Monday, July 6, 2020

4.107 – கடவூர் வீரட்டம் - மருட்டுயர் தீர - kaḍavūr vīraṭṭam - maruḷ tuyar tīra

74) 4.107கடவூர் வீரட்டம் - மருட்டுயர் தீர - kaḍavūr vīraṭṭam - maruḷ tuyar tīra

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.107 - மருட்டுயர் தீர - (திருவிருத்தம்)
tirunāvukkarasar tēvāram - 4.107 - maruḷ tuyar tīra - (tiruviruttam)

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:
***
On YouTube:
Tamil discussion:

V. Subramanian
=============================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.107 – திருக்கடவூர் வீரட்டம் - (திருவிருத்தம்)
Some additional notes on this padhigam:
இப்பதிகத்தில் (பத்தாம் பாடல் நீங்கலாக) எல்லாப் பாடல்களிலும் காலனை உதைத்த நிகழ்ச்சியைப் பாடுகின்றார்.
----------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.107 – திருக்கடவூர் வீரட்டம் - (திருவிருத்தம்)

பாடல் எண் : 1
மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 2
பதத்தெழு மந்திர மஞ்செழுத் தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி ருண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 3
கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணின னீள்புனற் கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 4
மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணித னாருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 5
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணித னாருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 6
பாலனுக் காயன்று பாற்கட லீந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண மோதி யருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்தபி ரான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 7
படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 8
வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 9
கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே.

பாடல் எண் : 10
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
==================
Word separated version:

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.107 – திருக்கடவூர் வீரட்டம் - (திருவிருத்தம்)

பாடல் எண் : 1
மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளை-வாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்
சுருட்டிய நாவில் வெங்கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

பாடல் எண் : 2
பதத்து எழு மந்திரம் அஞ்செழுத்து ஓதிப் பரிவினொடும்
இதத்து எழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனைக் கண்-குருதிப்-புனல் ஆறு ஒழுக
உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே.

பாடல் எண் : 3
கரப்பு-உறு சிந்தையர் காண்டற்கு அரியவன் காமனையும்
நெருப்பு உமிழ் கண்ணினன் நீள்-புனல் கங்கையும் பொங்கு-அரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டு ஒரு-கால்
உரப்பிய சேவடியான் கடவூர் உறை த்தமனே.

பாடல் எண் : 4
மறித்-திகழ் கையினன் வானவர் கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணிதன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தைக்
கறுத்து எழு மூவிலை வேலுடைக் காலனைத் தான்-அலற
உறுக்கிய சேவடியான் கடவூர் உறை த்தமனே.

பாடல் எண் : 5
குழைத்-திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ள வந்த
தழல்-பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தான்-அலற
உழக்கிய சேவடியான் கடவூர் உறை த்தமனே.

பாடல் எண் : 6
பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த
ஆலினிற் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு-முனிக்காய்ச்
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே.

பாடல் எண் : 7
படர்-சடைக் கொன்றையும் பன்னக மாலை பணி-கயிறா
உடை-தலை கோத்து உழல் மேனியன் உண்பலிக்கு என்று உழல்வோன்
சுடர்-பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடியான் கடவூர் உறை த்தமனே.

பாடல் எண் : 8
வெண்-தலை மாலையும் கங்கை கரோடி விரி-சடைமேல்
பெண்டு-அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்
கண்-தனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின் விடம்
உண்டருள்-செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே.

பாடல் எண் : 9
கேழலதாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழி நன் மாமலர்க்-கண் இடந்து இட்ட அம்-மாலவற்கு அன்று
ஆழியும் ஈந்து, அடுதிறற் காலனை அன்று அடர்த்து
ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே.

