18) padhigam 1.74 - திருப்புறவம் ( சீகாழி )
Verses - PDF: 1.74 - நறவம் நிறை வண்டு - naṟavam niṟai vaṇḍu
********
YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/uzbEBw_8lrs
Part-2: https://youtu.be/XNq6lvLW48M
For English translation of this padhigam - 1.74 - naRavam niRai vaNdu - by V. M. Subramanya Ayyar - at IFP site: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_074.HTM
சீகாழி (சீர்காழி) (புறவம்) - Sirkazhi temple - பிரம்மபுரீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495
V. Subramanian
==================== ===============
Verses in original Tamil version & word separated Tamil / English / Devanagari / Telugu scripts
பதிகம் 1.74 - திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )
Background:
"நறவம் நிறை வண்டறை தார்" என்ற பதிகம் ஞானசம்பந்தர் தோடுடைய செவியன் பாடியபிறகு உடன் கோயிலினுட் சென்று உமாமகேசுரரைத் தரிசித்துப் பாடியது. இரண்டாம் பதிகம் "மடையில் வாளை" என்பதாகவே கற்றோரும் மற்றோரும் எண்ணி வருகின்றனர். இது பொருந்தாது என்பதைப் பின்வரும் சேக்கிழார் வாக்கால் தெளியலாம்.
'அண்ண லணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலி னுட்புக்கார்'
'பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி
தங்கி யிருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யான்உமை யோடும் இருந்தான்என்று
அங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்'
இப்பதிகத்துள் பாடல் தோறும் 'இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே' என்பதால் இதுவே இரண்டாம் பதிகம் என்பதைச் சி.கே. சுப்பிரமணிய முதலியார் தம் பெரியபுராண உரைப்பேருரைக் குறிப்பில் அறிவித்துள்ளார். இஃது இத்துறையில் உள்ளார்க்கும் பெருவிருந்தாம்.
--------
#1986 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 88
பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி
தங்கியி ருந்தபெ ருந்திரு வாழ்வு தலைப்பட்டே
"யிங்கெனை யாளுடை யானுமை யோடு மிருந்தா"னென்
றங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்.
--------------
பதிகம் 1.74 - திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )
நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தாற்
சுறவஞ் செறிவண் கொடியோ னுடலம் பொடியா விழிசெய்தான்
புறவ முறைவண் பதியா மதியார் புரமூன் றெரிசெய்த
இறைவன் அறவ னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
பாடல் எண் : 2
உரவன் புலியி னுரிதோ லாடை யுடைமேற் படநாகம்
விரவி விரிபூங் கச்சா வசைத்த விகிர்த னுகிர்தன்னாற்
பொருவெங் களிறு பிளிற வுரித்துப் புறவம் பதியாக
இரவும் பகலு மிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
பந்த முடைய பூதம் பாடப் பாதஞ் சிலம்பார்க்கக்
கந்த மல்கு குழலி காணக் கரிகாட் டெரியாடி
அந்தண் கடல்சூழ்ந் தழகார் புறவம் பதியா வமர்வெய்தி
எந்தம் பெருமா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
நினைவார் நினைய வினியான் பனியார் மலர்தூய் நித்தலுங்
கனையார் விடையொன் றுடையான் கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனைவார் சடையின் முடியான் கடல்சூழ் புறவம் பதியாக
எனையா ளுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
செங்க ணரவு நகுவெண் டலையு முகிழ்வெண் டிங்களுந்
தங்கு சடையன் விடைய னுடையன் சரிகோ வணவாடை
பொங்கு திரைவண் கடல்சூழ்ந் தழகார் புறவம் பதியாக
எங்கும் பரவி யிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
பின்னு சடைகள் தாழக் கேழ லெயிறு பிறழப்போய்
அன்ன நடையார் மனைக டோறு மழகார் பலிதேர்ந்து
புன்னை மடலின் பொழில்சூழ்ந் தழகார் புறவம் பதியாக
என்னை யுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
உண்ணற் கரிய நஞ்சை யுண் டொருதோ ழந்தேவர்
விண்ணிற் பொலிய வமுத மளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற் சிறைவண் டறைபூஞ் சோலைப் புறவம் பதியாக
எண்ணிற் சிறந்த விமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
விண்டா னதிர வியனார் கயிலை வேரோ டெடுத்தான்றன்
றிண்டோ ளுடலு முடியு நெரியச் சிறிதே யூன்றிய
புண்டா னொழிய வருள்செய் பெருமான் புறவம் பதியாக
எண்டோ ளுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
நெடியா னீடா மரைமே லயனும் நேடிக் காண்கில்லாப்
படியா மேனி யுடையான் பவள வரைபோற் றிருமார்பிற்
பொடியார் கோல முடையான் கடல்சூழ் புறவம் பதியாக
இடியார் முழவா ரிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
ஆலும் மயிலின் பீலி யமண ரறிவில் சிறுதேரர்
கோலும் மொழிக ளொழியக் குழுவுந் தழலு மெழில்வானும்
போலும் வடிவு முடையான் கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும் வகையா லிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.
