127) 3.57 – விடையவன் விண்ணும் மண்ணும் - திருவொற்றியூர் - vidaiyavan viNNum maNNum - thiruvotRiyUr
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.57 – விடையவன் விண்ணும் மண்ணும் - (திருவொற்றியூர்)
sambandar tēvāram - padigam 3.57 – viḍaiyavan viṇṇum maṇṇum - (tiruvoṭriyūr)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF:
https://drive.google.com/file/d/1PtCW5uWvnP3oadCZCSgrY87BGVkHLDS8/view
***
On
YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/pHvMvgMWl0Q
Part-2: https://youtu.be/Sq-bjqTtH4Y
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_057.HTM
V.
Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.57 – திருவொற்றியூர் - (பண் - பஞ்சமம்)
திருவொற்றியூர் : சென்னையின் வடபகுதியில் உள்ள தலம். மிகவும் தொன்மையான தலம். சென்னைப் பகுதியில் உள்ள கோயில்களில் மிகவும் பெரிய கோயில் இது.
பதிக வரலாறு : சம்பந்தர் தொண்டைநாட்டில் தலயாத்திரை செய்தபொழுது திருவேற்காடு, திருவலிதாயம் முதலிய தலங்களை வழிபட்டுத் திருவொற்றியூரை அடைந்தார். அவ்வூரின் எல்லையில் சிவிகையிலிருந்து இறங்கிக் கோயிலுக்குத் தொண்டர்களோடு நடந்துவரும்பொழுது "விடையவன்" என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடியருளினார்.
----------
Sambandar reaches the town of Thiruvotriyur and is received by local devotees
பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1030
திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
.. சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம் பாடி,
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
.. வலிதாயம் வந்தெய்தி வணங்கிப் போற்றி
உருவேற்றா ரமர்ந்துறையு மோத வேலை
.. யொற்றியூர் கைதொழச்சென் றுற்ற போது
பெருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
.. பெரும்பதியோ ரெதிர்கொள்ளப் பேணி வந்தார்.
Word separated:
திருவேற்காடு அமர்ந்த செழுஞ்சுடர் பொற்கோயில்
.. சென்று-அணைந்து பணிந்து, திருப்பதிகம் பாடி,
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார்
.. வலிதாயம் வந்து-எய்தி வணங்கிப் போற்றி,
உரு ஏற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை
.. ஒற்றியூர் கைதொழச் சென்று-உற்ற போது,
பெரு-வேட்கை தரு-வாழ்வு பெற்ற தொண்டர்
.. பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.
Sambandar sings "vidaiyavan" padhigam as he walks to the Thiruvotriyur temple
பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 1031
மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
.. தொழுதிழிந்து "விடையவ"னென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
.. மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
.. தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
.. போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.
