120) 7.17 - கோவலன் நான்முகன் - திருநாவலூர் - kOvalan nAnmugan - thirunavalur
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.17 - கோவலன் நான்முகன் - (திருநாவலூர்) - (பண் - நட்டராகம்)
sundarar tēvāram - padigam 7.17 - kōvalan nānmugan - (tirunāvalūr) - (paṇ - naṭṭarāgam)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 7.17 - கோவலன் நான்முகன் - kōvalan nānmugan
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_017.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/zXddEa3Dwuw
Part-2: https://youtu.be/ErSZqqEPu3Y
English discussion:
Part-1:
Part-2:
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.17 – திருநாவலூர் - (பண் - நட்டராகம்)
திருநாவலூர் -
இது சுந்தரர் அவதரித்த தலம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து தெற்கே சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது.
இப்பதிகத்தில் பல பாடல்களில் சுந்தரர் சரிதத்திற்கு அகச்சான்றுகள் காணலாம். ஓரிரு பாடல்கள் தவிர மற்ற எல்லாப் பாடல்களிலும் திருவெண்ணெய்நல்லூரும் சொல்லப்பெறுகின்றது. (அதனால் இப்பதிகத்திற்குத் "திருவெண்ணெய்நல்லூரும் - திருநாவலூரும்" என்று பதிகத்தின் தலைப்பில் தலப்பெயராகச் சில பதிப்புகளில் சுட்டுகின்றனர்).
My notes on this padhigam:
ஈசன் ஆட்கொண்டு அருளியதை ஒவ்வொரு பாடலிலும் குறிக்கின்றார்;
"நம் திருநாவலூர்" என்று பாடுவதால் இப்பதிகத்தை உள்ளூர் அன்பர்கள் சூழப் பாடினார் என்று உணரலாம்; அவர் பிறந்து வளர்ந்த ஊர் என்பதும் உணரலாம்;
கடைசிப் பாடலில் "நரசிங்க முனையரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர்" என்று சொல்வதன்மூலம் "நரசிங்க முனையரையன்" அவரை வளர்த்தவர் என்றும் அவ்வூரில் அவர் அச்சமயத்தில் ஆட்சிசெய்துகொண்டிருந்தார் என்றும் உணரலாம்;
----------
Sundarar comes to Thirunavalur after the Thiruvenneynallur events and sings a padhigam but that padhigam is not available
# 224 - பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 224
நாவலர்கோ னாரூரன் றனைவெண்ணெய் நல்லூரின்
மேவுமருட் டுறையமர்ந்த வேதியராட் கொண்டதற்பின்
பூவலருந் தடம்பொய்கைத் திருநாவ லூர்புகுந்து
தேவர்பிரான் றனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்.
Sundarar visits Thirunavalur after several years
# 3322 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 168
திருத்தினைமா நகர்மேவுஞ் சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்
நிருத்தனா ரமர்ந்தருளு நிறைபதிகள் பலவணங்கிப்
பொருத்தமிகுந் திருத்தொண்டர் போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரு மாதரவாற் கைதொழச்சென் றெய்தினார்.
He receives a grand welcome at Thirunavalur
# 3323 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 169
"திருநாவ லூர்மன்னர் சேர்கின்றா" ரெனக்கேட்டுப்
பெருநாமப் பதியோருந் தொண்டர்களும் "பெருவாழ்வு
வருநா"ளென் றலங்கரித்து வந்தெதிர்கொண் டுள்ளணையச்
செருநாகத் துரிபுனைந்தார் செழுங்கோயி லுள்ளணைந்தார்.
