Saturday, March 24, 2018

2.18 - திருமருகல் - சடையாய் எனுமால் - thirumarugal - sadaiyAy enumAl


50) 2.18திருமருகல் ( பண் - இந்தளம் ) - tirumarugal ( paṇ - indaḷam )
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
2.18 – சடையாய் எனுமால்
2.18 – sadaiyAy enumAl

Here are the links to verses, translation, and audio of this padhigam's discussion:


Sadaiyay enumal - padhigam singing:



2.18 - sadaiyAy enumAl - word by word meaning - English translation : PDF: https://drive.google.com/file/d/1hXhAvl4jrXpV5PJaFj6ZpMOZzpgCtBwm/view?usp=sharing

English translation – by V.M.Subramanya Ayyar


******
On YouTube:
Tamil:

English:

V. Subramanian


===========

This has verses in Tamil, English, and Nagari scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 – திருமருகல் ( பண் - இந்தளம் )

Background:
திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தை வழிபட்டுப் பின்னர்த் திருஞான சம்பந்தர், அருகிலுள்ள திருமருகல் சென்றார். அங்கு ஈசனை வழிபட்டு அத்தலத்தில் தங்கியிருந்தார். அச்சமயத்தில் அந்நகரில், ஒரு மடத்தில் வணிகன் மகள் ஒருத்தியும் அவளை மணக்க இருந்தவனும் இரவில் உறங்கும்போது அவனைப் பாம்பு கடித்ததால் அவன் இறந்தான். அது கண்டு அப்பெண் அழுது புலம்பினாள். காலையில் கோயிலுக்குச் சென்ற சம்பந்தர் காதில் அவள் புலம்பல் ஒலி கேட்டது. அவளை அடைந்து அவள் வரலாற்றைத் தெரிந்துகொண்ட சம்பந்தர், அவளுக்கு அபயம் தந்து, "சடையாய் எனுமால்" என்ற இப்பதிகத்தைப் பாடினார். இறந்த வணிகன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். அவ்விருவருக்கும் திருமண வாழ்வை அமைத்துத் தந்தார் சம்பந்தர்.

அப்பெண்ணின் வரலாறு: அவள் வாக்கில் - பெரியபுராணத்திலிருந்து: (பாடல்கள் 12.28.480 & 481):
"வளம் மிகுந்த வைப்பூரில் `தாமன்' என்பவர் என் தந்தை. இவன் அவர் மருமகன். என் தந்தைக்கு ஏழு பெண்மக்கள். அவ்வேழு பெண்களில் மூத்தவளை இவனுக்கு மணம் செய்து தருவேன் என்று வாக்குத் தந்திருந்தார். ஆனால், பின்னர் வேறு ஒருவனிடமிருந்து நிறையப் பணம் பெற்றுக்கொண்டு, அந்த அயலவனுக்கு மணம் செய்து தந்துவிட்டார். அதன் பிறகு என் தந்தை, என்னைத் தவிர மற்ற பெண்கள் ஐவரையும் அதே போல் பிறருக்கு மணம் செய்து தந்துவிட்டார். மனம் வாடி வருந்தும் இவனுக்காக அன்பு பூண்டு அங்கு என் பெற்றோரை விட்டு நீங்கி, இவனையே சார்பாகக்கொண்டு நான் வந்தேன்.
என்னுடன் வந்த இவனும் பாம்பு தீண்டி இறந்தான். கடல் நடுவே கப்பல் கவிழ்ந்தது போல் நான் நிற்கின்றேன். என் உறவினர்போல் தோன்றி என் துன்பங்கள் எல்லாம் நீங்குமாறு அருள் செய்தீர்!' எனக் கூறினாள். கற்றவர்கள் வணங்கிப் போற்றும் காழித் தலைவரான பிள்ளையார், அவள்மேல் இரக்கம் கொண்டார். அவ்வணிகனைத் தீண்டிய பாம்பின் நஞ்சு தீருமாறு திருமருகல் இறைவரைப் போற்றிப் பாடலானார்.

----------
#2370 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 472
திருமருக னகரின்க ணெழுந்தருளித் திங்களுடன் செங்கட் பாம்பு
மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்க வண்ணர்கழல் வணங்கிப் போற்றி
யுருகியவன் புறுகாத லுள்ளலைப்பத் தெள்ளுமிசை யுடனே கூடப்
பெருகுதமிழ்த் தொடைசாத்தி யங்கிருந்தார் பெரும்புகலிப் பிள்ளை யார்தாம்.

#2371 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 473
அந்நாளி லொருவணிகன் பதிக னாகி
  யணைவானோர் கன்னியையு முடனே கொண்டு
பொன்னார்மே ருச்சிலையார் கோயின் மாடு
  புறத்திலொரு மடத்திரவு துயிலும் போது
மின்னார்வெள் ளெயிற்றரவு கவ்வுதலுங் கிளர்ந்த
  விடவேகங் கடிதுதலை மீக்கொண் டேறத்
தன்னாவி நீங்குமவன் றன்மை கண்டு
  சாயலிளங் கன்னிநிலை தளர்ந்து சோர்வாள்,

