Saturday, January 31, 2026

5.87 - பட்ட நெற்றியர் - patta netRiyar


171) 5.87 - பட்ட நெற்றியர் - patta netRiyar

திருநாவுக்கரசர் தேவாரம் - 5.87 - பட்ட நெற்றியர் - திருமணஞ்சேரி - (திருக்குறுந்தொகை)

tirunāvukkarasar tēvāram - 5.87 – paṭṭa neṭriyar - tirumaṇañjēri - (tirukkuṟundogai)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/13FHoLHUbFAFKnMcCR4ZQK7T01rabhdcg/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/C_BwHPb3NmQ

Part-2: https://youtu.be/xBzseA2SiiQ

***
English translation (meaning) : V.M.Subramanya Ayyar - https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_087.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.87 – திருமணஞ்சேரி - (திருக்குறுந்தொகை)


திருமணஞ்சேரி : மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 13 கிமீ தூரத்தில் உள்ள தலம். இத்தலம் "கீழைத் திருமணஞ்சேரி". இக்கோயிலிலிருந்து 1 கிமீ தூரத்தில் திரு-எதிர்கொள்பாடி (மேலைத் திருமணஞ்சேரி) என்ற இன்னொரு தலமும் உள்ளது.


பெரியபுராணத்தில் இப்பதிகத்தைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.


பதிகக் கருத்து:

திருமணஞ்சேரிப் பெருமானாரை வழிபடுங்கள்; அவர் பற்றுக்கோடு ஆவார்; அவர் அன்பர்க்கு அன்பர்; உங்கள் வினை நீங்கும்; துன்பமெல்லாம் தீரும்; நீங்கள் எண்ணிய எல்லாம் அவர் அருளால் கைகூடும்;

----------

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.87 – திருமணஞ்சேரி - (திருக்குறுந்தொகை)

பாடல் எண் : 1

பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்

நட்ட நின்று நவில்பவர் நாடொறும்

சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்

வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.


Word separated:

பட்ட நெற்றியர்; பாய்-புலித் தோலினர்;

நட்டம் நின்று நவில்பவர் நாள்தொறும்;

சிட்டர் வாழ், திரு ஆர் மணஞ்சேரி எம்

வட்ட வார்-சடையார் வண்ணம் வாழ்த்துமே.


பாடல் எண் : 2

துன்னு வார்குழ லாளுமை யாளொடும்

பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்

மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை

உன்னு வார்வினை யாயின வோயுமே.


Word separated:

துன்னு வார்-குழலாள் உமையாளொடும்,

பின்னு வார்-சடைமேல் பிறை வைத்தவர்;

மன்னுவார்; மணஞ்சேரி மருந்தினை

உன்னுவார் வினை-ஆயின ஓயுமே.


பாடல் எண் : 3

புற்றி லாடர வாட்டும் புனிதனார்

தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்

சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்

பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.


Word separated:

புற்றில் ஆடு-அரவு ஆட்டும் புனிதனார்;

தெற்றினார் புரம் தீ-எழச் செற்றவர்;

சுற்றினார் மதில் சூழ் மணஞ்சேரியார்

பற்றினார்-அவர் பற்று அவர் காண்மினே.


பாடல் எண் : 4

மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை

முத்தர் முக்கணர் மூசர வம்மணி

சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்

வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.


Word separated:

மத்தமும் மதியும் வளர் செஞ்சடை

முத்தர்; முக்கணர்; மூசு-அரவம் அணி

சித்தர்; தீ-வணர்; சீர் மணஞ்சேரி எம்

வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே.


பாடல் எண் : 5

துள்ளு மான்மறி தூமழு வாளினர்

வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்

அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்

வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே.


Word separated:

துள்ளும் மான்மறி, தூ-மழுவாளினர்;

வெள்ள-நீர் கரந்தார் சடைமேல் அவர்;

அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.


பாடல் எண் : 6

நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்

ஊர்ப ரந்த உரகம் அணிபவர்

சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்

ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.

Word separated:

நீர் பரந்த நிமிர்-புன்-சடையின்மேல்

ஊர் பரந்த உரகம் அணிபவர்;

சீர் பரந்த திருமணஞ்சேரியார்

ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே.


பாடல் எண் : 7

சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார்

விண்ணத் தம்மதி சூடிய வேதியர்

மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார்

வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.


