176) 4.15 - பற்றற்றார் சேர் - patRatRAr sEr
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15 - பற்றற்றார் சேர் - பொது - (பழம்பஞ்சுரம்)
tirunāvukkarasar tēvāram - 4.15 - paṭru-aṭrār sēr - podu - (paḻambañjuram)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF: https://drive.google.com/file/d/1rLAhRTKqjlwj4bsYhFxFYejs1EH0M6yK/view
***
On YouTube:
Tamil discussion:
Part-1:
Part-2:
Part-3:
***
English
translation (meaning) : V.M.Subramanya Ayyar -
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_087.HTM
V. Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15 - பொது - (பழம்பஞ்சுரம்)
பதிக வரலாறு:
திருநாவுக்கரசர் திருப்புகலூரில் திருத்தொண்டு புரிந்து வழிபட்டு வாழ்ந்த காலத்தில் பாடியருளிய பதிகங்களில் ஒன்று இப்பதிகம். இந்தப் பொதுப் பதிகத்தின் கடைசியில் உள்ள தொடரின் அடிப்படையில் இது "பாவநாசப் பதிகம்" என்ற சிறப்புப்பெயர் பெற்றது.
பாடல்கள்தோறும் ஈசன் உறையும் பல தலங்களைச் சொல்லித், தம் பக்தியைச் சொல்லி, முடிவில் அப்பெருமானைப் போற்றி வணங்குபவர்களது பாவம் அழியும் என்று சொல்கின்றார்.
--------
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar reaches thiruppugalUr and many padhigams
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 413
பொய்கைசூழ் பூம்புகலூர்ப் புனிதர்மலர்த் தாள்வணங்கி
நையுமனப் * பரிவினொடு நாடோறுந் திருமுன்றிற்
கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன்
வைகுநா ளெண்ணிறந்த வண்டமிழ்மா லைகண்மொழிவார்;
(* In dharmapuram edition: பரிவோடு)
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 415
ஆருயிரின் றிருவிருத்தந் தசபுரா ணத்தடைவும்
பார்பரவும் பாவநா சப்பதிகம் பன்முறையும்
நேர்படநின் றறைகூவுந் திருப்பதிக முதற்பிறவும்
பேரருளின் கடலளிக்கும் பெருமானைப் பாடினார்.
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15 - பொது - (பழம்பஞ்சுரம்)
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - half line meter)
பாடல் எண் : 1
பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெ முத்தமனை யுள்ளத் துள்ளேவைத்தேனே.
பாடல் எண் : 2
ஆனைக் காவி * லணங்கினை யாரூர் நிலாய வம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
(* Should it be - ஆனைக் காவி லணங்கனை?)
பாடல் எண் : 3
மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கு மருந்தினை
அதிகை மூதூ ரரசினை யையா றமர்ந்த வையனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ள நிறைந்ததே.
பாடல் எண் : 4
புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூ ரிலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி யுலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூ ழதிகை வீரட்டத் தரிமா னேற்றை யடைந்தேனே.
பாடல் எண் : 5
கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை யமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
பாடல் எண் : 6
மருக லுறைமா ணிக்கத்தை வலஞ்சு ழி(ய்)யின் மாலையைக்
கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
பாடல் எண் : 7
எழிலா ரிராச சிங்கத்தை யிராமேச் சுரத்தெ மெழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை யன்பி லணைத்து வைத்தேனே.
பாடல் எண் : 8
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையு மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை யண்ணா மலையெம் மண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
பாடல் எண் : 9
சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை யால வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ணெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலையட லேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
பாடல் எண் : 10
புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
பாடல் எண் : 11
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை யரக்க னாற்ற லழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி
எந்தை பெம்மா னென்னெம்மா னென்பார் பாவ நாசமே.
