143) 3.32 - வன்னியும் மத்தமும் - vanniyum maththamum - (Thiruvedagam)
சம்பந்தர் தேவாரம் - 3.32 - வன்னியும் மத்தமும் - திருவேடகம் - (பண் - கொல்லி)
sambandar tēvāram - 3.32 - vanniyum mattamum - tiruvēḍagam - (paṇ - kolli)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1cl0uYWrNp6yOOFY5iTHz0sqVFHI2H8Ur/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/nGURV8wuQJ0
Part-2: https://youtu.be/2mFgAtQJ6zg
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS3_032.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.32 – திருவேடகம் - வன்னியும் மத்தமும் ( பண் - கொல்லி )
பதிக வரலாறு :
"புனல் வாதம்":
அனல்வாதத்திலும் தோற்ற சமணர்கள், பாண்டிய மன்னனை நோக்கி "வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்" என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ்வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன்பட்டான்.
ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர். முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் "அஸ்தி நாஸ்தி" என்ற வசனத்தை எழுதி ஆற்றில் இட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள், சம்பந்தரை நோக்கி, "நீங்களும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக" எனக் கூறினர். ஞானசம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் "வாழ்க அந்தணர்" (சம்பந்தர் தேவாரம் - 3.54) என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளி, அதனை ஏட்டில் எழுதச் செய்து அந்த ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகையாற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
அத்திருப்பதிகப் பாடலில் "வேந்தனும் ஓங்குக" என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து "நின்றசீர் நெடுமாறன்" ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் "வன்னியும் மத்தமும்" (சம்பந்தர் தேவாரம் - 3.32) என்ற திருப்பதிகத்தை பாடியருளினார். அந்த ஏடு வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் "ஏடகம்" எனப் பெற்றது. குலச்சிறையார் அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார்.
My note:
Sambandar sang this padhigam on Thiruvedagam (3.32) while standing on the banks of Vaigai river in Madurai.
It is not clear what the earlier name of Thiruvedagam was – the place where Sambandar's thevaram palmyra leaf manuscript stopped upstream in the Vaigai river. As per Sambandar thevaram songs (in this padhigam 3.32) and the Periyapuranam song, there already was a Siva temple in that place. As Sambandar mentions this sthalam as "Edagam" (Edu-agam) in this padhigam, that became the name of the place thereafter (forever eclipsing any earlier name that place may have had).
Thiruvedagam:
This place is about 20 km West-Northwest of Madurai on the northern shore of Vaigai river.
--------
Padhigam background - Periya Puranam
Note: The following 2 periyapuranam (849 & 850) songs have already been discussed in the context of 3.54 padhigam.
Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 – பெரியபுராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 849
ஆற்றின்மேற் செல்லு மேடு தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக்
காற்றென விசையிற் செல்லுங் கடும்பரி யேறிக் கொண்டு
கோற்றொழி றிருத்த வல்ல குலச்சிறை யார்பின் சென்றார்;
ஏற்றுயர் கொடியி னாரைப் பாடினா ரேடு தங்க.
Word separated:
ஆற்றின்மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்
காற்று-என விசையிற் செல்லும் கடும்-பரி ஏறிக்கொண்டு
கோல்-தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்;
ஏற்று-உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க.
Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 – பெரியபுராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 850
ஏடகம் பிள்ளை யார்தாம் "வன்னி"யென் றெடுத்துப் பாடக்
கூடிய நீரி லேடு குலச்சிறை யாருங் கூடிக்
காடிட மாக வாடுங் கண்ணுதல் கோயின் மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு நின்றவே டெடுத்துக் கொண்டார்.
Word separated:
ஏடகம் பிள்ளையார்தாம் "வன்னி" என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறையாருங் கூடிக்
காடு-இடமாக ஆடும் கண்ணுதல் கோயில் மாடு
நீடு-நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்துக்கொண்டார்.
Minister KulachiRai worships Siva in Thiruvedagam temple and returns to Madurai
# 2749 – பெரியபுராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 851
தலைமிசை வைத்துக் கொண்டு தாங்கரு மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையி லேறி யாங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞான முண்டவர் தம்பால் வந்தார்.
