Sunday, January 21, 2018

1.44 – திருப்பாச்சிலாச்சிராமம் - tiruppāccilāccirāmam

47) 1.44திருப்பாச்சிலாச்சிராமம் ( பண் - தக்கராகம் ) - tiruppāccilāccirāmam ( paṇ - takkarāgam )
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
1.44 – துணிவளர் திங்கள்
1.44 – tuṇi vaḷar tiṅgaḷ

Here are the links to verses and audio of this padhigam's discussion:
******
On YouTube:
Part-1: https://youtu.be/f-MEiHTD_RM
Part-2: https://youtu.be/FSLfqDc_06Q
Part-3: https://youtu.be/3nx0b0CIu2g
******

English translation – by V.M.Subramanya Ayyar:

 V. Subramanian
========================
This has verses in Tamil, English, and Nagari scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.44 – திருப்பாச்சிலாச்சிராமம் ( பண் - தக்கராகம் )

Background:
திருப்பாச்சிலாச்சிராமம் என்ற ஊர் மழநாட்டைச் சார்ந்தது. அந்நாட்டு மன்னன் கொல்லிமழவன் என்பவன். அவன் மகளுக்கு `முயலகன்' என்னும் கொடிய நோயிருந்தது. அது எவ்வகையாலும் தீராது இருந்ததால், அவ்வரசன், அவளைப் பாச்சிலாச்சிராமத்து இறைவன் திருமுன் கொண்டுவந்து கிடத்திவைத்திருந்தான்.
திருஞான சம்பந்தர் திருஅன்பிலாலந்துறை, திருமாந்துறை முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருப்பாச்சிலாச்சிராமத்திற்கு வந்தார். கொல்லிமழவன் அவரை வரவேற்றுத் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்றான். திருக்கோயிலை வலம்வந்த பிள்ளையார், உணர்வு அழிந்து நிலத்தில் கிடக்கின்ற பெண்ணை இறைவன் திருமுன்பு கண்டார். `இது என்ன?` என்று மழவனை வினாவினார். அரசன் அவரை வணங்கி, `இவள் என் மகள்: நெடுநாளாக முயலகன் என்னும் நோயால் வருந்துகின்றாள். தீர்க்கும் உபாயம் தெரியாமல் சிவபெருமான் திருமுன்பு சேர்ப்பித்திருக்கிறேன்` என்று தெரிவித்தான்,
பிள்ளையார் மனமிரங்கி மாற்றறி வரதரை நோக்கித், `துணிவளர் திங்கள்\' என்னும் இப்பதிகத்தினைப் பாடியருளினார். உடனே கொல்லிமழவன் மகள் பிணி நீங்கி எழுந்தாள்.

குறிப்பு: இத்தலம் இக்காலத்தில் "திருவாசி" என்று வழங்கப்பெறுகின்றது. திருவானைக்காவிலிருந்து வடமேற்கே கிட்டத்தட்ட 9 கி.மீ தொலைவில் உள்ளது.
----------
#2209 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 311
அந்நகரிற் கொல்லிமழ வன்பயந்த வரும்பெறலா ரமுத மென்சொற்
கன்னியிள மடப்பிணையாங் காமருகோ மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னுபெரும் பிணியாகு முயலகன்வந் தணைவுறமெய் வருத்த மெய்தித்
தன்னுடைய பெருஞ்சுற்றம் புலம்பெய்தத் தானுமனந் தளர்வு கொள்வான்,

#2210 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 312
மற்றுவே றொருபரிசாற் றவிராமை மறிவளருங் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினா னாதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச் சேவகராய்ப் புரங்கண் மூன்றுஞ்
செற்றவர்தங் கோயிலினுட் கொடுபுகுந்து திருமுன்பே யிட்டு வைத்தான்.

#2214 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 316
மங்கலதூ ரியமுழங்கு மணிவீதி கடந்துமதிச் சடையார் கோயில்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப் புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கணிழிந் தருளுமுறை யிழிந்தருளி யணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு முன்வணங்கச் சாருங் காலை,

#2215 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 317
கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன் சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
"யென்னிது?"வென் றருள்செய்ய, மழவன்றா னெதிரிறைஞ்சி "யடியேன் பெற்ற
பொன்னிவளை முயலகனாம் பொருவிலரும் பிணிபொருந்தப் புனிதர் கோயின்
முன்னணையக் கொணர்வித்தே னிதுபுகுந்த படி"யென்று மொழிந்து நின்றான்.

