This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.48 – திருப்பாண்டிக்கொடுமுடி ( பண் - பழம் பஞ்சுரம் )
Background:
சுந்தரர் , காவிரியின் இருபக்கமும் உள்ள பல சோணாட்டுத் தலங்களைத் தரிசித்துக் , கொங்குநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்தார்; கொடுமுடிநாதரைத் தரிசித்து வழிபட்டார்; `இப்பெருமானை மறக்க ஒண்ணாது` என்ற குறிப்பு அமையத் திருவைந்தெழுத்தை அமைத்து இத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்; ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ` சொல்லும் நா நமச்சிவாயவே ` என்று அருளியிருப்பதால் , இதற்கு , ` நமச்சிவாயத் திருப்பதிகம் ` என்ற பெயர் வழங்கப்பெறுகின்றது . ( திருமுறை 12 - ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - 86-87).
----------
#3240 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 86
கொங்கினிற் பொன்னித் தென்கரைக் கறையூர்க்
.. கொடுமுடிக் கோயின்முன் குறுகிச்
சங்கவெண் குழைய ருழைவலஞ் செய்து
.. சார்ந்தடி யன்பினிற் றாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது,
.. புனிதர்பொன் மேனியை நோக்கி
"இங்கிவர் தம்மை மறக்கவொண் ணா"தென்
.. றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப,
#3241 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 87
"அண்ணலா ரடிகண் மறக்கினு நாம
.. வஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
.. விடையறா தியம்பு"மென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் "மற்றுப்
.. பற்றிலே" னெனச்செழுந் தமிழால்
நண்ணிய வன்பிற் பிணிப்புற நவின்றார்
.. நமச்சிவா யத்திருப் பதிகம்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.48 – திருப்பாண்டிக்கொடுமுடி ( பண் - பழம் பஞ்சுரம் )
( தான தானன தான தானன தான தானன தானனா - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
மற்றுப்
பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற
லும்பிறந் தேன்இ னிப்பிற வாத
தன்மைவந் தெய்தினேன்
கற்ற
வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற
வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 2
இட்ட
னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட
நாள்இவை என்ற லாற்கரு தேன்கி
ளர்புனற் காவிரி
வட்ட
வாசிகை கொண்ட டிதொழு தேத்து
பாண்டிக் கொடுமுடி
நட்ட
வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 3
ஓவு
நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு
நாள்இவை என்ற லாற்கரு தேன்கி
ளர்புனற் காவிரிப்
பாவு
தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி
பாண்டிக் கொடுமுடி
நாவ
லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 4
எல்லை
யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை
யுந்தி வளம்பொ ழிந்திழி காவி
ரியதன் வாய்க்கரை
நல்ல
வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல
வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 5
அஞ்சி
னார்க்கர ணாதி என்றடி யேனும்
நான்மிக அஞ்சினேன்
அஞ்ச
லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின்
மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச
ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 6
ஏடு
வான்இளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு
பாம்ப தரைக்க சைத்த அழக னேஅந்தண்
காவிரிப்
பாடு
தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி
பாண்டிக் கொடுமுடிச்
சேட
னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 7
விரும்பி
நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி
வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை
மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப
னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 8
செம்பொ
னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ
ழச்சிலை கோலினாய்
வம்பு
லாங்குழ லாளைப் பாக மமர்ந்து
காவிரிக் கோட்டிடைக்
கொம்பின்
மேற்குயில் கூவ மாமயில் ஆடு
பாண்டிக் கொடுமுடி
நம்ப
னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 9
சார
ணன்தந்தை எம்பி ரான்எந்தை
தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ
ணாயிர கோடி தேவர் பிதற்றி
நின்று பிரிகிலார்
நார
ணன்பிர மன்தொ ழுங்கறை யூரிற்
பாண்டிக் கொடுமுடிக்
கார
ணாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
பாடல் எண் : 10
கோணி
யபிறை சூடி யைக்கறை யூரிற்
பாண்டிக் கொடுமுடி
பேணி
யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த
னைப்பிறப் பில்லியைப்
பாணு
லாவரி வண்ட றைகொன்றைத் தார
னைப்படப் பாம்பரை
நாண
னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே.
