132) 2.82 - பண்ணிலாவிய மொழியுமை - தேவூர் - paNNilaviya mozhiyumai - Thevur
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.82 - பண்ணிலாவிய மொழியுமை - (தேவூர்)
sambandar tēvāram - padigam 2.82 – paṇ nilāviya moḻi umai - (tēvūr)
Here are the
links to verses and audio of this padhigam's discussion:
Verses:
PDF:
https://drive.google.com/file/d/1PWccdn28RZHLLsFZUfTHZvFgEdSYkfPi/view
***
On
YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/fJyFvuA6TCI
Part-2: https://youtu.be/sqUB6sM7oQw
***
English
translation (meaning) :
https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_082.HTM
V.
Subramanian
================
This has verses in Tamil, English, Nagari, and Telugu scripts. Please print the pages you need.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.82 – தேவூர் - (பண் - காந்தாரம்)
தேவூர் - இத்தலம் திருவாரூரிலிருந்து தென்கிழக்கே சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது. (திருவாரூர் - நாகப்பட்டினம் இடையே உள்ள கீழ்வேளூர் (கீவளூர்) என்ற தலத்திலிருந்து தெற்கே 5 கி.மீ. தூரம்).
தேவர்கள் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.
பதிகக் குறிப்பு: தேவூர்ப் பெருமான் திருவடியைச் சரணடைந்தவர்களுக்குத் துன்பமில்லை.
No special notes in Periyapuranam about the context of this padhigam.
----------
# 2472 - பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 574
நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
.. நலங்கொடிருக் காறாயி னண்ணி யேத்திப்
பைம்புனன்மென் பணைத்தேவூ ரணைந்து போற்றிப்
.. பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
யும்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூ
.. ரோங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதிற் கோட்டூரும் வணங்கி யேத்தித்
.. திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
Word separated:
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து,
.. நலங்கொள் திருக்-காறாயில் நண்ணி ஏத்திப்,
பைம்புனல்-மென்-பணைத் தேவூர் அணைந்து போற்றிப்,
.. பரமர் திரு-நெல்லிக்காப் பணிந்து பாடி,
உம்பர்-பிரான் கைச்சினமும் பரவித், தெங்கூர்
.. ஓங்கு-புகழ்த் திருக்-கொள்ளிக்காடும் போற்றிச்,
செம்பொன்-மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்,
.. திரு மலி வெண்டுறை தொழுவான் சென்று சேர்ந்தார்.
சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.82 – தேவூர் - (பண் - காந்தாரம்)
பாடல் எண் : 1
பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
பண் நிலாவிய மொழி உமை பங்கன்; எம் பெருமான்;
விண்ணில் வானவர் கோன்; விமலன்; விடையூர்தி;
தெண்ணிலா-மதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம்; அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 2
ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் றுதிசெய மகிழ்ந்தவன் றூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
ஓதி மண்டலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன்; தூ-நீர்த்
தீதில் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர்
ஆதி சேவடி அடைந்தனம்; அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 3
மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயற் றேவூர்
அறவன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள்;
செறுவில் வாளைகள் சேல்-அவை பொரு-வயல் தேவூர்
அறவன் சேவடி அடைந்தனம்; அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 4
முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் றன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழிற் றேவூர்
அத்தன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
முத்தன்; சில்பலிக்கு ஊர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன்; செஞ்சடைப் பிஞ்ஞகன்; தன் அடியார்கள்
சித்தன்; மாளிகை செழு-மதி தவழ்-பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம்; அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 5
பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன் செறிபொழிற் றேவூர்
ஆடு வானடி யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
பாடுவார் இசை, பல்பொருட்பயன் உகந்து அன்பால்
கூடுவார், துணைக் கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார் பொருள் ஆனவன்; செறிபொழில் தேவூர்
ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 6
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுடென் றேவூர்
அங்க ணன்றனை யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
பொங்கு பூண்-முலைப், புரிகுழல், வரி-வளைப், பொருப்பின்
மங்கை பங்கினன்; கங்கையை வளர்-சடை வைத்தான்;
திங்கள் சூடிய தீ-நிறக் கடவுள்; தென் தேவூர்
அங்கணன்றனை அடைந்தனம் அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 7
வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் றக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
வன்-புயத்தவத் தானவர் புரங்களை எரியத்
தன் புயத்து உறத் தட-வரை வளைத்தவன்; தக்க
தென்-தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல்-ஒன்று இலமே.
