Saturday, March 10, 2018

3.4 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும் - thiruvavaḍuthurai - idarinum thaLarinum


49) 3.4
திருவாவடுதுறை - "நாலடிமேல் வைப்பு" - ( பண் - காந்தார பஞ்சமம் ) - thiruvavaḍuthuṟai - "nalaḍimel vaippu" - ( paṇ - kāndāra pañjamam )
சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram
3.4 – இடரினும் தளரினும்
3.4 – idarinum thaLarinum

Here are the links to verses and audio of this padhigam's discussion:

3.4 - idarinum thaLarinum - word by word meaning - English translation

******
On YouTube:
 
V. Subramanian
========================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.4 – திருவாவடுதுறை - "நாலடிமேல் வைப்பு" - ( பண் - காந்தார பஞ்சமம் )

Background:
திருஞான சம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கித் திருவாவடுதுறை வந்தடைந்தார். அவர் தந்தையாரான சிவபாத இருதயர், தாம் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டும் என ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் வேண்டி, `இடரினும் தளரினும்` என்ற திருப்பதிம் பாடி இறைவனைப் போற்றினார். சிவபூதம் ஒன்று தோன்றி, ஆயிரம் பொன் இருக்கும் பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்தது. `இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி; இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார்`” என்று சொல்லி மறைந்தது. திருஞான சம்பந்தர் நிலத்தில் விழுந்து வணங்கி அந்த உலவாக் கிழியைத் தலைமேற்கொண்டார். அதனைத் தம் தந்தையாரிடம் கொடுத்து, அவரையும் சீகாழியில் உள்ள மற்ற அந்தணர்களையும் நல் வேள்விகள் பல செய்யும்படி கூறி வழியனுப்பினார்.

குறிப்பு : திருவாவடுதுறை - இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே உள்ளது. திருமூலர் தங்கியிருந்து தவம்செய்து திருமந்திரம் அருளிய தலம் இது;
----------
#2320 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 422
மேவி யங்குறை நாளினில் வேள்விசெய் வதனுக்
காவ தாகிய காலம்வந் தணைவுற வணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்
போவ தற்கரும் பொருள்பெற வெதிர்நின்று புகன்றார்

#2321 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 423
தந்தை யார்மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்தருண் முன்னி
யந்த மில்பொரு ளாவன வாவடு துறையுள்
எந்தை யாரடித் தலங்களன் றோ?வென வெழுந்தார்.

#2322 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 424
சென்று தேவர்தம் பிரான்மகிழ் கோயின்முன் பெய்தி
நின்று போற்றுவார் "நீணிதி வேண்டினார்க் கீவ
தொன்று மற்றிலே னுன்னடி யல்லதொன் றறியேன்"
என்று பேரருள் வினவிய செந்தமி ழெடுத்தார்.

#2323 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 425
எடுத்த வண்டமிழ்ப் பதிகநா லடியின்மே லிருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தவின் னிசையினாற் றுதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலா ரடியிணை வழுத்தி
யடுத்த சிந்தையா லாதரித் தஞ்சலி யளித்தார்.

#2324 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 426
நச்சி யின்றமிழ் பாடிய ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய விறைவரின் னருளால்
அச்சி றப்பருள் பூதமுன் விரைந்தகல் பீடத்
துச்சி வைத்தது பசும்பொனா யிரக்கிழி யொன்று.
** அடி-3 சீர்-4: CKS-இன் பெரிய புராண உரையில் - "விரைந்தகன்" என்று உள்ளது.

#2325 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 427
வைத்த பூதமங் கணைந்துமுன் னின்றுநல் வாக்கால்
"உய்த்த விக்கிழி பொன்னுல வாக்கிழி; யுமக்கு
நித்த னாரருள் செய்த"தென் றுரைக்கநேர் தொழுதே
யத்த னார்திரு வருணினைந் தவனிமேற் பணிந்தார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.4 – திருவாவடுதுறை - "நாலடிமேல் வைப்பு" - ( பண் - காந்தார பஞ்சமம் )
பாடல் எண் : 1
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 2
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 3
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 4
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 5
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 6
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 7
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 8
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 9
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 10
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல் எண் : 11
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

Word separated version:

#2320 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 422
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு
ஆவதாகிய காலம் வந்து அணைவுற, அணைந்து
தாவு-இல் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்
போவதற்கு அரும் பொருள் பெற எதிர்-நின்று புகன்றார்

#2321 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 423
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து, அருள் முன்னி,
"அந்தம்-இல் பொருள் ஆவன ஆவடு-துறையுள்
எந்தையார் அடித்தலங்கள் அன்றோ?" என எழுந்தார்.