================== ==================
Word separated version:
#3240 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 86
கொங்கினில் பொன்னித் தென்-கரைக் கறையூர்க்
.. கொடுமுடிக் கோயில்முன் குறுகிச்,
சங்க-வெண் குழையர் உழை வலஞ்செய்து
.. சார்ந்து, அடி அன்பினில் தாழ்ந்து,
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது,
.. புனிதர் பொன்-மேனியை நோக்கி,
"இங்கு இவர்தம்மை மறக்க ஒண்ணாது" என்று
.. எழுந்த மெய்க்-குறிப்பினில் எடுப்ப,
#3241 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 87
"அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம
.. அஞ்செழுத்து அறிய எப்பொழுதும்
எண்ணிய நாவே இன்-சுவை பெருக
.. இடையறாது இயம்பும்" என்றிதனைத்
திண்ணிய உணர்வில் கொள்பவர் "மற்றுப்
.. பற்று இலேன்" எனச் செழும் தமிழால்
நண்ணிய அன்பின் பிணிப்பு-உற நவின்றார்
.. நமச்சிவாயத் திருப்-பதிகம்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.48 – திருப்பாண்டிக்கொடுமுடி ( பண் - பழம் பஞ்சுரம் )
( தான தானன தான தானன தான தானன தானனா - Rhythm)
பாடல் எண் : 1
மற்றுப்
பற்று எனக்கு இன்றி நின்
திருப்-பாதமே
மனம் பாவித்தேன்;
பெற்றலும்
பிறந்தேன்; இனிப்
பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர்
தொழுது ஏத்தும் சீர்க்-கறையூரில்
பாண்டிக் கொடுமுடி
நற்றவா,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 2
இட்டன்
உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட
நாள், மறந்திட்ட
நாள்,
கெட்ட
நாள் இவை என்று-அலால்
கருதேன்; கிளர்-புனல்
காவிரி
வட்ட
வாசிகை கொண்டு அடி தொழுது
ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 3
ஓவும்
நாள், உணர்வு
அழியும் நாள், உயிர்
போகும் நாள், உயர்
பாடைமேல்
காவும்
நாள் இவை என்று-அலால்
கருதேன்; கிளர்-புனல்
காவிரிப்
பாவு
தண்-புனல்
வந்து இழி, பரஞ்சோதி,
பாண்டிக்
கொடுமுடி
நாவலா,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 4
எல்லை-இல்
புகழ் எம்பிரான்;
எந்தை
தம்பிரான்; என்
பொன், மா-மணி;
கல்லை
உந்தி வளம் பொழிந்து இழி
காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர்
தொழுது ஏத்தும் சீர்க்-கறையூரில்
பாண்டிக் கொடுமுடி
வல்லவா,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 5
அஞ்சினார்க்கு
அரண் ஆதி என்று,
அடியேனும்
நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல்
என்று அடித்-தொண்டனேற்கு
அருள் நல்கினாய்க்கு அழிகின்றது
என்?
பஞ்சின்
மெல்-அடிப்
பாவைமார் குடைந்தாடு பாண்டிக்
கொடுமுடி
நஞ்சு-அணி
கண்ட, நான்
மறக்கினும் சொல்லும் நா
நமச்சிவாயவே.
