Monday, January 1, 2024

6.31 - இடர் கெடுமாறு எண்ணுதியேல் - idar kedumARu eNNudhiyEl

137) 6.31 - இடர் கெடுமாறு எண்ணுதியேல் - idar kedumARu eNNudhiyEl

திருநாவுக்கரசர் தேவாரம் - 6.31 – இடர் கெடுமாறு எண்ணுதியேல் - திருவாரூர் - (திருத்தாண்டகம்)

tirunāvukkarasar tēvāram - 6.31 – iḍar keḍumāṟu eṇṇudiyēl - tiruvārūr - (tiruttāṇḍagam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1s1itAXWwDPgFHsRVbTu6dhYoMJ9GFrcs/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/3vqTVupnqWM

Part-2: https://youtu.be/y-fE6goxmlg

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_031.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.31 – திருவாரூர் - (திருத்தாண்டகம்)


திருவாரூர் - மிகவும் பழமை மிக்க தலம். மிகப் பெரிய கோயில். (தஞ்சாவூரிலிருந்து கிழக்கே 60 கிமீ தூரத்தில் உள்ள தலம்; மயிலாடுதுறையிலிருந்து தெற்கே 40 கிமீ தூரத்தில் உள்ள தலம்).


Padhigam background:

திருநாவுக்கரசர் திருவாரூரில் பாடியருளிய பல பதிகங்களில் ஒன்று இது.


பதிகக் கருத்து:

திருநாவுக்கரசர் தம் நெஞ்சுக்குச் சொல்வது போல நமக்கு உபதேசமாக அருளிய பதிகம். திருத்தொண்டு செய்து, உருகி, வாயாரத் திருவாரூர்ப் பெருமானைத் துதித்தால் நம் துன்பம் தீரும்.


Note: In this padhigam, Thirunavukkarasar addresses the mind and advises it to worship Siva of Thiruvarur if it wants to be saved. Thus, it is his upadesam to us.

----------


Thirunavukkarasar, full of devotion, sings padhigams and does service in Thiruvarur

# 1490 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 225

(அறுசீர் விருத்தம் - meter)

மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவும் மதுர வாக்கிற்

சேர்வாகுந் திருவாயிற் றீந்தமிழின் மாலைகளுஞ், செம்பொற் றாளே

சார்வான திருமனமு, முழவாரத் தனிப்படையுந், தாமு மாகிப்

பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார்.


Word separated:

மார்பு ஆரப் பொழி-கண்ணீர் மழை வாரும் திருவடிவும், மதுர வாக்கில்

சேர்வு ஆகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும், செம்பொற்றாளே

சார்வு ஆன திருமனமும், உழவாரத் தனிப்-படையும் தாமும் ஆகிப்,

பார் வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்து-ஏத்திப் பரவிச் செல்வார்.


# 1491 - பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 226

நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொ ணிருத்தர் தம்மைக்

கூடியவன் பொடுகாலங் களிலணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்

"பாடிளம்பூ தத்தினா" னெனும்பதிக முதலான பலவும் பாடி,

நாடியவார் வம்பெருக நைந்துமனங் கரைந்துருகி நயந்து செல்வார்,


Word separated:

நீடு-புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்-புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்

கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக், கோது-இல் வாய்மைப்

"பாடிளம் பூதத்தினான்" எனும் பதிகம் முதலான பலவும் பாடி,

நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து-உருகி நயந்து செல்வார்,


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 6.31 – திருவாரூர் - (திருத்தாண்டகம்)

(எண்சீர் விருத்தம் - தாண்டகம் - meter)

பாடல் எண் : 1

இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

.. ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றும்

சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்

.. தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றும்

கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்

.. கலைமான் மறியேந்து கையா வென்றும்

அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்

.. ஆரூரா என்றென்றே அலறா நில்லே.


Word separated:

இடர் கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா;

.. ஈண்டு ஒளி சேர் கங்கைச் சடையாய் என்றும்,

சுடர்-ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும்,

.. தூ-நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்,

கடல்-விடமது உண்டு இருண்ட கண்டா என்றும்,

.. கலைமான் மறி ஏந்து கையா என்றும்,

அடல்-விடையாய் ஆரமுதே ஆதீ என்றும்,

.. ஆரூரா என்றென்றே அலறா நில்லே.


பாடல் எண் : 2

செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்

.. சிந்தித்தே * னெஞ்சமே திண்ண மாகப்

பொடியேறு திருமேனி யுடையா யென்றும்

.. புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்

அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்

.. அம்மானே ஆருரெம் மரசே யென்றும்

கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்

.. கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.

(* Variant reading: சிந்தித்தே நெஞ்சமே)


Word separated:

செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம்

.. சிந்தித்தேல் * நெஞ்சமே திண்ணமாகப்

பொடி ஏறு திருமேனி உடையாய் என்றும்,

.. புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும்,

அடியேனை ஆளாகக் கொண்டாய் என்றும்,

.. அம்மானே ஆருர் எம்-அரசே என்றும்,

கடி நாறு பொழில்-கச்சிக் கம்பா என்றும்,

.. கற்பகமே என்றென்றே கதறா நில்லே.

