Sunday, July 25, 2021

7.85 – வடிவுடை மழுவேந்தி - கூடலையாற்றூர் - vaḍivuḍai maḻuvēndi - kūḍalaiyāṭrūr

7.85 – வடிவுடை மழுவேந்தி - கூடலையாற்றூர் - vaḍivuḍai maḻuvēndi - kūḍalaiyāṭrūr

சுந்தரர் தேவாரம் - 7.85 – வடிவுடை மழுவேந்தி - கூடலையாற்றூர்

sundarar tēvāram - 7.85 – vaḍivuḍai maḻuvēndi - kūḍalaiyāṭrūr


Here are the links to verses and audio of this padhigam's discussion:


Verses:

PDF: https://drive.google.com/file/d/18t9S13cY_-YlPFWOQKfOzYH_GLlZU6xy/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/N9NtTe1xwjE

Part-2: https://youtu.be/uC_tNgapL50

***

V. Subramanian

================= ==============

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.85 – திருக்கூடலையாற்றூர் - (பண் - புறநீர்மை)


திருக்கூடலையாற்றூர் : இத்தலம் சேத்தியாதோப்பு - ஸ்ரீமுஷ்ணம் இடையே உள்ளது. ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து கிழக்கே 10 கிமீ தொலைவு. சிதம்பரத்திலிருந்து மேற்கே 30 கிமீ தொலைவு.


http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=159

மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது. வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிய, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து, இவ்வூரில் கோயிலைக் கட்டி சுவாமி அம்பாளை எழுந்தருளச் செய்துள்ளனர். இக்கோயில் நூறாண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்டதென்பர்.


Sundarar wants to bypass Kudalaiyatrur and go to Thirumudukundram

#3254 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 100

வம்புநீ டலங்கன் மார்பின் வன்றொண்டர் வன்னி கொன்றை

தும்பைவெள் ளடம்பு திங்க டூயநீ ரணிந்த சென்னித்

தம்பிரா னமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்து

கொம்பனா ராட னீடு கூடலை யாற்றூர் சார,


#3255 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 101

செப்பரும் பதியிற் சேரார் திருமுது குன்றை நோக்கி

ஒப்பரும் புகழார் செல்லு மொருவழி யுமையா ளோடு

மெய்ப்பரம் பொருளா யுள்ளார் வேதிய ராகி நின்றார்

முப்புரி நூலும் தாங்கி நம்பியா ரூரர் முன்பு.


Siva comes as a wayfarer and tells him that the path goes through Kudalaiyatrur

#3256 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 102

நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்

"இன்றியா முதுகுன் றெய்த வழியெமக் கியம்பு" மென்னக்

குன்றவில் லாளி யாருங் "கூடலை யாற்றூ ரேறச்

சென்றதிவ் வழிதா"னென்று செல்வழித் துணையாய்ச் செல்ல.


Siva disappears after a short while and Sundarar realizes that it was Siva

#3257 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 103

கண்டவர் கைகள் கூப்பித் தொழுதுபின் றொடர்வார்க் காணார்

வண்டலர் கொன்றை யாரை "வடிவுடை மழு" வென் றேத்தி

"அண்டர்தம் பெருமான் போந்த வதிசய மறியே"னென்று

கொண்டெழு விருப்பி னோடுங் கூடலை யாற்றூர் புக்கார்.


Sundarar goes to Kudalaiyatrur temple and worships

#3258 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 104

கூடலை யாற்றூர் மேவுங் கொன்றைவார் சடையி னார்தம்

பீடுயர் கோயில் புக்குப் பெருகிய வார்வம் பொங்க

ஆடகப் பொதுவி லாடு மறைகழல் வணங்கிப் போற்றி

நீடருள் பெற்றுப் போந்து திருமுது குன்றி னேர்ந்தார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.85 – திருக்கூடலையாற்றூர் - (பண் - புறநீர்மை)

    (தானன தனதானா தானன தனதானா - என்ற சந்தம்)

    (தனதானா - may also come as தானதனா / தானானா)

பாடல் எண் : 1

வடிவுடை மழுவேந்தி மதகரியுரி போர்த்துப் **

பொடியணி திருமேனிப் புரிகுழ லுமையோடும்

கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்

அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

    (** தருமை ஆதீன நூலில் பாடபேதம் - வடியுடை)


பாடல் எண் : 2

வையக முழுதுண்ட மாலொடு நான்முகனும்

பையிள அரவல்குற் பாவையொ டும்முடனே **

கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்

ஐயன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.

