119) 8.35 - திருவாசகம் - அச்சப் பத்து - thiruvAsagam - achchap paththu
திருவாசகம் - அச்சப் பத்து - பதிகம் 8.35
tiruvāsagam - accap pattu - padigam 8.35
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 8.35 - திருவாசகம் - அச்சப் பத்து - thiruvAsagam - achchap paththu
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/ggoDoP-62ng
Part-2: https://youtu.be/MnTLtkpADIs
English discussion:
Part-1:
Part-2:
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
திருவாசகம் - அச்சப் பத்து - 8.35
திருவாசகத்தில் இந்தப் பகுதியைப் "ஆனந்தமுறுதல்" என்று முன்னோர் குறித்துள்ளனர்.
தருமை ஆதீன உரையில்: திருவருள் உணர்வை அழிப்பனவற்றுக்கு அஞ்சுதலைக் கூறும் பத்துப் பாடல்களின் தொகுதி அச்சப்பத்து. இவ்வச்சம் சிவானந்தத்தை இடையறாது நுகர்தற்கு வழியாதல் பற்றி, இதற்கு, "ஆனந்தமுறுதல்" எனக் குறிப்புரைத்தனர் முன்னோர்.
"ஆனந்த முறுகுதல்" என்பதும் பாடம் போலும்.
My notes:
நாம் பொதுவாக அஞ்சுகின்ற பல விஷயங்களைச் சொல்லி, "அவற்றுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்; ஆனால் சிவனை வணங்காதவர்களைக் கண்டால் மிகவும் அஞ்சுவேன்" என்று மாணிக்கவாசகர் இப்பதிகத்தில் சொல்கின்றார்.
நீதிவெண்பா - பெயர் தெரியா ஆசிரியர் -
கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.
==========
திருவாசகம் - அச்சப் பத்து - 8.35
(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" x 2 - meter)
புற்றில்வா ளரவும் அஞ்சேன்
.. பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
.. கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
.. உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
வெருவரேன் வேட்கை வந்தால்
.. வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
.. எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
.. தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
வன்புலால் வேலும் அஞ்சேன்
.. வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
.. அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
.. இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
கிளியனார் கிளவி அஞ்சேன்
.. அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
.. வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
.. தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
பிணியெலாம் வரினும் அஞ்சேன்
.. பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
.. தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
.. சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
வாளுலாம் எரியும் அஞ்சேன்
.. வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
.. சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
.. தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
தகைவிலாப் பழியும் அஞ்சேன்
.. சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
.. பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
.. முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
தறிசெறி களிறும் அஞ்சேன்
.. தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
.. விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
.. சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
.. மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
.. நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
.. திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
கோணிலா வாளி அஞ்சேன்
.. கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
.. நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
.. வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
.. அம்மநாம் அஞ்சு மாறே.
==================
Word separated version:
திருவாசகம் - அச்சப் பத்து - 8.35
(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" x 2 - meter)
புற்றில் வாள்-அரவும் அஞ்சேன்;
.. பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை-வார்-சடை எம் அண்ணல்
.. கண்ணுதல் பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம்-தன்னை
.. உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
வெருவரேன் வேட்கை வந்தால்;
.. வினைக்-கடல் கொளினும் அஞ்சேன்;
இருவரால் மாறு காணா
.. எம்பிரான் தம்பிரான் ஆம்
திருவுரு அன்றி மற்றோர்
.. தேவர் எத்-தேவர் என்ன
அருவராதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
வன்-புலால்-வேலும் அஞ்சேன்;
.. வளைக்-கையார் கடைக்கண் அஞ்சேன்;
என்பெலாம் உருக நோக்கி,
.. அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா-மணியை ஏத்தி,
.. இனிது அருள் பருக மாட்டா,
அன்பு இலாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
கிளி அனார் கிளவி அஞ்சேன்;
.. அவர் கிறி-முறுவல் அஞ்சேன்;
வெளிய நீறு ஆடும் மேனி
.. வேதியன் பாதம் நண்ணித்,
துளி உலாம் கண்ணர் ஆகித்,
.. தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு
அளி இலாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
பிணி-எலாம் வரினும் அஞ்சேன்;
.. பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;
துணி-நிலா அணியினான்றன்
.. தொழும்பரோடு அழுந்தி அம்-மால்
திணி-நிலம் பிளந்தும் காணாச்
.. சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
வாள் உலாம் எரியும் அஞ்சேன்;
.. வரை புரண்டிடினும் அஞ்சேன்;
தோள் உலாம் நீற்றன், ஏற்றன்,
.. சொற்பதம் கடந்த அப்பன்
தாள-தாமரைகள் ஏத்தித்,
.. தட-மலர் புனைந்து நையும்
ஆள் அலாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
தகைவு இலாப் பழியும் அஞ்சேன்;
.. சாதலை முன்னம் அஞ்சேன்;
புகை முகந்தெரி கை வீசிப்
.. பொலிந்த அம்பலத்துள் ஆடும்
முகை-நகைக் கொன்றை-மாலை
.. முன்னவன் பாதம் ஏத்தி
அகம் நெகாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
(* புகை முகந்தெரி = புகை முகந்த எரி )
தறி செறி களிறும் அஞ்சேன்;
.. தழல்-விழி உழுவை அஞ்சேன்;
வெறி கமழ் சடையன், அப்பன்,
.. விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச்
.. சிறந்து இனிது இருக்க மாட்டா,
அறிவு இலாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்;
.. மன்னரோடு உறவும் அஞ்சேன்;
நஞ்சமே அமுதம் ஆக்கும்
.. நம்பிரான், எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டுகொண்டான்
.. திரு முண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவார் அவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
கோணிலா வாளி அஞ்சேன்;
.. கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;
நீள்-நிலா அணியினானை
.. நினைந்து நைந்து உருகி நெக்கு
வாள் நிலாம் கண்கள் சோர
.. வாழ்த்திநின்று ஏத்த மாட்டா,
ஆண் அலாதவரைக் கண்டால்,
.. அம்ம, நாம் அஞ்சுமாறே.