=============================
Word separated version:
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar reaches thiruppugalUr and many padhigams
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 413
பொய்கை சூழ் பூம்புகலூர்ப் புனிதர் மலர்த்தாள் வணங்கி,
நையு(ம்) மனப்-*பரிவினொடு(ம்) நாள்தோறும் திருமுன்றில்
கை-கலந்த திருத்தொண்டு செய்து பெருங்காதலுடன்
வைகு(ம்) நாள் எண்-இறந்த வண்-தமிழ்மாலைகள் மொழிவார்;
(* In dharmapuram edition: பரிவோடு)
பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 415
ஆருயிரின் திருவிருத்தம் தசபுராணத்து-அடைவும்
பார் பரவும் பாவநாசப்-பதிகம் பன்முறையும்
நேர்பட-நின்று அறைகூவும் திருப்பதிக(ம்) முதல் பிறவும்
பேரருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார்.
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15 - பொது - (பழம்பஞ்சுரம்)
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - half line meter)
பாடல் எண் : 1
பற்று-அற்றார் சேர் பழம்பதியைப், பாசூர் நிலாய பவளத்தைச்,
சிற்றம்பலத்து எம் திகழ்-கனியைத், தீண்டற்கு அரிய திருவுருவை,
வெற்றியூரில் விரிசுடரை, விமலர்-கோனைத், திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை, உள்ளத்துள்ளே வைத்தேனே.
பாடல் எண் : 2
ஆனைக்காவில் * அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானைக்,
கானப்பேரூர்க் கட்டியைக், கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
(* Should it be - ஆனைக்காவில் அணங்கனை?)
பாடல் எண் : 3
மதியம்-கண்ணி ஞாயிற்றை, மயக்கம் தீர்க்கு(ம்) மருந்தினை,
அதிகை மூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை,
விதியைப், புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை,
நெதியை, ஞானக்-கொழுந்தினை நினைந்தேற்கு உள்ள(ம்) நிறைந்ததே.
பாடல் எண் : 4
புறம்பயத்து எம் முத்தினைப், புகலூர் இலங்கு பொன்னினை,
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்,
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை,
அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான்-ஏற்றை அடைந்தேனே.
பாடல் எண் : 5
கோலக்காவில் குருமணியைக், குடமூக்கு உறையும் விடம்-உணியை,
ஆலங்காட்டில் அம்-தேனை, அமரர் சென்னி ஆய்-மலரைப்,
பாலில் திகழும் பைங்கனியைப், பராய்த்துறை எம் பசும்பொன்னைச்,
சூலத்தானைத், துணையிலியைத், தோளைக் குளிரத் தொழுதேனே.
பாடல் எண் : 6
மருகல் உறை-மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையைக்,
கருகாவூரில் கற்பகத்தைக், காண்டற்கு அரிய கதிர்-ஒளியைப்,
பெருவேளூர் எம் பிறப்பிலியைப், பேணுவார்கள் பிரிவு-அரிய
திருவாஞ்சியத்து எம் செல்வனைச், சிந்தையுள்ளே வைத்தேனே.
பாடல் எண் : 7
எழில் ஆர் இராச-சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில்-ஏற்றைக்,
குழல் ஆர் கோதை வரை-மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை,
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த-மணாளனை,
அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.
பாடல் எண் : 8
மாலைத் தோன்றும் வளர்-மதியை, மறைக்காட்டு உறையு(ம்) மணாளனை,
ஆலைக்-கரும்பின் இன்-சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலைச்,
சோலைத் துருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை,
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.
பாடல் எண் : 9
சோற்றுத்துறை எம் சோதியைத், துருத்தி மேய தூ-மணியை,
ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை,
நீற்றில் பொலிந்த நிமிர்-திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத்,
தோற்றக்-கடலை, அடல்-ஏற்றைத், தோளைக் குளிரத் தொழுதேனே.
பாடல் எண் : 10
புத்தூர் உறையும் புனிதனைப், பூவணத்து எம் போர்-ஏற்றை,
வித்தாய் மிழலை முளைத்தானை, வேள்விக்குடி எம் வேதியனைப்,
பொய்த்தார் புர(ம்)மூன்று எரித்தானைப், பொதியில் மேய புராணனை,
வைத்தேன் என்றன் மனத்துள்ளே, மாத்தூர் மேய மருந்தையே.
