151) 7.53 - மருவார் கொன்றை - maruvar kondRai - (கடவூர் மயானம்)
சுந்தரர் தேவாரம் - 7.53 - மருவார் கொன்றை - திருக்கடவூர் மயானம் - (பண் - பழம்பஞ்சுரம்)
sundarar tēvāram - 7.53 - maruvār koṇḍrai - (paṇ - paḻambañjuram)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1p6HZAyrX7BSX_5qmXI8v02UKyntfGa_r/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/cG71xUJjaSM
Part-2: https://youtu.be/bvIS2L1KzHw
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_053.HTM
V. Subramanian
================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.53 - திருக்கடவூர் மயானம் - (பண் - பழம்பஞ்சுரம்)
திருக்கடவூர் மயானம் : பிரம்மபுரீஸ்வரர் கோயில். (இக்காலத்தில் இத்தலத்தைத் "திருமெய்ஞ்ஞானம்" என்று வழங்குகின்றனர்). இத்தலம் திருக்கடவூர் வீரட்டம் (அமிர்தகடேஸ்வரர்) கோயிலிலிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயில் தீர்த்தத்து நீரால்தான் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம். இத்தலத்திற்கு மூவர் பதிகங்களும் உள்ளன.
ஊரின் பெயர் கடவூர். அவ்வூரில் ஒரு தலம் மயானம். இன்னொரு தலம் வீரட்டம்.
பதிக வரலாறு : சுந்தரர், திருநள்ளாற்றைத் தரிசித்தபின், திருக்கடவூர் வீரட்டத்தை அடைந்து தரிசித்து, அவ்வூரின் இன்னொரு பகுதியில் உள்ள கோயிலான திருக்கடவூர் மயானத்தை வணங்கிப் பாடியருளியது இந்தப் பதிகம்.
My notes:
1. இந்தப் பதிகத்தில் இறைவரது தன்மைகள் போற்றப்படுகின்றன. கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகள் பக்தர்கள் எல்லார்க்கும் அருள்பவர்; அவர்களது துன்பத்தைத் தீர்ப்பவர்.
2. பெருமானடிகள் - இத்தலத்து ஈசன் திருநாமம்; இந்தப் பதிகத்திலும், சம்பந்தர் பதிகத்திலும் (2.80 – "வரிய மறையார் ... அவரெம் பெருமானடிகளே"), அப்பர் பதிகத்திலும் (5.38 - "குழைகொள் காதினர் ... பெருமானடிகளே"), எல்லாப் பாடல்களிலும் இத்திருநாமம் வருகின்றது.
3. திருக்கடவூருக்குச் செல்லும் பக்தர்களில் பலரும் இந்தக் கோயிலைப் பற்றி அறிந்திலர்போல்.
4. இத்தலத்து இறைவி பெயர் - "மலர்க்குழல் மின்னம்மை. அம்மலக்குஜ நாயகி" என்று திருமுறைத் தலங்கள் நூலில் குறித்துள்ளனர். சுந்தரர் தேவாரத்தில் - 7.53.8 - "வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து" என்று வருகின்றது. வடமொழியில்:
म्लै mlai - 1. To fade, wither; 2. To grow weary or languid; to be fatigued or exhausted;
अम्लान amlāna - a. 1 Not withered or faded (flowers &c.).
कुचः kucaḥ - The female breast;
ஆகவே, தமிழில் "வாடாமுலையாள்" என்பது பின்னர் வடமொழியில் "அ-ம்லை-குச நாயகி" (amlaikuca nAyaki) என்று மொழிமாற்றம் பெற்றுப் பின்னர் மீண்டும் தமிழில் "அம்மலக்குஜ நாயகி" ஆனதுபோல்!