(* கோணிலா - கோண் இலா / கோள் நிலா )
===================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruvāsagam - accap pattu - 8.35
(aṟusīr viruttam - "viḷam mā tēmā" x 2 - meter)
pāḍal eṇ : 1
puṭril vāḷ-aravum añjēn;
.. poyyardam meyyum añjēn;
kaṭrai-vār-saḍai em aṇṇal
.. kaṇṇudal pādam naṇṇi,
maṭrum ōr deyvam-tannai
.. uṇḍu ena ninaindu em pemmāṟku
aṭrilādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 2
veruvarēn vēṭkai vandāl;
.. vinaik-kaḍal koḷinum añjēn;
iruvarāl māṟu kāṇā
.. embirān tambirān ām
tiruvuru aṇḍri maṭrōr
.. dēvar et-tēvar enna
aruvarādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 3
van-pulāl-vēlum añjēn;
.. vaḷaik-kaiyār kaḍaikkaṇ añjēn;
enbelām uruga nōkki,
.. ambalattu āḍugiṇḍra
en polā-maṇiyai ētti,
.. inidu aruḷ paruga māṭṭā,
anbu ilādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 4
kiḷi anār kiḷavi añjēn;
.. avar kiṟi-muṟuval añjēn;
veḷiya nīṟu āḍum mēni
.. vēdiyan pādam naṇṇit,
tuḷi ulām kaṇṇar āgit,
.. toḻudu aḻudu uḷḷam nekku iṅgu
aḷi ilādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 5
piṇi-elām varinum añjēn;
.. piṟappinōḍu iṟappum añjēn;
tuṇi-nilā aṇiyināṇḍran
.. toḻumbarōḍu aḻundi am-māl
tiṇi-nilam piḷandum kāṇāc
.. sēvaḍi paravi veṇṇīṟu
aṇigilādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 6
vāḷ ulām eriyum añjēn;
.. varai puraṇḍiḍinum añjēn;
tōḷ ulām nīṭran, ēṭran,
.. soṟpadam kaḍanda appan
tāḷa-tāmaraigaḷ ēttit,
.. taḍa-malar punaindu naiyum
āḷ alādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 7
tagaivu ilāp paḻiyum añjēn;
.. sādalai munnam añjēn;
pugai muganderi kai vīsip
.. polinda ambalattuḷ āḍum
mugai-nagaik koṇḍrai-mālai
.. munnavan pādam ētti
agam negādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
(* pugai muganderi = pugai muganda eri )
pāḍal eṇ : 8
taṟi seṟi kaḷiṟum añjēn;
.. taḻal-viḻi uḻuvai añjēn;
veṟi kamaḻ saḍaiyan, appan,
.. viṇṇavar naṇṇa māṭṭāc
ceṟidaru kaḻalgaḷ ēttic
.. siṟandu inidu irukka māṭṭā,
aṟivu ilādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 9
mañju ulām urumum añjēn;
.. mannarōḍu uṟavum añjēn;
nañjamē amudam ākkum
.. nambirān, embirānāyc
ceñjevē āṇḍugoṇḍān
.. tiru muṇḍam tīṭṭa māṭṭādu
añjuvār avaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
pāḍal eṇ : 10
kōṇilā vāḷi añjēn;
.. kūṭruvan sīṭram añjēn;
nīḷ-nilā aṇiyinānai
.. ninaindu naindu urugi nekku
vāḷ nilām kaṇgaḷ sōra
.. vāḻttiniṇḍru ētta māṭṭā,
āṇ alādavaraik kaṇḍāl,
.. amma, nām añjumāṟē.
