118) 1.117 - காடது அணிகலம் - (மொழிமாற்று) - kAdadhu aNigalam - (mozhimAtRu)
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.117 – காடது அணிகலம் - பிரமபுரம் - (மொழிமாற்று) - (பண் - வியாழக்குறிஞ்சி)
sambandar tēvāram - padigam 1.117 – kāḍadu aṇigalam - piramapuram - (moḻimāṭru) - (paṇ - viyāḻakkuṟiñji)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 1.117 - காடது அணிகலம் - (மொழிமாற்று) - kAdadhu aNigalam - (mozhimAtRu)
English translation – by V.M.Subramanya Ayyar:
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_117.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/RRfYsTX8l7U
Part-2: https://youtu.be/GWZ9eqDWvI0
Part-3: https://youtu.be/TMW19WXVYP8
***
V. Subramanian
===================== ================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.117 – பிரமபுரம் - (மொழிமாற்று) - (பண் - வியாழக்குறிஞ்சி)
சீகாழியின் 12 பெயர்களும் 12 பாடல்களில் அமையப் பெற்றது இப்பதிகம்.
(அந்தப் 12 பெயர்கள் - பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம்)
மொழிமாற்று:
மொழிமாற்று என்பது பாடல்களுக்குப் பொருள்கொள்ளும் வகைகளில் ஒன்று. பாடலில் உள்ள சொற்களைப் பிரித்துப் பொருளுக்கு ஏற்பத் தக்க இடத்தில் மாற்றிவைத்துப் பொருள்கொள்வது மொழிமாற்று எனப்படும்.
(அடுத்தடுத்துள்ள இரு சொற்றொடர்களில் சில சொற்களை இடம் மாற்றி அமைத்துப் பொருள்கொள்ளவேண்டும்).
Mozhimatru ( moḻimāṭru )
A mode of construing a verse in which the words have to be transposed for its proper meaning.
--------
Padhigam background - Periya Puranam
Sambandar sang various chithrakavis (intricate songs) while in Sikazhi
# 2174 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 276
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்று *
வந்தசொற் சீர்மாலை மாற்று வழிமொழி யெல்லா மடக்குச்
சந்தவி யமகமேக பாதந் தமிழிருக் குக்குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை யீரடி யீரடி வைப்பு,
(* Dharmapuram Adheenam book has: மொழி மாற்றும்)
Word separated:
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழிமாற்று, *
வந்த சொற்-சீர் மாலைமாற்று, வழிமொழி, எல்லாம் மடக்குச்
சந்த இயமகம், ஏக-பாதம், தமிழ் இருக்குக்குறள் சாத்தி,
எந்தைக்கு எழுகூற்றிருக்கை, ஈரடி, ஈரடி வைப்பு,
(* Dharmapuram book has: மொழிமாற்றும்)
# 2175 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 277
நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகு மிராகஞ்
சால்பினிற் சக்கர மாதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல விலக்கிய மாக வெல்லாப் பொருள்கோளு முற்ற *
ஞாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர்.
(* Dharmapuram book has: பொருள்களு முற்ற)
Word separated:
நாலடி மேல் வைப்பு, மேன்மை நடையின் முடுகும் இராகம்,
சால்பினில் சக்கரம்-ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிகம்,
மூல இலக்கியமாக எல்லாப் பொருள்கோளும் முற்ற, *
ஞாலத்து உயர்-காழியாரைப் பாடினார் ஞானசம்பந்தர்.
(* Dharmapuram book has: பொருள்களும் முற்ற)
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 1.117 – பிரமபுரம் - (மொழிமாற்று) - (பண் - வியாழக்குறிஞ்சி)
(கட்டளைக் கலித்துறை - meter)
காட தணிகலங் காரர வம்பதி காலதனில்
தோட தணிகுவர் சுந்தரக் காதினிற் றூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம் வில்லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப் பிரம புரத்தரரே.
