Sunday, August 21, 2022

11.31 - திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை - 1-10 - thirunAraiyUr vinAyakar irattaimaNi mAlai

114) 11.31 - திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை - 1-10 - thirunAraiyUr vinAyakar irattaimaNi mAlai

நம்பியாண்டார் நம்பிகள் - 11.31 - திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை - (songs 1-10)

nambiyāṇḍār nambigaḷ - 11.31 - tirunāraiyūr vināyagar iraṭṭaimaṇi mālai - (songs 1-10)

Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 11.31 - திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை - 1-10 - thirunAraiyUr vinAyakar irattaimaNi mAlai

***

On YouTube:

Tamil discussion:

Story: https://youtu.be/fHIGEtbxk-o 

Part-1: https://youtu.be/ZceXaSKqoo4

Part-2: https://youtu.be/R9Bj3g2CrWA

***

V. Subramanian

====================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts.


நம்பியாண்டார் நம்பிகள் - 11.31 - திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை - (songs 1-10)


கட்டளைக் கலித்துறையும், நேரிசை வெண்பாவும் அந்தாதியாய் மாறி மாறி வர இருபது பாடல்களால் தொகுக்கப்படுவது, "இரட்டைமணி மாலை" என்னும் பிரபந்தம் ஆகும்.


நம்பியாண்டார் நம்பிகள் வரலாறு: http://thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=26


திருநாரையூர் - நாரை வழிபட்டு உய்ந்த தலம்.

இத்தல விநாயகர் திருநாமம் - பொல்லாப் பிள்ளையார். (பொள்ளுதல் - உளி கொண்டு செதுக்குதல். இவ்வாறு செதுக்கப்படாமல் தானே தோன்றியவர். பொல்லாப்பிள்ளையார் என்றாகி விட்டது.)


My notes:

12 திருமுறைகளில் 11-ஆம் திருமுறையில் விநாயகர்மேல் சில பதிகங்கள் (சிற்றிலக்கிய வகையில் நூல்கள்) உள்ளன. நம்பியாண்டார் நம்பிகள் அருளிய - "திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை" அவற்றுள் ஒன்று. (மற்றவை -

11.20 - கபிலதேவ நாயனார் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

11.25 - அதிரா அடிகள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை )


நம்பியாண்டார் நம்பிகள் - 11.31 - திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை - (songs 1-10)

(meter - வெண்பா (odd numbered songs) & கட்டளைக் கலித்துறை (even numbered songs))


பாடல் எண் : 1

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் - புன்னை

விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்

அரசுமகிழ் அத்திமுகத் தான்.


பாடல் எண் : 2

முகத்தாற் கரியனென் றாலும் தனையே முயன்றவர்க்கு

மிகத்தான் வெளியனென் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்

அகத்தான் திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்தவெம்மான்

உகத்தா னவன்தன் னுடலம் பிளந்த ஒருகொம்பனே.


பாடல் எண் : 3

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே

வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே

தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்

பின்னவலம் செய்வதென்னோ பேசு.


பாடல் எண் : 4

பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியுமென்

றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட்

கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயுமிந்தத்

தேசத் தவர்தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே.


பாடல் எண் : 5

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்

ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்

பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்

மன்நாரை யூரான் மகன்.


பாடல் எண் : 6

மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்

சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு

முகத்தது கையந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்

அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே.


பாடல் எண் : 7

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்

பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை

அருந்தவெண்ணு கின்றவெறும் பன்றே அவரை

வருந்தவெண்ணு கின்ற மலம்.


பாடல் எண் : 8

மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்

புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்

சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே

வலஞ்செய்து கொண்ட மதக்களி றேயுன்னை வாழ்த்துவனே.


பாடல் எண் : 9

வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்

தனஞ்சாய லைத்தருவா னன்றோ - இனஞ்சாயத்

தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்

நாரையூர் நம்பர்மக னாம்.


பாடல் எண் : 10

நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்

தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே

காரண னேயெம் கணபதி யேநற் கரிவதனா

ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே.

