Saturday, July 10, 2021

8.39 - திருவாசகம் - திருப்புலம்பல் - thiruvasagam - thiruppulambal

88) 8.39 - திருவாசகம் - திருப்புலம்பல் - thiruvasagam - thiruppulambal

திருவாசகம் - திருப்புலம்பல் - பதிகம் 8.39 – பூங்கமலத் தயனொடுமால்

tiruvāsagam - tiruppulambal - padigam 8.39 – pūṅgamalattu ayanoḍu māl

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1fMOVPFSGDqcV1fcbFkJBhYN5PPdrn9qE/view?usp=sharing

8.39 - thiruppulambal - word by word meaning - English translation: https://drive.google.com/file/d/1kmWNeJHFv95W6bK2xpVHRlDzpAes-6Br/view?usp=sharing

***

On YouTube:

Tamil discussion: https://youtu.be/ZAch4SxiOiw

***

You can find audio clips of Odhuvar singing this padhigam here:

Sambandam Gurukkal: https://www.youtube.com/watch?v=LqlsnIyIC0I

திருவாசகம் - 8.39 திருப்புலம்பல் - பதிக விளக்கம் - அருணை பாலறாவாயன்: (class recording - Includes some digressions, anecdotes, etc): https://www.youtube.com/watch?v=YRqWMvpb6wY

================ ================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருவாசகம் - திருப்புலம்பல் - 8.39


சிவானந்த முதிர்வு

"புலம்பல்" என்பது, இங்கு அன்பினால் அழுதலைக் குறித்தது. "அழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரிது அவன் திருவடியிணை இரண்டும்" (தி.7 .58 பா.10) என்று அருளியதும் காண்க. அன்பு மீதூர மீதூரச் சிவானந்தம் மேன்மேல் விளையுமாகலின், இதற்குச், "சிவானந்த முதிர்வு" எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, திருவாரூரில் அருளிச் செய்யப்பட்டது என்பதே பதிப்புகளிற் காணப்படுவது.


My Notes:

  1. இப்பதிகத்தில் மூன்று பாடல்களே உள்ளன.

  2. இந்த 3 பாடல்களில் முறையே திருவாரூர், திருப்பெருந்துறை, குற்றாலம் என்ற 3 தலங்கள் பாடப்பெறுகின்றன. முதலில் திருவாரூர் இடபெறுவதாலோ என்னவோ இப்பதிகம் திருவாரூரில் பாடப்பெற்றது என்று குறித்துள்ளனர்!

==========


திருவாசகம் - திருப்புலம்பல் - பதிகம் 8.39

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா - meter)

பாடல் எண் : 1

பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே

கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடீ

ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்

பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே.


பாடல் எண் : 2

சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை

விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்

உடையானே உனையல்லா துறுதுணைமற் றறியேனே.


பாடல் எண் : 3

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்

கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்

குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.

==================

Word separated version:



திருவாசகம் - திருப்புலம்பல் - பதிகம் 8.39

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா - meter)

பாடல் எண் : 1

பூங்கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே;

கோங்கு அலர் சேர் குவி-முலையாள் கூறா; வெண்ணீறு ஆடீ;

ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே; அடியேன் நின்

பூங்கழல்கள் அவை-அல்லாது எவை-யாதும் புகழேனே.


பாடல் எண் : 2

சடையானே; தழல் ஆடீ; தயங்கு மூவிலைச் சூலப்

படையானே; பரஞ்சோதீ; பசுபதீ; மழ-வெள்ளை

விடையானே; விரி-பொழில் சூழ் பெருந்துறையாய்; அடியேன் நான்,

உடையானே, உனை-அல்லாது உறுதுணை மற்று அறியேனே.


பாடல் எண் : 3

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா; உன் குரை-கழற்கே

கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே.