(* சிந்தித்தேனெஞ்சமே = 1. சிந்தித்தேல் நெஞ்சமே; 2. சிந்தித்தேன் நெஞ்சமே;)

(* Variant reading: சிந்தித்தே நெஞ்சமே)


பாடல் எண் : 3

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா

.. நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்

.. பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்

.. சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்

அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்

.. ஆரூரா என்றென்றே அலறா நில்லே.


Word separated:

நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா;

.. நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்குப்,

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்,

.. பூமாலை புனைந்து, ஏத்திப் புகழ்ந்து பாடித்,

தலையாரக் கும்பிட்டுக், கூத்தும் ஆடிச்,

.. சங்கரா சய போற்றி போற்றி என்றும்,

அலை-புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும்

.. ஆரூரா என்றென்றே அலறா நில்லே.


பாடல் எண் : 4

புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம்

.. நெஞ்சமே யிதுகண்டாய் பொருந்தக் கேள்நீ

நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும்

.. நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும்

விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்

.. விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி

எண்ணரிய திருநாம முடையா யென்றும்

.. எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.


Word separated:

புண்ணியமும் நன்னெறியும் ஆவதெல்லாம்,

.. நெஞ்சமே இது கண்டாய், பொருந்தக் கேள் நீ;

நுண்ணிய வெண்ணூல் கிடந்த மார்பா என்றும்,

.. நுந்தாத ஒண்-சுடரே என்றும், நாளும்,

விண்-இயங்கு தேவர்களும் வேதம் நான்கும்

.. விரைமலர்மேல் நான்முகனும் மாலும் கூடி

எண்ணரிய திருநாமம் உடையாய் என்றும்,

.. எழில்-ஆரூரா என்றே ஏத்தா நில்லே.


பாடல் எண் : 5

இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால் *

.. இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்

பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்

.. பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்

அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்

.. அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும்

குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே

.. குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.

(* Variant reading: கடப்ப தன்றால்)


Word separated:

இழைத்த-நாள் எல்லை கடப்பது என்றால், *

.. இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்,

பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்,

.. பிஞ்ஞகனே மைஞ்-ஞவிலும் கண்டா என்றும்,

அழைத்து-அலறி, அடியேன் உன் அரணம் கண்டாய்

.. அணி-ஆரூர் இடங்கொண்ட அழகா என்றும்,

குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே;

.. குற்றம் இல்லை என்மேல் நான் கூறினேனே.

(* Variant reading: கடப்பது அன்றால்)


பாடல் எண் : 6

நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்

.. நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்

சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும்

.. சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்

பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்

.. புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்

தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்

.. திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.


Word separated:

நீப்பரிய பல்-பிறவி நீக்கும் வண்ணம்

.. நினைந்திருந்தேன் காண் நெஞ்சே; நித்தமாகச்,

சேப் பிரியா வெல்கொடியினானே என்றும்,

.. சிவலோக-நெறி தந்த சிவனே என்றும்,

பூப் பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்

.. புண்டரிகக் கண்ணானும் போற்றி என்னத்

தீப்-பிழம்பாய் நின்றவனே, செல்வம் மல்கும்

.. திருவாரூரா என்றே சிந்தி நெஞ்சே.


பாடல் எண் : 7

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்

.. பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்

.. சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்

உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்

.. உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்

புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்

.. பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.


Word separated:

பற்றி-நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,

.. பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்,

சுற்றி-நின்ற சூழ்-வினைகள் வீழ்க்க வேண்டில்,

.. சொல்லுகேன் கேள் நெஞ்சே, துஞ்சா வண்ணம்;

உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்,

.. உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்

புற்று-அரவக் கச்சு ஆர்த்த புனிதா என்றும்,

.. பொழில்-ஆரூரா என்றே போற்றா-நில்லே.


பாடல் எண் : 8

மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக

.. வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்

அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும்

.. அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும்

துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்

.. சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்

கதிர்மதிசேர் சென்னியனே கால காலா

.. கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.


Word separated:

மதி தருவன் நெஞ்சமே; உஞ்சு-போக

.. வழி ஆவது இது கண்டாய்; வானோர்க்கெல்லாம்

அதிபதியே ஆரமுதே ஆதீ என்றும்,

.. அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும்

துதிசெய்து, துன்று-மலர் கொண்டு தூவிச்,

.. சூழும் வலஞ்செய்து, தொண்டு பாடிக்,

கதிர்மதி சேர் சென்னியனே, கால காலா,

.. கற்பகமே என்றென்றே கதறா-நில்லே.