#2373 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 475
"அன்னையையு மத்தனையும் பிரிந்து நின்னை
  யடைவாக வுடன்போந்தே னரவால் வீடி
யென்னையுயிர் விட்டகன்றாய் யானென் செய்கே
  னிவ்விடுக்கண் டீர்க்கின்றா ரியாரு மில்லை
மன்னியசீர் வணிகர்குல மணியே! யானும்
  வாழே" னென் றென்றயர்வாண் மதியி னாலே
சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயிற்
  றிசைநோக்கித் தொழுதழுதாள் ** செயலொன் றில்லாள்,
(** பாடபேதம்: CKS பெரிய புராண உரைநூலில் --> "கைதொழுதாள்")

#2376 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 478
இத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கு
  மிளங்கொடிபோ னுடங்குமிடை யேழை யேத்தும்
அத்தன்மை யோசையெழுந் தெங்கள் சண்பை
  யாண்டகையார் கும்பிடவந் தணைகின் றார்தம்
மெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார
  மேவுதலுந் திருவுள்ளக் கருணை மேன்மேல்
வைத்தன்ன மெனவயர்வாண் மாடு நீடு
  மாதவத்தோர் சூழவெழுந் தருளி வந்தார்.

#2377 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 479
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று,
  சிவபெருமா னருள்போற்றிச் சிந்தை நைந்து
பரிவுறுவா டனைநோக்கிப் "பயப்ப டேனீ
  பருவரலு நும்பரிசும் பகர்வா" யென்னக்
கரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு
  கண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
  போந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்,

#2380 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 482
சடையானை யெவ்வுயிர்க்குந் தாயா னானைச்
  சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
  விரவாதார் புரமூன்று மெரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
  பாம்பணையிற் றுயின்றானும் பரவுங் கோலம்
உடையானை "யுடையானே தகுமோ விந்த
  வொள்ளிழையா ளுண்மெலி?" வென் றெடுத்துப் பாட,

#2381 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 483
பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான்; சூழ்ந்த
  பொருவிறிருத் தொண்டர்குழாம் பொலிய வார்ப்ப
வங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்
  கருட்காழிப் பிள்ளையா ரடியில் வீழ்ந்த
நங்கையவ டனைநயந்த நம்பி யோடு
  நானிலத்தி லின்புற்று வாழும் வண்ணம்
மங்குறவழ் சோலைமலி புகலி வேந்தர்
  மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 – திருமருகல் ( பண் - இந்தளம் )
("தனனா தனனா தனனா தனனா" - என்ற சந்தம்)

பாடல் எண் : 1
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.

பாடல் எண் : 2
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

பாடல் எண் : 3
அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.

பாடல் எண் : 4
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

பாடல் எண் : 5
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.

பாடல் எண் : 6
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே.

பாடல் எண் : 7
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே.

பாடல் எண் : 8
இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக் கினையே.

பாடல் எண் : 9
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.

பாடல் எண் : 10
அறிவில் சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே.

பாடல் எண் : 11
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.

Word separated version:

#2370 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 472
திருமருகல் நகரின்-கண் எழுந்தருளித் திங்களுடன் செங்கண் பாம்பு
மருவு நெடும் சடை-மவுலி மாணிக்க-வண்ணர் கழல் வணங்கிப் போற்றி
உருகிய அன்பு-உறு காதல் உள்-அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப்
பெருகு தமிழ்த்-தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும்-புகலிப் பிள்ளையார்-தாம்.

#2371 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 473
அந்-நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி
  அணைவான் ஓர் கன்னியையும் உடனே கொண்டு
பொன்-ஆர் மேருச் சிலையார் கோயில் மாடு
  புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது
மின்-ஆர் வெள் எயிற்று-அரவு கவ்வுதலும் கிளர்ந்த
  விட-வேகம் கடிது தலை மீக்கொண்டு ஏறத்
தன்-ஆவி நீங்கும்-அவன் தன்மை கண்டு
  சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள்,

#2373 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 475
"அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
  அடைவு-ஆக உடன்-போந்தேன்; அரவால் வீடி
என்னை உயிர் விட்டு-அகன்றாய்; யான் என் செய்கேன்;
  இவ்-இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை;
மன்னிய சீர் வணிகர்-குல மணியே! யானும்
  வாழேன்" என்றென்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம்-பிறை அணிவார் கோயில் வாயில்
  திசை நோக்கித் தொழுது-அழுதாள் ** செயல்-ஒன்று இல்லாள்,
(** பாடபேதம்: CKS பெரிய புராண உரைநூலில் --> "கைதொழுதாள்")

#2376 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 478
இத்-தன்மை சிவன்-அருளே சிந்தித்து ஏங்கும்
  இளங்-கொடி-போல் நுடங்கும்-இடை ஏழை ஏத்தும்
அத்-தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை
  ஆண்-தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம்
மெய்த்-தன்மை விளங்கு திருச் செவியில் சார
  மேவுதலும், திரு-உள்ளக் கருணை மேன்மேல்
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு
  மாதவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார்.

