This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
85) 1.52 – மறையுடையாய் - திருநெடுங்களம் - maṟaiyuḍaiyāy - tiruneḍuṅgaḷam
சம்பந்தர் தேவாரம் - 1.52 – மறையுடையாய் - திருநெடுங்களம் - (பண் - பழந்தக்கராகம்)
sambandar tēvāram - 1.52 – maṟaiyuḍaiyāy - tiruneḍuṅgaḷam - (paṇ - paḻandakkarāgam)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: https://drive.google.com/file/d/1mNhHW6qsfy4GwkQmW-mgAQD6mwF-AZZj/view?usp=sharing
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_052.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/nrcklgu4jVE
Part-2: https://youtu.be/APccnAxKYrE
Part-3: https://youtu.be/G_hKnOnmz8Q
English discussion:
***
You can find audio clips of Odhuvar singing this padhigam here:
Dharmapuram Swaminathan: https://www.youtube.com/watch?v=b713X9l0aXM
Thiruthani Swaminathan: https://www.youtube.com/watch?v=B1Lkc0a3IqY
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.52 – திருநெடுங்களம் - (பண் - பழந்தக்கராகம்)
திருநெடுங்களம் - இத்தலம் திருச்சிராப்பள்ளியிலிருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. (திருவெறும்பூரிலிருந்து கிழக்கே 12 கிமீ).
பதிகக் குறிப்பு: அடியார்களது துன்பத்தைத் தீர்த்தருளுமாறு இறைவனை வேண்டிய பதிகம். இப்பதிகத்தை ஓதுபவர்களது பாவம் அழியும்.
----------
# 2247 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 349
நெடுங்களத் தாதியை "யன்பானின்பா
.. னெஞ்சஞ் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைக டீர்த்தருள் செய்வா"யென்னு
.. மின்னிசை மாலைகொண் டேத்தியேகி
யடும்பணிச் செஞ்சடை யார்பதிக
.. ளணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கை வரையுரித் தார்மகிழ்ந்த
.. காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.52 – திருநெடுங்களம் - (பண் - பழந்தக்கராகம்)
(தனன தானா - தனன தானா - தனதன தானதனா - என்ற சந்தம்)
பாடல் எண் : 1
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 2
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 3
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 4
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 5
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 6
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 7
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 8
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 9
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 10
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
பாடல் எண் : 11
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.
Word separated version:
# 2247 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 349
நெடுங்களத்து ஆதியை "அன்பால் நின்பால்
.. நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய்" என்னும்
.. இன்னிசை மாலை-கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள்
.. அணைந்து பணிந்து, நியமம் போற்றிக்
கடுங்கை-வரை உரித்தார் மகிழ்ந்த
.. காட்டுப்பள்ளிப்-பதி கை-தொழுவார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.52 – திருநெடுங்களம் - (பண் - பழந்தக்கராகம்)
(தனன தானா - தனன தானா - தனதன தானதனா - Rhythm)
பாடல் எண் : 1
"மறை உடையாய்; தோல் உடையாய்; வார்-சடைமேல் வளரும்
பிறை உடையாய்; பிஞ்ஞகனே" என்று உனைப் பேசின் அல்லால்
குறை உடையார் குற்றம் ஓராய்; கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 2
கனைத்து எழுந்த வெண்-திரை-சூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ; நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்-பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 3
நின் அடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
"என் அடியான் உயிரை வவ்வேல்" என்று அடற்கூற்று உதைத்த
பொன்னடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 4
மலை புரிந்த மன்னவன்றன் மகளை ஓர்-பால் மகிழ்ந்தாய்;
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்-சடை ஆரூரா;
தலை புரிந்த பலி மகிழ்வாய்; தலைவ; நின் தாள் நிழற்கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 5
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி-சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு-கழலே வணங்கித்,
தாங்கி-நில்லா அன்பினோடும், தலைவ, நின் தாள் நிழற்கீழ்
நீங்கி-நில்லார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 6
விருத்தன் ஆகிப், பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,
கருத்தன் ஆகிக், கங்கையாளைக் கமழ்-சடைமேல் கரந்தாய்;
அருத்தன் ஆய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 7
கூறு கொண்டாய்; மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே; கொடிமேல்
ஏறு கொண்டாய்; சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 8
"குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி-மதில்-சூழ் இலங்கை
அன்றி-நின்ற அரக்கர்-கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்"
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்-பகலும்
நின்று நைவார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 9
வேழ-வெண்-கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்;
கேழல் வெண்-கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 10
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி-நின்ற வேடம்-இலாச் சமணும்,
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம்-ஒன்று அறியார்;
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திர நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய்; நெடுங்களம் மேயவனே.