பாடல் எண் : 11
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள்ளேறு ஊர்ந்தானை,
அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானைச்,
சிந்தை வெள்ளப்-புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்-எம்மான் என்பார் பாவ(ம்) நாசமே.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar reaches thiruppugalUr and many padhigams
periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 413
poygai sūḻ pūmbugalūrp punidar malarttāḷ vaṇaṅgi,
naiyu(m) manap-*parivinoḍu(m) nāḷdōṟum tirumuṇḍril
kai-kalanda tiruttoṇḍu seydu peruṅgādaluḍan
vaigu(m) nāḷ eṇ-iṟanda vaṇ-tamiḻmālaigaḷ moḻivār;
(* In dharmapuram edition: parivōḍu)
periyapurāṇam - tirunāvukkarasar purāṇam - 415
āruyirin tiruviruttam tasapurāṇattu-aḍaivum
pār paravum pāvanāsap-padigam panmuṟaiyum
nērbaḍa-niṇḍru aṟaikūvum tiruppadiga(m) mudal piṟavum
pēraruḷin kaḍal aḷikkum perumānaip pāḍinār.
tirunāvukkarasar tēvāram - 4.15 - podu - (paḻambañjuram)
(aṟusīr viruttam - mā mā kāy - half line meter)
pāḍal eṇ : 1
paṭru-aṭrār sēr paḻambadiyaip, pāsūr nilāya pavaḷattaic,
ciṭrambalattu em tigaḻ-kaniyait, tīṇḍaṟku ariya tiruvuruvai,
veṭriyūril virisuḍarai, vimalar-kōnait, tirai sūḻnda
oṭriyūr em uttamanai, uḷḷattuḷḷē vaittēnē.
pāḍal eṇ : 2
ānaikkāvil * aṇaṅginai, ārūr nilāya ammānaik,
kānappērūrk kaṭṭiyaik, kānūr muḷaitta karumbinai,
vānap pērār vandu ēttum vāymūr vāḻum valamburiyai,
mānak kayilai maḻakaḷiṭrai madiyaic cuḍarai maṟavēnē.
(* Should it be - ānaikkāvil aṇaṅganai?)
pāḍal eṇ : 3
madiyam-kaṇṇi ñāyiṭrai, mayakkam tīrkku(m) marundinai,
adigai mūdūr arasinai, aiyāṟu amarnda aiyanai,
vidiyaip, pugaḻai, vānōrgaḷ vēṇḍit tēḍum viḷakkinai,
nediyai, ñānak-koḻundinai ninaindēṟku uḷḷa(m) niṟaindadē.
pāḍal eṇ : 4
puṟambayattu em muttinaip, pugalūr ilaṅgu ponninai,
uṟandai ōṅgu sirāppaḷḷi ulagam viḷakku ñāyiṭraik,
kaṟaṅgum aruvik kaḻukkuṇḍril kāṇbār kāṇum kaṇṇānai,
aṟam sūḻ adigai vīraṭṭattu arimān-ēṭrai aḍaindēnē.
pāḍal eṇ : 5
kōlakkāvil gurumaṇiyaik, kuḍamūkku uṟaiyum viḍam-uṇiyai,
ālaṅgāṭṭil am-tēnai, amarar senni āy-malaraip,
pālil tigaḻum paiṅganiyaip, parāyttuṟai em pasumbonnaic,
cūlattānait, tuṇaiyiliyait, tōḷaik kuḷirat toḻudēnē.
pāḍal eṇ : 6
marugal uṟai-māṇikkattai, valañjuḻi(y)yin mālaiyaik,
karugāvūril kaṟpagattaik, kāṇḍaṟku ariya kadir-oḷiyaip,
peruvēḷūr em piṟappiliyaip, pēṇuvārgaḷ pirivu-ariya
tiruvāñjiyattu em selvanaic, cindaiyuḷḷē vaittēnē.
pāḍal eṇ : 7
eḻil ār irāsa-siṅgattai, irāmēccurattu em eḻil-ēṭraik,
kuḻal ār kōdai varai-mārbil kuṭrālattu em kūttanai,
niḻal ār sōlai neḍuṅgaḷattu nilāya nitta-maṇāḷanai,
aḻal ār vaṇṇattu ammānai, anbil aṇaittu vaittēnē.