#2216 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 318
அணிகிளர் தாரவன் சொன்னமாற்ற மருளுடன் கேட்டந் நிலையினின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய பரம்பொரு ளாயினா ரைப்பணிந்து
"மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்ப?" தென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத் தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.

#2217 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 319
பன்னு தமிழ்மறை யாம்பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச்சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றி நிற்கமழவன் பயந்த மழலைமென்சொற்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக்கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடியென வொல்கிவந்து பொருவலித் தாதை புடையணைந்தாள்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.44 – திருப்பாச்சிலாச்சிராமம் ( பண் - தக்கராகம் )
(“தனதன தானன தானன தான - தனதன தானன தான” என்ற சந்தம்)
பாடல் எண் : 1
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே.

பாடல் எண் : 2
கலைபுனைமானுரி தோலுடையாடை கனல்சுட ராலிவர்கண்கள்
தலையணிசென்னியர் தாரணிமார்பர் தம்மடிகள் ளிவரென்ன
அலைபுனல்பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
இலைபுனைவேலரோ வேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.

பாடல் எண் : 3
வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை வேண்டுவர்பூண்பது வெண்ணூல்
நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மைநயந்து
மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் சிதைசெய்வதோ விவர்சீரே.

பாடல் எண் : 4
கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் கனறரு தூமதிக்கண்ணி
புனமலர்மாலை யணிந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மனமலிமைந்தரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே.

பாடல் எண் : 5
மாந்தர்தம்பானறு நெய்மகிழ்ந்தாடி வளர்சடை மேற்புனல்வைத்து
மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை முதிரவோர் வாய்மூரிபாடி
ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சாந்தணிமார்பரோ தையலைவாடச் சதுர்செய்வதோ விவர்சார்வே.

பாடல் எண் : 6
நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி
ஆறதுசூடி யாடரவாட்டி யைவிரற் கோவணவாடை
பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
ஏறதுவேறிய ரேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.

பாடல் எண் : 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

பாடல் எண் : 8
ஏவலத்தால்விச யற்கருள்செய்து இராவண னையீடழித்து
மூவரிலும்முத லாய்நடுவாய மூர்த்தியை யன்றிமொழியாள்
யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
தேவர்கள்தேவரோ சேயிழைவாடச் சிதைசெய்வதோ விவர்சேர்வே.

பாடல் எண் : 9
மேலதுநான்முக னெய்தியதில்லை கீழது சேவடிதன்னை
நீலதுவண்ணனு மெய்தியதில்லை யெனவிவர் நின்றதுமல்லால்
ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் பழிசெய்வதோ விவர்பண்பே.

பாடல் எண் : 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

பாடல் எண் : 11
அகமலியன்பொடு தொண்டர்வணங்க வாச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே.

Word separated version:
#2209 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 311
அந்நகரில் கொல்லி-மழவன் பயந்த அரும்-பெறல் ஆரமுத மென்-சொல்
கன்னி இள மடப்-பிணை ஆம் காமரு கோமளக்-கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னு பெரும் பிணி ஆகும் முயலகன் வந்து-அணைவுற, மெய்-வருத்தம் எய்தித்,
தன்னுடைய பெரும்-சுற்றம் புலம்பு எய்தத் தானும் மனம் தளர்வு கொள்வான்,

#2210 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 312
மற்று வேறு ஒரு பரிசால் தவிராமை, மறி வளரும் கையார் பாதம்
பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால், பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடு-வந்து போர்க்கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு-புகுந்து திரு-முன்பே இட்டுவைத்தான்.