Word separated:
தலைமிசை வைத்துக்கொண்டு, தாங்கரு மகிழ்ச்சி பொங்க
அலை-புனல் கரையில் ஏறி, ஆங்கு இனிது-அமர்ந்த மேருச்-
சிலை உடையவர்-தாள் போற்றி, மீண்டுசென்று அணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம் உண்டவர்தம்பால் வந்தார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 3.32 – திருவேடகம் - வன்னியும் மத்தமும் ( பண் - கொல்லி )
வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே.
Word separated:
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்
பொன்-இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத்து ஒருவனே.
கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற வமைதர மருவிய வேடகத்
தடிகளை யடிபணிந் தரற்றுமி னன்பினால்
இடிபடும் வினைகள்போ யில்லைய தாகுமே.
Word separated:
கொடி-நெடு-மாளிகை கோபுரம் குளிர்-மதி
வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
அடிகளை அடி-பணிந்து அரற்றுமின் அன்பினால்;
இடிபடும் வினைகள் போய் இல்லையதாகுமே.
குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூ ரேடகம்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.
Word separated:
குண்டலம் திகழ்தரு காதுடைக் குழகனை,
வண்டு அலம்பும் மலர்க்-கொன்றை வான்-மதி அணி,
செண்டு அலம்பும் விடைச் சேடன் ஊர் ஏடகம்
கண்டு கை-தொழுதலும் கவலை-நோய் கழலுமே.
ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே.
Word separated:
ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில்-பெறும்
கோலம் ஆர்தரு விடைக் குழகனார் உறைவிடம்,
சாலம் மாதவிகளும் சந்தனம் சண்பகம்
சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே.
வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே.
Word separated:
வரி அணி நயனி, நன் மலைமகள் மறுகிடக்
கரியினை உரிசெய்த கறை-அணி மிடறினன்;
பெரியவன்; பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.
பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.
Word separated:
பொய்கையின் பொழில்-உறு புதுமலர்த் தென்றல் ஆர்
வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடி-பணிந்து அரற்றுமின்; அடர்தரும்
வெய்ய-வன்-பிணி கெட, வீடு எளிது ஆகுமே.
* * * * * * This verse is lost * * * * * *
Word separated:
* * * * * * This verse is lost * * * * * *
தடவரை யெடுத்தவன் றருக்கிறத் தோளடர்
படவிர லூன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவர லெருக்கொடு வன்னியு மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.
Word separated:
தட-வரை எடுத்தவன் தருக்கு இறத் தோள் அடர்
பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான்;
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத்து இறைவனே.
பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.
Word separated:
பொன்னும் மா மணிகளும் பொரு-திரைச் சந்து அகில்
தன்னுள் ஆர் வைகையின் கரைதனில், சமைவுற
அன்னம் ஆம் அயனும் மால் அடிமுடி தேடியும்
இன்னவாறு என ஒணான், ஏடகத்து ஒருவனே.
குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை யேடகத் தெந்தையே.
Word separated:
குண்டிகைக் கையினர், குணம்-இலாத் தேரர்கள்,
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்,
வண்டு இரைக்கும் மலர்க்-கொன்றையும் வன்னியும்
இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே.
பாடல் எண் : 11
கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
Word separated:
கோடு, சந்தனம், அகில் கொண்டு இழி வைகை-நீர்
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை
நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்திவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Note: The following 2 periyapuranam (849 & 850) songs have already been discussed in the context of 3.54 padhigam.
Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 – periyapurāṇam - tiruñāna sambandar purāṇam - 849
āṭrinmēl sellum ēḍu toḍarndu eḍuppadaṟku vēṇḍik
kāṭru-ena visaiyiṟ cellum kaḍum-pari ēṟikkoṇḍu
kōl-toḻil tirutta valla kulacciṟaiyār pin seṇḍrār;
ēṭru-uyar koḍiyināraip pāḍinār ēḍu taṅga.
Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 – periyapurāṇam - tiruñāna sambandar purāṇam - 850
ēḍagam piḷḷaiyārdām "vanni" eṇḍru eḍuttup pāḍak
kūḍiya nīril ēḍu kulacciṟaiyāruṅ gūḍik
kāḍu-iḍamāga āḍum kaṇṇudal kōyil māḍu
nīḍu-nīr naḍuvuḷ pukku niṇḍra ēḍu eḍuttukkoṇḍār.
Minister KulachiRai worships Siva in Thiruvedagam temple and returns to Madurai
# 2749 – periyapurāṇam - tiruñāna sambandar purāṇam - 851
talaimisai vaittukkoṇḍu, tāṅgaru magiḻcci poṅga
alai-punal karaiyil ēṟi, āṅgu inidu-amarnda mēruc-
cilai uḍaiyavar-tāḷ pōṭri, mīṇḍuseṇḍru aṇaivār teyva
malaimagaḷ kuḻaitta ñānam uṇḍavardambāl vandār.
sambandar tēvāram - padigam 3.32 – tiruvēḍagam - vanniyum mattamum ( paṇ - kolli )
pāḍal eṇ : 1
vanniyum mattamum madi podi saḍaiyinan
pon-iyal tiruvaḍi pudumalar avaigoḍu
manniya maṟaiyavar vaḻibaḍa, aḍiyavar
innisai pāḍalar ēḍagattu oruvanē.
pāḍal eṇ : 2
koḍi-neḍu-māḷigai gōburam kuḷir-madi
vaḍivuṟa amaidara maruviya ēḍagattu
aḍigaḷai aḍi-paṇindu araṭrumin anbināl;
iḍibaḍum vinaigaḷ pōy illaiyadāgumē.
pāḍal eṇ : 3
kuṇḍalam tigaḻdaru kāduḍaik kuḻaganai,
vaṇḍu alambum malark-koṇḍrai vān-madi aṇi,
seṇḍu alambum viḍaic cēḍan ūr ēḍagam
kaṇḍu kai-toḻudalum kavalai-nōy kaḻalumē.
pāḍal eṇ : 4
ēlam ārdaru kuḻal ēḻaiyōḍu eḻil-peṟum
kōlam ārdaru viḍaik kuḻaganār uṟaiviḍam,
sālam mādavigaḷum sandanam saṇbagam
sīlam ār ēḍagam sērdal ām selvamē.
pāḍal eṇ : 5
vari aṇi nayani, nan malaimagaḷ maṟugiḍak
kariyinai uriseyda kaṟai-aṇi miḍaṟinan;
periyavan; peṇṇinōḍu āṇ ali āgiya
eriyavan uṟaiviḍam ēḍagak kōyilē.
pāḍal eṇ : 6
poygaiyin poḻil-uṟu pudumalart teṇḍral ār
vaigaiyin vaḍagarai maruviya ēḍagattu
aiyanai aḍi-paṇindu araṭrumin; aḍardarum
veyya-van-piṇi keḍa, vīḍu eḷidu āgumē.
pāḍal eṇ : 7
* * * * * * This verse is lost * * * * * *
pāḍal eṇ : 8
taḍa-varai eḍuttavan tarukku iṟat tōḷ aḍar
paḍa viral ūṇḍriyē parindu avaṟku aruḷseydān;
maḍavaral erukkoḍu vanniyum mattamum
iḍamuḍaic caḍaiyinan ēḍagattu iṟaivanē.
pāḍal eṇ : 9
ponnum mā maṇigaḷum poru-tiraic candu agil
tannuḷ ār vaigaiyin karaidanil, samaivuṟa
annam ām ayanum māl aḍimuḍi tēḍiyum
innavāṟu ena oṇān, ēḍagattu oruvanē.
pāḍal eṇ : 10
kuṇḍigaik kaiyinar, kuṇam-ilāt tērargaḷ,
paṇḍiyaip perukkiḍum paḷagargaḷ paṇigilar,
vaṇḍu iraikkum malark-koṇḍraiyum vanniyum
iṇḍai sērkkum saḍai ēḍagattu endaiyē.
pāḍal eṇ : 11
kōḍu, sandanam, agil koṇḍu iḻi vaigai-nīr
ēḍu seṇḍru aṇaidarum ēḍagattu oruvanai
nāḍu ten pugaliyuḷ ñānasambandana
pāḍal pattivai vallārkku illai ām pāvamē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Note: The following 2 periyapuranam (849 & 850) songs have already been discussed in the context of 3.54 padhigam.
Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 – पॆरियपुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 849
आट्रिन्मेल् सॆल्लुम् एडु तॊडर्न्दु ऎडुप्पदऱ्कु वेण्डिक्
काट्रु-ऎन विसैयिऱ् चॆल्लुम् कडुम्-परि एऱिक्कॊण्डु
कोल्-तॊऴिल् तिरुत्त वल्ल कुलच्चिऱैयार् पिन् सॆण्ड्रार्;
एट्रु-उयर् कॊडियिनारैप् पाडिनार् एडु तङ्ग.
Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 – पॆरियपुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 850
एडगम् पिळ्ळैयार्दाम् "वन्नि" ऎण्ड्रु ऎडुत्तुप् पाडक्
कूडिय नीरिल् एडु कुलच्चिऱैयारुङ् गूडिक्
काडु-इडमाग आडुम् कण्णुदल् कोयिल् माडु
नीडु-नीर् नडुवुळ् पुक्कु निण्ड्र एडु ऎडुत्तुक्कॊण्डार्.
Minister KulachiRai worships Siva in Thiruvedagam temple and returns to Madurai
# 2749 – पॆरियपुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 851
तलैमिसै वैत्तुक्कॊण्डु, ताङ्गरु मगिऴ्च्चि पॊङ्ग
अलै-पुनल् करैयिल् एऱि, आङ्गु इनिदु-अमर्न्द मेरुच्-
चिलै उडैयवर्-ताळ् पोट्रि, मीण्डुसॆण्ड्रु अणैवार् तॆय्व
मलैमगळ् कुऴैत्त ञानम् उण्डवर्दम्बाल् वन्दार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 3.32 – तिरुवेडगम् - वन्नियुम् मत्तमुम् ( पण् - कॊल्लि )
पाडल् ऎण् : 1
वन्नियुम् मत्तमुम् मदि पॊदि सडैयिनन्
पॊन्-इयल् तिरुवडि पुदुमलर् अवैगॊडु
मन्निय मऱैयवर् वऴिबड, अडियवर्
इन्निसै पाडलर् एडगत्तु ऒरुवने.
पाडल् ऎण् : 2
कॊडि-नॆडु-माळिगै गोबुरम् कुळिर्-मदि
वडिवुऱ अमैदर मरुविय एडगत्तु
अडिगळै अडि-पणिन्दु अरट्रुमिन् अन्बिनाल्;
इडिबडुम् विनैगळ् पोय् इल्लैयदागुमे.
पाडल् ऎण् : 3
कुण्डलम् तिगऴ्दरु कादुडैक् कुऴगनै,
वण्डु अलम्बुम् मलर्क्-कॊण्ड्रै वान्-मदि अणि,
सॆण्डु अलम्बुम् विडैच् चेडन् ऊर् एडगम्
कण्डु कै-तॊऴुदलुम् कवलै-नोय् कऴलुमे.
पाडल् ऎण् : 4
एलम् आर्दरु कुऴल् एऴैयोडु ऎऴिल्-पॆऱुम्
कोलम् आर्दरु विडैक् कुऴगनार् उऱैविडम्,
सालम् मादविगळुम् सन्दनम् सण्बगम्
सीलम् आर् एडगम् सेर्दल् आम् सॆल्वमे.
पाडल् ऎण् : 5
वरि अणि नयनि, नन् मलैमगळ् मऱुगिडक्
करियिनै उरिसॆय्द कऱै-अणि मिडऱिनन्;
पॆरियवन्; पॆण्णिनोडु आण् अलि आगिय
ऎरियवन् उऱैविडम् एडगक् कोयिले.