    (பாடபேதம் ? அடி-2: "பையர வகலல்குல்" = பை அரவு அகல் அல்குல்)


பாடல் எண் : 3

ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி யிடும்என்று

வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே

கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்

ஆர்வன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 4

சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்

பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே

கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்

அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 5

வேதியர் விண்ணவரும் மண்ணவ ரும்தொழநற்

சோதிய துருவாகிச் சுரிகுழ லுமையோடும்

கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்

ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 6

வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு

முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே

கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்

அத்தன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 7

மழைநுழை மதியமொடு வாளர வுஞ்சடைமேல்

இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடும்

குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்

அழகன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 8

மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்

பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்

குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்

அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 9

வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்

பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே

கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்

ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 10

கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்

ஆட லுகந்தானை அதிசயம் இதுவென்று

நாடிய இன்றமிழால் நாவல வூரன்சொல்

பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.

==================

Word separated version:


Sundarar wants to bypass Kudalaiyatrur and go to Thirumudukundram

#3254 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 100

வம்பு நீடு அலங்கல் மார்பின் வன்-தொண்டர் வன்னி கொன்றை

தும்பை வெள்ளடம்பு திங்கள் தூய-நீர் அணிந்த சென்னித்

தம்பிரான் அமர்ந்த தானம் பல-பல சார்ந்து தாழ்ந்து

கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார,


#3255 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 101

செப்பரும் பதியில் சேரார் திரு-முதுகுன்றை நோக்கி

ஒப்பு-அரும் புகழார் செல்லும் ஒரு-வழி உமையாளோடும்

மெய்ப்-பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார்

முப்புரி நூலும் தாங்கி நம்பி-ஆரூரர் முன்பு.


Siva comes as a wayfarer and tells him that the path goes through Kudalaiyatrur

#3256 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 102

நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார்,

"இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும்" என்னக்,

குன்ற-வில்லாளியாரும் "கூடலையாற்றூர் ஏறச்

சென்றது இவ்-வழிதான்" என்று செல்வழித் துணையாய்ச் செல்ல.


Siva disappears after a short while and Sundarar realizes that it was Siva

#3257 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 103

கண்டவர் கைகள் கூப்பித் தொழுது, பின் தொடர்வார்க் காணார்;

வண்டு அலர்-கொன்றையாரை "வடிவுடை மழு" என்று ஏத்தி,

"அண்டர்தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன்" என்று

கொண்டு எழு விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார்.


Sundarar goes to Kudalaiyatrur temple and worships

#3258 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 104

கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார்-சடையினார்தம்

பீடு-உயர் கோயில் புக்குப், பெருகிய ஆர்வம் பொங்க,

ஆடகப் பொதுவில் ஆடும் அறை-கழல் வணங்கிப் போற்றி,

நீடு-அருள் பெற்றுப் போந்து திரு-முதுகுன்றில் நேர்ந்தார்.


சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.85 – திருக்கூடலையாற்றூர் - (பண் - புறநீர்மை)

    (தானன தனதானா தானன தனதானா - என்ற சந்தம்)

    (தனதானா - may also come as தானதனா / தானானா)

பாடல் எண் : 1

வடிவுடை மழு ஏந்தி மத-கரி-உரி போர்த்துப் **

பொடி அணி திருமேனிப் புரி-குழல் உமையோடும்

கொடி அணி நெடு-மாடக் கூடலையாற்றூரில்

அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

    (** தருமை ஆதீன நூலில் பாடபேதம் - வடியுடை)


பாடல் எண் : 2

வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும்

பை-இள அரவு அல்குல் பாவையொடும் உடனே **

கொய்-அணி மலர்ச்சோலைக் கூடலையாற்றூரில்

ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

    (பாடபேதம் ? அடி-2: "பையர வகலல்குல்" = பை அரவு அகல் அல்குல்)


