఇలంగై సెట్ర
.. మిక్క పెరుం పాదగత్తై నీక్కవేండిత్,
తిణ్ణియ పొఱ్చిలైత్-తడక్-కై ఇరామన్ సెయ్ద
.. తిరు-ఇరామేచ్చురత్తైచ్ చెండ్రు సేర్న్దార్.
Sambandar worshiped Siva at Rameswaram and sang padhigam
# 2786 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 888
సెంగణ్-మాల్ వఴిబట్ట కోయిల్ నణ్ణిత్,
.. తిరుమున్బు తాఴ్న్దు-ఎఴుందు, తెన్ననోడుం
మంగైయర్క్కు నాయగియార్దాము(మ్) మెయ్మ్మై
.. మందిరియారుం సూఴ, మణి-నీళ్-వాయిల్
పొంగి ఎఴుం విరుప్పినాల్ ఉడనే పుక్కుప్,
.. పుడై-వలంగొండు ఉళ్ అణైవార్, పోట్రిసెయ్దు
పంగయచ్-చెంగై కువిత్తుప్ పణిందు నిండ్రు
.. పాడినార్, మన్నవనుం పరవి ఏత్త.
# 2787 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 889
సేదువిన్గణ్ సెంగణ్-మాల్ పూసై సెయ్ద
.. సివబెరుమాన్-తనైప్ పాడిప్ పణిందు పోందు,
కాదలుడన్ అన్నగరిల్ ఇనిదు మేవిక్,
.. కణ్ణుదలాన్ తిరుత్తొండర్ ఆనార్క్కు-ఎల్లాం
కోదు-ఇల్ పుగఴ్ప్ పాండి-మాదేవియార్ మెయ్క్-
.. కులచ్చిఱైయార్ కుఱైవఱుత్తుప్ పోట్రిచ్ చెల్ల,
నాదర్దమై నాళ్దోఱుం వణంగి ఏత్తి,
.. నళిర్-వేలైక్-కరైయిల్ నయందు ఇరుందార్-అండ్రే.
సంబందర్ తేవారం - పదిగం 3.10 – తిరువిరామేచ్చురం - (పణ్ - కాందార పంజమం)
(తానన తానన తానన తానన తానన - Rhythm)
(తానన తానన తాన తాన తనతానన - Rhythm - another view)
పాడల్ ఎణ్ : 1
అలై వళర్-తణ్-మదియోడు అయలే అడక్కి, ఉమై
ములై వళర్ పాగ(మ్) ముయంగ-వల్ల ముదల్వన్, ముని;
ఇలై వళర్ తాఴైగళ్ విమ్ము కానల్ ఇరామేచ్చురం
తలై వళర్ కోల-నన్-మాలైయన్ తాన్ ఇరుందు ఆట్చియే.
పాడల్ ఎణ్ : 2
దేవియై వవ్వియ తెన్-ఇలంగైత్ తసమాముగన్
పూ ఇయలుం ముడి పొండ్రువిత్త పఴి పోయఱ
ఏ ఇయలుం సిలై అణ్ణల్ సెయ్ద ఇరామేచ్చురం
మేవియ సిందైయినార్గళ్దం మేల్వినై వీడుమే.
పాడల్ ఎణ్ : 3
మాన్ అన నోక్కియై దేవి-తన్నై ఒరు మాయైయాల్ **
కానదిల్ వవ్వియ కార్-అరక్కన్ ఉయిర్ సెట్రవన్,
ఈనం ఇలాప్ పుగఴ్ అణ్ణల్ సెయ్ద ఇరామేచ్చురం
ఞానముం నన్-పొరుళ్ ఆగి-నిండ్రదు ఒరు నన్మైయే.
(** Dharmapuram Adheenam edition - మాన్ అన నోక్కు-ఇయై దేవి-తన్నై)
(** IFP edition - variant reading - మాన్ అన నోక్కి వైదేవి-తన్నై)
(** CKS book - variant reading - మాణ్ అన నోక్కి వైదేగి-తన్నై)
పాడల్ ఎణ్ : 4
ఉరై ఉణరాదవన్ కామం ఎన్నుం ఉఱు-వేట్కైయాన్ **
వరై పొరు-తోళ్ ఇఱచ్ చెట్ర విల్లి మగిఴ్న్దు-ఏత్తియ
విరై మరువుం కడల్-ఓదం మల్గుం ఇరామేచ్చురత్తు
అరై అరవు ఆడనిండ్రు ఆడల్ పేణుం అమ్మాన్ నల్లనే.