பாடல் எண் : 6
ஏடு
வான் இளம் திங்கள் சூடினை;
என்
பின்; கொல்-புலித்
தோலின்மேல்
ஆடு
பாம்பு-அது
அரைக்கு அசைத்த அழகனே;
அந்தண்
காவிரிப்
பாடு
தண்-புனல்
வந்து இழி, பரஞ்சோதி,
பாண்டிக்
கொடுமுடிச்
சேடனே,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 7
விரும்பி
நின் மலர்ப்-பாதமே
நினைந்தேன்; வினைகளும்
விண்டன;
நெருங்கி
வண்-பொழில்
சூழ்ந்து எழில்-பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை
மென்-முலைக்
கோதைமார் குடைந்தாடு பாண்டிக்
கொடுமுடி
விரும்பனே,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 8
செம்பொன்
நேர் சடையாய்; திரி-புரம்
தீ எழச் சிலை கோலினாய்;
வம்பு-உலாம்
குழலாளைப் பாகம் அமர்ந்து,
காவிரிக்
கோட்டிடைக்
கொம்பின்மேல்
குயில் கூவ, மா-மயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 9
"சாரணன்;
தந்தை;
எம்பிரான்;
எந்தை
தம்பிரான்; எம்பொன்,
மா-மணீ
" என்று
பேர்
எணாயிர கோடி தேவர் பிதற்றி
நின்று பிரிகிலார்;
நாரணன்
பிரமன் தொழும் கறையூரில்
பாண்டிக் கொடுமுடிக்
காரணா,
உனை
நான் மறக்கினும் சொல்லும்
நா நமச்சிவாயவே.
பாடல் எண் : 10
கோணிய
பிறை சூடியைக், கறையூரில்
பாண்டிக் கொடுமுடி
பேணிய
பெருமானைப், பிஞ்ஞகப்
பித்தனைப்,
பிறப்பு-இல்லியைப்,
பாண்-உலா
வரி-வண்டு
அறை கொன்றைத் தாரனைப்,
படப்-பாம்பு
அரை
நாணனைத்
தொண்டன் ஊரன் சொல்-இவை
சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.
================== ==================
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Word separated version:
#3240 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 86
koṅginil ponnit ten-karaik kaṟaiyūrk
.. koḍumuḍik kōyilmun kuṟugic,
caṅga-veṇ kuḻaiyar uḻai valañjeydu
.. sārndu, aḍi anbinil tāḻndu,
poṅgiya vēṭkai perugiḍat toḻudu,
.. punidar pon-mēniyai nōkki,
"iṅgu ivardammai maṟakka oṇṇādu" eṇḍru
.. eḻunda meyk-kuṟippinil eḍuppa,
#3241 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 87
"aṇṇalār aḍigaḷ maṟakkinum nāma
.. añjeḻuttu aṟiya eppoḻudum
eṇṇiya nāvē in-suvai peruga
.. iḍaiyaṟādu iyambum" eṇḍridanait
tiṇṇiya uṇarvil koḷbavar "maṭrup
.. paṭru ilēn" enac ceḻum tamiḻāl
naṇṇiya anbin piṇippu-uṟa naviṇḍrār
.. namaccivāyat tirup-padigam.
sundarar tēvāram - padigam 7.48 – tiruppāṇḍikkoḍumuḍi ( paṇ - paḻam pañjuram )
( tāna tānana tāna tānana tāna tānana tānanā - Rhythm)
pāḍal eṇ : 1
maṭrup paṭru enakku iṇḍri nin tirup-pādamē manam pāvittēn;
peṭralum piṟandēn; inip piṟavāda tanmai vandu eydinēn;
kaṭravar toḻudu ēttum sīrk-kaṟaiyūril pāṇḍik koḍumuḍi
naṭravā, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 2
iṭṭan un aḍi ēttuvār igaḻndiṭṭa nāḷ, maṟandiṭṭa nāḷ,
keṭṭa nāḷ ivai eṇḍru-alāl karudēn; kiḷar-punal kāviri
vaṭṭa vāsigai koṇḍu aḍi toḻudu ēttu pāṇḍik koḍumuḍi
naṭṭavā, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 3
ōvum nāḷ, uṇarvu aḻiyum nāḷ, uyir pōgum nāḷ, uyar pāḍaimēl
kāvum nāḷ ivai eṇḍru-alāl karudēn; kiḷar-punal kāvirip
pāvu taṇ-punal vandu iḻi, parañjōdi, pāṇḍik koḍumuḍi
nāvalā, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 4
ellai-il pugaḻ embirān; endai tambirān; en pon, mā-maṇi;
kallai undi vaḷam poḻindu iḻi kāviri adan vāykkarai
nallavar toḻudu ēttum sīrk-kaṟaiyūril pāṇḍik koḍumuḍi
vallavā, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 5
añjinārkku araṇ ādi eṇḍru, aḍiyēnum nān miga añjinēn;
añjal eṇḍru aḍit-toṇḍanēṟku aruḷ nalgināykku aḻigiṇḍradu en?