பாடல் எண் : 9

பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே

.. பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா

தேசத் தொளிவிளக்கே தேவ தேவே

.. திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்

நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி

.. நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று

ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்

.. எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே.


Word separated:

பாசத்தைப் பற்று-அறுக்கல் ஆகும் நெஞ்சே;

.. பரஞ்சோதி, பண்டரங்கா, பாவ-நாசா,

தேசத்து ஒளி-விளக்கே, தேவதேவே,

.. திருவாரூர்த் திருமூலட்டானா என்றும்,

நேசத்தை நீ பெருக்கி நேர்நின்று உள்கி,

.. நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று,

ஏசற்று நின்று, இமையோர் ஏறே என்றும்,

.. எம்பெருமான் என்றென்றே ஏத்தா-நில்லே.


பாடல் எண் : 10

புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்

.. புறம்புறமே திரியாதே போது நெஞ்சே

சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும்

.. தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்

இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்

.. எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்

நலங்கொளடி யென்தலைமேல் வைத்தா யென்றும்

.. நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே.


Word separated:

புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு, போது போக்கிப்,

.. புறம்-புறமே திரியாதே, போது நெஞ்சே;

சலங்கொள் சடைமுடி உடைய தலைவா என்றும்,

.. தக்கன் செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்,

இலங்கையர்-கோன் சிரம் நெரித்த இறைவா என்றும்,

.. எழில்-ஆரூர் இடங்கொண்ட எந்தாய் என்றும்,

நலங்கொள்-அடி என் தலைமேல் வைத்தாய் என்றும்,

.. நாள்தோறும் நவின்று ஏத்தாய்; நன்மை ஆமே.

==================== ===============


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Thirunavukkarasar, full of devotion, sings padhigams and does service in Thiruvarur

# 1490 - periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 225

(aṟusīr viruttam - meter)

mārbu ārap poḻi-kaṇṇīr maḻai vārum tiruvaḍivum, madura vākkil

sērvu āgum tiruvāyil tīndamiḻin mālaigaḷum, semboṭrāḷē

sārvu āna tirumanamum, uḻavārat tanip-paḍaiyum tāmum āgip,

pār vāḻat tiruvīdip paṇiseydu paṇindu-ēttip paravic celvār.


# 1491 - periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 226

nīḍu-pugaḻt tiruvārūr nilavu maṇip-puṭriḍaṅgoḷ niruttar tammaik

kūḍiya anboḍu kālaṅgaḷil aṇaindu kumbiṭṭuk, kōdu-il vāymaip

"pāḍiḷam būdattinān" enum padigam mudalāna palavum pāḍi,

nāḍiya ārvam peruga naindu manam karaindu-urugi nayandu selvār,


tirunāvukkarasar tēvāram - padigam 6.31 – tiruvārūr - (tiruttāṇḍagam)

(eṇsīr viruttam - tāṇḍagam - meter)

pāḍal eṇ : 1

iḍar keḍumāṟu eṇṇudiyēl neñjē nī vā;

.. īṇḍu oḷi sēr gaṅgaic caḍaiyāy eṇḍrum,

suḍar-oḷiyāy uḷ viḷaṅgu sōdī eṇḍrum,

.. tū-nīṟu sērndu ilaṅgu tōḷā eṇḍrum,

kaḍal-viḍamadu uṇḍu iruṇḍa kaṇḍā eṇḍrum,

.. kalaimān maṟi ēndu kaiyā eṇḍrum,

aḍal-viḍaiyāy āramudē ādī eṇḍrum,

.. ārūrā eṇḍreṇḍrē alaṟā nillē.


pāḍal eṇ : 2

seḍi ēṟu tīvinaigaḷ tīrum vaṇṇam

.. sindittēl * neñjamē tiṇṇamāgap

poḍi ēṟu tirumēni uḍaiyāy eṇḍrum,

.. purandaran-tan tōḷ tuṇitta punidā eṇḍrum,

aḍiyēnai āḷāgak koṇḍāy eṇḍrum,

.. ammānē ārur em-arasē eṇḍrum,

kaḍi nāṟu poḻil-kaccik kambā eṇḍrum,

.. kaṟpagamē eṇḍreṇḍrē kadaṟā nillē.

