99) 2.112 - மாதொர் கூறு - திருவாடானை - mādu or kūṟu - tiruvāḍānai
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.112 – மாதொர் கூறு - திருவாடானை - (பண் - நட்டராகம்)
sambandar tēvāram - padigam 2.112 – mādu or kūṟu - tiruvāḍānai - (paṇ - naṭṭarāgam)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 2.112 – மாதொர் கூறு - mādu or kūṟu
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_112.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/FydSxy9PD7Q
Part-2: https://youtu.be/pK9A34cb1iY
English discussion:
Part-1:
Part-2:
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.112 – திருவாடானை (திரு-ஆடானை) - (பண் - நட்டராகம்)
திருவாடானை: ராமநாதபுரத்திலிருந்து வடக்கே 53 கிமீ தூரம். காரைக்குடியிலிருந்து தெற்கே 42 கிமீ தூரம்.
வாருணி ("வருணனின் புத்திரன்") துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு ஆட்டுத்தலையும் யானை உடலும் அடைந்தான். அவன் இத்தலத்தில் ஆதி ரத்னேஸ்வரரை வழிபட்டுச் சாபவிமோசனம் பெற்றான். அதனால் இத்தலம் "ஆடானை" (ஆடு + ஆனை) என்ற பெயர் பெற்றது.
Thiruvadanai sthala puranam story (prose - in Tamil): http://thiruvadanai-puranam-kalairajan.blogspot.com/2014/11/blog-post_10.html
My notes:
சம்பந்தரது இப்பதிகத்தில் 8-ஆம் பாடலில் இராவணன் பற்றிய குறிப்போ, 10-ஆம் பாடலில் சமண பௌத்த கண்டனமோ இல்லை.
அடியார்கள் அடையும் நன்மை பாடல்தோறும் சொல்லப்பெறுகின்றது.
----------
Sambandar went north from Rameswaram and visited thiruvAdAnai
# 2789 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 891
அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
.. அங்கையன றரித்தபிரா னமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப்
.. புணரிபொரு தலைகரைவா யொழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
.. செந்தமிழ்மா லைகள்சாத்திச், சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
.. வணங்கினா ருலகுய்ய ஞான முண்டார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.112 – திருவாடானை (திரு-ஆடானை) - (பண் - நட்டராகம்)
(தான தானன தான தானன
தான தானன தானன - Rhythm)
பாடல் எண் : 1
மாதொர் கூறுகந் தேற தேறிய
ஆதி யானுறை யாடானை
போதி னாற்புனைந் தேத்து வார்தமை
வாதி யாவினை மாயுமே.
பாடல் எண் : 2
வாடல் வெண்டலை யங்கை யேந்திநின்
றாட லானுறை யாடானை
தோடு லாமலர் தூவிக் கைதொழ
வீடு நுங்கள் வினைகளே.
பாடல் எண் : 3
மங்கை கூறினன் மான்ம றியுடை
அங்கை யானுறை யாடானை
தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
மங்கு நோய்பிணி மாயுமே.
பாடல் எண் : 4
சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
அண்ண லானுறை யாடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணு வாரிட ரேகுமே.
பாடல் எண் : 5
கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய வாடானை
கைய ணிம்மல ரால்வ ணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே.
பாடல் எண் : 6
வானி ளம்மதி மல்கு வார்சடை
ஆனஞ் சாடல னாடானை
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
ஊன முள்ள வொழியுமே.
பாடல் எண் : 7
துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை
அலங்க லானுறை யாடானை
நலங்கொண் மாமலர் தூவி நாடொறும்
வலங்கொள் வார்வினை மாயுமே.
பாடல் எண் : 8
வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
அந்த மில்லவ னாடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழும்
சிந்தை யார்வினை தேயுமே.
பாடல் எண் : 9
மறைவ லாரொடு வான வர்தொழு
தறையுந் தண்புன லாடானை
உறையும் ஈசனை யேத்தத் தீவினை
பறையு நல்வினை பற்றுமே.
பாடல் எண் : 10
மாய னும்மல ரானுங் கைதொழ
ஆய வந்தண னாடானை
தூய மாமலர் தூவிக் கைதொழத்
தீய வல்வினை தீருமே.
பாடல் எண் : 11
வீடி னார்மலி வெங்க டத்துநின்
றாட லானுறை யாடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே.
=====================================
Word separated version:
Sambandar went north from Rameswaram and visited thiruvAdAnai
# 2789 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 891
அப்பதியைத் தொழுது, வட திசைமேல் செல்வார்
.. அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்
புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப்,
.. புணரி பொருது அலை-கரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து
.. செந்தமிழ்-மாலைகள் சாத்திச், சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
.. வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.112 – திருவாடானை (திரு-ஆடானை) - (பண் - நட்டராகம்)
(தான தானன தான தானன
தான தானன தானன - Rhythm)
பாடல் எண் : 1
மாது ஒர் கூறு உகந்து ஏறது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து ஏத்துவார்தமை
வாதியா வினை மாயுமே.