#2377 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 479
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று,
  சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து
பரிவுறுவாள்-தனை நோக்கிப் "பயப்படேல் நீ;
  பருவரலும் நும் பரிசும் பகர்வாய்" என்னக்,
கரமலர்கள் உச்சியின்மேல் குவித்துக்கொண்டு
  கண்-அருவி சொரிந்து இழியக், காழி வேதப்
புரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்
  போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்,

#2380 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 482
சடையானை, எவ்-உயிர்க்கும் தாய் ஆனானைச்,
  சங்கரனைச், சசி-கண்ட மவுலியானை,
விடையானை, வேதியனை, வெண்-நீற்றானை,
  விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப், பங்கயத்து மேவினானும்
  பாம்பணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை, "உடையானே; தகுமோ இந்த
  ஒள்ளிழையாள் உள்மெலிவு?" என்று எடுத்துப் பாட,

#2381 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 483
பொங்கு-விடம் தீர்ந்து எழுந்து நின்றான், சூழ்ந்த
  பொரு-இல்-திருத் தொண்டர்-குழாம் பொலிய ஆர்ப்ப;
அங்கையினை உச்சியின்மேல் குவித்துக்கொண்டு அங்கு
  அருட்-காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கை-அவள்-தனை நயந்த நம்பியோடு
  நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்-தவழ் சோலை-மலி புகலி வேந்தர்
  மணம் புணரும் பெரு-வாழ்வு வகுத்துவிட்டார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.18 – திருமருகல் ( பண் - இந்தளம் )
("தனனா தனனா தனனா தனனா" - என்ற சந்தம்)

பாடல் எண் : 1
சடையாய் எனும் ஆல்; சரண் நீ எனும் ஆல்;
விடையாய் எனும் ஆல்; வெருவா விழும் ஆல்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்; தகுமோ இவள் உள் மெலிவே?

பாடல் எண் : 2
சிந்தாய் எனும் ஆல்; சிவனே எனும் ஆல்;
முந்தாய் எனும் ஆல்; முதல்வா எனும் ஆல்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்; தகுமோ இவள் ஏசறவே?

பாடல் எண் : 3
அறை ஆர் கழலும் அழல்-வாய் அரவும்
பிறை ஆர் சடையும் உடையாய்; பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்; இவளை
இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே.

பாடல் எண் : 4
ஒலி-நீர் சடையில் கரந்தாய்; உலகம்
பலி நீ திரிவாய்; பழி இல் புகழாய்;
மலி-நீர் மருகல் மகிழ்வாய்; இவளை
மெலி-நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே.

பாடல் எண் : 5
துணி நீல-வண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீல-கண்டம் உடையாய்; மருகல்
கணி நீல-வண்டு ஆர் குழலாள் இவள்-தன்
அணி நீல ஒண்-கண் அயர்வு ஆக்கினையே.

பாடல் எண் : 6
பலரும் பரவப் படுவாய்; சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய்; மருகல்
புலரும் தனையும் துயிலாள்; புடை-போந்து
அலரும் படுமோ அடியாள் இவளே?

பாடல் எண் : 7
வழுவாள் "பெருமான் கழல் வாழ்க" எனா
எழுவாள்; நினைவாள் இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்; மருகல் பெருமான்;
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.

பாடல் எண் : 8
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்
வலங்கொள், மதில் சூழ் மருகல் பெருமான்;
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே.

பாடல் எண் : 9
எரி ஆர் சடையும் அடியும் இருவர்
தெரியாதது ஒர் தீத்-திரள் ஆயவனே;
மரியார் பிரியா மருகல் பெருமான்;
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.

பாடல் எண் : 10
அறிவு இல் சமணும் அலர்-சாக்கியரும்
நெறி அல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்; மருகல் பெருமான்;
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே.

பாடல் எண் : 11
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர்-ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல்-ஞான-சம்பந்தன பாடல் வல்லார்
வியன்-ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.

Word separated version:

2370 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 472
tirumarugal nagariṉ-kaṇ eḻundaruḷit tiṅgaḷuḍaṉ seṅgaṇ pāmbu
maruvu neḍum saḍai-mavuli māṇikka-vaṇṇar kaḻal vaṇaṅgip pōṭri
urugiya aṉbu-uṟu kādal uḷ-alaippat teḷḷum isaiyuḍaṉē kūḍap
perugu tamiḻt-toḍai sātti aṅgu irundār perum-pugalip piḷḷaiyār-tām.

2371 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 473
an-nāḷil oru vaṇigaṉ padigaṉ āgi
  aṇaivāṉ ōr kaṉṉiyaiyum uḍaṉē koṇḍu
poṉ-ār mēruc cilaiyār kōyil māḍu
  puṟattil oru maḍattu iravu tuyilum pōdu
miṉ-ār veḷ eyiṭru-aravu kavvudalum kiḷarnda
  viḍa-vēgam kaḍidu talai mīkkoṇḍu ēṟat
taṉ-āvi nīṅgum-avaṉ taṉmai kaṇḍu
  sāyal iḷam kaṉṉi nilai taḷarndu sōrvāḷ,

2373 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 475
"aṉṉaiyaiyum attaṉaiyum pirindu niṉṉai
  aḍaivu-āga uḍaṉ-pōndēṉ; aravāl vīḍi
eṉṉai uyir viṭṭu-agaṇḍrāy; yāṉ eṉ seygēṉ;
  iv-iḍukkaṇ tīrkkiṇḍrār yārum illai;
maṉṉiya sīr vaṇigar-kula maṇiyē! yāṉum
  vāḻēṉ" eṇḍreṇḍru ayarvāḷ madiyiṉālē
seṉṉi iḷam-piṟai aṇivār kōyil vāyil
  tisai nōkkit toḻudu-aḻudāḷ ** seyal-oṇḍru illāḷ,
(** pāḍabēdam: in CKS periya purāṇam book --> "kaitoḻudāḷ")