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruvāsagam - tiruppulambal - padigam 8.39

(nālaḍit taravu koccagak kalippā - meter)

pāḍal eṇ : 1

pūṅgamalattu ayanoḍu māl aṟiyāda neṟiyānē;

kōṅgu alar sēr kuvi-mulaiyāḷ kūṟā; veṇṇīṟu āḍī;

ōṅgu eyil sūḻ tiruvārūr uḍaiyānē; aḍiyēn nin

pūṅgaḻalgaḷ avai-allādu evai-yādum pugaḻēnē.


pāḍal eṇ : 2

saḍaiyānē; taḻal āḍī; tayaṅgu mūvilaic cūlap

paḍaiyānē; parañjōdī; pasubadī; maḻa-veḷḷai

viḍaiyānē; viri-poḻil sūḻ perunduṟaiyāy; aḍiyēn nān,

uḍaiyānē, unai-allādu uṟuduṇai maṭru aṟiyēnē.


pāḍal eṇ : 3

uṭrārai yān vēṇḍēn; ūr vēṇḍēn; pēr vēṇḍēn;

kaṭrārai yān vēṇḍēn; kaṟpanavum ini amaiyum;

kuṭrālattu amarndu uṟaiyum kūttā; un kurai-kaḻaṟkē

kaṭrāvin manam pōlak kasindu uruga vēṇḍuvanē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुवासगम् - तिरुप्पुलम्बल् - पदिगम् 8.39

(नालडित् तरवु कॊच्चगक् कलिप्पा - meter)

पाडल् ऎण् : 1

पूङ्गमलत्तु अयनॊडु माल् अऱियाद नॆऱियाने;

कोङ्गु अलर् सेर् कुवि-मुलैयाळ् कूऱा; वॆण्णीऱु आडी;

ओङ्गु ऎयिल् सूऴ् तिरुवारूर् उडैयाने; अडियेन् निन्

पूङ्गऴल्गळ् अवै-अल्लादु ऎवै-यादुम् पुगऴेने.


पाडल् ऎण् : 2

सडैयाने; तऴल् आडी; तयङ्गु मूविलैच् चूलप्

पडैयाने; परञ्जोदी; पसुबदी; मऴ-वॆळ्ळै

विडैयाने; विरि-पॊऴिल् सूऴ् पॆरुन्दुऱैयाय्; अडियेन् नान्,

उडैयाने, उनै-अल्लादु उऱुदुणै मट्रु अऱियेने.


पाडल् ऎण् : 3

उट्रारै यान् वेण्डेन्; ऊर् वेण्डेन्; पेर् वेण्डेन्;

कट्रारै यान् वेण्डेन्; कऱ्‌पनवुम् इनि अमैयुम्;

कुट्रालत्तु अमर्न्दु उऱैयुम् कूत्ता; उन् कुरै-कऴऱ्‌के

कट्राविन् मनम् पोलक् कसिन्दु उरुग वेण्डुवने.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరువాసగం - తిరుప్పులంబల్ - పదిగం 8.39

(నాలడిత్ తరవు కొచ్చగక్ కలిప్పా - meter)

పాడల్ ఎణ్ : 1

పూంగమలత్తు అయనొడు మాల్ అఱియాద నెఱియానే;

కోంగు అలర్ సేర్ కువి-ములైయాళ్ కూఱా; వెణ్ణీఱు ఆడీ;

ఓంగు ఎయిల్ సూఴ్ తిరువారూర్ ఉడైయానే; అడియేన్ నిన్

పూంగఴల్గళ్ అవై-అల్లాదు ఎవై-యాదుం పుగఴేనే.


పాడల్ ఎణ్ : 2

సడైయానే; తఴల్ ఆడీ; తయంగు మూవిలైచ్ చూలప్

పడైయానే; పరంజోదీ; పసుబదీ; మఴ-వెళ్ళై

విడైయానే; విరి-పొఴిల్ సూఴ్ పెరుందుఱైయాయ్; అడియేన్ నాన్,

ఉడైయానే, ఉనై-అల్లాదు ఉఱుదుణై మట్రు అఱియేనే.


పాడల్ ఎణ్ : 3

ఉట్రారై యాన్ వేండేన్; ఊర్ వేండేన్; పేర్ వేండేన్;

కట్రారై యాన్ వేండేన్; కఱ్పనవుం ఇని అమైయుం;

కుట్రాలత్తు అమర్న్దు ఉఱైయుం కూత్తా; ఉన్ కురై-కఴఱ్కే

కట్రావిన్ మనం పోలక్ కసిందు ఉరుగ వేండువనే.

================ ============


No comments:

Post a Comment