Thursday, December 29, 2016

8.21 - திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - tiruvāsagam - kōyil mūtta tiruppadigam

37) பதிகம் 8.21 - திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - tiruvāsagam - kōyil mūtta tiruppadigam

Here are the links to verses and audio of this padhigam's discussion:

8.21 - kOyil mUththa thiruppadhigam
On YouTube:
Tamil discussion: 
****
V. Subramanian

=======================
(Verses in original Tamil version & word separated Tamil / English scripts) - print only those pages you need)

திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 8.21
குறிப்பு: இப்பதிகம் அந்தாதியாக அமைந்துள்ளது.
--------------
பாடல் எண் : 1
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
..
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
..
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
..
ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
..
முடியும் வண்ணம் முன்னின்றே.

பாடல் எண் : 2
முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
..
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
..
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
..
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
..
பொன்னம் பலக்கூத் துகந்தானே.

பாடல் எண் : 3
உகந்தா னேஅன் புடைஅடிமைக்
..
குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
..
தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார்
..
வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன்
..
பொன்னம் பலத்தெம் முழுமுதலே.

பாடல் எண் : 4
முழுமுத லேஐம் புலனுக்கும்
..
மூவர்க்கும் என் றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள்
..
வான்குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
..
இரங்குங் கொல்லோஎன்
றழுமது வேயன்றி மற்றென்
..
செய்கேன் பொன்னம் பலத்தரைசே.


பாடல் எண் : 5
அரைசே பொன்னம் பலத்தாடும்
..
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
..
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
..
காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
..
பேசா திருந்தால் ஏசாரோ.

பாடல் எண் : 6
ஏசா நிற்பர் என்னைஉனக்
..
கடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
..
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந்
..
திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
..
எந்தாய் இனித்தான் இரங்காயே.

பாடல் எண் : 7
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்
..
என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
..
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
..
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
..
வாழ்வே வாவென் றருளாயே.

பாடல் எண் : 8
அருளா தொழிந்தால் அடியேனை
..
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
..
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
..
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
..
செத்தே போனாற் சிரியாரோ.

பாடல் எண் : 9
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
..
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
..
வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
..
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
..
நம்பி இனித்தான் நல்காயே.

பாடல் எண் : 10
நல்கா தொழியான் நமக்கென்றுன்
..
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
..
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
..
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
..
யருளாய் என்னை உடையானே.

============================= ============================

Word separated version:
--------------
திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 8.21
குறிப்பு: இப்பதிகம் அந்தாதியாக அமைந்துள்ளது.
--------------
பாடல் எண் : 1
உடையாள் உன்-தன் நடு இருக்கும்;
..
உடையாள் நடுவுள் நீ இருத்தி;
அடியேன் நடுவுள் இருவீரும்
..
இருப்பது ஆனால், அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்
..
புரியாய், பொன்னம்பலத்து எம்
முடியா முதலே, என் கருத்து
..
முடியும் வண்ணம் முன் நின்றே.

பாடல் எண் : 2
முன் நின்று ஆண்டாய் எனை முன்னம்;
..
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின் நின்று ஏவல் செய்கின்றேன்;
..
பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே;
என் இன்று அருளி வர நின்று
.. "
போந்திடு" என்னாவிடில், அடியார்
உன் நின்று "இவன் ஆர்" என்னாரோ,
..
பொன்னம்பலக் கூத்து உகந்தானே.

பாடல் எண் : 3
உகந்தானே அன்புடை அடிமைக்கு;
..
உருகா உள்ளத்து உணர்விலியேன்
சகம்தான் அறிய முறையிட்டால்
.. "
தக்கவாறு அன்று" என்னாரோ;
மகம்தான் செய்து வழிவந்தார்
..
வாழ வாழ்ந்தாய்; அடியேற்கு உன்
முகம்தான் தாராவிடில் முடிவேன்,
..
பொன்னம்பலத்து எம் முழுமுதலே.