#2322 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 424
சென்று தேவர்-தம் பிரான் மகிழ் கோயில்-முன்பு எய்தி
நின்று போற்றுவார், "நீள்-நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்று-இலேன், உன்-அடி அல்லது ஒன்று அறியேன்"
என்று பேர்-அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்.

#2323 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 425
எடுத்த வண்-தமிழ்ப் பதிகம் நாலடியின்மேல் இரு-சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன்னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடி-இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்.

#2324 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 426
நச்சி இன்-தமிழ் பாடிய ஞான-சம்பந்தர்
இச்சையே புரிந்து-அருளிய இறைவர் இன்னருளால்
அச்சிறப்பு-அருள் பூதம் முன் விரைந்து அகல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக் கிழி ஒன்று.
** அடி-3இல்: "அகல்" - CKS-இன் பெரிய புராண உரையில் - "அகன்" என்று உள்ளது.

#2325 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 427
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல்-வாக்கால்,
"உய்த்த இக்-கிழி பொன் உலவாக் கிழி; உமக்கு
நித்தனார் அருள் செய்தது" என்று உரைக்க, நேர் தொழுதே
அத்தனார் திருவருள் நினைந்து அவனிமேல் பணிந்தார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.4 – திருவாவடுதுறை - "நாலடிமேல் வைப்பு" - ( பண் - காந்தார பஞ்சமம் )
பாடல் எண் : 1
இடரினும் தளரினும் எனது உறு-நோய்
தொடரினும் உன கழல் தொழுதெழுவேன்;
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே;

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 2
வாழினும் சாவினும் வருந்தினும், போய்
வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ்-இளம் தடம்-புனல் தயங்கு சென்னிப்
போழ்-இள-மதி வைத்த புண்ணியனே;

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 3
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்;
புனல், விரி நறும்-கொன்றைப் போது அணிந்த
கனல்-எரி அனல்-புல்கு கையவனே ;

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 4
தும்மலொடு அரும்-துயர் தோன்றிடினும்
அம்-மலர் அடி அலால் அரற்றாது என் நாக்;
கைம்-மல்கு வரி-சிலைக் கணை ஒன்றினால்
மும்-மதிள் எரி-எழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 5
கையது வீழினும் கழிவுறினும்
செய்-கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;
கொய்-அணி நறு-மலர் குலாய சென்னி
மை-அணி மிடறு-உடை மறையவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 6
வெந்துயர் தோன்றி ஓர் வெருவுறினும்
எந்தாய் உன் அடி அலால் ஏத்தாது என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த,
சந்த-வெண்-பொடி அணி சங்கரனே ;

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 7
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா;
ஒப்பு-உடை ஒருவனை உரு-அழிய
அப்படி அழல்-எழ விழித்தவனே ;

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 8
பேர்-இடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீர்-உடைக் கழல் அலால் சிந்தை-செய்யேன்;
ஏர்-உடை மணி-முடி இராவணனை
ஆர்-இடர் பட வரை அடர்த்தவனே ;

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 9
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்-மலர் அடி அலால் உரையாது என் நாக்;
கண்ணனும் கடி-கமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பு-அரிது ஆயவனே ;

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 10
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என் நாப்;
புத்தரும் சமணரும் புறன்-உரைக்கப்
பத்தர்கட்கு அருள்-செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன்னருள், ஆவடு-துறை அரனே?

பாடல் எண் : 11
அலை-புனல் ஆவடு துறை அமர்ந்த
இலை-நுனை வேற்படை எம் இறையை
நலம்-மிகு ஞான-சம்பந்தன் சொன்ன
விலை-உடை அரும்-தமிழ் மாலை வல்லார்,

வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன்-உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்-மிசை நிலை இலரே.