(* sindittēneñjamē = 1. sindittēl neñjamē; 2. sindittēn neñjamē;)

(* Variant reading: sindittē neñjamē)


pāḍal eṇ : 3

nilaibeṟumāṟu eṇṇudiyēl neñjē nī vā;

.. nittalum em pirānuḍaiya kōyil pukkup,

pularvadanmun alagiṭṭu meḻukkum iṭṭup,

.. pūmālai punaindu, ēttip pugaḻndu pāḍit,

talaiyārak kumbiṭṭuk, kūttum āḍic,

.. saṅgarā saya pōṭri pōṭri eṇḍrum,

alai-punal sēr señjaḍai em ādī eṇḍrum

.. ārūrā eṇḍreṇḍrē alaṟā nillē.


pāḍal eṇ : 4

puṇṇiyamum nanneṟiyum āvadellām,

.. neñjamē idu kaṇḍāy, porundak kēḷ nī;

nuṇṇiya veṇṇūl kiḍanda mārbā eṇḍrum,

.. nundāda oṇ-suḍarē eṇḍrum, nāḷum,

viṇ-iyaṅgu dēvargaḷum vēdam nāngum

.. viraimalarmēl nānmuganum mālum kūḍi

eṇṇariya tirunāmam uḍaiyāy eṇḍrum,

.. eḻil-ārūrā eṇḍrē ēttā nillē.


pāḍal eṇ : 5

iḻaitta-nāḷ ellai kaḍappadu eṇḍrāl, *

.. iravinoḍu naṇbagalum ētti vāḻttip,

piḻaittadelām poṟuttaruḷsey periyōy eṇḍrum,

.. piññaganē maiñ-ñavilum kaṇḍā eṇḍrum,

aḻaittu-alaṟi, aḍiyēn un araṇam kaṇḍāy

.. aṇi-ārūr iḍaṅgoṇḍa aḻagā eṇḍrum,

kuḻaṟcaḍai em kōn eṇḍrum kūṟu neñjē;

.. kuṭram illai enmēl nān kūṟinēnē.

(* Variant reading: kaḍappadu aṇḍrāl)


pāḍal eṇ : 6

nīppariya pal-piṟavi nīkkum vaṇṇam

.. ninaindirundēn kāṇ neñjē; nittamāgac,

cēp piriyā velgoḍiyinānē eṇḍrum,

.. sivalōga-neṟi tanda sivanē eṇḍrum,

pūp piriyā nānmuganum puḷḷin mēlaip

.. puṇḍarigak kaṇṇānum pōṭri ennat

tīp-piḻambāy niṇḍravanē, selvam malgum

.. tiruvārūrā eṇḍrē sindi neñjē.


pāḍal eṇ : 7

paṭri-niṇḍra pāvaṅgaḷ pāṭra vēṇḍil,

.. paragadikkuc celvadoru parisu vēṇḍil,

suṭri-niṇḍra sūḻ-vinaigaḷ vīḻkka vēṇḍil,

.. sollugēn kēḷ neñjē, tuñjā vaṇṇam;

uṭravarum uṟuduṇaiyum nīyē eṇḍrum,

.. unnaiyallāl orudeyvam uḷgēn eṇḍrum

puṭru-aravak kaccu ārtta punidā eṇḍrum,

.. poḻil-ārūrā eṇḍrē pōṭrā-nillē.


pāḍal eṇ : 8

madi taruvan neñjamē; uñju-pōga

.. vaḻi āvadu idu kaṇḍāy; vānōrkkellām

adibadiyē āramudē ādī eṇḍrum,

.. ammānē ārūr em aiyā eṇḍrum

tudiseydu, tuṇḍru-malar koṇḍu tūvic,

.. sūḻum valañjeydu, toṇḍu pāḍik,

kadirmadi sēr senniyanē, kāla kālā,

.. kaṟpagamē eṇḍreṇḍrē kadaṟā-nillē.


pāḍal eṇ : 9

pāsattaip paṭru-aṟukkal āgum neñjē;

.. parañjōdi, paṇḍaraṅgā, pāva-nāsā,

dēsattu oḷi-viḷakkē, tēvadēvē,

.. tiruvārūrt tirumūlaṭṭānā eṇḍrum,

nēsattai nī perukki nērniṇḍru uḷgi,

.. nittalum seṇḍru aḍimēl vīḻndu niṇḍru,

ēsaṭru niṇḍru, imaiyōr ēṟē eṇḍrum,

.. emberumān eṇḍreṇḍrē ēttā-nillē.


pāḍal eṇ : 10

pulangaḷ aindāl āṭṭuṇḍu, pōdu pōkkip,

.. puṟam-puṟamē tiriyādē, pōdu neñjē;

salaṅgoḷ saḍaimuḍi uḍaiya talaivā eṇḍrum,

.. takkan sey peruvēḷvi tagarttāy eṇḍrum,

ilaṅgaiyar-kōn siram neritta iṟaivā eṇḍrum,

.. eḻil-ārūr iḍaṅgoṇḍa endāy eṇḍrum,

nalaṅgoḷ-aḍi en talaimēl vaittāy eṇḍrum,

.. nāḷdōṟum naviṇḍru ēttāy; nanmai āmē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


Thirunavukkarasar, full of devotion, sings padhigams and does service in Thiruvarur

# 1490 - पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 225

(अऱुसीर् विरुत्तम् - meter)

मार्बु आरप् पॊऴि-कण्णीर् मऴै वारुम् तिरुवडिवुम्, मदुर वाक्किल्

सेर्वु आगुम् तिरुवायिल् तीन्दमिऴिन् मालैगळुम्, सॆम्बॊट्राळे

सार्वु आन तिरुमनमुम्, उऴवारत् तनिप्-पडैयुम् तामुम् आगिप्,

पार् वाऴत् तिरुवीदिप् पणिसॆय्दु पणिन्दु-एत्तिप् परविच् चॆल्वार्.


