Friday, November 29, 2024

2.16 - அயிலாரும் அம்பதனால் - ayilArum ambadhanAl - (திருமணஞ்சேரி)


153) 2.16 - அயிலாரும் அம்பதனால் - ayilArum ambadhanAl - (திருமணஞ்சேரி)

சம்பந்தர் தேவாரம் - 2.16 - அயிலாரும் அம்பதனால் - திருமணஞ்சேரி - (பண் - இந்தளம்)

sambandar tēvāram - 2.16 - ayilārum ambadanāl - tirumaṇañjēri - ( paṇ - indaḷam )


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1M8MSJLiIFGFXsK3Ehw2KwTV25CI2jPA4/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/hS_fzUlHgx0

Part-2: https://youtu.be/Z5wVPPPRt14

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_016.HTM


V. Subramanian

================

Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.16 – திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பதனால் ( பண் - இந்தளம் )


திருமணஞ்சேரி : மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 13 கிமீ தூரத்தில் உள்ள தலம். இத்தலம் "கீழைத் திருமணஞ்சேரி". இக்கோயிலிலிருந்து 1 கிமீ தூரத்தில் திரு-எதிர்கொள்பாடி (மேலைத் திருமணஞ்சேரி) என்ற இன்னொரு தலமும் உள்ளது.


திருமணஞ்சேரியை வழிபடும் பக்தர்களது வினையும் துன்பமும் தீரும். இப்பத்திகத்தில் பல பாடல்களில் சம்பந்தர் இதனைக் கூறுகின்றார்.

--------


Padhigam background - Periya Puranam


Sambandar visits thirumananjeri and other temples

# 2188 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 290

அப்பதி போற்றி யகல்வா ரரனார் திருமணஞ் சேரி

செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடுஞ் சென்று தொழுதிசை பாடி

எப்பொரு ளுந்தரு மீச ரெதிர்கொள்பா டிப்பதி யெய்தி

யொப்பில் பதிகங்கள் பாடி, யோங்குவேள் விக்குடி யுற்றார்.


Word separated:

அப்-பதி போற்றி அகல்வார், அரனார் திருமணஞ்சேரி

செப்பரும் சீர்த்-தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி,

எப்-பொருளும் தரும் ஈசர் எதிர்கொள்பாடிப் பதி எய்தி,

ஒப்பு-இல் பதிகங்கள் பாடி, ஓங்கு வேள்விக்குடி உற்றார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.16 – திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பதனால் ( பண் - இந்தளம் )

பாடல் எண் : 1

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து

குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி

மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்

பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.


Word separated:

அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து,

குயில் ஆரும் மென்-மொழியாள் ஒரு கூறு ஆகி,

மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்

பயில்வானைப் பற்றி-நின்றார்க்கு இல்லை பாவமே.


பாடல் எண் : 2

விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய

நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்

மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்

பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.


Word separated:

விதியானை, விண்ணவர் தாம் தொழுது-ஏத்திய

நெதியானை, நீள்-சடைமேல் நிகழ்வித்த வான்-

மதியானை, வண்-பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்

பதியானைப், பாட-வல்லார் வினை பாறுமே.


பாடல் எண் : 3

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய

இப்பாலா யெனையு மாள வுரியானை

வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி

மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.


Word separated:

எய்ப்பு-ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய

இப்பால்-ஆய், எனையும் ஆள உரியானை,

வைப்பு-ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி

மெய்ப்பானை மேவி-நின்றார் வினை வீடுமே.


பாடல் எண் : 4

விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்

உடையானை யூழிதோ றூழி யுளதாய

படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி

அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.


Word separated:

விடையானை, மேலுலகு-ஏழும் இப்-பார்-எலாம்

உடையானை, ஊழிதோறு-ஊழி உளது-ஆய

படையானைப், பண்-இசை பாடு மணஞ்சேரி

அடைவானை, அடைய-வல்லார்க்கு இல்லை அல்லலே.


பாடல் எண் : 5

எறியார்பூங் கொன்றையி னோடு மிளமத்தம்

வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை

மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்

செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.