पाडल् ऎण् : 6
पॊय्गैयिन् पॊऴिल्-उऱु पुदुमलर्त् तॆण्ड्रल् आर्
वैगैयिन् वडगरै मरुविय एडगत्तु
ऐयनै अडि-पणिन्दु अरट्रुमिन्; अडर्दरुम्
वॆय्य-वन्-पिणि कॆड, वीडु ऎळिदु आगुमे.
पाडल् ऎण् : 7
* * * * * * This verse is lost * * * * * *
पाडल् ऎण् : 8
तड-वरै ऎडुत्तवन् तरुक्कु इऱत् तोळ् अडर्
पड विरल् ऊण्ड्रिये परिन्दु अवऱ्कु अरुळ्सॆय्दान्;
मडवरल् ऎरुक्कॊडु वन्नियुम् मत्तमुम्
इडमुडैच् चडैयिनन् एडगत्तु इऱैवने.
पाडल् ऎण् : 9
पॊन्नुम् मा मणिगळुम् पॊरु-तिरैच् चन्दु अगिल्
तन्नुळ् आर् वैगैयिन् करैदनिल्, समैवुऱ
अन्नम् आम् अयनुम् माल् अडिमुडि तेडियुम्
इन्नवाऱु ऎन ऒणान्, एडगत्तु ऒरुवने.
पाडल् ऎण् : 10
कुण्डिगैक् कैयिनर्, कुणम्-इलात् तेरर्गळ्,
पण्डियैप् पॆरुक्किडुम् पळगर्गळ् पणिगिलर्,
वण्डु इरैक्कुम् मलर्क्-कॊण्ड्रैयुम् वन्नियुम्
इण्डै सेर्क्कुम् सडै एडगत्तु ऎन्दैये.
पाडल् ऎण् : 11
कोडु, सन्दनम्, अगिल् कॊण्डु इऴि वैगै-नीर्
एडु सॆण्ड्रु अणैदरुम् एडगत्तु ऒरुवनै
नाडु तॆन् पुगलियुळ् ञानसम्बन्दन
पाडल् पत्तिवै वल्लार्क्कु इल्लै आम् पावमे.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Note: The following 2 periyapuranam (849 & 850) songs have already been discussed in the context of 3.54 padhigam.
Sambandar sings another padhigam to make the upstream-swimming manuscript to stop
2747 – పెరియపురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 849
ఆట్రిన్మేల్ సెల్లుం ఏడు తొడర్న్దు ఎడుప్పదఱ్కు వేండిక్
కాట్రు-ఎన విసైయిఱ్ చెల్లుం కడుం-పరి ఏఱిక్కొండు
కోల్-తొఴిల్ తిరుత్త వల్ల కులచ్చిఱైయార్ పిన్ సెండ్రార్;
ఏట్రు-ఉయర్ కొడియినారైప్ పాడినార్ ఏడు తంగ.
Minister KulachiRai wades into the water and picks up the manuscript at Thiruvedagam
2748 – పెరియపురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 850
ఏడగం పిళ్ళైయార్దాం "వన్ని" ఎండ్రు ఎడుత్తుప్ పాడక్
కూడియ నీరిల్ ఏడు కులచ్చిఱైయారుఙ్ గూడిక్
కాడు-ఇడమాగ ఆడుం కణ్ణుదల్ కోయిల్ మాడు
నీడు-నీర్ నడువుళ్ పుక్కు నిండ్ర ఏడు ఎడుత్తుక్కొండార్.
Minister KulachiRai worships Siva in Thiruvedagam temple and returns to Madurai
# 2749 – పెరియపురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 851
తలైమిసై వైత్తుక్కొండు, తాంగరు మగిఴ్చ్చి పొంగ
అలై-పునల్ కరైయిల్ ఏఱి, ఆంగు ఇనిదు-అమర్న్ద మేరుచ్-
చిలై ఉడైయవర్-తాళ్ పోట్రి, మీండుసెండ్రు అణైవార్ తెయ్వ
మలైమగళ్ కుఴైత్త ఞానం ఉండవర్దంబాల్ వందార్.
