113) 7.7 - மத்த யானை ஏறி - maththa yAnai ERi
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – மத்த யானை ஏறி - எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)
sundarar tēvāram - padigam 7.7 – matta yānai ēṟi - edirgoḷbāḍi - (paṇ - indaḷam)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 7.7 – மத்த யானை ஏறி – matta yānai ēṟi
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_007.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/RgXY4bWqwlg
Part-2: https://youtu.be/0lvimHNbBQw
English discussion:
Part-1:
Part-2:
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)
எதிர்கொள்பாடி (மேலைத் திருமணஞ்சேரி) - இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 16 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரிலே உள்ள இன்னொரு பாடல் பெற்ற தலமான திருமணஞ்சேரி (கீழைத் திருமணஞ்சேரி) கோயில் பலரும் அறிந்த ஒன்று.
பதிகக் குறிப்பு : இப்பதிகத்தைத் திருவெதிர்கொள்பாடி என்ற தலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபொழுது வழியில் சுந்தரர் பாடியருளினார். மனத்தை, எதிர்கொள்பாடி ஈசனை அடைந்து வழிபட்டு உய்யும்படி அழைத்து அருளினார்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)
(தான தானா தான தானா தான தனதானா - என்ற சந்தம்)
("தான தனதானா" - may also come as "தானன தானதனா" / "தானன தானானா")
பாடல் எண் : 1
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 2
தோற்ற முண்டேல் மரண முண்டு துயர மனைவாழ்க்கை
மாற்ற முண்டேல் வஞ்ச முண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 3
செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்தொல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுட் பட்டு மயங்காதே
கொடிகொ ளேற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 4
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவ ராலு மிகழப் பட்டிங் கல்லலில் வீழாதே
மூவ ராயும் இருவ ராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 5
அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப்பான் பொருட்டால்
சிரித்த பல்வாய் வெண்டலை போய் ஊர்ப்புறஞ் சேராமுன்
வரிக்கொ டுத்தி வாள ரக்கர் வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 6
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மொ டாடி நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 7
கூச னீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி
வாச மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 8
இன்ப முண்டேல் துன்ப முண்டு ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்னால் மோழை மையாம் முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை யடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 9
தந்தை யாருந் தவ்வை யாரு மெட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டும்
சிந்தை யீரே னெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 10
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன மாலய னும்அறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதியெம் மாதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே.
பாடல் எண் : 11
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யானுறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே.
==================
Word separated version:
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.7 – எதிர்கொள்பாடி - (பண் - இந்தளம்)
(தான தானா தான தானா தான தனதானா - என்ற சந்தம்)
("தான தனதானா" - may also come as "தானன தானதனா" / "தானன தானானா")
பாடல் எண் : 1
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்,
செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்;
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின் மனத்தீரே;
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 2
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு; துயரம் மனைவாழ்க்கை;
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு; நெஞ்ச மனத்தீரே;
நீற்றர், ஏற்றர், நீல கண்டர், நிறை-புனல் நீள்-சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 3
செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன்,
வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே,
கொடிகொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 4
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே;
யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே,
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 5
அரித்து நம்மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான் பொருட்டால்,
சிரித்த பல்-வாய் வெண்டலை போய் ஊர்ப்புறம் சேராமுன்,
வரிக்கொள் துத்தி, வாள்-அரக்கர் வஞ்ச மதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 6
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர், பொத்து அடைப்பான் பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மொடு ஆடி நீரும் மனத்தீரே;
நைய வேண்டா; இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும்
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 7
கூசல் நீக்கிக், குற்றம் நீக்கிச், செற்றம் மனம் நீக்கி,
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பு அணிந்து ஏறு ஏறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 8
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு, ஏழை மனைவாழ்க்கை;
முன்பு சொன்னால் மோழைமை ஆம் முட்டை மனத்தீரே;
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 9
தந்தையாரும் தவ்வையாரும் எள்-தனைச் சார்வு ஆகார்;
வந்து நம்மோடு உள் அளாவி வான-நெறி காட்டும்
சிந்தையீரேல், நெஞ்சினீரே, திகழ்-மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 10
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்;
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியாச்,
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணாச் சோதி; எம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
பாடல் எண் : 11
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும்,
பத்தர் பந்தத்து எதிர்கொள்பாடிப் பரமனையே பணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன், சடையன்-அவன் சிறுவன்,
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே.
