Saturday, March 19, 2016

2.34 - முத்தன்மிகு மூவிலை - திருப்பழுவூர் - paḻuvūr

28) பதிகம் 2.34 - திருப்பழுவூர் (கீழப்பழுவூர் ) paḻuvūr:
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
2.34 - முத்தன்மிகு மூவிலைநல்

Verses - PDF: 2.34 - முத்தன்மிகு மூவிலை - muttan migu mūvilai

***
On YouTube:
Tamil:
Part-1: https://youtu.be/8hGZflIx6-Q
Part-2: https://youtu.be/QCanUthhXVU
***

For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_034.HTM


V. Subramanian

=====================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.34 - திருப்பழுவூர் (கீழப்பழுவூர் ) ( பண் : இந்தளம் )

Background:

நெல்வாயில் அரத்துறையையும் சுற்றியுள்ள திருநெல்வெண்ணெய் முதலான பிற தலங்களையும் வழிபட்டுப் பின் நெல்வாயில் அரத்துறை மீண்டார் திருஞான சம்பந்தர். தம் ஊரான சீகாழிக்குத் திரும்பத் திருவுளம் கொண்டு நெல்வாயில் அரத்துறை ஈசனை வணங்கிப் புறப்பட்டார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுப் பழுவூரை அடைந்தார். அங்குப் பாடியது இப்பதிகம். அத்தலத்தில் மலையாள அந்தணர்கள் தொண்டுசெய்ததை இப்பதிகத்தில் இரு பாடல்களில் (4, 11) தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்; வேறு பாடல்களிலும் (5,7,9) அவர்களைக் குறிப்பிட்டதாகக் கொள்ளலாம்.


திருப்பழுவூர் - ஆலந்துறையார் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=10

திருப்பழுவூர் - கோயில் தகவல்கள் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=189


திருப்பழுவூர் (கீழப்பழுவூர் ) - தலச்சிறப்பு :

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=389

சோழநாட்டு (வடகரை)த் தலம்.

திருச்சி - அரியலூர் சாலையில் உள்ளது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு பிரிவாகவுள்ளது. இத்தலம் கீழைப்பழுவூர் ஆகும்.


பழு - ஆல். ஆல் தலமரமாதலின் பழுவூர் என்று பெயர் பெற்றது. அம்பிகை தவஞ் செய்ததால் யோகவனம் எனப்படுகிறது. பரசுராமர், தன் தாயைக் கொன்ற பழி தீரும் பொருட்டு வழிபட்ட பதி. மூலவர் முன்னாலுள்ள மேல் உத்தரத்தில் பரசுராமர் உருவம் உள்ளது. ஜமதக்னி முனிவர் உருவம் மேலப் பழுவூரில் உள்ளது. சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. பழமையான கோயில். அறநிலையத்துறைக்கு உட்பட்டது - போதிய பராமரிப்பில்லை.


இறைவன் - வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர், ஆலந்துறையார் (வடம்-ஆல்)

இறைவி - அருந்தவநாயகி

தலமரம் - ஆல்

--------

#2134 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 236

அங்கணைந் திளம்பிறை யணிந்த சென்னியார்

பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்

துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்

பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்,


#2135 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 237

மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு

தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்

நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்

பண்ணினிற் றிகழ்திருப் பதிகம் பாடினார்.

--------------


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.34 - திருப்பழுவூர் (கீழப்பழுவூர் ) ( பண் : இந்தளம் )

(தானதன தானதன தானதன தானா - என்ற சந்தம்)

பாடல் எண் : 1

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தனெமை யாளுடைய வண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.


பாடல் எண் : 2

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.


பாடல் எண் : 3

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.


பாடல் எண் : 4

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.


பாடல் எண் : 5

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.

(* பாதம் அவை ஓத -- "பாதம் அவை ஏத்த" என்ற பாடபேதமும் உண்டு)


பாடல் எண் : 6

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.


பாடல் எண் : 7

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்க ளாகுதியி லிட்டவகின் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.


பாடல் எண் : 8

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளு மப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செய்விளை யாடுபழு வூரே.


பாடல் எண் : 9

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.