#2214 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 316
மங்கல தூரியம் முழங்கு மணி-வீதி கடந்து, மதிச் சடையார் கோயில்
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்தாகப் புனை-முத்தின் சிவிகை நின்றும்
அங்கண் இழிந்தருளும் முறை இழிந்தருளி , அணி-வாயில் பணிந்து புக்குத்,
தங்கள் பிரான் கோயில் வலங்கொண்டு திரு-முன் வணங்கச் சாரும் காலை,

#2215 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 317
கன்னி இளங்கொடி உணர்வு கழிந்து நிலன் சேர்ந்ததனைக் கண்டு நோக்கி,
"என் இது?" என்றருள்-செய்ய, மழவன்தான் எதிர் இறைஞ்சி, "அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகனாம் பொருவில் அரும் பிணி பொருந்தப் புனிதர் கோயில்
முன் அணையக் கொணர்வித்தேன் இது புகுந்தபடி" என்று மொழிந்து நின்றான்.

#2216 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 318
அணி கிளர் தார்-அவன் சொன்ன மாற்றம் அருளுடன் கேட்டு அந்-நிலையில் நின்றே
பணி வளர் செஞ்சடைப் பாச்சில் மேய பரம்பொருள் ஆயினாரைப் பணிந்து,
"மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது?" என்று
தணிவு-இல் பிணி தவிர்க்கும் பதிகத் தண்-தமிழ் பாடினார் சண்பை-நாதர்.

#2217 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 319
பன்னு தமிழ்-மறை ஆம் பதிகம் பாடித் திருக்-கடைக்காப்புச் சாத்தி
மன்னும் கவுணியர் போற்றி நிற்கமழவன் பயந்த மழலை மென்-சொல்
கன்னி உறு-பிணி விட்டு நீங்கக்கதும் எனப் பார்-மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கி வந்து பொரு-வலித் தாதை புடை அணைந்தாள்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.44 – திருப்பாச்சிலாச்சிராமம் ( பண் - தக்கராகம் )
(“தனதன தானன தானன தான - தனதன தானன தான” என்ற சந்தம்)
பாடல் எண் : 1
துணி-வளர் திங்கள் துளங்கி விளங்கச், சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆரிடமும் பலி-தேர்வர்
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

பாடல் எண் : 2
கலை புனை மான்-உரி தோல்-உடை ஆடை கனல்-சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர், தார் அணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன
அலை-புனல் பூம்பொழில் சூழ்ந்து-அமர் பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
இலை-புனை வேலரோ ஏழையை வாட இடர்-செய்வதோ இவர் ஈடே?

பாடல் எண் : 3
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு-இருள் மாலை வேண்டுவர், பூண்பது வெண்ணூல்,
நஞ்சு-அடை கண்டர், நெஞ்சு இடமாக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சு-அடை மாளிகை சூழ்தரு பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதை-செய்வதோ இவர் சீரே?

பாடல் எண் : 4
கன-மலர்க்-கொன்றை அலங்கல் இலங்கக், கனல்-தரு தூமதிக்-கண்ணி
புன-மலர்-மாலை அணிந்து அழகாய புனிதர்-கொலாம் இவர் என்ன
வனம்-மலி வண்-பொழில் சூழ்தரு பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
மனம்-மலி மைந்தரோ மங்கையை வாட மயல்-செய்வதோ இவர் மாண்பே?

பாடல் எண் : 5
மாந்தர்-தம்பால் நறு-நெய் மகிழ்ந்து ஆடி வளர்-சடைமேல் புனல் வைத்து
மோந்தை முழாக் குழல் தாளம் ஒர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி
ஆந்தைவிழிச் சிறு பூதத்தர் பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
சாந்து-அணி மார்பரோ தையலை வாடச் சதுர்-செய்வதோ இவர் சார்வே?

பாடல் எண் : 6
நீறு மெய்-பூசி நிறை-சடை தாழ நெற்றிக்-கண்ணால் உற்று-நோக்கி
ஆறு-அது சூடி ஆடு-அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை
பால்-தரு மேனியர் பூதத்தர் பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
ஏறு-அது ஏறியர் ஏழையை வாட இடர்-செய்வதோ இவர் ஈடே?

