165) 7.91 - பாட்டும் பாடி - pAttum pAdi
சுந்தரர் தேவாரம் - 7.91 - பாட்டும் பாடி - திருவொற்றியூர் - (பண் - குறிஞ்சி)
sundarar tēvāram - 7.91 - pāṭṭum pāḍi - tiruvoṭriyūr - (paṇ - kuṟiñji)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1FGhdt4vnAFFyriC4Cz-RcWLR7rQL8m8D/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
Part-2:
***
English
translation (meaning) : V.M.Subramanya Ayyar -
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_091.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
சுந்தரர் தேவாரம் - 7.91 - பாட்டும் பாடி – திருவொற்றியூர் - (பண் - குறிஞ்சி)
திருவொற்றியூர் - இத்தலம் சென்னையின் வடபகுதியில் உள்ளது. சென்னைப் பட்டணப் பகுதியில் உள்ள கோயில்களில் இதுவே மிகவும் பெரிது. தொன்மை மிக்க தலம். மூலவர் புற்றுவடிவு. தேவாரத்தில் இத்தலத்திற்கு 8 பதிகங்கள் உள்ளன.
பதிக வரலாறு : சுந்தரர், திருக்காளத்தியிலிருந்து கிளம்பிப் பல தலங்களையும் வணங்கித், திருவொற்றியூரை அடைந்தார். திருக்கோயிலை அடைந்து, பெருமானைத் தொழுது பாடியருளியது இப்பதிகம்.
--------
Padhigam background - Periya Puranam
Sundarar reaches Thiruvotriyur (tiruvoṭriyūr) temple and sings "pāṭṭum pāḍi" padhigam
# 3358 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 204
ஏட்டு
வரியி "லொற்றிநகர்
நீங்க" லென்னு
மெழுத்தறியும் *
நாட்ட
மலருந் திருநுதலார் நறும்பொற்
கமலச் சேவடியிற்
கூட்டு
முணர்வு கொண்டெழுந்து கோதி
லமுத விசைகூடப்
"பாட்டும்
பாடிப் பரவி"யெனும்
பதிக மெடுத்துப் பாடினார்.
(* பாடபேதம் - தருமை ஆதீன நூலில் - நீங்க லென்ன வெழுத்தறியும்)
சுந்தரர் தேவாரம் - 7.91 - பாட்டும் பாடி – திருவொற்றியூர் - (பண் - குறிஞ்சி)
(கலிவிருத்தம் - மா மா மா மா - meter)
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் மடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.
என்ன தெழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே.
பணங்கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே.
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே.
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.
பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.
=============================
Word separated version:
Padhigam background - Periya Puranam
Sundarar reaches Thiruvotriyur (tiruvoṭriyūr) temple and sings "pāṭṭum pāḍi" padhigam
# 3358 - பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - 204
ஏட்டு
வரியில் "ஒற்றிநகர்
நீங்கல்" என்னும்
எழுத்து-அறியும்
*
நாட்டம்
மலரும் திரு-நுதலார்
நறும்பொற் கமலச் சேவடியில்
கூட்டும்
உணர்வு கொண்டெழுந்து கோது-இல்
அமுத இசை-கூடப்
"பாட்டும்
பாடிப் பரவி" எனும்
பதிகம் எடுத்துப் பாடினார்.
(* பாடபேதம் - தருமை ஆதீன நூலில் - நீங்கல் என்ன எழுத்து-அறியும்)
சுந்தரர் தேவாரம் - 7.91 - பாட்டும் பாடி - திருவொற்றியூர் - (பண் - குறிஞ்சி)
(கலிவிருத்தம் - மா மா மா மா - meter)
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.
பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார், செந்தீ வண்ணர்,
எந்தம் அடிகள், இறைவர்க்கு இடம்போல்
உந்தும் திரைவாய் ஒற்றியூரே.
பவளக் கனி-வாய்ப் பாவை பங்கன்;
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்;
தவழும் மதி சேர் சடையாற்கு இடம்போல்,
உகளும் திரைவாய் ஒற்றியூரே.
என்னது எழிலும் நிறையும் கவர்வான்,
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்;
உன்னப்படுவான் ஒற்றியூரே.
