Thursday, December 29, 2016

8.21 - திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - tiruvāsagam - kōyil mūtta tiruppadigam

37) பதிகம் 8.21 - திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - tiruvāsagam - kōyil mūtta tiruppadigam

Here are the links to verses and audio of this padhigam's discussion:

8.21 - kOyil mUththa thiruppadhigam
On YouTube:
Tamil discussion: 
****
V. Subramanian

=======================
(Verses in original Tamil version & word separated Tamil / English scripts) - print only those pages you need)

திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 8.21
குறிப்பு: இப்பதிகம் அந்தாதியாக அமைந்துள்ளது.
--------------
பாடல் எண் : 1
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
..
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
..
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
..
ளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
..
முடியும் வண்ணம் முன்னின்றே.

பாடல் எண் : 2
முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
..
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
..
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
..
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
..
பொன்னம் பலக்கூத் துகந்தானே.

பாடல் எண் : 3
உகந்தா னேஅன் புடைஅடிமைக்
..
குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
..
தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார்
..
வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன்
..
பொன்னம் பலத்தெம் முழுமுதலே.

பாடல் எண் : 4
முழுமுத லேஐம் புலனுக்கும்
..
மூவர்க்கும் என் றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள்
..
வான்குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க
..
இரங்குங் கொல்லோஎன்
றழுமது வேயன்றி மற்றென்
..
செய்கேன் பொன்னம் பலத்தரைசே.


பாடல் எண் : 5
அரைசே பொன்னம் பலத்தாடும்
..
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
..
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
..
காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
..
பேசா திருந்தால் ஏசாரோ.

பாடல் எண் : 6
ஏசா நிற்பர் என்னைஉனக்
..
கடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
..
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந்
..
திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
..
எந்தாய் இனித்தான் இரங்காயே.

பாடல் எண் : 7
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்
..
என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
..
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
..
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
..
வாழ்வே வாவென் றருளாயே.

பாடல் எண் : 8
அருளா தொழிந்தால் அடியேனை
..
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
..
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
..
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
..
செத்தே போனாற் சிரியாரோ.

பாடல் எண் : 9
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
..
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
..
வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
..
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
..
நம்பி இனித்தான் நல்காயே.

பாடல் எண் : 10
நல்கா தொழியான் நமக்கென்றுன்
..
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
..
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
..
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
..
யருளாய் என்னை உடையானே.

============================= ============================

Word separated version:
--------------
திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 8.21
குறிப்பு: இப்பதிகம் அந்தாதியாக அமைந்துள்ளது.
--------------
பாடல் எண் : 1
உடையாள் உன்-தன் நடு இருக்கும்;
..
உடையாள் நடுவுள் நீ இருத்தி;
அடியேன் நடுவுள் இருவீரும்
..
இருப்பது ஆனால், அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்
..
புரியாய், பொன்னம்பலத்து எம்
முடியா முதலே, என் கருத்து
..
முடியும் வண்ணம் முன் நின்றே.

பாடல் எண் : 2
முன் நின்று ஆண்டாய் எனை முன்னம்;
..
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின் நின்று ஏவல் செய்கின்றேன்;
..
பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே;
என் இன்று அருளி வர நின்று
.. "
போந்திடு" என்னாவிடில், அடியார்
உன் நின்று "இவன் ஆர்" என்னாரோ,
..
பொன்னம்பலக் கூத்து உகந்தானே.

பாடல் எண் : 3
உகந்தானே அன்புடை அடிமைக்கு;
..
உருகா உள்ளத்து உணர்விலியேன்
சகம்தான் அறிய முறையிட்டால்
.. "
தக்கவாறு அன்று" என்னாரோ;
மகம்தான் செய்து வழிவந்தார்
..
வாழ வாழ்ந்தாய்; அடியேற்கு உன்
முகம்தான் தாராவிடில் முடிவேன்,
..
பொன்னம்பலத்து எம் முழுமுதலே.