பாடல் எண் : 7
பொங்கு-இள-நாகம் ஒர் ஏகவடத்தோடு ஆமை வெண்ணூல் புனை-கொன்றை
கொங்கு-இள மாலை புனைந்து அழகாய குழகர்-கொலாம் இவர் என்ன
அங்கு-இள மங்கை ஓர் பங்கினர் பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
சங்கு-ஒளி வண்ணரோ தாழ்-குழல் வாடச் சதிர்-செய்வதோ இவர் சார்வே?

பாடல் எண் : 8
-வலத்தால் விசயற்கு அருள்-செய்து இராவணனை ஈடழித்து
மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில்-பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதை-செய்வதோ இவர் சேர்வே?

பாடல் எண் : 9
மேல்-அது நான்முகன் எய்தியது இல்லை, கீழ்-அது சேவடிதன்னை
நீல்-அது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும் அல்லால்
ஆல்-அது மா-மதி தோய் பொழில் பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
பால்-அது வண்ணரோ பைந்தொடி வாடப் பழி-செய்வதோ இவர் பண்பே?

பாடல் எண் : 10
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இரு-போதும்
ஊணொடு கூடிய உட்கு-நகையால் உரைகள் அவை கொள-வேண்டா
ஆணொடு பெண் வடிவு ஆயினர் பாச்சில் ஆச்சிராமத்து உறைகின்ற
பூண்-நெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனை-செய்வதோ இவர் பொற்பே?

பாடல் எண் : 11
அகம்-மலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகை-மலி மாலை புனைந்து அழகாய புனிதர்-கொலாம் இவர் என்ன
நகை-மலி தண்-பொழில் சூழ்-தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகை-மலி தண்-தமிழ் கொண்டு இவை ஏத்தச் சாரகிலா வினைதானே.
=====================

Word separated version:
2209 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 311
annagaril kolli-maḻavaṉ payanda arum-peṟal āramuda meṉ-sol
kaṉṉi iḷa maḍap-piṇai ām kāmaru kōmaḷak-koḻundiṉ kadirsey mēṉi
maṉṉu perum piṇi āgum muyalagaṉ vandu-aṇaivuṟa, mey-varuttam eydit,
taṉṉuḍaiya perum-suṭram pulambu eydat tāṉum maṉam taḷarvu koḷvāṉ,

2210 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 312
maṭru vēṟu oru parisāl tavirāmai, maṟi vaḷarum kaiyār pādam
paṭriyē varum kulattup pāṉmaiyiṉāṉ ādaliṉāl, parivu tīrap
poṭroḍiyaik koḍu-vandu pōrkkōlac cēvagarāyp puraṅgaḷ mūṇḍrum
seṭravar-tam kōyiliṉuḷ koḍu-pugundu tiru-muṉbē iṭṭuvaittāṉ.

2214 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 316
maṅgala tūriyam muḻaṅgu maṇi-vīdi kaḍandu, madic caḍaiyār kōyil
poṅgu suḍark kōburattukku aṇittāgap puṉai-muttiṉ sivigai niṇḍrum
aṅgaṇ iḻindaruḷum muṟai iḻindaruḷi , aṇi-vāyil paṇindu pukkut,
taṅgaḷ pirāṉ kōyil valaṅgoṇḍu tiru-muṉ vaṇaṅgac cārum kālai,

2215 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 317
kaṉṉi iḷaṅgoḍi uṇarvu kaḻindu nilaṉ sērndadaṉaik kaṇḍu nōkki,
"eṉ idu?" eṇḍraruḷ-seyya, maḻavaṉtāṉ edir iṟaiñji, "aḍiyēṉ peṭra
poṉ ivaḷai muyalagaṉām poruvil arum piṇi porundap puṉidar kōyil
muṉ aṇaiyak koṇarvittēṉ idu pugundabaḍi" eṇḍru moḻindu niṇḍrāṉ.

2216 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 318
aṇi kiḷar tār-avaṉ soṉṉa māṭram aruḷuḍaṉ kēṭṭu an-nilaiyil niṇḍrē
paṇi vaḷar señjaḍaip pāccil mēya paramboruḷ āyiṉāraip paṇindu,
"maṇi vaḷar kaṇḍarō maṅgaiyai vāḍa mayal seyvadō ivar māṇbadu?" eṇḍru 
taṇivu-il piṇi tavirkkum padigat taṇ-tamiḻ pāḍiṉār saṇbai-nādar.