பாடல் எண் : 3

ஊர்தொறும் வெண்டலை-கொண்டு உண்பலி இடும் என்று

வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே

கூர்-நுனை மழு ஏந்திக் கூடலையாற்றூரில்

ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 4

சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்-சடையன்

பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே

கொந்து அணவும் பொழில்-சூழ் கூடலையாற்றூரில்

அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 5

வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல்

சோதியது உரு ஆகிச் சுரி-குழல் உமையோடும்

கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்

ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 6

வித்தக வீணையொடும் வெண்-புரி-நூல் பூண்டு

முத்து அன வெண்-முறுவல் மங்கையொடும் உடனே

கொத்து அலரும் பொழில்-சூழ் கூடலையாற்றூரில்

அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 7

மழை நுழை மதியமொடு வாள்-அரவும் சடைமேல்

இழை நுழை துகில்-அல்குல் ஏந்திழையாளோடும்

குழை அணி திகழ்-சோலைக் கூடலையாற்றூரில்

அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 8

மறை-முதல் வானவரும் மால்-அயன் இந்திரனும்

பிறை-நுதல் மங்கையொடும் பேய்க்-கணமும் சூழக்

குறள்-படை அதனோடும் கூடலையாற்றூரில்

அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 9

வேலையின் நஞ்சு உண்டு, விடையது தான் ஏறிப்

பால்-அன மென்-மொழியாள் பாவையொடும் உடனே

கோலமது உரு ஆகிக் கூடலையாற்றூரில்

ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.


பாடல் எண் : 10

கூடலையாற்றூரில் கொடி-இடை அவளோடும்

ஆடல் உகந்தானை அதிசயம் இது என்று

நாடிய இன்-தமிழால் நாவல ஊரன் சொல்

பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sundarar wants to bypass kūḍalaiyāṭrūr and go to Thirumudukundram

#3254 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 100

vambu nīḍu alaṅgal mārbin van-toṇḍar vanni koṇḍrai

tumbai veḷḷaḍambu tiṅgaḷ tūya-nīr aṇinda sennit

tambirān amarnda tānam pala-pala sārndu tāḻndu

kombanār āḍal nīḍu kūḍalaiyāṭrūr sāra,


#3255 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 101

sepparum padiyil sērār tiru-muduguṇḍrai nōkki

oppu-arum pugaḻār sellum oru-vaḻi umaiyāḷōḍum

meyp-paramboruḷāy uḷḷār vēdiyar āgi niṇḍrār

muppuri nūlum tāṅgi nambi-ārūrar munbu.


Siva comes as a wayfarer and tells him that the path goes through kūḍalaiyāṭrūr

#3256 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 102

niṇḍravar tammai nōkki negiḻnda sindaiyarāyt tāḻvār,

"iṇḍru yām muduguṇḍru eyda vaḻi emakku iyambum" ennak,

kuṇḍra-villāḷiyārum "kūḍalaiyāṭrūr ēṟac

ceṇḍradu iv-vaḻidān" eṇḍru selvaḻit tuṇaiyāyc cella.


Siva disappears after a short while and Sundarar realizes that it was Siva

#3257 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 103

kaṇḍavar kaigaḷ kūppit toḻudu, pin toḍarvārk kāṇār;

vaṇḍu alar-koṇḍraiyārai "vaḍivuḍai maḻu" eṇḍru ētti,

"aṇḍardam perumān pōnda adisayam aṟiyēn" eṇḍru

koṇḍu eḻu viruppinōḍum kūḍalaiyāṭrūr pukkār.


Sundarar goes to kūḍalaiyāṭrūr temple and worships

#3258 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 104

kūḍalaiyāṭrūr mēvum koṇḍrai vār-saḍaiyinārdam

pīḍu-uyar kōyil pukkup, perugiya ārvam poṅga,

āḍagap poduvil āḍum aṟai-kaḻal vaṇaṅgip pōṭri,

nīḍu-aruḷ peṭrup pōndu tiru-muduguṇḍril nērndār.


sundarar tēvāram - padigam 7.85 – tirukkūḍalaiyāṭrūr - (paṇ - puṟanīrmai)

    (tānana tanadānā tānana tanadānā - Rhythm)

    (tanadānā - may also come as tānadanā / tānānā)

pāḍal eṇ : 1

vaḍivuḍai maḻu ēndi mada-kari-uri pōrttup **

poḍi aṇi tirumēnip puri-kuḻal umaiyōḍum

koḍi aṇi neḍu-māḍak kūḍalaiyāṭrūril

aḍigaḷ iv vaḻi pōnda adisayam aṟiyēnē.