2376 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 478
it-taṉmai sivaṉ-aruḷē sindittu ēṅgum
  iḷaṅ-koḍi-pōl nuḍaṅgum-iḍai ēḻai ēttum
at-taṉmai ōsai eḻundu eṅgaḷ saṇbai
  āṇ-tagaiyār kumbiḍa vandu aṇaigiṇḍrār-tam
meyt-taṉmai viḷaṅgu tiruc ceviyil sāra
  mēvudalum, tiru-uḷḷak karuṇai mēṉmēl
vaittu aṉṉam eṉa ayarvāḷ māḍu nīḍu
  mādavattōr sūḻa eḻundaruḷi vandār.

2377 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 479
siraburattu maṟaiyavaṉār seṇḍru niṇḍru,
  sivaberumāṉ aruḷ pōṭric cindai naindu
parivuṟuvāḷ-taṉai nōkkip "payappaḍēl nī;
  paruvaralum num parisum pagarvāy" eṉṉak,
karamalargaḷ ucciyiṉmēl kuvittukkoṇḍu
  kaṇ-aruvi sorindu iḻiyak, kāḻi vēdap
puravalaṉār sēvaḍikkīḻ vīḻndu tāṅgaḷ
  pōndaduvum pugundaduvum pugalal uṭrāḷ,

2380 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 482
saḍaiyāṉai, ev-uyirkkum tāy āṉāṉaic,
  saṅgaraṉaic, sasi-kaṇḍa mavuliyāṉai,
viḍaiyāṉai, vēdiyaṉai, veṇ-nīṭrāṉai,
  viravādār puram mūṇḍrum eriyac ceṭra
paḍaiyāṉaip, paṅgayattu mēviṉāṉum
  pāmbaṇaiyil tuyiṇḍrāṉum paravum kōlam
uḍaiyāṉai, "uḍaiyāṉē; tagumō inda
  oḷḷiḻaiyāḷ uḷmelivu?" eṇḍru eḍuttup pāḍa,

2381 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 483
poṅgu-viḍam tīrndu eḻundu niṇḍrāṉ, sūḻnda
  poru-il-tirut toṇḍar-kuḻām poliya ārppa;
aṅgaiyiṉai ucciyiṉmēl kuvittukkoṇḍu aṅgu
  aruṭ-kāḻip piḷḷaiyār aḍiyil vīḻnda
naṅgai-avaḷ-taṉai nayanda nambiyōḍu
  nāṉilattil iṉbuṭru vāḻum vaṇṇam
maṅgul-tavaḻ sōlai-mali pugali vēndar
  maṇam puṇarum peru-vāḻvu vaguttuviṭṭār.

sambandar tēvāram - padigam 2.18 – tirumarugal ( paṇ - indaḷam )
("taṉaṉā taṉaṉā taṉaṉā taṉaṉā" - eṇḍra sandam)

pāḍal eṇ : 1
saḍaiyāy eṉum āl; saraṇ nī eṉum āl;
viḍaiyāy eṉum āl; veruvā viḻum āl;
maḍai ār kuvaḷai malarum marugal
uḍaiyāy; tagumō ivaḷ uḷ melivē?

pāḍal eṇ : 2
sindāy eṉum āl; sivaṉē eṉum āl;
mundāy eṉum āl; mudalvā eṉum āl;
kondu ār kuvaḷai kulavum marugal
endāy; tagumō ivaḷ ēsaṟavē?

pāḍal eṇ : 3
aṟai ār kaḻalum aḻal-vāy aravum
piṟai ār saḍaiyum uḍaiyāy; periya
maṟaiyār marugal magiḻvāy; ivaḷai
iṟai ār vaḷai koṇḍu eḻil vavviṉaiyē.

pāḍal eṇ : 4
oli-nīr saḍaiyil karandāy; ulagam
pali nī tirivāy; paḻi il pugaḻāy;
mali-nīr marugal magiḻvāy; ivaḷai
meli-nīrmaiyaḷ ākkavum vēṇḍiṉaiyē.

pāḍal eṇ : 5
tuṇi nīla-vaṇṇam mugil tōṇḍriyaṉṉa
maṇi nīla-kaṇḍam uḍaiyāy; marugal
kaṇi nīla-vaṇḍu ār kuḻalāḷ ivaḷ-taṉ
aṇi nīla oṇ-kaṇ ayarvu ākkiṉaiyē.

pāḍal eṇ : 6
palarum paravap paḍuvāy; saḍaimēl
malarum piṟai oṇḍru uḍaiyāy; marugal
pularum taṉaiyum tuyilāḷ; puḍai-pōndu
alarum paḍumō aḍiyāḷ ivaḷē?

pāḍal eṇ : 7
vaḻuvāḷ "perumāṉ kaḻal vāḻga" eṉā
eḻuvāḷ; niṉaivāḷ iravum pagalum;
maḻuvāḷ uḍaiyāy; marugal perumāṉ;
toḻuvāḷ ivaḷait tuyar ākkiṉaiyē.