பாடல் எண் : 10

மொட்டையம ணாதர்துகின் மூடுவிரி தேரர்
முட்டைகண் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.


பாடல் எண் : 11

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

============================= ============================


Word separated version:


#2134 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 236

அங்கு அணைந்து இளம்-பிறை அணிந்த சென்னியார்

பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின்

துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்து முன்

பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்,


#2135 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 237

மண்ணினில் பொலி குல மலையர் தாம் தொழுது

எண்-இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்

நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்

பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்.

--------------

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.34 - திருப்பழுவூர் (கீழப்பழுவூர் ) ( பண் : இந்தளம் )

(தானதன தானதன தானதன தானா - Rhythm)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

பாடல் எண் : 1

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தனெமை ஆளுடைய அண்ணலிடம் என்பர்
மைத்தழை-பெ ரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்-பயில் கின்ற-பழு வூரே.

----------

பாடல் எண் : 1

முத்தன், மிகு மூவிலை நல் வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர்,
மைத் தழை பெரும்பொழிலின் வாசம்-அது வீசப்,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.


பாடல் எண் : 2

கோடலொடு கோங்கு அவை குலாவு முடிதன்மேல்
டு-ரவம் வைத்த பெருமானது இம் என்பர்,
மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள்
பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே.


பாடல் எண் : 3

வாலிய புரத்தில்-வர் வேவ விழி-செய்த
போலிய ருத்தர் புரி-நூலர் இம் என்பர்,
வேலியின் விரைக்-கமலம் அன்ன முக மாதர்
பால் எ மிழற்றி நடம் ஆடு பழுவூரே.


பாடல் எண் : 4

எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
கண்ணும் முதல் ஆ கடவுட்கு இம்-அது என்பர்
மண்ணின் மிசை டி மலையாளர் தொழுது ஏத்திப்
பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.


பாடல் எண் : 5

சாதல் புரிவார் சுடலை தன்னில் நடம் ஆடும்
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இம் என்பர்
வேத-மொழி சொல்லி மறையாளர் இறைவன்ன்
பாதம்-வை நிகழ்கின்ற பழுவூரே.

(* பாதம் அவை ஓத -- Variant reading - "பாதம் அவை ஏத்த")


பாடல் எண் : 6

மேவயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாயர ன்றுரி-செய் மைந்தன் இம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.


பாடல் எண் : 7

மந்தணம் இருந்து புரி மாமடி தன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்டகில் மட்டு ஆர்
பைந்தொடி நன் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.


பாடல் எண் : 8

உரக்-கடல் விடத்தினை மிடற்றில் உ வைத்து அன்று
ரக்கனை டர்த்து-ருளும் அப்பன் இம் என்பர்
குரக்கு-னம் விரைப்-பொழிலின் மீது கனி ண்டு
பரக்குறு புனற்செய் விளையாடு பழுவூரே.


பாடல் எண் : 9

நின்ற நெடு-மாலும் ஒரு நான்முகனும் நேட
அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றும் இரு-மூன்றும் ஒரு நாலும் உணர்வார்கள்
மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே.


பாடல் எண் : 10

மொட்டைண் ஆதர், துகில் மூடு விரி தேரர்,
முட்டைகள் மொழிந்த முனிவான் தன் இம் என்பர்
மட்டை மலி தாழைளநீர்-அது இசை பூகம்
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே.


பாடல் எண் : 11

அந்தணர்கள் ஆன மலையாளர்-அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி
வந்த வணம் ஏத்தும்-அவர் வானம் உடையாரே.

================== ==========================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


#2134 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 236

aṅgu aṇaindu iḷam-piṟai aṇinda senniyār

poṅgu eḻil kōburam toḻudu pukka pin

tuṅga nīḷ vimānattaic cūḻndu vandu mun

paṅgayac cēvaḍi paṇindu pāḍuvār,


#2135 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 237

maṇṇinil poli kula malaiyar tām toḻudu

eṇ-il sīrp paṇigaḷ seydu ēttum tanmaiyil

naṇṇiya vagai siṟappittu nādaraip

paṇṇinil tigaḻ tiruppadigam pāḍinār.