Word separated version:

2320 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 422
mēvi aṅgu uṟai nāḷiṉil vēḷvi seyvadaṉukku
āvadāgiya kālam vandu aṇaivuṟa, aṇaindu
tāvu-il saṇbaiyar talaivarkkut tādaiyār tāmum
pōvadaṟku arum poruḷ peṟa edir-niṇḍru pugaṇḍrār

2321 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 423
tandaiyār moḻi kēṭṭalum pugaliyār talaivar
mundai nāḷilē moḻindamai niṉaindu, aruḷ muṉṉi,
"andam-il poruḷ āvaṉa āvaḍu-tuṟaiyuḷ
endaiyār aḍittalaṅgaḷ aṇḍrō?" eṉa eḻundār.

2322 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 424
seṇḍru dēvar-tam pirāṉ magiḻ kōyil-muṉbu eydi
niṇḍru pōṭruvār, "nīḷ-nidi vēṇḍiṉārkku īvadu
oṇḍrum maṭru-ilēṉ, uṉ-aḍi alladu oṇḍru aṟiyēṉ"
eṇḍru pēr-aruḷ viṉaviya sendamiḻ eḍuttār.

2323 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 425
eḍutta vaṇ-tamiḻp padigam nālaḍiyiṉmēl iru-sīr
toḍutta vaippoḍu toḍarnda iṉṉisaiyiṉāl tudippār
maḍutta kādalil vaḷḷalār aḍi-iṇai vaḻutti
aḍutta sindaiyāl ādarittu añjali aḷittār.

2324 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 426
nacci iṉ-tamiḻ pāḍiya ñāṉa-sambandar
iccaiyē purindu-aruḷiya iṟaivar iṉṉaruḷāl
acciṟappu-aruḷ pūdam muṉ viraindu agal pīḍattu
ucci vaittadu pasumboṉ āyirak kiḻi oṇḍru.
** in line-3: "agal" - CKS periya purāṇa urai has - "agaṉ".

2325 - periya purāṇam - tiruñāṉa sambandar purāṇam - 427
vaitta pūdam aṅgu aṇaindu muṉ niṇḍru nal-vākkāl,
"uytta ik-kiḻi poṉ ulavāk kiḻi; umakku
nittaṉār aruḷ seydadu" eṇḍru uraikka, nēr toḻudē
attaṉār tiruvaruḷ niṉaindu avaṉimēl paṇindār.

sambandar tēvāram - padigam 3.4 – tiruvāvaḍutuṟai - "nālaḍimēl vaippu" - ( paṇ - kāndāra pañjamam )
pāḍal eṇ : 1
iḍariṉum taḷariṉum eṉadu uṟu-nōy
toḍariṉum uṉa kaḻal toḻudeḻuvēṉ;
kaḍal-taṉil amudoḍu kalanda nañjai
miḍaṟiṉil aḍakkiya vēdiyaṉē;

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 2
vāḻiṉum sāviṉum varundiṉum, pōy
vīḻiṉum uṉa kaḻal viḍuvēṉ allēṉ;
tāḻ-iḷam taḍam-puṉal tayaṅgu seṉṉip
pōḻ-iḷa-madi vaitta puṇṇiyaṉē;

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 3
naṉaviṉum kaṉaviṉum nambā uṉṉai
maṉaviṉum vaḻipaḍal maṟavēṉ ammāṉ;
puṉal, viri naṟum-koṇḍraip pōdu aṇinda
kaṉal-eri aṉal-pulgu kaiyavaṉē ;

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 4
tummaloḍu arum-tuyar tōṇḍriḍiṉum
am-malar aḍi alāl araṭrādu eṉ nā;
kaim-malgu vari-silaik kaṇai oṇḍriṉāl
mum-madiḷ eri-eḻa muṉindavaṉē

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 5
kaiyadu vīḻiṉum kaḻivuṟiṉum
sey-kaḻal aḍi alāl sindai seyyēṉ;
koy-aṇi naṟu-malar kulāya seṉṉi
mai-aṇi miḍaṟu-uḍai maṟaiyavaṉē