Sundarar sings "kOvalan nAnmugan" padhigam
# 3324 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 170
மேவியவத் தொண்டர்குழா மிடைந்"தர" வென்றெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப முதல்வனார் முன்பெய்தி
ஆவியினு மடைவுடையா ரடிக்கமலத் தருள்போற்றிக்
"கோவலனான் முக" னெடுத்துப் பாடியே கும்பிட்டார்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.17 – திருநாவலூர் - (பண் - நட்டராகம்)
(தானன தானன தானன தானன தானதனா - என்ற சந்தம்;
"தானதனா" may also come as - "தானதான")
பாடல் எண் : 1
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 2
தன்மையி னால்அடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 3
வேகங்கொண் டோடிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்கடற் கோடியின் மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 4
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 5
உம்பரார் கோனைத்திண் தோள்முரித் தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 6
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 7
தாயவ ளாய்த்தந்தை ஆகிச் சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக் கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 8
வாயாடி மாமறை ஓதிஓர் வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின் பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 9
படமாடு பாம்பணை யானுக்கும் பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 10
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத் தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
பாடல் எண் : 11
நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும் ஊர்அணி நாவலூர்என்
றோதநற் றக்கவன் றொண்டன்ஆ ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினை கட்டறுமே. *
(* Variant reading: தம்வினைக் கட்டறுமே)
==================== ===============
Word separated version:
Sundarar comes to Thirunavalur after the Thiruvenneynallur events and sings a padhigam but that padhigam is not available
# 224 - பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 224
நாவலர்-கோன் ஆரூரன்-தனை வெண்ணெய் நல்லூரின்
மேவும் அருட்டுறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டதற்பின்
பூ அலரும் தடம்-பொய்கைத் திருநாவலூர் புகுந்து
தேவர்-பிரான்-தனைப் பணிந்து திருப்பதிகம் பாடினார்.
Sundarar visits Thirunavalur after several years
# 3322 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 168
திருத்தினை மாநகர் மேவும் சிவக்கொழுந்தைப் பணிந்து-போய்,
நிருத்தனார் அமர்ந்தருளும் நிறை-பதிகள் பல வணங்கிப்,
பொருத்தம் மிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கைதொழச் சென்று-எய்தினார்.
He receives a grand welcome at Thirunavalur
# 3323 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 169
"திருநாவலூர் மன்னர் சேர்கின்றார்" எனக் கேட்டுப்,
பெரு-நாமப் பதியோரும் தொண்டர்களும் "பெருவாழ்வு
வரு-நாள்" என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள்-அணையச்
செரு-நாகத்து உரி புனைந்தார் செழுங்கோயிலுள் அணைந்தார்.
Sundarar sings "kōvalan nānmugan" padhigam
# 3324 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 170
மேவிய அத்-தொண்டர்-குழாம் மிடைந்து "அர" என்று எழும் ஓசை
மூவுலகும் போய்-ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவு-உடையார் அடிக்-கமலத்து அருள் போற்றிக்
"கோவலன் நான்முகன்" எடுத்துப் பாடியே கும்பிட்டார்.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.17 – திருநாவலூர் - (பண் - நட்டராகம்)
(தானன தானன தானன தானன தானதனா - என்ற சந்தம்;
"தானதனா" may also come as - "தானதான")
பாடல் எண் : 1
கோவலன் நான்முகன் வானவர்-கோனும் குற்றேவல் செய்ய,
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர்-அம்பினால்;
ஏ-வலனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து-எனை ஆளும்-கொண்ட
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 2
தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்;
புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னைப் போகம் புணர்த்த
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 3
வேகம் கொண்டு ஓடிய வெள்-விடை ஏறி, ஓர் மெல்லியலை
ஆகம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்;
போகம் கொண்டார், கடல் கோடியில் மோடியைப்; பூண்பதாக
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 4
அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில்; சேவினை ஆட்சி கொண்டார்;
தஞ்சம் கொண்டார் அடிச் சண்டியைத் தாம் என வைத்து-உகந்தார்;
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டு;
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 5
உம்பரார் கோனைத் திண்-தோள் முரித்தார்; உரித்தார் களிற்றைச்;
செம்பொனார் தீவண்ணர்; தூ-வண்ண நீற்றர்; ஓர் ஆவணத்தால்
எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட,
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 6
கோட்டம் கொண்டார் குடமூக்கிலும் கோவலும் கோத்திட்டையும்;
வேட்டம் கொண்டார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்டார்;
ஆட்டம் கொண்டார் தில்லைச் சிற்றம்பலத்தே; அருக்கனை முன்
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 7
தாயவளாய்த் தந்தை ஆகிச், சாதல் பிறத்தல் இன்றிப்
போயகலாமைத் தன் பொன்னடிக்கு என்னைப் பொருந்தவைத்த
வேயவனார்**, வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
(** வேயவனார் / ஏயவனார் - Alternative word separation);
பாடல் எண் : 8
வாயாடி, மா-மறை ஓதி, ஓர் வேதியனாகி வந்து,
தீயாடியார், சினக் கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய்
வேயாடியார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயாடியார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 9
படம் ஆடு பாம்பு-அணையானுக்கும், பாவை-நல்லாள் தனக்கும்,
வடம் ஆடு மால்-விடை ஏற்றுக்கும் பாகனாய், வந்து ஒருநாள்
இடம் ஆடியார், வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நடமாடியார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 10
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்;
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல்-வெண்ணெயூர் ஆளும் கொண்டார்;
தடுக்க ஒண்ணாததோர் வேழத்தினை உரித்திட்டு உமையை
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திருநாவலூரே.