Word separated:
காடது அணிகலம் கார்-அரவம் பதி; கால்-அதனில்
தோடது அணிகுவர் சுந்தரக் காதினில் தூச் சிலம்பர்;
வேடது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்;
பீடது அணி மணி-மாடப் பிரமபுரத்து அரரே.
கற்றைச் சடையது கங்கண முன்கையிற் றிங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.
Word separated:
கற்றைச் சடையது கங்கணம் முன்-கையில் திங்கள் கங்கை;
பற்றித்து முப்புரம் பார் படைத்தோன்-தலை சுட்டது; பண்டு
எற்றித்துப் பாம்பை அணிந்தது கூற்றை; எழில் விளங்கும்
வெற்றிச் சிலை-மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே.
கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாக முரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவிய புண்ணியரே.
Word separated:
கூவிளம் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது;
தூ-விளங்கும் பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்தி; நாகம்
ஏ விளங்கும் நுதலாளையும் பாகம் உரித்தனர்; இன்-
பூ இளஞ்சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.
உரித்தது பாம்பை யுடன்மிசை யிட்டதோ ரொண்களிற்றை
எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற் றிருந்தவரே.
Word separated:
உரித்தது பாம்பை உடல்மிசை இட்டது ஓர் ஒண்-களிற்றை;
எரித்தது ஓர் ஆமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்;
செருத்தது சூலத்தை ஏந்திற்றுத் தக்கனை வேள்வி; பன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே.
கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு மேந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.
Word separated:
கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை; குறுந்தாளன
இட்டுவர் பூதம் கலப்பு இலர் இன்-புகழ்; என்பு உலவின்
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்; வான்
தொட்டுவரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.
சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.
Word separated:
சாத்துவர் பாசம் தடக்-கையில் ஏந்துவர் கோவணம்; தம்
கூத்து அவர் கச்சுக் குலவி-நின்று ஆடுவர்; கொக்கிறகும்
பேர்த்தவர் பல்-படை பேய்-அவை சூடுவர்; பேரெழிலார்;
பூத் தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.
காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற் கழல்சிலம்பு
மாலது வேந்தன் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
டாலது வூர்வ ரடலேற் றிருப்ப ரணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர மேயவரே.
Word separated:
காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு;
மாலது ஏந்தல் மழுவது பாகம்; வளர்-கொழுங்கோட்டு
ஆலது ஊர்வர் அடல்-ஏற்று இருப்பர்; அணிமணிநீர்ச்
சேலது கண்ணி ஒர் பங்கர் சிரபுர மேயவரே.
நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.
(There may be some variations in first part of lines 1 & 2.
நெருப்புரு ? நெருப்புறு ?
மருப்புறு ? மருப்புரு ? )
Word separated:
நெருப்பு உரு வெள்-விடை மேனியர் ஏறுவர்; நெற்றியின்கண்
மருப்பு உறுவன் கண்ணர் தாதையைக் காட்டுவர் மா-முருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த் தந்தையார்; விறல் மாதவர் வாழ்,
பொருப்பு உறு மாளிகைத் தென்-புறவத்து அணி புண்ணியரே.
(There may be some variations in first part of lines 1 & 2.
நெருப்பு உரு ? நெருப்பு உறு ?
மருப்பு உறு ? மருப்பு உரு ? )
இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவிய தத்துவரே.
Word separated:
இலங்கைத் தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை; இல்-நாள்
கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது;
கலம் கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்;
சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.
அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுண் மேய கறைக்கண்டரே.
Word separated:
அடியிணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்;
கொடி அணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோல் உடுப்பர்;
பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர் கூறு உடையர்;
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.
பாடல் எண் : 11
கையது வெண்குழை காதது சூல மமணர் புத்தர்
எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொ ரேனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவிய கொற்றவரே.