பாடல் எண் : 4
முழுமுதலே; ஐம்புலனுக்கும்
..
மூவர்க்கும் என்-தனக்கும்
வழிமுதலே; நின் பழ அடியார் திரள்
..
வான் குழுமிக் **
கெழுமுதலே அருள் தந்திருக்க
..
இரங்கும் கொல்லோ என்று
அழும் அதுவே அன்றி மற்று என்
..
செய்கேன் பொன்னம்பலத்து அரைசே.
(** வான்குழுமிக் கெழுமுதலே = வான் குழுமிக் கெழுமுதலே / வான் குழு மிக்கு எழு முதலே)


பாடல் எண் : 5
"அரைசே! பொன்னம்பலத்து ஆடும்
..
அமுதே!" என்று உன் அருள் நோக்கி
இரை-தேர் கொக்கு ஒத்து இரவு-பகல்
..
ஏசற்று இருந்தே வேசற்றேன்;
கரை-சேர் அடியார் களி சிறப்பக்
..
காட்சி கொடுத்து உன் அடியேன்-பால்
பிரை-சேர் பாலின் நெய் போலப்
..
பேசாது இருந்தால் ஏசாரோ.

பாடல் எண் : 6
ஏசா நிற்பர் என்னை உனக்கு
..
அடியான் என்று பிறர்-எல்லாம்
பேசா நிற்பர்; யான்-தானும்
..
பேணா நிற்பேன் நின் அருளே;
தேசா; நேசர் சூழ்ந்திருக்கும்
..
திரு-ஓலக்கம் சேவிக்க,
ஈசா, பொன்னம்பலத்து ஆடும்
..
எந்தாய், இனித்தான் இரங்காயே.

பாடல் எண் : 7
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்
..
என்று-என்று ஏமாந்து இருப்பேனை
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய்;
..
ஆள்வார் இலி மாடு ஆவேனோ;
நெருங்கும் அடியார்களும் நீயும்
..
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர, எங்கள்
..
வாழ்வே, "வா" என்று அருளாயே.

பாடல் எண் : 8
அருளாது ஒழிந்தால், அடியேனை
.. "
அஞ்சேல்" என்பார் ஆர் இங்குப்,
பொருளா என்னைப் புகுந்து ஆண்ட
..
பொன்னே; பொன்னம்பலக் கூத்தா;
மருள் ஆர் மனத்தோடு உனைப் பிரிந்து
..
வருந்துவேனை "வா" என்று உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல்,
..
செத்தே போனால் சிரியாரோ.

பாடல் எண் : 9
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்;
..
திரண்டு திரண்டுன் திரு-வார்த்தை
விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்;
..
வெவ்வேறு இருந்துன் திரு-நாமம்
தரிப்பார்; "பொன்னம்பலத்து ஆடும்
..
தலைவா" என்பார்; அவர் முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ;
..
நம்பி, இனித்-தான் நல்காயே.

பாடல் எண் : 10
நல்காது ஒழியான் நமக்கு என்று உன்
..
நாமம் பிதற்றி, நயன-நீர்
மல்கா, வாழ்த்தா, வாய்-குழறா,
..
வணங்கா, மனத்தால் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்,
..
பரவிப், பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி
..
அருளாய், என்னை உடையானே.
================== ==========================

Word separated version:
--------------
tiruvāsagam - kōyil mūtta tiruppadigam - 8.21
Note: This padhigam has andādi construction.
--------------
pāḍal eṇ : 1
uḍaiyāḷ uṉ-taṉ naḍu irukkum;
.. uḍaiyāḷ naḍuvuḷ nī irutti;
aḍiyēṉ naḍuvuḷ iruvīrum
.. iruppadu āṉāl, aḍiyēṉ uṉ
aḍiyār naḍuvuḷ irukkum aruḷaip
.. puriyāy, poṉṉambalattu em
muḍiyā mudalē, eṉ karuttu
.. muḍiyum vaṇṇam muṉ niṇḍrē.

pāḍal eṇ : 2
muṉ niṇḍru āṇḍāy eṉai muṉṉam;
.. yāṉum aduvē muyalvuṭrup
piṉ niṇḍru ēval seygiṇḍrēṉ;
.. piṟpaṭṭu oḻindēṉ pemmāṉē;
eṉ iṇḍru aruḷi vara niṇḍru
.. "pōndiḍu" eṉṉāviḍil, aḍiyār
uṉ niṇḍru "ivaṉ ār" eṉṉārō,
.. poṉṉambalak kūttu ugandāṉē.