Word separated:
மிக்க திருத்தொண்டர் தொழுது-அணையத் தாமும்
.. தொழுது இழிந்து, "விடையவன்" என்று எடுத்துப் பாடி,
மைக்-குலவு கண்டத்தார் மகிழும் கோயில்
.. மன்னு திருக்-கோபுரத்து வந்து, தாழ்ந்து,
தக்க திருக்கடைக்காப்புச் சாற்றித், தேவர்
.. தம் பெருமான் திருவாயில் ஊடுசென்று
புக்கு-அருளி, வலங்கொண்டு, புனிதர் முன்பு
.. போற்று எடுத்துப் படியின்மேல் பொருந்த வீழ்ந்தார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.57 – திருவொற்றியூர் - (பண் - பஞ்சமம்)
(தானன தானதனா தனதானன தானதனா - Rhythm)
(தானதனா - may come as - தானதானா as well)
பாடல் எண் : 1
விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோ லுடை கோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்கவெண்டோ
டுடையவன் னூனமில்லி யுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
விடையவன்; விண்ணும் மண்ணும் தொழ நின்றவன்; வெண்-மழுவாள்
படையவன்; பாய்-புலித்தோல் உடை, கோவணம், பல்-கரந்தைச்
சடையவன்; சாமவேதன்; சசி தங்கிய சங்க-வெண்-தோடு
உடையவன்; ஊனம்-இல்லி உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 2
பாரிடம் பாணிசெய்யப் பறைக் கட்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாட லில யஞ்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன் றலைவன்றலை யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
பாரிடம் பாணி-செய்யப், பறைக்கண்-செறு பல்கணப்-பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்
தார்-இடும் போர்-விடையன்; தலைவன்; தலையே கலனா
ஊர் இடும் பிச்சைகொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 3
விளிதரு நீருமண்ணும் விசும் போடனல் காலுமாகி
அளிதரு பேரருளா னர னாகிய வாதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி
அளிதரு பேரருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி;
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளிதரு வெண்-பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 4
அரவமே கச்சதாக வசைத் தானலர் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பனெந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர் புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
அரவமே கச்சதாக அசைத்தான் அலர் கொன்றையந்தார்
விரவி வெண்ணூல் கிடந்த, விரை ஆர் வரை-மார்பன்; எந்தை;
பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப், படர்-புன்சடைமேல்
உரவுநீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 5
விலகினார் வெய்யபாவம் விதி யாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடி மேலல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
விலகினார் வெய்ய-பாவம் விதியால் அருள் செய்து, நல்ல
பலகினார், மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசி, நீர்-கொண்டு, அடிமேல் அலர்-இட்டு, முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 6
கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம் புமொலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ் சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற் றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்பச்,
சுமையொடு மேலும் வைத்தான் விரி-கொன்றையும் சோமனையும்;
அமையொடு நீண்ட திண்-தோள் அழகாய பொற்றோடு இலங்க,
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 7
நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலுங் கரு மால்வரை யேசிலையாப்
பொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந் தாரழலம்
பொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே,
கன்றினார் மும்மதிலும் கரு-மால்-வரையே சிலையாப்,
பொன்றினார் வார்-சுடலைப்பொடி நீறு அணிந்து, ஆரழல் அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 8
பெற்றியாற் பித்தனொப்பான் பெரு மான்கரு மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க் கண்ணுதன் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன் னுட லைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான்-உரி-தோல்
சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்கத்,
தெற்றியால் செற்றரக்கன் உடலைச் செழு-மால்-வரைக்கீழ்
ஒற்றியான்; முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே.
(செற்றரக்கன் - செற்ற அரக்கன்)
பாடல் எண் : 9
திருவினார் போதினானுந் திரு மாலுமொர் தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
திருவின் ஆர் போதினானும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னித்,
தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவம்-எல்லாம் பறையப், படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.
(தெய்வமுன்னி - 1. தெய்வம் முன்னி / 2. தெய்வம் உன்னி)
பாடல் எண் : 10
தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்
ஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்
ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே.
Word separated:
தோகையம்-பீலி கொள்வார், துவர்க் கூறைகள் போர்த்து உழல்வார்,
ஆகமச் செல்வனாரை அலர்-தூற்றுதல் காரணமாக்
கூகை அம்-மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன்மின்; ஏழுலகும்
ஓகை தந்து ஆள-வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே.
பாடல் எண் : 11
ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந் தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர் வீடெளிதே.
Word separated:
ஒண்-பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரைச்,
சண்பையர்-தம் தலைவன் தமிழ்-ஞான-சம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேலுலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே.