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
sundarar tēvāram - padigam 7.7 – edirgoḷbāḍi - (paṇ - indaḷam)
(tāna tānā tāna tānā tāna tanadānā - Rhythm)
("tāna tanadānā" - may also come as "tānana tānadanā" / "tānana tānānā")
pāḍal eṇ : 1
matta yānai ēṟi mannar sūḻa varuvīrgāḷ,
setta pōdil ārum illai; sindaiyuḷ vaimmin-gaḷ;
vaitta uḷḷam māṭra vēṇḍā; vammin manattīrē;
attar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 2
tōṭram uṇḍēl maraṇam uṇḍu; tuyaram manaivāḻkkai;
māṭram uṇḍēl vañjam uṇḍu; neñja manattīrē;
nīṭrar, ēṭrar, nīla kaṇḍar, niṟai-punal nīḷ-saḍaimēl
ēṭrar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 3
seḍigoḷ ākkai seṇḍru seṇḍru tēyndu ollai vīḻāmun,
vaḍigoḷ kaṇṇār vañjanaiyuḷ paṭṭu mayaṅgādē,
koḍigoḷ ēṭrar, veḷḷai nīṭrar, kōvaṇa āḍaiyuḍai
aḍigaḷ kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 4
vāḻvar kaṇḍīr nammuḷ aivar vañja manattīrē;
yāvarālum igaḻappaṭṭu iṅgu allalil vīḻādē,
mūvarāyum iruvarāyum mudalvan avanēyām
tēvar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 5
arittu nammēl aivar vandu iṅgu āṟalaippān poruṭṭāl,
siritta pal-vāy veṇḍalai pōy ūrppuṟam sērāmun,
varikkoḷ tutti, vāḷ-arakkar vañja madil mūṇḍrum
eritta villi edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 6
poyyar kaṇḍīr vāḻkkaiyāḷar, pottu aḍaippān poruṭṭāl
maiyal koṇḍīr emmoḍu āḍi nīrum manattīrē;
naiya vēṇḍā; immai ētta ammai namakku aruḷum
aiyar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 7
kūsal nīkkik, kuṭram nīkkic, ceṭram manam nīkki,
vāsam malgu kuḻalinārgaḷ vañja manaivāḻkkai
āsai nīkki, anbu sērtti, enbu aṇindu ēṟu ēṟum
īsar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 8
inbam uṇḍēl tunbam uṇḍu, ēḻai manaivāḻkkai;
munbu sonnāl mōḻaimai ām muṭṭai manattīrē;
anbar allāl aṇigoḷ koṇḍrai aḍigaḷ aḍi sērār
enbar kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 9
tandaiyārum tavvaiyārum eḷ-tanaic cārvu āgār;
vandu nammōḍu uḷ aḷāvi vāna-neṟi kāṭṭum
sindaiyīrēl, neñjinīrē, tigaḻ-madiyam sūḍum
endai kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 10
kurudi sōra ānaiyin tōl koṇḍa kuḻaṟcaḍaiyan;
marudu kīṟi ūḍu pōna māl ayanum aṟiyāc,
curudiyārkkum solla oṇṇāc cōdi; em ādiyān
karudu kōyil edirgoḷbāḍi enbadu aḍaivōmē.
