136) 8.6 - திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 1-10 - thiruvAsagam - neeththal viNNappam
திருவாசகம் - 8.6 - நீத்தல் விண்ணப்பம் - (songs 1-10)
tiruvāsagam - 8.6 - nīttal viṇṇappam - (songs 1-10)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1Hvfe2v5N8VULt6xUcBP1DdDR_yzfJL29/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/7GTx4384ALU
Part-2: https://youtu.be/zOQCZEFvbOs
***
English
translation (meaning) : Kausalya Hart -
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0659.html
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.6 - (songs 1-10)
தருமை ஆதீன உரையில்: இஃது உலகியலில் தமக்கு விருப்பம் இன்மை கூறுதலாக அமைவதால், இதற்கு, "பிரபஞ்ச வைராக்கியம்" எனக் குறிப்புரைத்தனர் முன்னோர்.
My notes:
நீத்தல் விண்ணப்பம் - இது அந்தாதித்தொடை அமைந்த 50 கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆன பகுதி.
==========
திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.6 - (songs 1-10)
(கட்டளைக் கலித்துறை - meter)
கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.
Word separated:
கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே; விட்டிடுதி கண்டாய்; விறல் வேங்கையின் தோல்
உடையவனே; மன்னும் உத்தர-கோச மங்கைக்கு அரசே;
சடையவனே; தளர்ந்தேன்; எம்பிரான்; என்னைத் தாங்கிக்கொள்ளே.
கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே.
Word separated:
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய்; நின் விழுத்-தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தர-கோச மங்கைக்கு அரசே;
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எக்-காரணமே.
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.
Word separated:
கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை-மரமாய்
வேர்-உறுவேனை விடுதி கண்டாய்; விளங்கும் திருவாரூர்
உறைவாய்; மன்னும் உத்தர-கோச மங்கைக்கு அரசே;
வார் உறு பூண்-முலையாள் பங்க; என்னை வளர்ப்பவனே.
வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும் நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங் கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச் செழுஞ்சுடரே.
Word separated:
வளர்கின்ற நின் கருணைக்-கையில் வாங்கவும் நீங்கி இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்; வெண்மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள்-முடி உத்தர-கோச மங்கைக்கு அரசே;
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றச் செழுஞ்சுடரே.
செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்
விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே
வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.
Word separated:
செழிகின்ற தீப்-புகு விட்டிலிற் சின்மொழியாரில் பன்னாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்; வெறிவாய் அறுகால்
உழுகின்ற பூ-முடி உத்தர-கோச மங்கைக்கு அரசே;
வழி-நின்று நின் அருள்-ஆரமுது ஊட்ட மறுத்தனனே.
மறுத்தனன் யான்உன் அருள்அறி யாமையின் என்மணியே
வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே.
Word separated:
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின், என் மணியே;
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்; வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள்; உத்தர-கோச மங்கைக்கு அரசே;
பொறுப்பர்-அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே.
பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே.
Word separated:
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே; விட்டிடுதி கண்டாய்; விடம் உண் மிடற்று
மையவனே; மன்னும் உத்தர-கோச மங்கைக்கு அரசே;
செய்யவனே; சிவனே; சிறியேன் பவம் தீர்ப்பவனே.
தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரருள் என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங் கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை இருதலையே.
Word separated:
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர்-அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய்; விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார்-விடை உத்தர-கோச மங்கைக்கு அரசே;
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இரு-தலையே.
இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே.
Word separated:
இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரி-தலையேனை விடுதி கண்டாய்; வியன் மூவுலகுக்கு
ஒரு தலைவா; மன்னும் உத்தர-கோச மங்கைக்கு அரசே;
பொரு-தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே.
பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற் றாக்கையைப் போக்கப்பெற்று
மெலிகின்ற என்னை விடுதிகண் டாய்அளி தேர்விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கரசே
வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புரம் மாறுபட்டே.
Word separated:
பொலிகின்ற நின் தாள் புகுதப்-பெற்று ஆக்கையைப் போக்கப்-பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்; அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம்பொழில் உத்தர-கோச மங்கைக்கு அரசே;
வலி நின்ற திண்-சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே.
