Sunday, November 11, 2018

3.120 - திரு-ஆலவாய் - மங்கையர்க்கரசி - tiru-ālavāy - maṅgaiyarkkarasi

58) 3.120 - திரு-ஆலவாய் - மங்கையர்க்கரசி - tiru-ālavāy - maṅgaiyarkkarasi
சம்பந்தர் தேவாரம் - Sambandar thevaram
3.120 - திரு-ஆலவாய் - மங்கையர்க்கரசி
3.120 - tiru-ālavāy - maṅgaiyarkkarasi
Here are the links to verses and audio of this padhigam's discussion:
English translation – by V.M.Subramanya Ayyar: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_120.HTM
***
On YouTube:
Tamil discussion:

English discussion:
Part-1:
Part-2:
Part-3:
Part-4:

***
V. Subramanian
=====================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.120 – திருஆலவாய் ( பண் - புறநீர்மை )

Background: பதிக வரலாறு :
பாண்டிய நாட்டில் சமணம் பெருகியது. பாண்டிய மன்னனும் சமண சமயத்தைச் சார்ந்தான். நாட்டு மக்களும் சமணர்கள் ஆயினர். பாண்டிய மன்னன் மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் மாறாமல் சைவத்தில் இருந்தனர்;

அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கித் திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து புறப்பட்டு மதுரை சென்றார். அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கித் திருக்கொடுங்குன்றத்தைப் பணிந்து, மதுரையின் எல்லையை அடைந்தார்,

மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறையாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர், "மதுரையில் உள்ள திருஆலவாய்க் கோயில் எப்பக்கம் உள்ளது`" எனக் கேட்கக், குலச்சிறையார் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருஆலவாய்` என்றார். அது கேட்டு, மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் இவர்களது பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் பாடியபடி ஆலவாய்த் திருக்கோயிலைச் சம்பந்தர் சென்றடைந்தார்.

Additional notes: பதிகப் பாட்டுக் குறிப்பு :-
சம்பந்தர் இப்பதிகத்தில் - 1-3-5-7-9-ஆம் பாட்டுகளில் மங்கையர்க்கரசியாரையும் , 2-4-6-8-10-ஆம் பாட்டுகளில் குலச்சிறையாரையும், 11-ஆம் பாடலான திருக்கடைக்காப்பில் இருவரையும் பாராட்டி ஆலவாய் ஈசனைப் போற்றுகின்றார்.
----------
Pandya kingdom's minister Kulachchiraiyar welcomes Thirugnana Sambandar:
2553 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 655
அஞ்சலி குவித்த கரங்களுந் தலைமே லணைந்திடக் கடிதுசென் றணைவார்,
நஞ்சணி கண்டர் தந்திரு மகனா ருடன்வரு நற்றவக் கடலை
நெஞ்சினி னிறைந்த வார்வமுன் செல்லக் கண்டுநீ ணிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்குற வணைந்துமுன் பணிந்தார்.

2558 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 660
"இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி யெய்துதற் கரியபே றெய்தி
மங்கையர்க் கரசி யாரு'நம் முடைய வாழ்வெழுந் தருளிய' தென்றே
'யங்குநீ ரெதிர்சென் றடிபணிவீ 'ரென் றருள்செய்தா" ரெனத்தொழு தார்வம்
பொங்கிய களிப்பான் மீளவும் பணிந்து போற்றினார் புரவல னமைச்சர்.

Sambandar asks about location of Madurai temple:
2559 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 661
ஆங்ஙனம் ** போற்றி யடிபணிந் தவர்மே லளவிலா வருள்புரி கருணை
தாங்கிய மொழியாற் றகுவன விளம்பித் தலையளித் தருளுமப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலு முயர்தவத் தொண்டரை நோக்கி
"ஈங்குநம் பெருமான் றிருவால வாய்மற் றெம்மருங் கின" தென வினவ,
(** CKS நூலில் காணும் பாடபேதம்: ஆங்கனம்)

Kulachchiraiyar points to the gopuram of Madurai temple:
2560 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 662
அன்பரா யவர்முன் பணிந்தசீ ரடியா ரண்ணலா ரடியிணை வணங்கி
முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி "முருகலர் சோலைகள் சூழ்ந்து
மின்பொலி விசும்பை யளக்குநீள் கொடிசூழ் வியனெடுங் கோபுரந் தோன்றும்
என்பணி யணிவா ரினிதமர்ந் தருளும் திருவால வாயிது" வென்றார்.

Sambandar sings the 'mangaiyarkkarasi' padhigam and reaches the Madurai temple:
2561 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 663
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க் கரசியென் றெடுத்தே
யெண்டிசை பரவு மாலவா யாவ திதுவேயென் றிருவர்தம் பணியுங்
கொண்டமை சிறப்பித் தருளிநற் பதிகம் பாடினார் குவலயம் போற்ற.

