177) 6.99 - எண்ணுகேன் என்சொல்லி - eNNugEn en solli
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.99 - எண்ணுகேன் என்சொல்லி - திருப்புகலூர் - (திருத்தாண்டகம்)
tirunāvukkarasar tēvāram - 6.99 - eṇṇugēn en solli - tiruppugalūr - (tiruttāṇḍagam)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1KHFJsnQEGElMxFTN0iZjaz76ThN0modm/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
Part-2:
Part-3:
***
English
translation (meaning) : V.M.Subramanya Ayyar -
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS6_099.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.99 - திருப்புகலூர் - (திருத்தாண்டகம்)
பதிக வரலாறு:
திருநாவுக்கரசர் திருப்புகலூரில் திருத்தொண்டு புரிந்து பல பதிகங்கள் பாடி வழிபட்டுவந்தார். அவர் பாடியருளிய கடைசிப் பதிகம் இப்பதிகம். இந்தப் பதிகம் பாடியருளி ஈசனோடு கலந்தார்.
திருப்புகலூர்:
இது சோழநாட்டில் உள்ள தலம். திருநாவுக்கரசர் முக்தியடைந்த தலம். திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் இந்த ஆலயத்தினுள்ளே இருக்கிறது. முருகநாயனாருடைய திருவவதாரத்-தலம் இது. சுந்தரமூர்த்தி நாயனார் துயில்கொள்ளும்பொழுது அவர் தலையின்கீழ் வைத்துக்கொண்டிருந்த செங்கற்களைப் பொன்னாக ஈசன் அருளிய தலம்.
--------
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings this padhigam and merges with Siva
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 427
மண்முதலா முலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப்
"புண்ணியா! வுன்னடிக்கே போதுகின்றே" னெனப்புகன்று
நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி
யண்ணலார் சேவடிக்கீ ழாண்டவர சமர்ந்திருந்தார்.
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 428
வானவர்கண் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின்
மேனிறைந்த வைந்துபே ரியவொலியும் விரிஞ்சன்முதல்
யோனிகளா யினவெல்லா முண்ணிறைந்த பெருமகிழ்ச்சி
தானிறைந்த சித்திரையிற் சதயமாந் திருநாளில்.
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.99 - திருப்புகலூர் - (திருத்தாண்டகம்)
(எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - half line meter)
பாடல் எண் : 1
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
.. எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
.. கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
.. ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 2
அங்கமே பூண்டாய் அனலா டினாய்
.. ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடை யினாய்
.. பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
.. சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
.. திருப்புகலூர் மேவிய தேவ தேவே.
பாடல் எண் : 3
பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
.. பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்
.. மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய்
.. அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 4
தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
.. சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
.. மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
.. அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 5
நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
.. நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே
.. பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
.. கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 6
விரிசடையாய் வேதியனே வேத கீதா
.. விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
.. திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
.. வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 7
தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
.. திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
.. நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
.. கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 8
நெய்யாடி நின்மலனே நீல கண்டா
.. நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
.. மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
.. கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 9
துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
.. துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
.. சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
.. யக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
பாடல் எண் : 10
ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்
.. உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
.. இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
.. கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
.. பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
=============================
Word separated version:
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings this padhigam and merges with Siva
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 427
மண் முதலாம் உலகு ஏத்த, மன்னு-திருத்தாண்டகத்தைப்
"புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன்" எனப் புகன்று,
நண்ணரிய சிவானந்த ஞான-வடிவே ஆகி,
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட-அரசு அமர்ந்திருந்தார்.
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 428
வானவர்கள் மலர்-மாரி மண் நிறைய, விண்ணுலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய-ஒலியும்; விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின-எல்லாம் உள் நிறைந்த பெருமகிழ்ச்சி
தான் நிறைந்த; சித்திரையில் சதயமாம் திருநாளில்.
திருநாவுக்கரசர் தேவாரம் - 6.99 - திருப்புகலூர் - (திருத்தாண்டகம்)
(எண்சீர் விருத்தம் - காய் காய் மா தேமா - half line meter)
பாடல் எண் : 1
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ
.. எம்பெருமான் திருவடியே எண்ணின்-அல்லால்?