pāḍal eṇ : 8
mālait tōṇḍrum vaḷar-madiyai, maṟaikkāṭṭu uṟaiyu(m) maṇāḷanai,
ālaik-karumbin in-sāṭrai, aṇṇāmalai em aṇṇalaic,
cōlait turuttinagar mēya suḍaril tigaḻum tuḷakkiliyai,
mēlai vānōr perumānai, viruppāl viḻuṅgiyiṭṭēnē.
pāḍal eṇ : 9
sōṭruttuṟai em sōdiyait, turutti mēya tū-maṇiyai,
āṭril paḻanattu ammānai, ālavāy em arumaṇiyai,
nīṭril polinda nimir-tiṇdōḷ neyttānattu em nilāccuḍarait,
tōṭrak-kaḍalai, aḍal-ēṭrait, tōḷaik kuḷirat toḻudēnē.
pāḍal eṇ : 10
puttūr uṟaiyum punidanaip, pūvaṇattu em pōr-ēṭrai,
vittāy miḻalai muḷaittānai, vēḷvikkuḍi em vēdiyanaip,
poyttār pura(m)mūṇḍru erittānaip, podiyil mēya purāṇanai,
vaittēn eṇḍran manattuḷḷē, māttūr mēya marundaiyē.
pāḍal eṇ : 11
mundit tānē muḷaittānai, mūri veḷḷēṟu ūrndānai,
andic cevvān paḍiyānai, arakkan āṭral aḻittānaic,
cindai veḷḷap-punal āṭṭic ceñjol mālai aḍiccērtti
endai pemmān en-emmān enbār pāva(m) nāsamē.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar reaches thiruppugalUr and many padhigams
पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 413
पॊय्गै सूऴ् पूम्बुगलूर्प् पुनिदर् मलर्त्ताळ् वणङ्गि,
नैयु(म्) मनप्-*परिविनॊडु(म्) नाळ्दोऱुम् तिरुमुण्ड्रिल्
कै-कलन्द तिरुत्तॊण्डु सॆय्दु पॆरुङ्गादलुडन्
वैगु(म्) नाळ् ऎण्-इऱन्द वण्-तमिऴ्मालैगळ् मॊऴिवार्;
(* In dharmapuram edition: परिवोडु)
पॆरियपुराणम् - तिरुनावुक्करसर् पुराणम् - 415
आरुयिरिन् तिरुविरुत्तम् तसपुराणत्तु-अडैवुम्
पार् परवुम् पावनासप्-पदिगम् पन्मुऱैयुम्
नेर्बड-निण्ड्रु अऱैकूवुम् तिरुप्पदिग(म्) मुदल् पिऱवुम्
पेररुळिन् कडल् अळिक्कुम् पॆरुमानैप् पाडिनार्.
तिरुनावुक्करसर् तेवारम् - 4.15 - पॊदु - (पऴम्बञ्जुरम्)
(अऱुसीर् विरुत्तम् - मा मा काय् - half line meter)
पाडल् ऎण् : 1
पट्रु-अट्रार् सेर् पऴम्बदियैप्, पासूर् निलाय पवळत्तैच्,
चिट्रम्बलत्तु ऎम् तिगऴ्-कनियैत्, तीण्डऱ्कु अरिय तिरुवुरुवै,
वॆट्रियूरिल् विरिसुडरै, विमलर्-कोनैत्, तिरै सूऴ्न्द
ऒट्रियूर् ऎम् उत्तमनै, उळ्ळत्तुळ्ळे वैत्तेने.
पाडल् ऎण् : 2
आनैक्काविल् * अणङ्गिनै, आरूर् निलाय अम्मानैक्,
कानप्पेरूर्क् कट्टियैक्, कानूर् मुळैत्त करुम्बिनै,
वानप् पेरार् वन्दु एत्तुम् वाय्मूर् वाऴुम् वलम्बुरियै,
मानक् कयिलै मऴकळिट्रै मदियैच् चुडरै मऱवेने.
(* Should it be - आनैक्काविल् अणङ्गनै?)
