34)
7.38
- திருவதிகை
வீரட்டானம் (
பண்
:
கொல்லிக்
கௌவாணம் )
-
tiruvadigai
vīraṭṭāṉam ( paṇ : kollik kauvāṇam )
சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.38 - தம்மானை அறியாத
7.38 - tammāṉai aṟiyāda
Here are the links to verses and audio of this padhigam's discussion:
சுந்தரர் தேவாரம் - sundarar thevaram
7.38 - தம்மானை அறியாத
7.38 - tammāṉai aṟiyāda
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses - PDF: 7.38 - தம்மானை அறியாத - tammāṉai aṟiyāda
*****
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/Pf4Wzctf68I
Part-2:
https://youtu.be/FNSAiq_J1uI
*****
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_038.HTM
V. Subramanian
=====================
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS7_038.HTM
V. Subramanian
=====================
(Verses
in original Tamil version & word separated Tamil / English
scripts) - print only those pages you need)
சுந்தரர்
தேவாரம் -
பதிகம்
7.38
- திருவதிகை
வீரட்டானம்
(
பண்
:
கொல்லிக்
கௌவாணம் )
Background:
சிவபெருமானால்
தடுத்தாட்கொள்ளப்பெற்ற
சுந்தரர்,
திருநாவலூர்
திருத்துறையூர் முதலான
தலங்களைத் தரிசித்துத்,
திருவதிகை
வீரட்டானத்திற்கு வந்தார்.
அப்பர்
திருத்தொண்டு புரிந்திருந்த
தலம் என அதனை மிதிக்க அஞ்சி,
அதன்
புறத்தே
உள்ள
சித்தவட
மடத்தில்
தங்கித் துயின்றார்.
அப்போது
பெருமான்,
அந்தணர்
உருக்கொண்டு வந்து,
சுந்தரர்
தலைமீது கால்களை வைத்துப்
படுத்திருந்தார்.
"என்
தலைமீது கால் வைத்துள்ளீரே"
என்று
சுந்தரர்
வினவிய பொழுது,
"திசை
அறியாவகை
செய்தது
என்னுடைய மூப்புக்
காண்"
என்று
அவர் சொல்லக் கேட்டு,
சற்றுத்
தள்ளி வேறு
திசையில் தலை
வைத்துத்
துயின்றார்.
மீண்டும்
திருத்தாளைத் தலைமீது
நீட்டியதைக் கண்ட சுந்தரர்,
"பல
முறையும் என் தலைமீது கால்களை
வைக்கும் நீர் யார்?"
என்று
வினவியவுடன்,
"நம்மை
அறிந்திலையோ"
என்று
கூறி,
அந்தணர்
வடிவில் வந்த பெருமான்
மறைந்தருளினான்.
அப்போது
பாடியருளியது இத்திருப்பதிகம்.
தலக்குறிப்பு
:
திரு
அதிகை வீரட்டானம் -
அட்டவீரட்டங்களில்
ஒன்று.
திரிபுரமெரித்த
வீரம் நிகழ்ந்த தலம்.
அப்பர்
சுவாமிகளை ஆட்கொண்ட தலம்.
திலகவதியம்மையார்
திருப்பணி செய்த தலம்.
தீர்த்தம்
-
கெடிலநதி.
சுவாமி
-
திரிபுராந்தகேசுவரர்.
தேவியார்
-
திரிபுரசுந்தரி.
இது
நடுநாட்டுத் தலங்களில் 7-வது
தலம்.
இத்தலம்
பண்ணுருட்டியை
அடுத்து உள்ளது.
கெடில
நதியின் வடகரையில் உள்ளதென்பது
பதிகத்துக் காண்க.
இத்தலத்திற்கு
18
திருப்பதிகங்கள்
உள்ளன.
மூவர்
பதிகங்களும்
உண்டு.