pāḍal eṇ : 8
ilaṅgaikku iṟaivaṉ vilaṅgal eḍuppat
tulaṅgav viral ūṇḍralum tōṇḍralaṉāy
valaṅgoḷ, madil sūḻ marugal perumāṉ;
alaṅgal ivaḷai alar ākkiṉaiyē.

pāḍal eṇ : 9
eri ār saḍaiyum aḍiyum iruvar
teriyādadu or tīt-tiraḷ āyavaṉē;
mariyār piriyā marugal perumāṉ;
ariyāḷ ivaḷai ayarvu ākkiṉaiyē.

pāḍal eṇ : 10
aṟivu il samaṇum alar-sākkiyarum
neṟi allaṉa seydaṉar, niṇḍru uḻalvār;
maṟi ēndu kaiyāy; marugal perumāṉ;
neṟi ār kuḻali niṟai nīkkiṉaiyē.

pāḍal eṇ : 11
vayañāṉam vallār marugal perumāṉ
uyar-ñāṉam uṇarndu aḍi uḷkudalāl
iyal-ñāṉa-sambandaṉa pāḍal vallār
viyaṉ-ñālam ellām viḷaṅgum pugaḻē.
================== ==========================
Word separated version:

२३७० - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४७२
तिरुमरुगल् नगरिऩ्-कण् ऎऴुन्दरुळित् तिङ्गळुडऩ् सॆङ्गण् पाम्बु
मरुवु नॆडुम् सडै-मवुलि माणिक्क-वण्णर् कऴल् वणङ्गिप् पोट्रि
उरुगिय अऩ्बु-उऱु कादल् उळ्-अलैप्पत् तॆळ्ळुम् इसैयुडऩे कूडप्
पॆरुगु तमिऴ्त्-तॊडै सात्ति अङ्गु इरुन्दार् पॆरुम्-पुगलिप् पिळ्ळैयार्-ताम्.

२३७१ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४७३
अन्-नाळिल् ऒरु वणिगऩ् पदिगऩ् आगि
  अणैवाऩ् ओर् कऩ्ऩियैयुम् उडऩे कॊण्डु
पॊऩ्-आर् मेरुच् चिलैयार् कोयिल् माडु
  पुऱत्तिल् ऒरु मडत्तु इरवु तुयिलुम् पोदु
मिऩ्-आर् वॆळ् ऎयिट्रु-अरवु कव्वुदलुम् किळर्न्द
  विड-वेगम् कडिदु तलै मीक्कॊण्डु एऱत्
तऩ्-आवि नीङ्गुम्-अवऩ् तऩ्मै कण्डु
  सायल् इळम् कऩ्ऩि निलै तळर्न्दु सोर्वाळ्,

२३७३ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४७५
"अऩ्ऩैयैयुम् अत्तऩैयुम् पिरिन्दु निऩ्ऩै
  अडैवु-आग उडऩ्-पोन्देऩ्; अरवाल् वीडि
ऎऩ्ऩै उयिर् विट्टु-अगण्ड्राय्; याऩ् ऎऩ् सॆय्गेऩ्;
  इव्-इडुक्कण् तीर्क्किण्ड्रार् यारुम् इल्लै;
मऩ्ऩिय सीर् वणिगर्-कुल मणिये! याऩुम्
  वाऴेऩ्" ऎण्ड्रॆण्ड्रु अयर्वाळ् मदियिऩाले
सॆऩ्ऩि इळम्-पिऱै अणिवार् कोयिल् वायिल्
  तिसै नोक्कित् तॊऴुदु-अऴुदाळ् ** सॆयल्-ऒण्ड्रु इल्लाळ्,
(** पाडबेदम्: in CKS periya purāṇam book --> "कैतॊऴुदाळ्")

२३७६ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४७८
इत्-तऩ्मै सिवऩ्-अरुळे सिन्दित्तु एङ्गुम्
  इळङ्-कॊडि-पोल् नुडङ्गुम्-इडै एऴै एत्तुम्
अत्-तऩ्मै ओसै ऎऴुन्दु ऎङ्गळ् सण्बै
  आण्-तगैयार् कुम्बिड वन्दु अणैगिण्ड्रार्-तम्
मॆय्त्-तऩ्मै विळङ्गु तिरुच् चॆवियिल् सार
  मेवुदलुम्, तिरु-उळ्ळक् करुणै मेऩ्मेल्
वैत्तु अऩ्ऩम् ऎऩ अयर्वाळ् माडु नीडु
  मादवत्तोर् सूऴ ऎऴुन्दरुळि वन्दार्.