பாடல் எண் : 2
வாடல் வெண்டலை அங்கை ஏந்திநின்று
ஆடலான் உறை ஆடானை
தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ
வீடும் நுங்கள் வினைகளே.
பாடல் எண் : 3
மங்கை கூறினன், மான்மறியுடை
அங்கையான் உறை ஆடானை
தங்கையால் தொழுதேத்த வல்லவர்
மங்கும் நோய் பிணி மாயுமே.
பாடல் எண் : 4
சுண்ண-நீறு அணி மார்பில் தோல் புனை
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழ
எண்ணுவார் இடர் ஏகுமே.
பாடல் எண் : 5
கொய்-அணிம்-மலர்க் கொன்றை சூடிய
ஐயன் மேவிய ஆடானை
கை அணிம்-மலரால் வணங்கிட
வெய்ய வல்வினை வீடுமே.
பாடல் எண் : 6
வான் இளம்-மதி மல்கு வார்-சடை
ஆனஞ்சு ஆடலன் ஆடானை
தேன் அணிம்-மலர் சேர்த்த முன்-செய்த
ஊனம் உள்ள ஒழியுமே.
பாடல் எண் : 7
துலங்கு வெண்-மழு ஏந்திச் சூழ்-சடை
அலங்கலான் உறை ஆடானை
நலங்கொள் மாமலர் தூவி நாள்தொறும்
வலங்கொள்வார் வினை மாயுமே.
பாடல் எண் : 8
வெந்த-நீறு அணி மார்பில் தோல் புனை
அந்தம் இல்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கைதொழும்
சிந்தையார் வினை தேயுமே.
பாடல் எண் : 9
மறை-வலாரொடு வானவர் தொழுது
அறையும் தண்புனல் ஆடானை
உறையும் ஈசனை ஏத்தத் தீவினை
பறையும் நல்வினை பற்றுமே.
பாடல் எண் : 10
மாயனும் மலரானும் கைதொழ
ஆய அந்தணன் ஆடானை
தூய மாமலர் தூவிக் கைதொழத்
தீய வல்வினை தீருமே.
பாடல் எண் : 11
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை
நாடி ஞான-சம்பந்தன் செந்தமிழ்
பாட நோய் பிணி பாறுமே.
=====================================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Sambandar went north from Rameswaram and visited thiruvAdAnai
# 2789 - periyapurāṇam - tiruñānasambandar purāṇam - 891
appadiyait toḻudu, vaḍa disaimēl selvār
.. aṅgai anal taritta pirān amarum kōyil
pukku iṟaiñjip pala padiyum toḻudu pōṭrip,
.. puṇari porudu alai-karaivāy oḻiyap pōndē
seppariya pugaḻt tiruvāḍānai sērndu
.. sendamiḻ-mālaigaḷ sāttic, civanār mannum
oppariya punavāyil pōṭri seydu
.. vaṇaṅginār ulagu uyya ñānam uṇḍār.
sambandar tēvāram - padigam 2.112 – tiruvāḍānai (tiru-āḍānai) - (paṇ - naṭṭarāgam)
(tāna tānana tāna tānana
tāna tānana tānana - Rhythm)
pāḍal eṇ : 1
mādu or kūṟu ugandu ēṟadu ēṟiya
ādiyān uṟai āḍānai
pōdināl punaindu ēttuvārdamai
vādiyā vinai māyumē.
pāḍal eṇ : 2
vāḍal veṇḍalai aṅgai ēndiniṇḍru
āḍalān uṟai āḍānai
tōḍu ulām malar tūvik kaidoḻa
vīḍum nuṅgaḷ vinaigaḷē.
pāḍal eṇ : 3
maṅgai kūṟinan, mānmaṟiyuḍai
aṅgaiyān uṟai āḍānai
taṅgaiyāl toḻudētta vallavar
maṅgum nōy piṇi māyumē.
pāḍal eṇ : 4
suṇṇa-nīṟu aṇi mārbil tōl punai
aṇṇalān uṟai āḍānai
vaṇṇa māmalar tūvik kaidoḻa
eṇṇuvār iḍar ēgumē.
pāḍal eṇ : 5
koy-aṇim-malark koṇḍrai sūḍiya
aiyan mēviya āḍānai
kai aṇim-malarāl vaṇaṅgiḍa
veyya valvinai vīḍumē.
pāḍal eṇ : 6
vān iḷam-madi malgu vār-saḍai
ānañju āḍalan āḍānai
tēn aṇim-malar sērtta mun-seyda
ūnam uḷḷa oḻiyumē.