==================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tiruvāsagam - nīttal viṇṇappam - 8.6 - (songs 1-10)
(kaṭṭaḷaik kalittuṟai – meter)
pāḍal eṇ : 1
kaḍaiyavanēnaik karuṇaiyināl kalandu āṇḍugoṇḍa
viḍaiyavanē; viṭṭiḍudi kaṇḍāy; viṟal vēṅgaiyin tōl
uḍaiyavanē; mannum uttara-kōsa maṅgaikku arasē;
saḍaiyavanē; taḷarndēn; embirān; ennait tāṅgikkoḷḷē.
pāḍal eṇ : 2
koḷ ēr piḷavu agalāt taḍam koṅgaiyar kovvaic cevvāy
viḷḷēn eninum viḍudi kaṇḍāy; nin viḻut-toḻumbin
uḷḷēn; puṟam allēn; uttara-kōsa maṅgaikku arasē;
kaḷḷēn oḻiyavum kaṇḍugoṇḍu āṇḍadu ek-kāraṇamē.
pāḍal eṇ : 3
kār uṟu kaṇṇiyar aimbulan āṭraṅgarai-maramāy
vēr-uṟuvēnai viḍudi kaṇḍāy; viḷaṅgum tiruvārūr
uṟaivāy; mannum uttara-kōsa maṅgaikku arasē;
vār uṟu pūṇ-mulaiyāḷ paṅga; ennai vaḷarppavanē.
pāḍal eṇ : 4
vaḷargiṇḍra nin karuṇaik-kaiyil vāṅgavum nīṅgi ippāl
miḷirgiṇḍra ennai viḍudi kaṇḍāy; veṇmadik koḻundu oṇḍru
oḷirgiṇḍra nīḷ-muḍi uttara-kōsa maṅgaikku arasē;
teḷigiṇḍra ponnum minnum anna tōṭrac ceḻuñjuḍarē.
pāḍal eṇ : 5
seḻigiṇḍra tīp-pugu viṭṭiliṟ cinmoḻiyāril pannāḷ
viḻugiṇḍra ennai viḍudi kaṇḍāy; veṟivāy aṟugāl
uḻugiṇḍra pū-muḍi uttara-kōsa maṅgaikku arasē;
vaḻi-niṇḍru nin aruḷ-āramudu ūṭṭa maṟuttananē.
pāḍal eṇ : 6
maṟuttanan yān un aruḷ aṟiyāmaiyin, en maṇiyē;
veṟuttu enai nī viṭṭiḍudi kaṇḍāy; vinaiyin togudi
oṟuttu enai āṇḍugoḷ; uttara-kōsa maṅgaikku arasē;
poṟuppar-aṇḍrē periyōr siṟu nāygaḷdam poyyinaiyē.
pāḍal eṇ : 7
poyyavanēnaip poruḷ ena āṇḍu oṇḍru pottikkoṇḍa
meyyavanē; viṭṭiḍudi kaṇḍāy; viḍam uṇ miḍaṭru
maiyavanē; mannum uttara-kōsa maṅgaikku arasē;
seyyavanē; sivanē; siṟiyēn bavam tīrppavanē.
pāḍal eṇ : 8
tīrkkiṇḍravāṟu en piḻaiyai nin sīr-aruḷ engol eṇḍru
vērkkiṇḍra ennai viḍudi kaṇḍāy; viravār veruva
ārkkiṇḍra tār-viḍai uttara-kōsa maṅgaikku arasē;
īrkkiṇḍra añjoḍu accam vinaiyēnai iru-talaiyē.
pāḍal eṇ : 9
irudalaik koḷḷiyinuḷ eṟumbu ottu ninaip pirinda
viri-talaiyēnai viḍudi kaṇḍāy; viyan mūvulagukku
oru talaivā; mannum uttara-kōsa maṅgaikku arasē;
poru-talai mūvilai vēl valan ēndip polibavanē.
pāḍal eṇ : 10
poligiṇḍra nin tāḷ pugudap-peṭru ākkaiyaip pōkkap-peṭru
meligiṇḍra ennai viḍudi kaṇḍāy; aḷi tēr viḷari
oli niṇḍra pūmboḻil uttara-kōsa maṅgaikku arasē;
vali niṇḍra tiṇ-silaiyāl erittāy puram māṟubaṭṭē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
तिरुवासगम् - नीत्तल् विण्णप्पम् - 8.6 - (songs 1-10)
(कट्टळैक् कलित्तुऱै - meter)
पाडल् ऎण् : 1
कडैयवनेनैक् करुणैयिनाल् कलन्दु आण्डुगॊण्ड
विडैयवने; विट्टिडुदि कण्डाय्; विऱल् वेङ्गैयिन् तोल्
उडैयवने; मन्नुम् उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
सडैयवने; तळर्न्देन्; ऎम्बिरान्; ऎन्नैत् ताङ्गिक्कॊळ्ळे.