Word separated:

எறி-ஆர் பூங்கொன்றையினோடும் இள-மத்தம்

வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைத்தானை,

மறி ஆரும் கை-உடையானை, மணஞ்சேரிச்

செறிவானைச், செப்ப-வல்லார்க்கு இடர் சேராவே.


பாடல் எண் : 6

மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்

பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை

வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி

இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே.


Word separated:

மொழியானை, முன் ஒரு நான்மறை ஆறங்கம்

பழியாமைப் பண்ணிசையான பகர்வானை,

வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி

இழியாமை ஏத்த-வல்லார்க்கு எய்தும் இன்பமே.


பாடல் எண் : 7

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்

கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை

மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்

பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.


Word separated:

எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்

கண்ணானைக், கண் ஒரு மூன்றும் உடையானை,

மண்ணானை, மா-வயல் சூழ்ந்த மணஞ்சேரிப்

பெண்ணானைப், பேச-நின்றார் பெரியோர்களே.


பாடல் எண் : 8

எடுத்தானை யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள்

கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை

மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி

பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.


Word separated:

எடுத்தானை எழில்-முடி எட்டும் இரண்டும் தோள்

கெடுத்தானைக், கேடு-இலாச் செம்மை உடையானை,

மடுத்து ஆர வண்டு இசை பாடு மணஞ்சேரி

பிடித்து ஆரப் பேண-வல்லார் பெரியோர்களே.


பாடல் எண் : 9

சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும்

கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க

வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி

எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே.


Word separated:

சொல்லானைத், தோற்றம் கண்டானும் நெடு-மாலும்

கல்லானைக், கற்றன சொல்லித் தொழுது ஓங்க

வல்லார், நன்-மாதவர் ஏத்து மணஞ்சேரி

எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே.


பாடல் எண் : 10

சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்

சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை

வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி

பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.


Word separated:

சற்றேயும் தாம் அறிவு-இல் சமண் சாக்கியர்

சொல்-தேயும் வண்ணமொர் செம்மை உடையானை,

வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி

பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.


பாடல் எண் : 11

கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த

தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை

மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி

பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே.


Word separated:

கண் ஆரும் காழியர்-கோன் கருத்து ஆர்வித்த

தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்-மாலை

மண் ஆரும் மா-வயல் சூழ்ந்த மணஞ்சேரி

பண் ஆரப் பாட-வல்லார்க்கு இல்லை பாவமே.

=============================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )

Padhigam background - Periya Puranam


Sambandar visits thirumananjeri and other temples

# 2188 - periyapurāṇam - tiruñāna sambandar purāṇam - 290

ap-padi pōṭri agalvār, aranār tirumaṇañjēri

sepparum sīrt-toṇḍarōḍum seṇḍru toḻudu isai pāḍi,

ep-poruḷum tarum īsar edirgoḷpāḍip padi eydi,

oppu-il padigaṅgaḷ pāḍi, ōṅgu vēḷvikkuḍi uṭrār.


sambandar tēvāram - padigam 2.16 – tirumaṇañjēri - ayilārum ambadanāl ( paṇ - indaḷam )

pāḍal eṇ : 1

ayil ārum ambadanāl puram mūṇḍru eydu,

kuyil ārum men-moḻiyāḷ oru kūṟu āgi,

mayil ārum malgiya sōlai maṇañjērip

payilvānaip paṭri-niṇḍrārkku illai pāvamē.


pāḍal eṇ : 2

vidiyānai, viṇṇavar tām toḻudu-ēttiya

nediyānai, nīḷ-saḍaimēl nigaḻvitta vān-

madiyānai, vaṇ-poḻil sūḻnda maṇañjērip

padiyānaip, pāḍa-vallār vinai pāṟumē.


pāḍal eṇ : 3

eyppu-ānārkku inbuṟu tēn aḷittu ūṟiya

ippāl-āy, enaiyum āḷa uriyānai,

vaippu-āna māḍaṅgaḷ sūḻnda maṇañjēri

meyppānai mēvi-niṇḍrār vinai vīḍumē.


pāḍal eṇ : 4

viḍaiyānai, mēlulagu-ēḻum ip-pār-elām

uḍaiyānai, ūḻidōṟu-ūḻi uḷadu-āya

paḍaiyānaip, paṇ-isai pāḍu maṇañjēri

aḍaivānai, aḍaiya-vallārkku illai allalē.


