Wednesday, March 2, 2022

4.61 - பாசமும் கழிக்ககில்லா - இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) - pAsamum kazhikkagillA - irAmEccuram (Rameswaram)

105) 4.61 - பாசமும் கழிக்ககில்லா - இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) - pAsamum kazhikkagillA - irAmEccuram (Rameswaram)

திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.61 – பாசமும் கழிக்ககில்லா - இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) - (திருநேரிசை)

Thirunavukkarasar Thevaram - padhigam 4.61 – pAsamum kazhikkagillA - irAmEccuram (Rameswaram) - (thirunErisai)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:
PDF: https://drive.google.com/file/d/1cmGWiwMtkErS75-ZVHjmO61fXfvgISiv/view?usp=sharing

***
On YouTube:
Tamil discussion: 
Part-1: https://youtu.be/5VT_-GCrLEQ 
Part-2: https://youtu.be/oNrudTZp3-8

English:
***

English translation (meaning): V.M. Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_061.HTM


V. Subramanian
================

 This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.61 – இராமேச்சுரம் - (திருநேரிசை)


இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) - இராமனால் ஸ்தாபிக்கப்பட்ட தலம். மிகுந்த புகழுடைய தலம். மிகப் பெரிய கோயில். 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.


Notes:

1) In this padhigam, Thirunavukkarasar mentions in every song that this temple (Rameswaram) was built by Rama after his victory over Ravana.

Rama worshiped Siva here to expiate any sins he incurred by killing Ravana and his clan.


2) Thirunavukkarasar normally does not have any signature closing song in his padhigams that state the benefits a devotee gets by reciting that padhigam. However, this particular padhigam is one of very few padhigams of Thirunavukkarasar in which he mentions in the final song the benefit a devotee attains by reciting that padhigam.

----------

Thirunavukkarasar goes to Rameswaram

#1673 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 408

தென்னிலங்கை யிராவணன்றன் சிரமீரைந் துந்துணித்த

மன்னவனா மிராமனுக்கு வரும்பெரும்பா தகந்தீர்த்த

பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி

துன்னிமனங் கரைந்துருகத் தொழுதெழுந்தார் சொல்லரசர்;


Thirunavukkarasar sings padhigams in Rameswaram

#1674 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 409

தேவர்தொழுந் தனிமுதலைத் திருவிரா மேச்சுரத்து

மேவியசங் கரனையெதிர் நின்றுவிருப் புறுமொழியால்

பாவுதிரு நேரிசைகண் முதலான தமிழ்பாடி

நாவரசர் திருத்தொண்டு நலம்பெருகச் செய்தமர்ந்தார்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.61 – இராமேச்சுரம் - (திருநேரிசை)

(அறுசீர் விருத்தம் - meter)

பாடல் எண் : 1

பாசமுங் கழிக்க கில்லா வரக்கரைப் படுத்துத் தக்க

வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்

நேசமிக் கன்பி னாலே நினைமினீர் நின்று நாளும்

தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரம்மே.


பாடல் எண் : 2

முற்றின நாள்க ளென்று முடிப்பதே கார ணம்மாய்

உற்றவன் போர்க ளாலே யுணர்விலா வரக்கர் தம்மைச்

செற்றமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைப்

பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை யீசன் பாலே.


பாடல் எண் : 3

கடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித்

திடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத்

தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி

உடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.


பாடல் எண் : 4

குன்றுபோற் றோளு டைய குணமிலா வரக்கர் தம்மைக்

கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்

நன்றுபோ னெஞ்ச மேநீ நன்மையை யறிதி யாயில்

சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருவிரா மேச்சு ரம்மே.


பாடல் எண் : 5

வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்

கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத்

தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக்

கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.


பாடல் எண் : 6

ஆர்வல நம்மின் மிக்கா ரென்றவவ் வரக்கர் கூடிப்

போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்

தேர்வலஞ் செற்ற மால்செய் திருவிரா மேச்சு ரத்தைச்

சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை யெந்தை பாலே.