==================

Word separated version:


நம்பியாண்டார் நம்பிகள் - 11.31 - திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை - (songs 1-10)

(meter - வெண்பா (odd numbered songs) & கட்டளைக் கலித்துறை (even numbered songs))

பாடல் எண் : 1

என்னை நினைந்து அடிமை கொண்டு, என் இடர் கெடுத்துத்,

தன்னை நினையத் தருகின்றான், - புன்னை

விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்

அரசு மகிழ் அத்தி-முகத்தான்.


பாடல் எண் : 2

முகத்தால் கரியன் என்றாலும், தனையே முயன்றவர்க்கு

மிகத்தான் வெளியன் என்றே, மெய்ம்மை உன்னும் விரும்பு-அடியார்

அகத்தான்; திகழ்தரு நாரையூர் அம்மான் பயந்த எம்மான்;

உகத் தானவன்-தன் உடலம் பிளந்த ஒரு கொம்பனே.


பாடல் எண் : 3

கொம்பு அனைய வள்ளி கொழுநன் குறுகாமே

வம்பு அனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே

தன்ன-வலம் செய்து கொளும் தாழ்-தடக்கையாய் என்; நோய்

பின் அவலம் செய்வது என்னோ? பேசு.


பாடல் எண் : 4

பேசத் தகாதெனப் பேய் எருதும் பெருச்சாளியும் என்று

ஏசத் தகும்படி ஏறுவதே, இமையாத முக்கட்

கூசத் தகும் தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும், இந்தத்

தேசத்தவர் தொழும் நாரைப்-பதியுள் சிவக்களிறே.


பாடல் எண் : 5

களிறு முகத்தவனாய்க், காயம் செந்தீயின்

ஒளிரும் உருக் கொண்டது என்னே, - அளறுதொறும்

பின் நாரை ஊர்-ஆரல் ஆரும் பெரும் படுகர்

மன் நாரையூரான் மகன்.


பாடல் எண் : 6

மகத்தினில் வானவர் பல் கண் சிரம் தோள் நெரித்தருளும்,

சுகத்தினில் நீள்-பொழில் நாரைப்-பதியுள் சுரன்-மகற்கு

முகத்தது கை; அந்தக் கையது மூக்கு; அந்த மூக்கதனின்

அகத்தது வாய்; அந்த வாயது போலும் அடு-மருப்பே.


பாடல் எண் : 7

மருப்பை ஒரு கைக்-கொண்டு நாரையூர் மன்னும்

பொருப்பை அடி போற்றத் துணிந்தால், நெருப்பை

அருந்த எண்ணுகின்ற எறும்பு-அன்றே, அவரை

வருந்த எண்ணுகின்ற மலம்.


பாடல் எண் : 8

மலம் செய்த வல்வினை நோக்கி, உலகை வலம்வரும் அப்-

புலம் செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரி-சடைமேல்

சலம் செய்த நாரைப்-பதி அரன் தன்னைக் கனி தரவே

வலஞ்செய்து கொண்ட மதக்-களிறே, உன்னை வாழ்த்துவனே.


பாடல் எண் : 9

வனஞ்சாய வல்வினை-நோய் நீக்கி, வனசத்

தனம் சாயலைத் தருவான்-அன்றோ, - இனம் சாயத்

தேரை ஊர் நம்பர், மகன் திண்-தோள் நெரித்து-அருளும்

நாரையூர் நம்பர் மகன் ஆம்.

(வனஞ்சாய - 1. வன்னஞ்சு ஆய; 2. வனம் சாய?)

(வனசத்தனம் - 1. வனசத்தனம்; 2. வனசத்தன் அம்?)


பாடல் எண் : 10

"நாரணன் முன்-பணிந்து ஏத்த-நின்று, எல்லை நடாவிய அத்-

தேர் அணவும் திருநாரையூர் மன்னு சிவன்-மகனே;

காரணனே; எம் கணபதியே; நல் கரி-வதனா;

ஆரண நுண்-பொருளே" என்பவர்க்கு இல்லை அல்லல்களே.

