Saturday, April 18, 2020

7.28 – கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē


72) 7.28 – கடவூர் வீரட்டம் பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē

சுந்தரர் தேவாரம் பதிகம் 7.28 – கடவூர் வீரட்டம் பொடியார் மேனியனே
sundarar tēvāram - padigam 7.28 – kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

***
On YouTube:

Tamil discussion:

English discussion:
***

V. Subramanian
=======================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

சுந்தரர் தேவாரம் பதிகம் 7.28 – கடவூர் வீரட்டம் - (பண் நட்டராகம்)
("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
பாடல் எண் 1
பொடியார் மேனியனே புரி நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள ரங்கையின் மங்கையொடும் *
கடியார் கொன்றையனே கட வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடபேதம்: 'வளர் கங்கையின்'

பாடல் எண் 2
பிறையா ருஞ்சடையாய் பிர மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் 3
அன்றா லின்னிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத் தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா கட வூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் 4
போரா ருங்கரியின் னுரி போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டானத்
தாரா வென்னமுதே எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் 5
மையார் கண்டத்தினாய் மத மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந் தாய்இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் 6
மண்ணீர் தீவெளிகால் வரு பூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிற வாவுரு வானவனே
கண்ணா ருண்மணியே கட வூர்தனுள் வீரட்டத்தெம் *
அண்ணா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடபேதம்: 'கண்ணாரும் மணியே'

பாடல் எண் 7
எரியார் புன்சடைமேல் இள நாக மணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு வெண்டலை கொண்டவனே
கரியா ரீருரியாய் கட வூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் 8
வேறா உன்னடியேன் விளங் குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவ னேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் 9
அயனோ டன்றரியும் மடி யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக் கார்துணை நீயலதே.

பாடல் எண் 10
காரா ரும்பொழில்சூழ் கட வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித் தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர லோகத் திருப்பாரே.

==================
Word separated version:

சுந்தரர் தேவாரம் பதிகம் 7.28 – கடவூர் வீரட்டம் - (பண் நட்டராகம்)
("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
பாடல் எண் 1
பொடி ஆர் மேனியனேபுரி-நூல் ஒரு பால் பொருந்த,
வடி ஆர் மூவிலை-வேல் வளர் அங்கையில் மங்கையொடும் *
கடி ஆர் கொன்றையனேகடவூர்தனுள் வீரட்டத்து எம்
அடிகேள் என் அமுதேஎனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடபேதம்: 'வளர் கங்கையின்'

பாடல் எண் 2
பிறை ஆரும் சடையாய்பிரமன் தலையிற் பலி-கொள்
மறை ஆர் வானவனேமறையின் பொருள் ஆனவனே;
கறை ஆரும் மிடற்றாய்கடவூர்தனுள் வீரட்டத்து எம்
இறைவா என் அமுதேஎனக்கு ஆர் துணை நீ அலதே?

பாடல் எண் 3
அன்று ஆலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கு அருள்-புரிந்து,
கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்குமான்
கன்று ஆரும் கரவாகடவூர்த் திரு-வீரட்டத்துள்
என் தாதைபெருமான்எனக்கு ஆர் துணை நீ அலதே?

பாடல் எண் 4
போர் ஆரும் கரியின் உரி போர்த்துப் பொன்மேனியின்மேல்,
வார் ஆரும் முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே;
கார் ஆரும் மிடற்றாய்கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதேஎனக்கு ஆர் துணை நீ அலதே?

பாடல் எண் 5
மை ஆர் கண்டத்தினாய்மத-மா உரி போர்த்தவனே;
பொய்யாது என் உயிருள் புகுந்தாய்இன்னம் போந்து அறியாய்;
கை ஆர் ஆடு-அரவாகடவூர்தனுள் வீரட்டத்து எம்
ஐயாஎன் அமுதேஎனக்கு ஆர் துணை நீ அலதே?

பாடல் எண் 6
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகிமற்றும்
பெண்ணோடு ஆண் அலி ஆய்ப்பிறவா உரு ஆனவனே;
கண் ஆர் உள் மணியேகடவூர்தனுள் வீரட்டத்து எம் *
அண்ணாஎன் அமுதேஎனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடபேதம்: 'கண் ஆரும் மணியே'

பாடல் எண் 7
எரி ஆர் புன்-சடைமேல் இள நாகம் அணிந்தவனே;
நரி ஆரும் சுடலை நகு வெண்-தலை கொண்டவனே;
கரி ஆர் ஈர்-உரியாய்கடவூர்தனுள் வீரட்டத்து எம்
அரியாய்என் அமுதேஎனக்கு ஆர் துணை நீ அலதே?

