124) 5.57 – முன்னமே நினையாது - திருக்கோளிலி - munnamE ninaiyAdhu - thirukkOLili
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.57 – முன்னமே நினையாது - (திருக்கோளிலி)
tirunāvukkarasar tēvāram - padigam 5.57 – munnamē ninaiyādu - (tiruk-kōḷili)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF:
https://drive.google.com/file/d/19ekOYvQOQI3dwS31Ywk4_LpXdawmUn00/view
***
On
YouTube:
Tamil discussion: https://youtu.be/cyPNm6oSQu0
English:
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS5_057.HTM
V.
Subramanian
================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.57 – திருக்கோளிலி - (திருக்குறுந்தொகை)
திருக்கோளிலி - இத்தலம் திருவாரூரிலிருந்து தென்கிழக்கே சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது. (இக்காலத்தில் திருக்குவளை என்று வழங்கப்பெறுகின்றது). நவகோள்கள் பூசித்துப் பேறு பெற்றமையால் கோளிலி என வழங்கப்பெறுகிறது. இது திருவாரூரைச் சுற்றி உள்ள சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று.
பதிகக் குறிப்பு: கோளிலிப் பெருமானைத் தொழுது உய்யுங்கள் என்று உபதேசிக்கின்றார்.
----------
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.57 – திருக்கோளிலி - (திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேயடி யேனை மறவலே.
பாடல் எண் : 2
விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி
அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே.
பாடல் எண் : 3
நாளும் நம்முடை நாள்க ளறிகிலோம்
ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே
கோளிலி யரன் பாதமே கூறுமே.
பாடல் எண் : 4
விழவி னோசை யொலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே.
பாடல் எண் : 5
மூல மாகிய மூவர்க்கும் மூர்த்தியைக்
கால னாகிய காலற்குங் காலனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதன் பாதந் தொழுமினே.
பாடல் எண் : 6
காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
நீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.
பாடல் எண் : 7
வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
பாடல் எண் : 8
நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
(* The last two lines are the same as in song-7)
பாடல் எண் : 9
மாலும் நான்முக னாலு மறிவொணாப்
பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.
பாடல் எண் : 10
அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.
==================== ===============
Word separated version:
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 5.57 – திருக்-கோளிலி - (திருக்குறுந்தொகை)
பாடல் எண் : 1
முன்னமே நினையாது-ஒழிந்தேன் உனை;
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்;
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்-கோளிலி
மன்னனே; அடியேனை மறவலே.
பாடல் எண் : 2
விண்-உளார் தொழுது-ஏத்தும் விளக்கினை,
மண்-உளார் வினை தீர்க்கும் மருந்தினைப்,
பண்-உளார் பயிலும் திருக்-கோளிலி
அண்ணலார் அடியே தொழுது உய்ம்மினே.
பாடல் எண் : 3
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்;
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்
ஏழைமைப்-பட்டிருந்து நீர் நையாதே,
கோளிலி அரன் பாதமே கூறுமே.
பாடல் எண் : 4
விழவின் ஓசை ஒலி அறாத், தண்-பொழில்,
பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி,
அழல் கையான் அமரும் திருக்-கோளிலிக்
குழகனார் திருப்-பாதமே கூறுமே.
பாடல் எண் : 5
மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியைக்,
காலன் ஆகிய காலற்கும் காலனைக்,
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்-கோளிலிச்
சூல-பாணி-தன் பாதம் தொழுமினே.
பாடல் எண் : 6
காற்றனைக், கடல் நஞ்சு அமுதுண்ட வெண்
நீற்றனை, நிமிர் புன்-சடை அண்ணலை,
ஆற்றனை, அமரும் திருக்-கோளிலி
ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே.
பாடல் எண் : 7
வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை,
ஓதி மன்னு-உயிர் ஏத்தும் ஒருவனைக்,
கோதி வண்டு அறையும் திருக்-கோளிலி
வேத-நாயகன் பாதம் விரும்புமே.
பாடல் எண் : 8
நீதியால் தொழுவார்கள் தலைவனை,
வாதையான விடுக்கும் மணியினைக்,
கோதி வண்டு அறையும் திருக்-கோளிலி
வேத-நாயகன் பாதம் விரும்புமே.
(* The last two lines are the same as in song-7)
பாடல் எண் : 9
மாலும் நான்முகனாலும் அறிவு-ஒணாப்,
பால்-இன் மென்-மொழியாள் ஒரு பங்கனைக்,
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்-கோளிலி
நீல-கண்டனை நித்தல் நினைமினே.
பாடல் எண் : 10
அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம்-முடி பத்து இறுத்தான், அவற்கு
இரக்கம் ஆகியவன் திருக்-கோளிலி
அருத்தியாய் அடியே தொழுது உய்ம்மினே.