----------
Sundarar goes from Thirunallaru to Thirukkadavur
3299 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 145
அங்கணரைப் பணிந்தேத்தி யருளினாற் றொழுதுபோய்
மங்குலணி மணிமாடத் திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந் திருமயா னமும் பணிந்து
பொங்குமிசைப் பதிக"மரு வார்கொன்றை" யெனப்போற்றி,
Word separated:
அங்கணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்,
மங்குல் அணி மணி-மாடத் திருக்கடவூர் வந்து-எய்தித்,
திங்கள் வளர் முடியார்தம் திருமயானமும் பணிந்து,
பொங்கும் இசைப் பதிகம் "மருவார் கொன்றை" எனப் போற்றி,
சுந்தரர் தேவாரம் - பதிகம் 7.53 – திருக்கடவூர் மயானம் - (பண் - பழம்பஞ்சுரம்)
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" x 2 - meter)
பாடல் எண் : 1
மருவார் கொன்றை மதிசூடி .. மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு .. மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந் .. தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல
வருவார், விடைமேல் மாதோடு மகிழ்ந்து, பூதப்-படை சூழத்;
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான், கடவூர் மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 2
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் .. மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர் .. கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த .. இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
(* உமையோடொருபாகம் - will be a better version)
Word separated:
விண்ணோர் தலைவர்; வெண்-புரி-நூல் மார்பர்; வேத கீதத்தர்;
கண் ஆர் நுதலர்; நகு-தலையர்; கால-காலர்; கடவூரர்;
எண்ணார் புரம் மூன்று எரி-செய்த இறைவர்; உமை ஓர் ஒரு பாகம்
பெண் ஆண் ஆவர்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
(* உமையோடு ஒருபாகம் - will be a better version)
பாடல் எண் : 3
காயும் புலியி னதளுடையர் .. கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் .. தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப் .. பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
காயும் புலியின் அதள்-உடையர்; கண்டர்; எண்-தோள் கடவூரர்;
தாயும் தந்தை பல்-உயிர்க்கும் தாமே ஆய தலைவனார்;
பாயும் விடை-ஒன்றது+ ஏறிப் பலி-தேர்ந்து உண்ணும் பரமேட்டி;
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
( + sandhi is ignored in this place)
பாடல் எண் : 4
நறைசேர் மலர்ஐங் கணையானை .. நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும் .. இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு .. பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
நறை சேர் மலர் ஐங்கணையானை நயனத்-தீயால் பொடிசெய்த
இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார்;
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில்-கடவூர்ப்
பிறை ஆர் சடையார்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 5
கொத்தார் கொன்றை மதிசூடிக் .. கோணா கங்கள் பூணாக
மத்த யானை யுரிபோர்த்து .. மருப்பு மாமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள் .. பாடி யாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
கொத்து ஆர் கொன்றை மதி சூடிக், கோள்-நாகங்கள் பூண் ஆக,
மத்த-யானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்;
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி-கொள்ளும்
பித்தர்; கடவூர் மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 6
துணிவார் கீளுங் கோவணமுந் .. துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர் .. பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந் .. தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
துணி வார்- கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப்-பொடி அணிந்து,
பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த், *
திணி-வார்- குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்;
பிணி-வார்- சடையார்; * மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
(* For interpretation - கடவூர் - goes with - மயானத்து - in the 4th line)
பாடல் எண் : 7
காரார் கடலின் நஞ்சுண்ட .. கண்டர் கடவூ ருறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து .. சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தா னாவ துலகேழும் .. உடையார்க் கொற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை-வாணர்;
தேர் ஆர் அரக்கன் போய்-வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்;
ஊர்தான் ஆவது உலகு-ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்;
பேர் ஆயிரவர்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 8
வாடா முலையாள் தன்னோடும் .. மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று .. குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து .. ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
வாடா-முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்,
கோடு ஆர் கேழற்-பின் சென்று குறுகி, விசயன் தவம் அழித்து,
நாடா வண்ணம் செருச்-செய்து ஆவநாழி நிலை அருள்செய்
பீடு ஆர், சடையார்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 9
வேழ முரிப்பர் மழுவாளர் .. வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்
ஆழி யளிப்பர் அரிதனக்கு .. ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில் .. இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப் .. பெரிய பெருமா னடிகளே.
Word separated:
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர், சிரம் அறுப்பர்;
ஆழி அளிப்பர் அரிதனக்கு; ஆனஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்;
ஏழை தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு-மான்மறிக்-கையர்;
பேழைச் சடையர்; மயானத்துப் பெரிய பெருமான்-அடிகளே.