பாடல் எண் : 11
நீட-வல்ல வார்-சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா-மறுகின் சிரபுரக்-கோன் நலத்தால்
நாட-வல்ல பனுவல்-மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
# 2247 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 349
neḍuṅgaḷattu ādiyai "anbāl ninbāl
.. neñjam selāvagai nēr vilakkum
iḍumbaigaḷ tīrttu aruḷ seyvāy" ennum
.. innisai mālai-koṇḍu ētti ēgi
aḍum paṇic ceñjaḍaiyār padigaḷ
.. aṇaindu paṇindu, niyamam pōṭrik
kaḍuṅgai-varai urittār magiḻnda
.. kāṭṭuppaḷḷip-padi kai-toḻuvār.
sambandar tēvāram - padigam 1.52 – tiruneḍuṅgaḷam - (paṇ - paḻandakkarāgam)
(tanana tānā - tanana tānā - tanadana tānadanā - Rhythm)
pāḍal eṇ : 1
"maṟai uḍaiyāy; tōl uḍaiyāy; vār-saḍaimēl vaḷarum
piṟai uḍaiyāy; piññaganē" eṇḍru unaip pēsin allāl
kuṟai uḍaiyār kuṭram ōrāy; koḷgaiyināl uyarnda
niṟai uḍaiyār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 2
kanaittu eḻunda veṇ-tirai-sūḻ kaḍaliḍai nañjudannait
tinaittanaiyā miḍaṭril vaitta tirundiya dēva; ninnai
manattagattōr pāḍal āḍal pēṇi irāp-pagalum
ninaitteḻuvār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 3
nin aḍiyē vaḻibaḍuvān nimalā ninaik karuda
"en aḍiyān uyirai vavvēl" eṇḍru aḍaṟkūṭru udaitta
ponnaḍiyē paravi, nāḷum pūvoḍu nīr sumakkum
nin aḍiyār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 4
malai purinda mannavaṇḍran magaḷai ōr-pāl magiḻndāy;
alai purinda gaṅgai taṅgum avir-saḍai ārūrā;
talai purinda pali magiḻvāy; talaiva; nin tāḷ niḻaṟkīḻ
nilai purindār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 5
pāṅgin nallār, paḍimam seyvār, pāriḍamum pali-sēr
tūṅgi nallār pāḍalōḍu toḻu-kaḻalē vaṇaṅgit,
tāṅgi-nillā anbinōḍum, talaiva, nin tāḷ niḻaṟkīḻ
nīṅgi-nillār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 6
viruttan āgip, bālan āgi, vēdam ōr nāngu uṇarndu,
karuttan āgik, gaṅgaiyāḷaik kamaḻ-saḍaimēl karandāy;
aruttan āya ādidēvan aḍiyiṇaiyē paravum
niruttar gīdar iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 7
kūṟu koṇḍāy; mūṇḍrum oṇḍrāk kūṭṭi ōr veṅgaṇaiyāl
māṟu koṇḍār puram eritta mannavanē; koḍimēl
ēṟu koṇḍāy; sāndam īdu eṇḍru emberumān aṇinda
nīṟu koṇḍār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 8
"kuṇḍrin uccimēl viḷaṅgum koḍi-madil-sūḻ ilaṅgai
aṇḍri-niṇḍra arakkar-kōnai aruvaraikkīḻ aḍarttāy"
eṇḍru nalla vāymoḻiyāl ētti irāp-pagalum
niṇḍru naivār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 9
vēḻa-veṇ-kombu ositta mālum, viḷaṅgiya nānmuganum
sūḻa eṅgum nēḍa āṅgu ōr sōdiyuḷ āgi niṇḍrāy;
kēḻal veṇ-kombu aṇinda pemmān kēḍilāp ponnaḍiyin
nīḻal vāḻvār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 10
veñjol tam sol ākki-niṇḍra vēḍam-ilāc camaṇum,
tañjam illāc cākkiyarum tattuvam-oṇḍru aṟiyār;
tuñjal illā vāymoḻiyāl tōttira nin aḍiyē
neñjil vaippār iḍar kaḷaiyāy; neḍuṅgaḷam mēyavanē.