# 1491 - पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 226

नीडु-पुगऴ्त् तिरुवारूर् निलवु मणिप्-पुट्रिडङ्गॊळ् निरुत्तर् तम्मैक्

कूडिय अन्बॊडु कालङ्गळिल् अणैन्दु कुम्बिट्टुक्, कोदु-इल् वाय्मैप्

"पाडिळम् बूदत्तिनान्" ऎनुम् पदिगम् मुदलान पलवुम् पाडि,

नाडिय आर्वम् पॆरुग नैन्दु मनम् करैन्दु-उरुगि नयन्दु सॆल्वार्,


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 6.31 – तिरुवारूर् - (तिरुत्ताण्डगम्)

(ऎण्सीर् विरुत्तम् - ताण्डगम् - meter)

पाडल् ऎण् : 1

इडर् कॆडुमाऱु ऎण्णुदियेल् नॆञ्जे नी वा;

.. ईण्डु ऒळि सेर् गङ्गैच् चडैयाय् ऎण्ड्रुम्,

सुडर्-ऒळियाय् उळ् विळङ्गु सोदी ऎण्ड्रुम्,

.. तू-नीऱु सेर्न्दु इलङ्गु तोळा ऎण्ड्रुम्,

कडल्-विडमदु उण्डु इरुण्ड कण्डा ऎण्ड्रुम्,

.. कलैमान् मऱि एन्दु कैया ऎण्ड्रुम्,

अडल्-विडैयाय् आरमुदे आदी ऎण्ड्रुम्,

.. आरूरा ऎण्ड्रॆण्ड्रे अलऱा निल्ले.


पाडल् ऎण् : 2

सॆडि एऱु तीविनैगळ् तीरुम् वण्णम्

.. सिन्दित्तेल् * नॆञ्जमे तिण्णमागप्

पॊडि एऱु तिरुमेनि उडैयाय् ऎण्ड्रुम्,

.. पुरन्दरन्-तन् तोळ् तुणित्त पुनिदा ऎण्ड्रुम्,

अडियेनै आळागक् कॊण्डाय् ऎण्ड्रुम्,

.. अम्माने आरुर् ऎम्-अरसे ऎण्ड्रुम्,

कडि नाऱु पॊऴिल्-कच्चिक् कम्बा ऎण्ड्रुम्,

.. कऱ्‌पगमे ऎण्ड्रॆण्ड्रे कदऱा निल्ले.

(* सिन्दित्तेनॆञ्जमे = 1. सिन्दित्तेल् नॆञ्जमे; 2. सिन्दित्तेन् नॆञ्जमे;)

(* Variant reading: सिन्दित्ते नॆञ्जमे)


पाडल् ऎण् : 3

निलैबॆऱुमाऱु ऎण्णुदियेल् नॆञ्जे नी वा;

.. नित्तलुम् ऎम् पिरानुडैय कोयिल् पुक्कुप्,

पुलर्वदन्मुन् अलगिट्टु मॆऴुक्कुम् इट्टुप्,

.. पूमालै पुनैन्दु, एत्तिप् पुगऴ्न्दु पाडित्,

तलैयारक् कुम्बिट्टुक्, कूत्तुम् आडिच्,

.. सङ्गरा सय पोट्रि पोट्रि ऎण्ड्रुम्,

अलै-पुनल् सेर् सॆञ्जडै ऎम् आदी ऎण्ड्रुम्

.. आरूरा ऎण्ड्रॆण्ड्रे अलऱा निल्ले.


पाडल् ऎण् : 4

पुण्णियमुम् नन्नॆऱियुम् आवदॆल्लाम्,

.. नॆञ्जमे इदु कण्डाय्, पॊरुन्दक् केळ् नी;

नुण्णिय वॆण्णूल् किडन्द मार्बा ऎण्ड्रुम्,

.. नुन्दाद ऒण्-सुडरे ऎण्ड्रुम्, नाळुम्,

विण्-इयङ्गु देवर्गळुम् वेदम् नान्गुम्

.. विरैमलर्मेल् नान्मुगनुम् मालुम् कूडि

ऎण्णरिय तिरुनामम् उडैयाय् ऎण्ड्रुम्,

.. ऎऴिल्-आरूरा ऎण्ड्रे एत्ता निल्ले.


