72) 7.28 – கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே - kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.28 – கடவூர் வீரட்டம் - பொடியார் மேனியனே
sundarar tēvāram - padigam 7.28 – kaḍavūr vīraṭṭam - poḍiyār mēniyanē
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
***
On YouTube:
Tamil discussion:
English discussion:
Part-1: https://youtu.be/-sr9L5I7tA0
Part-2:
https://youtu.be/wJ7DJ57dybI
Part-3:
https://youtu.be/ZR5MEDOMqmU
***
V. Subramanian
=======================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.28 – கடவூர் வீரட்டம் - (பண் - நட்டராகம்)
("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
பொடியார் மேனியனே புரி நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள ரங்கையின் மங்கையொடும் *
கடியார் கொன்றையனே கட வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
* பாடபேதம்: 'வளர் கங்கையின்'
பாடல் எண் : 2
பிறையா ருஞ்சடையாய் பிர மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடல் எண் : 3
அன்றா லின்னிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத் தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா கட வூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக் கார்துணை நீயலதே.
பாடல் எண் : 4
போரா ருங்கரியின் னுரி போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட வூர்தனுள் வீரட்டானத்
தாரா வென்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடல் எண் : 5
மையார் கண்டத்தினாய் மத மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந் தாய்இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடல் எண் : 6
மண்ணீர் தீவெளிகால் வரு பூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிற வாவுரு வானவனே
கண்ணா ருண்மணியே கட வூர்தனுள் வீரட்டத்தெம் *
அண்ணா என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
* பாடபேதம்: 'கண்ணாரும் மணியே'
பாடல் எண் : 7
எரியார் புன்சடைமேல் இள நாக மணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு வெண்டலை கொண்டவனே
கரியா ரீருரியாய் கட வூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடல் எண் : 8
வேறா உன்னடியேன் விளங் குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவ னேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக் கார்துணை நீயலதே.
பாடல் எண் : 9
அயனோ டன்றரியும் மடி யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக் கார்துணை நீயலதே.
பாடல் எண் : 10
காரா ரும்பொழில்சூழ் கட வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித் தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர லோகத் திருப்பாரே.
==================
Word separated version:
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.28 – கடவூர் வீரட்டம் - (பண் - நட்டராகம்)
("தானா தானதனா தன தானன தானதனா" - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
பொடி ஆர் மேனியனே; புரி-நூல் ஒரு பால் பொருந்த,
வடி ஆர் மூவிலை-வேல் வளர் அங்கையில் மங்கையொடும் *
கடி ஆர் கொன்றையனே; கடவூர்தனுள் வீரட்டத்து எம்
அடிகேள் என் அமுதே; எனக்கு ஆர் துணை நீ அலதே?
* பாடபேதம்: 'வளர் கங்கையின்'
பாடல் எண் : 2
பிறை ஆரும் சடையாய்; பிரமன் தலையிற் பலி-கொள்
மறை ஆர் வானவனே; மறையின் பொருள் ஆனவனே;
கறை ஆரும் மிடற்றாய்; கடவூர்தனுள் வீரட்டத்து எம்
இறைவா என் அமுதே; எனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடல் எண் : 3
அன்று ஆலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கு அருள்-புரிந்து,
கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு; மான்
கன்று ஆரும் கரவா; கடவூர்த் திரு-வீரட்டத்துள்
என் தாதை; பெருமான்; எனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடல் எண் : 4
போர் ஆரும் கரியின் உரி போர்த்துப் பொன்மேனியின்மேல்,
வார் ஆரும் முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே;
கார் ஆரும் மிடற்றாய்; கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதே; எனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடல் எண் : 5
மை ஆர் கண்டத்தினாய்; மத-மா உரி போர்த்தவனே;
பொய்யாது என் உயிருள் புகுந்தாய்; இன்னம் போந்து அறியாய்;
கை ஆர் ஆடு-அரவா; கடவூர்தனுள் வீரட்டத்து எம்
ஐயா; என் அமுதே; எனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடல் எண் : 6
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி, மற்றும்
பெண்ணோடு ஆண் அலி ஆய்ப், பிறவா உரு ஆனவனே;
கண் ஆர் உள் மணியே; கடவூர்தனுள் வீரட்டத்து எம் *
அண்ணா; என் அமுதே; எனக்கு ஆர் துணை நீ அலதே?