(* kōṇilā - kōṇ ilā / kōḷ nilā )
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुवासगम् - अच्चप् पत्तु - 8.35
(अऱुसीर् विरुत्तम् - "विळम् मा तेमा" x 2 - meter)
पाडल् ऎण् : 1
पुट्रिल् वाळ्-अरवुम् अञ्जेन्;
.. पॊय्यर्दम् मॆय्युम् अञ्जेन्;
कट्रै-वार्-सडै ऎम् अण्णल्
.. कण्णुदल् पादम् नण्णि,
मट्रुम् ओर् दॆय्वम्-तन्नै
.. उण्डु ऎन निनैन्दु ऎम् पॆम्माऱ्कु
अट्रिलादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 2
वॆरुवरेन् वेट्कै वन्दाल्;
.. विनैक्-कडल् कॊळिनुम् अञ्जेन्;
इरुवराल् माऱु काणा
.. ऎम्बिरान् तम्बिरान् आम्
तिरुवुरु अण्ड्रि मट्रोर्
.. देवर् ऎत्-तेवर् ऎन्न
अरुवरादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 3
वन्-पुलाल्-वेलुम् अञ्जेन्;
.. वळैक्-कैयार् कडैक्कण् अञ्जेन्;
ऎन्बॆलाम् उरुग नोक्कि,
.. अम्बलत्तु आडुगिण्ड्र
ऎन् पॊला-मणियै एत्ति,
.. इनिदु अरुळ् परुग माट्टा,
अन्बु इलादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 4
किळि अनार् किळवि अञ्जेन्;
.. अवर् किऱि-मुऱुवल् अञ्जेन्;
वॆळिय नीऱु आडुम् मेनि
.. वेदियन् पादम् नण्णित्,
तुळि उलाम् कण्णर् आगित्,
.. तॊऴुदु अऴुदु उळ्ळम् नॆक्कु इङ्गु
अळि इलादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 5
पिणि-ऎलाम् वरिनुम् अञ्जेन्;
.. पिऱप्पिनोडु इऱप्पुम् अञ्जेन्;
तुणि-निला अणियिनाण्ड्रन्
.. तॊऴुम्बरोडु अऴुन्दि अम्-माल्
तिणि-निलम् पिळन्दुम् काणाच्
.. सेवडि परवि वॆण्णीऱु
अणिगिलादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 6
वाळ् उलाम् ऎरियुम् अञ्जेन्;
.. वरै पुरण्डिडिनुम् अञ्जेन्;
तोळ् उलाम् नीट्रन्, एट्रन्,
.. सॊऱ्पदम् कडन्द अप्पन्
ताळ-तामरैगळ् एत्तित्,
.. तड-मलर् पुनैन्दु नैयुम्
आळ् अलादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 7
तगैवु इलाप् पऴियुम् अञ्जेन्;
.. सादलै मुन्नम् अञ्जेन्;
पुगै मुगन्दॆरि कै वीसिप्
.. पॊलिन्द अम्बलत्तुळ् आडुम्
मुगै-नगैक् कॊण्ड्रै-मालै
.. मुन्नवन् पादम् एत्ति
अगम् नॆगादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
(* पुगै मुगन्दॆरि = पुगै मुगन्द ऎरि )
पाडल् ऎण् : 8
तऱि सॆऱि कळिऱुम् अञ्जेन्;
.. तऴल्-विऴि उऴुवै अञ्जेन्;
वॆऱि कमऴ् सडैयन्, अप्पन्,
.. विण्णवर् नण्ण माट्टाच्
चॆऱिदरु कऴल्गळ् एत्तिच्
.. सिऱन्दु इनिदु इरुक्क माट्टा,
अऱिवु इलादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 9
मञ्जु उलाम् उरुमुम् अञ्जेन्;
.. मन्नरोडु उऱवुम् अञ्जेन्;
नञ्जमे अमुदम् आक्कुम्
.. नम्बिरान्, ऎम्बिरानाय्च्
चॆञ्जॆवे आण्डुगॊण्डान्
.. तिरु मुण्डम् तीट्ट माट्टादु
अञ्जुवार् अवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
पाडल् ऎण् : 10
कोणिला वाळि अञ्जेन्;
.. कूट्रुवन् सीट्रम् अञ्जेन्;
नीळ्-निला अणियिनानै
.. निनैन्दु नैन्दु उरुगि नॆक्कु
वाळ् निलाम् कण्गळ् सोर
.. वाऴ्त्तिनिण्ड्रु एत्त माट्टा,
आण् अलादवरैक् कण्डाल्,
.. अम्म, नाम् अञ्जुमाऱे.