pāḍal eṇ : 3
ugandāṉē aṉbuḍai aḍimaikku;
.. urugā uḷḷattu uṇarviliyēṉ
sagamtāṉ aṟiya muṟaiyiṭṭāl
.. "takkavāṟu aṇḍru" eṉṉārō;
magamtāṉ seydu vaḻivandār
.. vāḻa vāḻndāy; aḍiyēṟku uṉ
mugamtāṉ tārāviḍil muḍivēṉ,
.. poṉṉambalattu em muḻumudalē.

pāḍal eṇ : 4
muḻumudalē; aimbulaṉukkum
.. mūvarkkum eṉ-taṉakkum
vaḻimudalē; niṉ paḻa aḍiyār tiraḷ
.. vāṉ kuḻumik **
keḻumudalē aruḷ tandirukka
.. iraṅgum kollō eṇḍru
aḻum aduvē aṇḍri maṭru eṉ
.. seygēṉ poṉṉambalattu araisē.
(** vāṉkuḻumik keḻumudalē = vāṉ kuḻumik keḻumudalē / vāṉ kuḻu mikku eḻu mudalē)

pāḍal eṇ : 5
"araisē! poṉṉambalattu āḍum
.. amudē!" eṇḍru uṉ aruḷ nōkki
irai-tēr kokku ottu iravu-pagal
.. ēsaṭru irundē vēsaṭrēṉ;
karai-sēr aḍiyār kaḷi siṟappak
.. kāṭci koḍuttu uṉ aḍiyēṉ-pāl
pirai-sēr pāliṉ ney pōlap
.. pēsādu irundāl ēsārō.

pāḍal eṇ : 6
ēsā niṟpar eṉṉai uṉakku
.. aḍiyāṉ eṇḍru piṟar-ellām
pēsā niṟpar; yāṉ-tāṉum
.. pēṇā niṟpēṉ niṉ aruḷē;
tēsā; nēsar sūḻndirukkum
.. tiru-ōlakkam sēvikka,
īsā, poṉṉambalattu āḍum
.. endāy, iṉittāṉ iraṅgāyē.

pāḍal eṇ : 7
iraṅgum namakku ambalak kūttaṉ
.. eṇḍru-eṇḍru ēmāndu iruppēṉai
arum kaṟpaṉai kaṟpittu āṇḍāy;
.. āḷvār ili māḍu āvēṉō;
neruṅgum aḍiyārgaḷum nīyum
.. niṇḍru nilāvi viḷaiyāḍum
maruṅgē sārndu vara, eṅgaḷ
.. vāḻvē, "vā" eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 8
aruḷādu oḻindāl, aḍiyēṉai
.. "añjēl" eṉbār ār iṅgup,
poruḷā eṉṉaip pugundu āṇḍa
.. poṉṉē; poṉṉambalak kūttā;
maruḷ ār maṉattōḍu uṉaip pirindu
.. varunduvēṉai "vā" eṇḍru uṉ
teruḷ ār kūṭṭam kāṭṭāyēl,
.. settē pōṉāl siriyārō.

pāḍal eṇ : 9
sirippār; kaḷippār; tēṉippār;
.. tiraṇḍu tiraṇḍu uṉ tiru-vārttai
virippār; kēṭpār; meccuvār;
.. vevvēṟu irundu uṉ tiru-nāmam
tarippār; "poṉṉambalattu āḍum
.. talaivā" eṉbār; avar muṉṉē
narippāy nāyēṉ iruppēṉō;
.. nambi, iṉit-tāṉ nalgāyē.

pāḍal eṇ : 10
nalgādu oḻiyāṉ namakku eṇḍru uṉ
.. nāmam pidaṭri, nayaṉa-nīr
malgā, vāḻttā, vāy-kuḻaṟā,
.. vaṇaṅgā, maṉattāl niṉaindu urugip
palgāl uṉṉaip pāvittup,
.. paravip, poṉṉambalam eṇḍrē
olgā niṟkum uyirkku iraṅgi
.. aruḷāy, eṉṉai uḍaiyāṉē.
================== ==========================


Tuesday, December 27, 2016

8.29 - திருவாசகம் - அருட்பத்து - thiruvAsagam - arutpaththu


36)
பதிகம் 8.29 - திருவாசகம் - அருட்பத்து - tiruvāsagam - aruṭpattu


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses - PDF: 8.29 - திருவாசகம் - அருட்பத்து - tiruvāsagam - aruṭpattu