--------------

sambandar tēvāram - padigam 2.34 - tiruppaḻuvūr (kīḻappaḻuvūr ) ( paṇ : indaḷam )

(tānadana tānadana tānadana tānā - Rhythm)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

pāḍal eṇ : 1

muttanmigu mūvilainal vēlanviri nūlan

attanemai āḷuḍaiya aṇṇaliḍam enbar

maittaḻai-pe rumboḻilin vāsamadu vīsap

pattaroḍu sittar-payil giṇḍra-paḻu vūrē.

----------

pāḍal eṇ : 1

muttan, migu mūvilai nal vēlan, viri nūlan,

attan, emai āḷ uḍaiya aṇṇal iḍam enbar,

mait taḻai perumboḻilin vāsam-adu vīsap,

pattaroḍu sittar payilgiṇḍra paḻuvūrē.


pāḍal eṇ : 2

kōḍaloḍu kōṅgu avai kulāvu muḍidanmēl

āḍu-aravam vaitta perumānadu iḍam enbar,

māḍam mali sūḷigaiyil ēṟi maḍavārgaḷ

pāḍal oli seyya maligiṇḍra paḻuvūrē.


pāḍal eṇ : 3

vāliya purattil-avar vēva viḻi-seyda

pōliya oruttar puri-nūlar iḍam enbar,

vēliyin viraik-kamalam anna muga mādar

pāl ena miḻaṭri naḍam āḍu paḻuvūrē.


pāḍal eṇ : 4

eṇṇum or eḻuttum isaiyin kiḷavi tērvār

kaṇṇum mudal āya kaḍavuṭku iḍam-adu enbar

maṇṇin misai āḍi malaiyāḷar toḻudu ēttip

paṇṇin oli koṇḍu payilgiṇḍra paḻuvūrē.


pāḍal eṇ : 5

sādal purivār suḍalai tannil naḍam āḍum

nādan namai āḷ uḍaiya namban iḍam enbar

vēda-moḻi solli maṟaiyāḷar iṟaivan tan

pādam-avai ōda nigaḻgiṇḍra paḻuvūrē.

(* pādam avai ōda -- Variant reading - "pādam avai ētta")


pāḍal eṇ : 6

mēvayarum mummadilum vendaḻal viḷaittu

mā ayara aṇḍru uri-sey maindan iḍam enbar

pūvaiyai maḍandaiyargaḷ koṇḍu pugaḻ sollip

pāvaiyargaḷ kaṟpoḍu polinda paḻuvūrē.


pāḍal eṇ : 7

mandaṇam irundu puri māmaḍi tan vēḷvi

sinda viḷaiyāḍu sivalōgan iḍam enbar

andaṇargaḷ āgudiyil iṭṭa agil maṭṭu ār

paindoḍi nan mādar suvaḍu oṭru paḻuvūrē.


pāḍal eṇ : 8

urak-kaḍal viḍattinai miḍaṭril uṟa vaittu aṇḍru

arakkanai aḍarttu-aruḷum appan iḍam enbar

kurakku-inam viraip-poḻilin mīdu kani uṇḍu

parakkuṟu punaṟcey viḷaiyāḍu paḻuvūrē.


pāḍal eṇ : 9

niṇḍra neḍu-mālum oru nānmuganum nēḍa

aṇḍru taḻal āy nimirum ādi iḍam enbar

oṇḍrum iru-mūṇḍrum oru nālum uṇarvārgaḷ

maṇḍrinil irundu uḍan magiḻnda paḻuvūrē.


pāḍal eṇ : 10

moṭṭai amaṇ ādar, tugil mūḍu viri tērar,

muṭṭaigaḷ moḻinda munivān tan iḍam enbar

maṭṭai mali tāḻai iḷanīr-adu isai pūgam

paṭṭaiyoḍu tāṟu virigiṇḍra paḻuvūrē.


pāḍal eṇ : 11

andaṇargaḷ āna malaiyāḷar-avar ēttum

pandam maligiṇḍra paḻuvūr aranai ārac

candam migu ñānam uṇar pandan urai pēṇi

vanda vaṇam ēttum-avar vānam uḍaiyārē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )

#2134 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 236

अङ्गु अणैन्दु इळम्-पिऱै अणिन्द सॆन्नियार्

पॊङ्गु ऎऴिल् कोबुरम् तॊऴुदु पुक्क पिन्

तुङ्ग नीळ् विमानत्तैच् चूऴ्न्दु वन्दु मुन्

पङ्गयच् चेवडि पणिन्दु पाडुवार्,


#2135 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 237

मण्णिनिल् पॊलि कुल मलैयर् ताम् तॊऴुदु

ऎण्-इल् सीर्प् पणिगळ् सॆय्दु एत्तुम् तन्मैयिल्

नण्णिय वगै सिऱप्पित्तु नादरैप्

पण्णिनिल् तिगऴ् तिरुप्पदिगम् पाडिनार्.

--------------

सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.34 - तिरुप्पऴुवूर् (कीऴप्पऴुवूर् ) ( पण् : इन्दळम् )

(तानदन तानदन तानदन ताना - Rhythm)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

पाडल् ऎण् : 1

मुत्तन्मिगु मूविलैनल् वेलन्विरि नूलन्

अत्तनॆमै आळुडैय अण्णलिडम् ऎन्बर्

मैत्तऴै-पॆ रुम्बॊऴिलिन् वासमदु वीसप्

पत्तरॊडु सित्तर्-पयिल् गिण्ड्र-पऴु वूरे.

----------

पाडल् ऎण् : 1

मुत्तन्, मिगु मूविलै नल् वेलन्, विरि नूलन्,

अत्तन्, ऎमै आळ् उडैय अण्णल् इडम् ऎन्बर्,

मैत् तऴै पॆरुम्बॊऴिलिन् वासम्-अदु वीसप्,

पत्तरॊडु सित्तर् पयिल्गिण्ड्र पऴुवूरे.


पाडल् ऎण् : 2

कोडलॊडु कोङ्गु अवै कुलावु मुडिदन्मेल्

आडु-अरवम् वैत्त पॆरुमानदु इडम् ऎन्बर्,

माडम् मलि सूळिगैयिल् एऱि मडवार्गळ्

पाडल् ऒलि सॆय्य मलिगिण्ड्र पऴुवूरे.


पाडल् ऎण् : 3

वालिय पुरत्तिल्-अवर् वेव विऴि-सॆय्द

पोलिय ऒरुत्तर् पुरि-नूलर् इडम् ऎन्बर्,

वेलियिन् विरैक्-कमलम् अन्न मुग मादर्

पाल् ऎन मिऴट्रि नडम् आडु पऴुवूरे.


पाडल् ऎण् : 4

ऎण्णुम् ऒर् ऎऴुत्तुम् इसैयिन् किळवि तेर्वार्

कण्णुम् मुदल् आय कडवुट्कु इडम्-अदु ऎन्बर्

मण्णिन् मिसै आडि मलैयाळर् तॊऴुदु एत्तिप्

पण्णिन् ऒलि कॊण्डु पयिल्गिण्ड्र पऴुवूरे.


पाडल् ऎण् : 5

सादल् पुरिवार् सुडलै तन्निल् नडम् आडुम्

नादन् नमै आळ् उडैय नम्बन् इडम् ऎन्बर्

वेद-मॊऴि सॊल्लि मऱैयाळर् इऱैवन् तन्

पादम्-अवै ओद निगऴ्गिण्ड्र पऴुवूरे.

(* पादम् अवै ओद -- Variant reading - "पादम् अवै एत्त")


पाडल् ऎण् : 6

मेवयरुम् मुम्मदिलुम् वॆन्दऴल् विळैत्तु

मा अयर अण्ड्रु उरि-सॆय् मैन्दन् इडम् ऎन्बर्

पूवैयै मडन्दैयर्गळ् कॊण्डु पुगऴ् सॊल्लिप्

पावैयर्गळ् कऱ्‌पॊडु पॊलिन्द पऴुवूरे.


पाडल् ऎण् : 7

मन्दणम् इरुन्दु पुरि मामडि तन् वेळ्वि

सिन्द विळैयाडु सिवलोगन् इडम् ऎन्बर्

अन्दणर्गळ् आगुदियिल् इट्ट अगिल् मट्टु आर्

पैन्दॊडि नन् मादर् सुवडु ऒट्रु पऴुवूरे.