==================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


nambiyāṇḍār nambigaḷ - 11.31 - tirunāraiyūr vināyagar iraṭṭaimaṇi mālai - (songs 1-10)

(meter - veṇbā (odd numbered songs) & kaṭṭaḷaik kalittuṟai (even numbered songs))


pāḍal eṇ : 1

ennai ninaindu aḍimai koṇḍu, en iḍar keḍuttut,

tannai ninaiyat tarugiṇḍrān, - punnai

virasu magiḻ sōlai viyan nāraiyūr mukkaṇ

arasu magiḻ atti-mugattān.


pāḍal eṇ : 2

mugattāl kariyan eṇḍrālum, tanaiyē muyaṇḍravarkku

migattān veḷiyan eṇḍrē, meymmai unnum virumbu-aḍiyār

agattān; tigaḻdaru nāraiyūr ammān payanda emmān;

ugat tānavan-tan uḍalam piḷanda oru kombanē.


pāḍal eṇ : 3

kombu anaiya vaḷḷi koḻunan kuṟugāmē

vambu anaiya māṅganiyai nāraiyūr - nambanaiyē

tanna-valam seydu koḷum tāḻ-taḍakkaiyāy en; nōy

pin avalam seyvadu ennō? pēsu.


pāḍal eṇ : 4

pēsat tagādenap pēy erudum peruccāḷiyum eṇḍru

ēsat tagumbaḍi ēṟuvadē, imaiyāda mukkaṭ

kūsat tagum toḻil nuṅgaiyum nundaiyum nīyum, indat

tēsattavar toḻum nāraip-padiyuḷ sivakkaḷiṟē.


pāḍal eṇ : 5

kaḷiṟu mugattavanāyk, kāyam sendīyin

oḷirum uruk koṇḍadu ennē, - aḷaṟudoṟum

pin nārai ūr-āral ārum perum paḍugar

man nāraiyūrān magan.


pāḍal eṇ : 6

magattinil vānavar pal kaṇ siram tōḷ nerittaruḷum,

sugattinil nīḷ-poḻil nāraip-padiyuḷ suran-magaṟku

mugattadu kai; andak kaiyadu mūkku; anda mūkkadanin

agattadu vāy; anda vāyadu pōlum aḍu-maruppē.


pāḍal eṇ : 7

maruppai oru kaik-koṇḍu nāraiyūr mannum

poruppai aḍi pōṭrat tuṇindāl, neruppai

arunda eṇṇugiṇḍra eṟumbu-aṇḍrē, avarai

varunda eṇṇugiṇḍra malam.


pāḍal eṇ : 8

malam seyda valvinai nōkki, ulagai valamvarum ap-

pulam seyda kāṭcik kumaraṟku munnē puri-saḍaimēl

salam seyda nāraip-padi aran tannaik kani taravē

valañjeydu koṇḍa madak-kaḷiṟē, unnai vāḻttuvanē.


pāḍal eṇ : 9

vanañjāya valvinai-nōy nīkki, vanasat

tanam sāyalait taruvān-aṇḍrō, - inam sāyat

tērai ūr nambar, magan tiṇ-tōḷ nerittu-aruḷum

nāraiyūr nambar magan ām.

(vanañjāya - 1. vannañju āya; 2. vanam sāya?)

(vanasattanam - 1. vanasattanam; 2. vanasattan am?)


pāḍal eṇ : 10

"nāraṇan mun-paṇindu ētta-niṇḍru, ellai naḍāviya at-

tēr aṇavum tirunāraiyūr mannu sivan-maganē;

kāraṇanē; em gaṇabadiyē; nal kari-vadanā;

āraṇa nuṇ-poruḷē" enbavarkku illai allalgaḷē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


नम्बियाण्डार् नम्बिगळ् - 11.31 - तिरुनारैयूर् विनायगर् इरट्टैमणि मालै - (songs 1-10)

(meter - वॆण्बा (odd numbered songs) & कट्टळैक् कलित्तुऱै (even numbered songs))


पाडल् ऎण् : 1

ऎन्नै निनैन्दु अडिमै कॊण्डु, ऎन् इडर् कॆडुत्तुत्,

तन्नै निनैयत् तरुगिण्ड्रान्, - पुन्नै

विरसु मगिऴ् सोलै वियन् नारैयूर् मुक्कण्

अरसु मगिऴ् अत्ति-मुगत्तान्.


पाडल् ऎण् : 2

मुगत्ताल् करियन् ऎण्ड्रालुम्, तनैये मुयण्ड्रवर्क्कु

मिगत्तान् वॆळियन् ऎण्ड्रे, मॆय्म्मै उन्नुम् विरुम्बु-अडियार्

अगत्तान्; तिगऴ्दरु नारैयूर् अम्मान् पयन्द ऎम्मान्;

उगत् तानवन्-तन् उडलम् पिळन्द ऒरु कॊम्बने.