==================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
tirunāvukkarasar tēvāram - padigam 5.57 – tiruk-kōḷili - (tirukkuṟundogai)
pāḍal eṇ : 1
munnamē ninaiyādu-oḻindēn unai;
innam nān una sēvaḍi ēttilēn;
sennel ār vayal sūḻ tiruk-kōḷili
mannanē; aḍiyēnai maṟavalē.
pāḍal eṇ : 2
viṇ-uḷār toḻudu-ēttum viḷakkinai,
maṇ-uḷār vinai tīrkkum marundinaip,
paṇ-uḷār payilum tiruk-kōḷili
aṇṇalār aḍiyē toḻudu uymminē.
pāḍal eṇ : 3
nāḷum nammuḍai nāḷgaḷ aṟigilōm;
āḷum nōygaḷ ōr aimbadōḍu āṟu-eṭṭum
ēḻaimaip-paṭṭirundu nīr naiyādē,
kōḷili aran pādamē kūṟumē.
pāḍal eṇ : 4
viḻavin ōsai oli aṟāt, taṇ-poḻil,
paḻaginār vinai tīrkkum paḻam padi,
aḻal kaiyān amarum tiruk-kōḷilik
kuḻaganār tirup-pādamē kūṟumē.
pāḍal eṇ : 5
mūlam āgiya mūvarkkum mūrttiyaik,
kālan āgiya kālaṟkum kālanaik,
kōlam ām poḻil sūḻ tiruk-kōḷilic
cūla-pāṇi-tan pādam toḻuminē.
pāḍal eṇ : 6
kāṭranaik, kaḍal nañju amuduṇḍa veṇ
nīṭranai, nimir pun-saḍai aṇṇalai,
āṭranai, amarum tiruk-kōḷili
ēṭranār aḍiyē toḻudu ēttumē.
pāḍal eṇ : 7
vēdam āya viṇṇōrgaḷ talaivanai,
ōdi mannu-uyir ēttum oruvanaik,
kōdi vaṇḍu aṟaiyum tiruk-kōḷili
vēda-nāyagan pādam virumbumē.
pāḍal eṇ : 8
nīdiyāl toḻuvārgaḷ talaivanai,
vādaiyāna viḍukkum maṇiyinaik,
kōdi vaṇḍu aṟaiyum tiruk-kōḷili
vēda-nāyagan pādam virumbumē.
(* The last two lines are the same as in song-7)
pāḍal eṇ : 9
mālum nānmuganālum aṟivu-oṇāp,
pāl-in men-moḻiyāḷ oru paṅganaik,
kōlam ām poḻil sūḻ tiruk-kōḷili
nīla-kaṇḍanai nittal ninaiminē.
pāḍal eṇ : 10
arakkan āya ilaṅgaiyar mannanai
nerukki am-muḍi pattu iṟuttān, avaṟku
irakkam āgiyavan tiruk-kōḷili
aruttiyāy aḍiyē toḻudu uymminē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 5.57 – तिरुक्-कोळिलि - (तिरुक्कुऱुन्दॊगै)
पाडल् ऎण् : 1
मुन्नमे निनैयादु-ऒऴिन्देन् उनै;
इन्नम् नान् उन सेवडि एत्तिलेन्;
सॆन्नॆल् आर् वयल् सूऴ् तिरुक्-कोळिलि
मन्नने; अडियेनै मऱवले.
पाडल् ऎण् : 2
विण्-उळार् तॊऴुदु-एत्तुम् विळक्किनै,
मण्-उळार् विनै तीर्क्कुम् मरुन्दिनैप्,
पण्-उळार् पयिलुम् तिरुक्-कोळिलि
अण्णलार् अडिये तॊऴुदु उय्म्मिने.
पाडल् ऎण् : 3
नाळुम् नम्मुडै नाळ्गळ् अऱिगिलोम्;
आळुम् नोय्गळ् ओर् ऐम्बदोडु आऱु-ऎट्टुम्
एऴैमैप्-पट्टिरुन्दु नीर् नैयादे,
कोळिलि अरन् पादमे कूऱुमे.
पाडल् ऎण् : 4
विऴविन् ओसै ऒलि अऱात्, तण्-पॊऴिल्,
पऴगिनार् विनै तीर्क्कुम् पऴम् पदि,
अऴल् कैयान् अमरुम् तिरुक्-कोळिलिक्
कुऴगनार् तिरुप्-पादमे कूऱुमे.
पाडल् ऎण् : 5
मूलम् आगिय मूवर्क्कुम् मूर्त्तियैक्,
कालन् आगिय कालऱ्कुम् कालनैक्,
कोलम् आम् पॊऴिल् सूऴ् तिरुक्-कोळिलिच्
चूल-पाणि-तन् पादम् तॊऴुमिने.
पाडल् ऎण् : 6
काट्रनैक्, कडल् नञ्जु अमुदुण्ड वॆण्
नीट्रनै, निमिर् पुन्-सडै अण्णलै,
आट्रनै, अमरुम् तिरुक्-कोळिलि
एट्रनार् अडिये तॊऴुदु एत्तुमे.