* பாடபேதம்: 'கண் ஆரும் மணியே'
பாடல் எண் : 7
எரி ஆர் புன்-சடைமேல் இள நாகம் அணிந்தவனே;
நரி ஆரும் சுடலை நகு வெண்-தலை கொண்டவனே;
கரி ஆர் ஈர்-உரியாய்; கடவூர்தனுள் வீரட்டத்து எம்
அரியாய்; என் அமுதே; எனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடல் எண் : 8
வேறா உன் அடியேன், விளங்கும் குழைக் காது உடையாய்,
தேறேன் உன்னை அல்லால், சிவனே; என் செழுஞ்சுடரே;
காறார் வெண்-மருப்பா; கடவூர்த் திரு வீரட்டத்துள்,
ஆறு ஆர் செஞ்சடையாய்; எனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடல் எண் : 9
அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பு அரிய
பயனே; எம் பரனே; பரம் ஆய பரஞ்சுடரே;
கயம் ஆரும் சடையாய்; கடவூர்த் திரு வீரட்டத்துள்
அயனே; என் அமுதே; எனக்கு ஆர் துணை நீ அலதே?
பாடல் எண் : 10
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்,
ஏர் ஆரும் இறையைத் துணையா எழில் நாவலர்-கோன்,
ஆரூரன் அடியான், அடித்-தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
sundarar tēvāram - padigam 7.28 – kaḍavūr vīraṭṭam - (paṇ - naṭṭarāgam)
("tānā tānadanā tana tānana tānadanā" - Rhythm)
pāḍal eṇ : 1
poḍi ār mēniyanē; puri-nūl oru pāl porunda,
vaḍi ār mūvilai-vēl vaḷar aṅgaiyil maṅgaiyoḍum *
kaḍi ār koṇḍraiyanē; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
aḍigēḷ en amudē; enakku ār tuṇai nī aladē?
* variant reading: 'vaḷar gaṅgaiyin'
pāḍal eṇ : 2
piṟai ārum saḍaiyāy; piraman talaiyiṟ pali-koḷ
maṟai ār vānavanē; maṟaiyin poruḷ ānavanē;
kaṟai ārum miḍaṭrāy; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
iṟaivā en amudē; enakku ār tuṇai nī aladē?
pāḍal eṇ : 3
aṇḍru ālin niḻaṟkīḻ aṟam nālvarkku aruḷ-purindu,
koṇḍrāy kālan uyir koḍuttāy maṟaiyōnukku; mān
kaṇḍru ārum karavā; kaḍavūrt tiru-vīraṭṭattuḷ
en tādai; perumān; enakku ār tuṇai nī aladē?
pāḍal eṇ : 4
pōr ārum kariyin uri pōrttup ponmēniyinmēl,
vār ārum mulaiyāḷ oru pāgam magiḻndavanē;
kār ārum miḍaṭrāy; kaḍavūrdanuḷ vīraṭṭānattu
ārā en amudē; enakku ār tuṇai nī aladē?
pāḍal eṇ : 5
mai ār kaṇḍattināy; mada-mā uri pōrttavanē;
poyyādu en uyiruḷ pugundāy; innam pōndu aṟiyāy;
kai ār āḍu-aravā; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
aiyā; en amudē; enakku ār tuṇai nī aladē?
pāḍal eṇ : 6
maṇ nīr tī veḷi kāl varu pūdaṅgaḷ āgi, maṭrum
peṇṇōḍu āṇ ali āyp, piṟavā uru ānavanē;
kaṇ ār uḷ maṇiyē; kaḍavūrdanuḷ vīraṭṭattu em *
aṇṇā; en amudē; enakku ār tuṇai nī aladē?
* variant reading: 'kaṇ ārum maṇiyē'
pāḍal eṇ : 7
eri ār pun-saḍaimēl iḷa nāgam aṇindavanē;
nari ārum suḍalai nagu veṇ-talai koṇḍavanē;
kari ār īr-uriyāy; kaḍavūrdanuḷ vīraṭṭattu em
ariyāy; en amudē; enakku ār tuṇai nī aladē?
pāḍal eṇ : 8
vēṟā un aḍiyēn, viḷaṅgum kuḻaik kādu uḍaiyāy,
tēṟēn unnai allāl, sivanē; en seḻuñjuḍarē;
kāṟār veṇ-maruppā; kaḍavūrt tiru vīraṭṭattuḷ,
āṟu ār señjaḍaiyāy; enakku ār tuṇai nī aladē?
pāḍal eṇ : 9
ayanōḍu aṇḍru ariyum aḍiyum muḍi kāṇbu ariya
payanē; em paranē; param āya parañjuḍarē;
kayam ārum saḍaiyāy; kaḍavūrt tiru vīraṭṭattuḷ
ayanē; en amudē; enakku ār tuṇai nī aladē?