२३७७ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४७९
सिरबुरत्तु मऱैयवऩार् सॆण्ड्रु निण्ड्रु,
  सिवबॆरुमाऩ् अरुळ् पोट्रिच् चिन्दै नैन्दु
परिवुऱुवाळ्-तऩै नोक्किप् "पयप्पडेल् नी;
  परुवरलुम् नुम् परिसुम् पगर्वाय्" ऎऩ्ऩक्,
करमलर्गळ् उच्चियिऩ्मेल् कुवित्तुक्कॊण्डु
  कण्-अरुवि सॊरिन्दु इऴियक्, काऴि वेदप्
पुरवलऩार् सेवडिक्कीऴ् वीऴ्न्दु ताङ्गळ्
  पोन्ददुवुम् पुगुन्ददुवुम् पुगलल् उट्राळ्,

२३८० - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४८२
सडैयाऩै, ऎव्-उयिर्क्कुम् ताय् आऩाऩैच्,
  सङ्गरऩैच्, ससि-कण्ड मवुलियाऩै,
विडैयाऩै, वेदियऩै, वॆण्-नीट्राऩै,
  विरवादार् पुरम् मूण्ड्रुम् ऎरियच् चॆट्र
पडैयाऩैप्, पङ्गयत्तु मेविऩाऩुम्
  पाम्बणैयिल् तुयिण्ड्राऩुम् परवुम् कोलम्
उडैयाऩै, "उडैयाऩे; तगुमो इन्द
  ऒळ्ळिऴैयाळ् उळ्मॆलिवु?" ऎण्ड्रु ऎडुत्तुप् पाड,

२३८१ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४८३
पॊङ्गु-विडम् तीर्न्दु ऎऴुन्दु निण्ड्राऩ्, सूऴ्न्द
  पॊरु-इल्-तिरुत् तॊण्डर्-कुऴाम् पॊलिय आर्प्प;
अङ्गैयिऩै उच्चियिऩ्मेल् कुवित्तुक्कॊण्डु अङ्गु
  अरुट्-काऴिप् पिळ्ळैयार् अडियिल् वीऴ्न्द
नङ्गै-अवळ्-तऩै नयन्द नम्बियोडु
  नाऩिलत्तिल् इऩ्बुट्रु वाऴुम् वण्णम्
मङ्गुल्-तवऴ् सोलै-मलि पुगलि वेन्दर्
  मणम् पुणरुम् पॆरु-वाऴ्वु वगुत्तुविट्टार्.

सम्बन्दर् तेवारम् - पदिगम् २.१८ – तिरुमरुगल् ( पण् - इन्दळम् )
("तऩऩा तऩऩा तऩऩा तऩऩा" - ऎण्ड्र सन्दम्)

पाडल् ऎण् :
सडैयाय् ऎऩुम् आल्; सरण् नी ऎऩुम् आल्;
विडैयाय् ऎऩुम् आल्; वॆरुवा विऴुम् आल्;
मडै आर् कुवळै मलरुम् मरुगल्
उडैयाय्; तगुमो इवळ् उळ् मॆलिवे?

पाडल् ऎण् :
सिन्दाय् ऎऩुम् आल्; सिवऩे ऎऩुम् आल्;
मुन्दाय् ऎऩुम् आल्; मुदल्वा ऎऩुम् आल्;
कॊन्दु आर् कुवळै कुलवुम् मरुगल्
ऎन्दाय्; तगुमो इवळ् एसऱवे?

पाडल् ऎण् :
अऱै आर् कऴलुम् अऴल्-वाय् अरवुम्
पिऱै आर् सडैयुम् उडैयाय्; पॆरिय
मऱैयार् मरुगल् मगिऴ्वाय्; इवळै
इऱै आर् वळै कॊण्डु ऎऴिल् वव्विऩैये.

पाडल् ऎण् :
ऒलि-नीर् सडैयिल् करन्दाय्; उलगम्
पलि नी तिरिवाय्; पऴि इल् पुगऴाय्;
मलि-नीर् मरुगल् मगिऴ्वाय्; इवळै
मॆलि-नीर्मैयळ् आक्कवुम् वेण्डिऩैये.

पाडल् ऎण् :
तुणि नील-वण्णम् मुगिल् तोण्ड्रियऩ्ऩ
मणि नील-कण्डम् उडैयाय्; मरुगल्
कणि नील-वण्डु आर् कुऴलाळ् इवळ्-तऩ्
अणि नील ऒण्-कण् अयर्वु आक्किऩैये.

पाडल् ऎण् :
पलरुम् परवप् पडुवाय्; सडैमेल्
मलरुम् पिऱै ऒण्ड्रु उडैयाय्; मरुगल्
पुलरुम् तऩैयुम् तुयिलाळ्; पुडै-पोन्दु
अलरुम् पडुमो अडियाळ् इवळे?

पाडल् ऎण् :
वऴुवाळ् "पॆरुमाऩ् कऴल् वाऴ्ग" ऎऩा
ऎऴुवाळ्; निऩैवाळ् इरवुम् पगलुम्;
मऴुवाळ् उडैयाय्; मरुगल् पॆरुमाऩ्;
तॊऴुवाळ् इवळैत् तुयर् आक्किऩैये.

पाडल् ऎण् :
इलङ्गैक्कु इऱैवऩ् विलङ्गल् ऎडुप्पत्
तुलङ्गव् विरल् ऊण्ड्रलुम् तोण्ड्रलऩाय्
वलङ्गॊळ्, मदिल् सूऴ् मरुगल् पॆरुमाऩ्;
अलङ्गल् इवळै अलर् आक्किऩैये.

पाडल् ऎण् :
ऎरि आर् सडैयुम् अडियुम् इरुवर्
तॆरियाददु ऒर् तीत्-तिरळ् आयवऩे;
मरियार् पिरिया मरुगल् पॆरुमाऩ्;
अरियाळ् इवळै अयर्वु आक्किऩैये.