पाडल् ऎण् : 5

इऴैत्त-नाळ् ऎल्लै कडप्पदु ऎण्ड्राल्, *

.. इरविनॊडु नण्बगलुम् एत्ति वाऴ्त्तिप्,

पिऴैत्तदॆलाम् पॊऱुत्तरुळ्सॆय् पॆरियोय् ऎण्ड्रुम्,

.. पिञ्ञगने मैञ्-ञविलुम् कण्डा ऎण्ड्रुम्,

अऴैत्तु-अलऱि, अडियेन् उन् अरणम् कण्डाय्

.. अणि-आरूर् इडङ्गॊण्ड अऴगा ऎण्ड्रुम्,

कुऴऱ्‌चडै ऎम् कोन् ऎण्ड्रुम् कूऱु नॆञ्जे;

.. कुट्रम् इल्लै ऎन्मेल् नान् कूऱिनेने.

(* Variant reading: कडप्पदु अण्ड्राल्)


पाडल् ऎण् : 6

नीप्परिय पल्-पिऱवि नीक्कुम् वण्णम्

.. निनैन्दिरुन्देन् काण् नॆञ्जे; नित्तमागच्,

चेप् पिरिया वॆल्गॊडियिनाने ऎण्ड्रुम्,

.. सिवलोग-नॆऱि तन्द सिवने ऎण्ड्रुम्,

पूप् पिरिया नान्मुगनुम् पुळ्ळिन् मेलैप्

.. पुण्डरिगक् कण्णानुम् पोट्रि ऎन्नत्

तीप्-पिऴम्बाय् निण्ड्रवने, सॆल्वम् मल्गुम्

.. तिरुवारूरा ऎण्ड्रे सिन्दि नॆञ्जे.


पाडल् ऎण् : 7

पट्रि-निण्ड्र पावङ्गळ् पाट्र वेण्डिल्,

.. परगदिक्कुच् चॆल्वदॊरु परिसु वेण्डिल्,

सुट्रि-निण्ड्र सूऴ्-विनैगळ् वीऴ्क्क वेण्डिल्,

.. सॊल्लुगेन् केळ् नॆञ्जे, तुञ्जा वण्णम्;

उट्रवरुम् उऱुदुणैयुम् नीये ऎण्ड्रुम्,

.. उन्नैयल्लाल् ऒरुदॆय्वम् उळ्गेन् ऎण्ड्रुम्

पुट्रु-अरवक् कच्चु आर्त्त पुनिदा ऎण्ड्रुम्,

.. पॊऴिल्-आरूरा ऎण्ड्रे पोट्रा-निल्ले.


पाडल् ऎण् : 8

मदि तरुवन् नॆञ्जमे; उञ्जु-पोग

.. वऴि आवदु इदु कण्डाय्; वानोर्क्कॆल्लाम्

अदिबदिये आरमुदे आदी ऎण्ड्रुम्,

.. अम्माने आरूर् ऎम् ऐया ऎण्ड्रुम्

तुदिसॆय्दु, तुण्ड्रु-मलर् कॊण्डु तूविच्,

.. सूऴुम् वलञ्जॆय्दु, तॊण्डु पाडिक्,

कदिर्मदि सेर् सॆन्नियने, काल काला,

.. कऱ्‌पगमे ऎण्ड्रॆण्ड्रे कदऱा-निल्ले.


पाडल् ऎण् : 9

पासत्तैप् पट्रु-अऱुक्कल् आगुम् नॆञ्जे;

.. परञ्जोदि, पण्डरङ्गा, पाव-नासा,

देसत्तु ऒळि-विळक्के, तेवदेवे,

.. तिरुवारूर्त् तिरुमूलट्टाना ऎण्ड्रुम्,

नेसत्तै नी पॆरुक्कि नेर्निण्ड्रु उळ्गि,

.. नित्तलुम् सॆण्ड्रु अडिमेल् वीऴ्न्दु निण्ड्रु,

एसट्रु निण्ड्रु, इमैयोर् एऱे ऎण्ड्रुम्,

.. ऎम्बॆरुमान् ऎण्ड्रॆण्ड्रे एत्ता-निल्ले.


पाडल् ऎण् : 10

पुलन्गळ् ऐन्दाल् आट्टुण्डु, पोदु पोक्किप्,

.. पुऱम्-पुऱमे तिरियादे, पोदु नॆञ्जे;

सलङ्गॊळ् सडैमुडि उडैय तलैवा ऎण्ड्रुम्,

.. तक्कन् सॆय् पॆरुवेळ्वि तगर्त्ताय् ऎण्ड्रुम्,

इलङ्गैयर्-कोन् सिरम् नॆरित्त इऱैवा ऎण्ड्रुम्,

.. ऎऴिल्-आरूर् इडङ्गॊण्ड ऎन्दाय् ऎण्ड्रुम्,

नलङ्गॊळ्-अडि ऎन् तलैमेल् वैत्ताय् ऎण्ड्रुम्,

.. नाळ्दोऱुम् नविण्ड्रु एत्ताय्; नन्मै आमे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

Thirunavukkarasar, full of devotion, sings padhigams and does service in Thiruvarur

# 1490 - పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 225

(అఱుసీర్ విరుత్తం - meter)

మార్బు ఆరప్ పొఴి-కణ్ణీర్ మఴై వారుం తిరువడివుం, మదుర వాక్కిల్

సేర్వు ఆగుం తిరువాయిల్ తీందమిఴిన్ మాలైగళుం, సెంబొట్రాళే

సార్వు ఆన తిరుమనముం, ఉఴవారత్ తనిప్-పడైయుం తాముం ఆగిప్,

పార్ వాఴత్ తిరువీదిప్ పణిసెయ్దు పణిందు-ఏత్తిప్ పరవిచ్ చెల్వార్.