2217 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 319
paṉṉu tamiḻ-maṟai ām padigam pāḍit tiruk-kaḍaikkāppuc cātti
maṉṉum kavuṇiyar pōṭri niṟka, maḻavaṉ payanda maḻalai meṉ-sol
kaṉṉi uṟu-piṇi viṭṭu nīṅgak, kadum eṉap pār-misai niṇḍru eḻundu
poṉṉiṉ koḍi eṉa olgi vandu poru-valit tādai puḍai aṇaindāḷ.

sambandar tēvāram - padigam 1.44 – tiruppāccilāccirāmam ( paṇ - takkarāgam )
(“taṉadaṉa tāṉaṉa tāṉaṉa tāṉa - taṉadaṉa tāṉaṉa tāṉa” eṇḍra sandam)
pāḍal eṇ : 1
tuṇi-vaḷar tiṅgaḷ tuḷaṅgi viḷaṅgac, suḍarccaḍai suṭri muḍittup
paṇi vaḷar koḷkaiyar pāriḍam sūḻa āriḍamum pali-tērvar
aṇi vaḷar kōlam elām seydu pāccil āccirāmattu uṟaigiṇḍra
maṇi vaḷar kaṇḍarō maṅgaiyai vāḍa mayal seyvadō ivar māṇbē?

pāḍal eṇ : 2
kalai puṉai māṉ-uri tōl-uḍai āḍai kaṉal-suḍarāl ivar kaṇgaḷ
talai aṇi seṉṉiyar, tār aṇi mārbar tam aḍigaḷ ivar eṉṉa
alai-puṉal pūmboḻil sūḻndu-amar pāccil āccirāmattu uṟaigiṇḍra
ilai-puṉai vēlarō ēḻaiyai vāḍa iḍar-seyvadō ivar īḍē?

pāḍal eṇ : 3
veñjuḍar āḍuvar, tuñju-iruḷ mālai vēṇḍuvar, pūṇbadu veṇṇūl,
nañju-aḍai kaṇḍar, neñju iḍamāga naṇṇuvar nammai nayandu
mañju-aḍai māḷigai sūḻdaru pāccil āccirāmattu uṟaigiṇḍra
señjuḍar vaṇṇarō paindoḍi vāḍac cidai-seyvadō ivar sīrē?

pāḍal eṇ : 4
kaṉa-malark-koṇḍrai alaṅgal ilaṅgak, kaṉal-taru tūmadik-kaṇṇi
puṉa-malar-mālai aṇindu aḻagāya puṉidar-kolām ivar eṉṉa
vaṉam-mali vaṇ-poḻil sūḻdaru pāccil āccirāmattu uṟaigiṇḍra
maṉam-mali maindarō maṅgaiyai vāḍa mayal-seyvadō ivar māṇbē?

pāḍal eṇ : 5
māndar-tambāl naṟu-ney magiḻndu āḍi vaḷar-saḍaimēl puṉal vaittu
mōndai muḻāk kuḻal tāḷam or vīṇai mudira ōr vāymūri pāḍi
āndaiviḻic ciṟu pūdattar pāccil āccirāmattu uṟaigiṇḍra
sāndu-aṇi mārbarō taiyalai vāḍac cadur-seyvadō ivar sārvē?

pāḍal eṇ : 6
nīṟu mey-pūsi niṟai-saḍai tāḻa neṭrik-kaṇṇāl uṭru-nōkki
āṟu-adu sūḍi āḍu-aravu āṭṭi aiviral kōvaṇa āḍai
pāl-taru mēṉiyar pūdattar pāccil āccirāmattu uṟaigiṇḍra
ēṟu-adu ēṟiyar ēḻaiyai vāḍa iḍar-seyvadō ivar īḍē?