पाडल् ऎण् : १०
अऱिवु इल् समणुम् अलर्-साक्कियरुम्
नॆऱि अल्लऩ सॆय्दऩर्, निण्ड्रु उऴल्वार्;
मऱि एन्दु कैयाय्; मरुगल् पॆरुमाऩ्;
नॆऱि आर् कुऴलि निऱै नीक्किऩैये.

पाडल् ऎण् : ११
वयञाऩम् वल्लार् मरुगल् पॆरुमाऩ्
उयर्-ञाऩम् उणर्न्दु अडि उळ्कुदलाल्
इयल्-ञाऩ-सम्बन्दऩ पाडल् वल्लार्
वियऩ्-ञालम् ऎल्लाम् विळङ्गुम् पुगऴे.
================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


#2370 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 472

తిరుమరుగల్ నగరిన్-కణ్ ఎఴుందరుళిత్ తింగళుడన్ సెంగణ్ పాంబు

మరువు నెడుం సడై-మవులి మాణిక్క-వణ్ణర్ కఴల్ వణంగిప్ పోట్రి

ఉరుగియ అన్బు-ఉఱు కాదల్ ఉళ్-అలైప్పత్ తెళ్ళుం ఇసైయుడనే కూడప్

పెరుగు తమిఴ్త్-తొడై సాత్తి అంగు ఇరుందార్ పెరుం-పుగలిప్ పిళ్ళైయార్-తాం.


#2371 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 473

అన్-నాళిల్ ఒరు వణిగన్ పదిగన్ ఆగి

  అణైవాన్ ఓర్ కన్నియైయుం ఉడనే కొండు

పొన్-ఆర్ మేరుచ్ చిలైయార్ కోయిల్ మాడు

  పుఱత్తిల్ ఒరు మడత్తు ఇరవు తుయిలుం పోదు

మిన్-ఆర్ వెళ్ ఎయిట్రు-అరవు కవ్వుదలుం కిళర్న్ద

  విడ-వేగం కడిదు తలై మీక్కొండు ఏఱత్

తన్-ఆవి నీంగుం-అవన్ తన్మై కండు

  సాయల్ ఇళం కన్ని నిలై తళర్న్దు సోర్వాళ్,


#2373 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 475

"అన్నైయైయుం అత్తనైయుం పిరిందు నిన్నై

  అడైవు-ఆగ ఉడన్-పోందేన్; అరవాల్ వీడి

ఎన్నై ఉయిర్ విట్టు-అగండ్రాయ్; యాన్ ఎన్ సెయ్గేన్;

  ఇవ్-ఇడుక్కణ్ తీర్క్కిండ్రార్ యారుం ఇల్లై;

మన్నియ సీర్ వణిగర్-కుల మణియే! యానుం

  వాఴేన్" ఎండ్రెండ్రు అయర్వాళ్ మదియినాలే

సెన్ని ఇళం-పిఱై అణివార్ కోయిల్ వాయిల్

  తిసై నోక్కిత్ తొఴుదు-అఴుదాళ్ ** సెయల్-ఒండ్రు ఇల్లాళ్,

(** variant reading: in CKS periya purāṇam book --> "కైదొఴుదాళ్")


#2376 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 478

ఇత్-తన్మై సివన్-అరుళే సిందిత్తు ఏంగుం

  ఇళఙ్-గొడి-పోల్ నుడంగుం-ఇడై ఏఴై ఏత్తుం

అత్-తన్మై ఓసై ఎఴుందు ఎంగళ్ సణ్బై

  ఆణ్-తగైయార్ కుంబిడ వందు అణైగిండ్రార్-తం

మెయ్త్-తన్మై విళంగు తిరుచ్ చెవియిల్ సార

  మేవుదలుం, తిరు-ఉళ్ళక్ కరుణై మేన్మేల్

వైత్తు అన్నం ఎన అయర్వాళ్ మాడు నీడు

  మాదవత్తోర్ సూఴ ఎఴుందరుళి వందార్.


#2377 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 479

సిరబురత్తు మఱైయవనార్ సెండ్రు నిండ్రు,

  సివబెరుమాన్ అరుళ్ పోట్రిచ్ చిందై నైందు

పరివుఱువాళ్-తనై నోక్కిప్ "పయప్పడేల్ నీ;

  పరువరలుం నుం పరిసుం పగర్వాయ్" ఎన్నక్,

కరమలర్గళ్ ఉచ్చియిన్మేల్ కువిత్తుక్కొండు

  కణ్-అరువి సొరిందు ఇఴియక్, కాఴి వేదప్

పురవలనార్ సేవడిక్కీఴ్ వీఴ్న్దు తాంగళ్

  పోందదువుం పుగుందదువుం పుగలల్ ఉట్రాళ్,


#2380 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 482

సడైయానై, ఎవ్-ఉయిర్క్కుం తాయ్ ఆనానైచ్,

  సంగరనైచ్, ససి-కండ మవులియానై,

విడైయానై, వేదియనై, వెణ్-నీట్రానై,

  విరవాదార్ పురం మూండ్రుం ఎరియచ్ చెట్ర

పడైయానైప్, పంగయత్తు మేవినానుం

  పాంబణైయిల్ తుయిండ్రానుం పరవుం కోలం

ఉడైయానై, "ఉడైయానే; తగుమో ఇంద

  ఒళ్ళిఴైయాళ్ ఉళ్మెలివు?" ఎండ్రు ఎడుత్తుప్ పాడ,


#2381 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 483

పొంగు-విడం తీర్న్దు ఎఴుందు నిండ్రాన్, సూఴ్న్ద

  పొరు-ఇల్-తిరుత్ తొండర్-కుఴాం పొలియ ఆర్ప్ప;