pāḍal eṇ : 11
muttu nīṭrup pavaḷa mēnic ceñjaḍaiyān uṟaiyum,
pattar pandattu edirgoḷbāḍip paramanaiyē paṇiyac
cittam vaitta toṇḍar toṇḍan, saḍaiyan-avan siṟuvan,
pattan ūran pāḍal vallār pādam paṇivārē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.7 – ऎदिर्गॊळ्बाडि - (पण् - इन्दळम्)
(तान ताना तान ताना तान तनदाना - Rhythm)
("तान तनदाना" - may also come as "तानन तानदना" / "तानन तानाना")
पाडल् ऎण् : 1
मत्त यानै एऱि मन्नर् सूऴ वरुवीर्गाळ्,
सॆत्त पोदिल् आरुम् इल्लै; सिन्दैयुळ् वैम्मिन्गळ्;
वैत्त उळ्ळम् माट्र वेण्डा; वम्मिन् मनत्तीरे;
अत्तर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 2
तोट्रम् उण्डेल् मरणम् उण्डु; तुयरम् मनैवाऴ्क्कै;
माट्रम् उण्डेल् वञ्जम् उण्डु; नॆञ्ज मनत्तीरे;
नीट्रर्, एट्रर्, नील कण्डर्, निऱै-पुनल् नीळ्-सडैमेल्
एट्रर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 3
सॆडिगॊळ् आक्कै सॆण्ड्रु सॆण्ड्रु तेय्न्दु ऒल्लै वीऴामुन्,
वडिगॊळ् कण्णार् वञ्जनैयुळ् पट्टु मयङ्गादे,
कॊडिगॊळ् एट्रर्, वॆळ्ळै नीट्रर्, कोवण आडैयुडै
अडिगळ् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 4
वाऴ्वर् कण्डीर् नम्मुळ् ऐवर् वञ्ज मनत्तीरे;
यावरालुम् इगऴप्पट्टु इङ्गु अल्ललिल् वीऴादे,
मूवरायुम् इरुवरायुम् मुदल्वन् अवनेयाम्
तेवर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 5
अरित्तु नम्मेल् ऐवर् वन्दु इङ्गु आऱलैप्पान् पॊरुट्टाल्,
सिरित्त पल्-वाय् वॆण्डलै पोय् ऊर्प्पुऱम् सेरामुन्,
वरिक्कॊळ् तुत्ति, वाळ्-अरक्कर् वञ्ज मदिल् मूण्ड्रुम्
ऎरित्त विल्लि ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 6
पॊय्यर् कण्डीर् वाऴ्क्कैयाळर्, पॊत्तु अडैप्पान् पॊरुट्टाल्
मैयल् कॊण्डीर् ऎम्मॊडु आडि नीरुम् मनत्तीरे;
नैय वेण्डा; इम्मै एत्त अम्मै नमक्कु अरुळुम्
ऐयर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 7
कूसल् नीक्किक्, कुट्रम् नीक्किच्, चॆट्रम् मनम् नीक्कि,
वासम् मल्गु कुऴलिनार्गळ् वञ्ज मनैवाऴ्क्कै
आसै नीक्कि, अन्बु सेर्त्ति, ऎन्बु अणिन्दु एऱु एऱुम्
ईसर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 8
इन्बम् उण्डेल् तुन्बम् उण्डु, एऴै मनैवाऴ्क्कै;
मुन्बु सॊन्नाल् मोऴैमै आम् मुट्टै मनत्तीरे;
अन्बर् अल्लाल् अणिगॊळ् कॊण्ड्रै अडिगळ् अडि सेरार्
ऎन्बर् कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 9
तन्दैयारुम् तव्वैयारुम् ऎळ्-तनैच् चार्वु आगार्;
वन्दु नम्मोडु उळ् अळावि वान-नॆऱि काट्टुम्
सिन्दैयीरेल्, नॆञ्जिनीरे, तिगऴ्-मदियम् सूडुम्
ऎन्दै कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 10
कुरुदि सोर आनैयिन् तोल् कॊण्ड कुऴऱ्चडैयन्;
मरुदु कीऱि ऊडु पोन माल् अयनुम् अऱियाच्,
चुरुदियार्क्कुम् सॊल्ल ऒण्णाच् चोदि; ऎम् आदियान्
करुदु कोयिल् ऎदिर्गॊळ्बाडि ऎन्बदु अडैवोमे.