సంబందర్ తేవారం - పదిగం 3.32 – తిరువేడగం - వన్నియుం మత్తముం ( పణ్ - కొల్లి )
పాడల్ ఎణ్ : 1
వన్నియుం మత్తముం మది పొది సడైయినన్
పొన్-ఇయల్ తిరువడి పుదుమలర్ అవైగొడు
మన్నియ మఱైయవర్ వఴిబడ, అడియవర్
ఇన్నిసై పాడలర్ ఏడగత్తు ఒరువనే.
పాడల్ ఎణ్ : 2
కొడి-నెడు-మాళిగై గోబురం కుళిర్-మది
వడివుఱ అమైదర మరువియ ఏడగత్తు
అడిగళై అడి-పణిందు అరట్రుమిన్ అన్బినాల్;
ఇడిబడుం వినైగళ్ పోయ్ ఇల్లైయదాగుమే.
పాడల్ ఎణ్ : 3
కుండలం తిగఴ్దరు కాదుడైక్ కుఴగనై,
వండు అలంబుం మలర్క్-కొండ్రై వాన్-మది అణి,
సెండు అలంబుం విడైచ్ చేడన్ ఊర్ ఏడగం
కండు కై-తొఴుదలుం కవలై-నోయ్ కఴలుమే.
పాడల్ ఎణ్ : 4
ఏలం ఆర్దరు కుఴల్ ఏఴైయోడు ఎఴిల్-పెఱుం
కోలం ఆర్దరు విడైక్ కుఴగనార్ ఉఱైవిడం,
సాలం మాదవిగళుం సందనం సణ్బగం
సీలం ఆర్ ఏడగం సేర్దల్ ఆం సెల్వమే.
పాడల్ ఎణ్ : 5
వరి అణి నయని, నన్ మలైమగళ్ మఱుగిడక్
కరియినై ఉరిసెయ్ద కఱై-అణి మిడఱినన్;
పెరియవన్; పెణ్ణినోడు ఆణ్ అలి ఆగియ
ఎరియవన్ ఉఱైవిడం ఏడగక్ కోయిలే.
పాడల్ ఎణ్ : 6
పొయ్గైయిన్ పొఴిల్-ఉఱు పుదుమలర్త్ తెండ్రల్ ఆర్
వైగైయిన్ వడగరై మరువియ ఏడగత్తు
ఐయనై అడి-పణిందు అరట్రుమిన్; అడర్దరుం
వెయ్య-వన్-పిణి కెడ, వీడు ఎళిదు ఆగుమే.
పాడల్ ఎణ్ : 7
* * * * * * This verse is lost * * * * * *
పాడల్ ఎణ్ : 8
తడ-వరై ఎడుత్తవన్ తరుక్కు ఇఱత్ తోళ్ అడర్
పడ విరల్ ఊండ్రియే పరిందు అవఱ్కు అరుళ్సెయ్దాన్;
మడవరల్ ఎరుక్కొడు వన్నియుం మత్తముం
ఇడముడైచ్ చడైయినన్ ఏడగత్తు ఇఱైవనే.
పాడల్ ఎణ్ : 9
పొన్నుం మా మణిగళుం పొరు-తిరైచ్ చందు అగిల్
తన్నుళ్ ఆర్ వైగైయిన్ కరైదనిల్, సమైవుఱ
అన్నం ఆం అయనుం మాల్ అడిముడి తేడియుం
ఇన్నవాఱు ఎన ఒణాన్, ఏడగత్తు ఒరువనే.
పాడల్ ఎణ్ : 10
కుండిగైక్ కైయినర్, కుణం-ఇలాత్ తేరర్గళ్,
పండియైప్ పెరుక్కిడుం పళగర్గళ్ పణిగిలర్,
వండు ఇరైక్కుం మలర్క్-కొండ్రైయుం వన్నియుం
ఇండై సేర్క్కుం సడై ఏడగత్తు ఎందైయే.
పాడల్ ఎణ్ : 11
కోడు, సందనం, అగిల్ కొండు ఇఴి వైగై-నీర్
ఏడు సెండ్రు అణైదరుం ఏడగత్తు ఒరువనై
నాడు తెన్ పుగలియుళ్ ఞానసంబందన
పాడల్ పత్తివై వల్లార్క్కు ఇల్లై ఆం పావమే.
=============================
No comments:
Post a Comment