pāḍal eṇ : 5

eṟi-ār pūṅgoṇḍraiyinōḍum iḷa-mattam

veṟi ārum señjaḍai āra milaittānai,

maṟi ārum kai-uḍaiyānai, maṇañjēric

ceṟivānaic, ceppa-vallārkku iḍar sērāvē.


pāḍal eṇ : 6

moḻiyānai, mun oru nānmaṟai āṟaṅgam

paḻiyāmaip paṇṇisaiyāna pagarvānai,

vaḻiyānai vānavar ēttu maṇañjēri

iḻiyāmai ētta-vallārkku eydum inbamē.


pāḍal eṇ : 7

eṇṇānai, eṇ amar sīr imaiyōrgaṭkuk

kaṇṇānaik, kaṇ oru mūṇḍrum uḍaiyānai,

maṇṇānai, mā-vayal sūḻnda maṇañjērip

peṇṇānaip, pēsa-niṇḍrār periyōrgaḷē.


pāḍal eṇ : 8

eḍuttānai eḻil-muḍi eṭṭum iraṇḍum tōḷ

keḍuttānaik, kēḍu-ilāc cemmai uḍaiyānai,

maḍuttu āra vaṇḍu isai pāḍu maṇañjēri

piḍittu ārap pēṇa-vallār periyōrgaḷē.


pāḍal eṇ : 9

sollānait, tōṭram kaṇḍānum neḍu-mālum

kallānaik, kaṭrana sollit toḻudu ōṅga

vallār, nan-mādavar ēttu maṇañjēri

ellām ām emberumān kaḻal ēttumē.


pāḍal eṇ : 10

saṭrēyum tām aṟivu-il samaṇ sākkiyar

sol-tēyum vaṇṇamor semmai uḍaiyānai,

vaṭrāda vāvigaḷ sūḻnda maṇañjēri

paṭrāga vāḻbavar mēlvinai paṭrāvē.


pāḍal eṇ : 11

kaṇ ārum kāḻiyar-kōn karuttu ārvitta

taṇ ār sīr ñānasambandan tamiḻ-mālai

maṇ ārum mā-vayal sūḻnda maṇañjēri

paṇ ārap pāḍa-vallārkku illai pāvamē.

=============================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


Padhigam background - Periya Puranam


Sambandar visits thirumananjeri and other temples

# 2188 - पॆरियपुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 290

अप्-पदि पोट्रि अगल्वार्, अरनार् तिरुमणञ्जेरि

सॆप्परुम् सीर्त्-तॊण्डरोडुम् सॆण्ड्रु तॊऴुदु इसै पाडि,

ऎप्-पॊरुळुम् तरुम् ईसर् ऎदिर्गॊळ्पाडिप् पदि ऎय्दि,

ऒप्पु-इल् पदिगङ्गळ् पाडि, ओङ्गु वेळ्विक्कुडि उट्रार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.16 – तिरुमणञ्जेरि - अयिलारुम् अम्बदनाल् ( पण् - इन्दळम् )

पाडल् ऎण् : 1

अयिल् आरुम् अम्बदनाल् पुरम् मूण्ड्रु ऎय्दु,

कुयिल् आरुम् मॆन्-मॊऴियाळ् ऒरु कूऱु आगि,

मयिल् आरुम् मल्गिय सोलै मणञ्जेरिप्

पयिल्वानैप् पट्रि-निण्ड्रार्क्कु इल्लै पावमे.


पाडल् ऎण् : 2

विदियानै, विण्णवर् ताम् तॊऴुदु-एत्तिय

नॆदियानै, नीळ्-सडैमेल् निगऴ्वित्त वान्-

मदियानै, वण्-पॊऴिल् सूऴ्न्द मणञ्जेरिप्

पदियानैप्, पाड-वल्लार् विनै पाऱुमे.


पाडल् ऎण् : 3

ऎय्प्पु-आनार्क्कु इन्बुऱु तेन् अळित्तु ऊऱिय

इप्पाल्-आय्, ऎनैयुम् आळ उरियानै,

वैप्पु-आन माडङ्गळ् सूऴ्न्द मणञ्जेरि

मॆय्प्पानै मेवि-निण्ड्रार् विनै वीडुमे.