पाडल् ऎण् : 11
मुत्तु नीट्रुप् पवळ मेनिच् चॆञ्जडैयान् उऱैयुम्,
पत्तर् पन्दत्तु ऎदिर्गॊळ्बाडिप् परमनैये पणियच्
चित्तम् वैत्त तॊण्डर् तॊण्डन्, सडैयन्-अवन् सिऱुवन्,
पत्तन् ऊरन् पाडल् वल्लार् पादम् पणिवारे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
సుందరర్ తేవారం - పదిగం 7.7 – ఎదిర్గొళ్బాడి - (పణ్ - ఇందళం)
(తాన తానా తాన తానా తాన తనదానా - Rhythm)
("తాన తనదానా" - may also come as "తానన తానదనా" / "తానన తానానా")
పాడల్ ఎణ్ : 1
మత్త యానై ఏఱి మన్నర్ సూఴ వరువీర్గాళ్,
సెత్త పోదిల్ ఆరుం ఇల్లై; సిందైయుళ్ వైమ్మిన్గళ్;
వైత్త ఉళ్ళం మాట్ర వేండా; వమ్మిన్ మనత్తీరే;
అత్తర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 2
తోట్రం ఉండేల్ మరణం ఉండు; తుయరం మనైవాఴ్క్కై;
మాట్రం ఉండేల్ వంజం ఉండు; నెంజ మనత్తీరే;
నీట్రర్, ఏట్రర్, నీల కండర్, నిఱై-పునల్ నీళ్-సడైమేల్
ఏట్రర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 3
సెడిగొళ్ ఆక్కై సెండ్రు సెండ్రు తేయ్న్దు ఒల్లై వీఴామున్,
వడిగొళ్ కణ్ణార్ వంజనైయుళ్ పట్టు మయంగాదే,
కొడిగొళ్ ఏట్రర్, వెళ్ళై నీట్రర్, కోవణ ఆడైయుడై
అడిగళ్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 4
వాఴ్వర్ కండీర్ నమ్ముళ్ ఐవర్ వంజ మనత్తీరే;
యావరాలుం ఇగఴప్పట్టు ఇంగు అల్లలిల్ వీఴాదే,
మూవరాయుం ఇరువరాయుం ముదల్వన్ అవనేయాం
తేవర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 5
అరిత్తు నమ్మేల్ ఐవర్ వందు ఇంగు ఆఱలైప్పాన్ పొరుట్టాల్,
సిరిత్త పల్-వాయ్ వెండలై పోయ్ ఊర్ప్పుఱం సేరామున్,
వరిక్కొళ్ తుత్తి, వాళ్-అరక్కర్ వంజ మదిల్ మూండ్రుం
ఎరిత్త విల్లి ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 6
పొయ్యర్ కండీర్ వాఴ్క్కైయాళర్, పొత్తు అడైప్పాన్ పొరుట్టాల్
మైయల్ కొండీర్ ఎమ్మొడు ఆడి నీరుం మనత్తీరే;
నైయ వేండా; ఇమ్మై ఏత్త అమ్మై నమక్కు అరుళుం
ఐయర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 7
కూసల్ నీక్కిక్, కుట్రం నీక్కిచ్, చెట్రం మనం నీక్కి,
వాసం మల్గు కుఴలినార్గళ్ వంజ మనైవాఴ్క్కై
ఆసై నీక్కి, అన్బు సేర్త్తి, ఎన్బు అణిందు ఏఱు ఏఱుం
ఈసర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 8
ఇన్బం ఉండేల్ తున్బం ఉండు, ఏఴై మనైవాఴ్క్కై;
మున్బు సొన్నాల్ మోఴైమై ఆం ముట్టై మనత్తీరే;
అన్బర్ అల్లాల్ అణిగొళ్ కొండ్రై అడిగళ్ అడి సేరార్
ఎన్బర్ కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 9
తందైయారుం తవ్వైయారుం ఎళ్-తనైచ్ చార్వు ఆగార్;
వందు నమ్మోడు ఉళ్ అళావి వాన-నెఱి కాట్టుం
సిందైయీరేల్, నెంజినీరే, తిగఴ్-మదియం సూడుం
ఎందై కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 10
కురుది సోర ఆనైయిన్ తోల్ కొండ కుఴఱ్చడైయన్;
మరుదు కీఱి ఊడు పోన మాల్ అయనుం అఱియాచ్,
చురుదియార్క్కుం సొల్ల ఒణ్ణాచ్ చోది; ఎం ఆదియాన్
కరుదు కోయిల్ ఎదిర్గొళ్బాడి ఎన్బదు అడైవోమే.
పాడల్ ఎణ్ : 11
ముత్తు నీట్రుప్ పవళ మేనిచ్ చెంజడైయాన్ ఉఱైయుం,
పత్తర్ పందత్తు ఎదిర్గొళ్బాడిప్ పరమనైయే పణియచ్
చిత్తం వైత్త తొండర్ తొండన్, సడైయన్-అవన్ సిఱువన్,
పత్తన్ ఊరన్ పాడల్ వల్లార్ పాదం పణివారే.
================ ============
No comments:
Post a Comment