=====================================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar reaches the town of Thiruvotriyur and is received by local devotees
periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1030
tiruvēṟkāḍu amarnda seḻuñjuḍar poṟkōyil
.. seṇḍru-aṇaindu paṇindu, tiruppadigam pāḍi,
varu vēṭru manattu avuṇar puraṅgaḷ seṭrār
.. validāyam vandu-eydi vaṇaṅgip pōṭri,
uru ēṭrār amarndu uṟaiyum ōda vēlai
.. oṭriyūr kaidoḻac ceṇḍru-uṭra pōdu,
peru-vēṭkai taru-vāḻvu peṭra toṇḍar
.. perumbadiyōr edirgoḷḷap pēṇi vandār.
Sambandar sings "vidaiyavan" padhigam as he walks to the Thiruvotriyur temple
periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 1031
mikka tiruttoṇḍar toḻudu-aṇaiyat tāmum
.. toḻudu iḻindu, "viḍaiyavan" eṇḍru eḍuttup pāḍi,
maik-kulavu kaṇḍattār magiḻum kōyil
.. mannu tiruk-kōburattu vandu, tāḻndu,
takka tirukkaḍaikkāppuc cāṭrit, tēvar
.. tam perumān tiruvāyil ūḍuseṇḍru
pukku-aruḷi, valaṅgoṇḍu, punidar munbu
.. pōṭru eḍuttup paḍiyinmēl porunda vīḻndār.
sambandar tēvāram - padigam 3.57 – tiruvoṭriyūr - (paṇ - pañjamam)
(tānana tānadanā tanadānana tānadanā - Rhythm)
(tānadanā - may come as - tānadānā as well)
pāḍal eṇ : 1
viḍaiyavan; viṇṇum maṇṇum toḻa niṇḍravan; veṇ-maḻuvāḷ
paḍaiyavan; pāy-pulittōl uḍai, kōvaṇam, pal-karandaic
caḍaiyavan; sāmavēdan; sasi taṅgiya saṅga-veṇ-tōḍu
uḍaiyavan; ūnam-illi uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 2
pāriḍam pāṇi-seyyap, paṟaikkaṇ-seṟu palgaṇap-pēy
sīroḍum pāḍal āḍal ilayam sidaiyāda koḷgait
tār-iḍum pōr-viḍaiyan; talaivan; talaiyē kalanā
ūr iḍum piccaigoḷvān uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 3
viḷidaru nīrum maṇṇum visumbōḍu anal kālum āgi
aḷidaru pēraruḷān; aran āgiya ādimūrtti;
kaḷidaru vaṇḍu paṇsey kamaḻ koṇḍraiyinōḍu aṇinda
oḷidaru veṇ-piṟaiyān uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 4
aravamē kaccadāga asaittān alar koṇḍraiyandār
viravi veṇṇūl kiḍanda, virai ār varai-mārban; endai;
paravuvār pāvamellām paṟaittup, paḍar-punsaḍaimēl
uravunīr ēṭra pemmān uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 5
vilaginār veyya-pāvam vidiyāl aruḷ seydu, nalla
palaginār, mondai tāḷam taguṇiccamum pāṇiyālē
alagināl vīsi, nīr-koṇḍu, aḍimēl alar-iṭṭu, muṭṭādu
ulaginār ētta niṇḍrān uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 6
kamaiyoḍu niṇḍra sīrān; kaḻalum silambum olippac,
cumaiyoḍu mēlum vaittān viri-koṇḍraiyum sōmanaiyum;
amaiyoḍu nīṇḍa tiṇ-tōḷ aḻagāya poṭrōḍu ilaṅga,
umaiyoḍum kūḍi niṇḍrān uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 7
naṇḍriyāl vāḻvadu uḷḷam ulagukku oru nanmaiyālē,
kaṇḍrinār mummadilum karu-māl-varaiyē silaiyāp,
poṇḍrinār vār-suḍalaippoḍi nīṟu aṇindu, āraḻal ambu
oṇḍrināl eyda pemmān uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 8
peṭriyāl pittan oppān; perumān; karumān-uri-tōl
suṭriyān; sutti, sūlam, suḍarkkaṇ nudalmēl viḷaṅgat,
teṭriyāl seṭrarakkan uḍalaic ceḻu-māl-varaikkīḻ
oṭriyān; muṭrum āḷvān uṟaiyum iḍam oṭriyūrē.