pañjin mel-aḍip pāvaimār kuḍaindāḍu pāṇḍik koḍumuḍi
nañju-aṇi kaṇḍa, nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 6
ēḍu vān iḷam tiṅgaḷ sūḍinai; en pin; kol-pulit tōlinmēl
āḍu pāmbu-adu araikku asaitta aḻaganē; andaṇ kāvirip
pāḍu taṇ-punal vandu iḻi, parañjōdi, pāṇḍik koḍumuḍic
cēḍanē, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 7
virumbi nin malarp-pādamē ninaindēn; vinaigaḷum viṇḍana;
neruṅgi vaṇ-poḻil sūḻndu eḻil-peṟa niṇḍra kāvirik kōṭṭiḍaik
kurumbai men-mulaik kōdaimār kuḍaindāḍu pāṇḍik koḍumuḍi
virumbanē, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 8
sembon nēr saḍaiyāy; tiri-puram tī eḻac cilai kōlināy;
vambu-ulām kuḻalāḷaip pāgam amarndu, kāvirik kōṭṭiḍaik
kombinmēl kuyil kūva, mā-mayil āḍu pāṇḍik koḍumuḍi
nambanē, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 9
"sāraṇan; tandai; embirān; endai tambirān; embon, mā-maṇī " eṇḍru
pēr eṇāyira kōḍi dēvar pidaṭri niṇḍru pirigilār;
nāraṇan piraman toḻum kaṟaiyūril pāṇḍik koḍumuḍik
kāraṇā, unai nān maṟakkinum sollum nā namaccivāyavē.
pāḍal eṇ : 10
kōṇiya piṟai sūḍiyaik, kaṟaiyūril pāṇḍik koḍumuḍi
pēṇiya perumānaip, piññagap pittanaip, piṟappu-illiyaip,
pāṇ-ulā vari-vaṇḍu aṟai koṇḍrait tāranaip, paḍap-pāmbu arai
nāṇanait toṇḍan ūran sol-ivai solluvārkku illai tunbamē.
================== ==========================
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Word separated version:
#3240 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 86
कॊङ्गिनिल् पॊन्नित् तॆन्-करैक् कऱैयूर्क्
.. कॊडुमुडिक् कोयिल्मुन् कुऱुगिच्,
चङ्ग-वॆण् कुऴैयर् उऴै वलञ्जॆय्दु
.. सार्न्दु, अडि अन्बिनिल् ताऴ्न्दु,
पॊङ्गिय वेट्कै पॆरुगिडत् तॊऴुदु,
.. पुनिदर् पॊन्-मेनियै नोक्कि,
"इङ्गु इवर्दम्मै मऱक्क ऒण्णादु" ऎण्ड्रु
.. ऎऴुन्द मॆय्क्-कुऱिप्पिनिल् ऎडुप्प,
#3241 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 87
"अण्णलार् अडिगळ् मऱक्किनुम् नाम
.. अञ्जॆऴुत्तु अऱिय ऎप्पॊऴुदुम्
ऎण्णिय नावे इन्-सुवै पॆरुग
.. इडैयऱादु इयम्बुम्" ऎण्ड्रिदनैत्
तिण्णिय उणर्विल् कॊळ्बवर् "मट्रुप्
.. पट्रु इलेन्" ऎनच् चॆऴुम् तमिऴाल्
नण्णिय अन्बिन् पिणिप्पु-उऱ नविण्ड्रार्
.. नमच्चिवायत् तिरुप्-पदिगम्.