பாடல் எண் 8
வேறா உன் அடியேன்விளங்கும் குழைக் காது உடையாய்,
தேறேன் உன்னை அல்லால்சிவனேஎன் செழுஞ்சுடரே;
காறார் வெண்-மருப்பாகடவூர்த் திரு வீரட்டத்துள்,
ஆறு ஆர் செஞ்சடையாய்எனக்கு ஆர் துணை நீ அலதே?

பாடல் எண் 9
அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பு அரிய
பயனேஎம் பரனேபரம் ஆய பரஞ்சுடரே;
கயம் ஆரும் சடையாய்கடவூர்த் திரு வீரட்டத்துள்
அயனேஎன் அமுதேஎனக்கு ஆர் துணை நீ அலதே?

பாடல் எண் 10
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்,
ஏர் ஆரும் இறையைத் துணையா எழில் நாவலர்-கோன்,
ஆரூரன் அடியான்அடித்-தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே.
===================== ===============
Word separated version:
Note - strong (trill) ‘ra’ ;  - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

sundarar tēvāram - padigam 7.28 – kaḍavūr vīraṭṭam - (paṇ - naṭṭarāgam)
("tānā tānadanā tana tānana tānadanā" - Rhythm)
pāḍal eṇ : 1
poḍi ār mēniyanē; puri-nūl oru pāl porunda,
vaḍi ār mūvilai-vēl vaḷar aṅgaiyil maṅgaiyoḍum *
kaḍi ār koṇḍraiyanē; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
aḍigēḷ en amudē; enakku ār tuṇai nī aladē?
* variant reading: 'vaḷar gaṅgaiyin'

pāḍal eṇ : 2
piṟai ārum saḍaiyāy; piraman talaiyiṟ pali-koḷ
maṟai ār vānavanē; maṟaiyin poruḷ ānavanē;
kaṟai ārum miḍaṭrāy; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
iṟaivā en amudē; enakku ār tuṇai nī aladē?

pāḍal eṇ : 3
aṇḍru ālin niḻaṟkīḻ aṟam nālvarkku aruḷ-purindu,
koṇḍrāy kālan uyir koḍuttāy maṟaiyōnukku; mān
kaṇḍru ārum karavā; kaḍavūrt tiru-vīraṭṭattuḷ
en tādai; perumān; enakku ār tuṇai nī aladē?

pāḍal eṇ : 4
pōr ārum kariyin uri pōrttup ponmēniyinmēl,
vār ārum mulaiyāḷ oru pāgam magiḻndavanē;
kār ārum miḍaṭrāy; kaḍavūrdanuḷ vīraṭṭānattu
ārā en amudē; enakku ār tuṇai nī aladē?

pāḍal eṇ : 5
mai ār kaṇḍattināy; mada-mā uri pōrttavanē;
poyyādu en uyiruḷ pugundāy; innam pōndu aṟiyāy;
kai ār āḍu-aravā; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
aiyā; en amudē; enakku ār tuṇai nī aladē?

pāḍal eṇ : 6
maṇ nīr tī veḷi kāl varu pūdaṅgaḷ āgi, maṭrum
peṇṇōḍu āṇ ali āyp, piṟavā uru ānavanē;
kaṇ ār uḷ maṇiyē; kaḍavūrdanuḷ vīraṭṭattu em *
aṇṇā; en amudē; enakku ār tuṇai nī aladē?
* variant reading: 'kaṇ ārum maṇiyē'

pāḍal eṇ : 7
eri ār pun-saḍaimēl iḷa nāgam aṇindavanē;
nari ārum suḍalai nagu veṇ-talai koṇḍavanē;
kari ār īr-uriyāy; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
ariyāy; en amudē; enakku ār tuṇai nī aladē?

pāḍal eṇ : 8
vēṟā un aḍiyēn, viḷaṅgum kuḻaik kādu uḍaiyāy,
tēṟēn unnai allāl, sivanē; en seḻuñjuḍarē;
kāṟār veṇ-maruppā; kaḍavūrt tiru vīraṭṭattuḷ,
āṟu ār señjaḍaiyāy; enakku ār tuṇai nī aladē?

pāḍal eṇ : 9
ayanōḍu aṇḍru ariyum aḍiyum muḍi kāṇbu ariya
payanē; em paranē; param āya parañjuḍarē;
kayam ārum saḍaiyāy; kaḍavūrt tiru vīraṭṭattuḷ
ayanē; en amudē; enakku ār tuṇai nī aladē?