****

On YouTube:
Tamil discussion: 
****

V. Subramanian


========================
(Verses in original Tamil version & word separated Tamil / English scripts) - print only those pages you need)

திருவாசகம் - அருட்பத்து - 8.29
--------------
பாடல் எண் : 1
சோதியே சுடரே சூழொளி விளக்கே
..
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
..
பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
..
நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 2
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
..
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
..
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 3
எங்கணா யகனே என்னுயிர்த் தலைவா
..
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
..
தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 4
கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
..
கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
..
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 5
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
..
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
..
பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 6
துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
..
துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
..
உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 7
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
..
மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
..
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 8
முத்தனே முதல்வா முக்கணா முனிவா
..
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
..
பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 9
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
..
மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
..
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
..
அதெந்துவே என்றரு ளாயே.

பாடல் எண் : 10
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
..
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
..
டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
..
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
..
போதராய் என்றரு ளாயே.

============================= ============================

Word separated version:
--------------
திருவாசகம் - அருட்பத்து - 8.29
--------------
பாடல் எண் : 1
சோதியே; சுடரே; சூழ் ஒளி விளக்கே;
..
சுரி-குழல் பணை-முலை மடந்தை
பாதியே; பரனே; பால்கொள் வெண்ணீற்றாய்;
..
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே; செல்வத் திருப்-பெருந்துறையில்
..
நிறை-மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 2
நிருத்தனே; நிமலா; நீற்றனே; நெற்றிக்
..
கண்ணனே; விண்-உளோர் பிரானே;
ஒருத்தனே; உன்னை ஓலமிட்டு அலறி
..
உலகு-எலாம் தேடியும் காணேன்;
திருத்தம் ஆம் பொய்கைத் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருத்தனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 3
எங்கள் நாயகனே; என் உயிர்த் தலைவா;
..
ஏல வார்-குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே; தக்க நற் காமன்
..
தனது உடல் தழல் எழ விழித்த
செங்கண் நாயகனே; திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அங்கணா; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 4
கமல நான்முகனும் கார்-முகில் நிறத்துக்
..
கண்ணனும் நண்ணுதற்கு அரிய
விமலனே; எமக்கு வெளிப்படாய் என்ன,
..
வியன்-தழல் வெளிப்பட்ட எந்தாய்;
திமில நான்மறை சேர் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 5
துடிகொள் நேர்-இடையாள், சுரி-குழல் மடந்தை
..
துணை-முலைக் கண்கள் தோய் சுவடு,
பொடிகொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு
..
பொங்கு ஒளி தங்கு மார்பினனே;
செடிகொள் வான்-பொழில் சூழ் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அடிகளே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 6
துப்பனே; தூயாய்; தூய வெண்ணீறு
..
துதைந்து எழு, துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே; உன்னை உள்குவார் மனத்தின்
..
உறுசுவை அளிக்கும் ஆரமுதே;
செப்பம் ஆம் மறை சேர் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அப்பனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 7
மெய்யனே; விகிர்தா; மேருவே வில்லா
..
மேவலர் புரங்கள் மூன்று எரித்த
கையனே; காலால் காலனைக் காய்ந்த
..
கடும் தழற்-பிழம்பு அன்ன மேனிச்
செய்யனே; செல்வத் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஐயனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 8
முத்தனே; முதல்வா; முக்கணா; முனிவா;
..
மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
..
பரகதி கொடுத்து அருள் செய்யும்
சித்தனே; செல்வத் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அத்தனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 9
மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி,
..
மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே; புனிதா; பொங்கு வாள் அரவம்,
..
கங்கை-நீர் தங்கு செஞ்சடையாய்;
தெருளும் நான்மறை சேர் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே; அடியேன் ஆதரித்து அழைத்தால்,
..
அது எந்துவே என்று அருளாயே.