பாடல் எண் : 4
முழுமுதலே; ஐம்புலனுக்கும்
..
மூவர்க்கும் என்-தனக்கும்
வழிமுதலே; நின் பழ அடியார் திரள்
..
வான் குழுமிக் **
கெழுமுதலே அருள் தந்திருக்க
..
இரங்கும் கொல்லோ என்று
அழும் அதுவே அன்றி மற்று என்
..
செய்கேன் பொன்னம்பலத்து அரைசே.
(** வான்குழுமிக் கெழுமுதலே = வான் குழுமிக் கெழுமுதலே / வான் குழு மிக்கு எழு முதலே)


பாடல் எண் : 5
"அரைசே! பொன்னம்பலத்து ஆடும்
..
அமுதே!" என்று உன் அருள் நோக்கி
இரை-தேர் கொக்கு ஒத்து இரவு-பகல்
..
ஏசற்று இருந்தே வேசற்றேன்;
கரை-சேர் அடியார் களி சிறப்பக்
..
காட்சி கொடுத்து உன் அடியேன்-பால்
பிரை-சேர் பாலின் நெய் போலப்
..
பேசாது இருந்தால் ஏசாரோ.

பாடல் எண் : 6
ஏசா நிற்பர் என்னை உனக்கு
..
அடியான் என்று பிறர்-எல்லாம்
பேசா நிற்பர்; யான்-தானும்
..
பேணா நிற்பேன் நின் அருளே;
தேசா; நேசர் சூழ்ந்திருக்கும்
..
திரு-ஓலக்கம் சேவிக்க,
ஈசா, பொன்னம்பலத்து ஆடும்
..
எந்தாய், இனித்தான் இரங்காயே.

பாடல் எண் : 7
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்
..
என்று-என்று ஏமாந்து இருப்பேனை
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய்;
..
ஆள்வார் இலி மாடு ஆவேனோ;
நெருங்கும் அடியார்களும் நீயும்
..
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர, எங்கள்
..
வாழ்வே, "வா" என்று அருளாயே.

பாடல் எண் : 8
அருளாது ஒழிந்தால், அடியேனை
.. "
அஞ்சேல்" என்பார் ஆர் இங்குப்,
பொருளா என்னைப் புகுந்து ஆண்ட
..
பொன்னே; பொன்னம்பலக் கூத்தா;
மருள் ஆர் மனத்தோடு உனைப் பிரிந்து
..
வருந்துவேனை "வா" என்று உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல்,
..
செத்தே போனால் சிரியாரோ.

பாடல் எண் : 9
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்;
..
திரண்டு திரண்டுன் திரு-வார்த்தை
விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்;
..
வெவ்வேறு இருந்துன் திரு-நாமம்
தரிப்பார்; "பொன்னம்பலத்து ஆடும்
..
தலைவா" என்பார்; அவர் முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ;
..
நம்பி, இனித்-தான் நல்காயே.

பாடல் எண் : 10
நல்காது ஒழியான் நமக்கு என்று உன்
..
நாமம் பிதற்றி, நயன-நீர்
மல்கா, வாழ்த்தா, வாய்-குழறா,
..
வணங்கா, மனத்தால் நினைந்து உருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்,
..
பரவிப், பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி
..
அருளாய், என்னை உடையானே.
================== ==========================

Word separated version:
--------------
tiruvāsagam - kōyil mūtta tiruppadigam - 8.21
Note: This padhigam has andādi construction.
--------------
pāḍal eṇ : 1
uḍaiyāḷ uṉ-taṉ naḍu irukkum;
.. uḍaiyāḷ naḍuvuḷ nī irutti;
aḍiyēṉ naḍuvuḷ iruvīrum
.. iruppadu āṉāl, aḍiyēṉ uṉ
aḍiyār naḍuvuḷ irukkum aruḷaip
.. puriyāy, poṉṉambalattu em
muḍiyā mudalē, eṉ karuttu
.. muḍiyum vaṇṇam muṉ niṇḍrē.

pāḍal eṇ : 2
muṉ niṇḍru āṇḍāy eṉai muṉṉam;
.. yāṉum aduvē muyalvuṭrup
piṉ niṇḍru ēval seygiṇḍrēṉ;
.. piṟpaṭṭu oḻindēṉ pemmāṉē;
eṉ iṇḍru aruḷi vara niṇḍru
.. "pōndiḍu" eṉṉāviḍil, aḍiyār
uṉ niṇḍru "ivaṉ ār" eṉṉārō,
.. poṉṉambalak kūttu ugandāṉē.