** (ఉణరాదవన్గామం = 1. ఉణరాదవన్, కామం; 2. ఉణరాద, వన్-కామం;)
పాడల్ ఎణ్ : 5
ఊఱుడై వెణ్-తలై కైయిల్ ఏందిప్ పల ఊర్దొఱుం
వీఱుడై మంగైయర్ ఐయం పెయ్య, విఱల్ ఆర్న్దదోర్
ఏఱుడై వెల్గొడి ఎందై మేయ ఇరామేచ్చురం
పేఱు-ఉడైయాన్ పెయర్ ఏత్తుం మాందర్ పిణి పేరుమే.
పాడల్ ఎణ్ : 6
అణై అలై సూఴ్-కడల్ అండ్రు అడైత్తు వఴి సెయ్దవన్,
పణై ఇలంగుం ముడి పత్తు ఇఱుత్త పఴి పోక్కియ
ఇణైయిలి, ఎండ్రుం ఇరుంద కోయిల్ ఇరామేచ్చురం
తుణైయిలి తూ-మలర్ప్-పాదం ఏత్తత్ తుయర్ నీంగుమే.
పాడల్ ఎణ్ : 7
సని బుదన్ ఞాయిఱు వెళ్ళి తింగళ్ పల తీయన
మునివదు సెయ్దు-ఉగందానై వెండ్రవ్వినై మూడిడ, *
"ఇని అరుళ్ నల్గిడు" ఎండ్రు అణ్ణల్ సెయ్ద ఇరామేచ్చురం
పని-మది సూడి నిండ్రు ఆడ-వల్ల పరమేట్టియే.
* (వెండ్రవ్వినై - 1. వెండ్ర అవ్వినై; 2. వెండ్రు అవ్వినై)
పాడల్ ఎణ్ : 8
పెరు-వరై అండ్రు ఎడుత్తు ఏందినాన్-తన్ పెయర్ సాయ్ కెడ
అరు-వరైయాల్ అడర్త్తు అండ్రు నల్గి, అయన్ మాల్ ఎనుం
ఇరువరుం నాడినిండ్రు ఏత్తు, కోయిల్ ఇరామేచ్చురత్తు
ఒరువనుమే పల ఆగి నిండ్రదు ఒరు వణ్ణమే.
పాడల్ ఎణ్ : 9
**** This verse is lost ****
(My thinking: As the 8th song in this padhigam contains the usual reference to Siva crushing Ravana under mount Kailasa & also has the reference to Brahma and Vishnu worshiping Siva - which usually comes in the 9th song. So, maybe Sambandar sang only 10 songs in this padhigam - and hence no song is missing in it)
పాడల్ ఎణ్ : 10
సాక్కియర్ వన్-సమణ్ కైయర్ మెయ్-ఇల్ తడుమాట్రత్తార్
వాక్కు ఇయలుం ఉరై పట్రు విట్టు, మది-ఒణ్మైయాల్,
ఏక్కు ఇయలుం సిలై అణ్ణల్ సెయ్ద ఇరామేచ్చురం
ఆక్కియ సెల్వనై ఏత్తి వాఴ్మిన్, అరుళ్ ఆగవే.
పాడల్ ఎణ్ : 11
పగలవన్ మీదు ఇయంగామైక్ కాత్త పదియోన్-తనై
ఇగల్ అఴివిత్తవన్ ఏత్తు కోయిల్ ఇరామేచ్చురం
పుగలియుళ్ ఞానసంబందన్ సొన్న తమిఴ్ పుందియాల్
అగలిడం-ఎంగుం-నిండ్రు ఏత్త-వల్లార్క్కు ఇల్లై అల్లలే.
=====================================
No comments:
Post a Comment