पाडल् ऎण् : 3

कॊम्बु अनैय वळ्ळि कॊऴुनन् कुऱुगामे

वम्बु अनैय माङ्गनियै नारैयूर् - नम्बनैये

तन्न-वलम् सॆय्दु कॊळुम् ताऴ्-तडक्कैयाय् ऎन्; नोय्

पिन् अवलम् सॆय्वदु ऎन्नो? पेसु.


पाडल् ऎण् : 4

पेसत् तगादॆनप् पेय् ऎरुदुम् पॆरुच्चाळियुम् ऎण्ड्रु

एसत् तगुम्बडि एऱुवदे, इमैयाद मुक्कट्

कूसत् तगुम् तॊऴिल् नुङ्गैयुम् नुन्दैयुम् नीयुम्, इन्दत्

तेसत्तवर् तॊऴुम् नारैप्-पदियुळ् सिवक्कळिऱे.


पाडल् ऎण् : 5

कळिऱु मुगत्तवनाय्क्, कायम् सॆन्दीयिन्

ऒळिरुम् उरुक् कॊण्डदु ऎन्ने, - अळऱुदॊऱुम्

पिन् नारै ऊर्-आरल् आरुम् पॆरुम् पडुगर्

मन् नारैयूरान् मगन्.


पाडल् ऎण् : 6

मगत्तिनिल् वानवर् पल् कण् सिरम् तोळ् नॆरित्तरुळुम्,

सुगत्तिनिल् नीळ्-पॊऴिल् नारैप्-पदियुळ् सुरन्-मगऱ्‌कु

मुगत्तदु कै; अन्दक् कैयदु मूक्कु; अन्द मूक्कदनिन्

अगत्तदु वाय्; अन्द वायदु पोलुम् अडु-मरुप्पे.


पाडल् ऎण् : 7

मरुप्पै ऒरु कैक्-कॊण्डु नारैयूर् मन्नुम्

पॊरुप्पै अडि पोट्रत् तुणिन्दाल्, नॆरुप्पै

अरुन्द ऎण्णुगिण्ड्र ऎऱुम्बु-अण्ड्रे, अवरै

वरुन्द ऎण्णुगिण्ड्र मलम्.


पाडल् ऎण् : 8

मलम् सॆय्द वल्विनै नोक्कि, उलगै वलम्वरुम् अप्-

पुलम् सॆय्द काट्चिक् कुमरऱ्‌कु मुन्ने पुरि-सडैमेल्

सलम् सॆय्द नारैप्-पदि अरन् तन्नैक् कनि तरवे

वलञ्जॆय्दु कॊण्ड मदक्-कळिऱे, उन्नै वाऴ्त्तुवने.


पाडल् ऎण् : 9

वनञ्जाय वल्विनै-नोय् नीक्कि, वनसत्

तनम् सायलैत् तरुवान्-अण्ड्रो, - इनम् सायत्

तेरै ऊर् नम्बर्, मगन् तिण्-तोळ् नॆरित्तु-अरुळुम्

नारैयूर् नम्बर् मगन् आम्.

(वनञ्जाय - 1. वन्नञ्जु आय; 2. वनम् साय?)

(वनसत्तनम् - 1. वनसत्तनम्; 2. वनसत्तन् अम्?)


पाडल् ऎण् : 10

"नारणन् मुन्-पणिन्दु एत्त-निण्ड्रु, ऎल्लै नडाविय अत्-

तेर् अणवुम् तिरुनारैयूर् मन्नु सिवन्-मगने;

कारणने; ऎम् गणबदिये; नल् करि-वदना;

आरण नुण्-पॊरुळे" ऎन्बवर्क्कु इल्लै अल्लल्गळे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


నంబియాండార్ నంబిగళ్ - 11.31 - తిరునారైయూర్ వినాయగర్ ఇరట్టైమణి మాలై - (songs 1-10)

(meter - వెణ్బా (odd numbered songs) & కట్టళైక్ కలిత్తుఱై (even numbered songs))

పాడల్ ఎణ్ : 1

ఎన్నై నినైందు అడిమై కొండు, ఎన్ ఇడర్ కెడుత్తుత్,

తన్నై నినైయత్ తరుగిండ్రాన్, - పున్నై

విరసు మగిఴ్ సోలై వియన్ నారైయూర్ ముక్కణ్

అరసు మగిఴ్ అత్తి-ముగత్తాన్.