पाडल् ऎण् : 4

विडैयानै, मेलुलगु-एऴुम् इप्-पार्-ऎलाम्

उडैयानै, ऊऴिदोऱु-ऊऴि उळदु-आय

पडैयानैप्, पण्-इसै पाडु मणञ्जेरि

अडैवानै, अडैय-वल्लार्क्कु इल्लै अल्लले.


पाडल् ऎण् : 5

ऎऱि-आर् पूङ्गॊण्ड्रैयिनोडुम् इळ-मत्तम्

वॆऱि आरुम् सॆञ्जडै आर मिलैत्तानै,

मऱि आरुम् कै-उडैयानै, मणञ्जेरिच्

चॆऱिवानैच्, चॆप्प-वल्लार्क्कु इडर् सेरावे.


पाडल् ऎण् : 6

मॊऴियानै, मुन् ऒरु नान्मऱै आऱङ्गम्

पऴियामैप् पण्णिसैयान पगर्वानै,

वऴियानै वानवर् एत्तु मणञ्जेरि

इऴियामै एत्त-वल्लार्क्कु ऎय्दुम् इन्बमे.


पाडल् ऎण् : 7

ऎण्णानै, ऎण् अमर् सीर् इमैयोर्गट्कुक्

कण्णानैक्, कण् ऒरु मूण्ड्रुम् उडैयानै,

मण्णानै, मा-वयल् सूऴ्न्द मणञ्जेरिप्

पॆण्णानैप्, पेस-निण्ड्रार् पॆरियोर्गळे.


पाडल् ऎण् : 8

ऎडुत्तानै ऎऴिल्-मुडि ऎट्टुम् इरण्डुम् तोळ्

कॆडुत्तानैक्, केडु-इलाच् चॆम्मै उडैयानै,

मडुत्तु आर वण्डु इसै पाडु मणञ्जेरि

पिडित्तु आरप् पेण-वल्लार् पॆरियोर्गळे.


पाडल् ऎण् : 9

सॊल्लानैत्, तोट्रम् कण्डानुम् नॆडु-मालुम्

कल्लानैक्, कट्रन सॊल्लित् तॊऴुदु ओङ्ग

वल्लार्, नन्-मादवर् एत्तु मणञ्जेरि

ऎल्लाम् आम् ऎम्बॆरुमान् कऴल् एत्तुमे.


पाडल् ऎण् : 10

सट्रेयुम् ताम् अऱिवु-इल् समण् साक्कियर्

सॊल्-तेयुम् वण्णमॊर् सॆम्मै उडैयानै,

वट्राद वाविगळ् सूऴ्न्द मणञ्जेरि

पट्राग वाऴ्बवर् मेल्विनै पट्रावे.


पाडल् ऎण् : 11

कण् आरुम् काऴियर्-कोन् करुत्तु आर्वित्त

तण् आर् सीर् ञानसम्बन्दन् तमिऴ्-मालै

मण् आरुम् मा-वयल् सूऴ्न्द मणञ्जेरि

पण् आरप् पाड-वल्लार्क्कु इल्लै पावमे.

=============================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Padhigam background - Periya Puranam


Sambandar visits thirumananjeri and other temples

# 2188 - పెరియపురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 290

అప్-పది పోట్రి అగల్వార్, అరనార్ తిరుమణంజేరి

సెప్పరుం సీర్త్-తొండరోడుం సెండ్రు తొఴుదు ఇసై పాడి,

ఎప్-పొరుళుం తరుం ఈసర్ ఎదిర్గొళ్పాడిప్ పది ఎయ్ది,

ఒప్పు-ఇల్ పదిగంగళ్ పాడి, ఓంగు వేళ్విక్కుడి ఉట్రార్.


సంబందర్ తేవారం - పదిగం 2.16 – తిరుమణంజేరి - అయిలారుం అంబదనాల్ ( పణ్ - ఇందళం )

పాడల్ ఎణ్ : 1

అయిల్ ఆరుం అంబదనాల్ పురం మూండ్రు ఎయ్దు,

కుయిల్ ఆరుం మెన్-మొఴియాళ్ ఒరు కూఱు ఆగి,

మయిల్ ఆరుం మల్గియ సోలై మణంజేరిప్

పయిల్వానైప్ పట్రి-నిండ్రార్క్కు ఇల్లై పావమే.