பாடல் எண் : 10
மாட மல்கு கடவூரின் .. மறையோர் ஏத்து மயானத்துப்
பீடை தீர அடியாருக் .. கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன் .. நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற் .. பாவ மான பறையுமே.
Word separated:
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்து மயானத்துப்,
பீடை தீர அடியாருக்கு அருளும், பெருமான்-அடிகள் சீர்
நாடி நாவல்-ஆரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடும் அடியார் கேட்பார்மேல் பாவமான பறையுமே.
==================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sundarar goes from Thirunallaru to Thirukkadavur
3299 – periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 145
aṅgaṇaraip paṇindu ētti aruḷināl toḻudu pōy,
maṅgul aṇi maṇi-māḍat tirukkaḍavūr vandu-eydit,
tiṅgaḷ vaḷar muḍiyārdam tirumayānamum paṇindu,
poṅgum isaip padigam "maruvār koṇḍrai" enap pōṭri,
sundarar tēvāram - padigam 7.53 – tirukkaḍavūr mayānam - (paṇ - paḻambañjuram)
(aṟusīr viruttam - "mā mā kāy" x 2 - meter)
pāḍal eṇ : 1
maru ār koṇḍrai madi sūḍi, māṇikkattin malai pōla
varuvār, viḍaimēl mādōḍu magiḻndu, būdap-paḍai sūḻat;
tirumāl piraman indiraṟkum dēvar nāgar dānavarkkum
perumān, kaḍavūr mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 2
viṇṇōr talaivar; veṇ-puri-nūl mārbar; vēda gīdattar;
kaṇ ār nudalar; nagu-talaiyar; kāla-kālar; kaḍavūrar;
eṇṇār puram mūṇḍru eri-seyda iṟaivar; umai ōr oru bāgam *
peṇ āṇ āvar; mayānattup periya perumān-aḍigaḷē.
(* umaiyōḍu oru bāgam - will be a better version)
pāḍal eṇ : 3
kāyum puliyin adaḷ-uḍaiyar; kaṇḍar; eṇ-tōḷ kaḍavūrar;
tāyum tandai pal-uyirkkum tāmē āya talaivanār;
pāyum viḍai-oṇḍradu+ ēṟip pali-tērndu uṇṇum paramēṭṭi;
pēygaḷ vāḻum mayānattup periya perumān-aḍigaḷē.
( + sandhi is ignored in this place)
pāḍal eṇ : 4
naṟai sēr malar aiṅgaṇaiyānai nayanat-tīyāl poḍiseyda
iṟaiyār āvar ellārkkum illai ennādu aruḷseyvār;
paṟai ār muḻavam pāṭṭōḍu payilum toṇḍar payil-kaḍavūrp
piṟai ār saḍaiyār; mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 5
kottu ār koṇḍrai madi sūḍik, kōḷ-nāgaṅgaḷ pūṇ āga,
matta-yānai uri pōrttu, maruppum āmait tāliyār;
patti seydu pāriḍaṅgaḷ pāḍi āḍap pali-koḷḷum
pittar; kaḍavūr mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 6
tuṇi vār- kīḷum kōvaṇamum tudaindu, suḍalaip-poḍi aṇindu,
paṇi mēl iṭṭa pāsubadar; pañjavaḍi mārbinar; kaḍavūrt, *
tiṇi-vār- kuḻaiyār; puram mūṇḍrum tīvāyp paḍutta sēvaganār;
piṇi-vār- saḍaiyār; * mayānattup periya perumān-aḍigaḷē.
(* For interpretation - kaḍavūr - goes with - mayānattu - in the 4th line)
pāḍal eṇ : 7
kār ār kaḍalin nañju uṇḍa kaṇḍar; kaḍavūr uṟai-vāṇar;
tēr ār arakkan pōy-vīḻndu sidaiya viralāl ūṇḍrinār;
ūrdān āvadu ulagu-ēḻum uḍaiyārkku oṭriyūr, ārūr;
pēr āyiravar; mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 8
vāḍā-mulaiyāḷ tannōḍum magiḻndu kānil vēḍuvanāyk,
kōḍu ār kēḻaṟ-pin seṇḍru kuṟugi, visayan tavam aḻittu,
nāḍā vaṇṇam seruc-ceydu āvanāḻi nilai aruḷsey
pīḍu ār, saḍaiyār; mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 9
vēḻam urippar; maḻuvāḷar; vēḷvi aḻippar, siram aṟuppar;
āḻi aḷippar aridanakku; ānañju ugappar; aṟam uraippar;
ēḻai talaivar; kaḍavūril iṟaivar; siṟu-mānmaṟik-kaiyar;
pēḻaic caḍaiyar; mayānattup periya perumān-aḍigaḷē.