* (வன்-புயத்தவத் தானவர் = 1. வன்-புயத்த அத்-தானவர்; 2. வன்-புயத்து அவத்-தானவர்);
பாடல் எண் : 8
தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுக னெரிந்து
வெருவ வூன்றிய திருவிர னெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறுநற் றென்றல்வந் துலவிய தேவூர்
அரவு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத்-தசமுகன் நெரிந்து
வெருவ ஊன்றிய திருவிரல் நெகிழ்த்து வாள் பணித்தான்;
தெருவுதோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 9
முந்திக் கண்ணனு நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிற லிருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரறிருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை; திண்-திறல் இருங்களிறு உரித்த எம் பெருமான்;
செந்து-இனத்து-இசை அறுபதம் முரல் திருத்-தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 10
பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுடென் றேவூர்
ஆறு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.
Word separated:
பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழை-எனக் கொண்டு
தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்
ஆறு சூடியை அடைந்தனம் அல்லல்-ஒன்று இலமே.
பாடல் எண் : 11
அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய வெழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.
Word separated:
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள், காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞான சம்பந்தன்
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.
==================== ===============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
# 2472 - periya purāṇam - tiruñānasambandar purāṇam - 574
nambar magiḻ tiruvārūr vaṇaṅgip pōndu,
.. nalaṅgoḷ tiruk-kāṟāyil naṇṇi ēttip,
paimbunal-men-paṇait tēvūr aṇaindu pōṭrip,
.. paramar tiru-nellikkāp paṇindu pāḍi,
umbar-pirān kaiccinamum paravit, teṅgūr
.. ōṅgu-pugaḻt tiruk-koḷḷikkāḍum pōṭric,
cembon-madil kōṭṭūrum vaṇaṅgi ēttit,
.. tiru mali veṇḍuṟai toḻuvān seṇḍru sērndār.
sambandar tēvāram - padigam 2.82 – tēvūr - (paṇ - kāndāram)
pāḍal eṇ : 1
paṇ nilāviya moḻi umai paṅgan; em perumān;
viṇṇil vānavar kōn; vimalan; viḍaiyūrdi;
teṇṇilā-madi tavaḻdaru māḷigait tēvūr
aṇṇal sēvaḍi aḍaindanam; allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 2
ōdi maṇḍalattōr muḻudu uyya veṟpu ēṟu
sōdi vānavan tudiseya magiḻndavan; tū-nīrt
tīdil paṅgayam terivaiyar mugam malar tēvūr
ādi sēvaḍi aḍaindanam; allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 3
maṟaigaḷāl miga vaḻibaḍu māṇiyaik kolvān
kaṟuvu koṇḍa ak kālanaik kāynda em kaḍavuḷ;
seṟuvil vāḷaigaḷ sēl-avai poru-vayal tēvūr
aṟavan sēvaḍi aḍaindanam; allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 4
muttan; silbalikku ūrdoṟum muṟaimuṟai tiriyum
pittan; señjaḍaip piññagan; tan aḍiyārgaḷ
sittan; māḷigai seḻu-madi tavaḻ-poḻil tēvūr
attan sēvaḍi aḍaindanam; allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 5
pāḍuvār isai, palboruṭpayan ugandu anbāl
kūḍuvār, tuṇaik koṇḍa tam paṭru aṟap paṭrit
tēḍuvār poruḷ ānavan; seṟiboḻil tēvūr
āḍuvān aḍi aḍaindanam allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 6
poṅgu pūṇ-mulaip, puriguḻal, vari-vaḷaip, poruppin
maṅgai paṅginan; gaṅgaiyai vaḷar-saḍai vaittān;
tiṅgaḷ sūḍiya tī-niṟak kaḍavuḷ; ten tēvūr
aṅgaṇaṇḍranai aḍaindanam allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 7
van-puyattavat tānavar puraṅgaḷai eriyat
tan puyattu uṟat taḍa-varai vaḷaittavan; takka
ten-tamiḻkkalai terindavar porundiya tēvūr
anban sēvaḍi aḍaindanam allal-oṇḍru ilamē.