pāḍal eṇ : 7
poṅgu-iḷa-nāgam or ēgavaḍattōḍu āmai veṇṇūl puṉai-koṇḍrai
koṅgu-iḷa mālai puṉaindu aḻagāya kuḻagar-kolām ivar eṉṉa
aṅgu-iḷa maṅgai ōr paṅgiṉar pāccil āccirāmattu uṟaigiṇḍra
saṅgu-oḷi vaṇṇarō tāḻ-kuḻal vāḍac cadir-seyvadō ivar sārvē?

pāḍal eṇ : 8
ē-valattāl visayaṟku aruḷ-seydu irāvaṇaṉai īḍaḻittu
mūvarilum mudal āy naḍu āya mūrttiyai aṇḍri moḻiyāḷ
yāvargaḷum paravum eḻil-pāccil āccirāmattu uṟaigiṇḍra
dēvargaḷ dēvarō sēyiḻai vāḍac cidai-seyvadō ivar sērvē?

pāḍal eṇ : 9
mēl-adu nāṉmugaṉ eydiyadu illai, kīḻ-adu sēvaḍidaṉṉai
nīl-adu vaṇṇaṉum eydiyadu illai eṉa ivar niṇḍradum allāl
āl-adu mā-madi tōy poḻil pāccil āccirāmattu uṟaigiṇḍra
pāl-adu vaṇṇarō paindoḍi vāḍap paḻi-seyvadō ivar paṇbē?

pāḍal eṇ : 10
nāṇoḍu kūḍiya sāyiṉarēṉum naguvar avar iru-pōdum
ūṇoḍu kūḍiya uṭku-nagaiyāl uraigaḷ avai koḷa-vēṇḍā
āṇoḍu peṇ vaḍivu āyiṉar pāccil āccirāmattu uṟaigiṇḍra
pūṇ-neḍu mārbarō pūṅgoḍi vāḍap puṉai-seyvadō ivar poṟpē?

pāḍal eṇ : 11
agam-mali aṉboḍu toṇḍar vaṇaṅga āccirāmattu uṟaigiṇḍra
pugai-mali mālai puṉaindu aḻagāya puṉidar-kolām ivar eṉṉa
nagai-mali taṇ-poḻil sūḻ-taru kāḻi naṭramiḻ ñāṉasambandaṉ
tagai-mali taṇ-tamiḻ koṇḍu ivai ēttac cāragilā viṉaidāṉē.
================== ==========================

Word separated version:
२२०९ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३११
अन्नगरिल् कॊल्लि-मऴवऩ् पयन्द अरुम्-पॆऱल् आरमुद मॆऩ्-सॊल्
कऩ्ऩि इळ मडप्-पिणै आम् कामरु कोमळक्-कॊऴुन्दिऩ् कदिर्सॆय् मेऩि
मऩ्ऩु पॆरुम् पिणि आगुम् मुयलगऩ् वन्दु-अणैवुऱ, मॆय्-वरुत्तम् ऎय्दित्,
तऩ्ऩुडैय पॆरुम्-सुट्रम् पुलम्बु ऎय्दत् ताऩुम् मऩम् तळर्वु कॊळ्वाऩ्,

२२१० - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३१२
मट्रु वेऱु ऒरु परिसाल् तविरामै, मऱि वळरुम् कैयार् पादम्
पट्रिये वरुम् कुलत्तुप् पाऩ्मैयिऩाऩ् आदलिऩाल्, परिवु तीरप्
पॊट्रॊडियैक् कॊडु-वन्दु पोर्क्कोलच् चेवगराय्प् पुरङ्गळ् मूण्ड्रुम्
सॆट्रवर्-तम् कोयिलिऩुळ् कॊडु-पुगुन्दु तिरु-मुऩ्बे इट्टुवैत्ताऩ्.