# 1491 - పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 226

నీడు-పుగఴ్త్ తిరువారూర్ నిలవు మణిప్-పుట్రిడంగొళ్ నిరుత్తర్ తమ్మైక్

కూడియ అన్బొడు కాలంగళిల్ అణైందు కుంబిట్టుక్, కోదు-ఇల్ వాయ్మైప్

"పాడిళం బూదత్తినాన్" ఎనుం పదిగం ముదలాన పలవుం పాడి,

నాడియ ఆర్వం పెరుగ నైందు మనం కరైందు-ఉరుగి నయందు సెల్వార్,


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 6.31 – తిరువారూర్ - (తిరుత్తాండగం)

(ఎణ్సీర్ విరుత్తం - తాండగం - meter)

పాడల్ ఎణ్ : 1

ఇడర్ కెడుమాఱు ఎణ్ణుదియేల్ నెంజే నీ వా;

.. ఈండు ఒళి సేర్ గంగైచ్ చడైయాయ్ ఎండ్రుం,

సుడర్-ఒళియాయ్ ఉళ్ విళంగు సోదీ ఎండ్రుం,

.. తూ-నీఱు సేర్న్దు ఇలంగు తోళా ఎండ్రుం,

కడల్-విడమదు ఉండు ఇరుండ కండా ఎండ్రుం,

.. కలైమాన్ మఱి ఏందు కైయా ఎండ్రుం,

అడల్-విడైయాయ్ ఆరముదే ఆదీ ఎండ్రుం,

.. ఆరూరా ఎండ్రెండ్రే అలఱా నిల్లే.


పాడల్ ఎణ్ : 2

సెడి ఏఱు తీవినైగళ్ తీరుం వణ్ణం

.. సిందిత్తేల్ * నెంజమే తిణ్ణమాగప్

పొడి ఏఱు తిరుమేని ఉడైయాయ్ ఎండ్రుం,

.. పురందరన్-తన్ తోళ్ తుణిత్త పునిదా ఎండ్రుం,

అడియేనై ఆళాగక్ కొండాయ్ ఎండ్రుం,

.. అమ్మానే ఆరుర్ ఎం-అరసే ఎండ్రుం,

కడి నాఱు పొఴిల్-కచ్చిక్ కంబా ఎండ్రుం,

.. కఱ్పగమే ఎండ్రెండ్రే కదఱా నిల్లే.

(* సిందిత్తేనెంజమే = 1. సిందిత్తేల్ నెంజమే; 2. సిందిత్తేన్ నెంజమే;)

(* Variant reading: సిందిత్తే నెంజమే)


పాడల్ ఎణ్ : 3

నిలైబెఱుమాఱు ఎణ్ణుదియేల్ నెంజే నీ వా;

.. నిత్తలుం ఎం పిరానుడైయ కోయిల్ పుక్కుప్,

పులర్వదన్మున్ అలగిట్టు మెఴుక్కుం ఇట్టుప్,

.. పూమాలై పునైందు, ఏత్తిప్ పుగఴ్న్దు పాడిత్,

తలైయారక్ కుంబిట్టుక్, కూత్తుం ఆడిచ్,

.. సంగరా సయ పోట్రి పోట్రి ఎండ్రుం,

అలై-పునల్ సేర్ సెంజడై ఎం ఆదీ ఎండ్రుం

.. ఆరూరా ఎండ్రెండ్రే అలఱా నిల్లే.


పాడల్ ఎణ్ : 4

పుణ్ణియముం నన్నెఱియుం ఆవదెల్లాం,

.. నెంజమే ఇదు కండాయ్, పొరుందక్ కేళ్ నీ;

నుణ్ణియ వెణ్ణూల్ కిడంద మార్బా ఎండ్రుం,

.. నుందాద ఒణ్-సుడరే ఎండ్రుం, నాళుం,

విణ్-ఇయంగు దేవర్గళుం వేదం నాన్గుం

.. విరైమలర్మేల్ నాన్ముగనుం మాలుం కూడి

ఎణ్ణరియ తిరునామం ఉడైయాయ్ ఎండ్రుం,

.. ఎఴిల్-ఆరూరా ఎండ్రే ఏత్తా నిల్లే.