2562 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 664
பாடிய பதிகம் பரவியே வந்து பண்புடை யடியவ ரோடுந்
தேடுமா லயனுக் கரியவர் மகிழ்ந்த திருவால வாய்மருங் கணைந்து
நீடுயர் செல்வக் கோபுர மிறைஞ்சி நிறைபெரு விருப்புடன் புக்கு
மாடுசூழ் வலங்கொண் டுடையவர் கோயின் மந்திரி யாருடன் புகுந்தார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.120 – திருஆலவாய் ( பண் - புறநீர்மை )
(எழுசீர் விருத்தம் - “விளம் மா விளம் மா விளம் விளம் மா” என்ற அமைப்பு )
பாடல் எண் : 1
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 2
வெற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ னுலகினி லியற்கையை யொழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற வாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 3
செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்றிரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை ** நிலவும்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.
(** பாடபேதம்: பாரிட)

பாடல் எண் : 4
கணங்களாய் வரினுந் தமியராய் வரினு மடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 5
செய்யதா மரைமே லன்னமே அனைய சேயிழை திருநுதற் செல்வி
பையரா வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசமங் குசமான் விரிகதிர் மழுவுடன் றரித்த
ஐயனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 6
நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 7
முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 8
நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 9
மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளா ரிருவர் கீழொடு மேலு மளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 10
தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோறு மின்புறு கின்ற குலச்சிறை கருதி நின்றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்க ணெறியிடை வாரா
அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே.

பாடல் எண் : 11
பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீ ராலவா யீசன் றிருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுண் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவ ரிமையோ ரேத்தவீற் றிருப்பவ ரினிதே.

Word separated version:

Pandya kingdom's minister Kulachchiraiyar welcomes Thirugnana Sambandar:
2553 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 655
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிது சென்று அணைவார்,
நஞ்சு அணி கண்டர்தம் திரு மகனாருடன் வரு நற்றவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் கண்டு நீள்-நிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு உற அணைந்து முன் பணிந்தார்.

2558 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 660
"இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க்கரசியாரும் ' நம்முடைய வாழ்வு எழுந்தருளியது' என்றே
'அங்கு நீர் எதிர் சென்று அடி பணிவீர் ' என்று அருள்-செய்தார்" எனத் தொழுது ஆர்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர்.

Sambandar asks about location of Madurai temple:
2559 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 661
ஆங்ஙனம் ** போற்றி அடி பணிந்தவர்மேல் அளவு இலா அருள்-புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித் தலையளித்து-அருளும் அப்-பொழுதில்
ஓங்கு எயில் புடை-சூழ் மதுரை தோன்றுதலும் உயர்-தவத்-தொண்டரை நோக்கி
"ஈங்கு நம் பெருமான் திரு-ஆலவாய் மற்று எம்-மருங்கினது" என வினவ,
(** Variant reading in CKS book: ஆங்கனம்)

Kulachchiraiyar points to the gopuram of Madurai temple:
2560 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 662
அன்பராய் அவர்முன் பணிந்த சீர்-அடியார் அண்ணலார் அடியிணை வணங்கி
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி "முருகு-அலர் சோலைகள் சூழ்ந்து
மின்-பொலி விசும்பை அளக்கும் நீள்-கொடி சூழ் வியன்-நெடும் கோபுரம் தோன்றும்
என்பு-அணி அணிவார் இனிது அமர்ந்தருளும் திரு-ஆலவாய் இது" என்றார்.

Sambandar sings the 'mangaiyarkkarasi' padhigam and reaches the Madurai temple:
2561 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 663
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணை-மலர்க்-கரம் குவித்தருளி
மண்டு பேர்-அன்பால் மண்மிசைப் பணிந்து "மங்கையர்க்கு-அரசி" என்று எடுத்தே
எண்-திசை பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்தம் பணியும்
கொண்டமை சிறப்பித்தருளி நற்-பதிகம் பாடினார் குவலயம் போற்ற.

2562 - பெரிய புராணம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் - 664
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு-உடை அடியவரோடும்
தேடு மால்-அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு-ஆலவாய் மருங்கு அணைந்து
நீடு-உயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை-பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ்-வலங்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார்.

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.120 – திருஆலவாய் ( பண் - புறநீர்மை )
(எழுசீர் விருத்தம் - “விளம் மா விளம் மா விளம் விளம் மா” என்ற அமைப்பு )
பாடல் எண் : 1
மங்கையர்க்கு-அரசி, வளவர்-கோன் பாவை, வரி-வளைக் கைம் மட மானி,
பங்கயச் செல்வி, பாண்டி மாதேவி பணி-செய்து நாள்தொறும் பரவப்,
பொங்கு-அழல் உருவன், பூத-நாயகன், நால்-வேதமும் பொருள்களும் அருளி,
அங்கயற்-கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 2
வெற்றவே அடியார் அடி-மிசை வீழும் விருப்பினன், வெள்ளை-நீறு அணியும்
கொற்றவன் தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி-நின்று ஏத்தும்
ஒற்றை-வெள் விடையன், உம்பரார் தலைவன், உலகினில் இயற்கையை ஒழித்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 3
செந்துவர் வாயாள், சேல்-அன கண்ணாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள், பாண்டி மாதேவி பணி-செயப், பாரிடை ** நிலவும்
சந்தம்-ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண்-எருக்கம்மலர் வன்னி
அந்தி வான்-மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.
(** Variant reading : பாரிடம்)