Word separated:
கையது வெண்-குழை காதது சூலம்; அமணர் புத்தர்
எய்துவர் தம்மை அடியவர் எய்தார்; ஒர் ஏனக்-கொம்பு
மெய் திகழ் கோவணம் பூண்பது உடுப்பது; மேதகைய
கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.
பாடல் எண் : 12
கல்லுயர் இஞ்சிக் கழுமல மேய கடவுடன்னை *
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ லோகமதே.
(* This is as per T.V. Gopal Iyer edition.
Line-1 - Dharmapuram edition shows :
கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுடன்னை
But that version does not conform to the "கட்டளைக் கலித்துறை" meter.)
Word separated:
கல்-உயர் இஞ்சிக் கழுமல மேய கடவுள்தன்னை *
நல்-உரை ஞானசம்பந்தன் ஞானத்-தமிழ் நன்கு உணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீர்-அருளால் பெறல் ஆம் சிவலோகமதே.
(* This is as per T.V. Gopal Iyer edition.
Line-1 - Dharmapuram edition shows :
கல்லுயர் கழுமல இஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
But that version does not conform to the "கட்டளைக் கலித்துறை" meter.)
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Sambandar sang various chithrakavis (intricate songs) while in Sikazhi
# 2174 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 276
sendamiḻ mālai vigaṟpac ceyyuṭkaḷāl moḻimāṭru, *
vanda soṟ-sīr mālaimāṭru, vaḻimoḻi, ellām maḍakkuc
canda iyamagam, ēga-pādam, tamiḻ irukkukkuṟaḷ sātti,
endaikku eḻugūṭrirukkai, īraḍi, īraḍi vaippu,
(* Dharmapuram book has: moḻimāṭrum)
# 2175 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 277
nālaḍi mēl vaippu, mēnmai naḍaiyin muḍugum irāgam,
sālbinil sakkaram-ādi vigaṟpaṅgaḷ sāṭrum padigam,
mūla ilakkiyamāga ellāp poruḷgōḷum muṭra, *
ñālattu uyar-kāḻiyāraip pāḍinār ñānasambandar.
(* Dharmapuram book has: poruḷgaḷum muṭra)
sambandar tēvāram - padigam 1.117 – piramaburam - (moḻimāṭru) - (paṇ - viyāḻakkuṟiñji)
(kaṭṭaḷaik kalittuṟai - meter)
pāḍal eṇ : 1
kāḍadu aṇigalam kār-aravam padi; kāl-adanil
tōḍadu aṇiguvar sundarak kādinil tūc cilambar;
vēḍadu aṇivar visayaṟku uruvam villum koḍuppar;
pīḍadu aṇi maṇi-māḍap piramaburattu ararē.
pāḍal eṇ : 2
kaṭraic caḍaiyadu kaṅgaṇam mun-kaiyil tiṅgaḷ gaṅgai;
paṭrittu muppuram pār paḍaittōn-talai suṭṭadu; paṇḍu
eṭrittup pāmbai aṇindadu kūṭrai; eḻil viḷaṅgum
veṭric cilai-madil vēṇuburattu eṅgaḷ vēdiyarē.
pāḍal eṇ : 3
kūviḷam kaiyadu pēri saḍaimuḍik kūṭṭattadu;
tū-viḷaṅgum poḍip pūṇḍadu pūsiṭrut tutti; nāgam
ē viḷaṅgum nudalāḷaiyum pāgam urittanar; in-
pū iḷañjōlaip pugaliyuḷ mēviya puṇṇiyarē.
pāḍal eṇ : 4
urittadu pāmbai uḍalmisai iṭṭadu ōr oṇ-kaḷiṭrai;
erittadu ōr āmaiyai inbuṟap pūṇḍadu muppurattaic;
ceruttadu sūlattai ēndiṭrut takkanai vēḷvi; pannūl
virittavar vāḻdaru veṅguruvil vīṭrirundavarē.