पाडल् ऎण् : 2
कॊळ् एर् पिळवु अगलात् तडम् कॊङ्गैयर् कॊव्वैच् चॆव्वाय्
विळ्ळेन् ऎनिनुम् विडुदि कण्डाय्; निन् विऴुत्-तॊऴुम्बिन्
उळ्ळेन्; पुऱम् अल्लेन्; उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
कळ्ळेन् ऒऴियवुम् कण्डुगॊण्डु आण्डदु ऎक्-कारणमे.
पाडल् ऎण् : 3
कार् उऱु कण्णियर् ऐम्बुलन् आट्रङ्गरै-मरमाय्
वेर्-उऱुवेनै विडुदि कण्डाय्; विळङ्गुम् तिरुवारूर्
उऱैवाय्; मन्नुम् उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
वार् उऱु पूण्-मुलैयाळ् पङ्ग; ऎन्नै वळर्प्पवने.
पाडल् ऎण् : 4
वळर्गिण्ड्र निन् करुणैक्-कैयिल् वाङ्गवुम् नीङ्गि इप्पाल्
मिळिर्गिण्ड्र ऎन्नै विडुदि कण्डाय्; वॆण्मदिक् कॊऴुन्दु ऒण्ड्रु
ऒळिर्गिण्ड्र नीळ्-मुडि उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
तॆळिगिण्ड्र पॊन्नुम् मिन्नुम् अन्न तोट्रच् चॆऴुञ्जुडरे.
पाडल् ऎण् : 5
सॆऴिगिण्ड्र तीप्-पुगु विट्टिलिऱ् चिन्मॊऴियारिल् पन्नाळ्
विऴुगिण्ड्र ऎन्नै विडुदि कण्डाय्; वॆऱिवाय् अऱुगाल्
उऴुगिण्ड्र पू-मुडि उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
वऴि-निण्ड्रु निन् अरुळ्-आरमुदु ऊट्ट मऱुत्तनने.
पाडल् ऎण् : 6
मऱुत्तनन् यान् उन् अरुळ् अऱियामैयिन्, ऎन् मणिये;
वॆऱुत्तु ऎनै नी विट्टिडुदि कण्डाय्; विनैयिन् तॊगुदि
ऒऱुत्तु ऎनै आण्डुगॊळ्; उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
पॊऱुप्पर्-अण्ड्रे पॆरियोर् सिऱु नाय्गळ्दम् पॊय्यिनैये.
पाडल् ऎण् : 7
पॊय्यवनेनैप् पॊरुळ् ऎन आण्डु ऒण्ड्रु पॊत्तिक्कॊण्ड
मॆय्यवने; विट्टिडुदि कण्डाय्; विडम् उण् मिडट्रु
मैयवने; मन्नुम् उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
सॆय्यवने; सिवने; सिऱियेन् बवम् तीर्प्पवने.
पाडल् ऎण् : 8
तीर्क्किण्ड्रवाऱु ऎन् पिऴैयै निन् सीर्-अरुळ् ऎन्गॊल् ऎण्ड्रु
वेर्क्किण्ड्र ऎन्नै विडुदि कण्डाय्; विरवार् वॆरुव
आर्क्किण्ड्र तार्-विडै उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
ईर्क्किण्ड्र अञ्जॊडु अच्चम् विनैयेनै इरु-तलैये.
पाडल् ऎण् : 9
इरुदलैक् कॊळ्ळियिनुळ् ऎऱुम्बु ऒत्तु निनैप् पिरिन्द
विरि-तलैयेनै विडुदि कण्डाय्; वियन् मूवुलगुक्कु
ऒरु तलैवा; मन्नुम् उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
पॊरु-तलै मूविलै वेल् वलन् एन्दिप् पॊलिबवने.
पाडल् ऎण् : 10
पॊलिगिण्ड्र निन् ताळ् पुगुदप्-पॆट्रु आक्कैयैप् पोक्कप्-पॆट्रु
मॆलिगिण्ड्र ऎन्नै विडुदि कण्डाय्; अळि तेर् विळरि
ऒलि निण्ड्र पूम्बॊऴिल् उत्तर-कोस मङ्गैक्कु अरसे;
वलि निण्ड्र तिण्-सिलैयाल् ऎरित्ताय् पुरम् माऱुबट्टे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరువాసగం - నీత్తల్ విణ్ణప్పం - 8.6 - (songs 1-10)
(కట్టళైక్ కలిత్తుఱై - meter)
పాడల్ ఎణ్ : 1
కడైయవనేనైక్ కరుణైయినాల్ కలందు ఆండుగొండ
విడైయవనే; విట్టిడుది కండాయ్; విఱల్ వేంగైయిన్ తోల్
ఉడైయవనే; మన్నుం ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
సడైయవనే; తళర్న్దేన్; ఎంబిరాన్; ఎన్నైత్ తాంగిక్కొళ్ళే.