पाडल् ऎण् : 8

उरक्-कडल् विडत्तिनै मिडट्रिल् उऱ वैत्तु अण्ड्रु

अरक्कनै अडर्त्तु-अरुळुम् अप्पन् इडम् ऎन्बर्

कुरक्कु-इनम् विरैप्-पॊऴिलिन् मीदु कनि उण्डु

परक्कुऱु पुनऱ्‌चॆय् विळैयाडु पऴुवूरे.


पाडल् ऎण् : 9

निण्ड्र नॆडु-मालुम् ऒरु नान्मुगनुम् नेड

अण्ड्रु तऴल् आय् निमिरुम् आदि इडम् ऎन्बर्

ऒण्ड्रुम् इरु-मूण्ड्रुम् ऒरु नालुम् उणर्वार्गळ्

मण्ड्रिनिल् इरुन्दु उडन् मगिऴ्न्द पऴुवूरे.


पाडल् ऎण् : 10

मॊट्टै अमण् आदर्, तुगिल् मूडु विरि तेरर्,

मुट्टैगळ् मॊऴिन्द मुनिवान् तन् इडम् ऎन्बर्

मट्टै मलि ताऴै इळनीर्-अदु इसै पूगम्

पट्टैयॊडु ताऱु विरिगिण्ड्र पऴुवूरे.


पाडल् ऎण् : 11

अन्दणर्गळ् आन मलैयाळर्-अवर् एत्तुम्

पन्दम् मलिगिण्ड्र पऴुवूर् अरनै आरच्

चन्दम् मिगु ञानम् उणर् पन्दन् उरै पेणि

वन्द वणम् एत्तुम्-अवर् वानम् उडैयारे.

================== ==========================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


#2134 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 236

అంగు అణైందు ఇళం-పిఱై అణింద సెన్నియార్

పొంగు ఎఴిల్ కోబురం తొఴుదు పుక్క పిన్

తుంగ నీళ్ విమానత్తైచ్ చూఴ్న్దు వందు మున్

పంగయచ్ చేవడి పణిందు పాడువార్,


#2135 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 237

మణ్ణినిల్ పొలి కుల మలైయర్ తాం తొఴుదు

ఎణ్-ఇల్ సీర్ప్ పణిగళ్ సెయ్దు ఏత్తుం తన్మైయిల్

నణ్ణియ వగై సిఱప్పిత్తు నాదరైప్

పణ్ణినిల్ తిగఴ్ తిరుప్పదిగం పాడినార్.

--------------

సంబందర్ తేవారం - పదిగం 2.34 - తిరుప్పఴువూర్ (కీఴప్పఴువూర్ ) ( పణ్ : ఇందళం )

(తానదన తానదన తానదన తానా - Rhythm)


(To illustrate the chandam, the first song is shown in both 'seer split' and 'word separated' forms.)

పాడల్ ఎణ్ : 1

ముత్తన్మిగు మూవిలైనల్ వేలన్విరి నూలన్

అత్తనెమై ఆళుడైయ అణ్ణలిడం ఎన్బర్

మైత్తఴై-పె రుంబొఴిలిన్ వాసమదు వీసప్

పత్తరొడు సిత్తర్-పయిల్ గిండ్ర-పఴు వూరే.

----------

పాడల్ ఎణ్ : 1

ముత్తన్, మిగు మూవిలై నల్ వేలన్, విరి నూలన్,

అత్తన్, ఎమై ఆళ్ ఉడైయ అణ్ణల్ ఇడం ఎన్బర్,

మైత్ తఴై పెరుంబొఴిలిన్ వాసం-అదు వీసప్,

పత్తరొడు సిత్తర్ పయిల్గిండ్ర పఴువూరే.


పాడల్ ఎణ్ : 2

కోడలొడు కోంగు అవై కులావు ముడిదన్మేల్

ఆడు-అరవం వైత్త పెరుమానదు ఇడం ఎన్బర్,

మాడం మలి సూళిగైయిల్ ఏఱి మడవార్గళ్

పాడల్ ఒలి సెయ్య మలిగిండ్ర పఴువూరే.