pāḍal eṇ : 10
māḍam malgu kaḍavūril maṟaiyōr ēttu mayānattup,
pīḍai tīra aḍiyārukku aruḷum, perumān-aḍigaḷ sīr
nāḍi nāval-ārūran nambi sonna naṭramiḻgaḷ
pāḍum aḍiyār kēṭpārmēl pāvamāna paṟaiyumē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sundarar goes from Thirunallaru to Thirukkadavur
3299 – पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 145
अङ्गणरैप् पणिन्दु एत्ति अरुळिनाल् तॊऴुदु पोय्,
मङ्गुल् अणि मणि-माडत् तिरुक्कडवूर् वन्दु-ऎय्दित्,
तिङ्गळ् वळर् मुडियार्दम् तिरुमयानमुम् पणिन्दु,
पॊङ्गुम् इसैप् पदिगम् "मरुवार् कॊण्ड्रै" ऎनप् पोट्रि,
सुन्दरर् तेवारम् - पदिगम् 7.53 – तिरुक्कडवूर् मयानम् - (पण् - पऴम्बञ्जुरम्)
(अऱुसीर् विरुत्तम् - "मा मा काय्" x 2 - meter)
पाडल् ऎण् : 1
मरु आर् कॊण्ड्रै मदि सूडि, माणिक्कत्तिन् मलै पोल
वरुवार्, विडैमेल् मादोडु मगिऴ्न्दु, बूदप्-पडै सूऴत्;
तिरुमाल् पिरमन् इन्दिरऱ्कुम् देवर् नागर् दानवर्क्कुम्
पॆरुमान्, कडवूर् मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
पाडल् ऎण् : 2
विण्णोर् तलैवर्; वॆण्-पुरि-नूल् मार्बर्; वेद गीदत्तर्;
कण् आर् नुदलर्; नगु-तलैयर्; काल-कालर्; कडवूरर्;
ऎण्णार् पुरम् मूण्ड्रु ऎरि-सॆय्द इऱैवर्; उमै ओर् ऒरु बागम् *
पॆण् आण् आवर्; मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
(* उमैयोडु ऒरु बागम् - will be a better version)
पाडल् ऎण् : 3
कायुम् पुलियिन् अदळ्-उडैयर्; कण्डर्; ऎण्-तोळ् कडवूरर्;
तायुम् तन्दै पल्-उयिर्क्कुम् तामे आय तलैवनार्;
पायुम् विडै-ऒण्ड्रदु+ एऱिप् पलि-तेर्न्दु उण्णुम् परमेट्टि;
पेय्गळ् वाऴुम् मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
( + sandhi is ignored in this place)
पाडल् ऎण् : 4
नऱै सेर् मलर् ऐङ्गणैयानै नयनत्-तीयाल् पॊडिसॆय्द
इऱैयार् आवर् ऎल्लार्क्कुम् इल्लै ऎन्नादु अरुळ्सॆय्वार्;
पऱै आर् मुऴवम् पाट्टोडु पयिलुम् तॊण्डर् पयिल्-कडवूर्प्
पिऱै आर् सडैयार्; मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
पाडल् ऎण् : 5
कॊत्तु आर् कॊण्ड्रै मदि सूडिक्, कोळ्-नागङ्गळ् पूण् आग,
मत्त-यानै उरि पोर्त्तु, मरुप्पुम् आमैत् तालियार्;
पत्ति सॆय्दु पारिडङ्गळ् पाडि आडप् पलि-कॊळ्ळुम्
पित्तर्; कडवूर् मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
पाडल् ऎण् : 6
तुणि वार्- कीळुम् कोवणमुम् तुदैन्दु, सुडलैप्-पॊडि अणिन्दु,
पणि मेल् इट्ट पासुबदर्; पञ्जवडि मार्बिनर्; कडवूर्त्, *