pāḍal eṇ : 5
koṭṭuvar akku arai ārppadu takkai; kuṟundāḷana
iṭṭuvar būdam kalappu ilar in-pugaḻ; enbu ulavin
maṭṭu varum taḻal sūḍuvar mattamum ēnduvar; vān
toṭṭuvarum koḍit tōṇiburattu uṟai sundararē.
pāḍal eṇ : 6
sāttuvar pāsam taḍak-kaiyil ēnduvar kōvaṇam; tam
kūttu avar kaccuk kulavi-niṇḍru āḍuvar; kokkiṟagum
pērttavar pal-paḍai pēy-avai sūḍuvar; pēreḻilār;
pūt tavar kaidoḻu pūndarāy mēviya puṇṇiyarē.
pāḍal eṇ : 7
kāladu gaṅgai kaṭraic caḍaiyuḷḷāl kaḻal silambu;
māladu ēndal maḻuvadu pāgam; vaḷar-koḻuṅgōṭṭu
āladu ūrvar aḍal-ēṭru iruppar; aṇimaṇinīrc
cēladu kaṇṇi or paṅgar sirabura mēyavarē.
pāḍal eṇ : 8
neruppu uru veḷ-viḍai mēniyar ēṟuvar; neṭriyingaṇ
maruppu uṟuvan kaṇṇar tādaiyaik kāṭṭuvar mā-murugan
viruppuṟu pāmbukku meyt tandaiyār; viṟal mādavar vāḻ,
poruppu uṟu māḷigait ten-puṟavattu aṇi puṇṇiyarē.
(There may be some variations in first part of lines 1 & 2.
neruppu uru ? neruppu uṟu ?
maruppu uṟu ? maruppu uru ? )
pāḍal eṇ : 9
ilaṅgait talaivanai ēndiṭru iṟuttadu iralai; il-nāḷ
kalaṅgiya kūṭru uyir peṭradu māṇi kumai peṭradu;
kalam kiḷar mondaiyin āḍuvar koṭṭuvar kāṭṭagattuc;
calam kiḷar vāḻ vayal saṇbaiyuḷ mēviya tattuvarē.
pāḍal eṇ : 10
aḍiyiṇai kaṇḍilan tāmaraiyōn māl muḍi kaṇḍilan;
koḍi aṇiyum puli ēṟu ugandu ēṟuvar tōl uḍuppar;
piḍi aṇiyum naḍaiyāḷ veṟpu iruppadu ōr kūṟu uḍaiyar;
kaḍi aṇiyum poḻil kāḻiyuḷ mēya kaṟaikkaṇḍarē.
pāḍal eṇ : 11
kaiyadu veṇ-kuḻai kādadu sūlam; amaṇar puttar
eyduvar tammai aḍiyavar eydār; or ēnak-kombu
mey tigaḻ kōvaṇam pūṇbadu uḍuppadu; mēdagaiya
koydu alar pūmboḻil koccaiyuḷ mēviya koṭravarē.
pāḍal eṇ : 12
kal-uyar iñjik kaḻumala mēya kaḍavuḷdannai *
nal-urai ñānasambandan ñānat-tamiḻ nangu uṇarac
colliḍal kēṭṭal vallōr tollai vānavar taṅgaḷoḍum
selguvar sīr-aruḷāl peṟal ām sivalōgamadē.
(* This is as per T.V. Gopal Iyer edition.
Line-1 - Dharmapuram edition shows :
kalluyar kaḻumala iñjiyuḷ mēviya kaḍavuḷdannai
But that version does not conform to the "kaṭṭaḷaik kalittuṟai" meter.)
