Sunday, March 31, 2024

11.5 - சேத்திர வெண்பா - Kshethra veNbA

142) 11.5 - சேத்திர வெண்பா - Kshethra veNbA

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர வெண்பா - பதிகம் 11.5 - Some songs

aiyaḍigaḷ kāḍavar-kōn nāyanār - sēttira veṇbā - padigam 11.5 - Some songs


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1WoNJ0oJ0Qv813WeLPE02orIig_HzCxrA/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/ANy9gvT5vRI

Part-2: https://youtu.be/ZwyNf_VIUXk

***
V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர வெண்பா - பதிகம் 11.5 - (Songs 1 - 15)


பல தலங்களின்மேல் தலத்திற்கு ஒரு பாடலாகப் பாடப் பெற்ற வெண்பாக்களின் தொகுப்பு. அவர் பல பாடல்கள் பாடியிருப்பார். நமக்கு இப்பாடல்களில் 24 பாடல்களே கிட்டியுள்ளன. இவற்றில் இடம்பெறும் தலங்கள்:

1. கோயில் (தில்லைச் சிற்றம்பலம்) - Chidambaram

2. குடந்தைக் கீழ்க்கோட்டம் - Kumbakonam Nageswarar temple

3. திருவையாறு - Thiruvaiyaru

4. திருவாரூர் - Tiruvarur

5. திருத்துருத்தி - (குத்தாலம்)"kuttAlam" - (between Kumbakonam and Mayiladuthurai)

6. திருக்கோடிகா - ThirukOdikAval

7. இடைவாய் - (திருவிடைவாய்? இடைவாய் என்று ஒரு வைப்புத்தலமோ?)

8. திருநெடுங்களம் - ThirunedungaLam

9. திருக்குழித் தண்டலை (திருக்கடம்பந்துறை - குளித்தலை) - Kuliththalai

10. - பொது - General

11. திருவானைக்கா - Thiruvanaikkaval

12. மயிலாப்பூர் - Mylapore

13. உஞ்சேனை மாகாளம் - Ujjain Mahakaleswar temple

14. வளைகுளம் - (ஒரு வைப்புத்தலம்)

15. திருச்சாய்க்காடு - Chayavanam

16. திருப்பாச்சிலாச்சிராமம் - Thiruvasi

17. திருச்சிராப்பள்ளி - Tiruchirappalli

18. திருமழபாடி - Thirumazhapadi

19. திரு-ஆப்பாடி - ThiruvayppAdi

20. கச்சி ஏகம்பம் - Kanchipuram Ekambareswarar temple

21. திருப்பனந்தாள் - தாடகையீச்சரம் - Thiruppanandal

22. திருவொற்றியூர் - Tiruvotriyur

23. - பொது - General

24. திருமயானம் (திருக்கடவூர் மயானம், etc.) - Thirukkadavur Mayanam, etc.


ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வரலாறு:

https://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=17


----------


ஐயடிகள் காடவர்-கோன் நாயனார் - சேத்திர வெண்பா - பதிகம் 11.5 - (Songs 1 - 15)

(வெண்பா - meter)

பாடல் எண் : 1

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்

கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே

தில்லைச்சிற் றம்பலமே சேர்.


Word Separated:

ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்

கோடுகின்றார்; மூப்பும் குறுகிற்று; நாடுகின்ற

நல்-அச்சு இற்று அம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே,

தில்லைச் சிற்றம்பலமே சேர்.


பாடல் எண் : 2

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று

நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த

பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்

கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.


Word Separated:

"கடு அடுத்த நீர் கொடுவா", "காடி தா" என்று

நடுநடுத்து நா அடங்கா முன்னம், பொடி அடுத்த

பாழ்க்-கோட்டம் சேராமுன், பன்-மாடத் தென்-குடந்தைக்

கீழ்க்கோட்டம் செப்பிக் கிட.


பாடல் எண் : 3

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,

நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி

ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை.


Word Separated:

குந்தி நடந்து, குனிந்து ஒரு கை கோல் ஊன்றி,

நொந்து இருமி ஏங்கி நுரைத்து ஏறி வந்து உந்தி

-ஆறு வாய்-ஆறு பாயாமுன், நெஞ்சமே,

ஐயாறு வாயால் அழை.


பாடல் எண் : 4

காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்

நாளும் அணுகி நலியாமுன் பாளை

அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்

கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.


Word Separated:

காளை வடிவு ஒழிந்து, கையறவோடு ஐயுறவாய்,

நாளும் அணுகி நலியாமுன், பாளை

அவிழ்-கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க்

கவிழ்க முகம், கூம்புக என் கை.


பாடல் எண் : 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்

குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி

அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே

திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.


Word Separated:

வஞ்சி அன நுண்-இடையார் வாள்-தடம்-கண் நீர் சோரக்,

குஞ்சி குறங்கின்மேல் கொண்டிருந்து, "கஞ்சி

அருத்தொருத்தி * கொண்டுவா" என்னாமுன், நெஞ்சே,

திருத்துருத்தியான் பாதம் சேர்.