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 6
venduyar tōṇḍri ōr veruvuṟiṉum
endāy uṉ aḍi alāl ēttādu eṉ nā;
aindalai aravu koṇḍu araikku asaitta,
sanda-veṇ-poḍi aṇi saṅgaraṉē ;

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 7
veppoḍu viravi ōr viṉai variṉum
appā uṉ aḍi alāl araṭrādu eṉ nā;
oppu-uḍai oruvaṉai uru-aḻiya
appaḍi aḻal-eḻa viḻittavaṉē ;

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 8
pēr-iḍar perugi ōr piṇi variṉum
sīr-uḍaik kaḻal alāl sindai-seyyēṉ;
ēr-uḍai maṇi-muḍi irāvaṇaṉai
ār-iḍar paḍa varai aḍarttavaṉē ;

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 9
uṇṇiṉum pasippiṉum uṟaṅgiṉum niṉ
oṇ-malar aḍi alāl uraiyādu eṉ nā;
kaṇṇaṉum kaḍi-kamaḻ tāmaraimēl
aṇṇalum aḷappu-aridu āyavaṉē ;

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 10
pittoḍu mayaṅgi ōr piṇi variṉum
attā uṉ aḍi alāl araṭrādu eṉ nā;
puttarum samaṇarum puṟaṉ-uraikkap
pattargaṭku aruḷ-seydu payiṇḍravaṉē

iduvō emai āḷumāṟu? īvadu oṇḍru emakku illaiyēl,
aduvō uṉadu iṉṉaruḷ, āvaḍu-tuṟai araṉē?

pāḍal eṇ : 11
alai-puṉal āvaḍu tuṟai amarnda
ilai-nuṉai vēṟpaḍai em iṟaiyai
nalam-migu ñāṉa-sambandaṉ soṉṉa
vilai-uḍai arum-tamiḻ mālai vallār,

viṉai āyiṉa nīṅgip pōy, viṇṇavar viyaṉ-ulagam
nilai āga muṉ ēṟuvar; nilam-misai nilai ilarē.
================== ==========================
Word separated version:

२३२० - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४२२
मेवि अङ्गु उऱै नाळिऩिल् वेळ्वि सॆय्वदऩुक्कु
आवदागिय कालम् वन्दु अणैवुऱ, अणैन्दु
तावु-इल् सण्बैयर् तलैवर्क्कुत् तादैयार् तामुम्
पोवदऱ्कु अरुम् पॊरुळ् पॆऱ ऎदिर्-निण्ड्रु पुगण्ड्रार्

२३२१ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४२३
तन्दैयार् मॊऴि केट्टलुम् पुगलियार् तलैवर्
मुन्दै नाळिले मॊऴिन्दमै निऩैन्दु, अरुळ् मुऩ्ऩि,
"अन्दम्-इल् पॊरुळ् आवऩ आवडु-तुऱैयुळ्
ऎन्दैयार् अडित्तलङ्गळ् अण्ड्रो?" ऎऩ ऎऴुन्दार्.

२३२२ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४२४
सॆण्ड्रु देवर्-तम् पिराऩ् मगिऴ् कोयिल्-मुऩ्बु ऎय्दि
निण्ड्रु पोट्रुवार्, "नीळ्-निदि वेण्डिऩार्क्कु ईवदु
ऒण्ड्रुम् मट्रु-इलेऩ्, उऩ्-अडि अल्लदु ऒण्ड्रु अऱियेऩ्"
ऎण्ड्रु पेर्-अरुळ् विऩविय सॆन्दमिऴ् ऎडुत्तार्.

२३२३ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४२५
ऎडुत्त वण्-तमिऴ्प् पदिगम् नालडियिऩ्मेल् इरु-सीर्
तॊडुत्त वैप्पॊडु तॊडर्न्द इऩ्ऩिसैयिऩाल् तुदिप्पार्
मडुत्त कादलिल् वळ्ळलार् अडि-इणै वऴुत्ति
अडुत्त सिन्दैयाल् आदरित्तु अञ्जलि अळित्तार्.

२३२४ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४२६
नच्चि इऩ्-तमिऴ् पाडिय ञाऩ-सम्बन्दर्
इच्चैये पुरिन्दु-अरुळिय इऱैवर् इऩ्ऩरुळाल्
अच्चिऱप्पु-अरुळ् पूदम् मुऩ् विरैन्दु अगल् पीडत्तु
उच्चि वैत्तदु पसुम्बॊऩ् आयिरक् किऴि ऒण्ड्रु.
** in line-3: "agal" - CKS periya purāṇa urai has - "agaṉ".