பாடல் எண் : 10
திருந்து வார்-பொழில் சூழ் திருப்-பெருந்துறையில்
..
செழு-மலர்க் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி, ஏசறா நினைந்திட்டு,
..
என்னுடை எம்பிரான் என்று-என்று,
அரும் தவா, நினைந்தே ஆதரித்து அழைத்தால்,
.. "
அலைகடல் அதனுளே நின்று
பொருந்த வா; கயிலை புகு நெறி இது காண்;
..
போதராய்" என்று அருளாயே.
================== ==========================

Word separated version:
--------------
tiruvāsagam - aruṭpattu - 8.29
--------------
pāḍal eṇ : 1
sōdiyē; suḍarē; sūḻ oḷi viḷakkē;
.. suri-kuḻal paṇai-mulai maḍandai
pādiyē; paraṉē; pālgoḷ veṇṇīṭrāy;
.. paṅgayattu ayaṉum māl aṟiyā
nīdiyē; selvat tirup-perunduṟaiyil
.. niṟai-malark kurundam mēviya sīr
ādiyē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 2
niruttaṉē; nimalā; nīṭraṉē; neṭrik
.. kaṇṇaṉē; viṇ-uḷōr pirāṉē;
oruttaṉē; uṉṉai ōlamiṭṭu alaṟi
.. ulagu-elām tēḍiyum kāṇēṉ;
tiruttam ām poygait tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
aruttaṉē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 3
eṅgaḷ nāyagaṉē; eṉ uyirt talaivā;
.. ēla vār-kuḻalimār iruvar
taṅgaḷ nāyagaṉē; takka naṟ kāmaṉ
.. taṉadu uḍal taḻal eḻa viḻitta
seṅgaṇ nāyagaṉē; tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
aṅgaṇā; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 4
kamala nāṉmugaṉum kār-mugil niṟattuk
.. kaṇṇaṉum naṇṇudaṟku ariya
vimalaṉē; emakku veḷippaḍāy eṉṉa,
.. viyaṉ-taḻal veḷippaṭṭa endāy;
timila nāṉmaṟai sēr tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
amalaṉē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 5
tuḍigoḷ nēr-iḍaiyāḷ, suri-kuḻal maḍandai
.. tuṇai-mulaik kaṇgaḷ tōy suvaḍu,
poḍigoḷ vāṉ taḻalil puḷḷi pōl iraṇḍu
.. poṅgu oḷi taṅgu mārbiṉaṉē;
seḍigoḷ vāṉ-poḻil sūḻ tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
aḍigaḷē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 6
tuppaṉē; tūyāy; tūya veṇṇīṟu
.. tudaindu eḻu, tuḷaṅgu oḷi vayirattu
oppaṉē; uṉṉai uḷguvār maṉattiṉ
.. uṟusuvai aḷikkum āramudē;
seppam ām maṟai sēr tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
appaṉē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 7
meyyaṉē; vigirdā; mēruvē villā
.. mēvalar puraṅgaḷ mūṇḍru eritta
kaiyaṉē; kālāl kālaṉaik kāynda
.. kaḍum taḻaṟ-piḻambu aṉṉa mēṉic
seyyaṉē; selvat tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
aiyaṉē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 8
muttaṉē; mudalvā; mukkaṇā; muṉivā;
.. moṭṭu aṟā malar paṟittu iṟaiñjip
pattiyāy niṉaindu paravuvār tamakkup
.. paragadi koḍuttu aruḷ seyyum
sittaṉē; selvat tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
attaṉē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 9
maruḷaṉēṉ maṉattai mayakku aṟa nōkki,
.. maṟumaiyōḍu immaiyum keḍutta
poruḷaṉē; puṉidā; poṅgu vāḷ aravam,
.. kaṅgai-nīr taṅgu señjaḍaiyāy;
teruḷum nāṉmaṟai sēr tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
aruḷaṉē; aḍiyēṉ ādarittu aḻaittāl,
.. adu enduvē eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 10
tirundu vār-poḻil sūḻ tirup-perunduṟaiyil
.. seḻu-malark kurundam mēviya sīr
irundavāṟu eṇṇi, ēsaṟā niṉaindiṭṭu,
.. eṉṉuḍai embirāṉ eṇḍru-eṇḍru,
arum tavā, niṉaindē ādarittu aḻaittāl,
.. "alaigaḍal adaṉuḷē niṇḍru
porunda vā; kayilai pugu neṟi idu kāṇ;
.. pōdarāy" eṇḍru aruḷāyē.
================== ==========================