கண்-இலேன், மற்று-ஓர் களைகண் இல்லேன்,
.. கழலடியே கைதொழுது காணின்-அல்லால்;
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்;
.. ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன்;
புண்ணியா; உன் அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 2
அங்கமே பூண்டாய்; அனல் ஆடினாய்;
.. ஆதிரையாய்; ஆல்நிழலாய்; ஆனேறு ஊர்ந்தாய்;
பங்கம்-ஒன்று இல்லாத படர்-சடையினாய்;
.. பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்;
சங்கை-ஒன்று இன்றியே, தேவர் வேண்டச்,
.. சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச்
சிங்கமே; உன் அடிக்கே போதுகின்றேன்;
.. திருப்புகலூர் மேவிய தேவதேவே.
பாடல் எண் : 3
பை-அரவக் கச்சையாய்; பால்-வெண்ணீற்றாய்;
.. பளிக்குக் குழையினாய்; பண் ஆர் இன்சொல்
மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்;
.. மான்மறி கை ஏந்தினாய்; வஞ்சக்-கள்வர்
ஐவரையும் என்மேல் தரவு-அறுத்தாய்;
.. அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவது இல்லை;
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 4
தெருளாதார் மூவெயிலும் தீயில் வேவச்
.. சிலை வளைத்துச் செங்கணையால் செற்ற தேவே;
மருளாதார்தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்;
.. மருந்தாய்ப் பிணி தீர்ப்பாய்; வானோர்க்கு என்றும்
அருளாகி, ஆதியாய், வேதமாகி,
.. அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணாப்
பொருள் ஆவாய்; உன் அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 5
நீர் ஏறு செஞ்சடைமேல் நிலா-வெண்-திங்கள்
.. நீங்காமை வைத்து உகந்த நீதியானே;
பார் ஏறு படுதலையில் பலி-கொள்வானே;
.. பண்டு அனங்கற் காய்ந்தானே; பாவநாசா;
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே;
.. கருங்கைக் களிற்று-உரிவை கதறப் போர்த்த
போர்-ஏறே; உன் அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 6
விரி-சடையாய்; வேதியனே; வேதகீதா;
.. விரி-பொழில் சூழ் வெண்காட்டாய்; மீயச்சூராய்;
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே;
.. திருவாரூர்த் திருமூலட்டானம் மேயாய்;
மருவினியார் மனத்து-உளாய்; மாகாளத்தாய்;
.. வலஞ்சுழியாய்; மா-மறைக்காட்டு எந்தாய்; என்றும்
புரிசடையாய்; உன் அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 7
தே ஆர்ந்த தேவனைத், தேவர்-எல்லாம்
.. திருவடிமேல் அலர் இட்டுத் தேடி நின்று,
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி,
.. நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
கா ஆர்ந்த பொழிற்-சோலைக் கானப்பேராய்;
.. கழுக்குன்றத்து உச்சியாய்; கடவுளே; நின்
பூ ஆர்ந்த பொன்-அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 8
நெய்-ஆடி; நின்மலனே; நீலகண்டா;
.. நிறைவு உடையாய்; மறை வல்லாய்; நீதியானே;
மை-ஆடு கண்-மடவாள் பாகத்தானே;
.. மான்-தோல் உடையா மகிழ்ந்து-நின்றாய்;
கொய்-ஆடு கூவிளம் கொன்றை-மாலை
.. கொண்டு அடியேன் நான் இட்டுக் கூறி-நின்று,
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 9
துன்னம் சேர் கோவணத்தாய்; தூய நீற்றாய்;
.. துதைந்து இலங்கு வெண்-மழுவாள் கையில் ஏந்தித்,
தன்-அணையும் தண்-மதியும் பாம்பும் நீரும்
.. சடைமுடிமேல் வைத்து-உகந்த தன்மையானே;
அன்ன-நடை-மடவாள் பாகத்தானே;
.. அக்கு-ஆரம் பூண்டானே; ஆதியானே;
பொன்னங்-கழல்-அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
பாடல் எண் : 10
ஒருவனையும் அல்லாது உணராது உள்ளம்;
.. உணர்ச்சித் தடுமாற்றத்து உள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
.. இல்லாத தரவு-அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக்-
கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன்
.. கடுந்தேர் மீது ஓடாமைக் காலாற் செற்ற
பொரு-வரையாய்; உன் அடிக்கே போதுகின்றேன்;
.. பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings this padhigam and merges with Siva
periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 427
maṇ mudalām ulagu ētta, mannu-tiruttāṇḍagattaip
"puṇṇiyā! un aḍikkē pōdugiṇḍrēn" enap pugaṇḍru,
naṇṇariya sivānanda ñāna-vaḍivē āgi,
aṇṇalār sēvaḍikkīḻ āṇḍa-arasu amarndirundār.
periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 428
vānavargaḷ malar-māri maṇ niṟaiya, viṇṇulagin
mēl niṟainda aindu pēriya-oliyum; viriñjan mudal
yōnigaḷ āyina-ellām uḷ niṟainda perumagiḻcci
tān niṟainda; sittiraiyil sadayamām tirunāḷil.
tirunāvukkarasar tēvāram - 6.99 - tiruppugalūr - (tiruttāṇḍagam)
(eṇsīr viruttam - kāy kāy mā tēmā - half line meter)
pāḍal eṇ : 1
eṇṇugēn en solli eṇṇugēnō
.. emberumān tiruvaḍiyē eṇṇin-allāl?
kaṇ-ilēn, maṭru-ōr kaḷaigaṇ illēn,
.. kaḻalaḍiyē kaidoḻudu kāṇin-allāl;
oṇṇuḷē onbadu vāsal vaittāy;
.. okka aḍaikkumbōdu uṇara māṭṭēn;
puṇṇiyā; un aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 2
aṅgamē pūṇḍāy; anal āḍināy;
.. ādiraiyāy; ālniḻalāy; ānēṟu ūrndāy;
paṅgam-oṇḍru illāda paḍar-saḍaiyināy;
.. pāmboḍu tiṅgaḷ pagai tīrttu āṇḍāy;
saṅgai-oṇḍru iṇḍriyē, tēvar vēṇḍac,
.. samuttirattin nañju uṇḍu, sāvā mūvāc
ciṅgamē; un aḍikkē pōdugiṇḍrēn;
.. tiruppugalūr mēviya dēvadēvē.
pāḍal eṇ : 3
pai-aravak kaccaiyāy; pāl-veṇṇīṭrāy;
.. paḷikkuk kuḻaiyināy; paṇ ār insol
mai viravu kaṇṇāḷaip bāgam koṇḍāy;
.. mānmaṟi kai ēndināy; vañjak-kaḷvar
aivaraiyum enmēl taravu-aṟuttāy;
.. avar vēṇḍum kāriyam iṅgu āvadu illai;
poy uraiyādu un aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 4
teruḷādār mūveyilum tīyil vēvac
.. silai vaḷaittuc ceṅgaṇaiyāl seṭra dēvē;
maruḷādārdam manattil vāṭṭam tīrppāy;
.. marundāyp piṇi tīrppāy; vānōrkku eṇḍrum
aruḷāgi, ādiyāy, vēdamāgi,
.. alarmēlān nīrmēlān āyndum kāṇāp
poruḷ āvāy; un aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 5
nīr ēṟu señjaḍaimēl nilā-veṇ-tiṅgaḷ
.. nīṅgāmai vaittu uganda nīdiyānē;
pār ēṟu paḍudalaiyil pali-koḷvānē;
.. paṇḍu anaṅgaṟ kāyndānē; pāvanāsā;
kār ēṟu mugil anaiya kaṇḍattānē;
.. karuṅgaik kaḷiṭru-urivai kadaṟap pōrtta
pōr-ēṟē; un aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 6
viri-saḍaiyāy; vēdiyanē; vēdagīdā;
.. viri-poḻil sūḻ veṇgāṭṭāy; mīyaccūrāy;
tiriburaṅgaḷ eriseyda dēvadēvē;
.. tiruvārūrt tirumūlaṭṭānam mēyāy;
maruviniyār manattu-uḷāy; māgāḷattāy;
.. valañjuḻiyāy; mā-maṟaikkāṭṭu endāy; eṇḍrum
purisaḍaiyāy; un aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 7
dē ārnda dēvanait, dēvar-ellām
.. tiruvaḍimēl alar iṭṭut tēḍi niṇḍru,
nā ārnda maṟai pāḍi naṭṭam āḍi,
.. nānmuganum indiranum mālum pōṭrak
kā ārnda poḻiṟ-cōlaik kānappērāy;