pāḍal eṇ : 10
kār ārum poḻil sūḻ kaḍavūrt tiru vīraṭṭattuḷ,
ēr ārum iṟaiyait tuṇaiyā eḻil nāvalar-kōn,
ārūran aḍiyān, aḍit-toṇḍan uraitta tamiḻ
pārōr ētta vallār paralōgattu iruppārē.
================== ==========================
Word separated version:
Note = short ‘e’;  = short ‘o’;  = strong (trill) ‘ra’ -  ;  = ‘ழ’  - retroflex letter in Tamil / Malayalam; )

सुन्दरर् तेवारम् पदिगम् 7.28 – कडवूर् वीरट्टम् - (पण् नट्टरागम्)
("ताना तानदना तन तानन तानदना" - Rhythm)
पाडल् ऎण् : 1
पॊडि आर् मेनियनेपुरि-नूल् ऒरु पाल् पॊरुन्द,
वडि आर् मूविलै-वेल् वळर् अङ्गैयिल् मङ्गैयॊडुम् *
कडि आर् कॊण्ड्रैयनेकडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
अडिगेळ् ऎन् अमुदेऎनक्कु आर् तुणै नी अलदे?
* variant reading: 'वळर् गङ्गैयिन्'

पाडल् ऎण् : 2
पिऱै आरुम् सडैयाय्पिरमन् तलैयिऱ्‌ पलि-कॊळ्
मऱै आर् वानवनेमऱैयिन् पॊरुळ् आनवने;
कऱै आरुम् मिडट्राय्कडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
इऱैवा ऎन् अमुदेऎनक्कु आर् तुणै नी अलदे?

पाडल् ऎण् : 3
अण्ड्रु आलिन् निऴऱ्‌कीऴ् अऱम् नाल्वर्क्कु अरुळ्-पुरिन्दु,
कॊण्ड्राय् कालन् उयिर् कॊडुत्ताय् मऱैयोनुक्कुमान्
कण्ड्रु आरुम् करवाकडवूर्त् तिरु-वीरट्टत्तुळ्
ऎन् तादैपॆरुमान्ऎनक्कु आर् तुणै नी अलदे?

पाडल् ऎण् : 4
पोर् आरुम् करियिन् उरि पोर्त्तुप् पॊन्मेनियिन्मेल्,
वार् आरुम् मुलैयाळ् ऒरु पागम् मगिऴ्न्दवने;
कार् आरुम् मिडट्राय्कडवूर्दनुळ् वीरट्टानत्तु
आरा ऎन् अमुदेऎनक्कु आर् तुणै नी अलदे?

पाडल् ऎण् : 5
मै आर् कण्डत्तिनाय्मद-मा उरि पोर्त्तवने;
पॊय्यादु ऎन् उयिरुळ् पुगुन्दाय्इन्नम् पोन्दु अऱियाय्;
कै आर् आडु-अरवाकडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
ऐयाऎन् अमुदेऎनक्कु आर् तुणै नी अलदे?

पाडल् ऎण् : 6
मण् नीर् ती वॆळि काल् वरु पूदङ्गळ् आगिमट्रुम्
पॆण्णोडु आण् अलि आय्प्पिऱवा उरु आनवने;
कण् आर् उळ् मणियेकडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम् *
अण्णाऎन् अमुदेऎनक्कु आर् तुणै नी अलदे?
* variant reading: 'कण् आरुम् मणिये'

पाडल् ऎण् : 7
ऎरि आर् पुन्-सडैमेल् इळ नागम् अणिन्दवने;
नरि आरुम् सुडलै नगु वॆण्-तलै कॊण्डवने;
करि आर् ईर्-उरियाय्कडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
अरियाय्ऎन् अमुदेऎनक्कु आर् तुणै नी अलदे?

पाडल् ऎण् : 8
वेऱा उन् अडियेन्विळङ्गुम् कुऴैक् कादु उडैयाय्,
तेऱेन् उन्नै अल्लाल्सिवनेऎन् सॆऴुञ्जुडरे;
काऱार् वॆण्-मरुप्पाकडवूर्त् तिरु वीरट्टत्तुळ्,
आऱु आर् सॆञ्जडैयाय्ऎनक्कु आर् तुणै नी अलदे?

पाडल् ऎण् : 9
अयनोडु अण्ड्रु अरियुम् अडियुम् मुडि काण्बु अरिय
पयनेऎम् परनेपरम् आय परञ्जुडरे;
कयम् आरुम् सडैयाय्कडवूर्त् तिरु वीरट्टत्तुळ्
अयनेऎन् अमुदेऎनक्कु आर् तुणै नी अलदे?