பாடல் எண் : 4
கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும் கோபுரம் சூழ் மணிக்-கோயில்
மணம் கமழ் கொன்றை வாள்-அரா மதியம் வன்னி வண்-கூவிள மாலை
அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 5
செய்ய தாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திரு-நுதற் செல்வி
பை-அரா அல்குல் பாண்டி மாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த
வெய்ய-வேற் சூலம் பாசம் அங்குசம் மான் விரி-கதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 6
நலம்-இலராக நலம்-அது-உண்டாக நாடவர் நாடு-அறிகின்ற
குலம்-இலராகக் குலம்-அது-உண்டாகத் தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன் மூவிலை வேலன் கரி-உரி மூடிய கண்டன்
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 7
முத்தின் தாழ்-வடமும் சந்தனக் குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்கப்
பத்தி ஆர்கின்ற பாண்டி மாதேவி பாங்கொடு பணி-செய நின்ற
சுத்தம்-ஆர் பளிங்கின் பெரு-மலையுடனே சுடர்-மரகதம் அடுத்தாற்போல்
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 8
நா-அணங்கு இயல்பு ஆம் அஞ்செழுத்து ஓதி நல்லராய் நல்-இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுதெழு குலச்சிறை போற்ற
-வணங்கு இயல்பு-ஆம் இராவணன் திண்-தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 9
மண்-எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணி-முடிச் சோழன்-தன் மகள்-ஆம்
பண்ணின்-நேர் மொழியாள் பாண்டி மாதேவி பாங்கினால் பணி-செய்து பரவ
விண்-உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம்-வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 10
தொண்டராய் உள்ளார் திசை-திசை தோறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக்
கண்டு நாள்தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்தக்
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா
அண்ட-நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

பாடல் எண் : 11
பன்னலம் புணரும் பாண்டி மாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும்
அந்நலம் பெறு-சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு-அவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமிழ் இவை-கொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே.
===================== ===============
Word separated version:

Pandya kingdom's minister Kulachchiraiyar welcomes Thirugnana Sambandar:
2553 - periya purāṇam - tiruñāṉa sambanda suvāmigaḷ purāṇam - 655
añjali kuvitta karaṅgaḷum talaimēl aṇaindiḍak kaḍidu seṇḍru aṇaivār,
nañju aṇi kaṇḍardam tiru magaṉāruḍaṉ varu naṭravak kaḍalai
neñjiṉil niṟainda ārvam muṉ sellak kaṇḍu nīḷ-nilattiḍait tāḻndu
pañjavar perumāṉ mandirit talaivar pāṅgu uṟa aṇaindu muṉ paṇindār.

2558 - periya purāṇam - tiruñāṉa sambanda suvāmigaḷ purāṇam - 660
"iṅgu eḻundaruḷum perumai kēṭṭaruḷi eydudaṟku ariya pēṟu eydi
maṅgaiyarkkarasiyārum ' nammuḍaiya vāḻvu eḻundaruḷiyadu' eṇḍrē
'aṅgu nīr edir seṇḍru aḍi paṇivīr' eṇḍru aruḷ-seydār" eṉat toḻudu ārvam
poṅgiya kaḷippāl mīḷavum paṇindu pōṭriṉār puravalaṉ amaiccar.

Sambandar asks about location of Madurai temple:
2559 - periya purāṇam - tiruñāṉa sambanda suvāmigaḷ purāṇam - 661
āṅṅaṉam ** pōṭri aḍi paṇindavarmēl aḷavu ilā aruḷ-puri karuṇai
tāṅgiya moḻiyāl taguvaṉa viḷambit talaiyaḷittu-aruḷum ap-poḻudil
ōṅgu eyil puḍai-sūḻ madurai tōṇḍrudalum uyar-tavat-toṇḍarai nōkki
"īṅgu nam perumāṉ tiru-ālavāy maṭru em-maruṅgiṉadu" eṉa viṉava,
(** Variant reading in CKS book: āṅgaṉam)

Kulachchiraiyar points to the gopuram of Madurai temple:
2560 - periya purāṇam - tiruñāṉa sambanda suvāmigaḷ purāṇam - 662
aṉbarāy avarmuṉ paṇinda sīr-aḍiyār aṇṇalār aḍiyiṇai vaṇaṅgi
muṉbu niṇḍru eḍutta kaigaḷāl kāṭṭi "murugu-alar sōlaigaḷ sūḻndu
miṉ-poli visumbai aḷakkum nīḷ-koḍi sūḻ viyaṉ-neḍum kōburam tōṇḍrum
eṉbu-aṇi aṇivār iṉidu amarndaruḷum tiru-ālavāy idu" eṇḍrār.

Sambandar sings the 'mangaiyarkkarasi' padhigam and reaches the Madurai temple:
2561 - periya purāṇam - tiruñāṉa sambanda suvāmigaḷ purāṇam - 663
toṇḍardām pōṭrik kāṭṭiḍak kaṇḍu tuṇai-malark-karam kuvittaruḷi
maṇḍu pēr-aṉbāl maṇmisaip paṇindu "maṅgaiyarkku-arasi" eṇḍru eḍuttē
eṇ-disai paravum ālavāy āvadu iduvē eṇḍru iruvardam paṇiyum
koṇḍamai siṟappittaruḷi naṟ-padigam pāḍiṉār kuvalayam pōṭra.