பாடல் எண் : 7

வாக்கினா லின்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்

போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மாறான்

தேக்குநீர் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை

நோக்கினால் வணங்கு வார்க ணோய்வினை நுணுகு மன்றே.


பாடல் எண் : 8

பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து

கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த

சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்

தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.


பாடல் எண் : 9

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்

வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு

தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை

நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.


பாடல் எண் : 10

வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்

புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்

செங்கண்மால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்

தங்கணா லெய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.


பாடல் எண் : 11

வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி யரக்கர் கோனை

விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்

திரைகள்முத் தால்வ ணங்குந் திருவிரா மேச்சு ரத்தை

உரைகள்பத் தாலு ரைப்பா ருள்குவா ரன்பி னாலே.

============ ============


Word separated version:


Thirunavukkarasar goes to Rameswaram

#1673 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 408

தென்-இலங்கை இராவணன்றன் சிரம்-ஈரைந்தும் துணித்த

மன்னவனாம் இராமனுக்கு வரும் பெரும்-பாதகம் தீர்த்த

பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைந்து-போய்ப் பெரு-மகிழ்ச்சி

துன்னி மனம் கரைந்து உருகத் தொழுதெழுந்தார் சொல்லரசர்;


Thirunavukkarasar sings padhigams in Rameswaram

#1674 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 409

தேவர் தொழும் தனி-முதலைத் திரு-இராமேச்சுரத்து

மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்பு-உறு மொழியால்

பாவு திரு-நேரிசைகள் முதலான தமிழ் பாடி

நாவரசர் திருத்தொண்டு நலம்-பெருகச் செய்து-அமர்ந்தார்.


திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.61 – இராமேச்சுரம் - (திருநேரிசை)

(அறுசீர் விருத்தம் - meter)

பாடல் எண் : 1

பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்துத், தக்க

வாசம் மிக்கலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில்,

நேசம் மிக்கு அன்பினாலே நினைமின்-நீர் நின்று நாளும்

தேசம் மிக்கான் இருந்த திரு-இராமேச்சுரம்மே.


பாடல் எண் : 2

முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணம்மாய்

உற்ற வன்-போர்களாலே உணர்வு-இலா அரக்கர் தம்மைச்

செற்ற மால் செய்த கோயில் திரு-இராமேச்சுரத்தைப்

பற்றி நீ பரவு நெஞ்சே படர்-சடை ஈசன் பாலே.


பாடல் எண் : 3

கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் கருமம் முற்றித்

திடலிடைச் செய்த கோயில் திரு-இராமேச்சுரத்தைத்

தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி

உடலிடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே.


பாடல் எண் : 4

குன்றுபோல் தோள் உடைய, குணம்-இலா அரக்கர் தம்மைக்

கொன்று, போர்-ஆழி அம்-மால் வேட்கையால் செய்த கோயில்

நன்றுபோல் நெஞ்சமே நீ, நன்மையை அறிதியாயில்,

சென்று நீ தொழுது உய் கண்டாய், திரு-இராமேச்சுரம்மே.


பாடல் எண் : 5

வீரம் மிக்கு எயிறு காட்டி விண்-உற நீண்டரக்கன்

கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடற்படுத்துத்

தீரம் மிக்கான் இருந்த திரு-இராமேச்சுரத்தைக்

கோர மிக்கார் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே.


பாடல் எண் : 6

"ஆர் வலம் நம்மின் மிக்கார்" என்ற அவ்வரக்கர் கூடிப்

போர்வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்

தேர்வலம் செற்ற மால் செய் திரு-இராமேச்சுரத்தைச்

சேர், மட நெஞ்சமே நீ, செஞ்சடை எந்தை பாலே.


