117) 4.3 – மாதர்ப் பிறைக்கண்ணியானை - திருவையாறு - mAdharp piRaikkaNNiyAnai - thiruvaiyARu
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.3 – மாதர்ப் பிறைக்கண்ணியானை - (திருவையாறு)
tirunāvukkarasar tēvāram - padigam 4.3 – mādarp piṟaikkaṇṇiyānai - (tiruvaiyāṟu)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF:
https://drive.google.com/file/d/1CbOdgc6fg0eZcClqMBaQtPwEu3wJD9OU/view?usp=share_link
***
On
YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/27rpFCX8fXo
Part-2: https://youtu.be/hiTzFJb_OVo
Part-3: https://youtu.be/KLkxEpKtulc
Part-4: https://youtu.be/frmY1kM5kl8
English:
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_003.HTM
V.
Subramanian
================
Verses in original Tamil version & word separated Tamil, English, Devanagari, and Telugu scripts.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.3 – திருவையாறு - (பண் - காந்தாரம்)
திருவையாறு: இத்தலம் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 12 கிமீ தூரத்தில் உள்ளது. பெரிய கோயில்.
பதிக வரலாறு:
கயிலையைக் காணச் சென்று உடல் உறுப்புகளெல்லாம் தேய்ந்து அழிந்த நிலையில் கிடந்த திருநாவுக்கரசர், ஈசன் ஆணைப்படி அங்கே இமயமலைச் சாரலில் ஒரு பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் திருக்குளத்தில் எழுந்தார். திருவையாற்றில் எல்லா ஜீவராசிகளும் சிவமும் சக்தியுமாக அவருக்குக் காட்சியளித்தன. திருவையாற்றிலிருந்தே கயிலைக்காட்சியை கண்டு மகிழ்ந்தார். சில போற்றித் திருத்தாண்டகங்கள் பாடினார். அச்சமயத்தில் பாடப்பெற்றது "மாதர்ப் பிறைக்கண்ணியானை" என்ற இப்பதிகம்.
அப்பர் கயிலைக்காட்சி கண்ட விழா "ஆடி அமாவாசை" அன்று கொண்டாடப்பெறுகின்றது.
Background:
Thirunavukkarasar visited various temples in the north and reached Kasi. He left all the accompanying devotees in Kasi and proceeded alone toward Kailasam. As he climbed up the mountains, his legs became weak and he could not walk anymore. Still he persisted on going to Kailasam. He crawled and using his hands pushed himself forward on his chest but soon his skin, muscles, bones all were severely injured and he was totally unable to move. He was lying motionless on the ground.
Siva assumed the form of a rishi and appeared in front of him. He asked Thirunavukkarasar the reason for his coming there. Thirunavukkarasar told his intention to go to Kailasam to worship Siva and Parvathi. The rishi told him to go back saying that Kailasam is not reachable by humans. Thirunavukkarasar was steadfast in his goal and replied that this body would anyway perish one day and hence he would not go back without seeing Kailasam.
The rishi (Siva) disappeared and His divine voice said, "O Thirunavukkarasu! Get up!" At once, Thirunavukkarsar's body healed. Thirunavukkarasar got up and prayed for Kailasa darsanam. Siva said, "Take a dip in the lake nearby and you will have the Kailasa darsanam from Thiruvaiyaru".
Thirunavukkarasar felt extreme joy and sang the padhigam "6.55 - vēṭrāgi viṇṇāgi". Then he took a dip in that lake in the Himalayas. He came out in the temple tank in Thiruvaiyaru. All living things in Thiruvaiyaru appeared as Siva and Sakthi to him. Siva revealed the Kailasa darsanam to Thirunavukkarasar there. Thirunavukkarasar sang some more padhigams praising Siva and describing what he experienced. (6.56, 6.57 - both "pōṭri tiruttāṇḍagam" padhigams). He sang this padhigam - 4.3 - "mādarp piṟaik kaṇṇiyānai" at that time.
--------
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar takes a dip in a lake in Himalayas and comes out in Thiruvaiyaru temple tank
#1636 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 371
ஆதி தேவர்தந் திருவருட் பெருமையா ரறிவார்?
போத மாதவர் பனிவரைப் பொய்கையின் மூழ்கி,
மாதொர் பாகனார் மகிழுமை யாற்றிலோர் வாவி
மீது தோன்றிவந் தெழுந்தன ருலகெலாம் வியப்ப.
Word separated:
ஆதி தேவர்தம் திருவருட் பெருமை ஆர் அறிவார்?
போத மாதவர் பனி-வரைப் பொய்கையில் மூழ்கி,
மாது-ஒர் பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி
மீது தோன்றி-வந்து எழுந்தனர் உலகு-எலாம் வியப்ப.
Thirunavukkarasar was ecstatic experiencing Siva's grace
#1637 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 372
வம்பு லாமலர் வாவியின் கரையில்வந் தேறி
உம்பர் நாயகர் திருவருட் பெருமையை யுணர்வார்
எம்பி ரான்றருங் கருணைகொ லிது?வென விருகண்
பம்பு தாரைநீர் வாவியிற் படிந்தெழும் படியார்,
Word separated:
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி,
உம்பர் நாயகர் திருவருட் பெருமையை உணர்வார்
எம்பிரான் தரும் கருணைகொல் இது? என இரு-கண்
பம்பு தாரை-நீர் வாவியில் படிந்து எழும்படியார்,
Thirunavukkarasar saw everything as male-female pair
#1638 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 373
மிடையு நீள்கொடி வீதிகள் விளங்கிய வையா
றுடைய நாயகர் சேவடி பணியவந் துறுவார்,
அடைய வப்பதி நிற்பவுஞ் சரிப்பவு மான
புடைய மர்ந்ததந் துணையொடும் பொலிவன கண்டார்;
Word separated:
மிடையும் நீள்-கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணிய வந்து-உறுவார்,
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்;
Thirunavukkarasar worshiped all Sivam-Sakthi pairs and reached the temple
#1639 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 374
பொன்ம லைக்கொடி யுடனமர் வெள்ளியம் பொருப்பின்
றன்மை யாம்படி சத்தியுஞ் சிவமுமாஞ் சரிதைப்
பன்மை யோனிக ளியாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயின்முன் வந்தார்.
Word separated:
பொன்மலைக்-கொடி உடன்-அமர் வெள்ளியம் பொருப்பின்
தன்மை ஆம்படி சத்தியும் சிவமும் ஆம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னு மாதவர் தம்பிரான் கோயில்முன் வந்தார்.