--------------
#229
-
பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
229
‘உடையவர
சுலகேத்து முழவாரப் படையாளி
விடையவர்க்குக்
கைத்தொண்டு விரும்புபெரும்
பதியைமிதித்
தடையுமதற்
கஞ்சுவ'
னென்
றந்நகரிற் புகுதாதே
மடைவளர்தண்
புறம்பணையிற் சித்தவட
மடம்புகுந்தார்.
#231
-
பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
231
அதுகண்டு
வீரட்டத் தமர்ந்தருளு மங்கணரு
முதுவடிவின்
மறையவராய் முன்னொருவ ரறியாமே
பொதுமடத்தி
னுட்புகுந்து பூந்தாரான்
றிருமுடிமேற்
பதுமமலர்த்
தாள்வைத்துப் பள்ளிகொள்வார்
போற்பயின்றார்.
#232
- பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
232
அந்நிலையா
ரூரனுணர்ந் ‘தருமறையோ
யுன்னடியென்
சென்னியில்வைத்
தனை'யென்னத்
‘திசையறியா வகைசெய்த
தென்னுடைய
மூப்புக்கா'
ணென்றருள
வதற்கிசைந்து
தன்முடியப்
பால்வைத்தே துயிலமர்ந்தான்
றமிழ்நாதன்.
#233
- பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
233
அங்குமவன்
றிருமுடிமேன் மீண்டுமவர்*
தாணீட்டச்
செங்கயல்பாய்
தடம்புடைசூழ் திருநாவ லூராளி
‘யிங்கென்னைப்
பலகாலு மிதித்தனைநீ யா'ரென்னக்
கங்கைசடைக்
கரந்தபிரா ‘னறிந்திலையோ'
வெனக்கரந்தான்.
(*பாடபேதம்
-
மீட்டுமவர்)
#234
- பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
234
‘செம்மாந்திங்
கியானறியா தென்செய்தே'
னெனத்தெளிந்து
‘தம்மானை
யறியாத சாதியா ருளரே'யென்
றம்மானைத்
திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவி
னுரியானைக் கழல்பணிந்து
பாடினார்.
சுந்தரர்
தேவாரம் -
பதிகம்
7.38
- திருவதிகை
வீரட்டானம் (
பண்
:
கொல்லிக்
கௌவாணம் )
தம்மானை
யறியாத சாதியா ருளரே
..
சடைமேற்கொள்
பிறையானை விடைமேற்கொள்
விகிர்தன்
கைம்மாவி
னுரியானைக் கரிகாட்டி லாட
..
லுடையானை
விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன்
அடிக்கொண்டென் முடிமேல்வைத்
திடுமென்னும்
..
ஆசையால்
வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
பாடல்
எண் :
2
முன்னேஎம்
பெருமானை மறந்தென்கொல் மறவா
..
தொழிந்தென்கொல்
மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன்
மணியேவெண் முத்தேசெம் பவளக்
..
குன்றமே
ஈசனென் றுன்னியே புகழ்வேன்
அன்னேஎன்
னத்தாஎன் றமரரா லமரப்
..
படுவானை
அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேஎன்
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
யிறைபோதும் இகழ்வன்போ லியானே.
விரும்பினேற்
கெனதுள்ளம் விடகிலா விதியே
..
விண்ணவர்தம்
பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
கரும்பேஎன்
கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்
..
காதல்சேர்
மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலுஞ்
சடைக்கணிந்து வளராத பிறையும்
..
வரியரவும்
உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந்
தெறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
நாற்றானத்
தொருவனை நானாய பரனை
..
நள்ளாற்று
நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத்
தீயானைக் கடலானை மலையின்
..
தலையானைக்
கடுங்கலுழிக் கங்கைநீர்
வெள்ள
ஆற்றானைப்
பிறையானை அம்மானை எம்மான்
..
தம்மானை
யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
சேந்தர்தாய்
மலைமங்கை திருநிறமும் பரிவும்
..
உடையானை
அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ்
புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
..