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.48 – तिरुप्पाण्डिक्कॊडुमुडि ( पण् - पऴम् पञ्जुरम् )
( तान तानन तान तानन तान तानन तानना - Rhythm)
पाडल् ऎण् : 1
मट्रुप् पट्रु ऎनक्कु इण्ड्रि निन् तिरुप्-पादमे मनम् पावित्तेन्;
पॆट्रलुम् पिऱन्देन्; इनिप् पिऱवाद तन्मै वन्दु ऎय्दिनेन्;
कट्रवर् तॊऴुदु एत्तुम् सीर्क्-कऱैयूरिल् पाण्डिक् कॊडुमुडि
नट्रवा, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 2
इट्टन् उन् अडि एत्तुवार् इगऴ्न्दिट्ट नाळ्, मऱन्दिट्ट नाळ्,
कॆट्ट नाळ् इवै ऎण्ड्रु-अलाल् करुदेन्; किळर्-पुनल् काविरि
वट्ट वासिगै कॊण्डु अडि तॊऴुदु एत्तु पाण्डिक् कॊडुमुडि
नट्टवा, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 3
ओवुम् नाळ्, उणर्वु अऴियुम् नाळ्, उयिर् पोगुम् नाळ्, उयर् पाडैमेल्
कावुम् नाळ् इवै ऎण्ड्रु-अलाल् करुदेन्; किळर्-पुनल् काविरिप्
पावु तण्-पुनल् वन्दु इऴि, परञ्जोदि, पाण्डिक् कॊडुमुडि
नावला, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 4
ऎल्लै-इल् पुगऴ् ऎम्बिरान्; ऎन्दै तम्बिरान्; ऎन् पॊन्, मा-मणि;
कल्लै उन्दि वळम् पॊऴिन्दु इऴि काविरि अदन् वाय्क्करै
नल्लवर् तॊऴुदु एत्तुम् सीर्क्-कऱैयूरिल् पाण्डिक् कॊडुमुडि
वल्लवा, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 5
अञ्जिनार्क्कु अरण् आदि ऎण्ड्रु, अडियेनुम् नान् मिग अञ्जिनेन्;
अञ्जल् ऎण्ड्रु अडित्-तॊण्डनेऱ्कु अरुळ् नल्गिनाय्क्कु अऴिगिण्ड्रदु ऎन्?
पञ्जिन् मॆल्-अडिप् पावैमार् कुडैन्दाडु पाण्डिक् कॊडुमुडि
नञ्जु-अणि कण्ड, नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 6
एडु वान् इळम् तिङ्गळ् सूडिनै; ऎन् पिन्; कॊल्-पुलित् तोलिन्मेल्
आडु पाम्बु-अदु अरैक्कु असैत्त अऴगने; अन्दण् काविरिप्
पाडु तण्-पुनल् वन्दु इऴि, परञ्जोदि, पाण्डिक् कॊडुमुडिच्
चेडने, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 7
विरुम्बि निन् मलर्प्-पादमे निनैन्देन्; विनैगळुम् विण्डन;
नॆरुङ्गि वण्-पॊऴिल् सूऴ्न्दु ऎऴिल्-पॆऱ निण्ड्र काविरिक् कोट्टिडैक्
कुरुम्बै मॆन्-मुलैक् कोदैमार् कुडैन्दाडु पाण्डिक् कॊडुमुडि
विरुम्बने, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 8
सॆम्बॊन् नेर् सडैयाय्; तिरि-पुरम् ती ऎऴच् चिलै कोलिनाय्;
वम्बु-उलाम् कुऴलाळैप् पागम् अमर्न्दु, काविरिक् कोट्टिडैक्
कॊम्बिन्मेल् कुयिल् कूव, मा-मयिल् आडु पाण्डिक् कॊडुमुडि
नम्बने, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 9
"सारणन्; तन्दै; ऎम्बिरान्; ऎन्दै तम्बिरान्; ऎम्बॊन्, मा-मणी " ऎण्ड्रु
पेर् ऎणायिर कोडि देवर् पिदट्रि निण्ड्रु पिरिगिलार्;
नारणन् पिरमन् तॊऴुम् कऱैयूरिल् पाण्डिक् कॊडुमुडिक्
कारणा, उनै नान् मऱक्किनुम् सॊल्लुम् ना नमच्चिवायवे.