పాడల్ ఎణ్ : 2
కొళ్ ఏర్ పిళవు అగలాత్ తడం కొంగైయర్ కొవ్వైచ్ చెవ్వాయ్
విళ్ళేన్ ఎనినుం విడుది కండాయ్; నిన్ విఴుత్-తొఴుంబిన్
ఉళ్ళేన్; పుఱం అల్లేన్; ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
కళ్ళేన్ ఒఴియవుం కండుగొండు ఆండదు ఎక్-కారణమే.
పాడల్ ఎణ్ : 3
కార్ ఉఱు కణ్ణియర్ ఐంబులన్ ఆట్రంగరై-మరమాయ్
వేర్-ఉఱువేనై విడుది కండాయ్; విళంగుం తిరువారూర్
ఉఱైవాయ్; మన్నుం ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
వార్ ఉఱు పూణ్-ములైయాళ్ పంగ; ఎన్నై వళర్ప్పవనే.
పాడల్ ఎణ్ : 4
వళర్గిండ్ర నిన్ కరుణైక్-కైయిల్ వాంగవుం నీంగి ఇప్పాల్
మిళిర్గిండ్ర ఎన్నై విడుది కండాయ్; వెణ్మదిక్ కొఴుందు ఒండ్రు
ఒళిర్గిండ్ర నీళ్-ముడి ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
తెళిగిండ్ర పొన్నుం మిన్నుం అన్న తోట్రచ్ చెఴుంజుడరే.
పాడల్ ఎణ్ : 5
సెఴిగిండ్ర తీప్-పుగు విట్టిలిఱ్ చిన్మొఴియారిల్ పన్నాళ్
విఴుగిండ్ర ఎన్నై విడుది కండాయ్; వెఱివాయ్ అఱుగాల్
ఉఴుగిండ్ర పూ-ముడి ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
వఴి-నిండ్రు నిన్ అరుళ్-ఆరముదు ఊట్ట మఱుత్తననే.
పాడల్ ఎణ్ : 6
మఱుత్తనన్ యాన్ ఉన్ అరుళ్ అఱియామైయిన్, ఎన్ మణియే;
వెఱుత్తు ఎనై నీ విట్టిడుది కండాయ్; వినైయిన్ తొగుది
ఒఱుత్తు ఎనై ఆండుగొళ్; ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
పొఱుప్పర్-అండ్రే పెరియోర్ సిఱు నాయ్గళ్దం పొయ్యినైయే.
పాడల్ ఎణ్ : 7
పొయ్యవనేనైప్ పొరుళ్ ఎన ఆండు ఒండ్రు పొత్తిక్కొండ
మెయ్యవనే; విట్టిడుది కండాయ్; విడం ఉణ్ మిడట్రు
మైయవనే; మన్నుం ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
సెయ్యవనే; సివనే; సిఱియేన్ బవం తీర్ప్పవనే.
పాడల్ ఎణ్ : 8
తీర్క్కిండ్రవాఱు ఎన్ పిఴైయై నిన్ సీర్-అరుళ్ ఎన్గొల్ ఎండ్రు
వేర్క్కిండ్ర ఎన్నై విడుది కండాయ్; విరవార్ వెరువ
ఆర్క్కిండ్ర తార్-విడై ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
ఈర్క్కిండ్ర అంజొడు అచ్చం వినైయేనై ఇరు-తలైయే.
పాడల్ ఎణ్ : 9
ఇరుదలైక్ కొళ్ళియినుళ్ ఎఱుంబు ఒత్తు నినైప్ పిరింద
విరి-తలైయేనై విడుది కండాయ్; వియన్ మూవులగుక్కు
ఒరు తలైవా; మన్నుం ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
పొరు-తలై మూవిలై వేల్ వలన్ ఏందిప్ పొలిబవనే.
పాడల్ ఎణ్ : 10
పొలిగిండ్ర నిన్ తాళ్ పుగుదప్-పెట్రు ఆక్కైయైప్ పోక్కప్-పెట్రు
మెలిగిండ్ర ఎన్నై విడుది కండాయ్; అళి తేర్ విళరి
ఒలి నిండ్ర పూంబొఴిల్ ఉత్తర-కోస మంగైక్కు అరసే;
వలి నిండ్ర తిణ్-సిలైయాల్ ఎరిత్తాయ్ పురం మాఱుబట్టే.
================ ============
No comments:
Post a Comment