(* அருத்தொருத்தி = அருத்த ஒருத்தி)


பாடல் எண் : 6

காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து

மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர்

பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்

திருக்கோடி காஅடைநீ சென்று.


Word Separated:

காலைக் கரை-இழையால் கட்டித், தன் கை ஆர்த்து,

மாலை தலைக்கு அணிந்து, மையெழுதி, மேல் ஓர்

பருக்-கோடி மூடிப், பலர் அழா-முன்னம்,

திருக்கோடிகா அடை நீ சென்று.


பாடல் எண் : 7

மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே

வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் பாண்டவாய்த்

தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்

நின்னிடைவாய் வைத்து நினை.


Word Separated:

மாண்டு, வாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே,

வேண்டுவாய் ஆகி, விரைந்து ஒல்லைப் பாண்டவாய்த் *

தென்-இடைவாய் மேய சிவனார் திருநாமம்

நின்-இடைவாய் வைத்து நினை.

(* பாண்டவாய்த் = பாண்டு அவாய்த்)


பாடல் எண் : 8

தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது

பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி

எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே

நெடுங்களத்தான் பாதம் நினை.


Word Separated:

தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது,

பெட்டப் பிணம் என்று பேர் இட்டுக், "கட்டி

எடுங்கள் அத்தா" என்னாமுன் ஏழை மட-நெஞ்சே

நெடுங்களத்தான் பாதம் நினை.


பாடல் எண் : 9

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி

ஒழுகும் பொழுதறிய ஒண்ணா கழுகு

கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்

குழித்தண் டலையானைக் கூறு.


Word Separated:

அழுகு திரி-குரம்பை ஆங்கு அது விட்டு ஆவி

ஒழுகும் பொழுது அறிய ஒண்ணா; கழுகு

கழித்து உண்டு அலையாமுன் காவிரியின் தென்பால்

குழித்-தண்டலையானைக் கூறு.


பாடல் எண் : 10

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து மும்மை கடியிலங்கு

தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்

டோடேந்தி யுண்ப துறும்.


Word Separated:

படி முழுதும் வெண்-குடைக்கீழ்ப் பார்-எலாம் ஆண்ட

முடி-அரசர் செல்வத்து மும்மை கடி இலங்கு

தோடு ஏந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டு-பட்டு

ஓடு ஏந்தி உண்பது உறும்.


பாடல் எண் : 11

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட

வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇயிருந்தும்

என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்

தென்னானைக் காஅடைநீ சென்று.


Word Separated:

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள் பாராட்ட,

வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் தழீஇயிருந்தும்,

"என் ஆனைக்கு, ஆஆ, இது தகாது" என்னாமுன்

தென்-ஆனைக்கா அடை நீ சென்று.


பாடல் எண் : 12

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்

பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத்

திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்

இருப்பின்னை யங்காந் திளைத்து.


Word Separated:

குயில் ஒத்து இருள்-குஞ்சி கொக்கு ஒத்து, இருமல்

பயிலப் புகாமுன்னம், நெஞ்சே, மயிலைத்

திருப்-புன்னையங்-கானல் சிந்தியாய் ஆகில்,

இருப், பின்னை அங்காந்து இளைத்து.


பாடல் எண் : 13

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்

பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து சூளையர்கள்

ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை

மாகாளங் கைதொழுது வாழ்த்து.


Word Separated:

காளையர்கள் ஈளையர்கள் ஆகிக், கரு-மயிரும்

பூளை எனப் பொங்கிப், பொலிவு அழிந்து, சூளையர்கள்

ஓகாளம் செய்யாமுன், நெஞ்சமே, உஞ்சேனை

மாகாளம் கை-தொழுது வாழ்த்து.


பாடல் எண் : 14

இல்லும் பொருளும் இருந்த மனையளவே

சொல்லும் அயலார் துடிப்பளவே நல்ல

கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.


Word Separated:

இல்லும் பொருளும் இருந்த மனை அளவே;

சொல்லும் அயலார் துடிப்பு அளவே; நல்ல

கிளை குளத்து நீர் அளவே; கிற்றியே நெஞ்சே,

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.


பாடல் எண் : 15

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்

குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே

போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்

சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.


Word Separated:

அஞ்சனம் சேர் கண்ணார் அருவருக்கும் அப்-பதமாய்க்,

குஞ்சி வெளுத்து, உடலம் கோடாமுன், நெஞ்சமே,

போய்க் காடு கூடப் புலம்பாது, பூம்புகார்ச்

சாய்க்காடு கை-தொழு நீ சார்ந்து.