पाडल् ऎण् : 7
वेदम् आय विण्णोर्गळ् तलैवनै,
ओदि मन्नु-उयिर् एत्तुम् ऒरुवनैक्,
कोदि वण्डु अऱैयुम् तिरुक्-कोळिलि
वेद-नायगन् पादम् विरुम्बुमे.
पाडल् ऎण् : 8
नीदियाल् तॊऴुवार्गळ् तलैवनै,
वादैयान विडुक्कुम् मणियिनैक्,
कोदि वण्डु अऱैयुम् तिरुक्-कोळिलि
वेद-नायगन् पादम् विरुम्बुमे. (* The last two lines are the same as in song-7)
पाडल् ऎण् : 9
मालुम् नान्मुगनालुम् अऱिवु-ऒणाप्,
पाल्-इन् मॆन्-मॊऴियाळ् ऒरु पङ्गनैक्,
कोलम् आम् पॊऴिल् सूऴ् तिरुक्-कोळिलि
नील-कण्डनै नित्तल् निनैमिने.
पाडल् ऎण् : 10
अरक्कन् आय इलङ्गैयर् मन्ननै
नॆरुक्कि अम्-मुडि पत्तु इऱुत्तान्, अवऱ्कु
इरक्कम् आगियवन् तिरुक्-कोळिलि
अरुत्तियाय् अडिये तॊऴुदु उय्म्मिने.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 5.57 – తిరుక్-కోళిలి - (తిరుక్కుఱుందొగై)
పాడల్ ఎణ్ : 1
మున్నమే నినైయాదు-ఒఴిందేన్ ఉనై;
ఇన్నం నాన్ ఉన సేవడి ఏత్తిలేన్;
సెన్నెల్ ఆర్ వయల్ సూఴ్ తిరుక్-కోళిలి
మన్ననే; అడియేనై మఱవలే.
పాడల్ ఎణ్ : 2
విణ్-ఉళార్ తొఴుదు-ఏత్తుం విళక్కినై,
మణ్-ఉళార్ వినై తీర్క్కుం మరుందినైప్,
పణ్-ఉళార్ పయిలుం తిరుక్-కోళిలి
అణ్ణలార్ అడియే తొఴుదు ఉయ్మ్మినే.
పాడల్ ఎణ్ : 3
నాళుం నమ్ముడై నాళ్గళ్ అఱిగిలోం;
ఆళుం నోయ్గళ్ ఓర్ ఐంబదోడు ఆఱు-ఎట్టుం
ఏఴైమైప్-పట్టిరుందు నీర్ నైయాదే,
కోళిలి అరన్ పాదమే కూఱుమే.
పాడల్ ఎణ్ : 4
విఴవిన్ ఓసై ఒలి అఱాత్, తణ్-పొఴిల్,
పఴగినార్ వినై తీర్క్కుం పఴం పది,
అఴల్ కైయాన్ అమరుం తిరుక్-కోళిలిక్
కుఴగనార్ తిరుప్-పాదమే కూఱుమే.
పాడల్ ఎణ్ : 5
మూలం ఆగియ మూవర్క్కుం మూర్త్తియైక్,
కాలన్ ఆగియ కాలఱ్కుం కాలనైక్,
కోలం ఆం పొఴిల్ సూఴ్ తిరుక్-కోళిలిచ్
చూల-పాణి-తన్ పాదం తొఴుమినే.
పాడల్ ఎణ్ : 6
కాట్రనైక్, కడల్ నంజు అముదుండ వెణ్
నీట్రనై, నిమిర్ పున్-సడై అణ్ణలై,
ఆట్రనై, అమరుం తిరుక్-కోళిలి
ఏట్రనార్ అడియే తొఴుదు ఏత్తుమే.
పాడల్ ఎణ్ : 7
వేదం ఆయ విణ్ణోర్గళ్ తలైవనై,
ఓది మన్ను-ఉయిర్ ఏత్తుం ఒరువనైక్,
కోది వండు అఱైయుం తిరుక్-కోళిలి
వేద-నాయగన్ పాదం విరుంబుమే.
పాడల్ ఎణ్ : 8
నీదియాల్ తొఴువార్గళ్ తలైవనై,
వాదైయాన విడుక్కుం మణియినైక్,
కోది వండు అఱైయుం తిరుక్-కోళిలి
వేద-నాయగన్ పాదం విరుంబుమే.
(* The last two lines are the same as in song-7)
పాడల్ ఎణ్ : 9
మాలుం నాన్ముగనాలుం అఱివు-ఒణాప్,
పాల్-ఇన్ మెన్-మొఴియాళ్ ఒరు పంగనైక్,
కోలం ఆం పొఴిల్ సూఴ్ తిరుక్-కోళిలి
నీల-కండనై నిత్తల్ నినైమినే.
పాడల్ ఎణ్ : 10
అరక్కన్ ఆయ ఇలంగైయర్ మన్ననై
నెరుక్కి అం-ముడి పత్తు ఇఱుత్తాన్, అవఱ్కు
ఇరక్కం ఆగియవన్ తిరుక్-కోళిలి
అరుత్తియాయ్ అడియే తొఴుదు ఉయ్మ్మినే.
================ ============