(seṭrarakkan - seṭra arakkan)
pāḍal eṇ : 9
tiruvin ār pōdinānum tirumālum or deyvam munnit,
terivināl kāṇamāṭṭār; tigaḻ sēvaḍi sindaiseydu
paravinār pāvam-ellām paṟaiyap, paḍar pēroḷiyōḍu
oruvanāy niṇḍra pemmān uṟaiyum iḍam oṭriyūrē.
(deyvamunni - 1. deyvam munni / 2. deyvam unni)
pāḍal eṇ : 10
tōgaiyam-pīli koḷvār, tuvark kūṟaigaḷ pōrttu uḻalvār,
āgamac celvanārai alar-tūṭrudal kāraṇamāk
kūgai am-mākkaḷ sollaik kuṟikkoḷḷanmin; ēḻulagum
ōgai tandu āḷa-vallān uṟaiyum iḍam oṭriyūrē.
pāḍal eṇ : 11
oṇ-piṟai malgu senni iṟaivan uṟai oṭriyūraic,
caṇbaiyar-tam talaivan tamiḻ-ñāna-sambandan sonna
paṇ punai pāḍal pattum paravip paṇindu ētta vallār
viṇ punai mēlulagam viruppu eyduvar vīḍu eḷidē.
=====================================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar reaches the town of Thiruvotriyur and is received by local devotees
पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1030
तिरुवेऱ्काडु अमर्न्द सॆऴुञ्जुडर् पॊऱ्कोयिल्
.. सॆण्ड्रु-अणैन्दु पणिन्दु, तिरुप्पदिगम् पाडि,
वरु वेट्रु मनत्तु अवुणर् पुरङ्गळ् सॆट्रार्
.. वलिदायम् वन्दु-ऎय्दि वणङ्गिप् पोट्रि,
उरु एट्रार् अमर्न्दु उऱैयुम् ओद वेलै
.. ऒट्रियूर् कैदॊऴच् चॆण्ड्रु-उट्र पोदु,
पॆरु-वेट्कै तरु-वाऴ्वु पॆट्र तॊण्डर्
.. पॆरुम्बदियोर् ऎदिर्गॊळ्ळप् पेणि वन्दार्.
Sambandar sings "vidaiyavan" padhigam as he walks to the Thiruvotriyur temple
पॆरियपुुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 1031
मिक्क तिरुत्तॊण्डर् तॊऴुदु-अणैयत् तामुम्
.. तॊऴुदु इऴिन्दु, "विडैयवन्" ऎण्ड्रु ऎडुत्तुप् पाडि,
मैक्-कुलवु कण्डत्तार् मगिऴुम् कोयिल्
.. मन्नु तिरुक्-कोबुरत्तु वन्दु, ताऴ्न्दु,
तक्क तिरुक्कडैक्काप्पुच् चाट्रित्, तेवर्
.. तम् पॆरुमान् तिरुवायिल् ऊडुसॆण्ड्रु
पुक्कु-अरुळि, वलङ्गॊण्डु, पुनिदर् मुन्बु
.. पोट्रु ऎडुत्तुप् पडियिन्मेल् पॊरुन्द वीऴ्न्दार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.57 – तिरुवॊट्रियूर् - (पण् - पञ्जमम्)
(तानन तानदना तनदानन तानदना - Rhythm)
(तानदना - may come as - तानदाना as well)
पाडल् ऎण् : 1
विडैयवन्; विण्णुम् मण्णुम् तॊऴ निण्ड्रवन्; वॆण्-मऴुवाळ्
पडैयवन्; पाय्-पुलित्तोल् उडै, कोवणम्, पल्-करन्दैच्
चडैयवन्; सामवेदन्; ससि तङ्गिय सङ्ग-वॆण्-तोडु
उडैयवन्; ऊनम्-इल्लि उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 2
पारिडम् पाणि-सॆय्यप्, पऱैक्कण्-सॆऱु पल्गणप्-पेय्
सीरॊडुम् पाडल् आडल् इलयम् सिदैयाद कॊळ्गैत्