pāḍal eṇ : 7
tulaṅgu veṇ-maḻu ēndic cūḻ-saḍai
alaṅgalān uṟai āḍānai
nalaṅgoḷ māmalar tūvi nāḷdoṟum
valaṅgoḷvār vinai māyumē.
pāḍal eṇ : 8
venda-nīṟu aṇi mārbil tōl punai
andam illavan āḍānai
ganda māmalar tūvik kaidoḻum
sindaiyār vinai tēyumē.
pāḍal eṇ : 9
maṟai-valāroḍu vānavar toḻudu
aṟaiyum taṇbunal āḍānai
uṟaiyum īsanai ēttat tīvinai
paṟaiyum nalvinai paṭrumē.
pāḍal eṇ : 10
māyanum malarānum kaidoḻa
āya andaṇan āḍānai
tūya māmalar tūvik kaidoḻat
tīya valvinai tīrumē.
pāḍal eṇ : 11
vīḍinār mali veṅgaḍattu niṇḍru
āḍalān uṟai āḍānai
nāḍi ñāna-sambandan sendamiḻ
pāḍa nōy piṇi pāṟumē.
=====================================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
Sambandar went north from Rameswaram and visited thiruvAdAnai
# 2789 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 891
अप्पदियैत् तॊऴुदु, वड दिसैमेल् सॆल्वार्
.. अङ्गै अनल् तरित्त पिरान् अमरुम् कोयिल्
पुक्कु इऱैञ्जिप् पल पदियुम् तॊऴुदु पोट्रिप्,
.. पुणरि पॊरुदु अलै-करैवाय् ऒऴियप् पोन्दे
सॆप्परिय पुगऴ्त् तिरुवाडानै सेर्न्दु
.. सॆन्दमिऴ्-मालैगळ् सात्तिच्, चिवनार् मन्नुम्
ऒप्परिय पुनवायिल् पोट्रि सॆय्दु
.. वणङ्गिनार् उलगु उय्य ञानम् उण्डार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.112 – तिरुवाडानै (तिरु-आडानै) - (पण् - नट्टरागम्)
(तान तानन तान तानन
तान तानन तानन - Rhythm)
पाडल् ऎण् : 1
मादु ऒर् कूऱु उगन्दु एऱदु एऱिय
आदियान् उऱै आडानै
पोदिनाल् पुनैन्दु एत्तुवार्दमै
वादिया विनै मायुमे.
पाडल् ऎण् : 2
वाडल् वॆण्डलै अङ्गै एन्दिनिण्ड्रु
आडलान् उऱै आडानै
तोडु उलाम् मलर् तूविक् कैदॊऴ
वीडुम् नुङ्गळ् विनैगळे.
पाडल् ऎण् : 3
मङ्गै कूऱिनन्, मान्मऱियुडै
अङ्गैयान् उऱै आडानै
तङ्गैयाल् तॊऴुदेत्त वल्लवर्
मङ्गुम् नोय् पिणि मायुमे.
पाडल् ऎण् : 4
सुण्ण-नीऱु अणि मार्बिल् तोल् पुनै
अण्णलान् उऱै आडानै
वण्ण मामलर् तूविक् कैदॊऴ
ऎण्णुवार् इडर् एगुमे.
पाडल् ऎण् : 5
कॊय्-अणिम्-मलर्क् कॊण्ड्रै सूडिय
ऐयन् मेविय आडानै
कै अणिम्-मलराल् वणङ्गिड
वॆय्य वल्विनै वीडुमे.
पाडल् ऎण् : 6
वान् इळम्-मदि मल्गु वार्-सडै
आनञ्जु आडलन् आडानै
तेन् अणिम्-मलर् सेर्त्त मुन्-सॆय्द
ऊनम् उळ्ळ ऒऴियुमे.
पाडल् ऎण् : 7
तुलङ्गु वॆण्-मऴु एन्दिच् चूऴ्-सडै
अलङ्गलान् उऱै आडानै
नलङ्गॊळ् मामलर् तूवि नाळ्दॊऱुम्
वलङ्गॊळ्वार् विनै मायुमे.
पाडल् ऎण् : 8
वॆन्द-नीऱु अणि मार्बिल् तोल् पुनै
अन्दम् इल्लवन् आडानै
गन्द मामलर् तूविक् कैदॊऴुम्
सिन्दैयार् विनै तेयुमे.
पाडल् ऎण् : 9
मऱै-वलारॊडु वानवर् तॊऴुदु
अऱैयुम् तण्बुनल् आडानै
उऱैयुम् ईसनै एत्तत् तीविनै
पऱैयुम् नल्विनै पट्रुमे.