पाडल् ऎण् : 3
मदियम्-कण्णि ञायिट्रै, मयक्कम् तीर्क्कु(म्) मरुन्दिनै,
अदिगै मूदूर् अरसिनै, ऐयाऱु अमर्न्द ऐयनै,
विदियैप्, पुगऴै, वानोर्गळ् वेण्डित् तेडुम् विळक्किनै,
नॆदियै, ञानक्-कॊऴुन्दिनै निनैन्देऱ्कु उळ्ळ(म्) निऱैन्ददे.
पाडल् ऎण् : 4
पुऱम्बयत्तु ऎम् मुत्तिनैप्, पुगलूर् इलङ्गु पॊन्निनै,
उऱन्दै ओङ्गु सिराप्पळ्ळि उलगम् विळक्कु ञायिट्रैक्,
कऱङ्गुम् अरुविक् कऴुक्कुण्ड्रिल् काण्बार् काणुम् कण्णानै,
अऱम् सूऴ् अदिगै वीरट्टत्तु अरिमान्-एट्रै अडैन्देने.
पाडल् ऎण् : 5
कोलक्काविल् गुरुमणियैक्, कुडमूक्कु उऱैयुम् विडम्-उणियै,
आलङ्गाट्टिल् अम्-तेनै, अमरर् सॆन्नि आय्-मलरैप्,
पालिल् तिगऴुम् पैङ्गनियैप्, पराय्त्तुऱै ऎम् पसुम्बॊन्नैच्,
चूलत्तानैत्, तुणैयिलियैत्, तोळैक् कुळिरत् तॊऴुदेने.
पाडल् ऎण् : 6
मरुगल् उऱै-माणिक्कत्तै, वलञ्जुऴि(य्)यिन् मालैयैक्,
करुगावूरिल् कऱ्पगत्तैक्, काण्डऱ्कु अरिय कदिर्-ऒळियैप्,
पॆरुवेळूर् ऎम् पिऱप्पिलियैप्, पेणुवार्गळ् पिरिवु-अरिय
तिरुवाञ्जियत्तु ऎम् सॆल्वनैच्, चिन्दैयुळ्ळे वैत्तेने.
पाडल् ऎण् : 7
ऎऴिल् आर् इरास-सिङ्गत्तै, इरामेच्चुरत्तु ऎम् ऎऴिल्-एट्रैक्,
कुऴल् आर् कोदै वरै-मार्बिल् कुट्रालत्तु ऎम् कूत्तनै,
निऴल् आर् सोलै नॆडुङ्गळत्तु निलाय नित्त-मणाळनै,
अऴल् आर् वण्णत्तु अम्मानै, अन्बिल् अणैत्तु वैत्तेने.
पाडल् ऎण् : 8
मालैत् तोण्ड्रुम् वळर्-मदियै, मऱैक्काट्टु उऱैयु(म्) मणाळनै,
आलैक्-करुम्बिन् इन्-साट्रै, अण्णामलै ऎम् अण्णलैच्,
चोलैत् तुरुत्तिनगर् मेय सुडरिल् तिगऴुम् तुळक्किलियै,
मेलै वानोर् पॆरुमानै, विरुप्पाल् विऴुङ्गियिट्टेने.
पाडल् ऎण् : 9
सोट्रुत्तुऱै ऎम् सोदियैत्, तुरुत्ति मेय तू-मणियै,
आट्रिल् पऴनत्तु अम्मानै, आलवाय् ऎम् अरुमणियै,
नीट्रिल् पॊलिन्द निमिर्-तिण्दोळ् नॆय्त्तानत्तु ऎम् निलाच्चुडरैत्,
तोट्रक्-कडलै, अडल्-एट्रैत्, तोळैक् कुळिरत् तॊऴुदेने.
पाडल् ऎण् : 10
पुत्तूर् उऱैयुम् पुनिदनैप्, पूवणत्तु ऎम् पोर्-एट्रै,
वित्ताय् मिऴलै मुळैत्तानै, वेळ्विक्कुडि ऎम् वेदियनैप्,
पॊय्त्तार् पुर(म्)मूण्ड्रु ऎरित्तानैप्, पॊदियिल् मेय पुराणनै,
वैत्तेन् ऎण्ड्रन् मनत्तुळ्ळे, मात्तूर् मेय मरुन्दैये.