(van-puyattavat tānavar = 1. van-puyatta at-tānavar; 2. van-puyattu avat-tānavar);
pāḍal eṇ : 8
taru uyarnda veṟpu eḍutta at tasamugan nerindu
veruva ūṇḍriya tiruviral negiḻttu vāḷ paṇittān;
teruvudōṟum nal teṇḍral vandu ulaviya tēvūr
aravu sūḍiyai aḍaindanam allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 9
mundik kaṇṇanum nānmuganum avar kāṇā
endai; tiṇ-tiṟal iruṅgaḷiṟu uritta em perumān;
sendu-inattu-isai aṟubadam mural tirut-tēvūr
andi vaṇṇanai aḍaindanam allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 10
pāṟu puttarum tavam aṇi samaṇarum palanāḷ
kūṟi vaittadōr kuṟiyinaip piḻai-enak koṇḍu
tēṟi, mikka nam señjaḍaik kaḍavuḷ ten tēvūr
āṟu sūḍiyai aḍaindanam allal-oṇḍru ilamē.
pāḍal eṇ : 11
allal iṇḍri viṇ āḷvargaḷ, kāḻiyarkku adiban,
nalla sendamiḻ vallavan, ñāna sambandan
ellai il pugaḻ malgiya eḻil vaḷar tēvūrt
tollai nambanaic colliya pattum vallārē.
================== ==========================
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)
# 2472 - पॆरिय पुराणम् - तिरुञानसम्बन्दर् पुराणम् - 574
नम्बर् मगिऴ् तिरुवारूर् वणङ्गिप् पोन्दु,
.. नलङ्गॊळ् तिरुक्-काऱायिल् नण्णि एत्तिप्,
पैम्बुनल्-मॆन्-पणैत् तेवूर् अणैन्दु पोट्रिप्,
.. परमर् तिरु-नॆल्लिक्काप् पणिन्दु पाडि,
उम्बर्-पिरान् कैच्चिनमुम् परवित्, तॆङ्गूर्
.. ओङ्गु-पुगऴ्त् तिरुक्-कॊळ्ळिक्काडुम् पोट्रिच्,
चॆम्बॊन्-मदिल् कोट्टूरुम् वणङ्गि एत्तित्,
.. तिरु मलि वॆण्डुऱै तॊऴुवान् सॆण्ड्रु सेर्न्दार्.
सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.82 – तेवूर् - (पण् - कान्दारम्)
पाडल् ऎण् : 1
पण् निलाविय मॊऴि उमै पङ्गन्; ऎम् पॆरुमान्;
विण्णिल् वानवर् कोन्; विमलन्; विडैयूर्दि;
तॆण्णिला-मदि तवऴ्दरु माळिगैत् तेवूर्
अण्णल् सेवडि अडैन्दनम्; अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 2
ओदि मण्डलत्तोर् मुऴुदु उय्य वॆऱ्पु एऱु
सोदि वानवन् तुदिसॆय मगिऴ्न्दवन्; तू-नीर्त्
तीदिल् पङ्गयम् तॆरिवैयर् मुगम् मलर् तेवूर्
आदि सेवडि अडैन्दनम्; अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 3
मऱैगळाल् मिग वऴिबडु माणियैक् कॊल्वान्
कऱुवु कॊण्ड अक् कालनैक् काय्न्द ऎम् कडवुळ्;
सॆऱुविल् वाळैगळ् सेल्-अवै पॊरु-वयल् तेवूर्
अऱवन् सेवडि अडैन्दनम्; अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 4
मुत्तन्; सिल्बलिक्कु ऊर्दॊऱुम् मुऱैमुऱै तिरियुम्
पित्तन्; सॆञ्जडैप् पिञ्ञगन्; तन् अडियार्गळ्
सित्तन्; माळिगै सॆऴु-मदि तवऴ्-पॊऴिल् तेवूर्
अत्तन् सेवडि अडैन्दनम्; अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 5
पाडुवार् इसै, पल्बॊरुट्पयन् उगन्दु अन्बाल्
कूडुवार्, तुणैक् कॊण्ड तम् पट्रु अऱप् पट्रित्
तेडुवार् पॊरुळ् आनवन्; सॆऱिबॊऴिल् तेवूर्
आडुवान् अडि अडैन्दनम् अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 6
पॊङ्गु पूण्-मुलैप्, पुरिगुऴल्, वरि-वळैप्, पॊरुप्पिन्
मङ्गै पङ्गिनन्; गङ्गैयै वळर्-सडै वैत्तान्;
तिङ्गळ् सूडिय ती-निऱक् कडवुळ्; तॆन् तेवूर्
अङ्गणण्ड्रनै अडैन्दनम् अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 7
वन्-पुयत्तवत् तानवर् पुरङ्गळै ऎरियत्
तन् पुयत्तु उऱत् तड-वरै वळैत्तवन्; तक्क
तॆन्-तमिऴ्क्कलै तॆरिन्दवर् पॊरुन्दिय तेवूर्
अन्बन् सेवडि अडैन्दनम् अल्लल्-ऒण्ड्रु इलमे.