అంగైయినై ఉచ్చియిన్మేల్ కువిత్తుక్కొండు అంగు

  అరుట్-కాఴిప్ పిళ్ళైయార్ అడియిల్ వీఴ్న్ద

నంగై-అవళ్-తనై నయంద నంబియోడు

  నానిలత్తిల్ ఇన్బుట్రు వాఴుం వణ్ణం

మంగుల్-తవఴ్ సోలై-మలి పుగలి వేందర్

  మణం పుణరుం పెరు-వాఴ్వు వగుత్తువిట్టార్.


సంబందర్ తేవారం - పదిగం 2.18 – తిరుమరుగల్ ( పణ్ - ఇందళం )

("తననా తననా తననా తననా" - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

సడైయాయ్ ఎనుం ఆల్; సరణ్ నీ ఎనుం ఆల్;

విడైయాయ్ ఎనుం ఆల్; వెరువా విఴుం ఆల్;

మడై ఆర్ కువళై మలరుం మరుగల్

ఉడైయాయ్; తగుమో ఇవళ్ ఉళ్ మెలివే?


పాడల్ ఎణ్ : 2

సిందాయ్ ఎనుం ఆల్; సివనే ఎనుం ఆల్;

ముందాయ్ ఎనుం ఆల్; ముదల్వా ఎనుం ఆల్;

కొందు ఆర్ కువళై కులవుం మరుగల్

ఎందాయ్; తగుమో ఇవళ్ ఏసఱవే?


పాడల్ ఎణ్ : 3

అఱై ఆర్ కఴలుం అఴల్-వాయ్ అరవుం

పిఱై ఆర్ సడైయుం ఉడైయాయ్; పెరియ

మఱైయార్ మరుగల్ మగిఴ్వాయ్; ఇవళై

ఇఱై ఆర్ వళై కొండు ఎఴిల్ వవ్వినైయే.


పాడల్ ఎణ్ : 4

ఒలి-నీర్ సడైయిల్ కరందాయ్; ఉలగం

పలి నీ తిరివాయ్; పఴి ఇల్ పుగఴాయ్;

మలి-నీర్ మరుగల్ మగిఴ్వాయ్; ఇవళై

మెలి-నీర్మైయళ్ ఆక్కవుం వేండినైయే.


పాడల్ ఎణ్ : 5

తుణి నీల-వణ్ణం ముగిల్ తోండ్రియన్న

మణి నీల-కండం ఉడైయాయ్; మరుగల్

కణి నీల-వండు ఆర్ కుఴలాళ్ ఇవళ్-తన్

అణి నీల ఒణ్-కణ్ అయర్వు ఆక్కినైయే.


పాడల్ ఎణ్ : 6

పలరుం పరవప్ పడువాయ్; సడైమేల్

మలరుం పిఱై ఒండ్రు ఉడైయాయ్; మరుగల్

పులరుం తనైయుం తుయిలాళ్; పుడై-పోందు

అలరుం పడుమో అడియాళ్ ఇవళే?


పాడల్ ఎణ్ : 7

వఴువాళ్ "పెరుమాన్ కఴల్ వాఴ్గ" ఎనా

ఎఴువాళ్; నినైవాళ్ ఇరవుం పగలుం;

మఴువాళ్ ఉడైయాయ్; మరుగల్ పెరుమాన్;

తొఴువాళ్ ఇవళైత్ తుయర్ ఆక్కినైయే.


పాడల్ ఎణ్ : 8

ఇలంగైక్కు ఇఱైవన్ విలంగల్ ఎడుప్పత్

తులంగవ్ విరల్ ఊండ్రలుం తోండ్రలనాయ్

వలంగొళ్, మదిల్ సూఴ్ మరుగల్ పెరుమాన్;

అలంగల్ ఇవళై అలర్ ఆక్కినైయే.


పాడల్ ఎణ్ : 9

ఎరి ఆర్ సడైయుం అడియుం ఇరువర్

తెరియాదతు ఒర్ తీత్-తిరళ్ ఆయవనే;

మరియార్ పిరియా మరుగల్ పెరుమాన్;

అరియాళ్ ఇవళై అయర్వు ఆక్కినైయే.


పాడల్ ఎణ్ : 10

అఱివు ఇల్ సమణుం అలర్-సాక్కియరుం

నెఱి అల్లన సెయ్దనర్, నిండ్రు ఉఴల్వార్;

మఱి ఏందు కైయాయ్; మరుగల్ పెరుమాన్;

నెఱి ఆర్ కుఴలి నిఱై నీక్కినైయే.


పాడల్ ఎణ్ : 11

వయఞానం వల్లార్ మరుగల్ పెరుమాన్

ఉయర్-ఞానం ఉణర్న్దు అడి ఉళ్గుదలాల్

ఇయల్-ఞాన-సంబందన పాడల్ వల్లార్

వియన్-ఞాలం ఎల్లాం విళంగుం పుగఴే.

================ ============


No comments:

Post a Comment