பாடல் எண் : 11
நாதனுக்கு ஊர், நமக்கு ஊர், நரசிங்க முனையரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர், அணி நாவலூர் என்று
ஓத நற்றக்க வன்றொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினை கட்டு அறுமே. *
(* Variant reading: வினைக்கட்டு அறுமே)
==================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sundarar comes to Thirunavalur after the Thiruvenneynallur events and sings a padhigam but that padhigam is not available
# 224 - periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 224
nāvalar-kōn ārūran-tanai veṇṇey nallūrin
mēvum aruṭṭuṟai amarnda vēdiyar āṭkoṇḍadaṟpin
pū alarum taḍam-poygait tirunāvalūr pugundu
dēvar-pirān-tanaip paṇindu tiruppadigam pāḍinār.
Sundarar visits Thirunavalur after several years
# 3322 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 168
tiruttinai mānagar mēvum sivakkoḻundaip paṇindu-pōy,
niruttanār amarndaruḷum niṟai-padigaḷ pala vaṇaṅgip,
poruttam migum tiruttoṇḍar pōṭru tirunāvalūr
karuttil varum ādaravāl kaidoḻac ceṇḍru-eydinār.
He receives a grand welcome at Thirunavalur
# 3323 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 169
"tirunāvalūr mannar sērgiṇḍrār" enak kēṭṭup,
peru-nāmap padiyōrum toṇḍargaḷum "peruvāḻvu
varu-nāḷ" eṇḍru alaṅgarittu vandu edirgoṇḍu uḷ-aṇaiyac
ceru-nāgattu uri punaindār seḻuṅgōyiluḷ aṇaindār.
Sundarar sings "kōvalan nānmugan" padhigam
# 3324 - periya purāṇam - ēyargōn kalikkāma nāyanār purāṇam - 170
mēviya at-toṇḍar-kuḻām miḍaindu "ara" eṇḍru eḻum ōsai
mūvulagum pōy-olippa mudalvanār munbu eydi
āviyinum aḍaivu-uḍaiyār aḍik-kamalattu aruḷ pōṭrik
"kōvalan nānmugan" eḍuttup pāḍiyē kumbiṭṭār.
sundarar tēvāram - padigam 7.17 – tirunāvalūr - (paṇ - naṭṭarāgam)
(tānana tānana tānana tānana tānadanā - Rhythm;
"tānadanā" may also come as - "tānadāna")
pāḍal eṇ : 1
kōvalan nānmugan vānavar-kōnum kuṭrēval seyya,
mēvalar muppuram tī eḻuvittavar ōr-ambināl;
ē-valanār; veṇṇey nallūril vaittu-enai āḷum-koṇḍa
nāvalanārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 2
tanmaiyināl aḍiyēnait tām āṭkoṇḍa nāḷ sabaimun
vanmaigaḷ pēsiḍa vaṇḍroṇḍan enbadōr vāḻvu tandār;
punmaigaḷ pēsavum ponnait tandu ennaip pōgam puṇartta
nanmaiyinārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 3
vēgam koṇḍu ōḍiya veḷ-viḍai ēṟi, ōr melliyalai
āgam koṇḍār; veṇṇey nallūril vaittu enai āḷum koṇḍār;
bōgam koṇḍār, kaḍal kōḍiyil mōḍiyaip; pūṇbadāga
nāgam koṇḍārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 4
añjum koṇḍu āḍuvar āvinil; sēvinai āṭci koṇḍār;
tañjam koṇḍār aḍic caṇḍiyait tām ena vaittu-ugandār;
neñjam koṇḍār veṇṇey nallūril vaittu enai āḷum koṇḍu;
nañjam koṇḍārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 5
umbarār kōnait tiṇ-tōḷ murittār; urittār kaḷiṭraic;
cembonār tīvaṇṇar; tū-vaṇṇa nīṭrar; ōr āvaṇattāl
embirānār veṇṇey nallūril vaittu enai āḷum koṇḍa,
nambirānārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 6
kōṭṭam koṇḍār kuḍamūkkilum kōvalum kōttiṭṭaiyum;
vēṭṭam koṇḍār; veṇṇey nallūril vaittu enai āḷum koṇḍār;
āṭṭam koṇḍār tillaic ciṭrambalattē; arukkanai mun
nāṭṭam koṇḍārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 7
tāyavaḷāyt tandai āgic, cādal piṟattal iṇḍrip
pōyagalāmait tan ponnaḍikku ennaip porundavaitta
vēyavanār**, veṇṇey nallūril vaittu enai āḷum koṇḍa
nāyaganārkku iḍam āvadu nam tirunāvalūrē.