Word separated:

சுண்ணத்தர்; சுடு நீறு உகந்து ஆடலார்;

விண்ணத்து அம்-மதி சூடிய வேதியர்;

மண்ணத்து அம்-முழவு ஆர் மணஞ்சேரியார்,

வண்ணத்து அம்-முலையாள் உமை வண்ணரே.

* (விண்ணத்து = விண்ணகத்து; மண்ணத்து = மண் அத்து)


பாடல் எண் : 8

துன்ன வாடையர் தூமழு வாளினர்

பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்

மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்

மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.


Word separated:

துன்ன ஆடையர்; தூ-மழுவாளினர்;

பின்னு செஞ்சடைமேல் பிறை வைத்தவர்;

மன்னு-வார்-பொழில் சூழ் மணஞ்சேரி எம்

மன்னனார் கழலே தொழ வாய்க்குமே.


பாடல் எண் : 9

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்

புத்தர் சேரமண் கையர் புகழவே

மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்

அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.


Word separated:

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்

புத்தர் சேர் அமண் கையர் புகழவே

மத்தர் தாம் அறியார் மணஞ்சேரி எம்

அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே.

(For interpretation:

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் புகழவே,

புத்தர் சேர் அமண் கையர் மத்தர் தாம் அறியார்)


பாடல் எண் : 10

கடுத்த மேனி யரக்கன் கயிலையை

எடுத்த வன்னெடு நீண்முடி பத்திறப்

படுத்த லும்மணஞ் சேரி யருளெனக்

கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.


Word separated:

கடுத்த மேனி அரக்கன் கயிலையை

எடுத்தவன் நெடு-நீள்-முடி பத்து இறப்

படுத்தலும், "மணஞ்சேரி அருள்" எனக்,

கொடுத்தனன் கொற்ற-வாளொடு நாமமே.


==================== ===============


Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tirunāvukkarasar tēvāram - padigam 5.87 – tirumaṇañjēri - (tirukkuṟundogai)

pāḍal eṇ : 1

paṭṭa neṭriyar; pāy-pulit tōlinar;

naṭṭam niṇḍru navilbavar nāḷdoṟum;

siṭṭar vāḻ, tiru ār maṇañjēri em

vaṭṭa vār-saḍaiyār vaṇṇam vāḻttumē.


pāḍal eṇ : 2

tunnu vār-kuḻalāḷ umaiyāḷoḍum,

pinnu vār-saḍaimēl piṟai vaittavar;

mannuvār; maṇañjēri marundinai

unnuvār vinai-āyina ōyumē.


pāḍal eṇ : 3

puṭril āḍu-aravu āṭṭum punidanār;

teṭrinār puram tī-eḻac ceṭravar;

suṭrinār madil sūḻ maṇañjēriyār

paṭrinār-avar paṭru avar kāṇminē.


pāḍal eṇ : 4

mattamum madiyum vaḷar señjaḍai

muttar; mukkaṇar; mūsu-aravam aṇi

sittar; tī-vaṇar; sīr maṇañjēri em

vittar tām viruppārai virupparē.


pāḍal eṇ : 5

tuḷḷum mānmaṟi, tū-maḻuvāḷinar;

veḷḷa-nīr karandār saḍaimēl avar;

aḷḷal ār vayal sūḻ maṇañjēri em

vaḷḷalār kaḻal vāḻttal vāḻvu āvadē.


pāḍal eṇ : 6

nīr paranda nimir-pun-saḍaiyinmēl

ūr paranda uragam aṇibavar;

sīr paranda tirumaṇañjēriyār

ēr parandu aṅgu ilaṅgu sūlattarē.


pāḍal eṇ : 7

suṇṇattar; suḍu nīṟu ugandu āḍalār;

viṇṇattu am-madi sūḍiya vēdiyar;

maṇṇattu am-muḻavu ār maṇañjēriyār,

vaṇṇattu am-mulaiyāḷ umai vaṇṇarē.

* (viṇṇattu = viṇṇagattu; maṇṇattu = maṇ attu)


pāḍal eṇ : 8

tunna āḍaiyar; tū-maḻuvāḷinar;

pinnu señjaḍaimēl piṟai vaittavar;

mannu-vār-poḻil sūḻ maṇañjēri em

mannanār kaḻalē toḻa vāykkumē.


pāḍal eṇ : 9

sittar dēvargaḷ māloḍu nānmugan

puttar sēr amaṇ kaiyar pugaḻavē

mattar tām aṟiyār maṇañjēri em

attanār aḍiyārkku allal illaiyē.