तार्-इडुम् पोर्-विडैयन्; तलैवन्; तलैये कलना
ऊर् इडुम् पिच्चैगॊळ्वान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 3
विळिदरु नीरुम् मण्णुम् विसुम्बोडु अनल् कालुम् आगि
अळिदरु पेररुळान्; अरन् आगिय आदिमूर्त्ति;
कळिदरु वण्डु पण्सॆय् कमऴ् कॊण्ड्रैयिनोडु अणिन्द
ऒळिदरु वॆण्-पिऱैयान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 4
अरवमे कच्चदाग असैत्तान् अलर् कॊण्ड्रैयन्दार्
विरवि वॆण्णूल् किडन्द, विरै आर् वरै-मार्बन्; ऎन्दै;
परवुवार् पावमॆल्लाम् पऱैत्तुप्, पडर्-पुन्सडैमेल्
उरवुनीर् एट्र पॆम्मान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 5
विलगिनार् वॆय्य-पावम् विदियाल् अरुळ् सॆय्दु, नल्ल
पलगिनार्, मॊन्दै ताळम् तगुणिच्चमुम् पाणियाले
अलगिनाल् वीसि, नीर्-कॊण्डु, अडिमेल् अलर्-इट्टु, मुट्टादु
उलगिनार् एत्त निण्ड्रान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 6
कमैयॊडु निण्ड्र सीरान्; कऴलुम् सिलम्बुम् ऒलिप्पच्,
चुमैयॊडु मेलुम् वैत्तान् विरि-कॊण्ड्रैयुम् सोमनैयुम्;
अमैयॊडु नीण्ड तिण्-तोळ् अऴगाय पॊट्रोडु इलङ्ग,
उमैयॊडुम् कूडि निण्ड्रान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 7
नण्ड्रियाल् वाऴ्वदु उळ्ळम् उलगुक्कु ऒरु नन्मैयाले,
कण्ड्रिनार् मुम्मदिलुम् करु-माल्-वरैये सिलैयाप्,
पॊण्ड्रिनार् वार्-सुडलैप्पॊडि नीऱु अणिन्दु, आरऴल् अम्बु
ऒण्ड्रिनाल् ऎय्द पॆम्मान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 8
पॆट्रियाल् पित्तन् ऒप्पान्; पॆरुमान्; करुमान्-उरि-तोल्
सुट्रियान्; सुत्ति, सूलम्, सुडर्क्कण् नुदल्मेल् विळङ्गत्,
तॆट्रियाल् सॆट्ररक्कन् उडलैच् चॆऴु-माल्-वरैक्कीऴ्
ऒट्रियान्; मुट्रुम् आळ्वान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
(सॆट्ररक्कन् - सॆट्र अरक्कन्)
पाडल् ऎण् : 9
तिरुविन् आर् पोदिनानुम् तिरुमालुम् ऒर् दॆय्वम् मुन्नित्,
तॆरिविनाल् काणमाट्टार्; तिगऴ् सेवडि सिन्दैसॆय्दु
परविनार् पावम्-ऎल्लाम् पऱैयप्, पडर् पेरॊळियोडु
ऒरुवनाय् निण्ड्र पॆम्मान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
(दॆय्वमुन्नि - 1. दॆय्वम् मुन्नि / 2. दॆय्वम् उन्नि)
पाडल् ऎण् : 10
तोगैयम्-पीलि कॊळ्वार्, तुवर्क् कूऱैगळ् पोर्त्तु उऴल्वार्,
आगमच् चॆल्वनारै अलर्-तूट्रुदल् कारणमाक्
कूगै अम्-माक्कळ् सॊल्लैक् कुऱिक्कॊळ्ळन्मिन्; एऴुलगुम्
ओगै तन्दु आळ-वल्लान् उऱैयुम् इडम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 11
ऒण्-पिऱै मल्गु सॆन्नि इऱैवन् उऱै ऒट्रियूरैच्,
चण्बैयर्-तम् तलैवन् तमिऴ्-ञान-सम्बन्दन् सॊन्न
पण् पुनै पाडल् पत्तुम् परविप् पणिन्दु एत्त वल्लार्
विण् पुनै मेलुलगम् विरुप्पु ऎय्दुवर् वीडु ऎळिदे.