पाडल् ऎण् : 10
मायनुम् मलरानुम् कैदॊऴ
आय अन्दणन् आडानै
तूय मामलर् तूविक् कैदॊऴत्
तीय वल्विनै तीरुमे.
पाडल् ऎण् : 11
वीडिनार् मलि वॆङ्गडत्तु निण्ड्रु
आडलान् उऱै आडानै
नाडि ञान-सम्बन्दन् सॆन्दमिऴ्
पाड नोय् पिणि पाऱुमे.
=====================================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Sambandar went north from Rameswaram and visited thiruvAdAnai
# 2789 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 891
అప్పదియైత్ తొఴుదు, వడ దిసైమేల్ సెల్వార్
.. అంగై అనల్ తరిత్త పిరాన్ అమరుం కోయిల్
పుక్కు ఇఱైంజిప్ పల పదియుం తొఴుదు పోట్రిప్,
.. పుణరి పొరుదు అలై-కరైవాయ్ ఒఴియప్ పోందే
సెప్పరియ పుగఴ్త్ తిరువాడానై సేర్న్దు
.. సెందమిఴ్-మాలైగళ్ సాత్తిచ్, చివనార్ మన్నుం
ఒప్పరియ పునవాయిల్ పోట్రి సెయ్దు
.. వణంగినార్ ఉలగు ఉయ్య ఞానం ఉండార్.
సంబందర్ తేవారం - పదిగం 2.112 – తిరువాడానై (తిరు-ఆడానై) - (పణ్ - నట్టరాగం)
(తాన తానన తాన తానన
తాన తానన తానన - Rhythm)
పాడల్ ఎణ్ : 1
మాదు ఒర్ కూఱు ఉగందు ఏఱదు ఏఱియ
ఆదియాన్ ఉఱై ఆడానై
పోదినాల్ పునైందు ఏత్తువార్దమై
వాదియా వినై మాయుమే.
పాడల్ ఎణ్ : 2
వాడల్ వెండలై అంగై ఏందినిండ్రు
ఆడలాన్ ఉఱై ఆడానై
తోడు ఉలాం మలర్ తూవిక్ కైదొఴ
వీడుం నుంగళ్ వినైగళే.
పాడల్ ఎణ్ : 3
మంగై కూఱినన్, మాన్మఱియుడై
అంగైయాన్ ఉఱై ఆడానై
తంగైయాల్ తొఴుదేత్త వల్లవర్
మంగుం నోయ్ పిణి మాయుమే.
పాడల్ ఎణ్ : 4
సుణ్ణ-నీఱు అణి మార్బిల్ తోల్ పునై
అణ్ణలాన్ ఉఱై ఆడానై
వణ్ణ మామలర్ తూవిక్ కైదొఴ
ఎణ్ణువార్ ఇడర్ ఏగుమే.
పాడల్ ఎణ్ : 5
కొయ్-అణిం-మలర్క్ కొండ్రై సూడియ
ఐయన్ మేవియ ఆడానై
కై అణిం-మలరాల్ వణంగిడ
వెయ్య వల్వినై వీడుమే.
పాడల్ ఎణ్ : 6
వాన్ ఇళం-మది మల్గు వార్-సడై
ఆనంజు ఆడలన్ ఆడానై
తేన్ అణిం-మలర్ సేర్త్త మున్-సెయ్ద
ఊనం ఉళ్ళ ఒఴియుమే.
పాడల్ ఎణ్ : 7
తులంగు వెణ్-మఴు ఏందిచ్ చూఴ్-సడై
అలంగలాన్ ఉఱై ఆడానై
నలంగొళ్ మామలర్ తూవి నాళ్దొఱుం
వలంగొళ్వార్ వినై మాయుమే.
పాడల్ ఎణ్ : 8
వెంద-నీఱు అణి మార్బిల్ తోల్ పునై
అందం ఇల్లవన్ ఆడానై
గంద మామలర్ తూవిక్ కైదొఴుం
సిందైయార్ వినై తేయుమే.
పాడల్ ఎణ్ : 9
మఱై-వలారొడు వానవర్ తొఴుదు
అఱైయుం తణ్బునల్ ఆడానై
ఉఱైయుం ఈసనై ఏత్తత్ తీవినై
పఱైయుం నల్వినై పట్రుమే.
పాడల్ ఎణ్ : 10
మాయనుం మలరానుం కైదొఴ
ఆయ అందణన్ ఆడానై
తూయ మామలర్ తూవిక్ కైదొఴత్
తీయ వల్వినై తీరుమే.
పాడల్ ఎణ్ : 11
వీడినార్ మలి వెంగడత్తు నిండ్రు
ఆడలాన్ ఉఱై ఆడానై
నాడి ఞాన-సంబందన్ సెందమిఴ్
పాడ నోయ్ పిణి పాఱుమే.
=====================================
No comments:
Post a Comment