The temple appeared as Kailasam to Thirunavukkarasar
#1640 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 375
காணு மப்பெருங் கோயிலுங் கயிலைமால் வரையாய்ப்
பேணு மாலய னிந்திரன் முதற்பெருந் தேவர்
பூணு மன்பொடு போற்றிசைத் தெழுமொலி பொங்கத்,
தாணு மாமறை யாவையுந் தனித்தனி முழங்க,
Word separated:
காணும் அப்பெரும் கோயிலும் கயிலை-மால் வரையாய்ப்
பேணு மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர்
பூணும் அன்பொடு போற்றிசைத்து எழும் ஒலி பொங்கத்,
தாணு மா-மறை யாவையும் தனித்தனி முழங்க,
He saw various Devaganas and Rishis worshiping Siva
#1641 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 376
தேவர் தானவர் சித்தர்விச் சாதர ரியக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலா மிடையக்,
காவி வாள்விழி யரம்பையர் கானமு முழவுந்
தாவி லேழ்கடன் முழக்கினும் பெருகொலி தழைப்ப,
Word separated:
தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடை-எலாம் மிடையக்,
காவி வாள்-விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவு-இல் ஏழ்-கடல் முழக்கினும் பெருகு-ஒலி தழைப்ப,
He saw holy rivers, Sivaganas, and bhuthaganas worshiping Siva
#1642 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 377
கங்கை யேமுதற் றீர்த்தமாங் கடவுண்மா நதிகள்
மங்க லம்பொலி புனற்பெருந் தடங்கொடு வணங்க,
எங்கு நீடிய பெருங்கண நாதர்க ளிறைஞ்சப்
பொங்கி யங்களாற் பூதவே தாளங்கள் போற்ற,
Word separated:
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள்-மா-நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடங்கொடு வணங்க,
எங்கும் நீடிய பெரும் கணநாதர்கள் இறைஞ்சப்,
பொங்கு-இயங்களால் பூத-வேதாளங்கள் போற்ற,
#1643 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 378
அந்தண் வெள்ளிமால் வரையிரண் டாமென வணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால் விடையெதிர் நிற்ப,
முந்தை மாதவப் பயன்பெறு முதன்மையான் மகிழ்ந்தே
நந்தி யெம்பிரா னடுவிடை யாடிமுன் னணுக,
Word separated:
அந்தண் வெள்ளி-மால்-வரை இரண்டு ஆம் என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண் மால்-விடை எதிர் நிற்ப,
முந்தை மாதவப் பயன்-பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவிடை ஆடி முன் அணுக,
Thirunavukkarasar saw Siva and Parvathi
#1644 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 379
வெள்ளி வெற்பின்மேன் மரகதக் கொடியுடன் விளங்குந்
தெள்ளு பேரொளிப் பவளவெற் பெனவிடப் பாகங்
கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர் வாக்கின்மன் னவனார்.
Word separated:
வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவள-வெற்பு என இடப்-பாகம்
கொள்ளும் மா-மலையாளுடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின்-மன்னவனார்.
He drank the ocean of bliss with his eyes and worshiped singing in joy
#1645 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 380
கண்ட வானந்தக் கடலினைக் கண்களான் முகந்து
கொண்டு கைகுவித் தெதிர்விழுந் தெழுந்துமெய் குலைய
அண்டர் முன்புநின் றாடினார் பாடினா ரழுதார்;
தொண்ட னார்க்கங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார்;
Word separated:
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு, கை-குவித்து எதிர் விழுந்து-எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்;
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்?
Thirunavukkarasar sang "pōṭri tāṇḍagam" padhigams
#1646 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 381
முன்பு கண்டுகொண் டருளினா ரமுதுண்ண மூவா
வன்பு பெற்றவ ரளவிலா வார்வமுன் பொங்கப்
பொன்பி றங்கிய சடையரைப் போற்றுதாண் டகங்கள்
இன்ப மோங்கிட வேத்தினா ரெல்லையி றவத்தோர்.
Word separated:
முன்பு கண்டுகொண்டு, அருளின் ஆரமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு-இலா ஆர்வம் முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையரைப் போற்று-தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை-இல் தவத்தோர்.
The Kailasam vision disappeared and Thiruvaiyaru appeared
#1647 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 382
ஆய வாறுமற் றவர்மனங் களிப்புறக் கயிலை
மேய நாதர்தந் துணையொடும் வீற்றிருந் தருளித்
தூய தொண்டனார் தொழுதெதிர் நிற்க, வக் கோலஞ்
சேய தாக்கினார் திருவையா றமர்ந்தமை திகழ.
Word separated:
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்தருளித்
தூய தொண்டனார் தொழுது எதிர் நிற்க, அக்-கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ.
Thirunavukkarasar sings about what he witnessed
#1648 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 383
ஐயர் வேடமங் களித்தகன் றிடவடித் தொண்டர்
மையல் கொண்டுள மகிழ்ந்திட வருந்தி, "மற் றிங்குச்
செய்ய வேணிய ரருளிது வோ?" வெனத் தெளிந்து
வைய முய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து,
Word separated:
ஐயர் வேடம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி, "மற்று இங்குச்
செய்ய வேணியர் அருள் இதுவோ?" எனத் தெளிந்து,
வையம் உய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து,
Thirunavukkarasar sings "mAdharp piRaikkaNiyAnai" padhigam
#1649 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 384
"மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடு" மென்னுங்
கோதறு தண்டமிழ்ச் சொல்லாற் குலவு திருப்பதி கங்கள்
"வேத முதல்வரை யாற்றில் விரவுஞ் சராசர மெல்லாம்
காதற் றுணையொடுங் கூடக் கண்டே" னெனப்பாடி நின்றார்;
Word separated:
"மாதர்ப்-பிறைக்-கண்ணியானை மலையான் மகளொடும்" என்னும்
கோது-அறு தண்-தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
"வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணையொடும் கூடக் கண்டேன்" எனப் பாடி நின்றார்;
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 385
கண்டு தொழுது வணங்கிக் கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள் குறுந்தொகை நேரிசை யன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான்றிரு வையா றமர்ந்தனர் நாவுக் கரசர்.