=====================================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar reaches the town of Thiruvotriyur and is received by local devotees
పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1030
తిరువేఱ్కాడు అమర్న్ద సెఴుంజుడర్ పొఱ్కోయిల్
.. సెండ్రు-అణైందు పణిందు, తిరుప్పదిగం పాడి,
వరు వేట్రు మనత్తు అవుణర్ పురంగళ్ సెట్రార్
.. వలిదాయం వందు-ఎయ్ది వణంగిప్ పోట్రి,
ఉరు ఏట్రార్ అమర్న్దు ఉఱైయుం ఓద వేలై
.. ఒట్రియూర్ కైదొఴచ్ చెండ్రు-ఉట్ర పోదు,
పెరు-వేట్కై తరు-వాఴ్వు పెట్ర తొండర్
.. పెరుంబదియోర్ ఎదిర్గొళ్ళప్ పేణి వందార్.
Sambandar sings "vidaiyavan" padhigam as he walks to the Thiruvotriyur temple
పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 1031
మిక్క తిరుత్తొండర్ తొఴుదు-అణైయత్ తాముం
.. తొఴుదు ఇఴిందు, "విడైయవన్" ఎండ్రు ఎడుత్తుప్ పాడి,
మైక్-కులవు కండత్తార్ మగిఴుం కోయిల్
.. మన్ను తిరుక్-కోబురత్తు వందు, తాఴ్న్దు,
తక్క తిరుక్కడైక్కాప్పుచ్ చాట్రిత్, తేవర్
.. తం పెరుమాన్ తిరువాయిల్ ఊడుసెండ్రు
పుక్కు-అరుళి, వలంగొండు, పునిదర్ మున్బు
.. పోట్రు ఎడుత్తుప్ పడియిన్మేల్ పొరుంద వీఴ్న్దార్.
సంబందర్ తేవారం - పదిగం 3.57 – తిరువొట్రియూర్ - (పణ్ - పంజమం)
(తానన తానదనా తనదానన తానదనా - Rhythm)
(తానదనా - may come as - తానదానా as well)
పాడల్ ఎణ్ : 1
విడైయవన్; విణ్ణుం మణ్ణుం తొఴ నిండ్రవన్; వెణ్-మఴువాళ్
పడైయవన్; పాయ్-పులిత్తోల్ ఉడై, కోవణం, పల్-కరందైచ్
చడైయవన్; సామవేదన్; ససి తంగియ సంగ-వెణ్-తోడు
ఉడైయవన్; ఊనం-ఇల్లి ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 2
పారిడం పాణి-సెయ్యప్, పఱైక్కణ్-సెఱు పల్గణప్-పేయ్
సీరొడుం పాడల్ ఆడల్ ఇలయం సిదైయాద కొళ్గైత్
తార్-ఇడుం పోర్-విడైయన్; తలైవన్; తలైయే కలనా
ఊర్ ఇడుం పిచ్చైగొళ్వాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 3
విళిదరు నీరుం మణ్ణుం విసుంబోడు అనల్ కాలుం ఆగి
అళిదరు పేరరుళాన్; అరన్ ఆగియ ఆదిమూర్త్తి;
కళిదరు వండు పణ్సెయ్ కమఴ్ కొండ్రైయినోడు అణింద
ఒళిదరు వెణ్-పిఱైయాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 4
అరవమే కచ్చదాగ అసైత్తాన్ అలర్ కొండ్రైయందార్
విరవి వెణ్ణూల్ కిడంద, విరై ఆర్ వరై-మార్బన్; ఎందై;