pāḍal eṇ : 10
kār ārum poḻil sūḻ kaḍavūrt tiru vīraṭṭattuḷ,
ēr ārum iṟaiyait tuṇaiyā eḻil nāvalar-kōn,
ārūran aḍiyān, aḍit-toṇḍan uraitta tamiḻ
pārōr ētta vallār paralōgattu iruppārē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.28 – कडवूर् वीरट्टम् - (पण् - नट्टरागम्)
("ताना तानदना तन तानन तानदना" - Rhythm)
पाडल् ऎण् : 1
पॊडि आर् मेनियने; पुरि-नूल् ऒरु पाल् पॊरुन्द,
वडि आर् मूविलै-वेल् वळर् अङ्गैयिल् मङ्गैयॊडुम् *
कडि आर् कॊण्ड्रैयने; कडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
अडिगेळ् ऎन् अमुदे; ऎनक्कु आर् तुणै नी अलदे?
* variant reading: 'वळर् गङ्गैयिन्'
पाडल् ऎण् : 2
पिऱै आरुम् सडैयाय्; पिरमन् तलैयिऱ् पलि-कॊळ्
मऱै आर् वानवने; मऱैयिन् पॊरुळ् आनवने;
कऱै आरुम् मिडट्राय्; कडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
इऱैवा ऎन् अमुदे; ऎनक्कु आर् तुणै नी अलदे?
पाडल् ऎण् : 3
अण्ड्रु आलिन् निऴऱ्कीऴ् अऱम् नाल्वर्क्कु अरुळ्-पुरिन्दु,
कॊण्ड्राय् कालन् उयिर् कॊडुत्ताय् मऱैयोनुक्कु; मान्
कण्ड्रु आरुम् करवा; कडवूर्त् तिरु-वीरट्टत्तुळ्
ऎन् तादै; पॆरुमान्; ऎनक्कु आर् तुणै नी अलदे?
पाडल् ऎण् : 4
पोर् आरुम् करियिन् उरि पोर्त्तुप् पॊन्मेनियिन्मेल्,
वार् आरुम् मुलैयाळ् ऒरु पागम् मगिऴ्न्दवने;
कार् आरुम् मिडट्राय्; कडवूर्दनुळ् वीरट्टानत्तु
आरा ऎन् अमुदे; ऎनक्कु आर् तुणै नी अलदे?
पाडल् ऎण् : 5
मै आर् कण्डत्तिनाय्; मद-मा उरि पोर्त्तवने;
पॊय्यादु ऎन् उयिरुळ् पुगुन्दाय्; इन्नम् पोन्दु अऱियाय्;
कै आर् आडु-अरवा; कडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
ऐया; ऎन् अमुदे; ऎनक्कु आर् तुणै नी अलदे?
पाडल् ऎण् : 6
मण् नीर् ती वॆळि काल् वरु पूदङ्गळ् आगि, मट्रुम्
पॆण्णोडु आण् अलि आय्प्, पिऱवा उरु आनवने;
कण् आर् उळ् मणिये; कडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम् *
अण्णा; ऎन् अमुदे; ऎनक्कु आर् तुणै नी अलदे?
* variant reading: 'कण् आरुम् मणिये'
पाडल् ऎण् : 7
ऎरि आर् पुन्-सडैमेल् इळ नागम् अणिन्दवने;
नरि आरुम् सुडलै नगु वॆण्-तलै कॊण्डवने;
करि आर् ईर्-उरियाय्; कडवूर्दनुळ् वीरट्टत्तु ऎम्
अरियाय्; ऎन् अमुदे; ऎनक्कु आर् तुणै नी अलदे?
पाडल् ऎण् : 8
वेऱा उन् अडियेन्, विळङ्गुम् कुऴैक् कादु उडैयाय्,
तेऱेन् उन्नै अल्लाल्, सिवने; ऎन् सॆऴुञ्जुडरे;
काऱार् वॆण्-मरुप्पा; कडवूर्त् तिरु वीरट्टत्तुळ्,
आऱु आर् सॆञ्जडैयाय्; ऎनक्कु आर् तुणै नी अलदे?
पाडल् ऎण् : 9
अयनोडु अण्ड्रु अरियुम् अडियुम् मुडि काण्बु अरिय
पयने; ऎम् परने; परम् आय परञ्जुडरे;
कयम् आरुम् सडैयाय्; कडवूर्त् तिरु वीरट्टत्तुळ्
अयने; ऎन् अमुदे; ऎनक्कु आर् तुणै नी अलदे?