pāḍal eṇ : 11
nīḍa-valla vār-saḍaiyān mēya neḍuṅgaḷattaic
cēḍar vāḻum mā-maṟugin siraburak-kōn nalattāl
nāḍa-valla panuval-mālai ñānasambandan sonna
pāḍal pattum pāḍa vallār pāvam paṟaiyumē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
# 2247 - पॆरियपुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 349
नॆडुङ्गळत्तु आदियै "अन्बाल् निन्बाल्
.. नॆञ्जम् सॆलावगै नेर् विलक्कुम्
इडुम्बैगळ् तीर्त्तु अरुळ् सॆय्वाय्" ऎन्नुम्
.. इन्निसै मालै-कॊण्डु एत्ति एगि
अडुम् पणिच् चॆञ्जडैयार् पदिगळ्
.. अणैन्दु पणिन्दु, नियमम् पोट्रिक्
कडुङ्गै-वरै उरित्तार् मगिऴ्न्द
.. काट्टुप्पळ्ळिप्-पदि कै-तॊऴुवार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.52 – तिरुनॆडुङ्गळम् - (पण् - पऴन्दक्करागम्)
(तनन ताना - तनन ताना - तनदन तानदना - Rhythm)
पाडल् ऎण् : 1
"मऱै उडैयाय्; तोल् उडैयाय्; वार्-सडैमेल् वळरुम्
पिऱै उडैयाय्; पिञ्ञगने" ऎण्ड्रु उनैप् पेसिन् अल्लाल्
कुऱै उडैयार् कुट्रम् ओराय्; कॊळ्गैयिनाल् उयर्न्द
निऱै उडैयार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 2
कनैत्तु ऎऴुन्द वॆण्-तिरै-सूऴ् कडलिडै नञ्जुदन्नैत्
तिनैत्तनैया मिडट्रिल् वैत्त तिरुन्दिय देव; निन्नै
मनत्तगत्तोर् पाडल् आडल् पेणि इराप्-पगलुम्
निनैत्तॆऴुवार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 3
निन् अडिये वऴिबडुवान् निमला निनैक् करुद
"ऎन् अडियान् उयिरै वव्वेल्" ऎण्ड्रु अडऱ्कूट्रु उदैत्त
पॊन्नडिये परवि, नाळुम् पूवॊडु नीर् सुमक्कुम्
निन् अडियार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 4
मलै पुरिन्द मन्नवण्ड्रन् मगळै ओर्-पाल् मगिऴ्न्दाय्;
अलै पुरिन्द गङ्गै तङ्गुम् अविर्-सडै आरूरा;
तलै पुरिन्द पलि मगिऴ्वाय्; तलैव; निन् ताळ् निऴऱ्कीऴ्
निलै पुरिन्दार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 5
पाङ्गिन् नल्लार्, पडिमम् सॆय्वार्, पारिडमुम् पलि-सेर्
तूङ्गि नल्लार् पाडलोडु तॊऴु-कऴले वणङ्गित्,
ताङ्गि-निल्ला अन्बिनोडुम्, तलैव, निन् ताळ् निऴऱ्कीऴ्