2562 - periya purāṇam - tiruñāṉa sambanda suvāmigaḷ purāṇam - 664
pāḍiya padigam paraviyē vandu paṇbu-uḍai aḍiyavarōḍum
tēḍu māl-ayaṉukku ariyavar magiḻnda tiru-ālavāy maruṅgu aṇaindu
nīḍu-uyar selvak kōburam iṟaiñji niṟai-peru viruppuḍaṉ pukku
māḍu sūḻ-valaṅgoṇḍu uḍaiyavar kōyil mandiriyāruḍaṉ pugundār.

sambandar tēvāram - padigam 3.120 – tiruālavāy ( paṇ - puṟanīrmai )
(eḻusīr viruttam - “viḷam mā viḷam mā viḷam viḷam mā” meter)
pāḍal eṇ : 1
maṅgaiyarkku-arasi, vaḷavar-kōṉ pāvai, vari-vaḷaik kaim maḍa māṉi,
paṅgayac celvi, pāṇḍi mādēvi paṇi-seydu nāḷdoṟum paravap,
poṅgu-aḻal uruvaṉ, būda-nāyagaṉ, nāl-vēdamum poruḷgaḷum aruḷi,
aṅgayaṟ-kaṇṇi taṉṉoḍum amarnda ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 2
veṭravē aḍiyār aḍi-misai vīḻum viruppiṉaṉ, veḷḷai-nīṟu aṇiyum
koṭravaṉ taṉakku mandiri āya kulacciṟai kulāvi-niṇḍru ēttum
oṭrai-veḷ viḍaiyaṉ, umbarār talaivaṉ, ulagiṉil iyaṟkaiyai oḻittiṭṭu
aṭravarkku aṭra sivaṉ uṟaigiṇḍra ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 3
senduvar vāyāḷ, sēl-aṉa kaṇṇāḷ, sivaṉ tirunīṭriṉai vaḷarkkum
pandaṇai viralāḷ, pāṇḍi mādēvi paṇi-seyap, pāriḍai ** nilavum
sandam-ār taraḷam pāmbu nīr mattam taṇ-erukkammalar vaṉṉi
andi vāṉ-madi sēr saḍaimuḍi aṇṇal ālavāy āvadum iduvē.
(** Variant reading : pāriḍam)

pāḍal eṇ : 4
gaṇaṅgaḷāy variṉum tamiyarāy variṉum aḍiyavar taṅgaḷaik kaṇḍāl
guṇaṅgoḍu paṇiyum kulacciṟai kulāvum kōburam sūḻ maṇik-kōyil
maṇam kamaḻ koṇḍrai vāḷ-arā madiyam vaṉṉi vaṇ-kūviḷa mālai
aṇaṅgu vīṭrirunda saḍaimuḍi aṇṇal ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 5
seyya tāmaraimēl aṉṉamē aṉaiya sēyiḻai tiru-nudaṟ celvi
pai-arā algul pāṇḍi mādēvi nāḷdoṟum paṇindu iṉidu ētta
veyya-vēṟ cūlam pāsam aṅgusam māṉ viri-kadir maḻuvuḍaṉ taritta
aiyaṉār umaiyōḍu iṉbuṟugiṇḍra ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 6
nalam-ilarāga nalam-adu-uṇḍāga nāḍavar nāḍu-aṟigiṇḍra
kulam-ilarāgak kulam-adu-uṇḍāgat tavam paṇi kulacciṟai paravum
kalai mali karattaṉ mūvilai vēlaṉ kari-uri mūḍiya kaṇḍaṉ
alai mali puṉal sēr saḍaimuḍi aṇṇal ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 7
muttiṉ tāḻ-vaḍamum sandaṉak kuḻambum nīṟum taṉ mārbiṉil muyaṅgap
patti ārgiṇḍra pāṇḍi mādēvi pāṅgoḍu paṇi-seya niṇḍra
suttam-ār paḷiṅgiṉ peru-malaiyuḍaṉē suḍar-maragadam aḍuttāṟpōl
attaṉār umaiyōḍu iṉbuṟugiṇḍra ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 8
nā-aṇaṅgu iyalbu ām añjeḻuttu ōdi nallarāy nal-iyalbu āgum
kōvaṇam būdi sādaṉam kaṇḍāl toḻudeḻu kulacciṟai pōṭra
ē-vaṇaṅgu iyalbu-ām irāvaṇaṉ tiṇ-tōḷ irubadum neridara ūṇḍri
āvaṇam koṇḍa saḍaimuḍi aṇṇal ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 9
maṇ-elām nigaḻa maṉṉaṉāy maṉṉum maṇi-muḍic cōḻaṉ-taṉ magaḷ-ām
paṇṇiṉ-nēr moḻiyāḷ pāṇḍi mādēvi pāṅgiṉāl paṇi-seydu parava
viṇ-uḷār iruvar kīḻoḍu mēlum aḷappu aridu ām-vagai niṇḍra
aṇṇalār umaiyōḍu iṉbuṟugiṇḍra ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 10
toṇḍarāy uḷḷār tisai-tisai dōṟum toḻudu taṉ guṇattiṉaik kulāvak
kaṇḍu nāḷdōṟum iṉbuṟugiṇḍra kulacciṟai karudi niṇḍru ēttak
kuṇḍarāy uḷḷār sākkiyar taṅgaḷ kuṟiyiṉ-kaṇ neṟiyiḍai vārā
aṇḍa-nāyagaṉ tāṉ amarndu vīṭrirunda ālavāy āvadum iduvē.

pāḍal eṇ : 11
paṉṉalam puṇarum pāṇḍi mādēvi kulacciṟai eṉum ivar paṇiyum
annalam peṟu-sīr ālavāy īsaṉ tiruvaḍi āṅgu-avai pōṭrik
kaṉṉalam periya kāḻiyuḷ ñāṉa sambandaṉ sendamiḻ ivai-koṇḍu
iṉṉalam pāḍa vallavar imaiyōr ētta vīṭriruppavar iṉidē.
================== ==========================
Word separated version:

Pandya kingdom's minister Kulachchiraiyar welcomes Thirugnana Sambandar:
२५५३ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द सुवामिगळ् पुराणम् - ६५५
अञ्जलि कुवित्त करङ्गळुम् तलैमेल् अणैन्दिडक् कडिदु सॆण्ड्रु अणैवार्,
नञ्जु अणि कण्डर्दम् तिरु मगऩारुडऩ् वरु नट्रवक् कडलै
नॆञ्जिऩिल् निऱैन्द आर्वम् मुऩ् सॆल्लक् कण्डु नीळ्-निलत्तिडैत् ताऴ्न्दु
पञ्जवर् पॆरुमाऩ् मन्दिरित् तलैवर् पाङ्गु उऱ अणैन्दु मुऩ् पणिन्दार्.