पाडल् ऎण् : 10
कार् आरुम् पॊऴिल् सूऴ् कडवूर्त् तिरु वीरट्टत्तुळ्,
एर् आरुम् इऱैयैत् तुणैया ऎऴिल् नावलर्-कोन्,
आरूरन् अडियान्, अडित्-तॊण्डन् उरैत्त तमिऴ्
पारोर् एत्त वल्लार् परलोगत्तु इरुप्पारे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
సుందరర్ తేవారం - పదిగం 7.28 – కడవూర్ వీరట్టం - (పణ్ - నట్టరాగం)
("తానా తానదనా తన తానన తానదనా" - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
పొడి ఆర్ మేనియనే; పురి-నూల్ ఒరు పాల్ పొరుంద,
వడి ఆర్ మూవిలై-వేల్ వళర్ అంగైయిల్ మంగైయొడుం *
కడి ఆర్ కొండ్రైయనే; కడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
అడిగేళ్ ఎన్ అముదే; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
* variant reading: 'వళర్ గంగైయిన్'
పాడల్ ఎణ్ : 2
పిఱై ఆరుం సడైయాయ్; పిరమన్ తలైయిఱ్ పలి-కొళ్
మఱై ఆర్ వానవనే; మఱైయిన్ పొరుళ్ ఆనవనే;
కఱై ఆరుం మిడట్రాయ్; కడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
ఇఱైవా ఎన్ అముదే; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
పాడల్ ఎణ్ : 3
అండ్రు ఆలిన్ నిఴఱ్కీఴ్ అఱం నాల్వర్క్కు అరుళ్-పురిందు,
కొండ్రాయ్ కాలన్ ఉయిర్ కొడుత్తాయ్ మఱైయోనుక్కు; మాన్
కండ్రు ఆరుం కరవా; కడవూర్త్ తిరు-వీరట్టత్తుళ్
ఎన్ తాదై; పెరుమాన్; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
పాడల్ ఎణ్ : 4
పోర్ ఆరుం కరియిన్ ఉరి పోర్త్తుప్ పొన్మేనియిన్మేల్,
వార్ ఆరుం ములైయాళ్ ఒరు పాగం మగిఴ్న్దవనే;
కార్ ఆరుం మిడట్రాయ్; కడవూర్దనుళ్ వీరట్టానత్తు
ఆరా ఎన్ అముదే; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
పాడల్ ఎణ్ : 5
మై ఆర్ కండత్తినాయ్; మద-మా ఉరి పోర్త్తవనే;
పొయ్యాదు ఎన్ ఉయిరుళ్ పుగుందాయ్; ఇన్నం పోందు అఱియాయ్;
కై ఆర్ ఆడు-అరవా; కడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
ఐయా; ఎన్ అముదే; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
పాడల్ ఎణ్ : 6
మణ్ నీర్ తీ వెళి కాల్ వరు పూదంగళ్ ఆగి, మట్రుం
పెణ్ణోడు ఆణ్ అలి ఆయ్ప్, పిఱవా ఉరు ఆనవనే;
కణ్ ఆర్ ఉళ్ మణియే; కడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం *
అణ్ణా; ఎన్ అముదే; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
* variant reading: 'కణ్ ఆరుం మణియే'
పాడల్ ఎణ్ : 7
ఎరి ఆర్ పున్-సడైమేల్ ఇళ నాగం అణిందవనే;
నరి ఆరుం సుడలై నగు వెణ్-తలై కొండవనే;
కరి ఆర్ ఈర్-ఉరియాయ్; కడవూర్దనుళ్ వీరట్టత్తు ఎం
అరియాయ్; ఎన్ అముదే; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
పాడల్ ఎణ్ : 8
వేఱా ఉన్ అడియేన్, విళంగుం కుఴైక్ కాదు ఉడైయాయ్,
తేఱేన్ ఉన్నై అల్లాల్, సివనే; ఎన్ సెఴుంజుడరే;
కాఱార్ వెణ్-మరుప్పా; కడవూర్త్ తిరు వీరట్టత్తుళ్,
ఆఱు ఆర్ సెంజడైయాయ్; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
పాడల్ ఎణ్ : 9
అయనోడు అండ్రు అరియుం అడియుం ముడి కాణ్బు అరియ
పయనే; ఎం పరనే; పరం ఆయ పరంజుడరే;
కయం ఆరుం సడైయాయ్; కడవూర్త్ తిరు వీరట్టత్తుళ్
అయనే; ఎన్ అముదే; ఎనక్కు ఆర్ తుణై నీ అలదే?
పాడల్ ఎణ్ : 10
కార్ ఆరుం పొఴిల్ సూఴ్ కడవూర్త్ తిరు వీరట్టత్తుళ్,
ఏర్ ఆరుం ఇఱైయైత్ తుణైయా ఎఴిల్ నావలర్-కోన్,
ఆరూరన్ అడియాన్, అడిత్-తొండన్ ఉరైత్త తమిఴ్
పారోర్ ఏత్త వల్లార్ పరలోగత్తు ఇరుప్పారే.
================ ============
No comments:
Post a Comment