பாடல் எண் : 11
பொன்னார் மாட நீடுஞ் செல்வப் புறவம் பதியாக
மின்னா ரிடையா ளுமையா ளோடு மிருந்த விமலனைத்
தன்னார் வஞ்செய் தமிழின் விரக னுரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடி யாடப் பிரியார் பரலோ கந்தானே.
============================= ============================
Word separated version:
#1986 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 88
பொங்கு ஒளி மால்-விடை மீது புகுந்து அணி பொற்றோணி
தங்கியிருந்த பெரும்-திரு வாழ்வு தலைப்பட்டே
"இங்கு எனை ஆள் உடையான் உமையோடும் இருந்தான்" என்று
அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.
--------------
பதிகம் 1.74 - திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )
நறவம் நிறை வண்டு அறை தார்க்-கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழி-செய்தான்,
புறவம் உறை வண் பதியா, மதியார் புரம் மூன்று எரி-செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
பாடல் எண் : 2
உரவன் புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட-நாகம்
விரவி விரி-பூங்கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால்
பொரு-வெங்களிறு பிளிற உரித்துப், புறவம் பதியாக,
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
பந்தம் உடைய பூதம் பாடப், பாதம் சிலம்பு ஆர்க்கக்,
கந்தம் மல்கு குழலி காணக், கரிகாட்டு எரி-ஆடி
அந்தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி
எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
நினைவார் நினைய இனியான், பனி-ஆர் மலர் தூய் நித்தலும்;
கனை-ஆர் விடை-ஒன்று உடையான்; கங்கை திங்கள் கமழ்-கொன்றை
புனை வார்-சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதியாக
எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
செங்கண் அரவும், நகு-வெண்-தலையும், முகிழ்-வெண்-திங்களும்
தங்கு சடையன்; விடையன்; உடையன் சரி-கோவண-ஆடை;
பொங்கு-திரை வண்-கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியாக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
பின்னு சடைகள் தாழக், கேழல்-எயிறு பிறழப், போய்
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி-தேர்ந்து,
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியாக,
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த, விடை-சேர்-கொடி அண்ணல்;
பண்ணில் சிறை-வண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதியாக,
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான்-தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்-செய் பெருமான், புறவம் பதியாக,
எண்தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
நெடியான் நீள்-தாமரைமேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படியா மேனி உடையான்; பவள வரை-போல் திரு-மார்பில்
பொடி-ஆர் கோலம் உடையான்; கடல் சூழ் புறவம் பதியாக,
இடி-ஆர் முழவு ஆர், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு-இல் சிறு-தேரர்
கோலும் மொழிகள் ஒழியக், குழுவும் தழலும் எழில்-வானும்
போலும் வடிவும் உடையான்; கடல் சூழ் புறவம் பதியாக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.
பாடல் எண் : 11
பொன்-ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதியாக
மின்-ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனைத்
தன்-ஆர்வம்-செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்-மாலை
பன்-நாள் பாடி ஆடப் பிரியார் பரலோகம்-தானே.
================== ==========================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
--------------
#1986 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 88
poṅgu oḷi māl-viḍai mīdu pugundu aṇi poṭrōṇi
taṅgiyirunda perum-tiru vāḻvu talaippaṭṭē
"iṅgu enai āḷ uḍaiyān umaiyōḍum irundān" eṇḍru
aṅgu edir niṇḍru pugaṇḍranar ñānattu amudu uṇḍār.