பாடல் எண் : 10
தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.
===================== ===============
Word separated version:
( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

tirunāvukkarasar tēvāram - padigam 4.107 – tirukkaḍavūr vīraṭṭam - (tiruviruttam)

pāḍal eṇ : 1
maruḷ-tuyar tīra aṇḍru arccitta māṇi mārkkaṇḍēyaṟkāy
iruṭṭiya mēni vaḷai-vāḷ eyiṭru eri pōlum kuñjic
curuṭṭiya nāvil veṅgūṭram padaippa udaittu uṅṅanē
uruṭṭiya sēvaḍiyān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 2
padattu eḻu mandiram añjeḻuttu ōdip parivinoḍum
idattu eḻu māṇidan innuyir uṇṇa veguṇḍu aḍartta
kadattu eḻu kālanaik kaṇ-kurudip-punal āṟu oḻuga
udaittu eḻu sēvaḍiyān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 3
karappu-uṟu sindaiyar kāṇḍaṟku ariyavan kāmanaiyum
neruppu umiḻ kaṇṇinan nīḷ-punal kaṅgaiyum poṅgu-aravum
parappiya señjaḍaip pālvaṇṇan kālanaip paṇḍu oru-kāl
urappiya sēvaḍiyān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 4
maṟit-tigaḻ kaiyinan vānavar kōnai manam magiḻndu
kuṟittu eḻu māṇidan āruyir koḷvān koditta sindaik
kaṟuttu eḻu mūvilai vēluḍaik kālanait tān-alaṟa
uṟukkiya sēvaḍiyān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 5
kuḻait-tigaḻ kādinan vānavar kōnaik kuḷirndu eḻundu
paḻakkamoḍu arccitta māṇidan āruyir koḷḷa vanda
taḻal-podi mūvilai vēluḍaik kālanait tān-alaṟa
uḻakkiya sēvaḍiyān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 6
pālanukkāy aṇḍru pāṟkaḍal īndu paṇaittu eḻunda
āliniṟ kīḻ irundu āraṇam ōdi aru-munikkāyc
cūlamum pāsamum koṇḍu toḍarndu aḍarndu ōḍivanda
kālanaik kāynda pirān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 7
paḍar-saḍaik koṇḍraiyum pannaga mālai paṇi-kayiṟā
uḍai-talai kōttu uḻal mēniyan uṇbalikku eṇḍru uḻalvōn
suḍar-podi mūvilai vēluḍaik kālanait tuṇḍamadā
uḍaṟiya sēvaḍiyān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 8
veṇ-talai mālaiyum kaṅgai karōḍi viri-saḍaimēl
peṇḍu-aṇi nāyagan pēy ugandu āḍum perundagaiyān
kaṇ-tani neṭriyan kālanaik kāyndu kaḍalin viḍam
uṇḍaruḷ-seyda pirān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 9
kēḻaladāgik kiḷaṟiya kēsavan kāṇbaridāy
vāḻi nan māmalark-kaṇ iḍandu iṭṭa am-mālavaṟku aṇḍru
āḻiyum īndu, aḍudiṟaṟ kālanai aṇḍru aḍarttu
ūḻiyum āya pirān kaḍavūr uṟai uttamanē.

pāḍal eṇ : 10
tēn tigaḻ koṇḍraiyum kūviḷa mālai tirumuḍimēl
ān tigaḻ aindu ugandu āḍum pirān malai ārttu eḍutta
kūn tigaḻ vāḷ arakkan muḍi pattum kulaindu viḻa
ūṇḍriya sēvaḍiyān kaḍavūr uṟai uttamanē.
===================== ===============
Word separated version:
( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.107 – तिरुक्कडवूर् वीरट्टम् - (तिरुविरुत्तम्)