சடையிடையிற்
கயலினங்கள் குதிகொள்ளக்
குலாவி
வாய்ந்தநீர்
வரஉந்தி மராமரங்கள் வணக்கி
..
மறிகடலை
இடங்கொள்வான் மலைஆரம் வாரி
ஏந்துநீர்
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
மைம்மான
மணிநீல கண்டத்தெம் பெருமான்
..
வல்லேனக்
கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத்
தலைமகனைத் தண்மதியும் பாம்புந்
..
தடுமாறுஞ்
சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான
மதகரியி னுரியானை வேத
..
விதியானை
வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
வெய்தாய
வினைக்கடலில் தடுமாறும்
உயிர்க்கு
..
மிகஇரங்கி
அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப்
பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
..
தெண்டோள்எம்
பெருமானைப் பெண்பாகம் ஒருபால்
செய்தானைச்
செக்கர்வா னொளியானைத் தீவாய்
..
அரவாடு
சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
பொன்னானை
மயிலூர்தி முருகவேள் தாதை
..
பொடியாடு
திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக்
குடபாலின் வடபாலின் குணபாற்
..
சேராத
சிந்தையான் செக்கர்வான்
அந்தி
அன்னானை
அமரர்கள்தம் பெருமானைக்
கருமான்
..
உரியானை
அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
திருந்தாத
வாளவுணர் புரமூன்றும் வேவச்
..
சிலைவளைவித்
தொருகணையால் தொழில்பூண்ட
சிவனைக்
கருந்தாள
மதக்களிற்றி னுரியானைப்
பெரிய
..
கண்மூன்றும்
உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள்
நாலைந்தும் ஈரைந்து முடியும்
..
உடையானைப்
பேவுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
(*பாடபேதம்:
பேவுருவம்
/
பேயுருவம்)
என்பினையே
கலனாக அணிந்தானை எங்கள்
..
எருதேறும்
பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய
வளர்பொழில்சூழ் வயல்நாவ
லூர்க்கோன்
..
வன்றொண்டன்
ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை
யாவர்க்கு மறிவரிய வத்தர்
..
பெருமானை
அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை
எறிகெடில வடவீரட் டானத்
..
துறைவானை
இறைபோதும் இகழ்வன்போ லியானே.
=============================
============================
Word separated version:
--------------
#229
-
பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
229
"உடைய
அரசு,
உலகு
ஏத்தும் உழவாரப் படையாளி,
விடையவர்க்குக்
கைத்தொண்டு விரும்பு பெரும்
பதியை மிதித்து
அடையும்-அதற்கு
அஞ்சுவன்"
என்று
அந்நகரில் புகுதாதே,
மடை-வளர்-தண்
புறம்பணையில் சித்தவட மடம்
புகுந்தார்.
#231
-
பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
231
அது
கண்டு வீரட்டத்து அமர்ந்தருளும்
அங்கணரும்
முது-வடிவின்
மறையவராய்,
முன்
ஒருவர் அறியாமே
பொதுமடத்தினுள்
புகுந்து,
பூந்தாரான்
திருமுடிமேல்
பதும-மலர்த்
தாள் வைத்துப்,
பள்ளி-கொள்வார்
போல் பயின்றார்.
#232
- பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
232
அந்நிலை
ஆரூரன் உணர்ந்து,
"அருமறையோய்,
உன்
அடி என்
சென்னியில்
வைத்தனை"
என்னத்,
"திசை
அறியா வகை செய்தது
என்னுடைய
மூப்புக் காண்"
என்றருள,
அதற்கு
இசைந்து
தன்
முடி அப்பால் வைத்தே
துயில்-அமர்ந்தான்
தமிழ்நாதன்.
#233
- பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
233
அங்கும்
அவன் திருமுடிமேல் மீண்டும்*
அவர்
தாள் நீட்டச்
செங்கயல்-பாய்
தடம்-புடைசூழ்
திருநாவலூர்-ஆளி
‘இங்கு
என்னைப் பல-காலும்
மிதித்தனை;
நீ
யார்'
என்னக்,
கங்கை
சடைக் கரந்த பிரான்‘ அறிந்திலையோ?'