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Sambandar sang various chithrakavis (intricate songs) while in Sikazhi
# 2174 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 276
सॆन्दमिऴ् मालै विगऱ्पच् चॆय्युट्कळाल् मॊऴिमाट्रु, *
वन्द सॊऱ्-सीर् मालैमाट्रु, वऴिमॊऴि, ऎल्लाम् मडक्कुच्
चन्द इयमगम्, एग-पादम्, तमिऴ् इरुक्कुक्कुऱळ् सात्ति,
ऎन्दैक्कु ऎऴुगूट्रिरुक्कै, ईरडि, ईरडि वैप्पु,
(* Dharmapuram book has: मॊऴिमाट्रुम्)
# 2175 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 277
नालडि मेल् वैप्पु, मेन्मै नडैयिन् मुडुगुम् इरागम्,
साल्बिनिल् सक्करम्-आदि विगऱ्पङ्गळ् साट्रुम् पदिगम्,
मूल इलक्कियमाग ऎल्लाप् पॊरुळ्गोळुम् मुट्र, *
ञालत्तु उयर्-काऴियारैप् पाडिनार् ञानसम्बन्दर्.
(* Dharmapuram book has: पॊरुळ्गळुम् मुट्र)
सम्बन्दर् तेवारम् - पदिगम् 1.117 – पिरमबुरम् - (मॊऴिमाट्रु) - (पण् - वियाऴक्कुऱिञ्जि)
(कट्टळैक् कलित्तुऱै - meter)
पाडल् ऎण् : 1
काडदु अणिगलम् कार्-अरवम् पदि; काल्-अदनिल्
तोडदु अणिगुवर् सुन्दरक् कादिनिल् तूच् चिलम्बर्;
वेडदु अणिवर् विसयऱ्कु उरुवम् विल्लुम् कॊडुप्पर्;
पीडदु अणि मणि-माडप् पिरमबुरत्तु अररे.
पाडल् ऎण् : 2
कट्रैच् चडैयदु कङ्गणम् मुन्-कैयिल् तिङ्गळ् गङ्गै;
पट्रित्तु मुप्पुरम् पार् पडैत्तोन्-तलै सुट्टदु; पण्डु
ऎट्रित्तुप् पाम्बै अणिन्ददु कूट्रै; ऎऴिल् विळङ्गुम्
वॆट्रिच् चिलै-मदिल् वेणुबुरत्तु ऎङ्गळ् वेदियरे.
पाडल् ऎण् : 3
कूविळम् कैयदु पेरि सडैमुडिक् कूट्टत्तदु;
तू-विळङ्गुम् पॊडिप् पूण्डदु पूसिट्रुत् तुत्ति; नागम्
ए विळङ्गुम् नुदलाळैयुम् पागम् उरित्तनर्; इन्-
पू इळञ्जोलैप् पुगलियुळ् मेविय पुण्णियरे.
पाडल् ऎण् : 4
उरित्तदु पाम्बै उडल्मिसै इट्टदु ओर् ऒण्-कळिट्रै;
ऎरित्तदु ओर् आमैयै इन्बुऱप् पूण्डदु मुप्पुरत्तैच्;
चॆरुत्तदु सूलत्तै एन्दिट्रुत् तक्कनै वेळ्वि; पन्नूल्
विरित्तवर् वाऴ्दरु वॆङ्गुरुविल् वीट्रिरुन्दवरे.
पाडल् ऎण् : 5
कॊट्टुवर् अक्कु अरै आर्प्पदु तक्कै; कुऱुन्दाळन
इट्टुवर् बूदम् कलप्पु इलर् इन्-पुगऴ्; ऎन्बु उलविन्
मट्टु वरुम् तऴल् सूडुवर् मत्तमुम् एन्दुवर्; वान्
तॊट्टुवरुम् कॊडित् तोणिबुरत्तु उऱै सुन्दररे.
पाडल् ऎण् : 6
सात्तुवर् पासम् तडक्-कैयिल् एन्दुवर् कोवणम्; तम्
कूत्तु अवर् कच्चुक् कुलवि-निण्ड्रु आडुवर्; कॊक्किऱगुम्
पेर्त्तवर् पल्-पडै पेय्-अवै सूडुवर्; पेरॆऴिलार्;
पूत् तवर् कैदॊऴु पून्दराय् मेविय पुण्णियरे.