पाडल् ऎण् : 11
मुन्दित् ताने मुळैत्तानै, मूरि वॆळ्ळेऱु ऊर्न्दानै,
अन्दिच् चॆव्वान् पडियानै, अरक्कन् आट्रल् अऴित्तानैच्,
चिन्दै वॆळ्ळप्-पुनल् आट्टिच् चॆञ्जॊल् मालै अडिच्चेर्त्ति
ऎन्दै पॆम्मान् ऎन्-ऎम्मान् ऎन्बार् पाव(म्) नासमे.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar reaches thiruppugalUr and many padhigams
పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 413
పొయ్గై సూఴ్ పూంబుగలూర్ప్ పునిదర్ మలర్త్తాళ్ వణంగి,
నైయు(మ్) మనప్-*పరివినొడు(మ్) నాళ్దోఱుం తిరుముండ్రిల్
కై-కలంద తిరుత్తొండు సెయ్దు పెరుంగాదలుడన్
వైగు(మ్) నాళ్ ఎణ్-ఇఱంద వణ్-తమిఴ్మాలైగళ్ మొఴివార్;
(* In dharmapuram edition: పరివోడు)
పెరియపురాణం - తిరునావుక్కరసర్ పురాణం - 415
ఆరుయిరిన్ తిరువిరుత్తం తసపురాణత్తు-అడైవుం
పార్ పరవుం పావనాసప్-పదిగం పన్ముఱైయుం
నేర్బడ-నిండ్రు అఱైకూవుం తిరుప్పదిగ(మ్) ముదల్ పిఱవుం
పేరరుళిన్ కడల్ అళిక్కుం పెరుమానైప్ పాడినార్.
తిరునావుక్కరసర్ తేవారం - 4.15 - పొదు - (పఴంబంజురం)
(అఱుసీర్ విరుత్తం - మా మా కాయ్ - half line meter)
పాడల్ ఎణ్ : 1
పట్రు-అట్రార్ సేర్ పఴంబదియైప్, పాసూర్ నిలాయ పవళత్తైచ్,
చిట్రంబలత్తు ఎం తిగఴ్-కనియైత్, తీండఱ్కు అరియ తిరువురువై,
వెట్రియూరిల్ విరిసుడరై, విమలర్-కోనైత్, తిరై సూఴ్న్ద
ఒట్రియూర్ ఎం ఉత్తమనై, ఉళ్ళత్తుళ్ళే వైత్తేనే.
పాడల్ ఎణ్ : 2
ఆనైక్కావిల్ * అణంగినై, ఆరూర్ నిలాయ అమ్మానైక్,
కానప్పేరూర్క్ కట్టియైక్, కానూర్ ముళైత్త కరుంబినై,
వానప్ పేరార్ వందు ఏత్తుం వాయ్మూర్ వాఴుం వలంబురియై,
మానక్ కయిలై మఴకళిట్రై మదియైచ్ చుడరై మఱవేనే.
(* Should it be - ఆనైక్కావిల్ అణంగనై?)
పాడల్ ఎణ్ : 3
మదియం-కణ్ణి ఞాయిట్రై, మయక్కం తీర్క్కు(మ్) మరుందినై,
అదిగై మూదూర్ అరసినై, ఐయాఱు అమర్న్ద ఐయనై,
విదియైప్, పుగఴై, వానోర్గళ్ వేండిత్ తేడుం విళక్కినై,
నెదియై, ఞానక్-కొఴుందినై నినైందేఱ్కు ఉళ్ళ(మ్) నిఱైందదే.
పాడల్ ఎణ్ : 4
పుఱంబయత్తు ఎం ముత్తినైప్, పుగలూర్ ఇలంగు పొన్నినై,
ఉఱందై ఓంగు సిరాప్పళ్ళి ఉలగం విళక్కు ఞాయిట్రైక్,
కఱంగుం అరువిక్ కఴుక్కుండ్రిల్ కాణ్బార్ కాణుం కణ్ణానై,
అఱం సూఴ్ అదిగై వీరట్టత్తు అరిమాన్-ఏట్రై అడైందేనే.