పాడల్ ఎణ్ : 5

ఇఴైత్త-నాళ్ ఎల్లై కడప్పదు ఎండ్రాల్, *

.. ఇరవినొడు నణ్బగలుం ఏత్తి వాఴ్త్తిప్,

పిఴైత్తదెలాం పొఱుత్తరుళ్సెయ్ పెరియోయ్ ఎండ్రుం,

.. పిఞ్ఞగనే మైఞ్-ఞవిలుం కండా ఎండ్రుం,

అఴైత్తు-అలఱి, అడియేన్ ఉన్ అరణం కండాయ్

.. అణి-ఆరూర్ ఇడంగొండ అఴగా ఎండ్రుం,

కుఴఱ్చడై ఎం కోన్ ఎండ్రుం కూఱు నెంజే;

.. కుట్రం ఇల్లై ఎన్మేల్ నాన్ కూఱినేనే.

(* Variant reading: కడప్పదు అండ్రాల్)


పాడల్ ఎణ్ : 6

నీప్పరియ పల్-పిఱవి నీక్కుం వణ్ణం

.. నినైందిరుందేన్ కాణ్ నెంజే; నిత్తమాగచ్,

చేప్ పిరియా వెల్గొడియినానే ఎండ్రుం,

.. సివలోగ-నెఱి తంద సివనే ఎండ్రుం,

పూప్ పిరియా నాన్ముగనుం పుళ్ళిన్ మేలైప్

.. పుండరిగక్ కణ్ణానుం పోట్రి ఎన్నత్

తీప్-పిఴంబాయ్ నిండ్రవనే, సెల్వం మల్గుం

.. తిరువారూరా ఎండ్రే సింది నెంజే.


పాడల్ ఎణ్ : 7

పట్రి-నిండ్ర పావంగళ్ పాట్ర వేండిల్,

.. పరగదిక్కుచ్ చెల్వదొరు పరిసు వేండిల్,

సుట్రి-నిండ్ర సూఴ్-వినైగళ్ వీఴ్క్క వేండిల్,

.. సొల్లుగేన్ కేళ్ నెంజే, తుంజా వణ్ణం;

ఉట్రవరుం ఉఱుదుణైయుం నీయే ఎండ్రుం,

.. ఉన్నైయల్లాల్ ఒరుదెయ్వం ఉళ్గేన్ ఎండ్రుం

పుట్రు-అరవక్ కచ్చు ఆర్త్త పునిదా ఎండ్రుం,

.. పొఴిల్-ఆరూరా ఎండ్రే పోట్రా-నిల్లే.


పాడల్ ఎణ్ : 8

మది తరువన్ నెంజమే; ఉంజు-పోగ

.. వఴి ఆవదు ఇదు కండాయ్; వానోర్క్కెల్లాం

అదిబదియే ఆరముదే ఆదీ ఎండ్రుం,

.. అమ్మానే ఆరూర్ ఎం ఐయా ఎండ్రుం

తుదిసెయ్దు, తుండ్రు-మలర్ కొండు తూవిచ్,

.. సూఴుం వలంజెయ్దు, తొండు పాడిక్,

కదిర్మది సేర్ సెన్నియనే, కాల కాలా,

.. కఱ్పగమే ఎండ్రెండ్రే కదఱా-నిల్లే.


పాడల్ ఎణ్ : 9

పాసత్తైప్ పట్రు-అఱుక్కల్ ఆగుం నెంజే;

.. పరంజోది, పండరంగా, పావ-నాసా,

దేసత్తు ఒళి-విళక్కే, తేవదేవే,

.. తిరువారూర్త్ తిరుమూలట్టానా ఎండ్రుం,

నేసత్తై నీ పెరుక్కి నేర్నిండ్రు ఉళ్గి,

.. నిత్తలుం సెండ్రు అడిమేల్ వీఴ్న్దు నిండ్రు,

ఏసట్రు నిండ్రు, ఇమైయోర్ ఏఱే ఎండ్రుం,

.. ఎంబెరుమాన్ ఎండ్రెండ్రే ఏత్తా-నిల్లే.


పాడల్ ఎణ్ : 10

పులన్గళ్ ఐందాల్ ఆట్టుండు, పోదు పోక్కిప్,

.. పుఱం-పుఱమే తిరియాదే, పోదు నెంజే;

సలంగొళ్ సడైముడి ఉడైయ తలైవా ఎండ్రుం,

.. తక్కన్ సెయ్ పెరువేళ్వి తగర్త్తాయ్ ఎండ్రుం,

ఇలంగైయర్-కోన్ సిరం నెరిత్త ఇఱైవా ఎండ్రుం,

.. ఎఴిల్-ఆరూర్ ఇడంగొండ ఎందాయ్ ఎండ్రుం,

నలంగొళ్-అడి ఎన్ తలైమేల్ వైత్తాయ్ ఎండ్రుం,

.. నాళ్దోఱుం నవిండ్రు ఏత్తాయ్; నన్మై ఆమే.

================ ============


No comments:

Post a Comment