पाडल् ऎण् : 7
कालदु गङ्गै कट्रैच् चडैयुळ्ळाल् कऴल् सिलम्बु;
मालदु एन्दल् मऴुवदु पागम्; वळर्-कॊऴुङ्गोट्टु
आलदु ऊर्वर् अडल्-एट्रु इरुप्पर्; अणिमणिनीर्च्
चेलदु कण्णि ऒर् पङ्गर् सिरबुर मेयवरे.
पाडल् ऎण् : 8
नॆरुप्पु उरु वॆळ्-विडै मेनियर् एऱुवर्; नॆट्रियिन्गण्
मरुप्पु उऱुवन् कण्णर् तादैयैक् काट्टुवर् मा-मुरुगन्
विरुप्पुऱु पाम्बुक्कु मॆय्त् तन्दैयार्; विऱल् मादवर् वाऴ्,
पॊरुप्पु उऱु माळिगैत् तॆन्-पुऱवत्तु अणि पुण्णियरे.
(There may be some variations in first part of lines 1 & 2.
नॆरुप्पु उरु ? नॆरुप्पु उऱु ?
मरुप्पु उऱु ? मरुप्पु उरु ? )
पाडल् ऎण् : 9
इलङ्गैत् तलैवनै एन्दिट्रु इऱुत्तदु इरलै; इल्-नाळ्
कलङ्गिय कूट्रु उयिर् पॆट्रदु माणि कुमै पॆट्रदु;
कलम् किळर् मॊन्दैयिन् आडुवर् कॊट्टुवर् काट्टगत्तुच्;
चलम् किळर् वाऴ् वयल् सण्बैयुळ् मेविय तत्तुवरे.
पाडल् ऎण् : 10
अडियिणै कण्डिलन् तामरैयोन् माल् मुडि कण्डिलन्;
कॊडि अणियुम् पुलि एऱु उगन्दु एऱुवर् तोल् उडुप्पर्;
पिडि अणियुम् नडैयाळ् वॆऱ्पु इरुप्पदु ओर् कूऱु उडैयर्;
कडि अणियुम् पॊऴिल् काऴियुळ् मेय कऱैक्कण्डरे.
पाडल् ऎण् : 11
कैयदु वॆण्-कुऴै काददु सूलम्; अमणर् पुत्तर्
ऎय्दुवर् तम्मै अडियवर् ऎय्दार्; ऒर् एनक्-कॊम्बु
मॆय् तिगऴ् कोवणम् पूण्बदु उडुप्पदु; मेदगैय
कॊय्दु अलर् पूम्बॊऴिल् कॊच्चैयुळ् मेविय कॊट्रवरे.
पाडल् ऎण् : 12
कल्-उयर् इञ्जिक् कऴुमल मेय कडवुळ्दन्नै *
नल्-उरै ञानसम्बन्दन् ञानत्-तमिऴ् नन्गु उणरच्
चॊल्लिडल् केट्टल् वल्लोर् तॊल्लै वानवर् तङ्गळॊडुम्
सॆल्गुवर् सीर्-अरुळाल् पॆऱल् आम् सिवलोगमदे.
(* This is as per T.V. Gopal Iyer edition.
Line-1 - Dharmapuram edition shows :
कल्लुयर् कऴुमल इञ्जियुळ् मेविय कडवुळ्दन्नै
But that version does not conform to the "कट्टळैक् कलित्तुऱै" meter.)