పాడల్ ఎణ్ : 3

వాలియ పురత్తిల్-అవర్ వేవ విఴి-సెయ్ద

పోలియ ఒరుత్తర్ పురి-నూలర్ ఇడం ఎన్బర్,

వేలియిన్ విరైక్-కమలం అన్న ముగ మాదర్

పాల్ ఎన మిఴట్రి నడం ఆడు పఴువూరే.


పాడల్ ఎణ్ : 4

ఎణ్ణుం ఒర్ ఎఴుత్తుం ఇసైయిన్ కిళవి తేర్వార్

కణ్ణుం ముదల్ ఆయ కడవుట్కు ఇడం-అదు ఎన్బర్

మణ్ణిన్ మిసై ఆడి మలైయాళర్ తొఴుదు ఏత్తిప్

పణ్ణిన్ ఒలి కొండు పయిల్గిండ్ర పఴువూరే.


పాడల్ ఎణ్ : 5

సాదల్ పురివార్ సుడలై తన్నిల్ నడం ఆడుం

నాదన్ నమై ఆళ్ ఉడైయ నంబన్ ఇడం ఎన్బర్

వేద-మొఴి సొల్లి మఱైయాళర్ ఇఱైవన్ తన్

పాదం-అవై ఓద నిగఴ్గిండ్ర పఴువూరే.

(* పాదం అవై ఓద - Variant reading - "పాదం అవై ఏత్త")


పాడల్ ఎణ్ : 6

మేవయరుం ముమ్మదిలుం వెందఴల్ విళైత్తు

మా అయర అండ్రు ఉరి-సెయ్ మైందన్ ఇడం ఎన్బర్

పూవైయై మడందైయర్గళ్ కొండు పుగఴ్ సొల్లిప్

పావైయర్గళ్ కఱ్పొడు పొలింద పఴువూరే.


పాడల్ ఎణ్ : 7

మందణం ఇరుందు పురి మామడి తన్ వేళ్వి

సింద విళైయాడు సివలోగన్ ఇడం ఎన్బర్

అందణర్గళ్ ఆగుదియిల్ ఇట్ట అగిల్ మట్టు ఆర్

పైందొడి నన్ మాదర్ సువడు ఒట్రు పఴువూరే.


పాడల్ ఎణ్ : 8

ఉరక్-కడల్ విడత్తినై మిడట్రిల్ ఉఱ వైత్తు అండ్రు

అరక్కనై అడర్త్తు-అరుళుం అప్పన్ ఇడం ఎన్బర్

కురక్కు-ఇనం విరైప్-పొఴిలిన్ మీదు కని ఉండు

పరక్కుఱు పునఱ్చెయ్ విళైయాడు పఴువూరే.


పాడల్ ఎణ్ : 9

నిండ్ర నెడు-మాలుం ఒరు నాన్ముగనుం నేడ

అండ్రు తఴల్ ఆయ్ నిమిరుం ఆది ఇడం ఎన్బర్

ఒండ్రుం ఇరు-మూండ్రుం ఒరు నాలుం ఉణర్వార్గళ్

మండ్రినిల్ ఇరుందు ఉడన్ మగిఴ్న్ద పఴువూరే.


పాడల్ ఎణ్ : 10

మొట్టై అమణ్ ఆదర్, తుగిల్ మూడు విరి తేరర్,

ముట్టైగళ్ మొఴింద మునివాన్ తన్ ఇడం ఎన్బర్

మట్టై మలి తాఴై ఇళనీర్-అదు ఇసై పూగం

పట్టైయొడు తాఱు విరిగిండ్ర పఴువూరే.


పాడల్ ఎణ్ : 11

అందణర్గళ్ ఆన మలైయాళర్-అవర్ ఏత్తుం

పందం మలిగిండ్ర పఴువూర్ అరనై ఆరచ్

చందం మిగు ఞానం ఉణర్ పందన్ ఉరై పేణి

వంద వణం ఏత్తుం-అవర్ వానం ఉడైయారే.

================== ==========================

No comments:

Post a Comment