Word separated:
கண்டு தொழுது வணங்கிக் கண்ணுதலார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பில்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர்-பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர்.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.3 – திருவையாறு - (பண் - காந்தாரம்)
(அறுசீர் விருத்தம் - meter) (நாலடிமேல் ஓரடி வைப்பு = 4 + 1 lines)
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
மாதர்ப் பிறைக்-கண்ணியானை மலையான்-மகளொடும் பாடிப்,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர்-பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்-பிடியோடும் களிறு வருவன கண்டேன்
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
போழ்-இளம் கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
"வாழி-அம் போற்றி" என்று ஏத்தி, வட்டமிட்டு ஆடா வருவேன்,
ஆழி வலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
எரிப்-பிறைக் கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து, ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள்-அருவி ஐயாறு அடைகின்றபோது
வரிக்-குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
பிறை இளம் கண்ணியினானைப் பெய்-வளையாளொடும் பாடித்,
துறை இளம் பன்-மலர் தூவித், தோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங்குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
ஏடு-மதிக் கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்,
காடொடு நாடு மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
தண்-மதிக் கண்ணியினானைத் தையல்-நல்லாளொடும் பாடி,
உள்-மெலி சிந்தையன் ஆகி, உணரா உருகா வருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
கடி-மதிக் கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடியிணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது,
இடி-குரல் அன்னது-ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்,
பெரும்புலர் காலை எழுந்து பெறு-மலர் கொய்யா வருவேன்,
அருங்கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
முற்பிறைக் கண்ணியினானை மொய்-குழலாளொடும் பாடிப்,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று-நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நற்றுணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
திங்கள் மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
எங்கு அருள் நல்குங்கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
பாடல் எண் : 11
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்
.. கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
Word separated:
வளர்-மதிக் கண்ணியினானை வார்-குழலாளொடும் பாடிக்,
களவு படாததொர் காலம் காண்பான் கடைக்கண் நிற்கின்றேன்,
அளவு படாததொர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது,
இள-மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;
.. கண்டேன் அவர் திருப்பாதம்; கண்டு-அறியாதன கண்டேன்.
=============================
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar takes a dip in a lake in Himalayas and comes out in Thiruvaiyaru temple tank
#1636 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 371
ādi dēvardam tiruvaruṭ perumai ār aṟivār?
bōda mādavar pani-varaip poygaiyil mūḻgi,
mādu-or pāganār magiḻum aiyāṭril ōr vāvi
mīdu tōṇḍri-vandu eḻundanar ulagu-elām viyappa.
Thirunavukkarasar was ecstatic experiencing Siva's grace
#1637 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 372
vambu ulām malar vāviyin karaiyil vandu ēṟi,
umbar nāyagar tiruvaruṭ perumaiyai uṇarvār
embirān tarum karuṇaigol idu? ena iru-kaṇ
pambu tārai-nīr vāviyil paḍindu eḻumbaḍiyār,
Thirunavukkarasar saw everything as male-female pair
#1638 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 373
miḍaiyum nīḷ-koḍi vīdigaḷ viḷaṅgiya aiyāṟu
uḍaiya nāyagar sēvaḍi paṇiya vandu-uṟuvār,
aḍaiya appadi niṟpavum sarippavum āna
puḍai amarnda tam tuṇaiyoḍum polivana kaṇḍār;
Thirunavukkarasar worshiped all Sivam-Sakthi pairs and reached the temple
#1639 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 374
ponmalaik-koḍi uḍan-amar veḷḷiyam poruppin
tanmai āmbaḍi sattiyum sivamum ām saridaip
panmai yōnigaḷ yāvaiyum payilvana paṇindē
mannu mādavar tambirān kōyilmun vandār.
The temple appeared as Kailasam to Thirunavukkarasar
#1640 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 375
kāṇum apperum kōyilum kayilai-māl varaiyāyp
pēṇu māl ayan indiran mudal perum dēvar
pūṇum anboḍu pōṭrisaittu eḻum oli poṅgat,
tāṇu mā-maṟai yāvaiyum tanittani muḻaṅga,
He saw various Devaganas and Rishis worshiping Siva
#1641 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 376
dēvar tānavar sittar viccādarar iyakkar
mēvu mādavar munivargaḷ puḍai-elām miḍaiyak,
kāvi vāḷ-viḻi arambaiyar gānamum muḻavum
tāvu-il ēḻ-kaḍal muḻakkinum perugu-oli taḻaippa,
He saw holy rivers, Sivaganas, and bhuthaganas worshiping Siva
#1642 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 377
gaṅgaiyē mudal tīrttamām kaḍavuḷ-mā-nadigaḷ
maṅgalam poli punal perum taḍaṅgoḍu vaṇaṅga,
eṅgum nīḍiya perum gaṇanādargaḷ iṟaiñjap,
poṅgu-iyaṅgaḷāl būda-vēdāḷaṅgaḷ pōṭra,
#1643 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 378
andaṇ veḷḷi-māl-varai iraṇḍu ām ena aṇaindōr
sindai seydiḍac ceṅgaṇ māl-viḍai edir niṟpa,
mundai mādavap payan-peṟu mudanmaiyāl magiḻndē
nandi embirān naḍuviḍai āḍi mun aṇuga,
Thirunavukkarasar saw Siva and Parvathi
#1644 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 379
veḷḷi veṟpinmēl maragadak koḍiyuḍan viḷaṅgum
teḷḷu pēroḷip pavaḷa-veṟpu ena iḍap-pāgam
koḷḷum mā-malaiyāḷuḍan kūḍa vīṭrirunda
vaḷḷalārai mun kaṇḍanar vākkin-mannavanār.
He drank the ocean of bliss with his eyes and worshiped singing in joy
#1645 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 380
kaṇḍa ānandak kaḍalinaik kaṇgaḷāl mugandu
koṇḍu, kai-kuvittu edir viḻundu-eḻundu mey kulaiya
aṇḍar munbu niṇḍru āḍinār pāḍinār aḻudār;
toṇḍanārkku aṅgu nigaḻndana yār sola vallār?
Thirunavukkarasar sang "pōṭri tāṇḍagam" padhigams
#1646 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 381
munbu kaṇḍugoṇḍu, aruḷin āramudu uṇṇa mūvā
anbu peṭravar aḷavu-ilā ārvam mun poṅgap
pon piṟaṅgiya saḍaiyaraip pōṭru-tāṇḍagaṅgaḷ
inbam ōṅgiḍa ēttinār ellai-il tavattōr.