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Sambandar sang various chithrakavis (intricate songs) while in Sikazhi
# 2174 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 276
సెందమిఴ్ మాలై విగఱ్పచ్ చెయ్యుట్కళాల్ మొఴిమాట్రు, *
వంద సొఱ్-సీర్ మాలైమాట్రు, వఴిమొఴి, ఎల్లాం మడక్కుచ్
చంద ఇయమగం, ఏగ-పాదం, తమిఴ్ ఇరుక్కుక్కుఱళ్ సాత్తి,
ఎందైక్కు ఎఴుగూట్రిరుక్కై, ఈరడి, ఈరడి వైప్పు,
(* Dharmapuram book has: మొఴిమాట్రుం)
# 2175 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 277
నాలడి మేల్ వైప్పు, మేన్మై నడైయిన్ ముడుగుం ఇరాగం,
సాల్బినిల్ సక్కరం-ఆది విగఱ్పంగళ్ సాట్రుం పదిగం,
మూల ఇలక్కియమాగ ఎల్లాప్ పొరుళ్గోళుం ముట్ర, *
ఞాలత్తు ఉయర్-కాఴియారైప్ పాడినార్ ఞానసంబందర్.
(* Dharmapuram book has: పొరుళ్గళుం ముట్ర)
సంబందర్ తేవారం - పదిగం 1.117 – పిరమబురం - (మొఴిమాట్రు) - (పణ్ - వియాఴక్కుఱింజి)
(కట్టళైక్ కలిత్తుఱై - meter)
పాడల్ ఎణ్ : 1
కాడదు అణిగలం కార్-అరవం పది; కాల్-అదనిల్
తోడదు అణిగువర్ సుందరక్ కాదినిల్ తూచ్ చిలంబర్;
వేడదు అణివర్ విసయఱ్కు ఉరువం విల్లుం కొడుప్పర్;
పీడదు అణి మణి-మాడప్ పిరమబురత్తు అరరే.
పాడల్ ఎణ్ : 2
కట్రైచ్ చడైయదు కంగణం మున్-కైయిల్ తింగళ్ గంగై;
పట్రిత్తు ముప్పురం పార్ పడైత్తోన్-తలై సుట్టదు; పండు
ఎట్రిత్తుప్ పాంబై అణిందదు కూట్రై; ఎఴిల్ విళంగుం
వెట్రిచ్ చిలై-మదిల్ వేణుబురత్తు ఎంగళ్ వేదియరే.
పాడల్ ఎణ్ : 3
కూవిళం కైయదు పేరి సడైముడిక్ కూట్టత్తదు;
తూ-విళంగుం పొడిప్ పూండదు పూసిట్రుత్ తుత్తి; నాగం
ఏ విళంగుం నుదలాళైయుం పాగం ఉరిత్తనర్; ఇన్-
పూ ఇళంజోలైప్ పుగలియుళ్ మేవియ పుణ్ణియరే.
పాడల్ ఎణ్ : 4
ఉరిత్తదు పాంబై ఉడల్మిసై ఇట్టదు ఓర్ ఒణ్-కళిట్రై;
ఎరిత్తదు ఓర్ ఆమైయై ఇన్బుఱప్ పూండదు ముప్పురత్తైచ్;
చెరుత్తదు సూలత్తై ఏందిట్రుత్ తక్కనై వేళ్వి; పన్నూల్
విరిత్తవర్ వాఴ్దరు వెంగురువిల్ వీట్రిరుందవరే.
పాడల్ ఎణ్ : 5
కొట్టువర్ అక్కు అరై ఆర్ప్పదు తక్కై; కుఱుందాళన
ఇట్టువర్ బూదం కలప్పు ఇలర్ ఇన్-పుగఴ్; ఎన్బు ఉలవిన్
మట్టు వరుం తఴల్ సూడువర్ మత్తముం ఏందువర్; వాన్
తొట్టువరుం కొడిత్ తోణిబురత్తు ఉఱై సుందరరే.
పాడల్ ఎణ్ : 6
సాత్తువర్ పాసం తడక్-కైయిల్ ఏందువర్ కోవణం; తం
కూత్తు అవర్ కచ్చుక్ కులవి-నిండ్రు ఆడువర్; కొక్కిఱగుం
పేర్త్తవర్ పల్-పడై పేయ్-అవై సూడువర్; పేరెఴిలార్;
పూత్ తవర్ కైదొఴు పూందరాయ్ మేవియ పుణ్ణియరే.