పాడల్ ఎణ్ : 5
కోలక్కావిల్ గురుమణియైక్, కుడమూక్కు ఉఱైయుం విడం-ఉణియై,
ఆలంగాట్టిల్ అం-తేనై, అమరర్ సెన్ని ఆయ్-మలరైప్,
పాలిల్ తిగఴుం పైంగనియైప్, పరాయ్త్తుఱై ఎం పసుంబొన్నైచ్,
చూలత్తానైత్, తుణైయిలియైత్, తోళైక్ కుళిరత్ తొఴుదేనే.
పాడల్ ఎణ్ : 6
మరుగల్ ఉఱై-మాణిక్కత్తై, వలంజుఴి(య్)యిన్ మాలైయైక్,
కరుగావూరిల్ కఱ్పగత్తైక్, కాండఱ్కు అరియ కదిర్-ఒళియైప్,
పెరువేళూర్ ఎం పిఱప్పిలియైప్, పేణువార్గళ్ పిరివు-అరియ
తిరువాంజియత్తు ఎం సెల్వనైచ్, చిందైయుళ్ళే వైత్తేనే.
పాడల్ ఎణ్ : 7
ఎఴిల్ ఆర్ ఇరాస-సింగత్తై, ఇరామేచ్చురత్తు ఎం ఎఴిల్-ఏట్రైక్,
కుఴల్ ఆర్ కోదై వరై-మార్బిల్ కుట్రాలత్తు ఎం కూత్తనై,
నిఴల్ ఆర్ సోలై నెడుంగళత్తు నిలాయ నిత్త-మణాళనై,
అఴల్ ఆర్ వణ్ణత్తు అమ్మానై, అన్బిల్ అణైత్తు వైత్తేనే.
పాడల్ ఎణ్ : 8
మాలైత్ తోండ్రుం వళర్-మదియై, మఱైక్కాట్టు ఉఱైయు(మ్) మణాళనై,
ఆలైక్-కరుంబిన్ ఇన్-సాట్రై, అణ్ణామలై ఎం అణ్ణలైచ్,
చోలైత్ తురుత్తినగర్ మేయ సుడరిల్ తిగఴుం తుళక్కిలియై,
మేలై వానోర్ పెరుమానై, విరుప్పాల్ విఴుంగియిట్టేనే.
పాడల్ ఎణ్ : 9
సోట్రుత్తుఱై ఎం సోదియైత్, తురుత్తి మేయ తూ-మణియై,
ఆట్రిల్ పఴనత్తు అమ్మానై, ఆలవాయ్ ఎం అరుమణియై,
నీట్రిల్ పొలింద నిమిర్-తిణ్దోళ్ నెయ్త్తానత్తు ఎం నిలాచ్చుడరైత్,
తోట్రక్-కడలై, అడల్-ఏట్రైత్, తోళైక్ కుళిరత్ తొఴుదేనే.
పాడల్ ఎణ్ : 10
పుత్తూర్ ఉఱైయుం పునిదనైప్, పూవణత్తు ఎం పోర్-ఏట్రై,
విత్తాయ్ మిఴలై ముళైత్తానై, వేళ్విక్కుడి ఎం వేదియనైప్,
పొయ్త్తార్ పుర(మ్)మూండ్రు ఎరిత్తానైప్, పొదియిల్ మేయ పురాణనై,
వైత్తేన్ ఎండ్రన్ మనత్తుళ్ళే, మాత్తూర్ మేయ మరుందైయే.
పాడల్ ఎణ్ : 11
ముందిత్ తానే ముళైత్తానై, మూరి వెళ్ళేఱు ఊర్న్దానై,
అందిచ్ చెవ్వాన్ పడియానై, అరక్కన్ ఆట్రల్ అఴిత్తానైచ్,
చిందై వెళ్ళప్-పునల్ ఆట్టిచ్ చెంజొల్ మాలై అడిచ్చేర్త్తి
ఎందై పెమ్మాన్ ఎన్-ఎమ్మాన్ ఎన్బార్ పావ(మ్) నాసమే.
=============================
No comments:
Post a Comment