(* कोणिला - कोण् इला / कोळ् निला )
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరువాసగం - అచ్చప్ పత్తు - 8.35
(అఱుసీర్ విరుత్తం - "విళం మా తేమా" x 2 - meter)
పాడల్ ఎణ్ : 1
పుట్రిల్ వాళ్-అరవుం అంజేన్;
.. పొయ్యర్దం మెయ్యుం అంజేన్;
కట్రై-వార్-సడై ఎం అణ్ణల్
.. కణ్ణుదల్ పాదం నణ్ణి,
మట్రుం ఓర్ దెయ్వం-తన్నై
.. ఉండు ఎన నినైందు ఎం పెమ్మాఱ్కు
అట్రిలాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 2
వెరువరేన్ వేట్కై వందాల్;
.. వినైక్-కడల్ కొళినుం అంజేన్;
ఇరువరాల్ మాఱు కాణా
.. ఎంబిరాన్ తంబిరాన్ ఆం
తిరువురు అండ్రి మట్రోర్
.. దేవర్ ఎత్-తేవర్ ఎన్న
అరువరాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 3
వన్-పులాల్-వేలుం అంజేన్;
.. వళైక్-కైయార్ కడైక్కణ్ అంజేన్;
ఎన్బెలాం ఉరుగ నోక్కి,
.. అంబలత్తు ఆడుగిండ్ర
ఎన్ పొలా-మణియై ఏత్తి,
.. ఇనిదు అరుళ్ పరుగ మాట్టా,
అన్బు ఇలాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 4
కిళి అనార్ కిళవి అంజేన్;
.. అవర్ కిఱి-ముఱువల్ అంజేన్;
వెళియ నీఱు ఆడుం మేని
.. వేదియన్ పాదం నణ్ణిత్,
తుళి ఉలాం కణ్ణర్ ఆగిత్,
.. తొఴుదు అఴుదు ఉళ్ళం నెక్కు ఇంగు
అళి ఇలాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 5
పిణి-ఎలాం వరినుం అంజేన్;
.. పిఱప్పినోడు ఇఱప్పుం అంజేన్;
తుణి-నిలా అణియినాండ్రన్
.. తొఴుంబరోడు అఴుంది అం-మాల్
తిణి-నిలం పిళందుం కాణాచ్
.. సేవడి పరవి వెణ్ణీఱు
అణిగిలాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 6
వాళ్ ఉలాం ఎరియుం అంజేన్;
.. వరై పురండిడినుం అంజేన్;
తోళ్ ఉలాం నీట్రన్, ఏట్రన్,
.. సొఱ్పదం కడంద అప్పన్
తాళ-తామరైగళ్ ఏత్తిత్,
.. తడ-మలర్ పునైందు నైయుం
ఆళ్ అలాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 7
తగైవు ఇలాప్ పఴియుం అంజేన్;
.. సాదలై మున్నం అంజేన్;
పుగై ముగందెరి కై వీసిప్
.. పొలింద అంబలత్తుళ్ ఆడుం
ముగై-నగైక్ కొండ్రై-మాలై
.. మున్నవన్ పాదం ఏత్తి
అగం నెగాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
(* పుగై ముగందెరి = పుగై ముగంద ఎరి )
పాడల్ ఎణ్ : 8
తఱి సెఱి కళిఱుం అంజేన్;
.. తఴల్-విఴి ఉఴువై అంజేన్;
వెఱి కమఴ్ సడైయన్, అప్పన్,
.. విణ్ణవర్ నణ్ణ మాట్టాచ్
చెఱిదరు కఴల్గళ్ ఏత్తిచ్
.. సిఱందు ఇనిదు ఇరుక్క మాట్టా,
అఱివు ఇలాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 9
మంజు ఉలాం ఉరుముం అంజేన్;
.. మన్నరోడు ఉఱవుం అంజేన్;
నంజమే అముదం ఆక్కుం
.. నంబిరాన్, ఎంబిరానాయ్చ్
చెంజెవే ఆండుగొండాన్
.. తిరు ముండం తీట్ట మాట్టాదు
అంజువార్ అవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
పాడల్ ఎణ్ : 10
కోణిలా వాళి అంజేన్;
.. కూట్రువన్ సీట్రం అంజేన్;
నీళ్-నిలా అణియినానై
.. నినైందు నైందు ఉరుగి నెక్కు
వాళ్ నిలాం కణ్గళ్ సోర
.. వాఴ్త్తినిండ్రు ఏత్త మాట్టా,
ఆణ్ అలాదవరైక్ కండాల్,
.. అమ్మ, నాం అంజుమాఱే.
(* కోణిలా - కోణ్ ఇలా / కోళ్ నిలా )
================ ============
No comments:
Post a Comment