पाडल् ऎण् : 1
मरुळ्-तुयर् तीर अण्ड्रु अर्च्चित्त माणि मार्क्कण्डेयऱ्‌काय्
इरुट्टिय मेनि वळै-वाळ् ऎयिट्रु ऎरि पोलुम् कुञ्जिच्
चुरुट्टिय नाविल् वॆङ्गूट्रम् पदैप्प उदैत्तु उङ्ङने
उरुट्टिय सेवडियान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 2
पदत्तु ऎऴु मन्दिरम् अञ्जॆऴुत्तु ओदिप् परिविनॊडुम्
इदत्तु ऎऴु माणिदन् इन्नुयिर् उण्ण वॆगुण्डु अडर्त्त
कदत्तु ऎऴु कालनैक् कण्-कुरुदिप्-पुनल् आऱु ऒऴुग
उदैत्तु ऎऴु सेवडियान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 3
करप्पु-उऱु सिन्दैयर् काण्डऱ्‌कु अरियवन् कामनैयुम्
नॆरुप्पु उमिऴ् कण्णिनन् नीळ्-पुनल् कङ्गैयुम् पॊङ्गु-अरवुम्
परप्पिय सॆञ्जडैप् पाल्वण्णन् कालनैप् पण्डु ऒरु-काल्
उरप्पिय सेवडियान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 4
मऱित्-तिगऴ् कैयिनन् वानवर् कोनै मनम् मगिऴ्न्दु
कुऱित्तु ऎऴु माणिदन् आरुयिर् कॊळ्वान् कॊदित्त सिन्दैक्
कऱुत्तु ऎऴु मूविलै वेलुडैक् कालनैत् तान्-अलऱ
उऱुक्किय सेवडियान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 5
कुऴैत्-तिगऴ् कादिनन् वानवर् कोनैक् कुळिर्न्दु ऎऴुन्दु
पऴक्कमॊडु अर्च्चित्त माणिदन् आरुयिर् कॊळ्ळ वन्द
तऴल्-पॊदि मूविलै वेलुडैक् कालनैत् तान्-अलऱ
उऴक्किय सेवडियान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 6
पालनुक्काय् अण्ड्रु पाऱ्‌कडल् ईन्दु पणैत्तु ऎऴुन्द
आलिनिऱ्‌ कीऴ् इरुन्दु आरणम् ओदि अरु-मुनिक्काय्च्
चूलमुम् पासमुम् कॊण्डु तॊडर्न्दु अडर्न्दु ओडिवन्द
कालनैक् काय्न्द पिरान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 7
पडर्-सडैक् कॊण्ड्रैयुम् पन्नग मालै पणि-कयिऱा
उडै-तलै कोत्तु उऴल् मेनियन् उण्बलिक्कु ऎण्ड्रु उऴल्वोन्
सुडर्-पॊदि मूविलै वेलुडैक् कालनैत् तुण्डमदा
उडऱिय सेवडियान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 8
वॆण्-तलै मालैयुम् कङ्गै करोडि विरि-सडैमेल्
पॆण्डु-अणि नायगन् पेय् उगन्दु आडुम् पॆरुन्दगैयान्
कण्-तनि नॆट्रियन् कालनैक् काय्न्दु कडलिन् विडम्
उण्डरुळ्-सॆय्द पिरान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 9
केऴलदागिक् किळऱिय केसवन् काण्बरिदाय्
वाऴि नन् मामलर्क्-कण् इडन्दु इट्ट अम्-मालवऱ्‌कु अण्ड्रु
आऴियुम् ईन्दु, अडुदिऱऱ्‌ कालनै अण्ड्रु अडर्त्तु
ऊऴियुम् आय पिरान् कडवूर् उऱै उत्तमने.

पाडल् ऎण् : 10
तेन् तिगऴ् कॊण्ड्रैयुम् कूविळ मालै तिरुमुडिमेल्
आन् तिगऴ् ऐन्दु उगन्दु आडुम् पिरान् मलै आर्त्तु ऎडुत्त
कून् तिगऴ् वाळ् अरक्कन् मुडि पत्तुम् कुलैन्दु विऴ
ऊण्ड्रिय सेवडियान् कडवूर् उऱै उत्तमने.
===================== ===============
Word separated version:
( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.107 – తిరుక్కడవూర్ వీరట్టం - (తిరువిరుత్తం)