.. kaḻukkuṇḍrattu ucciyāy; kaḍavuḷē; nin
pū ārnda pon-aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 8
ney-āḍi; ninmalanē; nīlagaṇḍā;
.. niṟaivu uḍaiyāy; maṟai vallāy; nīdiyānē;
mai-āḍu kaṇ-maḍavāḷ pāgattānē;
.. mān-tōl uḍaiyā magiḻndu-niṇḍrāy;
koy-āḍu kūviḷam koṇḍrai-mālai
.. koṇḍu aḍiyēn nān iṭṭuk kūṟi-niṇḍru,
poyyāda sēvaḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 9
tunnam sēr kōvaṇattāy; tūya nīṭrāy;
.. tudaindu ilaṅgu veṇ-maḻuvāḷ kaiyil ēndit,
tan-aṇaiyum taṇ-madiyum pāmbum nīrum
.. saḍaimuḍimēl vaittu-uganda tanmaiyānē;
anna-naḍai-maḍavāḷ bāgattānē;
.. akku-āram pūṇḍānē; ādiyānē;
ponnaṅ-gaḻal-aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
pāḍal eṇ : 10
oruvanaiyum allādu uṇarādu uḷḷam;
.. uṇarccit taḍumāṭrattu uḷḷē niṇḍra
iruvaraiyum mūvaraiyum enmēl ēvi
.. illāda taravu-aṟuttāykku illēn; ēlak-
karuvarai sūḻ kānal ilaṅgai vēndan
.. kaḍundēr mīdu ōḍāmaik kālāṟ ceṭra
poru-varaiyāy; un aḍikkē pōdugiṇḍrēn;
.. pūmbugalūr mēviya puṇṇiyanē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings this padhigam and merges with Siva
पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 427
मण् मुदलाम् उलगु एत्त, मन्नु-तिरुत्ताण्डगत्तैप्
"पुण्णिया! उन् अडिक्के पोदुगिण्ड्रेन्" ऎनप् पुगण्ड्रु,
नण्णरिय सिवानन्द ञान-वडिवे आगि,
अण्णलार् सेवडिक्कीऴ् आण्ड-अरसु अमर्न्दिरुन्दार्.
पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 428
वानवर्गळ् मलर्-मारि मण् निऱैय, विण्णुलगिन्
मेल् निऱैन्द ऐन्दु पेरिय-ऒलियुम्; विरिञ्जन् मुदल्
योनिगळ् आयिन-ऎल्लाम् उळ् निऱैन्द पॆरुमगिऴ्च्चि
तान् निऱैन्द; सित्तिरैयिल् सदयमाम् तिरुनाळिल्.
तिरुनावुक्करसर् तेवारम् - 6.99 - तिरुप्पुगलूर् - (तिरुत्ताण्डगम्)
(ऎण्सीर् विरुत्तम् - काय् काय् मा तेमा - half line meter)
पाडल् ऎण् : 1
ऎण्णुगेन् ऎन् सॊल्लि ऎण्णुगेनो
.. ऎम्बॆरुमान् तिरुवडिये ऎण्णिन्-अल्लाल्?
कण्-इलेन्, मट्रु-ओर् कळैगण् इल्लेन्,
.. कऴलडिये कैदॊऴुदु काणिन्-अल्लाल्;
ऒण्णुळे ऒन्बदु वासल् वैत्ताय्;
.. ऒक्क अडैक्कुम्बोदु उणर माट्टेन्;
पुण्णिया; उन् अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 2
अङ्गमे पूण्डाय्; अनल् आडिनाय्;
.. आदिरैयाय्; आल्निऴलाय्; आनेऱु ऊर्न्दाय्;
पङ्गम्-ऒण्ड्रु इल्लाद पडर्-सडैयिनाय्;
.. पाम्बॊडु तिङ्गळ् पगै तीर्त्तु आण्डाय्;
सङ्गै-ऒण्ड्रु इण्ड्रिये, तेवर् वेण्डच्,
.. समुत्तिरत्तिन् नञ्जु उण्डु, सावा मूवाच्
चिङ्गमे; उन् अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. तिरुप्पुगलूर् मेविय देवदेवे.