२५५८ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द सुवामिगळ् पुराणम् - ६६०
"इङ्गु ऎऴुन्दरुळुम् पॆरुमै केट्टरुळि ऎय्दुदऱ्कु अरिय पेऱु ऎय्दि
मङ्गैयर्क्करसियारुम् ' नम्मुडैय वाऴ्वु ऎऴुन्दरुळियदु ' ऎण्ड्रे
' अङ्गु नीर् ऎदिर् सॆण्ड्रु अडि पणिवीर् ' ऎण्ड्रु अरुळ्-सॆय्दार्" ऎऩत् तॊऴुदु आर्वम्
पॊङ्गिय कळिप्पाल् मीळवुम् पणिन्दु पोट्रिऩार् पुरवलऩ् अमैच्चर्.

Sambandar asks about location of Madurai temple:
२५५९ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द सुवामिगळ् पुराणम् - ६६१
आङ्ङऩम् ** पोट्रि अडि पणिन्दवर्मेल् अळवु इला अरुळ्-पुरि करुणै
ताङ्गिय मॊऴियाल् तगुवऩ विळम्बित् तलैयळित्तु-अरुळुम् अप्-पॊऴुदिल्
ओङ्गु ऎयिल् पुडै-सूऴ् मदुरै तोण्ड्रुदलुम् उयर्-तवत्-तॊण्डरै नोक्कि
"ईङ्गु नम् पॆरुमाऩ् तिरु-आलवाय् मट्रु ऎम्-मरुङ्गिऩदु" ऎऩ विऩव,
(** Variant reading in CKS book: आङ्गऩम्)

Kulachchiraiyar points to the gopuram of Madurai temple:
२५६० - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द सुवामिगळ् पुराणम् - ६६२
अऩ्बराय् अवर्मुऩ् पणिन्द सीर्-अडियार् अण्णलार् अडियिणै वणङ्गि
मुऩ्बु निण्ड्रु ऎडुत्त कैगळाल् काट्टि "मुरुगु-अलर् सोलैगळ् सूऴ्न्दु
मिऩ्-पॊलि विसुम्बै अळक्कुम् नीळ्-कॊडि सूऴ् वियऩ्-नॆडुम् गोबुरम् तोण्ड्रुम्
ऎऩ्बु-अणि अणिवार् इऩिदु अमर्न्दरुळुम् तिरु-आलवाय् इदु" ऎण्ड्रार्.

Sambandar sings the 'mangaiyarkkarasi' padhigam and reaches the Madurai temple:
२५६१ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द सुवामिगळ् पुराणम् - ६६३
तॊण्डर्दाम् पोट्रिक् काट्टिडक् कण्डु तुणै-मलर्क्-करम् कुवित्तरुळि
मण्डु पेर्-अऩ्बाल् मण्मिसैप् पणिन्दु "मङ्गैयर्क्कु-अरसि" ऎण्ड्रु ऎडुत्ते
ऎण्-दिसै परवुम् आलवाय् आवदु इदुवे ऎण्ड्रु इरुवर्दम् पणियुम्
कॊण्डमै सिऱप्पित्तरुळि नऱ्-पदिगम् पाडिऩार् कुवलयम् पोट्र.

२५६२ - पॆरिय पुराणम् - तिरुञाऩ सम्बन्द सुवामिगळ् पुराणम् - ६६४
पाडिय पदिगम् परविये वन्दु पण्बु-उडै अडियवरोडुम्
तेडु माल्-अयऩुक्कु अरियवर् मगिऴ्न्द तिरु-आलवाय् मरुङ्गु अणैन्दु
नीडु-उयर् सॆल्वक् कोबुरम् इऱैञ्जि निऱै-पॆरु विरुप्पुडऩ् पुक्कु
माडु सूऴ्-वलङ्गॊण्डु उडैयवर् कोयिल् मन्दिरियारुडऩ् पुगुन्दार्.