పాడల్ ఎణ్ : 2

ముగత్తాల్ కరియన్ ఎండ్రాలుం, తనైయే ముయండ్రవర్క్కు

మిగత్తాన్ వెళియన్ ఎండ్రే, మెయ్మ్మై ఉన్నుం విరుంబు-అడియార్

అగత్తాన్; తిగఴ్దరు నారైయూర్ అమ్మాన్ పయంద ఎమ్మాన్;

ఉగత్ తానవన్-తన్ ఉడలం పిళంద ఒరు కొంబనే.


పాడల్ ఎణ్ : 3

కొంబు అనైయ వళ్ళి కొఴునన్ కుఱుగామే

వంబు అనైయ మాంగనియై నారైయూర్ - నంబనైయే

తన్న-వలం సెయ్దు కొళుం తాఴ్-తడక్కైయాయ్ ఎన్; నోయ్

పిన్ అవలం సెయ్వదు ఎన్నో? పేసు.


పాడల్ ఎణ్ : 4

పేసత్ తగాదెనప్ పేయ్ ఎరుదుం పెరుచ్చాళియుం ఎండ్రు

ఏసత్ తగుంబడి ఏఱువదే, ఇమైయాద ముక్కట్

కూసత్ తగుం తొఴిల్ నుంగైయుం నుందైయుం నీయుం, ఇందత్

తేసత్తవర్ తొఴుం నారైప్-పదియుళ్ సివక్కళిఱే.


పాడల్ ఎణ్ : 5

కళిఱు ముగత్తవనాయ్క్, కాయం సెందీయిన్

ఒళిరుం ఉరుక్ కొండదు ఎన్నే, - అళఱుదొఱుం

పిన్ నారై ఊర్-ఆరల్ ఆరుం పెరుం పడుగర్

మన్ నారైయూరాన్ మగన్.


పాడల్ ఎణ్ : 6

మగత్తినిల్ వానవర్ పల్ కణ్ సిరం తోళ్ నెరిత్తరుళుం,

సుగత్తినిల్ నీళ్-పొఴిల్ నారైప్-పదియుళ్ సురన్-మగఱ్కు

ముగత్తదు కై; అందక్ కైయదు మూక్కు; అంద మూక్కదనిన్

అగత్తదు వాయ్; అంద వాయదు పోలుం అడు-మరుప్పే.


పాడల్ ఎణ్ : 7

మరుప్పై ఒరు కైక్-కొండు నారైయూర్ మన్నుం

పొరుప్పై అడి పోట్రత్ తుణిందాల్, నెరుప్పై

అరుంద ఎణ్ణుగిండ్ర ఎఱుంబు-అండ్రే, అవరై

వరుంద ఎణ్ణుగిండ్ర మలం.


పాడల్ ఎణ్ : 8

మలం సెయ్ద వల్వినై నోక్కి, ఉలగై వలమ్వరుం అప్-

పులం సెయ్ద కాట్చిక్ కుమరఱ్కు మున్నే పురి-సడైమేల్

సలం సెయ్ద నారైప్-పది అరన్ తన్నైక్ కని తరవే

వలంజెయ్దు కొండ మదక్-కళిఱే, ఉన్నై వాఴ్త్తువనే.


పాడల్ ఎణ్ : 9

వనంజాయ వల్వినై-నోయ్ నీక్కి, వనసత్

తనం సాయలైత్ తరువాన్-అండ్రో, - ఇనం సాయత్

తేరై ఊర్ నంబర్, మగన్ తిణ్-తోళ్ నెరిత్తు-అరుళుం

నారైయూర్ నంబర్ మగన్ ఆం.

(వనంజాయ - 1. వన్నంజు ఆయ; 2. వనం సాయ?)

(వనసత్తనం - 1. వనసత్తనం; 2. వనసత్తన్ అం?)


పాడల్ ఎణ్ : 10

"నారణన్ మున్-పణిందు ఏత్త-నిండ్రు, ఎల్లై నడావియ అత్-

తేర్ అణవుం తిరునారైయూర్ మన్ను సివన్-మగనే;

కారణనే; ఎం గణబదియే; నల్ కరి-వదనా;

ఆరణ నుణ్-పొరుళే" ఎన్బవర్క్కు ఇల్లై అల్లల్గళే.

================ ============


No comments:

Post a Comment