పరవువార్ పావమెల్లాం పఱైత్తుప్, పడర్-పున్సడైమేల్
ఉరవునీర్ ఏట్ర పెమ్మాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 5
విలగినార్ వెయ్య-పావం విదియాల్ అరుళ్ సెయ్దు, నల్ల
పలగినార్, మొందై తాళం తగుణిచ్చముం పాణియాలే
అలగినాల్ వీసి, నీర్-కొండు, అడిమేల్ అలర్-ఇట్టు, ముట్టాదు
ఉలగినార్ ఏత్త నిండ్రాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 6
కమైయొడు నిండ్ర సీరాన్; కఴలుం సిలంబుం ఒలిప్పచ్,
చుమైయొడు మేలుం వైత్తాన్ విరి-కొండ్రైయుం సోమనైయుం;
అమైయొడు నీండ తిణ్-తోళ్ అఴగాయ పొట్రోడు ఇలంగ,
ఉమైయొడుం కూడి నిండ్రాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 7
నండ్రియాల్ వాఴ్వదు ఉళ్ళం ఉలగుక్కు ఒరు నన్మైయాలే,
కండ్రినార్ ముమ్మదిలుం కరు-మాల్-వరైయే సిలైయాప్,
పొండ్రినార్ వార్-సుడలైప్పొడి నీఱు అణిందు, ఆరఴల్ అంబు
ఒండ్రినాల్ ఎయ్ద పెమ్మాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 8
పెట్రియాల్ పిత్తన్ ఒప్పాన్; పెరుమాన్; కరుమాన్-ఉరి-తోల్
సుట్రియాన్; సుత్తి, సూలం, సుడర్క్కణ్ నుదల్మేల్ విళంగత్,
తెట్రియాల్ సెట్రరక్కన్ ఉడలైచ్ చెఴు-మాల్-వరైక్కీఴ్
ఒట్రియాన్; ముట్రుం ఆళ్వాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
(సెట్రరక్కన్ - సెట్ర అరక్కన్)
పాడల్ ఎణ్ : 9
తిరువిన్ ఆర్ పోదినానుం తిరుమాలుం ఒర్ దెయ్వం మున్నిత్,
తెరివినాల్ కాణమాట్టార్; తిగఴ్ సేవడి సిందైసెయ్దు
పరవినార్ పావం-ఎల్లాం పఱైయప్, పడర్ పేరొళియోడు
ఒరువనాయ్ నిండ్ర పెమ్మాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
(దెయ్వమున్ని - 1. దెయ్వం మున్ని / 2. దెయ్వం ఉన్ని)
పాడల్ ఎణ్ : 10
తోగైయం-పీలి కొళ్వార్, తువర్క్ కూఱైగళ్ పోర్త్తు ఉఴల్వార్,
ఆగమచ్ చెల్వనారై అలర్-తూట్రుదల్ కారణమాక్
కూగై అం-మాక్కళ్ సొల్లైక్ కుఱిక్కొళ్ళన్మిన్; ఏఴులగుం
ఓగై తందు ఆళ-వల్లాన్ ఉఱైయుం ఇడం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 11
ఒణ్-పిఱై మల్గు సెన్ని ఇఱైవన్ ఉఱై ఒట్రియూరైచ్,
చణ్బైయర్-తం తలైవన్ తమిఴ్-ఞాన-సంబందన్ సొన్న
పణ్ పునై పాడల్ పత్తుం పరవిప్ పణిందు ఏత్త వల్లార్
విణ్ పునై మేలులగం విరుప్పు ఎయ్దువర్ వీడు ఎళిదే.
=====================================
No comments:
Post a Comment