எனக்
கரந்தான்.
(*பாடபேதம்
-
மீட்டும்)
#234
- பெரிய
புராணம் -
தடுத்தாட்கொண்ட
புராணம் -
234
‘செம்மாந்து
இங்கு யான் அறியாது என்
செய்தேன்'
எனத்
தெளிந்து,
‘தம்மானை
அறியாத சாதியார் உளரே?'
என்று
அம்மானைத்,
திரு-அதிகை
வீரட்டானத்து அமர்ந்த,
கைம்மாவின்
உரியானைக் கழல் பணிந்து
பாடினார்.
சுந்தரர்
தேவாரம் -
பதிகம்
7.38
- திருவதிகை
வீரட்டானம் (
பண்
:
கொல்லிக்
கௌவாணம் )
தம்மானை
அறியாத சாதியார் உளரே?
..
சடைமேற்கொள்
பிறையானை,
விடைமேற்கொள்
விகிர்தன்,
கைம்மாவின்
உரியானைக்,
கரிகாட்டில்
ஆடல்
..
உடையானை,
விடையானைக்,
கறை-கொண்ட
கண்டத்து
அம்மான்
தன் அடிக்கொண்டு என் முடிமேல்
வைத்திடும் என்னும்
..
ஆசையால்
வாழ்கின்ற அறிவு-இலா
நாயேன்
எம்மானை
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
பாடல்
எண் :
2
முன்னே
எம் பெருமானை மறந்து என்கொல்;
மறவாது
..
ஒழிந்து
என்கொல்;
மறவாத
சிந்தையால் வாழ்வேன்
"பொன்னே,
நன்
மணியே,
வெண்
முத்தே,
செம்பவளக்
..
குன்றமே,
ஈசன்"
என்று
உன்னியே புகழ்வேன்
"அன்னே,
என்
அத்தா"
என்று
அமரரால் அமரப்
..
படுவானை,
அதிகை
மா-நகருள்
வாழ்பவனை
என்னே
என் எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
"விரும்பினேற்கு
எனது உள்ளம் விடகிலா விதியே,
..
விண்ணவர்தம்
பெருமானே,
மண்ணவர்
நின்று ஏத்தும்
கரும்பே,
என்
கட்டி"
என்று
உள்ளத்தால் உள்கிக்,
..
காதல்-சேர்
மாதராள் கங்கையாள் நங்கை
வரும்
புனலும் சடைக்கு அணிந்து,
வளராத
பிறையும்
..
வரி-அரவும்
உடன் துயில வைத்தருளும் எந்தை,
இரும்-புனல்
வந்து எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
நாற்றானத்து
ஒருவனை,
நானாய
பரனை,
..
நள்ளாற்று
நம்பியை,
வெள்ளாற்று
விதியைக்,
காற்றானைத்,
தீயானைக்,
கடலானை,
மலையின்
..
தலையானைக்,
கடும்-கலுழிக்
கங்கை நீர் வெள்ள
ஆற்றானைப்,
பிறையானை,
அம்மானை,
எம்மான்
..
தம்மானை,
யாவர்க்கும்
அறிவு-அரிய
செங்கண்
ஏற்றானை,
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
சேந்தர்
தாய் மலைமங்கை திருநிறமும்
பரிவும்
..
உடையானை,
அதிகை
மா-நகருள்
வாழ்பவனைக்,
கூந்தல்-தாழ்
புனல்-மங்கை
குயில் அன்ன மொழியாள்
..
சடை-இடையிற்
கயல்-இனங்கள்
குதி-கொள்ளக்
குலாவி
வாய்ந்த
நீர் வர உந்தி மராமரங்கள்
வணக்கி
..