पाडल् ऎण् : 10
कार् आरुम् पॊऴिल् सूऴ् कडवूर्त् तिरु वीरट्टत्तुळ्,
एर् आरुम् इऱैयैत् तुणैया ऎऴिल् नावलर्-कोन्,
आरूरन् अडियान्अडित्-तॊण्डन् उरैत्त तमिऴ्
पारोर् एत्त वल्लार् परलोगत्तु इरुप्पारे.
================ ============
Word separated version:
Note = strong (trill) ‘ra’   = ‘ழ’  - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

సుందరర్ తేవారం పదిగం 7.28 – కడవూర్ వీరట్టం - (పణ్ నట్టరాగం)
("తానా తానదనా తన తానన తానదనా" - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
పొడి ఆర్ మేనియనేపురి-నూల్ ఒరు పాల్ పొరుంద,
వడి ఆర్ మూవిలై-వేల్ వళర్ అంగైయిల్ మంగైయొడుం *
కడి ఆర్ కొండ్రైయనేకడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
అడిగేళ్ ఎన్ అముదేఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
* variant reading: 'వళర్ గంగైయిన్'

పాడల్ ఎణ్ : 2
పిఱై ఆరుం సడైయాయ్పిరమన్ తలైయిఱ్ పలి-కొళ్
మఱై ఆర్ వానవనేమఱైయిన్ పొరుళ్ ఆనవనే;
కఱై ఆరుం మిడట్రాయ్కడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
ఇఱైవా ఎన్ అముదేఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?

పాడల్ ఎణ్ : 3
అండ్రు ఆలిన్ నిఴఱ్కీఴ్ అఱం నాల్వర్క్కు అరుళ్-పురిందు,
కొండ్రాయ్ కాలన్ ఉయిర్ కొడుత్తాయ్ మఱైయోనుక్కుమాన్
కండ్రు ఆరుం కరవాకడవూర్త్ తిరు-వీరట్టత్తుళ్
ఎన్ తాదైపెరుమాన్ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?

పాడల్ ఎణ్ : 4
పోర్ ఆరుం కరియిన్ ఉరి పోర్త్తుప్ పొన్మేనియిన్మేల్,
వార్ ఆరుం ములైయాళ్ ఒరు పాగం మగిఴ్న్దవనే;
కార్ ఆరుం మిడట్రాయ్కడవూర్దనుళ్ వీరట్టానత్తు
ఆరా ఎన్ అముదేఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?

పాడల్ ఎణ్ : 5
మై ఆర్ కండత్తినాయ్మద-మా ఉరి పోర్త్తవనే;
పొయ్యాదు ఎన్ ఉయిరుళ్ పుగుందాయ్ఇన్నం పోందు అఱియాయ్;
కై ఆర్ ఆడు-అరవాకడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
ఐయాఎన్ అముదేఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?

పాడల్ ఎణ్ : 6
మణ్ నీర్ తీ వెళి కాల్ వరు పూదంగళ్ ఆగిమట్రుం
పెణ్ణోడు ఆణ్ అలి ఆయ్ప్పిఱవా ఉరు ఆనవనే;
కణ్ ఆర్ ఉళ్ మణియేకడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం *
అణ్ణాఎన్ అముదేఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
* variant reading: 'కణ్ ఆరుం మణియే'

పాడల్ ఎణ్ : 7
ఎరి ఆర్ పున్-సడైమేల్ ఇళ నాగం అణిందవనే;
నరి ఆరుం సుడలై నగు వెణ్-తలై కొండవనే;
కరి ఆర్ ఈర్-ఉరియాయ్కడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
అరియాయ్ఎన్ అముదేఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?

పాడల్ ఎణ్ : 8
వేఱా ఉన్ అడియేన్విళంగుం కుఴైక్ కాదు ఉడైయాయ్,
తేఱేన్ ఉన్నై అల్లాల్సివనేఎన్ సెఴుంజుడరే;
కాఱార్ వెణ్-మరుప్పాకడవూర్త్ తిరు వీరట్టత్తుళ్,
ఆఱు ఆర్ సెంజడైయాయ్ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?

పాడల్ ఎణ్ : 9
అయనోడు అండ్రు అరియుం అడియుం ముడి కాణ్బు అరియ
పయనేఎం పరనేపరం ఆయ పరంజుడరే;
కయం ఆరుం సడైయాయ్కడవూర్త్ తిరు వీరట్టత్తుళ్
అయనేఎన్ అముదేఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?

పాడల్ ఎణ్ : 10
కార్ ఆరుం పొఴిల్ సూఴ్ కడవూర్త్ తిరు వీరట్టత్తుళ్,
ఏర్ ఆరుం ఇఱైయైత్ తుణైయా ఎఴిల్ నావలర్-కోన్,
ఆరూరన్ అడియాన్అడిత్-తొండన్ ఉరైత్త తమిఴ్
పారోర్ ఏత్త వల్లార్ పరలోగత్తు ఇరుప్పారే.

================ ============