பாடல் எண் : 7

வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம்

போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்தனை உண்டு மால்தான்

தேக்கு-நீர் செய்த கோயில் திரு-இராமேச்சுரத்தை

நோக்கினால் வணங்குவார்கள் நோய் வினை நுணுகும்-அன்றே.


பாடல் எண் : 8

பலவும் நாள் தீமை செய்து பார்தன்மேல் குழுமி வந்து

கொலை-விலார் கொடியர் ஆய அரக்கரைக் கொன்று வீழ்த்த

சிலையினான் செய்த கோயில் திரு-இராமேச்சுரத்தைத்

தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம்-அது-ஆமே.


பாடல் எண் : 9

கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்

வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு

தேடி மால் செய்த கோயில் திரு-இராமேச்சுரத்தை

நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகும்-அன்றே.


பாடல் எண் : 10

வன்கண்ணர் வாள்-அரக்கர் வாழ்-வினை ஒன்று-அறியார்

புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டிச்

செங்கண்-மால் செய்த கோயில் திரு-இராமேச்சுரத்தைத்

தங்கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன் பாலே.


பாடல் எண் : 11

வரைகள் ஒத்தே உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனை

விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில்

திரைகள் முத்தால் வணங்கும் திரு-இராமேச்சுரத்தை

உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே.

============ ============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Thirunavukkarasar goes to Rameswaram

#1673 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 408

ten-ilaṅgai irāvaṇaṇḍran siram-īraindum tuṇitta

mannavanām irāmanukku varum perum-pādagam tīrtta

piññaganait toḻuvadaṟku ninaindu-pōyp peru-magiḻcci

tunni manam karaindu urugat toḻudeḻundār sollarasar;


Thirunavukkarasar sings padhigams in Rameswaram

#1674 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 409

dēvar toḻum tani-mudalait tiru-irāmēccurattu

mēviya saṅgaranai edir niṇḍru viruppu-uṟu moḻiyāl

pāvu tiru-nērisaigaḷ mudalāna tamiḻ pāḍi

nāvarasar tiruttoṇḍu nalam-perugac ceydu-amarndār.


tirunāvukkarasar tēvāram - padigam 4.61 – irāmēccuram - (tirunērisai)

(aṟusīr viruttam - meter)

pāḍal eṇ : 1

pāsamum kaḻikkagillā arakkaraip paḍuttut, takka

vāsam mikkalargaḷ koṇḍu madiyināl māl sey kōyil,

nēsam mikku anbinālē ninaimin-nīr niṇḍru nāḷum

tēsam mikkān irunda tiru-irāmēccurammē.


pāḍal eṇ : 2

muṭrina nāḷgaḷ eṇḍru muḍippadē kāraṇammāy

uṭra van-pōrgaḷālē uṇarvu-ilā arakkar tammaic

ceṭra māl seyda kōyil tiru-irāmēccurattaip

paṭri nī paravu neñjē paḍar-saḍai īsan pālē.


pāḍal eṇ : 3

kaḍaliḍai malaigaḷ tammāl aḍaittu māl karumam muṭrit

tiḍaliḍaic ceyda kōyil tiru-irāmēccurattait

toḍaliḍai vaittu nāvil suḻalgiṇḍrēn tūymai iṇḍri

uḍaliḍai niṇḍrum pērā aivar āṭṭuṇḍu nānē.


pāḍal eṇ : 4

kuṇḍrubōl tōḷ uḍaiya, guṇam-ilā arakkar tammaik

koṇḍru, pōr-āḻi am-māl vēṭkaiyāl seyda kōyil

naṇḍrubōl neñjamē nī, nanmaiyai aṟidiyāyil,

seṇḍru nī toḻudu uy kaṇḍāy, tiru-irāmēccurammē.


pāḍal eṇ : 5

vīram mikku eyiṟu kāṭṭi viṇ-uṟa nīṇḍarakkan

kūram mikkavanaic ceṇḍru koṇḍru uḍan kaḍaṟpaḍuttut

dīram mikkān irunda tiru-irāmēccurattaik

kōra mikkār tavattāl kūḍuvār kuṟippu uḷārē.