The Kailasam vision disappeared and Thiruvaiyaru appeared
#1647 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 382
āyavāṟu maṭru avar manam kaḷippuṟak kayilai
mēya nādar tam tuṇaiyoḍum vīṭrirundaruḷit
tūya toṇḍanār toḻudu edir niṟka, ak-kōlam
sēyadu ākkinār tiruvaiyāṟu amarndamai tigaḻa.
Thirunavukkarasar sings about what he witnessed
#1648 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 383
aiyar vēḍam aṅgu aḷittu agaṇḍriḍa aḍit toṇḍar
maiyal koṇḍu uḷam magiḻndiḍa varundi, "maṭru iṅguc
ceyya vēṇiyar aruḷ iduvō?" enat teḷindu,
vaiyam uyndiḍak kaṇḍamai pāḍuvār magiḻndu,
Thirunavukkarasar sings "mAdharp piRaikkaNiyAnai" padhigam
#1649 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 384
"mādarp-piṟaik-kaṇṇiyānai malaiyān magaḷoḍum" ennum
kōdu-aṟu taṇ-tamiḻc collāl kulavu tiruppadigaṅgaḷ
"vēda mudalvar aiyāṭril viravum sarāsaram ellām
kādal tuṇaiyoḍum kūḍak kaṇḍēn" enap pāḍi niṇḍrār;
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 385
kaṇḍu toḻudu vaṇaṅgik kaṇṇudalārdamaip pōṭrik
koṇḍa tiruttāṇḍagaṅgaḷ kuṟundogai nērisai anbil
maṇḍu viruttaṅgaḷ pāḍi vaṇaṅgit tiruttoṇḍu seydē
aṇḍar-pirān tiruvaiyāṟu amarndanar nāvukkarasar.
tirunāvukkarasar tēvāram - padigam 4.3 – tiruvaiyāṟu - (paṇ - kāndāram)
(aṟusīr viruttam - meter) (nālaḍimēl ōraḍi vaippu = 4 + 1 lines)
pāḍal eṇ : 1
mādarp piṟaik-kaṇṇiyānai malaiyān-magaḷoḍum pāḍip,
pōdoḍu nīr sumandu ēttip puguvār avar-pin puguvēn
yādum suvaḍu paḍāmal aiyāṟu aḍaigiṇḍrabōdu
kādal maḍap-piḍiyōḍum kaḷiṟu varuvana kaṇḍēn
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 2
pōḻ-iḷam kaṇṇiyinānaip pūndugilāḷoḍum pāḍi,
"vāḻi-am pōṭri" eṇḍru ētti, vaṭṭamiṭṭu āḍā varuvēn,
āḻi valavan niṇḍru ēttum aiyāṟu aḍaigiṇḍrabōdu
kōḻi peḍaiyoḍum kūḍik kuḷirndu varuvana kaṇḍēn
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 3
erip-piṟaik kaṇṇiyinānai ēndiḻaiyāḷoḍum pāḍi,
muritta ilayaṅgaḷ iṭṭu, mugam malarndu, āḍā varuvēn,
arittu oḻugum veḷ-aruvi aiyāṟu aḍaigiṇḍrabōdu
varik-kuyil pēḍaiyoḍu āḍi vaigi varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 4
piṟai iḷam kaṇṇiyinānaip pey-vaḷaiyāḷoḍum pāḍit,
tuṟai iḷam pan-malar tūvit, tōḷaik kuḷirat toḻuvēn,
aṟai iḷam pūṅguyil ālum aiyāṟu aḍaigiṇḍrabōdu
siṟai iḷam pēḍaiyoḍu āḍic cēval varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 5
ēḍu-madik kaṇṇiyānai ēndiḻaiyāḷoḍum pāḍik,
kāḍoḍu nāḍu malaiyum kaidoḻudu āḍā varuvēn,
āḍal amarndu uṟaigiṇḍra aiyāṟu aḍaigiṇḍrabōdu,
pēḍai mayiloḍum kūḍip piṇaindu varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 6
taṇ-madik kaṇṇiyinānait taiyal-nallāḷoḍum pāḍi,
uḷ-meli sindaiyan āgi, uṇarā urugā varuvēn,
aṇṇal amarndu uṟaigiṇḍra aiyāṟu aḍaigiṇḍrabōdu
vaṇṇap pagaṇḍriloḍu āḍi vaigi varuvana kaṇḍēn
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 7
kaḍi-madik kaṇṇiyinānaik kārigaiyāḷoḍum pāḍi,
vaḍivoḍu vaṇṇam iraṇḍum vāy vēṇḍuva solli vāḻvēn,
aḍiyiṇai ārkkum kaḻalān aiyāṟu aḍaigiṇḍrabōdu,
iḍi-kural annadu-or ēnam isaindu varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 8
virumbu madik kaṇṇiyānai melliyalāḷoḍum pāḍip,
perumbular kālai eḻundu peṟu-malar koyyā varuvēn,
aruṅgalam pon maṇi undum aiyāṟu aḍaigiṇḍrabōdu,
karuṅgalai pēḍaiyoḍu āḍik kalandu varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 9
muṟpiṟaik kaṇṇiyinānai moy-kuḻalāḷoḍum pāḍip,
paṭrik kayiṟu aṟukkillēn pāḍiyum āḍā varuvēn,
aṭru aruḷ peṭru-niṇḍrārōḍu aiyāṟu aḍaigiṇḍrabōdu,
naṭruṇaip pēḍaiyoḍu āḍi nārai varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 10
tiṅgaḷ madik kaṇṇiyānait tēmoḻiyāḷoḍum pāḍi,
eṅgu aruḷ nalguṅgol endai enakku ini ennā varuvēn,
aṅgu iḷa maṅgaiyar āḍum aiyāṟu aḍaigiṇḍrabōdu,
paiṅgiḷi pēḍaiyoḍu āḍip paṟandu varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
pāḍal eṇ : 11
vaḷar-madik kaṇṇiyinānai vār-kuḻalāḷoḍum pāḍik,
kaḷavu paḍādador kālam kāṇbān kaḍaikkaṇ niṟkiṇḍrēn,
aḷavu paḍādador anbōḍu aiyāṟu aḍaigiṇḍrabōdu,
iḷa-maṇa nāgu taḻuvi ēṟu varuvana kaṇḍēn;
.. kaṇḍēn avar tiruppādam; kaṇḍu-aṟiyādana kaṇḍēn.