--------------
padigam 1.74 - tiruppuṟavam ( sīgāḻi ) ( paṇ : takkēsi )
pāḍal eṇ : 1
naṟavam niṟai vaṇḍu aṟai tārk-koṇḍrai nayandu, nayanattāl
suṟavam seṟi vaṇ koḍiyōn uḍalam poḍiyā viḻi-seydān,
puṟavam uṟai vaṇ padiyā, madiyār puram mūṇḍru eri-seyda
iṟaivan, aṟavan, imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 2
uravan puliyin uri-tōl āḍai uḍaimēl paḍa-nāgam
viravi viri-pūṅgaccā asaitta vigirdan ugir-tannāl
poru-veṅgaḷiṟu piḷiṟa urittup, puṟavam padiyāga,
iravum pagalum imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 3
pandam uḍaiya būdam pāḍap, pādam silambu ārkkak,
gandam malgu kuḻali kāṇak, karigāṭṭu eri-āḍi
andaṇ kaḍal sūḻndu aḻagu ār puṟavam padiyā amarvu eydi
endam perumān imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 4
ninaivār ninaiya iniyān, pani-ār malar tūy nittalum;
kanai-ār viḍai-oṇḍru uḍaiyān; gaṅgai tiṅgaḷ kamaḻ-koṇḍrai
punai vār-saḍaiyin muḍiyān; kaḍal sūḻ puṟavam padiyāga
enai āḷ uḍaiyān imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 5
seṅgaṇ aravum, nagu-veṇ-talaiyum, mugiḻ-veṇ-tiṅgaḷum
taṅgu saḍaiyan; viḍaiyan; uḍaiyan sari-kōvaṇa-āḍai;
poṅgu-tirai vaṇ-kaḍal sūḻndu aḻagu ār puṟavam padiyāga,
eṅgum paravi imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 6
pinnu saḍaigaḷ tāḻak, kēḻal-eyiṟu piṟaḻap, pōy
anna naḍaiyār manaigaḷ tōṟum aḻagu ār pali-tērndu,
punnai maḍalin poḻil sūḻndu aḻagu ār puṟavam padiyāga,
ennai uḍaiyān imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 7
uṇṇaṟku ariya nañjai uṇḍu, oru tōḻam dēvar
viṇṇil poliya amudam aḷitta, viḍai-sēr-koḍi aṇṇal;
paṇṇil siṟai-vaṇḍu aṟai pūñjōlaip puṟavam padiyāga,
eṇṇil siṟanda imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 8
viṇdān adira viyan ār kayilai vērōḍu eḍuttān-tan
tiṇdōḷ uḍalum muḍiyum neriyac ciṟidē ūṇḍriya
puṇdān oḻiya aruḷ-sey perumān, puṟavam padiyāga,
eṇdōḷ uḍaiyān imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 9
neḍiyān nīḷ-tāmaraimēl ayanum nēḍik kāṇgillāp
paḍiyā mēni uḍaiyān; pavaḷa varai-pōl tiru-mārbil
poḍi-ār kōlam uḍaiyān; kaḍal sūḻ puṟavam padiyāga,
iḍi-ār muḻavu ār, imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 10
ālum mayilin pīli amaṇar, aṟivu-il siṟu-tērar
kōlum moḻigaḷ oḻiyak, kuḻuvum taḻalum eḻil-vānum
pōlum vaḍivum uḍaiyān; kaḍal sūḻ puṟavam padiyāga,
ēlum vagaiyāl imaiyōr ētta umaiyōḍu irundānē.
pāḍal eṇ : 11
pon-ār māḍam nīḍum selvap puṟavam padiyāga
min-ār iḍaiyāḷ umaiyāḷōḍum irunda vimalanait
tan-ārvam-sey tamiḻin viragan uraitta tamiḻ-mālai
pan-nāḷ pāḍi āḍap piriyār paralōgam-tānē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
#1986 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 88
पॊङ्गु ऒळि माल्-विडै मीदु पुगुन्दु अणि पॊट्रोणि
तङ्गियिरुन्द पॆरुम्-तिरु वाऴ्वु तलैप्पट्टे
"इङ्गु ऎनै आळ् उडैयान् उमैयोडुम् इरुन्दान्" ऎण्ड्रु
अङ्गु ऎदिर् निण्ड्रु पुगण्ड्रनर् ञानत्तु अमुदु उण्डार्.