सम्बन्दर् तेवारम् - पदिगम् ३.१२० – तिरुआलवाय् ( पण् - पुऱनीर्मै )
(ऎऴुसीर् विरुत्तम् - “विळम् मा विळम् मा विळम् विळम् मा” meter )
पाडल् ऎण् :
मङ्गैयर्क्कु-अरसि, वळवर्-कोऩ् पावै, वरि-वळैक् कैम् मड माऩि,
पङ्गयच् चॆल्वि, पाण्डि मादेवि पणि-सॆय्दु नाळ्दॊऱुम् परवप्,
पॊङ्गु-अऴल् उरुवऩ्, बूद-नायगऩ्, नाल्-वेदमुम् पॊरुळ्गळुम् अरुळि,
अङ्गयऱ्-कण्णि तऩ्ऩॊडुम् अमर्न्द आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् :
वॆट्रवे अडियार् अडि-मिसै वीऴुम् विरुप्पिऩऩ्, वॆळ्ळै-नीऱु अणियुम्
कॊट्रवऩ् तऩक्कु मन्दिरि आय कुलच्चिऱै कुलावि-निण्ड्रु एत्तुम्
ऒट्रै-वॆळ् विडैयऩ्, उम्बरार् तलैवऩ्, उलगिऩिल् इयऱ्कैयै ऒऴित्तिट्टु
अट्रवर्क्कु अट्र सिवऩ् उऱैगिण्ड्र आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् :
सॆन्दुवर् वायाळ्, सेल्-अऩ कण्णाळ्, सिवऩ् तिरुनीट्रिऩै वळर्क्कुम्
पन्दणै विरलाळ्, पाण्डि मादेवि पणि-सॆयप्, पारिडै ** निलवुम्
सन्दम्-आर् तरळम् पाम्बु नीर् मत्तम् तण्-ऎरुक्कम्मलर् वऩ्ऩि
अन्दि वाऩ्-मदि सेर् सडैमुडि अण्णल् आलवाय् आवदुम् इदुवे.
(** Variant reading: पारिडम्)

पाडल् ऎण् :
गणङ्गळाय् वरिऩुम् तमियराय् वरिऩुम् अडियवर् तङ्गळैक् कण्डाल्
गुणङ्गॊडु पणियुम् कुलच्चिऱै कुलावुम् गोबुरम् सूऴ् मणिक्-कोयिल्
मणम् कमऴ् कॊण्ड्रै वाळ्-अरा मदियम् वऩ्ऩि वण्-कूविळ मालै
अणङ्गु वीट्रिरुन्द सडैमुडि अण्णल् आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् :
सॆय्य तामरैमेल् अऩ्ऩमे अऩैय सेयिऴै तिरु-नुदऱ् चॆल्वि
पै-अरा अल्गुल् पाण्डि मादेवि नाळ्दॊऱुम् पणिन्दु इऩिदु एत्त
वॆय्य-वेऱ् चूलम् पासम् अङ्गुसम् माऩ् विरि-कदिर् मऴुवुडऩ् तरित्त
ऐयऩार् उमैयोडु इऩ्बुऱुगिण्ड्र आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् :
नलम्-इलराग नलम्-अदु-उण्डाग नाडवर् नाडु-अऱिगिण्ड्र
कुलम्-इलरागक् कुलम्-अदु-उण्डागत् तवम् पणि कुलच्चिऱै परवुम्
कलै मलि करत्तऩ् मूविलै वेलऩ् करि-उरि मूडिय कण्डऩ्
अलै मलि पुऩल् सेर् सडैमुडि अण्णल् आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् :
मुत्तिऩ् ताऴ्-वडमुम् सन्दऩक् कुऴम्बुम् नीऱुम् तऩ् मार्बिऩिल् मुयङ्गप्
पत्ति आर्गिण्ड्र पाण्डि मादेवि पाङ्गॊडु पणि-सॆय निण्ड्र
सुत्तम्-आर् पळिङ्गिऩ् पॆरु-मलैयुडऩे सुडर्-मरगदम् अडुत्ताऱ्पोल्
अत्तऩार् उमैयोडु इऩ्बुऱुगिण्ड्र आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् :
ना-अणङ्गु इयल्बु आम् अञ्जॆऴुत्तु ओदि नल्लराय् नल्-इयल्बु आगुम्
कोवणम् बूदि सादऩम् कण्डाल् तॊऴुदॆऴु कुलच्चिऱै पोट्र
-वणङ्गु इयल्बु-आम् इरावणऩ् तिण्-तोळ् इरुबदुम् नॆरिदर ऊण्ड्रि
आवणम् कॊण्ड सडैमुडि अण्णल् आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् :
मण्-ऎलाम् निगऴ मऩ्ऩऩाय् मऩ्ऩुम् मणि-मुडिच् चोऴऩ्-तऩ् मगळ्-आम्
पण्णिऩ्-नेर् मॊऴियाळ् पाण्डि मादेवि पाङ्गिऩाल् पणि-सॆय्दु परव
विण्-उळार् इरुवर् कीऴॊडु मेलुम् अळप्पु अरिदु आम्-वगै निण्ड्र
अण्णलार् उमैयोडु इऩ्बुऱुगिण्ड्र आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् : १०
तॊण्डराय् उळ्ळार् तिसै-तिसै दोऱुम् तॊऴुदु तऩ् गुणत्तिऩैक् कुलावक्
कण्डु नाळ्दोऱुम् इऩ्बुऱुगिण्ड्र कुलच्चिऱै करुदि निण्ड्रु एत्तक्
कुण्डराय् उळ्ळार् साक्कियर् तङ्गळ् कुऱियिऩ्-कण् नॆऱियिडै वारा
अण्ड-नायगऩ् ताऩ् अमर्न्दु वीट्रिरुन्द आलवाय् आवदुम् इदुवे.