२२१४ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३१६
मङ्गल तूरियम् मुऴङ्गु मणि-वीदि कडन्दु, मदिच् चडैयार् कोयिल्
पॊङ्गु सुडर्क् कोबुरत्तुक्कु अणित्तागप् पुऩै-मुत्तिऩ् सिविगै निण्ड्रुम्
अङ्गण् इऴिन्दरुळुम् मुऱै इऴिन्दरुळि , अणि-वायिल् पणिन्दु पुक्कुत्,
तङ्गळ् पिराऩ् कोयिल् वलङ्गॊण्डु तिरु-मुऩ् वणङ्गच् चारुम् कालै,

२२१५ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३१७
कऩ्ऩि इळङ्गॊडि उणर्वु कऴिन्दु निलऩ् सेर्न्ददऩैक् कण्डु नोक्कि,
"ऎऩ् इदु?" ऎण्ड्ररुळ्-सॆय्य, मऴवऩ्ताऩ् ऎदिर् इऱैञ्जि, "अडियेऩ् पॆट्र
पॊऩ् इवळै मुयलगऩाम् पॊरुविल् अरुम् पिणि पॊरुन्दप् पुऩिदर् कोयिल्
मुऩ् अणैयक् कॊणर्वित्तेऩ् इदु पुगुन्दबडि" ऎण्ड्रु मॊऴिन्दु निण्ड्राऩ्.

२२१६ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३१८
अणि किळर् तार्-अवऩ् सॊऩ्ऩ माट्रम् अरुळुडऩ् केट्टु अन्-निलैयिल् निण्ड्रे
पणि वळर् सॆञ्जडैप् पाच्चिल् मेय परम्बॊरुळ् आयिऩारैप् पणिन्दु,
"मणि वळर् कण्डरो मङ्गैयै वाड मयल् सॆय्वदो इवर् माण्बदु?" ऎण्ड्रु
तणिवु-इल् पिणि तविर्क्कुम् पदिगत् तण्-तमिऴ् पाडिऩार् सण्बै-नादर्.

२२१७ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ३१९
पऩ्ऩु तमिऴ्-मऱै आम् पदिगम् पाडित् तिरुक्-कडैक्काप्पुच् चात्ति
मऩ्ऩुम् कवुणियर् पोट्रि निऱ्कमऴवऩ् पयन्द मऴलै मॆऩ्-सॊल्
कऩ्ऩि उऱु-पिणि विट्टु नीङ्गक्कदुम् ऎऩप् पार्-मिसै निण्ड्रु ऎऴुन्दु
पॊऩ्ऩिऩ् कॊडि ऎऩ ऒल्गि वन्दु पॊरु-वलित् तादै पुडै अणैन्दाळ्.

सम्बन्दर् तेवारम् - पदिगम् १.४४ – तिरुप्पाच्चिलाच्चिरामम् ( पण् - तक्करागम् )
(“तऩदऩ ताऩऩ ताऩऩ ताऩ - तऩदऩ ताऩऩ ताऩ” ऎण्ड्र सन्दम्)
पाडल् ऎण् :
तुणि-वळर् तिङ्गळ् तुळङ्गि विळङ्गच्, सुडर्च्चडै सुट्रि मुडित्तुप्
पणि वळर् कॊळ्गैयर् पारिडम् सूऴ आरिडमुम् पलि-तेर्वर्
अणि वळर् कोलम् ऎलाम् सॆय्दु पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
मणि वळर् कण्डरो मङ्गैयै वाड मयल् सॆय्वदो इवर् माण्बे?

पाडल् ऎण् :
कलै पुऩै माऩ्-उरि तोल्-उडै आडै कऩल्-सुडराल् इवर् कण्गळ्
तलै अणि सॆऩ्ऩियर्, तार् अणि मार्बर् तम् अडिगळ् इवर् ऎऩ्ऩ
अलै-पुऩल् पूम्बॊऴिल् सूऴ्न्दु-अमर् पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
इलै-पुऩै वेलरो एऴैयै वाड इडर्-सॆय्वदो इवर् ईडे?

पाडल् ऎण् :
वॆञ्जुडर् आडुवर्, तुञ्जु-इरुळ् मालै वेण्डुवर्, पूण्बदु वॆण्णूल्,
नञ्जु-अडै कण्डर्, नॆञ्जु इडमाग नण्णुवर् नम्मै नयन्दु
मञ्जु-अडै माळिगै सूऴ्दरु पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
सॆञ्जुडर् वण्णरो पैन्दॊडि वाडच् चिदै-सॆय्वदो इवर् सीरे?