--------------
पदिगम् 1.74 - तिरुप्पुऱवम् ( सीगाऴि ) ( पण् : तक्केसि )
पाडल् ऎण् : 1
नऱवम् निऱै वण्डु अऱै तार्क्-कॊण्ड्रै नयन्दु, नयनत्ताल्
सुऱवम् सॆऱि वण् कॊडियोन् उडलम् पॊडिया विऴि-सॆय्दान्,
पुऱवम् उऱै वण् पदिया, मदियार् पुरम् मूण्ड्रु ऎरि-सॆय्द
इऱैवन्, अऱवन्, इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 2
उरवन् पुलियिन् उरि-तोल् आडै उडैमेल् पड-नागम्
विरवि विरि-पूङ्गच्चा असैत्त विगिर्दन् उगिर्-तन्नाल्
पॊरु-वॆङ्गळिऱु पिळिऱ उरित्तुप्, पुऱवम् पदियाग,
इरवुम् पगलुम् इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 3
पन्दम् उडैय बूदम् पाडप्, पादम् सिलम्बु आर्क्कक्,
गन्दम् मल्गु कुऴलि काणक्, करिगाट्टु ऎरि-आडि
अन्दण् कडल् सूऴ्न्दु अऴगु आर् पुऱवम् पदिया अमर्वु ऎय्दि
ऎन्दम् पॆरुमान् इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 4
निनैवार् निनैय इनियान्, पनि-आर् मलर् तूय् नित्तलुम्;
कनै-आर् विडै-ऒण्ड्रु उडैयान्; गङ्गै तिङ्गळ् कमऴ्-कॊण्ड्रै
पुनै वार्-सडैयिन् मुडियान्; कडल् सूऴ् पुऱवम् पदियाग
ऎनै आळ् उडैयान् इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 5
सॆङ्गण् अरवुम्, नगु-वॆण्-तलैयुम्, मुगिऴ्-वॆण्-तिङ्गळुम्
तङ्गु सडैयन्; विडैयन्; उडैयन् सरि-कोवण-आडै;
पॊङ्गु-तिरै वण्-कडल् सूऴ्न्दु अऴगु आर् पुऱवम् पदियाग,
ऎङ्गुम् परवि इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 6
पिन्नु सडैगळ् ताऴक्, केऴल्-ऎयिऱु पिऱऴप्, पोय्
अन्न नडैयार् मनैगळ् तोऱुम् अऴगु आर् पलि-तेर्न्दु,
पुन्नै मडलिन् पॊऴिल् सूऴ्न्दु अऴगु आर् पुऱवम् पदियाग,
ऎन्नै उडैयान् इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 7
उण्णऱ्कु अरिय नञ्जै उण्डु, ऒरु तोऴम् देवर्
विण्णिल् पॊलिय अमुदम् अळित्त, विडै-सेर्-कॊडि अण्णल्;
पण्णिल् सिऱै-वण्डु अऱै पूञ्जोलैप् पुऱवम् पदियाग,
ऎण्णिल् सिऱन्द इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 8
विण्दान् अदिर वियन् आर् कयिलै वेरोडु ऎडुत्तान्-तन्
तिण्दोळ् उडलुम् मुडियुम् नॆरियच् चिऱिदे ऊण्ड्रिय
पुण्दान् ऒऴिय अरुळ्-सॆय् पॆरुमान्, पुऱवम् पदियाग,
ऎण्दोळ् उडैयान् इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 9
नॆडियान् नीळ्-तामरैमेल् अयनुम् नेडिक् काण्गिल्लाप्
पडिया मेनि उडैयान्; पवळ वरै-पोल् तिरु-मार्बिल्
पॊडि-आर् कोलम् उडैयान्; कडल् सूऴ् पुऱवम् पदियाग,
इडि-आर् मुऴवु आर्, इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 10
आलुम् मयिलिन् पीलि अमणर्, अऱिवु-इल् सिऱु-तेरर्
कोलुम् मॊऴिगळ् ऒऴियक्, कुऴुवुम् तऴलुम् ऎऴिल्-वानुम्
पोलुम् वडिवुम् उडैयान्; कडल् सूऴ् पुऱवम् पदियाग,
एलुम् वगैयाल् इमैयोर् एत्त उमैयोडु इरुन्दाने.
पाडल् ऎण् : 11
पॊन्-आर् माडम् नीडुम् सॆल्वप् पुऱवम् पदियाग
मिन्-आर् इडैयाळ् उमैयाळोडुम् इरुन्द विमलनैत्
तन्-आर्वम्-सॆय् तमिऴिन् विरगन् उरैत्त तमिऴ्-मालै
पन्-नाळ् पाडि आडप् पिरियार् परलोगम्-ताने.
================== ==========================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
#1986 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 88
పొంగు ఒళి మాల్-విడై మీదు పుగుందు అణి పొట్రోణి
తంగియిరుంద పెరుం-తిరు వాఴ్వు తలైప్పట్టే
"ఇంగు ఎనై ఆళ్ ఉడైయాన్ ఉమైయోడుం ఇరుందాన్" ఎండ్రు
అంగు ఎదిర్ నిండ్రు పుగండ్రనర్ ఞానత్తు అముదు ఉండార్.