पाडल् ऎण् : 10
कोणिय पिऱै सूडियैक्, कऱैयूरिल् पाण्डिक् कॊडुमुडि
पेणिय पॆरुमानैप्, पिञ्ञगप् पित्तनैप्, पिऱप्पु-इल्लियैप्,
पाण्-उला वरि-वण्डु अऱै कॊण्ड्रैत् तारनैप्, पडप्-पाम्बु अरै
नाणनैत् तॊण्डन् ऊरन् सॊल्-इवै सॊल्लुवार्क्कु इल्लै तुन्बमे.
================ ============
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
#3240 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 86
కొంగినిల్ పొన్నిత్ తెన్-కరైక్ కఱైయూర్క్
.. కొడుముడిక్ కోయిల్మున్ కుఱుగిచ్,
చంగ-వెణ్ కుఴైయర్ ఉఴై వలంజెయ్దు
.. సార్న్దు, అడి అన్బినిల్ తాఴ్న్దు,
పొంగియ వేట్కై పెరుగిడత్ తొఴుదు,
.. పునిదర్ పొన్-మేనియై నోక్కి,
"ఇంగు ఇవర్దమ్మై మఱక్క ఒణ్ణాదు" ఎండ్రు
.. ఎఴుంద మెయ్క్-కుఱిప్పినిల్ ఎడుప్ప,
#3241 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 87
"అణ్ణలార్ అడిగళ్ మఱక్కినుం నామ
.. అంజెఴుత్తు అఱియ ఎప్పొఴుదుం
ఎణ్ణియ నావే ఇన్-సువై పెరుగ
.. ఇడైయఱాదు ఇయంబుం" ఎండ్రిదనైత్
తిణ్ణియ ఉణర్విల్ కొళ్బవర్ "మట్రుప్
.. పట్రు ఇలేన్" ఎనచ్ చెఴుం తమిఴాల్
నణ్ణియ అన్బిన్ పిణిప్పు-ఉఱ నవిండ్రార్
.. నమచ్చివాయత్ తిరుప్-పదిగం.