పాడల్ ఎణ్ : 7
కాలదు గంగై కట్రైచ్ చడైయుళ్ళాల్ కఴల్ సిలంబు;
మాలదు ఏందల్ మఴువదు పాగం; వళర్-కొఴుంగోట్టు
ఆలదు ఊర్వర్ అడల్-ఏట్రు ఇరుప్పర్; అణిమణినీర్చ్
చేలదు కణ్ణి ఒర్ పంగర్ సిరబుర మేయవరే.
పాడల్ ఎణ్ : 8
నెరుప్పు ఉరు వెళ్-విడై మేనియర్ ఏఱువర్; నెట్రియిన్గణ్
మరుప్పు ఉఱువన్ కణ్ణర్ తాదైయైక్ కాట్టువర్ మా-మురుగన్
విరుప్పుఱు పాంబుక్కు మెయ్త్ తందైయార్; విఱల్ మాదవర్ వాఴ్,
పొరుప్పు ఉఱు మాళిగైత్ తెన్-పుఱవత్తు అణి పుణ్ణియరే.
(There may be some variations in first part of lines 1 & 2.
నెరుప్పు ఉరు ? నెరుప్పు ఉఱు ?
మరుప్పు ఉఱు ? మరుప్పు ఉరు ? )
పాడల్ ఎణ్ : 9
ఇలంగైత్ తలైవనై ఏందిట్రు ఇఱుత్తదు ఇరలై; ఇల్-నాళ్
కలంగియ కూట్రు ఉయిర్ పెట్రదు మాణి కుమై పెట్రదు;
కలం కిళర్ మొందైయిన్ ఆడువర్ కొట్టువర్ కాట్టగత్తుచ్;
చలం కిళర్ వాఴ్ వయల్ సణ్బైయుళ్ మేవియ తత్తువరే.
పాడల్ ఎణ్ : 10
అడియిణై కండిలన్ తామరైయోన్ మాల్ ముడి కండిలన్;
కొడి అణియుం పులి ఏఱు ఉగందు ఏఱువర్ తోల్ ఉడుప్పర్;
పిడి అణియుం నడైయాళ్ వెఱ్పు ఇరుప్పదు ఓర్ కూఱు ఉడైయర్;
కడి అణియుం పొఴిల్ కాఴియుళ్ మేయ కఱైక్కండరే.
పాడల్ ఎణ్ : 11
కైయదు వెణ్-కుఴై కాదదు సూలం; అమణర్ పుత్తర్
ఎయ్దువర్ తమ్మై అడియవర్ ఎయ్దార్; ఒర్ ఏనక్-కొంబు
మెయ్ తిగఴ్ కోవణం పూణ్బదు ఉడుప్పదు; మేదగైయ
కొయ్దు అలర్ పూంబొఴిల్ కొచ్చైయుళ్ మేవియ కొట్రవరే.
పాడల్ ఎణ్ : 12
కల్-ఉయర్ ఇంజిక్ కఴుమల మేయ కడవుళ్దన్నై *
నల్-ఉరై ఞానసంబందన్ ఞానత్-తమిఴ్ నన్గు ఉణరచ్
చొల్లిడల్ కేట్టల్ వల్లోర్ తొల్లై వానవర్ తంగళొడుం
సెల్గువర్ సీర్-అరుళాల్ పెఱల్ ఆం సివలోగమదే.
(* This is as per T.V. Gopal Iyer edition.
Line-1 - Dharmapuram edition shows :
కల్లుయర్ కఴుమల ఇంజియుళ్ మేవియ కడవుళ్దన్నై
But that version does not conform to the "కట్టళైక్ కలిత్తుఱై" meter.)
=============================
No comments:
Post a Comment