२३२५ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्दर् पुराणम् - ४२७
वैत्त पूदम् अङ्गु अणैन्दु मुऩ् निण्ड्रु नल्-वाक्काल्,
"उय्त्त इक्-किऴि पॊऩ् उलवाक् किऴि; उमक्कु
नित्तऩार् अरुळ् सॆय्ददु" ऎण्ड्रु उरैक्क, नेर् तॊऴुदे
अत्तऩार् तिरुवरुळ् निऩैन्दु अवऩिमेल् पणिन्दार्.

सम्बन्दर् तेवारम् - पदिगम् ३.४ – तिरुवावडुदुऱै - "नालडिमेल् वैप्पु" - ( पण् - कान्दार पञ्जमम् )
पाडल् ऎण् :
इडरिऩुम् तळरिऩुम् ऎऩदु उऱु-नोय्
तॊडरिऩुम् उऩ कऴल् तॊऴुदॆऴुवेऩ्;
कडल्-तऩिल् अमुदॊडु कलन्द नञ्जै
मिडऱिऩिल् अडक्किय वेदियऩे;

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
वाऴिऩुम् साविऩुम् वरुन्दिऩुम्, पोय्
वीऴिऩुम् उऩ कऴल् विडुवेऩ् अल्लेऩ्;
ताऴ्-इळम् तडम्-पुऩल् तयङ्गु सॆऩ्ऩिप्
पोऴ्-इळ-मदि वैत्त पुण्णियऩे;

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
नऩविऩुम् कऩविऩुम् नम्बा उऩ्ऩै
मऩविऩुम् वऴिपडल् मऱवेऩ् अम्माऩ्;
पुऩल्, विरि नऱुम्-कॊण्ड्रैप् पोदु अणिन्द
कऩल्-ऎरि अऩल्-पुल्गु कैयवऩे ;

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
तुम्मलॊडु अरुम्-तुयर् तोण्ड्रिडिऩुम्
अम्-मलर् अडि अलाल् अरट्रादु ऎऩ् ना;
कैम्-मल्गु वरि-सिलैक् कणै ऒण्ड्रिऩाल्
मुम्-मदिळ् ऎरि-ऎऴ मुऩिन्दवऩे

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
कैयदु वीऴिऩुम् कऴिवुऱिऩुम्
सॆय्-कऴल् अडि अलाल् सिन्दै सॆय्येऩ्;
कॊय्-अणि नऱु-मलर् कुलाय सॆऩ्ऩि
मै-अणि मिडऱु-उडै मऱैयवऩे

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
वॆन्दुयर् तोण्ड्रि ओर् वॆरुवुऱिऩुम्
ऎन्दाय् उऩ् अडि अलाल् एत्तादु ऎऩ् ना;
ऐन्दलै अरवु कॊण्डु अरैक्कु असैत्त,
सन्द-वॆण्-पॊडि अणि सङ्गरऩे ;

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
वॆप्पॊडु विरवि ओर् विऩै वरिऩुम्
अप्पा उऩ् अडि अलाल् अरट्रादु ऎऩ् ना;
ऒप्पु-उडै ऒरुवऩै उरु-अऴिय
अप्पडि अऴल्-ऎऴ विऴित्तवऩे ;

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
पेर्-इडर् पॆरुगि ओर् पिणि वरिऩुम्
सीर्-उडैक् कऴल् अलाल् सिन्दै-सॆय्येऩ्;
एर्-उडै मणि-मुडि इरावणऩै
आर्-इडर् पड वरै अडर्त्तवऩे ;

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् :
उण्णिऩुम् पसिप्पिऩुम् उऱङ्गिऩुम् निऩ्
ऒण्-मलर् अडि अलाल् उरैयादु ऎऩ् ना;
कण्णऩुम् कडि-कमऴ् तामरैमेल्
अण्णलुम् अळप्पु-अरिदु आयवऩे ;

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् : १०
पित्तॊडु मयङ्गि ओर् पिणि वरिऩुम्
अत्ता उऩ् अडि अलाल् अरट्रादु ऎऩ् ना;
पुत्तरुम् समणरुम् पुऱऩ्-उरैक्कप्
पत्तर्गट्कु अरुळ्-सॆय्दु पयिण्ड्रवऩे

इदुवो ऎमै आळुमाऱु? ईवदु ऒण्ड्रु ऎमक्कु इल्लैयेल्,
अदुवो उऩदु इऩ्ऩरुळ्, आवडु-तुऱै अरऩे?