    (** Variant reading - Dharmapuram Adheenam book: vaḍiyuḍai)


pāḍal eṇ : 2

vaiyagam muḻudu uṇḍa māloḍu nānmuganum

pai-iḷa aravu algul pāvaiyoḍum uḍanē **

koy-aṇi malarccōlaik kūḍalaiyāṭrūril

aiyan iv vaḻi pōnda adisayam aṟiyēnē.

    (** Variant reading? Line-2: pai aravu agal algul)


pāḍal eṇ : 3

ūrdoṟum veṇḍalai-koṇḍu uṇbali iḍum eṇḍru

vārdaru menmulaiyāḷ maṅgaiyoḍum uḍanē

kūr-nunai maḻu ēndik kūḍalaiyāṭrūril

ārvan iv vaḻi pōnda adisayam aṟiyēnē.


pāḍal eṇ : 4

sandu aṇavum punalum tāṅgiya tāḻ-saḍaiyan

pandu aṇavum viralāḷ pāvaiyoḍum uḍanē

kondu aṇavum poḻil-sūḻ kūḍalaiyāṭrūril

andaṇan vaḻi pōnda adisayam aṟiyēnē.


pāḍal eṇ : 5

vēdiyar viṇṇavarum maṇṇavarum toḻa nal

sōdiyadu uru āgic curi-kuḻal umaiyōḍum

kōdiya vaṇḍu aṟaiyum kūḍalaiyāṭrūril

ādi iv vaḻi pōnda adisayam aṟiyēnē.


pāḍal eṇ : 6

vittaga vīṇaiyoḍum veṇ-puri-nūl pūṇḍu

muttu ana veṇ-muṟuval maṅgaiyoḍum uḍanē

kottu alarum poḻil-sūḻ kūḍalaiyāṭrūril

attan iv vaḻi pōnda adisayam aṟiyēnē.


pāḍal eṇ : 7

maḻai nuḻai madiyamoḍu vāḷ-aravum saḍaimēl

iḻai nuḻai tugil-algul ēndiḻaiyāḷōḍum

kuḻai aṇi tigaḻ-sōlaik kūḍalaiyāṭrūril

aḻagan iv vaḻi pōnda adisayam aṟiyēnē.


pāḍal eṇ : 8

maṟai-mudal vānavarum māl-ayan indiranum

piṟai-nudal maṅgaiyoḍum pēyk-kaṇamum sūḻak

kuṟaḷ-paḍai adanōḍum kūḍalaiyāṭrūril

aṟavan iv vaḻi pōnda adisayam aṟiyēnē.


pāḍal eṇ : 9

vēlaiyin nañju uṇḍu, viḍaiyadu tān ēṟip

pāl-ana men-moḻiyāḷ pāvaiyoḍum uḍanē

kōlamadu uru āgik kūḍalaiyāṭrūril

ālan iv vaḻi pōnda adisayam aṟiyēnē.


pāḍal eṇ : 10

kūḍalaiyāṭrūril koḍi-iḍai avaḷōḍum

āḍal ugandānai adisayam idu eṇḍru

nāḍiya in-tamiḻāl nāvala ūran sol

pāḍalgaḷ pattum vallār tam vinai paṭru aṟumē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


Sundarar wants to bypass Kudalaiyatrur and go to Thirumudukundram

#3254 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 100

वम्बु नीडु अलङ्गल् मार्बिन् वन्-तॊण्डर् वन्नि कॊण्ड्रै

तुम्बै वॆळ्ळडम्बु तिङ्गळ् तूय-नीर् अणिन्द सॆन्नित्

तम्बिरान् अमर्न्द तानम् पल-पल सार्न्दु ताऴ्न्दु

कॊम्बनार् आडल् नीडु कूडलैयाट्रूर् सार,


#3255 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 101

सॆप्परुम् पदियिल् सेरार् तिरु-मुदुगुण्ड्रै नोक्कि

ऒप्पु-अरुम् पुगऴार् सॆल्लुम् ऒरु-वऴि उमैयाळोडुम्

मॆय्प्-परम्बॊरुळाय् उळ्ळार् वेदियर् आगि निण्ड्रार्

मुप्पुरि नूलुम् ताङ्गि नम्बि-आरूरर् मुन्बु.