pāḍal eṇ : 6

"ār valam nammin mikkār" eṇḍra avvarakkar kūḍip

pōrvalam seydu mikkup porudavar tammai vīṭṭit

tērvalam seṭra māl sey tiru-irāmēccurattaic

cēr, maḍa neñjamē nī, señjaḍai endai pālē.


pāḍal eṇ : 7

vākkināl inbu uraittu vāḻgilār tammai ellām

pōkkināl puḍaittu avargaḷ uyirdanai uṇḍu māldān

tēkku-nīr seyda kōyil tiru-irāmēccurattai

nōkkināl vaṇaṅguvārgaḷ nōy vinai nuṇugum-aṇḍrē.


pāḍal eṇ : 8

palavum nāḷ tīmai seydu pārdanmēl kuḻumi vandu

kolai-vilār koḍiyar āya arakkaraik koṇḍru vīḻtta

silaiyinān seyda kōyil tiru-irāmēccurattait

talaiyināl vaṇaṅguvārgaḷ tāḻvar ām tavam-adu-āmē.


pāḍal eṇ : 9

kōḍi mā tavaṅgaḷ seydu kuṇḍrinār tammai ellām

vīḍavē sakkarattāl eṟindu pin anbu koṇḍu

tēḍi māl seyda kōyil tiru-irāmēccurattai

nāḍi vāḻ neñjamē nī nanneṟi āgum-aṇḍrē.


pāḍal eṇ : 10

van-gaṇṇar vāḷ-arakkar vāḻ-vinai oṇḍru-aṟiyār

pun-gaṇṇar āgi niṇḍru pōrgaḷ seydārai māṭṭic

ceṅgaṇ-māl seyda kōyil tiru-irāmēccurattait

taṅgaṇāl eyda vallār tāḻvar ām talaivan pālē.


pāḍal eṇ : 11

varaigaḷ ottē uyarnda maṇimuḍi arakkar kōnai

viraiya muṭru aṟa oḍukki mīṇḍu māl seyda kōyil

tiraigaḷ muttāl vaṇaṅgum tiru-irāmēccurattai

uraigaḷ pattāl uraippār uḷguvār anbinālē.

============ ============

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )


Thirunavukkarasar goes to Rameswaram

#1673 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 408

तॆन्-इलङ्गै इरावणण्ड्रन् सिरम्-ईरैन्दुम् तुणित्त

मन्नवनाम् इरामनुक्कु वरुम् पॆरुम्-पादगम् तीर्त्त

पिञ्ञगनैत् तॊऴुवदऱ्‌कु निनैन्दु-पोय्प् पॆरु-मगिऴ्च्चि

तुन्नि मनम् करैन्दु उरुगत् तॊऴुदॆऴुन्दार् सॊल्लरसर्;


Thirunavukkarasar sings padhigams in Rameswaram

#1674 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 409

देवर् तॊऴुम् तनि-मुदलैत् तिरु-इरामेच्चुरत्तु

मेविय सङ्गरनै ऎदिर् निण्ड्रु विरुप्पु-उऱु मॊऴियाल्

पावु तिरु-नेरिसैगळ् मुदलान तमिऴ् पाडि

नावरसर् तिरुत्तॊण्डु नलम्-पॆरुगच् चॆय्दु-अमर्न्दार्.


तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.61 – इरामेच्चुरम् - (तिरुनेरिसै)

(अऱुसीर् विरुत्तम् - meter)

पाडल् ऎण् : 1

पासमुम् कऴिक्कगिल्ला अरक्करैप् पडुत्तुत्, तक्क

वासम् मिक्कलर्गळ् कॊण्डु मदियिनाल् माल् सॆय् कोयिल्,

नेसम् मिक्कु अन्बिनाले निनैमिन्-नीर् निण्ड्रु नाळुम्

तेसम् मिक्कान् इरुन्द तिरु-इरामेच्चुरम्मे.