సుందరర్ తేవారం - పదిగం 7.48 – తిరుప్పాండిక్కొడుముడి ( పణ్ - పఴం పంజురం )
( తాన తానన తాన తానన తాన తానన తాననా - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
మట్రుప్ పట్రు ఎనక్కు ఇండ్రి నిన్ తిరుప్-పాదమే మనం పావిత్తేన్;
పెట్రలుం పిఱందేన్; ఇనిప్ పిఱవాద తన్మై వందు ఎయ్దినేన్;
కట్రవర్ తొఴుదు ఏత్తుం సీర్క్-కఱైయూరిల్ పాండిక్ కొడుముడి
నట్రవా, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 2
ఇట్టన్ ఉన్ అడి ఏత్తువార్ ఇగఴ్న్దిట్ట నాళ్, మఱందిట్ట నాళ్,
కెట్ట నాళ్ ఇవై ఎండ్రు-అలాల్ కరుదేన్; కిళర్-పునల్ కావిరి
వట్ట వాసిగై కొండు అడి తొఴుదు ఏత్తు పాండిక్ కొడుముడి
నట్టవా, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 3
ఓవుం నాళ్, ఉణర్వు అఴియుం నాళ్, ఉయిర్ పోగుం నాళ్, ఉయర్ పాడైమేల్
కావుం నాళ్ ఇవై ఎండ్రు-అలాల్ కరుదేన్; కిళర్-పునల్ కావిరిప్
పావు తణ్-పునల్ వందు ఇఴి, పరంజోది, పాండిక్ కొడుముడి
నావలా, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 4
ఎల్లై-ఇల్ పుగఴ్ ఎంబిరాన్; ఎందై తంబిరాన్; ఎన్ పొన్, మా-మణి;
కల్లై ఉంది వళం పొఴిందు ఇఴి కావిరి అదన్ వాయ్క్కరై
నల్లవర్ తొఴుదు ఏత్తుం సీర్క్-కఱైయూరిల్ పాండిక్ కొడుముడి
వల్లవా, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 5
అంజినార్క్కు అరణ్ ఆది ఎండ్రు, అడియేనుం నాన్ మిగ అంజినేన్;
అంజల్ ఎండ్రు అడిత్-తొండనేఱ్కు అరుళ్ నల్గినాయ్క్కు అఴిగిండ్రదు ఎన్?
పంజిన్ మెల్-అడిప్ పావైమార్ కుడైందాడు పాండిక్ కొడుముడి
నంజు-అణి కండ, నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 6
ఏడు వాన్ ఇళం తింగళ్ సూడినై; ఎన్ పిన్; కొల్-పులిత్ తోలిన్మేల్
ఆడు పాంబు-అదు అరైక్కు అసైత్త అఴగనే; అందణ్ కావిరిప్
పాడు తణ్-పునల్ వందు ఇఴి, పరంజోది, పాండిక్ కొడుముడిచ్
చేడనే, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 7
విరుంబి నిన్ మలర్ప్-పాదమే నినైందేన్; వినైగళుం విండన;
నెరుంగి వణ్-పొఴిల్ సూఴ్న్దు ఎఴిల్-పెఱ నిండ్ర కావిరిక్ కోట్టిడైక్
కురుంబై మెన్-ములైక్ కోదైమార్ కుడైందాడు పాండిక్ కొడుముడి
విరుంబనే, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 8
సెంబొన్ నేర్ సడైయాయ్; తిరి-పురం తీ ఎఴచ్ చిలై కోలినాయ్;
వంబు-ఉలాం కుఴలాళైప్ పాగం అమర్న్దు, కావిరిక్ కోట్టిడైక్
కొంబిన్మేల్ కుయిల్ కూవ, మా-మయిల్ ఆడు పాండిక్ కొడుముడి
నంబనే, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 9
"సారణన్; తందై; ఎంబిరాన్; ఎందై తంబిరాన్; ఎంబొన్, మా-మణీ " ఎండ్రు
పేర్ ఎణాయిర కోడి దేవర్ పిదట్రి నిండ్రు పిరిగిలార్;
నారణన్ పిరమన్ తొఴుం కఱైయూరిల్ పాండిక్ కొడుముడిక్
కారణా, ఉనై నాన్ మఱక్కినుం సొల్లుం నా నమచ్చివాయవే.
పాడల్ ఎణ్ : 10
కోణియ పిఱై సూడియైక్, కఱైయూరిల్ పాండిక్ కొడుముడి
పేణియ పెరుమానైప్, పిఞ్ఞగప్ పిత్తనైప్, పిఱప్పు-ఇల్లియైప్,
పాణ్-ఉలా వరి-వండు అఱై కొండ్రైత్ తారనైప్, పడప్-పాంబు అరై
నాణనైత్ తొండన్ ఊరన్ సొల్-ఇవై సొల్లువార్క్కు ఇల్లై తున్బమే.
=============== ==============
No comments:
Post a Comment