पाडल् ऎण् : ११
अलै-पुऩल् आवडु तुऱै अमर्न्द
इलै-नुऩै वेऱ्पडै ऎम् इऱैयै
नलम्-मिगु ञाऩ-सम्बन्दऩ् सॊऩ्ऩ
विलै-उडै अरुम्-तमिऴ् मालै वल्लार्,

विऩै आयिऩ नीङ्गिप् पोय्, विण्णवर् वियऩ्-उलगम्
निलै आग मुऩ् एऱुवर्; निलम्-मिसै निलै इलरे.

================ ============
Word separated version:
2320 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 422
మేవి అంగు ఉఱై నాళినిల్ వేళ్వి సెయ్వదనుక్కు
ఆవదాగియ కాలం వందు అణైవుఱ, అణైందు
తావు-ఇల్ సణ్బైయర్ తలైవర్క్కుత్ తాదైయార్ తాముం
పోవదఱ్కు అరుం పొరుళ్ పెఱ ఎదిర్-నిండ్రు పుగండ్రార్

2321 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 423
తందైయార్ మొఴి కేట్టలుం పుగలియార్ తలైవర్
ముందై నాళిలే మొఴిందమై నినైందు, అరుళ్ మున్ని,
"అందం-ఇల్ పొరుళ్ ఆవన ఆవడు-తుఱైయుళ్
ఎందైయార్ అడిత్తలంగళ్ అండ్రో?" ఎన ఎఴుందార్.

2322 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 424
సెండ్రు దేవర్-తం పిరాన్ మగిఴ్ కోయిల్-మున్బు ఎయ్ది
నిండ్రు పోట్రువార్, "నీళ్-నిది వేండినార్క్కు ఈవదు
ఒండ్రుం మట్రు-ఇలేన్, ఉన్-అడి అల్లదు ఒండ్రు అఱియేన్"
ఎండ్రు పేర్-అరుళ్ వినవియ సెందమిఴ్ ఎడుత్తార్.

2323 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 425
ఎడుత్త వణ్-తమిఴ్ప్ పదిగం నాలడియిన్మేల్ ఇరు-సీర్
తొడుత్త వైప్పొడు తొడర్ంద ఇన్నిసైయినాల్ తుదిప్పార్
మడుత్త కాదలిల్ వళ్ళలార్ అడి-ఇణై వఴుత్తి
అడుత్త సిందైయాల్ ఆదరిత్తు అంజలి అళిత్తార్.

2324 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 426
నచ్చి ఇన్-తమిఴ్ పాడియ ఞాన-సంబందర్
ఇచ్చైయే పురిందు-అరుళియ ఇఱైవర్ ఇన్నరుళాల్
అచ్చిఱప్పు-అరుళ్ పూదం మున్ విరైందు అగల్ పీడత్తు
ఉచ్చి వైత్తదు పసుంబొన్ ఆయిరక్ కిఴి ఒండ్రు.
** in line-3: "agal" - CKS periya purāṇa urai has - "agaṉ".

2325 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 427
వైత్త పూదం అంగు అణైందు మున్ నిండ్రు నల్-వాక్కాల్,
"ఉయ్త్త ఇక్-కిఴి పొన్ ఉలవాక్ కిఴి; ఉమక్కు
నిత్తనార్ అరుళ్ సెయ్దదు" ఎండ్రు ఉరైక్క, నేర్ తొఴుదే
అత్తనార్ తిరువరుళ్ నినైందు అవనిమేల్ పణిందార్.