Siva comes as a wayfarer and tells him that the path goes through Kudalaiyatrur

#3256 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 102

निण्ड्रवर् तम्मै नोक्कि नॆगिऴ्न्द सिन्दैयराय्त् ताऴ्वार्,

"इण्ड्रु याम् मुदुगुण्ड्रु ऎय्द वऴि ऎमक्कु इयम्बुम्" ऎन्नक्,

कुण्ड्र-विल्लाळियारुम् "कूडलैयाट्रूर् एऱच्

चॆण्ड्रदु इव्-वऴिदान्" ऎण्ड्रु सॆल्वऴित् तुणैयाय्च् चॆल्ल.


Siva disappears after a short while and Sundarar realizes that it was Siva

#3257 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 103

कण्डवर् कैगळ् कूप्पित् तॊऴुदु, पिन् तॊडर्वार्क् काणार्;

वण्डु अलर्-कॊण्ड्रैयारै "वडिवुडै मऴु" ऎण्ड्रु एत्ति,

"अण्डर्दम् पॆरुमान् पोन्द अदिसयम् अऱियेन्" ऎण्ड्रु

कॊण्डु ऎऴु विरुप्पिनोडुम् कूडलैयाट्रूर् पुक्कार्.


Sundarar goes to Kudalaiyatrur temple and worships

#3258 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 104

कूडलैयाट्रूर् मेवुम् कॊण्ड्रै वार्-सडैयिनार्दम्

पीडु-उयर् कोयिल् पुक्कुप्, पॆरुगिय आर्वम् पॊङ्ग,

आडगप् पॊदुविल् आडुम् अऱै-कऴल् वणङ्गिप् पोट्रि,

नीडु-अरुळ् पॆट्रुप् पोन्दु तिरु-मुदुगुण्ड्रिल् नेर्न्दार्.


सुन्दरर् तेवारम् - पदिगम् 7.85 – तिरुक्कूडलैयाट्रूर् - (पण् - पुऱनीर्मै)

    (तानन तनदाना तानन तनदाना - Rhythm)

    (तनदाना - may also come as तानदना / तानाना)

पाडल् ऎण् : 1

वडिवुडै मऴु एन्दि मद-करि-उरि पोर्त्तुप् **

पॊडि अणि तिरुमेनिप् पुरि-कुऴल् उमैयोडुम्

कॊडि अणि नॆडु-माडक् कूडलैयाट्रूरिल्

अडिगळ् इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.

    (** Variant reading - Dharmapuram Adheenam book: वडियुडै)


पाडल् ऎण् : 2

वैयगम् मुऴुदु उण्ड मालॊडु नान्मुगनुम्

पै-इळ अरवु अल्गुल् पावैयॊडुम् उडने **

कॊय्-अणि मलर्च्चोलैक् कूडलैयाट्रूरिल्

ऐयन् इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.

    (** Variant reading? Line-2: पै अरवु अगल् अल्गुल्)


पाडल् ऎण् : 3

ऊर्दॊऱुम् वॆण्डलै-कॊण्डु उण्बलि इडुम् ऎण्ड्रु

वार्दरु मॆन्मुलैयाळ् मङ्गैयॊडुम् उडने

कूर्-नुनै मऴु एन्दिक् कूडलैयाट्रूरिल्

आर्वन् इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.


पाडल् ऎण् : 4

सन्दु अणवुम् पुनलुम् ताङ्गिय ताऴ्-सडैयन्

पन्दु अणवुम् विरलाळ् पावैयॊडुम् उडने

कॊन्दु अणवुम् पॊऴिल्-सूऴ् कूडलैयाट्रूरिल्

अन्दणन् वऴि पोन्द अदिसयम् अऱियेने.


पाडल् ऎण् : 5

वेदियर् विण्णवरुम् मण्णवरुम् तॊऴ नल्

सोदियदु उरु आगिच् चुरि-कुऴल् उमैयोडुम्

कोदिय वण्डु अऱैयुम् कूडलैयाट्रूरिल्

आदि इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.


पाडल् ऎण् : 6

वित्तग वीणैयॊडुम् वॆण्-पुरि-नूल् पूण्डु

मुत्तु अन वॆण्-मुऱुवल् मङ्गैयॊडुम् उडने

कॊत्तु अलरुम् पॊऴिल्-सूऴ् कूडलैयाट्रूरिल्

अत्तन् इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.