* (वन्-पुयत्तवत् तानवर् = 1. वन्-पुयत्त अत्-तानवर्; 2. वन्-पुयत्तु अवत्-तानवर्);
पाडल् ऎण् : 8
तरु उयर्न्द वॆऱ्पु ऎडुत्त अत् तसमुगन् नॆरिन्दु
वॆरुव ऊण्ड्रिय तिरुविरल् नॆगिऴ्त्तु वाळ् पणित्तान्;
तॆरुवुदोऱुम् नल् तॆण्ड्रल् वन्दु उलविय तेवूर्
अरवु सूडियै अडैन्दनम् अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 9
मुन्दिक् कण्णनुम् नान्मुगनुम् अवर् काणा
ऎन्दै; तिण्-तिऱल् इरुङ्गळिऱु उरित्त ऎम् पॆरुमान्;
सॆन्दु-इनत्तु-इसै अऱुबदम् मुरल् तिरुत्-तेवूर्
अन्दि वण्णनै अडैन्दनम् अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 10
पाऱु पुत्तरुम् तवम् अणि समणरुम् पलनाळ्
कूऱि वैत्तदोर् कुऱियिनैप् पिऴै-ऎनक् कॊण्डु
तेऱि, मिक्क नम् सॆञ्जडैक् कडवुळ् तॆन् तेवूर्
आऱु सूडियै अडैन्दनम् अल्लल्-ऒण्ड्रु इलमे.
पाडल् ऎण् : 11
अल्लल् इण्ड्रि विण् आळ्वर्गळ्, काऴियर्क्कु अदिबन्,
नल्ल सॆन्दमिऴ् वल्लवन्, ञान सम्बन्दन्
ऎल्लै इल् पुगऴ् मल्गिय ऎऴिल् वळर् तेवूर्त्
तॊल्लै नम्बनैच् चॊल्लिय पत्तुम् वल्लारे.
================ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
# 2472 - పెరియ పురాణం - తిరుఞానసంబందర్ పురాణం - 574
నంబర్ మగిఴ్ తిరువారూర్ వణంగిప్ పోందు,
.. నలంగొళ్ తిరుక్-కాఱాయిల్ నణ్ణి ఏత్తిప్,
పైంబునల్-మెన్-పణైత్ తేవూర్ అణైందు పోట్రిప్,
.. పరమర్ తిరు-నెల్లిక్కాప్ పణిందు పాడి,
ఉంబర్-పిరాన్ కైచ్చినముం పరవిత్, తెంగూర్
.. ఓంగు-పుగఴ్త్ తిరుక్-కొళ్ళిక్కాడుం పోట్రిచ్,
చెంబొన్-మదిల్ కోట్టూరుం వణంగి ఏత్తిత్,
.. తిరు మలి వెండుఱై తొఴువాన్ సెండ్రు సేర్న్దార్.