=============================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar takes a dip in a lake in Himalayas and comes out in Thiruvaiyaru temple tank
#1636 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 371
आदि देवर्दम् तिरुवरुट् पॆरुमै आर् अऱिवार्?
बोद मादवर् पनि-वरैप् पॊय्गैयिल् मूऴ्गि,
मादु-ऒर् पागनार् मगिऴुम् ऐयाट्रिल् ओर् वावि
मीदु तोण्ड्रि-वन्दु ऎऴुन्दनर् उलगु-ऎलाम् वियप्प.
Thirunavukkarasar was ecstatic experiencing Siva's grace
#1637 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 372
वम्बु उलाम् मलर् वावियिन् करैयिल् वन्दु एऱि,
उम्बर् नायगर् तिरुवरुट् पॆरुमैयै उणर्वार्
ऎम्बिरान् तरुम् करुणैगॊल् इदु? ऎन इरु-कण्
पम्बु तारै-नीर् वावियिल् पडिन्दु ऎऴुम्बडियार्,
Thirunavukkarasar saw everything as male-female pair
#1638 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 373
मिडैयुम् नीळ्-कॊडि वीदिगळ् विळङ्गिय ऐयाऱु
उडैय नायगर् सेवडि पणिय वन्दु-उऱुवार्,
अडैय अप्पदि निऱ्पवुम् सरिप्पवुम् आन
पुडै अमर्न्द तम् तुणैयॊडुम् पॊलिवन कण्डार्;
Thirunavukkarasar worshiped all Sivam-Sakthi pairs and reached the temple
#1639 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 374
पॊन्मलैक्-कॊडि उडन्-अमर् वॆळ्ळियम् पॊरुप्पिन्
तन्मै आम्बडि सत्तियुम् सिवमुम् आम् सरिदैप्
पन्मै योनिगळ् यावैयुम् पयिल्वन पणिन्दे
मन्नु मादवर् तम्बिरान् कोयिल्मुन् वन्दार्.
The temple appeared as Kailasam to Thirunavukkarasar
#1640 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 375
काणुम् अप्पॆरुम् कोयिलुम् कयिलै-माल् वरैयाय्प्
पेणु माल् अयन् इन्दिरन् मुदल् पॆरुम् देवर्
पूणुम् अन्बॊडु पोट्रिसैत्तु ऎऴुम् ऒलि पॊङ्गत्,
ताणु मा-मऱै यावैयुम् तनित्तनि मुऴङ्ग,
He saw various Devaganas and Rishis worshiping Siva
#1641 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 376
देवर् तानवर् सित्तर् विच्चादरर् इयक्कर्
मेवु मादवर् मुनिवर्गळ् पुडै-ऎलाम् मिडैयक्,
कावि वाळ्-विऴि अरम्बैयर् गानमुम् मुऴवुम्
तावु-इल् एऴ्-कडल् मुऴक्किनुम् पॆरुगु-ऒलि तऴैप्प,
He saw holy rivers, Sivaganas, and bhuthaganas worshiping Siva
#1642 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 377
गङ्गैये मुदल् तीर्त्तमाम् कडवुळ्-मा-नदिगळ्
मङ्गलम् पॊलि पुनल् पॆरुम् तडङ्गॊडु वणङ्ग,
ऎङ्गुम् नीडिय पॆरुम् गणनादर्गळ् इऱैञ्जप्,
पॊङ्गु-इयङ्गळाल् बूद-वेदाळङ्गळ् पोट्र,
#1643 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 378
अन्दण् वॆळ्ळि-माल्-वरै इरण्डु आम् ऎन अणैन्दोर्
सिन्दै सॆय्दिडच् चॆङ्गण् माल्-विडै ऎदिर् निऱ्प,
मुन्दै मादवप् पयन्-पॆऱु मुदन्मैयाल् मगिऴ्न्दे
नन्दि ऎम्बिरान् नडुविडै आडि मुन् अणुग,
Thirunavukkarasar saw Siva and Parvathi
#1644 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 379
वॆळ्ळि वॆऱ्पिन्मेल् मरगदक् कॊडियुडन् विळङ्गुम्
तॆळ्ळु पेरॊळिप् पवळ-वॆऱ्पु ऎन इडप्-पागम्
कॊळ्ळुम् मा-मलैयाळुडन् कूड वीट्रिरुन्द
वळ्ळलारै मुन् कण्डनर् वाक्किन्-मन्नवनार्.
He drank the ocean of bliss with his eyes and worshiped singing in joy
#1645 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 380
कण्ड आनन्दक् कडलिनैक् कण्गळाल् मुगन्दु
कॊण्डु, कै-कुवित्तु ऎदिर् विऴुन्दु-ऎऴुन्दु मॆय् कुलैय
अण्डर् मुन्बु निण्ड्रु आडिनार् पाडिनार् अऴुदार्;
तॊण्डनार्क्कु अङ्गु निगऴ्न्दन यार् सॊल वल्लार्?
Thirunavukkarasar sang "pōṭri tāṇḍagam" padhigams
#1646 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 381
मुन्बु कण्डुगॊण्डु, अरुळिन् आरमुदु उण्ण मूवा
अन्बु पॆट्रवर् अळवु-इला आर्वम् मुन् पॊङ्गप्
पॊन् पिऱङ्गिय सडैयरैप् पोट्रु-ताण्डगङ्गळ्
इन्बम् ओङ्गिड एत्तिनार् ऎल्लै-इल् तवत्तोर्.
The Kailasam vision disappeared and Thiruvaiyaru appeared
#1647 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 382
आयवाऱु मट्रु अवर् मनम् कळिप्पुऱक् कयिलै
मेय नादर् तम् तुणैयॊडुम् वीट्रिरुन्दरुळित्
तूय तॊण्डनार् तॊऴुदु ऎदिर् निऱ्क, अक्-कोलम्
सेयदु आक्किनार् तिरुवैयाऱु अमर्न्दमै तिगऴ.