(** vēyavanār / ēyavanār - Alternative word separation);
pāḍal eṇ : 8
vāyāḍi, mā-maṟai ōdi, ōr vēdiyanāgi vandu,
tīyāḍiyār, sinak kēḻalin pin seṇḍru ōr vēḍuvanāy
vēyāḍiyār, veṇṇey nallūril vaittu enai āḷum koṇḍa
nāyāḍiyārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 9
paḍam āḍu pāmbu-aṇaiyānukkum, pāvai-nallāḷ tanakkum,
vaḍam āḍu māl-viḍai ēṭrukkum pāganāy, vandu orunāḷ
iḍam āḍiyār, veṇṇey nallūril vaittu enai āḷum koṇḍa
naḍamāḍiyārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 10
miḍukku uṇḍu eṇḍru ōḍi ōr veṟpu eḍuttān valiyai nerittār;
aḍakkam koṇḍu āvaṇam kāṭṭi nal-veṇṇeyūr āḷum koṇḍār;
taḍukka oṇṇādadōr vēḻattinai urittiṭṭu umaiyai
naḍukkam kaṇḍārkku iḍam āvadu nam tirunāvalūrē.
pāḍal eṇ : 11
nādanukku ūr, namakku ūr, narasiṅga munaiyaraiyan
ādarittu īsanukku āṭceyum ūr, aṇi nāvalūr eṇḍru
ōda naṭrakka vaṇḍroṇḍan ārūran uraitta tamiḻ
kādalittum kaṭrum kēṭpavar tam vinai kaṭṭu aṟumē. *
(* Variant reading: vinaikkaṭṭu aṟumē)
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sundarar comes to Thirunavalur after the Thiruvenneynallur events and sings a padhigam but that padhigam is not available
# 224 - पॆरिय पुराणम् - तडुत्ताट्कॊण्ड पुराणम् - 224
नावलर्-कोन् आरूरन्-तनै वॆण्णॆय् नल्लूरिन्
मेवुम् अरुट्टुऱै अमर्न्द वेदियर् आट्कॊण्डदऱ्पिन्
पू अलरुम् तडम्-पॊय्गैत् तिरुनावलूर् पुगुन्दु
देवर्-पिरान्-तनैप् पणिन्दु तिरुप्पदिगम् पाडिनार्.
Sundarar visits Thirunavalur after several years
# 3322 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 168
तिरुत्तिनै मानगर् मेवुम् सिवक्कॊऴुन्दैप् पणिन्दु-पोय्,
निरुत्तनार् अमर्न्दरुळुम् निऱै-पदिगळ् पल वणङ्गिप्,
पॊरुत्तम् मिगुम् तिरुत्तॊण्डर् पोट्रु तिरुनावलूर्
करुत्तिल् वरुम् आदरवाल् कैदॊऴच् चॆण्ड्रु-ऎय्दिनार्.
He receives a grand welcome at Thirunavalur
# 3323 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 169
"तिरुनावलूर् मन्नर् सेर्गिण्ड्रार्" ऎनक् केट्टुप्,
पॆरु-नामप् पदियोरुम् तॊण्डर्गळुम् "पॆरुवाऴ्वु
वरु-नाळ्" ऎण्ड्रु अलङ्गरित्तु वन्दु ऎदिर्गॊण्डु उळ्-अणैयच्
चॆरु-नागत्तु उरि पुनैन्दार् सॆऴुङ्गोयिलुळ् अणैन्दार्.