(For interpretation:

sittar dēvargaḷ māloḍu nānmugan pugaḻavē,

puttar sēr amaṇ kaiyar mattar tām aṟiyār)


pāḍal eṇ : 10

kaḍutta mēni arakkan kayilaiyai

eḍuttavan neḍu-nīḷ-muḍi pattu iṟap

paḍuttalum, "maṇañjēri aruḷ" enak,

koḍuttanan koṭra-vāḷoḍu nāmamē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)

तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 5.87 – तिरुमणञ्जेरि - (तिरुक्कुऱुन्दॊगै)

पाडल् ऎण् : 1

पट्ट नॆट्रियर्; पाय्-पुलित् तोलिनर्;

नट्टम् निण्ड्रु नविल्बवर् नाळ्दॊऱुम्;

सिट्टर् वाऴ्, तिरु आर् मणञ्जेरि ऎम्

वट्ट वार्-सडैयार् वण्णम् वाऴ्त्तुमे.


पाडल् ऎण् : 2

तुन्नु वार्-कुऴलाळ् उमैयाळॊडुम्,

पिन्नु वार्-सडैमेल् पिऱै वैत्तवर्;

मन्नुवार्; मणञ्जेरि मरुन्दिनै

उन्नुवार् विनै-आयिन ओयुमे.


पाडल् ऎण् : 3

पुट्रिल् आडु-अरवु आट्टुम् पुनिदनार्;

तॆट्रिनार् पुरम् ती-ऎऴच् चॆट्रवर्;

सुट्रिनार् मदिल् सूऴ् मणञ्जेरियार्

पट्रिनार्-अवर् पट्रु अवर् काण्मिने.


पाडल् ऎण् : 4

मत्तमुम् मदियुम् वळर् सॆञ्जडै

मुत्तर्; मुक्कणर्; मूसु-अरवम् अणि

सित्तर्; ती-वणर्; सीर् मणञ्जेरि ऎम्

वित्तर् ताम् विरुप्पारै विरुप्परे.


पाडल् ऎण् : 5

तुळ्ळुम् मान्मऱि, तू-मऴुवाळिनर्;

वॆळ्ळ-नीर् करन्दार् सडैमेल् अवर्;

अळ्ळल् आर् वयल् सूऴ् मणञ्जेरि ऎम्

वळ्ळलार् कऴल् वाऴ्त्तल् वाऴ्वु आवदे.


पाडल् ऎण् : 6

नीर् परन्द निमिर्-पुन्-सडैयिन्मेल्

ऊर् परन्द उरगम् अणिबवर्;

सीर् परन्द तिरुमणञ्जेरियार्

एर् परन्दु अङ्गु इलङ्गु सूलत्तरे.


पाडल् ऎण् : 7

सुण्णत्तर्; सुडु नीऱु उगन्दु आडलार्;

विण्णत्तु अम्-मदि सूडिय वेदियर्;

मण्णत्तु अम्-मुऴवु आर् मणञ्जेरियार्,

वण्णत्तु अम्-मुलैयाळ् उमै वण्णरे.

* (विण्णत्तु = विण्णगत्तु; मण्णत्तु = मण् अत्तु)


पाडल् ऎण् : 8

तुन्न आडैयर्; तू-मऴुवाळिनर्;

पिन्नु सॆञ्जडैमेल् पिऱै वैत्तवर्;

मन्नु-वार्-पॊऴिल् सूऴ् मणञ्जेरि ऎम्

मन्ननार् कऴले तॊऴ वाय्क्कुमे.


पाडल् ऎण् : 9

सित्तर् देवर्गळ् मालॊडु नान्मुगन्

पुत्तर् सेर् अमण् कैयर् पुगऴवे

मत्तर् ताम् अऱियार् मणञ्जेरि ऎम्

अत्तनार् अडियार्क्कु अल्लल् इल्लैये.

(For interpretation:

सित्तर् देवर्गळ् मालॊडु नान्मुगन् पुगऴवे,

पुत्तर् सेर् अमण् कैयर् मत्तर् ताम् अऱियार्)


पाडल् ऎण् : 10

कडुत्त मेनि अरक्कन् कयिलैयै

ऎडुत्तवन् नॆडु-नीळ्-मुडि पत्तु इऱप्

पडुत्तलुम्, "मणञ्जेरि अरुळ्" ऎनक्,

कॊडुत्तनन् कॊट्र-वाळॊडु नाममे.