पाडल् ऎण् : ११
पऩ्ऩलम् पुणरुम् पाण्डि मादेवि कुलच्चिऱै ऎऩुम् इवर् पणियुम्
अन्नलम् पॆऱु-सीर् आलवाय् ईसऩ् तिरुवडि आङ्गु-अवै पोट्रिक्
कऩ्ऩलम् पॆरिय काऴियुळ् ञाऩ सम्बन्दऩ् सॆन्दमिऴ् इवै-कॊण्डु
इऩ्ऩलम् पाड वल्लवर् इमैयोर् एत्त वीट्रिरुप्पवर् इऩिदे.
================ ============
Word separated version:
Pandya kingdom's minister Kulachchiraiyar welcomes Thirugnana Sambandar:
2553 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద సువామిగళ్ పురాణం - 655
అంజలి కువిత్త కరంగళుం తలైమేల్ అణైందిడక్ కడిదు సెండ్రు అణైవార్,
నంజు అణి కండర్దం తిరు మగనారుడన్ వరు నట్రవక్ కడలై
నెంజినిల్ నిఱైంద ఆర్వం మున్ సెల్లక్ కండు నీళ్-నిలత్తిడైత్ తాఴ్ందు
పంజవర్ పెరుమాన్ మందిరిత్ తలైవర్ పాంగు ఉఱ అణైందు మున్ పణిందార్.

2558 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద సువామిగళ్ పురాణం - 660
"ఇంగు ఎఴుందరుళుం పెరుమై కేట్టరుళి ఎయ్దుదఱ్కు అరియ పేఱు ఎయ్ది
మంగైయర్క్కరసియారుం 'నమ్ముడైయ వాఴ్వు ఎఴుందరుళియదు' ఎండ్రే
'అంగు నీర్ ఎదిర్ సెండ్రు అడి పణివీర్' ఎండ్రు అరుళ్-సెయ్దార్" ఎనత్ తొఴుదు ఆర్వం
పొంగియ కళిప్పాల్ మీళవుం పణిందు పోట్రినార్ పురవలన్ అమైచ్చర్.

Sambandar asks about location of Madurai temple:
2559 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద సువామిగళ్ పురాణం - 661
ఆఙ్ఙనం ** పోట్రి అడి పణిందవర్మేల్ అళవు ఇలా అరుళ్-పురి కరుణై
తాంగియ మొఴియాల్ తగువన విళంబిత్ తలైయళిత్తు-అరుళుం అప్-పొఴుదిల్
ఓంగు ఎయిల్ పుడై-సూఴ్ మదురై తోండ్రుదలుం ఉయర్-తవత్-తొండరై నోక్కి
"ఈంగు నం పెరుమాన్ తిరు-ఆలవాయ్ మట్రు ఎం-మరుంగినదు" ఎన వినవ,
(** Variant reading in CKS book: ఆంగనం)

Kulachchiraiyar points to the gopuram of Madurai temple:
2560 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద సువామిగళ్ పురాణం - 662
అన్బరాయ్ అవర్మున్ పణింద సీర్-అడియార్ అణ్ణలార్ అడియిణై వణంగి
మున్బు నిండ్రు ఎడుత్త కైగళాల్ కాట్టి "మురుగు-అలర్ సోలైగళ్ సూఴ్ందు
మిన్-పొలి విసుంబై అళక్కుం నీళ్-కొడి సూఴ్ వియన్-నెడుం గోబురం తోండ్రుం
ఎన్బు-అణి అణివార్ ఇనిదు అమర్ందరుళుం తిరు-ఆలవాయ్ ఇదు" ఎండ్రార్.

Sambandar sings the 'mangaiyarkkarasi' padhigam and reaches the Madurai temple:
2561 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద సువామిగళ్ పురాణం - 663
తొండర్దాం పోట్రిక్ కాట్టిడక్ కండు తుణై-మలర్క్-కరం కువిత్తరుళి
మండు పేర్-అన్బాల్ మణ్మిసైప్ పణిందు "మంగైయర్క్కు-అరసి" ఎండ్రు ఎడుత్తే
ఎణ్-దిసై పరవుం ఆలవాయ్ ఆవదు ఇదువే ఎండ్రు ఇరువర్దం పణియుం
కొండమై సిఱప్పిత్తరుళి నఱ్-పదిగం పాడినార్ కువలయం పోట్ర.

2562 - పెరియ పురాణం - తిరుఞాన సంబంద సువామిగళ్ పురాణం - 664
పాడియ పదిగం పరవియే వందు పణ్బు-ఉడై అడియవరోడుం
తేడు మాల్-అయనుక్కు అరియవర్ మగిఴ్ంద తిరు-ఆలవాయ్ మరుంగు అణైందు
నీడు-ఉయర్ సెల్వక్ కోబురం ఇఱైంజి నిఱై-పెరు విరుప్పుడన్ పుక్కు
మాడు సూఴ్-వలంగొండు ఉడైయవర్ కోయిల్ మందిరియారుడన్ పుగుందార్.