पाडल् ऎण् : 2

मुट्रिन नाळ्गळ् ऎण्ड्रु मुडिप्पदे कारणम्माय्

उट्र वन्-पोर्गळाले उणर्वु-इला अरक्कर् तम्मैच्

चॆट्र माल् सॆय्द कोयिल् तिरु-इरामेच्चुरत्तैप्

पट्रि नी परवु नॆञ्जे पडर्-सडै ईसन् पाले.


पाडल् ऎण् : 3

कडलिडै मलैगळ् तम्माल् अडैत्तु माल् करुमम् मुट्रित्

तिडलिडैच् चॆय्द कोयिल् तिरु-इरामेच्चुरत्तैत्

तॊडलिडै वैत्तु नाविल् सुऴल्गिण्ड्रेन् तूय्मै इण्ड्रि

उडलिडै निण्ड्रुम् पेरा ऐवर् आट्टुण्डु नाने.


पाडल् ऎण् : 4

कुण्ड्रुबोल् तोळ् उडैय, गुणम्-इला अरक्कर् तम्मैक्

कॊण्ड्रु, पोर्-आऴि अम्-माल् वेट्कैयाल् सॆय्द कोयिल्

नण्ड्रुबोल् नॆञ्जमे नी, नन्मैयै अऱिदियायिल्,

सॆण्ड्रु नी तॊऴुदु उय् कण्डाय्, तिरु-इरामेच्चुरम्मे.


पाडल् ऎण् : 5

वीरम् मिक्कु ऎयिऱु काट्टि विण्-उऱ नीण्डरक्कन्

कूरम् मिक्कवनैच् चॆण्ड्रु कॊण्ड्रु उडन् कडऱ्‌पडुत्तुत्

दीरम् मिक्कान् इरुन्द तिरु-इरामेच्चुरत्तैक्

कोर मिक्कार् तवत्ताल् कूडुवार् कुऱिप्पु उळारे.


पाडल् ऎण् : 6

"आर् वलम् नम्मिन् मिक्कार्" ऎण्ड्र अव्वरक्कर् कूडिप्

पोर्वलम् सॆय्दु मिक्कुप् पॊरुदवर् तम्मै वीट्टित्

तेर्वलम् सॆट्र माल् सॆय् तिरु-इरामेच्चुरत्तैच्

चेर्, मड नॆञ्जमे नी, सॆञ्जडै ऎन्दै पाले.


पाडल् ऎण् : 7

वाक्किनाल् इन्बु उरैत्तु वाऴ्गिलार् तम्मै ऎल्लाम्

पोक्किनाल् पुडैत्तु अवर्गळ् उयिर्दनै उण्डु माल्दान्

तेक्कु-नीर् सॆय्द कोयिल् तिरु-इरामेच्चुरत्तै

नोक्किनाल् वणङ्गुवार्गळ् नोय् विनै नुणुगुम्-अण्ड्रे.


पाडल् ऎण् : 8

पलवुम् नाळ् तीमै सॆय्दु पार्दन्मेल् कुऴुमि वन्दु

कॊलै-विलार् कॊडियर् आय अरक्करैक् कॊण्ड्रु वीऴ्त्त

सिलैयिनान् सॆय्द कोयिल् तिरु-इरामेच्चुरत्तैत्

तलैयिनाल् वणङ्गुवार्गळ् ताऴ्वर् आम् तवम्-अदु-आमे.


पाडल् ऎण् : 9

कोडि मा तवङ्गळ् सॆय्दु कुण्ड्रिनार् तम्मै ऎल्लाम्

वीडवे सक्करत्ताल् ऎऱिन्दु पिन् अन्बु कॊण्डु

तेडि माल् सॆय्द कोयिल् तिरु-इरामेच्चुरत्तै

नाडि वाऴ् नॆञ्जमे नी नन्नॆऱि आगुम्-अण्ड्रे.