సంబందర్ తేవారం - పదిగం 2.82 – తేవూర్ - (పణ్ - కాందారం)
పాడల్ ఎణ్ : 1
పణ్ నిలావియ మొఴి ఉమై పంగన్; ఎం పెరుమాన్;
విణ్ణిల్ వానవర్ కోన్; విమలన్; విడైయూర్ది;
తెణ్ణిలా-మది తవఴ్దరు మాళిగైత్ తేవూర్
అణ్ణల్ సేవడి అడైందనం; అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 2
ఓది మండలత్తోర్ ముఴుదు ఉయ్య వెఱ్పు ఏఱు
సోది వానవన్ తుదిసెయ మగిఴ్న్దవన్; తూ-నీర్త్
తీదిల్ పంగయం తెరివైయర్ ముగం మలర్ తేవూర్
ఆది సేవడి అడైందనం; అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 3
మఱైగళాల్ మిగ వఴిబడు మాణియైక్ కొల్వాన్
కఱువు కొండ అక్ కాలనైక్ కాయ్న్ద ఎం కడవుళ్;
సెఱువిల్ వాళైగళ్ సేల్-అవై పొరు-వయల్ తేవూర్
అఱవన్ సేవడి అడైందనం; అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 4
ముత్తన్; సిల్బలిక్కు ఊర్దొఱుం ముఱైముఱై తిరియుం
పిత్తన్; సెంజడైప్ పిఞ్ఞగన్; తన్ అడియార్గళ్
సిత్తన్; మాళిగై సెఴు-మది తవఴ్-పొఴిల్ తేవూర్
అత్తన్ సేవడి అడైందనం; అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 5
పాడువార్ ఇసై, పల్బొరుట్పయన్ ఉగందు అన్బాల్
కూడువార్, తుణైక్ కొండ తం పట్రు అఱప్ పట్రిత్
తేడువార్ పొరుళ్ ఆనవన్; సెఱిబొఴిల్ తేవూర్
ఆడువాన్ అడి అడైందనం అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 6
పొంగు పూణ్-ములైప్, పురిగుఴల్, వరి-వళైప్, పొరుప్పిన్
మంగై పంగినన్; గంగైయై వళర్-సడై వైత్తాన్;
తింగళ్ సూడియ తీ-నిఱక్ కడవుళ్; తెన్ తేవూర్
అంగణండ్రనై అడైందనం అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 7
వన్-పుయత్తవత్ తానవర్ పురంగళై ఎరియత్
తన్ పుయత్తు ఉఱత్ తడ-వరై వళైత్తవన్; తక్క
తెన్-తమిఴ్క్కలై తెరిందవర్ పొరుందియ తేవూర్
అన్బన్ సేవడి అడైందనం అల్లల్-ఒండ్రు ఇలమే.
* (వన్-పుయత్తవత్ తానవర్ = 1. వన్-పుయత్త అత్-తానవర్; 2. వన్-పుయత్తు అవత్-తానవర్);
పాడల్ ఎణ్ : 8
తరు ఉయర్న్ద వెఱ్పు ఎడుత్త అత్ తసముగన్ నెరిందు
వెరువ ఊండ్రియ తిరువిరల్ నెగిఴ్త్తు వాళ్ పణిత్తాన్;
తెరువుదోఱుం నల్ తెండ్రల్ వందు ఉలవియ తేవూర్
అరవు సూడియై అడైందనం అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 9
ముందిక్ కణ్ణనుం నాన్ముగనుం అవర్ కాణా
ఎందై; తిణ్-తిఱల్ ఇరుంగళిఱు ఉరిత్త ఎం పెరుమాన్;
సెందు-ఇనత్తు-ఇసై అఱుబదం మురల్ తిరుత్-తేవూర్
అంది వణ్ణనై అడైందనం అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 10
పాఱు పుత్తరుం తవం అణి సమణరుం పలనాళ్
కూఱి వైత్తదోర్ కుఱియినైప్ పిఴై-ఎనక్ కొండు
తేఱి, మిక్క నం సెంజడైక్ కడవుళ్ తెన్ తేవూర్
ఆఱు సూడియై అడైందనం అల్లల్-ఒండ్రు ఇలమే.
పాడల్ ఎణ్ : 11
అల్లల్ ఇండ్రి విణ్ ఆళ్వర్గళ్, కాఴియర్క్కు అదిబన్,
నల్ల సెందమిఴ్ వల్లవన్, ఞాన సంబందన్
ఎల్లై ఇల్ పుగఴ్ మల్గియ ఎఴిల్ వళర్ తేవూర్త్
తొల్లై నంబనైచ్ చొల్లియ పత్తుం వల్లారే.
================ ============
No comments:
Post a Comment