பணங்கொள் அரவம் பற்றி, பரமன்,
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி,
வணங்கும் இடை மென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே.
படை ஆர் மழுவன்; பால்-வெண்ணீற்றன்;
விடை ஆர் கொடியன்; வேத நாவன்;
அடைவார் வினைகள் அறுப்பான்; என்னை
உடையான் உறையும் ஒற்றியூரே.
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன்; வினையை வீட்ட
நன்று(ம்) நல்ல நாதன்; நரை-ஏறு
ஒன்றை உடையான் ஒற்றியூரே.
கலவ-மயில் போல் வளைக்-கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்;
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,
உலவும் திரைவாய் ஒற்றியூரே.
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்;
எற்றும் வினைகள் தீர்ப்பார், ஓதம்
ஒற்றும் திரைவாய் ஒற்றியூரே.
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவளச் சடையான்
ஒற்றியூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Sundarar reaches Thiruvotriyur (tiruvoṭriyūr) temple and sings "pāṭṭum pāḍi" padhigam
# 3358 - periyapurāṇam - ēyarkōn kalikkāma nāyanār purāṇam - 204
ēṭṭu variyil "oṭrinagar nīṅgal" ennum eḻuttu-aṟiyum *
nāṭṭam malarum tiru-nudalār naṟumboṟ kamalac cēvaḍiyil
kūṭṭum uṇarvu koṇḍeḻundu kōdu-il amuda isai-kūḍap
"pāṭṭum pāḍip paravi" enum padigam eḍuttup pāḍinār.
(* Variant reading - in Dharmapuram Adheenam book - nīṅgal enna eḻuttu-aṟiyum)
sundarar tēvāram - 7.91 - pāṭṭum pāḍi - tiruvoṭriyūr - (paṇ - kuṟiñji)
(kaliviruttam - mā mā mā mā - meter)
pāḍal eṇ : 1
pāṭṭum pāḍip paravit tirivār
īṭṭum vinaigaḷ tīrppār kōyil
kāṭṭum kalamum timilum karaikkē
ōṭṭum tiraivāy oṭriyūrē.
pāḍal eṇ : 2
pandum kiḷiyum payilum pāvai
sindai kavarvār, sendī vaṇṇar,
endam aḍigaḷ, iṟaivarkku iḍambōl
undum tiraivāy oṭriyūrē.
pāḍal eṇ : 3
pavaḷak kani-vāyp pāvai paṅgan;
kavaḷak kaḷiṭrin urivai pōrttān;
tavaḻum madi sēr saḍaiyāṟku iḍambōl,
ugaḷum tiraivāy oṭriyūrē.
pāḍal eṇ : 4
ennadu eḻilum niṟaiyum kavarvān,
punnai malarum puṟavil tigaḻum
tannai munnam ninaikkat taruvān;
unnappaḍuvān oṭriyūrē.
pāḍal eṇ : 5
paṇaṅgoḷ aravam paṭri, paraman,
kaṇaṅgaḷ sūḻak kabālam ēndi,
vaṇaṅgum iḍai men maḍavār iṭṭa
uṇaṅgal kavarvān oṭriyūrē.
pāḍal eṇ : 6
paḍai ār maḻuvan; pāl-veṇṇīṭran;
viḍai ār koḍiyan; vēda nāvan;
aḍaivār vinaigaḷ aṟuppān; ennai
uḍaiyān uṟaiyum oṭriyūrē.
pāḍal eṇ : 7
seṇḍra puraṅgaḷ tīyil vēva
veṇḍra vigirdan; vinaiyai vīṭṭa
naṇḍru(m) nalla nādan; narai-ēṟu
oṇḍrai uḍaiyān oṭriyūrē.
pāḍal eṇ : 8
kalava-mayil pōl vaḷaik-kai nallār
palarum paravum pavaḷap paḍiyān;
ulagin uḷḷār vinaigaḷ tīrppān,
ulavum tiraivāy oṭriyūrē.
pāḍal eṇ : 9
paṭri varaiyai eḍutta arakkan
iṭru muriya viralāl aḍarttār;
eṭrum vinaigaḷ tīrppār, ōdam
oṭrum tiraivāy oṭriyūrē.