पाडल् ऎण् : 10

वन्-गण्णर् वाळ्-अरक्कर् वाऴ्-विनै ऒण्ड्रु-अऱियार्

पुन्-गण्णर् आगि निण्ड्रु पोर्गळ् सॆय्दारै माट्टिच्

चॆङ्गण्-माल् सॆय्द कोयिल् तिरु-इरामेच्चुरत्तैत्

तङ्गणाल् ऎय्द वल्लार् ताऴ्वर् आम् तलैवन् पाले.


पाडल् ऎण् : 11

वरैगळ् ऒत्ते उयर्न्द मणिमुडि अरक्कर् कोनै

विरैय मुट्रु अऱ ऒडुक्कि मीण्डु माल् सॆय्द कोयिल्

तिरैगळ् मुत्ताल् वणङ्गुम् तिरु-इरामेच्चुरत्तै

उरैगळ् पत्ताल् उरैप्पार् उळ्गुवार् अन्बिनाले.

============ ============


Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


Thirunavukkarasar goes to Rameswaram

#1673 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 408

తెన్-ఇలంగై ఇరావణండ్రన్ సిరం-ఈరైందుం తుణిత్త

మన్నవనాం ఇరామనుక్కు వరుం పెరుం-పాదగం తీర్త్త

పిఞ్ఞగనైత్ తొఴువదఱ్కు నినైందు-పోయ్ప్ పెరు-మగిఴ్చ్చి

తున్ని మనం కరైందు ఉరుగత్ తొఴుదెఴుందార్ సొల్లరసర్;


Thirunavukkarasar sings padhigams in Rameswaram

#1674 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 409

దేవర్ తొఴుం తని-ముదలైత్ తిరు-ఇరామేచ్చురత్తు

మేవియ సంగరనై ఎదిర్ నిండ్రు విరుప్పు-ఉఱు మొఴియాల్

పావు తిరు-నేరిసైగళ్ ముదలాన తమిఴ్ పాడి

నావరసర్ తిరుత్తొండు నలం-పెరుగచ్ చెయ్దు-అమర్న్దార్.


తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.61 – ఇరామేచ్చురం - (తిరునేరిసై)

(అఱుసీర్ విరుత్తం - meter)

పాడల్ ఎణ్ : 1

పాసముం కఴిక్కగిల్లా అరక్కరైప్ పడుత్తుత్, తక్క

వాసం మిక్కలర్గళ్ కొండు మదియినాల్ మాల్ సెయ్ కోయిల్,

నేసం మిక్కు అన్బినాలే నినైమిన్-నీర్ నిండ్రు నాళుం

తేసం మిక్కాన్ ఇరుంద తిరు-ఇరామేచ్చురమ్మే.


పాడల్ ఎణ్ : 2

ముట్రిన నాళ్గళ్ ఎండ్రు ముడిప్పదే కారణమ్మాయ్

ఉట్ర వన్-పోర్గళాలే ఉణర్వు-ఇలా అరక్కర్ తమ్మైచ్

చెట్ర మాల్ సెయ్ద కోయిల్ తిరు-ఇరామేచ్చురత్తైప్

పట్రి నీ పరవు నెంజే పడర్-సడై ఈసన్ పాలే.


పాడల్ ఎణ్ : 3

కడలిడై మలైగళ్ తమ్మాల్ అడైత్తు మాల్ కరుమం ముట్రిత్

తిడలిడైచ్ చెయ్ద కోయిల్ తిరు-ఇరామేచ్చురత్తైత్

తొడలిడై వైత్తు నావిల్ సుఴల్గిండ్రేన్ తూయ్మై ఇండ్రి

ఉడలిడై నిండ్రుం పేరా ఐవర్ ఆట్టుండు నానే.