Sundarar sings "kōvalan nānmugan" padhigam
# 3324 - पॆरिय पुराणम् - एयर्गोन् कलिक्काम नायनार् पुराणम् - 170
मेविय अत्-तॊण्डर्-कुऴाम् मिडैन्दु "अर" ऎण्ड्रु ऎऴुम् ओसै
मूवुलगुम् पोय्-ऒलिप्प मुदल्वनार् मुन्बु ऎय्दि
आवियिनुम् अडैवु-उडैयार् अडिक्-कमलत्तु अरुळ् पोट्रिक्
"कोवलन् नान्मुगन्" ऎडुत्तुप् पाडिये कुम्बिट्टार्.
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.17 – तिरुनावलूर् - (पण् - नट्टरागम्)
(तानन तानन तानन तानन तानदना - Rhythm;
"तानदना" may also come as - "तानदान")
पाडल् ऎण् : 1
कोवलन् नान्मुगन् वानवर्-कोनुम् कुट्रेवल् सॆय्य,
मेवलर् मुप्पुरम् ती ऎऴुवित्तवर् ओर्-अम्बिनाल्;
ए-वलनार्; वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु-ऎनै आळुम्-कॊण्ड
नावलनार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 2
तन्मैयिनाल् अडियेनैत् ताम् आट्कॊण्ड नाळ् सबैमुन्
वन्मैगळ् पेसिड वण्ड्रॊण्डन् ऎन्बदोर् वाऴ्वु तन्दार्;
पुन्मैगळ् पेसवुम् पॊन्नैत् तन्दु ऎन्नैप् पोगम् पुणर्त्त
नन्मैयिनार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 3
वेगम् कॊण्डु ओडिय वॆळ्-विडै एऱि, ओर् मॆल्लियलै
आगम् कॊण्डार्; वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु ऎनै आळुम् कॊण्डार्;
बोगम् कॊण्डार्, कडल् कोडियिल् मोडियैप्; पूण्बदाग
नागम् कॊण्डार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 4
अञ्जुम् कॊण्डु आडुवर् आविनिल्; सेविनै आट्चि कॊण्डार्;
तञ्जम् कॊण्डार् अडिच् चण्डियैत् ताम् ऎन वैत्तु-उगन्दार्;
नॆञ्जम् कॊण्डार् वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु ऎनै आळुम् कॊण्डु;
नञ्जम् कॊण्डार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 5
उम्बरार् कोनैत् तिण्-तोळ् मुरित्तार्; उरित्तार् कळिट्रैच्;
चॆम्बॊनार् तीवण्णर्; तू-वण्ण नीट्रर्; ओर् आवणत्ताल्
ऎम्बिरानार् वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु ऎनै आळुम् कॊण्ड,
नम्बिरानार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 6
कोट्टम् कॊण्डार् कुडमूक्किलुम् कोवलुम् कोत्तिट्टैयुम्;
वेट्टम् कॊण्डार्; वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु ऎनै आळुम् कॊण्डार्;
आट्टम् कॊण्डार् तिल्लैच् चिट्रम्बलत्ते; अरुक्कनै मुन्
नाट्टम् कॊण्डार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 7
तायवळाय्त् तन्दै आगिच्, चादल् पिऱत्तल् इण्ड्रिप्
पोयगलामैत् तन् पॊन्नडिक्कु ऎन्नैप् पॊरुन्दवैत्त
वेयवनार्**, वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु ऎनै आळुम् कॊण्ड
नायगनार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
(** वेयवनार् / एयवनार् - Alternative word separation);
पाडल् ऎण् : 8
वायाडि, मा-मऱै ओदि, ओर् वेदियनागि वन्दु,
तीयाडियार्, सिनक् केऴलिन् पिन् सॆण्ड्रु ओर् वेडुवनाय्
वेयाडियार्, वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु ऎनै आळुम् कॊण्ड
नायाडियार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 9
पडम् आडु पाम्बु-अणैयानुक्कुम्, पावै-नल्लाळ् तनक्कुम्,
वडम् आडु माल्-विडै एट्रुक्कुम् पागनाय्, वन्दु ऒरुनाळ्
इडम् आडियार्, वॆण्णॆय् नल्लूरिल् वैत्तु ऎनै आळुम् कॊण्ड
नडमाडियार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 10
मिडुक्कु उण्डु ऎण्ड्रु ओडि ओर् वॆऱ्पु ऎडुत्तान् वलियै नॆरित्तार्;
अडक्कम् कॊण्डु आवणम् काट्टि नल्-वॆण्णॆयूर् आळुम् कॊण्डार्;
तडुक्क ऒण्णाददोर् वेऴत्तिनै उरित्तिट्टु उमैयै
नडुक्कम् कण्डार्क्कु इडम् आवदु नम् तिरुनावलूरे.