సంబందర్ తేవారం - పదిగం 3.4 – తిరువావడుదుఱై - "నాలడిమేల్ వైప్పు" - ( పణ్ - కాందార పంజమం )
పాడల్ ఎణ్ : 1
ఇడరినుం తళరినుం ఎనదు ఉఱు-నోయ్
తొడరినుం ఉన కఴల్ తొఴుదెఴువేన్;
కడల్-తనిల్ అముదొడు కలంద నంజై
మిడఱినిల్ అడక్కియ వేదియనే;

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 2
వాఴినుం సావినుం వరుందినుం, పోయ్
వీఴినుం ఉన కఴల్ విడువేన్ అల్లేన్;
తాఴ్-ఇళం తడం-పునల్ తయంగు సెన్నిప్
పోఴ్-ఇళ-మది వైత్త పుణ్ణియనే;

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 3
ననవినుం కనవినుం నంబా ఉన్నై
మనవినుం వఴిబడల్ మఱవేన్ అమ్మాన్;
పునల్, విరి నఱుం-కొండ్రైప్ పోదు అణింద
కనల్-ఎరి అనల్-పుల్గు కైయవనే ;

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 4
తుమ్మలొడు అరుం-తుయర్ తోండ్రిడినుం
అం-మలర్ అడి అలాల్ అరట్రాదు ఎన్ నా;
కైం-మల్గు వరి-సిలైక్ కణై ఒండ్రినాల్
ముం-మదిళ్ ఎరి-ఎఴ మునిందవనే

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 5
కైయదు వీఴినుం కఴివుఱినుం
సెయ్-కఴల్ అడి అలాల్ సిందై సెయ్యేన్;
కొయ్-అణి నఱు-మలర్ కులాయ సెన్ని
మై-అణి మిడఱు-ఉడై మఱైయవనే

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 6
వెందుయర్ తోండ్రి ఓర్ వెరువుఱినుం
ఎందాయ్ ఉన్ అడి అలాల్ ఏత్తాదు ఎన్ నా;
ఐందలై అరవు కొండు అరైక్కు అసైత్త,
సంద-వెణ్-పొడి అణి సంగరనే ;

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 7
వెప్పొడు విరవి ఓర్ వినై వరినుం
అప్పా ఉన్ అడి అలాల్ అరట్రాదు ఎన్ నా;
ఒప్పు-ఉడై ఒరువనై ఉరు-అఴియ
అప్పడి అఴల్-ఎఴ విఴిత్తవనే ;

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 8
పేర్-ఇడర్ పెరుగి ఓర్ పిణి వరినుం
సీర్-ఉడైక్ కఴల్ అలాల్ సిందై-సెయ్యేన్;
ఏర్-ఉడై మణి-ముడి ఇరావణనై
ఆర్-ఇడర్ పడ వరై అడర్త్తవనే ;

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 9
ఉణ్ణినుం పసిప్పినుం ఉఱంగినుం నిన్
ఒణ్-మలర్ అడి అలాల్ ఉరైయాదు ఎన్ నా;
కణ్ణనుం కడి-కమఴ్ తామరైమేల్
అణ్ణలుం అళప్పు-అరిదు ఆయవనే ;

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 10
పిత్తొడు మయంగి ఓర్ పిణి వరినుం
అత్తా ఉన్ అడి అలాల్ అరట్రాదు ఎన్ నా;
పుత్తరుం సమణరుం పుఱన్-ఉరైక్కప్
పత్తర్గట్కు అరుళ్-సెయ్దు పయిండ్రవనే

ఇదువో ఎమై ఆళుమాఱు? ఈవదు ఒండ్రు ఎమక్కు ఇల్లైయేల్,
అదువో ఉనదు ఇన్నరుళ్, ఆవడు-తుఱై అరనే?

పాడల్ ఎణ్ : 11
అలై-పునల్ ఆవడు తుఱై అమర్ంద
ఇలై-నునై వేఱ్పడై ఎం ఇఱైయై
నలం-మిగు ఞాన-సంబందన్ సొన్న
విలై-ఉడై అరుం-తమిఴ్ మాలై వల్లార్,

వినై ఆయిన నీంగిప్ పోయ్, విణ్ణవర్ వియన్-ఉలగం
నిలై ఆగ మున్ ఏఱువర్; నిలం-మిసై నిలై ఇలరే.

==================

No comments:

Post a Comment