Thirunavukkarasar sings about what he witnessed
#1648 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 383
ऐयर् वेडम् अङ्गु अळित्तु अगण्ड्रिड अडित् तॊण्डर्
मैयल् कॊण्डु उळम् मगिऴ्न्दिड वरुन्दि, "मट्रु इङ्गुच्
चॆय्य वेणियर् अरुळ् इदुवो?" ऎनत् तॆळिन्दु,
वैयम् उय्न्दिडक् कण्डमै पाडुवार् मगिऴ्न्दु,
Thirunavukkarasar sings "mAdharp piRaikkaNiyAnai" padhigam
#1649 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 384
"मादर्प्-पिऱैक्-कण्णियानै मलैयान् मगळॊडुम्" ऎन्नुम्
कोदु-अऱु तण्-तमिऴ्च् चॊल्लाल् कुलवु तिरुप्पदिगङ्गळ्
"वेद मुदल्वर् ऐयाट्रिल् विरवुम् सरासरम् ऎल्लाम्
कादल् तुणैयॊडुम् कूडक् कण्डेन्" ऎनप् पाडि निण्ड्रार्;
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 385
कण्डु तॊऴुदु वणङ्गिक् कण्णुदलार्दमैप् पोट्रिक्
कॊण्ड तिरुत्ताण्डगङ्गळ् कुऱुन्दॊगै नेरिसै अन्बिल्
मण्डु विरुत्तङ्गळ् पाडि वणङ्गित् तिरुत्तॊण्डु सॆय्दे
अण्डर्-पिरान् तिरुवैयाऱु अमर्न्दनर् नावुक्करसर्.
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.3 – तिरुवैयाऱु - (पण् - कान्दारम्)
(अऱुसीर् विरुत्तम् - meter) (नालडिमेल् ओरडि वैप्पु = 4 + 1 lines)
पाडल् ऎण् : 1
मादर्प् पिऱैक्-कण्णियानै मलैयान्-मगळॊडुम् पाडिप्,
पोदॊडु नीर् सुमन्दु एत्तिप् पुगुवार् अवर्-पिन् पुगुवेन्
यादुम् सुवडु पडामल् ऐयाऱु अडैगिण्ड्रबोदु
कादल् मडप्-पिडियोडुम् कळिऱु वरुवन कण्डेन्
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 2
पोऴ्-इळम् कण्णियिनानैप् पून्दुगिलाळॊडुम् पाडि,
"वाऴि-अम् पोट्रि" ऎण्ड्रु एत्ति, वट्टमिट्टु आडा वरुवेन्,
आऴि वलवन् निण्ड्रु एत्तुम् ऐयाऱु अडैगिण्ड्रबोदु
कोऴि पॆडैयॊडुम् कूडिक् कुळिर्न्दु वरुवन कण्डेन्
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 3
ऎरिप्-पिऱैक् कण्णियिनानै एन्दिऴैयाळॊडुम् पाडि,
मुरित्त इलयङ्गळ् इट्टु, मुगम् मलर्न्दु, आडा वरुवेन्,
अरित्तु ऒऴुगुम् वॆळ्-अरुवि ऐयाऱु अडैगिण्ड्रबोदु
वरिक्-कुयिल् पेडैयॊडु आडि वैगि वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 4
पिऱै इळम् कण्णियिनानैप् पॆय्-वळैयाळॊडुम् पाडित्,
तुऱै इळम् पन्-मलर् तूवित्, तोळैक् कुळिरत् तॊऴुवेन्,
अऱै इळम् पूङ्गुयिल् आलुम् ऐयाऱु अडैगिण्ड्रबोदु
सिऱै इळम् पेडैयॊडु आडिच् चेवल् वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 5
एडु-मदिक् कण्णियानै एन्दिऴैयाळॊडुम् पाडिक्,
काडॊडु नाडु मलैयुम् कैदॊऴुदु आडा वरुवेन्,
आडल् अमर्न्दु उऱैगिण्ड्र ऐयाऱु अडैगिण्ड्रबोदु,
पेडै मयिलॊडुम् कूडिप् पिणैन्दु वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 6
तण्-मदिक् कण्णियिनानैत् तैयल्-नल्लाळॊडुम् पाडि,
उळ्-मॆलि सिन्दैयन् आगि, उणरा उरुगा वरुवेन्,
अण्णल् अमर्न्दु उऱैगिण्ड्र ऐयाऱु अडैगिण्ड्रबोदु
वण्णप् पगण्ड्रिलॊडु आडि वैगि वरुवन कण्डेन्
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 7
कडि-मदिक् कण्णियिनानैक् कारिगैयाळॊडुम् पाडि,
वडिवॊडु वण्णम् इरण्डुम् वाय् वेण्डुव सॊल्लि वाऴ्वेन्,
अडियिणै आर्क्कुम् कऴलान् ऐयाऱु अडैगिण्ड्रबोदु,
इडि-कुरल् अन्नदु-ऒर् एनम् इसैन्दु वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 8
विरुम्बु मदिक् कण्णियानै मॆल्लियलाळॊडुम् पाडिप्,
पॆरुम्बुलर् कालै ऎऴुन्दु पॆऱु-मलर् कॊय्या वरुवेन्,
अरुङ्गलम् पॊन् मणि उन्दुम् ऐयाऱु अडैगिण्ड्रबोदु,
करुङ्गलै पेडैयॊडु आडिक् कलन्दु वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 9
मुऱ्पिऱैक् कण्णियिनानै मॊय्-कुऴलाळॊडुम् पाडिप्,
पट्रिक् कयिऱु अऱुक्किल्लेन् पाडियुम् आडा वरुवेन्,
अट्रु अरुळ् पॆट्रु-निण्ड्रारोडु ऐयाऱु अडैगिण्ड्रबोदु,
नट्रुणैप् पेडैयॊडु आडि नारै वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 10
तिङ्गळ् मदिक् कण्णियानैत् तेमॊऴियाळॊडुम् पाडि,
ऎङ्गु अरुळ् नल्गुङ्गॊल् ऎन्दै ऎनक्कु इनि ऎन्ना वरुवेन्,
अङ्गु इळ मङ्गैयर् आडुम् ऐयाऱु अडैगिण्ड्रबोदु,
पैङ्गिळि पेडैयॊडु आडिप् पऱन्दु वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
पाडल् ऎण् : 11
वळर्-मदिक् कण्णियिनानै वार्-कुऴलाळॊडुम् पाडिक्,
कळवु पडाददॊर् कालम् काण्बान् कडैक्कण् निऱ्किण्ड्रेन्,
अळवु पडाददॊर् अन्बोडु ऐयाऱु अडैगिण्ड्रबोदु,
इळ-मण नागु तऴुवि एऱु वरुवन कण्डेन्;
.. कण्डेन् अवर् तिरुप्पादम्; कण्डु-अऱियादन कण्डेन्.