पाडल् ऎण् : 3
पै-अरवक् कच्चैयाय्; पाल्-वॆण्णीट्राय्;
.. पळिक्कुक् कुऴैयिनाय्; पण् आर् इन्सॊल्
मै विरवु कण्णाळैप् बागम् कॊण्डाय्;
.. मान्मऱि कै एन्दिनाय्; वञ्जक्-कळ्वर्
ऐवरैयुम् ऎन्मेल् तरवु-अऱुत्ताय्;
.. अवर् वेण्डुम् कारियम् इङ्गु आवदु इल्लै;
पॊय् उरैयादु उन् अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 4
तॆरुळादार् मूवॆयिलुम् तीयिल् वेवच्
.. सिलै वळैत्तुच् चॆङ्गणैयाल् सॆट्र देवे;
मरुळादार्दम् मनत्तिल् वाट्टम् तीर्प्पाय्;
.. मरुन्दाय्प् पिणि तीर्प्पाय्; वानोर्क्कु ऎण्ड्रुम्
अरुळागि, आदियाय्, वेदमागि,
.. अलर्मेलान् नीर्मेलान् आय्न्दुम् काणाप्
पॊरुळ् आवाय्; उन् अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 5
नीर् एऱु सॆञ्जडैमेल् निला-वॆण्-तिङ्गळ्
.. नीङ्गामै वैत्तु उगन्द नीदियाने;
पार् एऱु पडुदलैयिल् पलि-कॊळ्वाने;
.. पण्डु अनङ्गऱ् काय्न्दाने; पावनासा;
कार् एऱु मुगिल् अनैय कण्डत्ताने;
.. करुङ्गैक् कळिट्रु-उरिवै कदऱप् पोर्त्त
पोर्-एऱे; उन् अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 6
विरि-सडैयाय्; वेदियने; वेदगीदा;
.. विरि-पॊऴिल् सूऴ् वॆण्गाट्टाय्; मीयच्चूराय्;
तिरिबुरङ्गळ् ऎरिसॆय्द देवदेवे;
.. तिरुवारूर्त् तिरुमूलट्टानम् मेयाय्;
मरुविनियार् मनत्तु-उळाय्; मागाळत्ताय्;
.. वलञ्जुऴियाय्; मा-मऱैक्काट्टु ऎन्दाय्; ऎण्ड्रुम्
पुरिसडैयाय्; उन् अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 7
दे आर्न्द देवनैत्, देवर्-ऎल्लाम्
.. तिरुवडिमेल् अलर् इट्टुत् तेडि निण्ड्रु,
ना आर्न्द मऱै पाडि नट्टम् आडि,
.. नान्मुगनुम् इन्दिरनुम् मालुम् पोट्रक्
का आर्न्द पॊऴिऱ्-चोलैक् कानप्पेराय्;
.. कऴुक्कुण्ड्रत्तु उच्चियाय्; कडवुळे; निन्
पू आर्न्द पॊन्-अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 8
नॆय्-आडि; निन्मलने; नीलगण्डा;
.. निऱैवु उडैयाय्; मऱै वल्लाय्; नीदियाने;
मै-आडु कण्-मडवाळ् पागत्ताने;
.. मान्-तोल् उडैया मगिऴ्न्दु-निण्ड्राय्;
कॊय्-आडु कूविळम् कॊण्ड्रै-मालै
.. कॊण्डु अडियेन् नान् इट्टुक् कूऱि-निण्ड्रु,
पॊय्याद सेवडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 9
तुन्नम् सेर् कोवणत्ताय्; तूय नीट्राय्;
.. तुदैन्दु इलङ्गु वॆण्-मऴुवाळ् कैयिल् एन्दित्,
तन्-अणैयुम् तण्-मदियुम् पाम्बुम् नीरुम्
.. सडैमुडिमेल् वैत्तु-उगन्द तन्मैयाने;
अन्न-नडै-मडवाळ् बागत्ताने;
.. अक्कु-आरम् पूण्डाने; आदियाने;
पॊन्नङ्-गऴल्-अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
पाडल् ऎण् : 10
ऒरुवनैयुम् अल्लादु उणरादु उळ्ळम्;
.. उणर्च्चित् तडुमाट्रत्तु उळ्ळे निण्ड्र
इरुवरैयुम् मूवरैयुम् ऎन्मेल् एवि
.. इल्लाद तरवु-अऱुत्ताय्क्कु इल्लेन्; एलक्-
करुवरै सूऴ् कानल् इलङ्गै वेन्दन्
.. कडुन्देर् मीदु ओडामैक् कालाऱ् चॆट्र
पॊरु-वरैयाय्; उन् अडिक्के पोदुगिण्ड्रेन्;
.. पूम्बुगलूर् मेविय पुण्णियने.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar sings this padhigam and merges with Siva
పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 427
మణ్ ముదలాం ఉలగు ఏత్త, మన్ను-తిరుత్తాండగత్తైప్
"పుణ్ణియా! ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్" ఎనప్ పుగండ్రు,
నణ్ణరియ సివానంద ఞాన-వడివే ఆగి,
అణ్ణలార్ సేవడిక్కీఴ్ ఆండ-అరసు అమర్న్దిరుందార్.
పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 428
వానవర్గళ్ మలర్-మారి మణ్ నిఱైయ, విణ్ణులగిన్
మేల్ నిఱైంద ఐందు పేరియ-ఒలియుం; విరింజన్ ముదల్
యోనిగళ్ ఆయిన-ఎల్లాం ఉళ్ నిఱైంద పెరుమగిఴ్చ్చి
తాన్ నిఱైంద; సిత్తిరైయిల్ సదయమాం తిరునాళిల్.
తిరునావుక్కరసర్ తేవారం - 6.99 - తిరుప్పుగలూర్ - (తిరుత్తాండగం)
(ఎణ్సీర్ విరుత్తం - కాయ్ కాయ్ మా తేమా - half line meter)
పాడల్ ఎణ్ : 1
ఎణ్ణుగేన్ ఎన్ సొల్లి ఎణ్ణుగేనో
.. ఎంబెరుమాన్ తిరువడియే ఎణ్ణిన్-అల్లాల్?
కణ్-ఇలేన్, మట్రు-ఓర్ కళైగణ్ ఇల్లేన్,
.. కఴలడియే కైదొఴుదు కాణిన్-అల్లాల్;
ఒణ్ణుళే ఒన్బదు వాసల్ వైత్తాయ్;
.. ఒక్క అడైక్కుంబోదు ఉణర మాట్టేన్;
పుణ్ణియా; ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 2
అంగమే పూండాయ్; అనల్ ఆడినాయ్;
.. ఆదిరైయాయ్; ఆల్నిఴలాయ్; ఆనేఱు ఊర్న్దాయ్;
పంగం-ఒండ్రు ఇల్లాద పడర్-సడైయినాయ్;
.. పాంబొడు తింగళ్ పగై తీర్త్తు ఆండాయ్;
సంగై-ఒండ్రు ఇండ్రియే, తేవర్ వేండచ్,
.. సముత్తిరత్తిన్ నంజు ఉండు, సావా మూవాచ్
చింగమే; ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్;
.. తిరుప్పుగలూర్ మేవియ దేవదేవే.