तिणि-वार्- कुऴैयार्; पुरम् मूण्ड्रुम् तीवाय्प् पडुत्त सेवगनार्;
पिणि-वार्- सडैयार्; * मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
(* For interpretation - कडवूर् - goes with - मयानत्तु - in the 4th line)
पाडल् ऎण् : 7
कार् आर् कडलिन् नञ्जु उण्ड कण्डर्; कडवूर् उऱै-वाणर्;
तेर् आर् अरक्कन् पोय्-वीऴ्न्दु सिदैय विरलाल् ऊण्ड्रिनार्;
ऊर्दान् आवदु उलगु-एऴुम् उडैयार्क्कु ऒट्रियूर्, आरूर्;
पेर् आयिरवर्; मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
पाडल् ऎण् : 8
वाडा-मुलैयाळ् तन्नोडुम् मगिऴ्न्दु कानिल् वेडुवनाय्क्,
कोडु आर् केऴऱ्-पिन् सॆण्ड्रु कुऱुगि, विसयन् तवम् अऴित्तु,
नाडा वण्णम् सॆरुच्-चॆय्दु आवनाऴि निलै अरुळ्सॆय्
पीडु आर्, सडैयार्; मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
पाडल् ऎण् : 9
वेऴम् उरिप्पर्; मऴुवाळर्; वेळ्वि अऴिप्पर्, सिरम् अऱुप्पर्;
आऴि अळिप्पर् अरिदनक्कु; आनञ्जु उगप्पर्; अऱम् उरैप्पर्;
एऴै तलैवर्; कडवूरिल् इऱैवर्; सिऱु-मान्मऱिक्-कैयर्;
पेऴैच् चडैयर्; मयानत्तुप् पॆरिय पॆरुमान्-अडिगळे.
पाडल् ऎण् : 10
माडम् मल्गु कडवूरिल् मऱैयोर् एत्तु मयानत्तुप्,
पीडै तीर अडियारुक्कु अरुळुम्, पॆरुमान्-अडिगळ् सीर्
नाडि नावल्-आरूरन् नम्बि सॊन्न नट्रमिऴ्गळ्
पाडुम् अडियार् केट्पार्मेल् पावमान पऱैयुमे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sundarar goes from Thirunallaru to Thirukkadavur
3299 – పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 145
అంగణరైప్ పణిందు ఏత్తి అరుళినాల్ తొఴుదు పోయ్,
మంగుల్ అణి మణి-మాడత్ తిరుక్కడవూర్ వందు-ఎయ్దిత్,
తింగళ్ వళర్ ముడియార్దం తిరుమయానముం పణిందు,
పొంగుం ఇసైప్ పదిగం "మరువార్ కొండ్రై" ఎనప్ పోట్రి,
సుందరర్ తేవారం - పదిగం 7.53 – తిరుక్కడవూర్ మయానం - (పణ్ - పఴంబంజురం)
(అఱుసీర్ విరుత్తం - "మా మా కాయ్" x 2 - meter)
పాడల్ ఎణ్ : 1
మరు ఆర్ కొండ్రై మది సూడి, మాణిక్కత్తిన్ మలై పోల
వరువార్, విడైమేల్ మాదోడు మగిఴ్న్దు, బూదప్-పడై సూఴత్;
తిరుమాల్ పిరమన్ ఇందిరఱ్కుం దేవర్ నాగర్ దానవర్క్కుం
పెరుమాన్, కడవూర్ మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
పాడల్ ఎణ్ : 2
విణ్ణోర్ తలైవర్; వెణ్-పురి-నూల్ మార్బర్; వేద గీదత్తర్;
కణ్ ఆర్ నుదలర్; నగు-తలైయర్; కాల-కాలర్; కడవూరర్;
ఎణ్ణార్ పురం మూండ్రు ఎరి-సెయ్ద ఇఱైవర్; ఉమై ఓర్ ఒరు బాగం *
పెణ్ ఆణ్ ఆవర్; మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