పాడల్ ఎణ్ : 2

విదియానై, విణ్ణవర్ తాం తొఴుదు-ఏత్తియ

నెదియానై, నీళ్-సడైమేల్ నిగఴ్విత్త వాన్-

మదియానై, వణ్-పొఴిల్ సూఴ్న్ద మణంజేరిప్

పదియానైప్, పాడ-వల్లార్ వినై పాఱుమే.


పాడల్ ఎణ్ : 3

ఎయ్ప్పు-ఆనార్క్కు ఇన్బుఱు తేన్ అళిత్తు ఊఱియ

ఇప్పాల్-ఆయ్, ఎనైయుం ఆళ ఉరియానై,

వైప్పు-ఆన మాడంగళ్ సూఴ్న్ద మణంజేరి

మెయ్ప్పానై మేవి-నిండ్రార్ వినై వీడుమే.


పాడల్ ఎణ్ : 4

విడైయానై, మేలులగు-ఏఴుం ఇప్-పార్-ఎలాం

ఉడైయానై, ఊఴిదోఱు-ఊఴి ఉళదు-ఆయ

పడైయానైప్, పణ్-ఇసై పాడు మణంజేరి

అడైవానై, అడైయ-వల్లార్క్కు ఇల్లై అల్లలే.


పాడల్ ఎణ్ : 5

ఎఱి-ఆర్ పూంగొండ్రైయినోడుం ఇళ-మత్తం

వెఱి ఆరుం సెంజడై ఆర మిలైత్తానై,

మఱి ఆరుం కై-ఉడైయానై, మణంజేరిచ్

చెఱివానైచ్, చెప్ప-వల్లార్క్కు ఇడర్ సేరావే.


పాడల్ ఎణ్ : 6

మొఴియానై, మున్ ఒరు నాన్మఱై ఆఱంగం

పఴియామైప్ పణ్ణిసైయాన పగర్వానై,

వఴియానై వానవర్ ఏత్తు మణంజేరి

ఇఴియామై ఏత్త-వల్లార్క్కు ఎయ్దుం ఇన్బమే.


పాడల్ ఎణ్ : 7

ఎణ్ణానై, ఎణ్ అమర్ సీర్ ఇమైయోర్గట్కుక్

కణ్ణానైక్, కణ్ ఒరు మూండ్రుం ఉడైయానై,

మణ్ణానై, మా-వయల్ సూఴ్న్ద మణంజేరిప్

పెణ్ణానైప్, పేస-నిండ్రార్ పెరియోర్గళే.


పాడల్ ఎణ్ : 8

ఎడుత్తానై ఎఴిల్-ముడి ఎట్టుం ఇరండుం తోళ్

కెడుత్తానైక్, కేడు-ఇలాచ్ చెమ్మై ఉడైయానై,

మడుత్తు ఆర వండు ఇసై పాడు మణంజేరి

పిడిత్తు ఆరప్ పేణ-వల్లార్ పెరియోర్గళే.


పాడల్ ఎణ్ : 9

సొల్లానైత్, తోట్రం కండానుం నెడు-మాలుం

కల్లానైక్, కట్రన సొల్లిత్ తొఴుదు ఓంగ

వల్లార్, నన్-మాదవర్ ఏత్తు మణంజేరి

ఎల్లాం ఆం ఎంబెరుమాన్ కఴల్ ఏత్తుమే.


పాడల్ ఎణ్ : 10

సట్రేయుం తాం అఱివు-ఇల్ సమణ్ సాక్కియర్

సొల్-తేయుం వణ్ణమొర్ సెమ్మై ఉడైయానై,

వట్రాద వావిగళ్ సూఴ్న్ద మణంజేరి

పట్రాగ వాఴ్బవర్ మేల్వినై పట్రావే.


పాడల్ ఎణ్ : 11

కణ్ ఆరుం కాఴియర్-కోన్ కరుత్తు ఆర్విత్త

తణ్ ఆర్ సీర్ ఞానసంబందన్ తమిఴ్-మాలై

మణ్ ఆరుం మా-వయల్ సూఴ్న్ద మణంజేరి

పణ్ ఆరప్ పాడ-వల్లార్క్కు ఇల్లై పావమే.

=============================