नीङ्गि-निल्लार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 6
विरुत्तन् आगिप्, बालन् आगि, वेदम् ओर् नान्गु उणर्न्दु,
करुत्तन् आगिक्, गङ्गैयाळैक् कमऴ्-सडैमेल् करन्दाय्;
अरुत्तन् आय आदिदेवन् अडियिणैये परवुम्
निरुत्तर् गीदर् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 7
कूऱु कॊण्डाय्; मूण्ड्रुम् ऒण्ड्राक् कूट्टि ओर् वॆङ्गणैयाल्
माऱु कॊण्डार् पुरम् ऎरित्त मन्नवने; कॊडिमेल्
एऱु कॊण्डाय्; सान्दम् ईदु ऎण्ड्रु ऎम्बॆरुमान् अणिन्द
नीऱु कॊण्डार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 8
"कुण्ड्रिन् उच्चिमेल् विळङ्गुम् कॊडि-मदिल्-सूऴ् इलङ्गै
अण्ड्रि-निण्ड्र अरक्कर्-कोनै अरुवरैक्कीऴ् अडर्त्ताय्"
ऎण्ड्रु नल्ल वाय्मॊऴियाल् एत्ति इराप्-पगलुम्
निण्ड्रु नैवार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 9
वेऴ-वॆण्-कॊम्बु ऒसित्त मालुम्, विळङ्गिय नान्मुगनुम्
सूऴ ऎङ्गुम् नेड आङ्गु ओर् सोदियुळ् आगि निण्ड्राय्;
केऴल् वॆण्-कॊम्बु अणिन्द पॆम्मान् केडिलाप् पॊन्नडियिन्
नीऴल् वाऴ्वार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 10
वॆञ्जॊल् तम् सॊल् आक्कि-निण्ड्र वेडम्-इलाच् चमणुम्,
तञ्जम् इल्लाच् चाक्कियरुम् तत्तुवम्-ऒण्ड्रु अऱियार्;
तुञ्जल् इल्ला वाय्मॊऴियाल् तोत्तिर निन् अडिये
नॆञ्जिल् वैप्पार् इडर् कळैयाय्; नॆडुङ्गळम् मेयवने.
पाडल् ऎण् : 11
नीड-वल्ल वार्-सडैयान् मेय नॆडुङ्गळत्तैच्
चेडर् वाऴुम् मा-मऱुगिन् सिरबुरक्-कोन् नलत्ताल्
नाड-वल्ल पनुवल्-मालै ञानसम्बन्दन् सॊन्न
पाडल् पत्तुम् पाड वल्लार् पावम् पऱैयुमे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
# 2247 - పెరియపురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 349
నెడుంగళత్తు ఆదియై "అన్బాల్ నిన్బాల్
.. నెంజం సెలావగై నేర్ విలక్కుం
ఇడుంబైగళ్ తీర్త్తు అరుళ్ సెయ్వాయ్" ఎన్నుం
.. ఇన్నిసై మాలై-కొండు ఏత్తి ఏగి
అడుం పణిచ్ చెంజడైయార్ పదిగళ్
.. అణైందు పణిందు, నియమం పోట్రిక్
కడుంగై-వరై ఉరిత్తార్ మగిఴ్న్ద
.. కాట్టుప్పళ్ళిప్-పది కై-తొఴువార్.