పాడల్ ఎణ్ : 4

కుండ్రుబోల్ తోళ్ ఉడైయ, గుణం-ఇలా అరక్కర్ తమ్మైక్

కొండ్రు, పోర్-ఆఴి అం-మాల్ వేట్కైయాల్ సెయ్ద కోయిల్

నండ్రుబోల్ నెంజమే నీ, నన్మైయై అఱిదియాయిల్,

సెండ్రు నీ తొఴుదు ఉయ్ కండాయ్, తిరు-ఇరామేచ్చురమ్మే.


పాడల్ ఎణ్ : 5

వీరం మిక్కు ఎయిఱు కాట్టి విణ్-ఉఱ నీండరక్కన్

కూరం మిక్కవనైచ్ చెండ్రు కొండ్రు ఉడన్ కడఱ్పడుత్తుత్

దీరం మిక్కాన్ ఇరుంద తిరు-ఇరామేచ్చురత్తైక్

కోర మిక్కార్ తవత్తాల్ కూడువార్ కుఱిప్పు ఉళారే.


పాడల్ ఎణ్ : 6

"ఆర్ వలం నమ్మిన్ మిక్కార్" ఎండ్ర అవ్వరక్కర్ కూడిప్

పోర్వలం సెయ్దు మిక్కుప్ పొరుదవర్ తమ్మై వీట్టిత్

తేర్వలం సెట్ర మాల్ సెయ్ తిరు-ఇరామేచ్చురత్తైచ్

చేర్, మడ నెంజమే నీ, సెంజడై ఎందై పాలే.


పాడల్ ఎణ్ : 7

వాక్కినాల్ ఇన్బు ఉరైత్తు వాఴ్గిలార్ తమ్మై ఎల్లాం

పోక్కినాల్ పుడైత్తు అవర్గళ్ ఉయిర్దనై ఉండు మాల్దాన్

తేక్కు-నీర్ సెయ్ద కోయిల్ తిరు-ఇరామేచ్చురత్తై

నోక్కినాల్ వణంగువార్గళ్ నోయ్ వినై నుణుగుం-అండ్రే.


పాడల్ ఎణ్ : 8

పలవుం నాళ్ తీమై సెయ్దు పార్దన్మేల్ కుఴుమి వందు

కొలై-విలార్ కొడియర్ ఆయ అరక్కరైక్ కొండ్రు వీఴ్త్త

సిలైయినాన్ సెయ్ద కోయిల్ తిరు-ఇరామేచ్చురత్తైత్

తలైయినాల్ వణంగువార్గళ్ తాఴ్వర్ ఆం తవం-అదు-ఆమే.


పాడల్ ఎణ్ : 9

కోడి మా తవంగళ్ సెయ్దు కుండ్రినార్ తమ్మై ఎల్లాం

వీడవే సక్కరత్తాల్ ఎఱిందు పిన్ అన్బు కొండు

తేడి మాల్ సెయ్ద కోయిల్ తిరు-ఇరామేచ్చురత్తై

నాడి వాఴ్ నెంజమే నీ నన్నెఱి ఆగుం-అండ్రే.


పాడల్ ఎణ్ : 10

వన్-గణ్ణర్ వాళ్-అరక్కర్ వాఴ్-వినై ఒండ్రు-అఱియార్

పున్-గణ్ణర్ ఆగి నిండ్రు పోర్గళ్ సెయ్దారై మాట్టిచ్

చెంగణ్-మాల్ సెయ్ద కోయిల్ తిరు-ఇరామేచ్చురత్తైత్

తంగణాల్ ఎయ్ద వల్లార్ తాఴ్వర్ ఆం తలైవన్ పాలే.


పాడల్ ఎణ్ : 11

వరైగళ్ ఒత్తే ఉయర్న్ద మణిముడి అరక్కర్ కోనై

విరైయ ముట్రు అఱ ఒడుక్కి మీండు మాల్ సెయ్ద కోయిల్

తిరైగళ్ ముత్తాల్ వణంగుం తిరు-ఇరామేచ్చురత్తై

ఉరైగళ్ పత్తాల్ ఉరైప్పార్ ఉళ్గువార్ అన్బినాలే.

============ ============

No comments:

Post a Comment