=============================
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Padhigam background - Periya Puranam
Thirunavukkarasar takes a dip in a lake in Himalayas and comes out in Thiruvaiyaru temple tank
#1636 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 371
ఆది దేవర్దం తిరువరుట్ పెరుమై ఆర్ అఱివార్?
బోద మాదవర్ పని-వరైప్ పొయ్గైయిల్ మూఴ్గి,
మాదు-ఒర్ పాగనార్ మగిఴుం ఐయాట్రిల్ ఓర్ వావి
మీదు తోండ్రి-వందు ఎఴుందనర్ ఉలగు-ఎలాం వియప్ప.
Thirunavukkarasar was ecstatic experiencing Siva's grace
#1637 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 372
వంబు ఉలాం మలర్ వావియిన్ కరైయిల్ వందు ఏఱి,
ఉంబర్ నాయగర్ తిరువరుట్ పెరుమైయై ఉణర్వార్
ఎంబిరాన్ తరుం కరుణైగొల్ ఇదు? ఎన ఇరు-కణ్
పంబు తారై-నీర్ వావియిల్ పడిందు ఎఴుంబడియార్,
Thirunavukkarasar saw everything as male-female pair
#1638 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 373
మిడైయుం నీళ్-కొడి వీదిగళ్ విళంగియ ఐయాఱు
ఉడైయ నాయగర్ సేవడి పణియ వందు-ఉఱువార్,
అడైయ అప్పది నిఱ్పవుం సరిప్పవుం ఆన
పుడై అమర్న్ద తం తుణైయొడుం పొలివన కండార్;
Thirunavukkarasar worshiped all Sivam-Sakthi pairs and reached the temple
#1639 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 374
పొన్మలైక్-కొడి ఉడన్-అమర్ వెళ్ళియం పొరుప్పిన్
తన్మై ఆంబడి సత్తియుం సివముం ఆం సరిదైప్
పన్మై యోనిగళ్ యావైయుం పయిల్వన పణిందే
మన్ను మాదవర్ తంబిరాన్ కోయిల్మున్ వందార్.
The temple appeared as Kailasam to Thirunavukkarasar
#1640 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 375
కాణుం అప్పెరుం కోయిలుం కయిలై-మాల్ వరైయాయ్ప్
పేణు మాల్ అయన్ ఇందిరన్ ముదల్ పెరుం దేవర్
పూణుం అన్బొడు పోట్రిసైత్తు ఎఴుం ఒలి పొంగత్,
తాణు మా-మఱై యావైయుం తనిత్తని ముఴంగ,
He saw various Devaganas and Rishis worshiping Siva
#1641 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 376
దేవర్ తానవర్ సిత్తర్ విచ్చాదరర్ ఇయక్కర్
మేవు మాదవర్ మునివర్గళ్ పుడై-ఎలాం మిడైయక్,
కావి వాళ్-విఴి అరంబైయర్ గానముం ముఴవుం
తావు-ఇల్ ఏఴ్-కడల్ ముఴక్కినుం పెరుగు-ఒలి తఴైప్ప,
He saw holy rivers, Sivaganas, and bhuthaganas worshiping Siva
#1642 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 377
గంగైయే ముదల్ తీర్త్తమాం కడవుళ్-మా-నదిగళ్
మంగలం పొలి పునల్ పెరుం తడంగొడు వణంగ,
ఎంగుం నీడియ పెరుం గణనాదర్గళ్ ఇఱైంజప్,
పొంగు-ఇయంగళాల్ బూద-వేదాళంగళ్ పోట్ర,
#1643 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 378
అందణ్ వెళ్ళి-మాల్-వరై ఇరండు ఆం ఎన అణైందోర్
సిందై సెయ్దిడచ్ చెంగణ్ మాల్-విడై ఎదిర్ నిఱ్ప,
ముందై మాదవప్ పయన్-పెఱు ముదన్మైయాల్ మగిఴ్న్దే
నంది ఎంబిరాన్ నడువిడై ఆడి మున్ అణుగ,
Thirunavukkarasar saw Siva and Parvathi
#1644 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 379
వెళ్ళి వెఱ్పిన్మేల్ మరగదక్ కొడియుడన్ విళంగుం
తెళ్ళు పేరొళిప్ పవళ-వెఱ్పు ఎన ఇడప్-పాగం
కొళ్ళుం మా-మలైయాళుడన్ కూడ వీట్రిరుంద
వళ్ళలారై మున్ కండనర్ వాక్కిన్-మన్నవనార్.
He drank the ocean of bliss with his eyes and worshiped singing in joy
#1645 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 380
కండ ఆనందక్ కడలినైక్ కణ్గళాల్ ముగందు
కొండు, కై-కువిత్తు ఎదిర్ విఴుందు-ఎఴుందు మెయ్ కులైయ
అండర్ మున్బు నిండ్రు ఆడినార్ పాడినార్ అఴుదార్;
తొండనార్క్కు అంగు నిగఴ్న్దన యార్ సొల వల్లార్?
Thirunavukkarasar sang "pōṭri tāṇḍagam" padhigams
#1646 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 381
మున్బు కండుగొండు, అరుళిన్ ఆరముదు ఉణ్ణ మూవా
అన్బు పెట్రవర్ అళవు-ఇలా ఆర్వం మున్ పొంగప్
పొన్ పిఱంగియ సడైయరైప్ పోట్రు-తాండగంగళ్
ఇన్బం ఓంగిడ ఏత్తినార్ ఎల్లై-ఇల్ తవత్తోర్.
The Kailasam vision disappeared and Thiruvaiyaru appeared
#1647 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 382
ఆయవాఱు మట్రు అవర్ మనం కళిప్పుఱక్ కయిలై
మేయ నాదర్ తం తుణైయొడుం వీట్రిరుందరుళిత్
తూయ తొండనార్ తొఴుదు ఎదిర్ నిఱ్క, అక్-కోలం
సేయదు ఆక్కినార్ తిరువైయాఱు అమర్న్దమై తిగఴ.