(* ఉమైయోడు ఒరు బాగం - will be a better version)
పాడల్ ఎణ్ : 3
కాయుం పులియిన్ అదళ్-ఉడైయర్; కండర్; ఎణ్-తోళ్ కడవూరర్;
తాయుం తందై పల్-ఉయిర్క్కుం తామే ఆయ తలైవనార్;
పాయుం విడై-ఒండ్రదు+ ఏఱిప్ పలి-తేర్న్దు ఉణ్ణుం పరమేట్టి;
పేయ్గళ్ వాఴుం మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
( + sandhi is ignored in this place)
పాడల్ ఎణ్ : 4
నఱై సేర్ మలర్ ఐంగణైయానై నయనత్-తీయాల్ పొడిసెయ్ద
ఇఱైయార్ ఆవర్ ఎల్లార్క్కుం ఇల్లై ఎన్నాదు అరుళ్సెయ్వార్;
పఱై ఆర్ ముఴవం పాట్టోడు పయిలుం తొండర్ పయిల్-కడవూర్ప్
పిఱై ఆర్ సడైయార్; మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
పాడల్ ఎణ్ : 5
కొత్తు ఆర్ కొండ్రై మది సూడిక్, కోళ్-నాగంగళ్ పూణ్ ఆగ,
మత్త-యానై ఉరి పోర్త్తు, మరుప్పుం ఆమైత్ తాలియార్;
పత్తి సెయ్దు పారిడంగళ్ పాడి ఆడప్ పలి-కొళ్ళుం
పిత్తర్; కడవూర్ మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
పాడల్ ఎణ్ : 6
తుణి వార్- కీళుం కోవణముం తుదైందు, సుడలైప్-పొడి అణిందు,
పణి మేల్ ఇట్ట పాసుబదర్; పంజవడి మార్బినర్; కడవూర్త్, *
తిణి-వార్- కుఴైయార్; పురం మూండ్రుం తీవాయ్ప్ పడుత్త సేవగనార్;
పిణి-వార్- సడైయార్; * మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
(* For interpretation - కడవూర్ - goes with - మయానత్తు - in the 4th line)
పాడల్ ఎణ్ : 7
కార్ ఆర్ కడలిన్ నంజు ఉండ కండర్; కడవూర్ ఉఱై-వాణర్;
తేర్ ఆర్ అరక్కన్ పోయ్-వీఴ్న్దు సిదైయ విరలాల్ ఊండ్రినార్;
ఊర్దాన్ ఆవదు ఉలగు-ఏఴుం ఉడైయార్క్కు ఒట్రియూర్, ఆరూర్;
పేర్ ఆయిరవర్; మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
పాడల్ ఎణ్ : 8
వాడా-ములైయాళ్ తన్నోడుం మగిఴ్న్దు కానిల్ వేడువనాయ్క్,
కోడు ఆర్ కేఴఱ్-పిన్ సెండ్రు కుఱుగి, విసయన్ తవం అఴిత్తు,
నాడా వణ్ణం సెరుచ్-చెయ్దు ఆవనాఴి నిలై అరుళ్సెయ్
పీడు ఆర్, సడైయార్; మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
పాడల్ ఎణ్ : 9
వేఴం ఉరిప్పర్; మఴువాళర్; వేళ్వి అఴిప్పర్, సిరం అఱుప్పర్;
ఆఴి అళిప్పర్ అరిదనక్కు; ఆనంజు ఉగప్పర్; అఱం ఉరైప్పర్;
ఏఴై తలైవర్; కడవూరిల్ ఇఱైవర్; సిఱు-మాన్మఱిక్-కైయర్;
పేఴైచ్ చడైయర్; మయానత్తుప్ పెరియ పెరుమాన్-అడిగళే.
పాడల్ ఎణ్ : 10
మాడం మల్గు కడవూరిల్ మఱైయోర్ ఏత్తు మయానత్తుప్,
పీడై తీర అడియారుక్కు అరుళుం, పెరుమాన్-అడిగళ్ సీర్
నాడి నావల్-ఆరూరన్ నంబి సొన్న నట్రమిఴ్గళ్
పాడుం అడియార్ కేట్పార్మేల్ పావమాన పఱైయుమే.
================ ============