పాడల్ ఎణ్ : 1
మరుళ్-తుయర్ తీర అండ్రు అర్చ్చిత్త మాణి మార్క్కండేయఱ్కాయ్
ఇరుట్టియ మేని వళై-వాళ్ ఎయిట్రు ఎరి పోలుం కుంజిచ్
చురుట్టియ నావిల్ వెంగూట్రం పదైప్ప ఉదైత్తు ఉఙ్ఙనే
ఉరుట్టియ సేవడియాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 2
పదత్తు ఎఴు మందిరం అంజెఴుత్తు ఓదిప్ పరివినొడుం
ఇదత్తు ఎఴు మాణిదన్ ఇన్నుయిర్ ఉణ్ణ వెగుండు అడర్త్త
కదత్తు ఎఴు కాలనైక్ కణ్-కురుదిప్-పునల్ ఆఱు ఒఴుగ
ఉదైత్తు ఎఴు సేవడియాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 3
కరప్పు-ఉఱు సిందైయర్ కాండఱ్కు అరియవన్ కామనైయుం
నెరుప్పు ఉమిఴ్ కణ్ణినన్ నీళ్-పునల్ కంగైయుం పొంగు-అరవుం
పరప్పియ సెంజడైప్ పాల్వణ్ణన్ కాలనైప్ పండు ఒరు-కాల్
ఉరప్పియ సేవడియాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 4
మఱిత్-తిగఴ్ కైయినన్ వానవర్ కోనై మనం మగిఴ్న్దు
కుఱిత్తు ఎఴు మాణిదన్ ఆరుయిర్ కొళ్వాన్ కొదిత్త సిందైక్
కఱుత్తు ఎఴు మూవిలై వేలుడైక్ కాలనైత్ తాన్-అలఱ
ఉఱుక్కియ సేవడియాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 5
కుఴైత్-తిగఴ్ కాదినన్ వానవర్ కోనైక్ కుళిర్న్దు ఎఴుందు
పఴక్కమొడు అర్చ్చిత్త మాణిదన్ ఆరుయిర్ కొళ్ళ వంద
తఴల్-పొది మూవిలై వేలుడైక్ కాలనైత్ తాన్-అలఱ
ఉఴక్కియ సేవడియాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 6
పాలనుక్కాయ్ అండ్రు పాఱ్కడల్ ఈందు పణైత్తు ఎఴుంద
ఆలినిఱ్ కీఴ్ ఇరుందు ఆరణం ఓది అరు-మునిక్కాయ్చ్
చూలముం పాసముం కొండు తొడర్న్దు అడర్న్దు ఓడివంద
కాలనైక్ కాయ్న్ద పిరాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 7
పడర్-సడైక్ కొండ్రైయుం పన్నగ మాలై పణి-కయిఱా
ఉడై-తలై కోత్తు ఉఴల్ మేనియన్ ఉణ్బలిక్కు ఎండ్రు ఉఴల్వోన్
సుడర్-పొది మూవిలై వేలుడైక్ కాలనైత్ తుండమదా
ఉడఱియ సేవడియాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 8
వెణ్-తలై మాలైయుం కంగై కరోడి విరి-సడైమేల్
పెండు-అణి నాయగన్ పేయ్ ఉగందు ఆడుం పెరుందగైయాన్
కణ్-తని నెట్రియన్ కాలనైక్ కాయ్న్దు కడలిన్ విడం
ఉండరుళ్-సెయ్ద పిరాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 9
కేఴలదాగిక్ కిళఱియ కేసవన్ కాణ్బరిదాయ్
వాఴి నన్ మామలర్క్-కణ్ ఇడందు ఇట్ట అం-మాలవఱ్కు అండ్రు
ఆఴియుం ఈందు, అడుదిఱఱ్ కాలనై అండ్రు అడర్త్తు
ఊఴియుం ఆయ పిరాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.

పాడల్ ఎణ్ : 10
తేన్ తిగఴ్ కొండ్రైయుం కూవిళ మాలై తిరుముడిమేల్
ఆన్ తిగఴ్ ఐందు ఉగందు ఆడుం పిరాన్ మలై ఆర్త్తు ఎడుత్త
కూన్ తిగఴ్ వాళ్ అరక్కన్ ముడి పత్తుం కులైందు విఴ
ఊండ్రియ సేవడియాన్ కడవూర్ ఉఱై ఉత్తమనే.
===================== ===============



No comments:

Post a Comment