மறி-கடலை
இடங்கொள்வான் மலை-ஆரம்
வாரி
ஏந்து-நீர்
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
மைம்-மான
மணி-நீல
கண்டத்து எம் பெருமான்,
..
வல்-ஏனக்
கொம்பு அணிந்த மாதவனை,
வானோர்
தம்மானைத்,
தலைமகனைத்,
தண்-மதியும்
பாம்பும்
..
தடுமாறும்
சடையானைத்,
தாழ்வரைக்கை
வென்ற
வெம்-மான
மத-கரியின்
உரியானை,
வேத
..
விதியானை,
வெண்ணீறு
சண்ணித்த மேனி
எம்மானை,
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
வெய்து-ஆய
வினைக்கடலில் தடுமாறும்
உயிர்க்கு
..
மிக
இரங்கி அருள்-புரிந்து
வீடு-பேறாக்கம்
பெய்தானைப்,
பிஞ்ஞகனை,
மைஞ்-ஞவிலுங்
கண்டத்து
..
எண்-தோள்
எம் பெருமானைப்,
பெண்பாகம்
ஒருபால்
செய்தானைச்,
செக்கர்வான்
ஒளியானைத்,
தீ-வாய்
..
அரவு
ஆடு சடையானைத்,
திரி-புரங்கள்
வேவ
எய்தானை,
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
பொன்னானை
மயில்-ஊர்தி
முருகவேள் தாதை,
..
பொடி-ஆடு
திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக்,
குடபாலின்
வடபாலின் குணபாற்
..
சேராத
சிந்தையான்,
செக்கர்வான்
அந்தி
அன்னானை,
அமரர்கள்தம்
பெருமானைக்,
கருமான்
..
உரியானை,
அதிகை
மா-நகருள்
வாழ்பவனை,
என்னானை,
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
திருந்தாத
வாள்-அவுணர்
புரம்-மூன்றும்
வேவச்
..
சிலை
வளைவித்து ஒரு கணையால் தொழில்
பூண்ட சிவனைக்,
கருந்தாள
மதக்-களிற்றின்
உரியானைப்,
பெரிய
..
கண்
மூன்றும் உடையானைக்,
கருதாத
அரக்கன்
பெருந்தோள்கள்
நாலைந்தும் ஈரைந்து முடியும்
..
உடையானைப்,
பே-உருவம்
ஊன்றும் உற மலைமேல்
இருந்தானை,
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
(*பாடபேதம்:
பே-உருவம்
/
பேய்-உருவம்)
என்பினையே
கலனாக அணிந்தானை,
எங்கள்
..
எருது-ஏறும்
பெருமானை,
இசைஞானி
சிறுவன்,
வன்-பனைய
வளர்-பொழில்-சூழ்
வயல் நாவலூர்க்-கோன்,
..
வன்-தொண்டன்,
ஆரூரன்,
மதியாது
சொன்ன
அன்பனை,
யாவர்க்கும்
அறிவு-அரிய
அத்தர்
..
பெருமானை,
அதிகை
மா-நகருள்
வாழ்பவனை,
என்
பொன்னை,
எறி-கெடில
வட-வீரட்டானத்து
..
உறைவானை
இறை போதும் இகழ்வன்-போல்
யானே.
==================
==========================
Word separated version:
--------------
229
- periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 229
"uḍaiya
arasu, ulagu ēttum uḻavārap paḍaiyāḷi,
viḍaiyavarkkuk
kaittoṇḍu virumbu perum padiyai midittu
aḍaiyum-adaṟku
añjuvaṉ" eṇḍru annagaril pugudādē,
maḍai-vaḷar-taṇ
puṟambaṇaiyil sittavaḍa maḍam pugundār.
231
- periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 231
adu
kaṇḍu vīraṭṭattu amarndaruḷum aṅgaṇarum
mudu-vaḍiviṉ
maṟaiyavarāy, muṉ oruvar aṟiyāmē
podumaḍattiṉuḷ
pugundu, pūndārāṉ tirumuḍimēl
paduma-malart
tāḷ vaittup, paḷḷi-koḷvār pōl payiṇḍrār.