pāḍal eṇ : 10
oṭri ūrum aravum piṟaiyum
paṭri ūrum pavaḷac caḍaiyān
oṭriyūrmēl ūran uraitta
kaṭrup pāḍak kaḻiyum vinaiyē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Sundarar reaches Thiruvotriyur (tiruvoṭriyūr) temple and sings "pāṭṭum pāḍi" padhigam
# 3358 - पॆरियपुराणम् - एयर्कोन् कलिक्काम नायनार् पुराणम् - 204
एट्टु वरियिल् "ऒट्रिनगर् नीङ्गल्" ऎन्नुम् ऎऴुत्तु-अऱियुम् *
नाट्टम् मलरुम् तिरु-नुदलार् नऱुम्बॊऱ् कमलच् चेवडियिल्
कूट्टुम् उणर्वु कॊण्डॆऴुन्दु कोदु-इल् अमुद इसै-कूडप्
"पाट्टुम् पाडिप् परवि" ऎनुम् पदिगम् ऎडुत्तुप् पाडिनार्.
(* Variant reading - in Dharmapuram Adheenam book - नीङ्गल् ऎन्न ऎऴुत्तु-अऱियुम्)
सुन्दरर् तेवारम् - 7.91 - पाट्टुम् पाडि - तिरुवॊट्रियूर् - (पण् - कुऱिञ्जि)
(कलिविरुत्तम् - मा मा मा मा - meter)
पाडल् ऎण् : 1
पाट्टुम् पाडिप् परवित् तिरिवार्
ईट्टुम् विनैगळ् तीर्प्पार् कोयिल्
काट्टुम् कलमुम् तिमिलुम् करैक्के
ओट्टुम् तिरैवाय् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 2
पन्दुम् किळियुम् पयिलुम् पावै
सिन्दै कवर्वार्, सॆन्दी वण्णर्,
ऎन्दम् अडिगळ्, इऱैवर्क्कु इडम्बोल्
उन्दुम् तिरैवाय् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 3
पवळक् कनि-वाय्प् पावै पङ्गन्;
कवळक् कळिट्रिन् उरिवै पोर्त्तान्;
तवऴुम् मदि सेर् सडैयाऱ्कु इडम्बोल्,
उगळुम् तिरैवाय् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 4
ऎन्नदु ऎऴिलुम् निऱैयुम् कवर्वान्,
पुन्नै मलरुम् पुऱविल् तिगऴुम्
तन्नै मुन्नम् निनैक्कत् तरुवान्;
उन्नप्पडुवान् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 5
पणङ्गॊळ् अरवम् पट्रि, परमन्,
कणङ्गळ् सूऴक् कबालम् एन्दि,
वणङ्गुम् इडै मॆन् मडवार् इट्ट
उणङ्गल् कवर्वान् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 6
पडै आर् मऴुवन्; पाल्-वॆण्णीट्रन्;
विडै आर् कॊडियन्; वेद नावन्;
अडैवार् विनैगळ् अऱुप्पान्; ऎन्नै
उडैयान् उऱैयुम् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 7
सॆण्ड्र पुरङ्गळ् तीयिल् वेव
वॆण्ड्र विगिर्दन्; विनैयै वीट्ट
नण्ड्रु(म्) नल्ल नादन्; नरै-एऱु
ऒण्ड्रै उडैयान् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 8
कलव-मयिल् पोल् वळैक्-कै नल्लार्
पलरुम् परवुम् पवळप् पडियान्;
उलगिन् उळ्ळार् विनैगळ् तीर्प्पान्,
उलवुम् तिरैवाय् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 9
पट्रि वरैयै ऎडुत्त अरक्कन्
इट्रु मुरिय विरलाल् अडर्त्तार्;
ऎट्रुम् विनैगळ् तीर्प्पार्, ओदम्
ऒट्रुम् तिरैवाय् ऒट्रियूरे.