पाडल् ऎण् : 7

मऴै नुऴै मदियमॊडु वाळ्-अरवुम् सडैमेल्

इऴै नुऴै तुगिल्-अल्गुल् एन्दिऴैयाळोडुम्

कुऴै अणि तिगऴ्-सोलैक् कूडलैयाट्रूरिल्

अऴगन् इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.


पाडल् ऎण् : 8

मऱै-मुदल् वानवरुम् माल्-अयन् इन्दिरनुम्

पिऱै-नुदल् मङ्गैयॊडुम् पेय्क्-कणमुम् सूऴक्

कुऱळ्-पडै अदनोडुम् कूडलैयाट्रूरिल्

अऱवन् इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.


पाडल् ऎण् : 9

वेलैयिन् नञ्जु उण्डु, विडैयदु तान् एऱिप्

पाल्-अन मॆन्-मॊऴियाळ् पावैयॊडुम् उडने

कोलमदु उरु आगिक् कूडलैयाट्रूरिल्

आलन् इव् वऴि पोन्द अदिसयम् अऱियेने.


पाडल् ऎण् : 10

कूडलैयाट्रूरिल् कॊडि-इडै अवळोडुम्

आडल् उगन्दानै अदिसयम् इदु ऎण्ड्रु

नाडिय इन्-तमिऴाल् नावल ऊरन् सॊल्

पाडल्गळ् पत्तुम् वल्लार् तम् विनै पट्रु अऱुमे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Sundarar wants to bypass Kudalaiyatrur and go to Thirumudukundram

#3254 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 100

వంబు నీడు అలంగల్ మార్బిన్ వన్-తొండర్ వన్ని కొండ్రై

తుంబై వెళ్ళడంబు తింగళ్ తూయ-నీర్ అణింద సెన్నిత్

తంబిరాన్ అమర్న్ద తానం పల-పల సార్న్దు తాఴ్న్దు

కొంబనార్ ఆడల్ నీడు కూడలైయాట్రూర్ సార,


#3255 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 101

సెప్పరుం పదియిల్ సేరార్ తిరు-ముదుగుండ్రై నోక్కి

ఒప్పు-అరుం పుగఴార్ సెల్లుం ఒరు-వఴి ఉమైయాళోడుం

మెయ్ప్-పరంబొరుళాయ్ ఉళ్ళార్ వేదియర్ ఆగి నిండ్రార్

ముప్పురి నూలుం తాంగి నంబి-ఆరూరర్ మున్బు.


Siva comes as a wayfarer and tells him that the path goes through Kudalaiyatrur

#3256 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 102

నిండ్రవర్ తమ్మై నోక్కి నెగిఴ్న్ద సిందైయరాయ్త్ తాఴ్వార్,

"ఇండ్రు యాం ముదుగుండ్రు ఎయ్ద వఴి ఎమక్కు ఇయంబుం" ఎన్నక్,

కుండ్ర-విల్లాళియారుం "కూడలైయాట్రూర్ ఏఱచ్

చెండ్రదు ఇవ్-వఴిదాన్" ఎండ్రు సెల్వఴిత్ తుణైయాయ్చ్ చెల్ల.


Siva disappears after a short while and Sundarar realizes that it was Siva

#3257 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 103

కండవర్ కైగళ్ కూప్పిత్ తొఴుదు, పిన్ తొడర్వార్క్ కాణార్;

వండు అలర్-కొండ్రైయారై "వడివుడై మఴు" ఎండ్రు ఏత్తి,

"అండర్దం పెరుమాన్ పోంద అదిసయం అఱియేన్" ఎండ్రు

కొండు ఎఴు విరుప్పినోడుం కూడలైయాట్రూర్ పుక్కార్.


Sundarar goes to Kudalaiyatrur temple and worships

#3258 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 104

కూడలైయాట్రూర్ మేవుం కొండ్రై వార్-సడైయినార్దం

పీడు-ఉయర్ కోయిల్ పుక్కుప్, పెరుగియ ఆర్వం పొంగ,

ఆడగప్ పొదువిల్ ఆడుం అఱై-కఴల్ వణంగిప్ పోట్రి,

నీడు-అరుళ్ పెట్రుప్ పోందు తిరు-ముదుగుండ్రిల్ నేర్న్దార్.