పాడల్ ఎణ్ : 3
పై-అరవక్ కచ్చైయాయ్; పాల్-వెణ్ణీట్రాయ్;
.. పళిక్కుక్ కుఴైయినాయ్; పణ్ ఆర్ ఇన్సొల్
మై విరవు కణ్ణాళైప్ బాగం కొండాయ్;
.. మాన్మఱి కై ఏందినాయ్; వంజక్-కళ్వర్
ఐవరైయుం ఎన్మేల్ తరవు-అఱుత్తాయ్;
.. అవర్ వేండుం కారియం ఇంగు ఆవదు ఇల్లై;
పొయ్ ఉరైయాదు ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 4
తెరుళాదార్ మూవెయిలుం తీయిల్ వేవచ్
.. సిలై వళైత్తుచ్ చెంగణైయాల్ సెట్ర దేవే;
మరుళాదార్దం మనత్తిల్ వాట్టం తీర్ప్పాయ్;
.. మరుందాయ్ప్ పిణి తీర్ప్పాయ్; వానోర్క్కు ఎండ్రుం
అరుళాగి, ఆదియాయ్, వేదమాగి,
.. అలర్మేలాన్ నీర్మేలాన్ ఆయ్న్దుం కాణాప్
పొరుళ్ ఆవాయ్; ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 5
నీర్ ఏఱు సెంజడైమేల్ నిలా-వెణ్-తింగళ్
.. నీంగామై వైత్తు ఉగంద నీదియానే;
పార్ ఏఱు పడుదలైయిల్ పలి-కొళ్వానే;
.. పండు అనంగఱ్ కాయ్న్దానే; పావనాసా;
కార్ ఏఱు ముగిల్ అనైయ కండత్తానే;
.. కరుంగైక్ కళిట్రు-ఉరివై కదఱప్ పోర్త్త
పోర్-ఏఱే; ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 6
విరి-సడైయాయ్; వేదియనే; వేదగీదా;
.. విరి-పొఴిల్ సూఴ్ వెణ్గాట్టాయ్; మీయచ్చూరాయ్;
తిరిబురంగళ్ ఎరిసెయ్ద దేవదేవే;
.. తిరువారూర్త్ తిరుమూలట్టానం మేయాయ్;
మరువినియార్ మనత్తు-ఉళాయ్; మాగాళత్తాయ్;
.. వలంజుఴియాయ్; మా-మఱైక్కాట్టు ఎందాయ్; ఎండ్రుం
పురిసడైయాయ్; ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 7
దే ఆర్న్ద దేవనైత్, దేవర్-ఎల్లాం
.. తిరువడిమేల్ అలర్ ఇట్టుత్ తేడి నిండ్రు,
నా ఆర్న్ద మఱై పాడి నట్టం ఆడి,
.. నాన్ముగనుం ఇందిరనుం మాలుం పోట్రక్
కా ఆర్న్ద పొఴిఱ్-చోలైక్ కానప్పేరాయ్;
.. కఴుక్కుండ్రత్తు ఉచ్చియాయ్; కడవుళే; నిన్
పూ ఆర్న్ద పొన్-అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 8
నెయ్-ఆడి; నిన్మలనే; నీలగండా;
.. నిఱైవు ఉడైయాయ్; మఱై వల్లాయ్; నీదియానే;
మై-ఆడు కణ్-మడవాళ్ పాగత్తానే;
.. మాన్-తోల్ ఉడైయా మగిఴ్న్దు-నిండ్రాయ్;
కొయ్-ఆడు కూవిళం కొండ్రై-మాలై
.. కొండు అడియేన్ నాన్ ఇట్టుక్ కూఱి-నిండ్రు,
పొయ్యాద సేవడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 9
తున్నం సేర్ కోవణత్తాయ్; తూయ నీట్రాయ్;
.. తుదైందు ఇలంగు వెణ్-మఴువాళ్ కైయిల్ ఏందిత్,
తన్-అణైయుం తణ్-మదియుం పాంబుం నీరుం
.. సడైముడిమేల్ వైత్తు-ఉగంద తన్మైయానే;
అన్న-నడై-మడవాళ్ బాగత్తానే;
.. అక్కు-ఆరం పూండానే; ఆదియానే;
పొన్నఙ్-గఴల్-అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
పాడల్ ఎణ్ : 10
ఒరువనైయుం అల్లాదు ఉణరాదు ఉళ్ళం;
.. ఉణర్చ్చిత్ తడుమాట్రత్తు ఉళ్ళే నిండ్ర
ఇరువరైయుం మూవరైయుం ఎన్మేల్ ఏవి
.. ఇల్లాద తరవు-అఱుత్తాయ్క్కు ఇల్లేన్; ఏలక్-
కరువరై సూఴ్ కానల్ ఇలంగై వేందన్
.. కడుందేర్ మీదు ఓడామైక్ కాలాఱ్ చెట్ర
పొరు-వరైయాయ్; ఉన్ అడిక్కే పోదుగిండ్రేన్;
.. పూంబుగలూర్ మేవియ పుణ్ణియనే.
=============================
No comments:
Post a Comment