--------------
పదిగం 1.74 - తిరుప్పుఱవం ( సీగాఴి ) ( పణ్ : తక్కేసి )
పాడల్ ఎణ్ : 1
నఱవం నిఱై వండు అఱై తార్క్-కొండ్రై నయందు, నయనత్తాల్
సుఱవం సెఱి వణ్ కొడియోన్ ఉడలం పొడియా విఴి-సెయ్దాన్,
పుఱవం ఉఱై వణ్ పదియా, మదియార్ పురం మూండ్రు ఎరి-సెయ్ద
ఇఱైవన్, అఱవన్, ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 2
ఉరవన్ పులియిన్ ఉరి-తోల్ ఆడై ఉడైమేల్ పడ-నాగం
విరవి విరి-పూంగచ్చా అసైత్త విగిర్దన్ ఉగిర్-తన్నాల్
పొరు-వెంగళిఱు పిళిఱ ఉరిత్తుప్, పుఱవం పదియాగ,
ఇరవుం పగలుం ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 3
పందం ఉడైయ బూదం పాడప్, పాదం సిలంబు ఆర్క్కక్,
గందం మల్గు కుఴలి కాణక్, కరిగాట్టు ఎరి-ఆడి
అందణ్ కడల్ సూఴ్న్దు అఴగు ఆర్ పుఱవం పదియా అమర్వు ఎయ్ది
ఎందం పెరుమాన్ ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 4
నినైవార్ నినైయ ఇనియాన్, పని-ఆర్ మలర్ తూయ్ నిత్తలుం;
కనై-ఆర్ విడై-ఒండ్రు ఉడైయాన్; గంగై తింగళ్ కమఴ్-కొండ్రై
పునై వార్-సడైయిన్ ముడియాన్; కడల్ సూఴ్ పుఱవం పదియాగ
ఎనై ఆళ్ ఉడైయాన్ ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 5
సెంగణ్ అరవుం, నగు-వెణ్-తలైయుం, ముగిఴ్-వెణ్-తింగళుం
తంగు సడైయన్; విడైయన్; ఉడైయన్ సరి-కోవణ-ఆడై;
పొంగు-తిరై వణ్-కడల్ సూఴ్న్దు అఴగు ఆర్ పుఱవం పదియాగ,
ఎంగుం పరవి ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 6
పిన్ను సడైగళ్ తాఴక్, కేఴల్-ఎయిఱు పిఱఴప్, పోయ్
అన్న నడైయార్ మనైగళ్ తోఱుం అఴగు ఆర్ పలి-తేర్న్దు,
పున్నై మడలిన్ పొఴిల్ సూఴ్న్దు అఴగు ఆర్ పుఱవం పదియాగ,
ఎన్నై ఉడైయాన్ ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 7
ఉణ్ణఱ్కు అరియ నంజై ఉండు, ఒరు తోఴం దేవర్
విణ్ణిల్ పొలియ అముదం అళిత్త, విడై-సేర్-కొడి అణ్ణల్;
పణ్ణిల్ సిఱై-వండు అఱై పూంజోలైప్ పుఱవం పదియాగ,
ఎణ్ణిల్ సిఱంద ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 8
విణ్దాన్ అదిర వియన్ ఆర్ కయిలై వేరోడు ఎడుత్తాన్-తన్
తిణ్దోళ్ ఉడలుం ముడియుం నెరియచ్ చిఱిదే ఊండ్రియ
పుణ్దాన్ ఒఴియ అరుళ్-సెయ్ పెరుమాన్, పుఱవం పదియాగ,
ఎణ్దోళ్ ఉడైయాన్ ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 9
నెడియాన్ నీళ్-తామరైమేల్ అయనుం నేడిక్ కాణ్గిల్లాప్
పడియా మేని ఉడైయాన్; పవళ వరై-పోల్ తిరు-మార్బిల్
పొడి-ఆర్ కోలం ఉడైయాన్; కడల్ సూఴ్ పుఱవం పదియాగ,
ఇడి-ఆర్ ముఴవు ఆర్, ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 10
ఆలుం మయిలిన్ పీలి అమణర్, అఱివు-ఇల్ సిఱు-తేరర్
కోలుం మొఴిగళ్ ఒఴియక్, కుఴువుం తఴలుం ఎఴిల్-వానుం
పోలుం వడివుం ఉడైయాన్; కడల్ సూఴ్ పుఱవం పదియాగ,
ఏలుం వగైయాల్ ఇమైయోర్ ఏత్త ఉమైయోడు ఇరుందానే.
పాడల్ ఎణ్ : 11
పొన్-ఆర్ మాడం నీడుం సెల్వప్ పుఱవం పదియాగ
మిన్-ఆర్ ఇడైయాళ్ ఉమైయాళోడుం ఇరుంద విమలనైత్
తన్-ఆర్వం-సెయ్ తమిఴిన్ విరగన్ ఉరైత్త తమిఴ్-మాలై
పన్-నాళ్ పాడి ఆడప్ పిరియార్ పరలోగం-తానే.
================ ============
No comments:
Post a Comment