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.87 – తిరుమణంజేరి - (తిరుక్కుఱుందొగై)

పాడల్ ఎణ్ : 1

పట్ట నెట్రియర్; పాయ్-పులిత్ తోలినర్;

నట్టం నిండ్రు నవిల్బవర్ నాళ్దొఱుం;

సిట్టర్ వాఴ్, తిరు ఆర్ మణంజేరి ఎం

వట్ట వార్-సడైయార్ వణ్ణం వాఴ్త్తుమే.


పాడల్ ఎణ్ : 2

తున్ను వార్-కుఴలాళ్ ఉమైయాళొడుం,

పిన్ను వార్-సడైమేల్ పిఱై వైత్తవర్;

మన్నువార్; మణంజేరి మరుందినై

ఉన్నువార్ వినై-ఆయిన ఓయుమే.


పాడల్ ఎణ్ : 3

పుట్రిల్ ఆడు-అరవు ఆట్టుం పునిదనార్;

తెట్రినార్ పురం తీ-ఎఴచ్ చెట్రవర్;

సుట్రినార్ మదిల్ సూఴ్ మణంజేరియార్

పట్రినార్-అవర్ పట్రు అవర్ కాణ్మినే.


పాడల్ ఎణ్ : 4

మత్తముం మదియుం వళర్ సెంజడై

ముత్తర్; ముక్కణర్; మూసు-అరవం అణి

సిత్తర్; తీ-వణర్; సీర్ మణంజేరి ఎం

విత్తర్ తాం విరుప్పారై విరుప్పరే.


పాడల్ ఎణ్ : 5

తుళ్ళుం మాన్మఱి, తూ-మఴువాళినర్;

వెళ్ళ-నీర్ కరందార్ సడైమేల్ అవర్;

అళ్ళల్ ఆర్ వయల్ సూఴ్ మణంజేరి ఎం

వళ్ళలార్ కఴల్ వాఴ్త్తల్ వాఴ్వు ఆవదే.


పాడల్ ఎణ్ : 6

నీర్ పరంద నిమిర్-పున్-సడైయిన్మేల్

ఊర్ పరంద ఉరగం అణిబవర్;

సీర్ పరంద తిరుమణంజేరియార్

ఏర్ పరందు అంగు ఇలంగు సూలత్తరే.


పాడల్ ఎణ్ : 7

సుణ్ణత్తర్; సుడు నీఱు ఉగందు ఆడలార్;

విణ్ణత్తు అం-మది సూడియ వేదియర్;

మణ్ణత్తు అం-ముఴవు ఆర్ మణంజేరియార్,

వణ్ణత్తు అం-ములైయాళ్ ఉమై వణ్ణరే.

* (విణ్ణత్తు = విణ్ణగత్తు; మణ్ణత్తు = మణ్ అత్తు)


పాడల్ ఎణ్ : 8

తున్న ఆడైయర్; తూ-మఴువాళినర్;

పిన్ను సెంజడైమేల్ పిఱై వైత్తవర్;

మన్ను-వార్-పొఴిల్ సూఴ్ మణంజేరి ఎం

మన్ననార్ కఴలే తొఴ వాయ్క్కుమే.


పాడల్ ఎణ్ : 9

సిత్తర్ దేవర్గళ్ మాలొడు నాన్ముగన్

పుత్తర్ సేర్ అమణ్ కైయర్ పుగఴవే

మత్తర్ తాం అఱియార్ మణంజేరి ఎం

అత్తనార్ అడియార్క్కు అల్లల్ ఇల్లైయే.

(For interpretation:

సిత్తర్ దేవర్గళ్ మాలొడు నాన్ముగన్ పుగఴవే,

పుత్తర్ సేర్ అమణ్ కైయర్ మత్తర్ తాం అఱియార్)


పాడల్ ఎణ్ : 10

కడుత్త మేని అరక్కన్ కయిలైయై

ఎడుత్తవన్ నెడు-నీళ్-ముడి పత్తు ఇఱప్

పడుత్తలుం, "మణంజేరి అరుళ్" ఎనక్,

కొడుత్తనన్ కొట్ర-వాళొడు నామమే.

================ ============


No comments:

Post a Comment