पाडल् ऎण् : 10
ऒट्रि ऊरुम् अरवुम् पिऱैयुम्
पट्रि ऊरुम् पवळच् चडैयान्
ऒट्रियूर्मेल् ऊरन् उरैत्त
कट्रुप् पाडक् कऴियुम् विनैये.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Sundarar reaches Thiruvotriyur (tiruvoṭriyūr) temple and sings "pāṭṭum pāḍi" padhigam
# 3358 - పెరియపురాణం - ఏయర్కోన్ కలిక్కామ నాయనార్ పురాణం - 204
ఏట్టు వరియిల్ "ఒట్రినగర్ నీంగల్" ఎన్నుం ఎఴుత్తు-అఱియుం *
నాట్టం మలరుం తిరు-నుదలార్ నఱుంబొఱ్ కమలచ్ చేవడియిల్
కూట్టుం ఉణర్వు కొండెఴుందు కోదు-ఇల్ అముద ఇసై-కూడప్
"పాట్టుం పాడిప్ పరవి" ఎనుం పదిగం ఎడుత్తుప్ పాడినార్.
(* Variant reading - in Dharmapuram Adheenam book - నీంగల్ ఎన్న ఎఴుత్తు-అఱియుం)
సుందరర్ తేవారం - 7.91 - పాట్టుం పాడి - తిరువొట్రియూర్ - (పణ్ - కుఱింజి)
(కలివిరుత్తం - మా మా మా మా - meter)
పాడల్ ఎణ్ : 1
పాట్టుం పాడిప్ పరవిత్ తిరివార్
ఈట్టుం వినైగళ్ తీర్ప్పార్ కోయిల్
కాట్టుం కలముం తిమిలుం కరైక్కే
ఓట్టుం తిరైవాయ్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 2
పందుం కిళియుం పయిలుం పావై
సిందై కవర్వార్, సెందీ వణ్ణర్,
ఎందం అడిగళ్, ఇఱైవర్క్కు ఇడంబోల్
ఉందుం తిరైవాయ్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 3
పవళక్ కని-వాయ్ప్ పావై పంగన్;
కవళక్ కళిట్రిన్ ఉరివై పోర్త్తాన్;
తవఴుం మది సేర్ సడైయాఱ్కు ఇడంబోల్,
ఉగళుం తిరైవాయ్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 4
ఎన్నదు ఎఴిలుం నిఱైయుం కవర్వాన్,
పున్నై మలరుం పుఱవిల్ తిగఴుం
తన్నై మున్నం నినైక్కత్ తరువాన్;
ఉన్నప్పడువాన్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 5
పణంగొళ్ అరవం పట్రి, పరమన్,
కణంగళ్ సూఴక్ కబాలం ఏంది,
వణంగుం ఇడై మెన్ మడవార్ ఇట్ట
ఉణంగల్ కవర్వాన్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 6
పడై ఆర్ మఴువన్; పాల్-వెణ్ణీట్రన్;
విడై ఆర్ కొడియన్; వేద నావన్;
అడైవార్ వినైగళ్ అఱుప్పాన్; ఎన్నై
ఉడైయాన్ ఉఱైయుం ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 7
సెండ్ర పురంగళ్ తీయిల్ వేవ
వెండ్ర విగిర్దన్; వినైయై వీట్ట
నండ్రు(మ్) నల్ల నాదన్; నరై-ఏఱు
ఒండ్రై ఉడైయాన్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 8
కలవ-మయిల్ పోల్ వళైక్-కై నల్లార్
పలరుం పరవుం పవళప్ పడియాన్;
ఉలగిన్ ఉళ్ళార్ వినైగళ్ తీర్ప్పాన్,
ఉలవుం తిరైవాయ్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 9
పట్రి వరైయై ఎడుత్త అరక్కన్
ఇట్రు మురియ విరలాల్ అడర్త్తార్;
ఎట్రుం వినైగళ్ తీర్ప్పార్, ఓదం
ఒట్రుం తిరైవాయ్ ఒట్రియూరే.
పాడల్ ఎణ్ : 10
ఒట్రి ఊరుం అరవుం పిఱైయుం
పట్రి ఊరుం పవళచ్ చడైయాన్
ఒట్రియూర్మేల్ ఊరన్ ఉరైత్త
కట్రుప్ పాడక్ కఴియుం వినైయే.
=============================
No comments:
Post a Comment