232
- periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 232
annilai
ārūraṉ uṇarndu, "arumaṟaiyōy, uṉ aḍi eṉ
seṉṉiyil
vaittaṉai" eṉṉat, "tisai aṟiyā vagai seydadu
eṉṉuḍaiya
mūppuk kāṇ" eṇḍraruḷa, adaṟku isaindu
taṉ
muḍi appāl vaittē tuyil-amarndāṉ tamiḻnādaṉ.
233
- periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 233
aṅgum
avaṉ tirumuḍimēl mīṇḍum* avar tāḷ nīṭṭac
seṅgayal-pāy
taḍam-puḍaisūḻ tirunāvalūr-āḷi
‘iṅgu
eṉṉaip pala-kālum midittaṉai; nī yār' eṉṉak,
kaṅgai
saḍaik karanda pirāṉ‘ aṟindilaiyō?' eṉak karandāṉ.
(*pāḍabēdam
- mīṭṭum)
234
- periya purāṇam - taḍuttāṭkoṇḍa purāṇam - 234
‘semmāndu
iṅgu yāṉ aṟiyādu eṉ seydēṉ' eṉat teḷindu,
‘tammāṉai
aṟiyāda sādiyār uḷarē?' eṇḍru
ammāṉait,
tiru-adigai vīraṭṭāṉattu amarnda,
kaimmāviṉ
uriyāṉaik kaḻal paṇindu pāḍiṉār.
sundarar
tēvāram - padigam 7.38 - tiruvadigai vīraṭṭāṉam ( paṇ :
kollik kauvāṇam )
pāḍal
eṇ : 1
tammāṉai
aṟiyāda sādiyār uḷarē?
..
saḍaimēṟkoḷ piṟaiyāṉai, viḍaimēṟkoḷ vigirdaṉ,
kaimmāviṉ
uriyāṉaik, karigāṭṭil āḍal
..
uḍaiyāṉai, viḍaiyāṉaik, kaṟai-koṇḍa kaṇḍattu
ammāṉ
taṉ aḍikkoṇḍu eṉ muḍimēl vaittiḍum eṉṉum
..
āsaiyāl vāḻgiṇḍra aṟivu-ilā nāyēṉ
emmāṉai
eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 2
muṉṉē
em perumāṉai maṟandu eṉkol; maṟavādu
..
oḻindu eṉkol; maṟavāda sindaiyāl vāḻvēṉ
"poṉṉē,
naṉ maṇiyē, veṇ muttē, sembavaḷak
..
kuṇḍramē, īsaṉ" eṇḍru uṉṉiyē pugaḻvēṉ
"aṉṉē,
eṉ attā" eṇḍru amararāl amarap
..
paḍuvāṉai, adigai mā-nagaruḷ vāḻbavaṉai
eṉṉē
eṉ eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 3
"virumbiṉēṟku
eṉadu uḷḷam viḍagilā vidiyē,
..
viṇṇavardam perumāṉē, maṇṇavar niṇḍru ēttum
karumbē,
eṉ kaṭṭi" eṇḍru uḷḷattāl uḷkik,
..
kādal-sēr mādarāḷ kaṅgaiyāḷ naṅgai
varum
puṉalum saḍaikku aṇindu, vaḷarāda piṟaiyum
..
vari-aravum uḍaṉ tuyila vaittaruḷum endai,
irum-puṉal
vandu eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 4
nāṭrāṉattu
oruvaṉai, nāṉāya paraṉai,
..
naḷḷāṭru nambiyai, veḷḷāṭru vidiyaik,
kāṭrāṉait,
tīyāṉaik, kaḍalāṉai, malaiyiṉ
..
talaiyāṉaik, kaḍum-kaluḻik kaṅgai nīr veḷḷa
āṭrāṉaip,
piṟaiyāṉai, ammāṉai, emmāṉ
..