पाडल् ऎण् :
कऩ-मलर्क्-कॊण्ड्रै अलङ्गल् इलङ्गक्, कऩल्-तरु तूमदिक्-कण्णि
पुऩ-मलर्-मालै अणिन्दु अऴगाय पुऩिदर्-कॊलाम् इवर् ऎऩ्ऩ
वऩम्-मलि वण्-पॊऴिल् सूऴ्दरु पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
मऩम्-मलि मैन्दरो मङ्गैयै वाड मयल्-सॆय्वदो इवर् माण्बे?

पाडल् ऎण् :
मान्दर्-तम्बाल् नऱु-नॆय् मगिऴ्न्दु आडि वळर्-सडैमेल् पुऩल् वैत्तु
मोन्दै मुऴाक् कुऴल् ताळम् ऒर् वीणै मुदिर ओर् वाय्मूरि पाडि
आन्दैविऴिच् चिऱु पूदत्तर् पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
सान्दु-अणि मार्बरो तैयलै वाडच् चदुर्-सॆय्वदो इवर् सार्वे?

पाडल् ऎण् :
नीऱु मॆय्-पूसि निऱै-सडै ताऴ नॆट्रिक्-कण्णाल् उट्रु-नोक्कि
आऱु-अदु सूडि आडु-अरवु आट्टि ऐविरल् कोवण आडै
पाल्-तरु मेऩियर् पूदत्तर् पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
एऱु-अदु एऱियर् एऴैयै वाड इडर्-सॆय्वदो इवर् ईडे?

पाडल् ऎण् :
पॊङ्गु-इळ-नागम् ऒर् एगवडत्तोडु आमै वॆण्णूल् पुऩै-कॊण्ड्रै
कॊङ्गु-इळ मालै पुऩैन्दु अऴगाय कुऴगर्-कॊलाम् इवर् ऎऩ्ऩ
अङ्गु-इळ मङ्गै ओर् पङ्गिऩर् पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
सङ्गु-ऒळि वण्णरो ताऴ्-कुऴल् वाडच् चदिर्-सॆय्वदो इवर् सार्वे?

पाडल् ऎण् :
-वलत्ताल् विसयऱ्कु अरुळ्-सॆय्दु इरावणऩै ईडऴित्तु
मूवरिलुम् मुदल् आय् नडु आय मूर्त्तियै अण्ड्रि मॊऴियाळ्
यावर्गळुम् परवुम् ऎऴिल्-पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
देवर्गळ् देवरो सेयिऴै वाडच् चिदै-सॆय्वदो इवर् सेर्वे?

पाडल् ऎण् :
मेल्-अदु नाऩ्मुगऩ् ऎय्दियदु इल्लै, कीऴ्-अदु सेवडिदऩ्ऩै
नील्-अदु वण्णऩुम् ऎय्दियदु इल्लै ऎऩ इवर् निण्ड्रदुम् अल्लाल्
आल्-अदु मा-मदि तोय् पॊऴिल् पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
पाल्-अदु वण्णरो पैन्दॊडि वाडप् पऴि-सॆय्वदो इवर् पण्बे?

पाडल् ऎण् : १०
नाणॊडु कूडिय सायिऩरेऩुम् नगुवर् अवर् इरु-पोदुम्
ऊणॊडु कूडिय उट्कु-नगैयाल् उरैगळ् अवै कॊळ-वेण्डा
आणॊडु पॆण् वडिवु आयिऩर् पाच्चिल् आच्चिरामत्तु उऱैगिण्ड्र
पूण्-नॆडु मार्बरो पूङ्गॊडि वाडप् पुऩै-सॆय्वदो इवर् पॊऱ्पे?

पाडल् ऎण् : ११
अगम्-मलि अऩ्बॊडु तॊण्डर् वणङ्ग आच्चिरामत्तु उऱैगिण्ड्र
पुगै-मलि मालै पुऩैन्दु अऴगाय पुऩिदर्-कॊलाम् इवर् ऎऩ्ऩ
नगै-मलि तण्-पॊऴिल् सूऴ्-तरु काऴि नट्रमिऴ् ञाऩसम्बन्दऩ्
तगै-मलि तण्-तमिऴ् कॊण्डु इवै एत्तच् चारगिला विऩैदाऩे.

================ ============


No comments:

Post a Comment