पाडल् ऎण् : 11
नादनुक्कु ऊर्, नमक्कु ऊर्, नरसिङ्ग मुनैयरैयन्
आदरित्तु ईसनुक्कु आट्चॆयुम् ऊर्, अणि नावलूर् ऎण्ड्रु
ओद नट्रक्क वण्ड्रॊण्डन् आरूरन् उरैत्त तमिऴ्
कादलित्तुम् कट्रुम् केट्पवर् तम् विनै कट्टु अऱुमे. *
(* Variant reading: विनैक्कट्टु अऱुमे)
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sundarar comes to Thirunavalur after the Thiruvenneynallur events and sings a padhigam but that padhigam is not available
# 224 - పెరియ పురాణం - తడుత్తాట్కొండ పురాణం - 224
నావలర్-కోన్ ఆరూరన్-తనై వెణ్ణెయ్ నల్లూరిన్
మేవుం అరుట్టుఱై అమర్న్ద వేదియర్ ఆట్కొండదఱ్పిన్
పూ అలరుం తడం-పొయ్గైత్ తిరునావలూర్ పుగుందు
దేవర్-పిరాన్-తనైప్ పణిందు తిరుప్పదిగం పాడినార్.
Sundarar visits Thirunavalur after several years
# 3322 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 168
తిరుత్తినై మానగర్ మేవుం సివక్కొఴుందైప్ పణిందు-పోయ్,
నిరుత్తనార్ అమర్న్దరుళుం నిఱై-పదిగళ్ పల వణంగిప్,
పొరుత్తం మిగుం తిరుత్తొండర్ పోట్రు తిరునావలూర్
కరుత్తిల్ వరుం ఆదరవాల్ కైదొఴచ్ చెండ్రు-ఎయ్దినార్.
He receives a grand welcome at Thirunavalur
# 3323 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 169
"తిరునావలూర్ మన్నర్ సేర్గిండ్రార్" ఎనక్ కేట్టుప్,
పెరు-నామప్ పదియోరుం తొండర్గళుం "పెరువాఴ్వు
వరు-నాళ్" ఎండ్రు అలంగరిత్తు వందు ఎదిర్గొండు ఉళ్-అణైయచ్
చెరు-నాగత్తు ఉరి పునైందార్ సెఴుంగోయిలుళ్ అణైందార్.
Sundarar sings "kōvalan nānmugan" padhigam
# 3324 - పెరియ పురాణం - ఏయర్గోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 170
మేవియ అత్-తొండర్-కుఴాం మిడైందు "అర" ఎండ్రు ఎఴుం ఓసై
మూవులగుం పోయ్-ఒలిప్ప ముదల్వనార్ మున్బు ఎయ్ది
ఆవియినుం అడైవు-ఉడైయార్ అడిక్-కమలత్తు అరుళ్ పోట్రిక్
"కోవలన్ నాన్ముగన్" ఎడుత్తుప్ పాడియే కుంబిట్టార్.