సంబందర్ తేవారం - పదిగం 3.120 – తిరుఆలవాయ్ ( పణ్ - పుఱనీర్మై )
(ఎఴుసీర్ విరుత్తం - “విళం మా విళం మా విళం విళం మా” meter)
పాడల్ ఎణ్ : 1
మంగైయర్క్కు-అరసి, వళవర్-కోన్ పావై, వరి-వళైక్ కైం మడ మాని,
పంగయచ్ చెల్వి, పాండి మాదేవి పణి-సెయ్దు నాళ్దొఱుం పరవప్,
పొంగు-అఴల్ ఉరువన్, బూద-నాయగన్, నాల్-వేదముం పొరుళ్గళుం అరుళి,
అంగయఱ్-కణ్ణి తన్నొడుం అమర్ంద ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 2
వెట్రవే అడియార్ అడి-మిసై వీఴుం విరుప్పినన్, వెళ్ళై-నీఱు అణియుం
కొట్రవన్ తనక్కు మందిరి ఆయ కులచ్చిఱై కులావి-నిండ్రు ఏత్తుం
ఒట్రై-వెళ్ విడైయన్, ఉంబరార్ తలైవన్, ఉలగినిల్ ఇయఱ్కైయై ఒఴిత్తిట్టు
అట్రవర్క్కు అట్ర సివన్ ఉఱైగిండ్ర ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 3
సెందువర్ వాయాళ్, సేల్-అన కణ్ణాళ్, సివన్ తిరునీట్రినై వళర్క్కుం
పందణై విరలాళ్, పాండి మాదేవి పణి-సెయప్, పారిడై ** నిలవుం
సందం-ఆర్ తరళం పాంబు నీర్ మత్తం తణ్-ఎరుక్కమ్మలర్ వన్ని
అంది వాన్-మది సేర్ సడైముడి అణ్ణల్ ఆలవాయ్ ఆవదుం ఇదువే.
(** Variant reading: పారిడం)

పాడల్ ఎణ్ : 4
గణంగళాయ్ వరినుం తమియరాయ్ వరినుం అడియవర్ తంగళైక్ కండాల్
గుణంగొడు పణియుం కులచ్చిఱై కులావుం గోబురం సూఴ్ మణిక్-కోయిల్
మణం కమఴ్ కొండ్రై వాళ్-అరా మదియం వన్ని వణ్-కూవిళ మాలై
అణంగు వీట్రిరుంద సడైముడి అణ్ణల్ ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 5
సెయ్య తామరైమేల్ అన్నమే అనైయ సేయిఴై తిరు-నుదఱ్ చెల్వి
పై-అరా అల్గుల్ పాండి మాదేవి నాళ్దొఱుం పణిందు ఇనిదు ఏత్త
వెయ్య-వేఱ్ చూలం పాసం అంగుసం మాన్ విరి-కదిర్ మఴువుడన్ తరిత్త
ఐయనార్ ఉమైయోడు ఇన్బుఱుగిండ్ర ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 6
నలం-ఇలరాగ నలం-అదు-ఉండాగ నాడవర్ నాడు-అఱిగిండ్ర
కులం-ఇలరాగక్ కులం-అదు-ఉండాగత్ తవం పణి కులచ్చిఱై పరవుం
కలై మలి కరత్తన్ మూవిలై వేలన్ కరి-ఉరి మూడియ కండన్
అలై మలి పునల్ సేర్ సడైముడి అణ్ణల్ ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 7
ముత్తిన్ తాఴ్-వడముం సందనక్ కుఴంబుం నీఱుం తన్ మార్బినిల్ ముయంగప్
పత్తి ఆర్గిండ్ర పాండి మాదేవి పాంగొడు పణి-సెయ నిండ్ర
సుత్తం-ఆర్ పళింగిన్ పెరు-మలైయుడనే సుడర్-మరగదం అడుత్తాఱ్పోల్
అత్తనార్ ఉమైయోడు ఇన్బుఱుగిండ్ర ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 8
నా-అణంగు ఇయల్బు ఆం అంజెఴుత్తు ఓది నల్లరాయ్ నల్-ఇయల్బు ఆగుం
కోవణం బూది సాదనం కండాల్ తొఴుదెఴు కులచ్చిఱై పోట్ర
-వణంగు ఇయల్బు-ఆం ఇరావణన్ తిణ్-తోళ్ ఇరుబదుం నెరిదర ఊండ్రి
ఆవణం కొండ సడైముడి అణ్ణల్ ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 9
మణ్-ఎలాం నిగఴ మన్ననాయ్ మన్నుం మణి-ముడిచ్ చోఴన్-తన్ మగళ్-ఆం
పణ్ణిన్-నేర్ మొఴియాళ్ పాండి మాదేవి పాంగినాల్ పణి-సెయ్దు పరవ
విణ్-ఉళార్ ఇరువర్ కీఴొడు మేలుం అళప్పు అరిదు ఆం-వగై నిండ్ర
అణ్ణలార్ ఉమైయోడు ఇన్బుఱుగిండ్ర ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 10
తొండరాయ్ ఉళ్ళార్ తిసై-తిసై తోఱుం తొఴుదు తన్ కుణత్తినైక్ కులావక్
కండు నాళ్దోఱుం ఇన్బుఱుగిండ్ర కులచ్చిఱై కరుది నిండ్రు ఏత్తక్
కుండరాయ్ ఉళ్ళార్ సాక్కియర్ తంగళ్ కుఱియిన్-కణ్ నెఱియిడై వారా
అండ-నాయగన్ తాన్ అమర్ందు వీట్రిరుంద ఆలవాయ్ ఆవదుం ఇదువే.

పాడల్ ఎణ్ : 11
పన్నలం పుణరుం పాండి మాదేవి కులచ్చిఱై ఎనుం ఇవర్ పణియుం
అన్నలం పెఱు-సీర్ ఆలవాయ్ ఈసన్ తిరువడి ఆంగు-అవై పోట్రిక్
కన్నలం పెరియ కాఴియుళ్ ఞాన సంబందన్ సెందమిఴ్ ఇవై-కొండు
ఇన్నలం పాడ వల్లవర్ ఇమైయోర్ ఏత్త వీట్రిరుప్పవర్ ఇనిదే.
================ ============

No comments:

Post a Comment