సుందరర్ తేవారం - పదిగం 7.85 – తిరుక్కూడలైయాట్రూర్ - (పణ్ - పుఱనీర్మై)

    (తానన తనదానా తానన తనదానా - Rhythm)

    (తనదానా - may also come as తానదనా / తానానా)

పాడల్ ఎణ్ : 1

వడివుడై మఴు ఏంది మద-కరి-ఉరి పోర్త్తుప్ **

పొడి అణి తిరుమేనిప్ పురి-కుఴల్ ఉమైయోడుం

కొడి అణి నెడు-మాడక్ కూడలైయాట్రూరిల్

అడిగళ్ ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.

    (** Variant reading - Dharmapuram Adheenam book: వడియుడై)


పాడల్ ఎణ్ : 2

వైయగం ముఴుదు ఉండ మాలొడు నాన్ముగనుం

పై-ఇళ అరవు అల్గుల్ పావైయొడుం ఉడనే **

కొయ్-అణి మలర్చ్చోలైక్ కూడలైయాట్రూరిల్

ఐయన్ ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.

    (** Variant reading? Line-2: పై అరవు అగల్ అల్గుల్)


పాడల్ ఎణ్ : 3

ఊర్దొఱుం వెండలై-కొండు ఉణ్బలి ఇడుం ఎండ్రు

వార్దరు మెన్ములైయాళ్ మంగైయొడుం ఉడనే

కూర్-నునై మఴు ఏందిక్ కూడలైయాట్రూరిల్

ఆర్వన్ ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.


పాడల్ ఎణ్ : 4

సందు అణవుం పునలుం తాంగియ తాఴ్-సడైయన్

పందు అణవుం విరలాళ్ పావైయొడుం ఉడనే

కొందు అణవుం పొఴిల్-సూఴ్ కూడలైయాట్రూరిల్

అందణన్ వఴి పోంద అదిసయం అఱియేనే.


పాడల్ ఎణ్ : 5

వేదియర్ విణ్ణవరుం మణ్ణవరుం తొఴ నల్

సోదియదు ఉరు ఆగిచ్ చురి-కుఴల్ ఉమైయోడుం

కోదియ వండు అఱైయుం కూడలైయాట్రూరిల్

ఆది ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.


పాడల్ ఎణ్ : 6

విత్తగ వీణైయొడుం వెణ్-పురి-నూల్ పూండు

ముత్తు అన వెణ్-ముఱువల్ మంగైయొడుం ఉడనే

కొత్తు అలరుం పొఴిల్-సూఴ్ కూడలైయాట్రూరిల్

అత్తన్ ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.


పాడల్ ఎణ్ : 7

మఴై నుఴై మదియమొడు వాళ్-అరవుం సడైమేల్

ఇఴై నుఴై తుగిల్-అల్గుల్ ఏందిఴైయాళోడుం

కుఴై అణి తిగఴ్-సోలైక్ కూడలైయాట్రూరిల్

అఴగన్ ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.


పాడల్ ఎణ్ : 8

మఱై-ముదల్ వానవరుం మాల్-అయన్ ఇందిరనుం

పిఱై-నుదల్ మంగైయొడుం పేయ్క్-కణముం సూఴక్

కుఱళ్-పడై అదనోడుం కూడలైయాట్రూరిల్

అఱవన్ ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.


పాడల్ ఎణ్ : 9

వేలైయిన్ నంజు ఉండు, విడైయదు తాన్ ఏఱిప్

పాల్-అన మెన్-మొఴియాళ్ పావైయొడుం ఉడనే

కోలమదు ఉరు ఆగిక్ కూడలైయాట్రూరిల్

ఆలన్ ఇవ్ వఴి పోంద అదిసయం అఱియేనే.


పాడల్ ఎణ్ : 10

కూడలైయాట్రూరిల్ కొడి-ఇడై అవళోడుం

ఆడల్ ఉగందానై అదిసయం ఇదు ఎండ్రు

నాడియ ఇన్-తమిఴాల్ నావల ఊరన్ సొల్

పాడల్గళ్ పత్తుం వల్లార్ తం వినై పట్రు అఱుమే.

================ ============


No comments:

Post a Comment