సుందరర్ తేవారం - పదిగం 7.17 – తిరునావలూర్ - (పణ్ - నట్టరాగం)
(తానన తానన తానన తానన తానదనా - Rhythm;
"తానదనా" may also come as - "తానదాన")
పాడల్ ఎణ్ : 1
కోవలన్ నాన్ముగన్ వానవర్-కోనుం కుట్రేవల్ సెయ్య,
మేవలర్ ముప్పురం తీ ఎఴువిత్తవర్ ఓర్-అంబినాల్;
ఏ-వలనార్; వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు-ఎనై ఆళుం-కొండ
నావలనార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 2
తన్మైయినాల్ అడియేనైత్ తాం ఆట్కొండ నాళ్ సబైమున్
వన్మైగళ్ పేసిడ వండ్రొండన్ ఎన్బదోర్ వాఴ్వు తందార్;
పున్మైగళ్ పేసవుం పొన్నైత్ తందు ఎన్నైప్ పోగం పుణర్త్త
నన్మైయినార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 3
వేగం కొండు ఓడియ వెళ్-విడై ఏఱి, ఓర్ మెల్లియలై
ఆగం కొండార్; వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు ఎనై ఆళుం కొండార్;
బోగం కొండార్, కడల్ కోడియిల్ మోడియైప్; పూణ్బదాగ
నాగం కొండార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 4
అంజుం కొండు ఆడువర్ ఆవినిల్; సేవినై ఆట్చి కొండార్;
తంజం కొండార్ అడిచ్ చండియైత్ తాం ఎన వైత్తు-ఉగందార్;
నెంజం కొండార్ వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు ఎనై ఆళుం కొండు;
నంజం కొండార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 5
ఉంబరార్ కోనైత్ తిణ్-తోళ్ మురిత్తార్; ఉరిత్తార్ కళిట్రైచ్;
చెంబొనార్ తీవణ్ణర్; తూ-వణ్ణ నీట్రర్; ఓర్ ఆవణత్తాల్
ఎంబిరానార్ వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు ఎనై ఆళుం కొండ,
నంబిరానార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 6
కోట్టం కొండార్ కుడమూక్కిలుం కోవలుం కోత్తిట్టైయుం;
వేట్టం కొండార్; వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు ఎనై ఆళుం కొండార్;
ఆట్టం కొండార్ తిల్లైచ్ చిట్రంబలత్తే; అరుక్కనై మున్
నాట్టం కొండార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 7
తాయవళాయ్త్ తందై ఆగిచ్, చాదల్ పిఱత్తల్ ఇండ్రిప్
పోయగలామైత్ తన్ పొన్నడిక్కు ఎన్నైప్ పొరుందవైత్త
వేయవనార్**, వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు ఎనై ఆళుం కొండ
నాయగనార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
(** వేయవనార్ / ఏయవనార్ - Alternative word separation);
పాడల్ ఎణ్ : 8
వాయాడి, మా-మఱై ఓది, ఓర్ వేదియనాగి వందు,
తీయాడియార్, సినక్ కేఴలిన్ పిన్ సెండ్రు ఓర్ వేడువనాయ్
వేయాడియార్, వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు ఎనై ఆళుం కొండ
నాయాడియార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 9
పడం ఆడు పాంబు-అణైయానుక్కుం, పావై-నల్లాళ్ తనక్కుం,
వడం ఆడు మాల్-విడై ఏట్రుక్కుం పాగనాయ్, వందు ఒరునాళ్
ఇడం ఆడియార్, వెణ్ణెయ్ నల్లూరిల్ వైత్తు ఎనై ఆళుం కొండ
నడమాడియార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 10
మిడుక్కు ఉండు ఎండ్రు ఓడి ఓర్ వెఱ్పు ఎడుత్తాన్ వలియై నెరిత్తార్;
అడక్కం కొండు ఆవణం కాట్టి నల్-వెణ్ణెయూర్ ఆళుం కొండార్;
తడుక్క ఒణ్ణాదదోర్ వేఴత్తినై ఉరిత్తిట్టు ఉమైయై
నడుక్కం కండార్క్కు ఇడం ఆవదు నం తిరునావలూరే.
పాడల్ ఎణ్ : 11
నాదనుక్కు ఊర్, నమక్కు ఊర్, నరసింగ మునైయరైయన్
ఆదరిత్తు ఈసనుక్కు ఆట్చెయుం ఊర్, అణి నావలూర్ ఎండ్రు
ఓద నట్రక్క వండ్రొండన్ ఆరూరన్ ఉరైత్త తమిఴ్
కాదలిత్తుం కట్రుం కేట్పవర్ తం వినై కట్టు అఱుమే. *
(* Variant reading: వినైక్కట్టు అఱుమే)
================ ============
No comments:
Post a Comment