tammāṉai, yāvarkkum aṟivu-ariya seṅgaṇ
ēṭrāṉai,
eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 5
sēndar
tāy malaimaṅgai tiruniṟamum parivum
..
uḍaiyāṉai, adigai mā-nagaruḷ vāḻbavaṉaik,
kūndal-tāḻ
puṉal-maṅgai kuyil aṉṉa moḻiyāḷ
..
saḍai-iḍaiyiṟ kayal-iṉaṅgaḷ kudi-koḷḷak kulāvi
vāynda
nīr vara undi marāmaraṅgaḷ vaṇakki
..
maṟi-kaḍalai iḍaṅgoḷvāṉ malai-āram vāri
ēndu-nīr
eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 6
maim-māṉa
maṇi-nīla kaṇḍattu em perumāṉ,
..
val-ēṉak kombu aṇinda mādavaṉai, vāṉōr
tammāṉait,
talaimagaṉait, taṇ-madiyum pāmbum
..
taḍumāṟum saḍaiyāṉait, tāḻvaraikkai veṇḍra
vem-māṉa
mada-kariyiṉ uriyāṉai, vēda
..
vidiyāṉai, veṇṇīṟu saṇṇitta mēṉi
emmāṉai,
eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 7
veydu-āya
viṉaikkaḍalil taḍumāṟum uyirkku
..
miga iraṅgi aruḷ-purindu vīḍu-pēṟākkam
peydāṉaip,
piññagaṉai, maiñ-ñaviluṅ kaṇḍattu
..
eṇ-tōḷ em perumāṉaip, peṇbāgam orubāl
seydāṉaic,
sekkarvāṉ oḷiyāṉait, tī-vāy
..
aravu āḍu saḍaiyāṉait, tiri-puraṅgaḷ vēva
eydāṉai,
eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 8
poṉṉāṉai
mayil-ūrdi murugavēḷ tādai,
..
poḍi-āḍu tirumēṉi neḍumāṟaṉ muḍimēl
teṉṉāṉaik,
kuḍabāliṉ vaḍabāliṉ kuṇabāṟ
..
sērāda sindaiyāṉ, sekkarvāṉ andi
aṉṉāṉai,
amarargaḷtam perumāṉaik, karumāṉ
..
uriyāṉai, adigai mā-nagaruḷ vāḻbavaṉai,
eṉṉāṉai,
eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
pāḍal
eṇ : 9
tirundāda
vāḷ-avuṇar puram-mūṇḍrum vēvac
..
silai vaḷaivittu oru kaṇaiyāl toḻil pūṇḍa sivaṉaik,
karundāḷa
madak-kaḷiṭriṉ uriyāṉaip, periya
..
kaṇ mūṇḍrum uḍaiyāṉaik, karudāda arakkaṉ
perundōḷkaḷ
nālaindum īraindu muḍiyum
..
uḍaiyāṉaip, pē-uruvam ūṇḍrum uṟa malaimēl
irundāṉai,
eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
(*pāḍabēdam:
pē-uruvam / pēy-uruvam)
pāḍal
eṇ : 10
eṉbiṉaiyē
kalaṉāga aṇindāṉai, eṅgaḷ
..
erudu-ēṟum perumāṉai, isaiñāṉi siṟuvaṉ,
vaṉ-paṉaiya
vaḷar-poḻil-sūḻ vayal nāvalūrk-kōṉ,
..
vaṉ-toṇḍaṉ, ārūraṉ, madiyādu soṉṉa
aṉbaṉai,
yāvarkkum aṟivu-ariya attar
..
perumāṉai, adigai mā-nagaruḷ vāḻbavaṉai,
eṉ
poṉṉai, eṟi-keḍila vaḍa-vīraṭṭāṉattu
..
uṟaivāṉai iṟai pōdum igaḻvaṉ-pōl yāṉē.
==================
==========================
Nandru
ReplyDelete