సంబందర్ తేవారం - పదిగం 1.52 – తిరునెడుంగళం - (పణ్ - పఴందక్కరాగం)
(తనన తానా - తనన తానా - తనదన తానదనా - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
"మఱై ఉడైయాయ్; తోల్ ఉడైయాయ్; వార్-సడైమేల్ వళరుం
పిఱై ఉడైయాయ్; పిఞ్ఞగనే" ఎండ్రు ఉనైప్ పేసిన్ అల్లాల్
కుఱై ఉడైయార్ కుట్రం ఓరాయ్; కొళ్గైయినాల్ ఉయర్న్ద
నిఱై ఉడైయార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 2
కనైత్తు ఎఴుంద వెణ్-తిరై-సూఴ్ కడలిడై నంజుదన్నైత్
తినైత్తనైయా మిడట్రిల్ వైత్త తిరుందియ దేవ; నిన్నై
మనత్తగత్తోర్ పాడల్ ఆడల్ పేణి ఇరాప్-పగలుం
నినైత్తెఴువార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 3
నిన్ అడియే వఴిబడువాన్ నిమలా నినైక్ కరుద
"ఎన్ అడియాన్ ఉయిరై వవ్వేల్" ఎండ్రు అడఱ్కూట్రు ఉదైత్త
పొన్నడియే పరవి, నాళుం పూవొడు నీర్ సుమక్కుం
నిన్ అడియార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 4
మలై పురింద మన్నవండ్రన్ మగళై ఓర్-పాల్ మగిఴ్న్దాయ్;
అలై పురింద గంగై తంగుం అవిర్-సడై ఆరూరా;
తలై పురింద పలి మగిఴ్వాయ్; తలైవ; నిన్ తాళ్ నిఴఱ్కీఴ్
నిలై పురిందార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 5
పాంగిన్ నల్లార్, పడిమం సెయ్వార్, పారిడముం పలి-సేర్
తూంగి నల్లార్ పాడలోడు తొఴు-కఴలే వణంగిత్,
తాంగి-నిల్లా అన్బినోడుం, తలైవ, నిన్ తాళ్ నిఴఱ్కీఴ్
నీంగి-నిల్లార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 6
విరుత్తన్ ఆగిప్, బాలన్ ఆగి, వేదం ఓర్ నాన్గు ఉణర్న్దు,
కరుత్తన్ ఆగిక్, గంగైయాళైక్ కమఴ్-సడైమేల్ కరందాయ్;
అరుత్తన్ ఆయ ఆదిదేవన్ అడియిణైయే పరవుం
నిరుత్తర్ గీదర్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 7
కూఱు కొండాయ్; మూండ్రుం ఒండ్రాక్ కూట్టి ఓర్ వెంగణైయాల్
మాఱు కొండార్ పురం ఎరిత్త మన్నవనే; కొడిమేల్
ఏఱు కొండాయ్; సాందం ఈదు ఎండ్రు ఎంబెరుమాన్ అణింద
నీఱు కొండార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 8
"కుండ్రిన్ ఉచ్చిమేల్ విళంగుం కొడి-మదిల్-సూఴ్ ఇలంగై
అండ్రి-నిండ్ర అరక్కర్-కోనై అరువరైక్కీఴ్ అడర్త్తాయ్"
ఎండ్రు నల్ల వాయ్మొఴియాల్ ఏత్తి ఇరాప్-పగలుం
నిండ్రు నైవార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 9
వేఴ-వెణ్-కొంబు ఒసిత్త మాలుం, విళంగియ నాన్ముగనుం
సూఴ ఎంగుం నేడ ఆంగు ఓర్ సోదియుళ్ ఆగి నిండ్రాయ్;
కేఴల్ వెణ్-కొంబు అణింద పెమ్మాన్ కేడిలాప్ పొన్నడియిన్
నీఴల్ వాఴ్వార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 10
వెంజొల్ తం సొల్ ఆక్కి-నిండ్ర వేడం-ఇలాచ్ చమణుం,
తంజం ఇల్లాచ్ చాక్కియరుం తత్తువం-ఒండ్రు అఱియార్;
తుంజల్ ఇల్లా వాయ్మొఴియాల్ తోత్తిర నిన్ అడియే
నెంజిల్ వైప్పార్ ఇడర్ కళైయాయ్; నెడుంగళం మేయవనే.
పాడల్ ఎణ్ : 11
నీడ-వల్ల వార్-సడైయాన్ మేయ నెడుంగళత్తైచ్
చేడర్ వాఴుం మా-మఱుగిన్ సిరబురక్-కోన్ నలత్తాల్
నాడ-వల్ల పనువల్-మాలై ఞానసంబందన్ సొన్న
పాడల్ పత్తుం పాడ వల్లార్ పావం పఱైయుమే.
================ ============
No comments:
Post a Comment