Thirunavukkarasar sings about what he witnessed
#1648 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 383
ఐయర్ వేడం అంగు అళిత్తు అగండ్రిడ అడిత్ తొండర్
మైయల్ కొండు ఉళం మగిఴ్న్దిడ వరుంది, "మట్రు ఇంగుచ్
చెయ్య వేణియర్ అరుళ్ ఇదువో?" ఎనత్ తెళిందు,
వైయం ఉయ్న్దిడక్ కండమై పాడువార్ మగిఴ్న్దు,
Thirunavukkarasar sings "mAdharp piRaikkaNiyAnai" padhigam
#1649 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 384
"మాదర్ప్-పిఱైక్-కణ్ణియానై మలైయాన్ మగళొడుం" ఎన్నుం
కోదు-అఱు తణ్-తమిఴ్చ్ చొల్లాల్ కులవు తిరుప్పదిగంగళ్
"వేద ముదల్వర్ ఐయాట్రిల్ విరవుం సరాసరం ఎల్లాం
కాదల్ తుణైయొడుం కూడక్ కండేన్" ఎనప్ పాడి నిండ్రార్;
Thirunavukkarasar sings several other padhigams and stays in Thiruvaiyaru
#1650 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 385
కండు తొఴుదు వణంగిక్ కణ్ణుదలార్దమైప్ పోట్రిక్
కొండ తిరుత్తాండగంగళ్ కుఱుందొగై నేరిసై అన్బిల్
మండు విరుత్తంగళ్ పాడి వణంగిత్ తిరుత్తొండు సెయ్దే
అండర్-పిరాన్ తిరువైయాఱు అమర్న్దనర్ నావుక్కరసర్.
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.3 – తిరువైయాఱు - (పణ్ - కాందారం)
(అఱుసీర్ విరుత్తం - meter) (నాలడిమేల్ ఓరడి వైప్పు = 4 + 1 lines)
పాడల్ ఎణ్ : 1
మాదర్ప్ పిఱైక్-కణ్ణియానై మలైయాన్-మగళొడుం పాడిప్,
పోదొడు నీర్ సుమందు ఏత్తిప్ పుగువార్ అవర్-పిన్ పుగువేన్
యాదుం సువడు పడామల్ ఐయాఱు అడైగిండ్రబోదు
కాదల్ మడప్-పిడియోడుం కళిఱు వరువన కండేన్
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 2
పోఴ్-ఇళం కణ్ణియినానైప్ పూందుగిలాళొడుం పాడి,
"వాఴి-అం పోట్రి" ఎండ్రు ఏత్తి, వట్టమిట్టు ఆడా వరువేన్,
ఆఴి వలవన్ నిండ్రు ఏత్తుం ఐయాఱు అడైగిండ్రబోదు
కోఴి పెడైయొడుం కూడిక్ కుళిర్న్దు వరువన కండేన్
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 3
ఎరిప్-పిఱైక్ కణ్ణియినానై ఏందిఴైయాళొడుం పాడి,
మురిత్త ఇలయంగళ్ ఇట్టు, ముగం మలర్న్దు, ఆడా వరువేన్,
అరిత్తు ఒఴుగుం వెళ్-అరువి ఐయాఱు అడైగిండ్రబోదు
వరిక్-కుయిల్ పేడైయొడు ఆడి వైగి వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 4
పిఱై ఇళం కణ్ణియినానైప్ పెయ్-వళైయాళొడుం పాడిత్,
తుఱై ఇళం పన్-మలర్ తూవిత్, తోళైక్ కుళిరత్ తొఴువేన్,
అఱై ఇళం పూంగుయిల్ ఆలుం ఐయాఱు అడైగిండ్రబోదు
సిఱై ఇళం పేడైయొడు ఆడిచ్ చేవల్ వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 5
ఏడు-మదిక్ కణ్ణియానై ఏందిఴైయాళొడుం పాడిక్,
కాడొడు నాడు మలైయుం కైదొఴుదు ఆడా వరువేన్,
ఆడల్ అమర్న్దు ఉఱైగిండ్ర ఐయాఱు అడైగిండ్రబోదు,
పేడై మయిలొడుం కూడిప్ పిణైందు వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 6
తణ్-మదిక్ కణ్ణియినానైత్ తైయల్-నల్లాళొడుం పాడి,
ఉళ్-మెలి సిందైయన్ ఆగి, ఉణరా ఉరుగా వరువేన్,
అణ్ణల్ అమర్న్దు ఉఱైగిండ్ర ఐయాఱు అడైగిండ్రబోదు
వణ్ణప్ పగండ్రిలొడు ఆడి వైగి వరువన కండేన్
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 7
కడి-మదిక్ కణ్ణియినానైక్ కారిగైయాళొడుం పాడి,
వడివొడు వణ్ణం ఇరండుం వాయ్ వేండువ సొల్లి వాఴ్వేన్,
అడియిణై ఆర్క్కుం కఴలాన్ ఐయాఱు అడైగిండ్రబోదు,
ఇడి-కురల్ అన్నదు-ఒర్ ఏనం ఇసైందు వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 8
విరుంబు మదిక్ కణ్ణియానై మెల్లియలాళొడుం పాడిప్,
పెరుంబులర్ కాలై ఎఴుందు పెఱు-మలర్ కొయ్యా వరువేన్,
అరుంగలం పొన్ మణి ఉందుం ఐయాఱు అడైగిండ్రబోదు,
కరుంగలై పేడైయొడు ఆడిక్ కలందు వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 9
ముఱ్పిఱైక్ కణ్ణియినానై మొయ్-కుఴలాళొడుం పాడిప్,
పట్రిక్ కయిఱు అఱుక్కిల్లేన్ పాడియుం ఆడా వరువేన్,
అట్రు అరుళ్ పెట్రు-నిండ్రారోడు ఐయాఱు అడైగిండ్రబోదు,
నట్రుణైప్ పేడైయొడు ఆడి నారై వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 10
తింగళ్ మదిక్ కణ్ణియానైత్ తేమొఴియాళొడుం పాడి,
ఎంగు అరుళ్ నల్గుంగొల్ ఎందై ఎనక్కు ఇని ఎన్నా వరువేన్,
అంగు ఇళ మంగైయర్ ఆడుం ఐయాఱు అడైగిండ్రబోదు,
పైంగిళి పేడైయొడు ఆడిప్ పఱందు వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
పాడల్ ఎణ్ : 11
వళర్-మదిక్ కణ్ణియినానై వార్-కుఴలాళొడుం పాడిక్,
కళవు పడాదదొర్ కాలం కాణ్బాన్ కడైక్కణ్ నిఱ్కిండ్రేన్,
అళవు పడాదదొర్ అన్బోడు ఐయాఱు అడైగిండ్రబోదు,
ఇళ-మణ నాగు తఴువి ఏఱు వరువన కండేన్;
.. కండేన్ అవర్ తిరుప్పాదం; కండు-అఱియాదన కండేన్.
=============================
No comments:
Post a Comment