pāḍal eṇ : 3
ugandāṉē aṉbuḍai aḍimaikku;
.. urugā uḷḷattu uṇarviliyēṉ
sagamtāṉ aṟiya muṟaiyiṭṭāl
.. "takkavāṟu aṇḍru" eṉṉārō;
magamtāṉ seydu vaḻivandār
.. vāḻa vāḻndāy; aḍiyēṟku uṉ
mugamtāṉ tārāviḍil muḍivēṉ,
.. poṉṉambalattu em muḻumudalē.

pāḍal eṇ : 4
muḻumudalē; aimbulaṉukkum
.. mūvarkkum eṉ-taṉakkum
vaḻimudalē; niṉ paḻa aḍiyār tiraḷ
.. vāṉ kuḻumik **
keḻumudalē aruḷ tandirukka
.. iraṅgum kollō eṇḍru
aḻum aduvē aṇḍri maṭru eṉ
.. seygēṉ poṉṉambalattu araisē.
(** vāṉkuḻumik keḻumudalē = vāṉ kuḻumik keḻumudalē / vāṉ kuḻu mikku eḻu mudalē)

pāḍal eṇ : 5
"araisē! poṉṉambalattu āḍum
.. amudē!" eṇḍru uṉ aruḷ nōkki
irai-tēr kokku ottu iravu-pagal
.. ēsaṭru irundē vēsaṭrēṉ;
karai-sēr aḍiyār kaḷi siṟappak
.. kāṭci koḍuttu uṉ aḍiyēṉ-pāl
pirai-sēr pāliṉ ney pōlap
.. pēsādu irundāl ēsārō.

pāḍal eṇ : 6
ēsā niṟpar eṉṉai uṉakku
.. aḍiyāṉ eṇḍru piṟar-ellām
pēsā niṟpar; yāṉ-tāṉum
.. pēṇā niṟpēṉ niṉ aruḷē;
tēsā; nēsar sūḻndirukkum
.. tiru-ōlakkam sēvikka,
īsā, poṉṉambalattu āḍum
.. endāy, iṉittāṉ iraṅgāyē.

pāḍal eṇ : 7
iraṅgum namakku ambalak kūttaṉ
.. eṇḍru-eṇḍru ēmāndu iruppēṉai
arum kaṟpaṉai kaṟpittu āṇḍāy;
.. āḷvār ili māḍu āvēṉō;
neruṅgum aḍiyārgaḷum nīyum
.. niṇḍru nilāvi viḷaiyāḍum
maruṅgē sārndu vara, eṅgaḷ
.. vāḻvē, "vā" eṇḍru aruḷāyē.

pāḍal eṇ : 8
aruḷādu oḻindāl, aḍiyēṉai
.. "añjēl" eṉbār ār iṅgup,
poruḷā eṉṉaip pugundu āṇḍa
.. poṉṉē; poṉṉambalak kūttā;
maruḷ ār maṉattōḍu uṉaip pirindu
.. varunduvēṉai "vā" eṇḍru uṉ
teruḷ ār kūṭṭam kāṭṭāyēl,
.. settē pōṉāl siriyārō.

pāḍal eṇ : 9
sirippār; kaḷippār; tēṉippār;
.. tiraṇḍu tiraṇḍu uṉ tiru-vārttai
virippār; kēṭpār; meccuvār;
.. vevvēṟu irundu uṉ tiru-nāmam
tarippār; "poṉṉambalattu āḍum
.. talaivā" eṉbār; avar muṉṉē
narippāy nāyēṉ iruppēṉō;
.. nambi, iṉit-tāṉ nalgāyē.

pāḍal eṇ : 10
nalgādu oḻiyāṉ namakku eṇḍru uṉ
.. nāmam pidaṭri, nayaṉa-nīr
malgā, vāḻttā, vāy-kuḻaṟā,
.. vaṇaṅgā, maṉattāl niṉaindu urugip
palgāl uṉṉaip pāvittup,
.. paravip, poṉṉambalam eṇḍrē
olgā niṟkum uyirkku iraṅgi
.. aruḷāy, eṉṉai uḍaiyāṉē.
================== ==========================


No comments:

Post a Comment