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


aiyaḍigaḷ kāḍavar-kōn nāyanār - sēttira veṇbā - padigam 11.5 - (Songs 1 - 15)

(veṇbā - meter)

pāḍal eṇ : 1

oḍugiṇḍra nīrmai oḻidalumē uṭrārum

kōḍugiṇḍrār; mūppum kuṟugiṭru; nāḍugiṇḍra

nal-accu iṭru ambalamē naṇṇāmun, nanneñjē,

tillaic ciṭrambalamē sēr.


pāḍal eṇ : 2

"kaḍu aḍutta nīr koḍuvā", "kāḍi tā" eṇḍru

naḍunaḍuttu nā aḍaṅgā munnam, poḍi aḍutta

pāḻk-kōṭṭam sērāmun, pan-māḍat ten-kuḍandaik

kīḻkkōṭṭam seppik kiḍa.


pāḍal eṇ : 3

kundi naḍandu, kunindu oru kai kōl ūṇḍri,

nondu irumi ēṅgi nuraittu ēṟi vandu undi

ai-āṟu vāy-āṟu pāyāmun, neñjamē,

aiyāṟu vāyāl aḻai.


pāḍal eṇ : 4

kāḷai vaḍivu oḻindu, kaiyaṟavōḍu aiyuṟavāy,

nāḷum aṇugi naliyāmun, pāḷai

aviḻ-kamugam pūñjōlai ārūraṟku āḷāyk

kaviḻga mugam, kūmbuga en kai.


pāḍal eṇ : 5

vañji ana nuṇ-iḍaiyār vāḷ-taḍam-kaṇ nīr sōrak,

kuñji kuṟaṅginmēl koṇḍirundu, "kañji

aruttorutti * koṇḍuvā" ennāmun, neñjē,

tirutturuttiyān pādam sēr.

(* aruttorutti = arutta orutti)


pāḍal eṇ : 6

kālaik karai-iḻaiyāl kaṭṭit, tan kai ārttu,

mālai talaikku aṇindu, maiyeḻudi, mēl ōr

paruk-kōḍi mūḍip, palar aḻā-munnam,

tirukkōḍigā aḍai nī seṇḍru.


pāḍal eṇ : 7

māṇḍu, vāy aṅgāvā munnam, maḍaneñjē,

vēṇḍuvāy āgi, viraindu ollaip pāṇḍavāyt *

ten-iḍaivāy mēya sivanār tirunāmam

nin-iḍaivāy vaittu ninai.

(* pāṇḍavāyt = pāṇḍu avāyt)


pāḍal eṇ : 8

toṭṭut taḍavit tuḍippu oṇḍrum kāṇādu,

peṭṭap piṇam eṇḍru pēr iṭṭuk, "kaṭṭi

eḍuṅgaḷ attā" ennāmun ēḻai maḍa-neñjē

neḍuṅgaḷattān pādam ninai.


pāḍal eṇ : 9

aḻugu tiri-kurambai āṅgu adu viṭṭu āvi

oḻugum poḻudu aṟiya oṇṇā; kaḻugu

kaḻittu uṇḍu alaiyāmun kāviriyin tenbāl

kuḻit-taṇḍalaiyānaik kūṟu.


pāḍal eṇ : 10

paḍi muḻudum veṇ-kuḍaikkīḻp pār-elām āṇḍa

muḍi-arasar selvattu mummai kaḍi ilaṅgu

tōḍu ēndu koṇḍraiyandārc cōdikkut toṇḍu-paṭṭu

ōḍu ēndi uṇbadu uṟum.


pāḍal eṇ : 11

kuḻīiyirunda suṭram kuṇaṅgaḷ pārāṭṭa,

vaḻīiyirunda aṅgaṅgaḷ ellām taḻīiyirundum,

"en ānaikku, āā, idu tagādu" ennāmun

ten-ānaikkā aḍai nī seṇḍru.


pāḍal eṇ : 12

kuyil ottu iruḷ-kuñji kokku ottu, irumal

payilap pugāmunnam, neñjē, mayilait

tirup-punnaiyaṅ-gānal sindiyāy āgil,

irup, pinnai aṅgāndu iḷaittu.


pāḍal eṇ : 13

kāḷaiyargaḷ īḷaiyargaḷ āgik, karu-mayirum

pūḷai enap poṅgip, polivu aḻindu, sūḷaiyargaḷ

ōgāḷam seyyāmun, neñjamē, uñjēnai

māgāḷam kai-toḻudu vāḻttu.


pāḍal eṇ : 14

illum poruḷum irunda manai aḷavē;

sollum ayalār tuḍippu aḷavē; nalla

kiḷai kuḷattu nīr aḷavē; kiṭriyē neñjē,

vaḷaiguḷattuḷ īsanaiyē vāḻttu.


pāḍal eṇ : 15

añjanam sēr kaṇṇār aruvarukkum ap-padamāyk,

kuñji veḷuttu, uḍalam kōḍāmun, neñjamē,

pōyk kāḍu kūḍap pulambādu, pūmbugārc

cāykkāḍu kai-toḻu nī sārndu.

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


ऐयडिगळ् काडवर्-कोन् नायनार् - सेत्तिर वॆण्बा - पदिगम् 11.5 - (Songs 1 - 15)

(वॆण्बा - meter)

पाडल् ऎण् : 1

ऒडुगिण्ड्र नीर्मै ऒऴिदलुमे उट्रारुम्

कोडुगिण्ड्रार्; मूप्पुम् कुऱुगिट्रु; नाडुगिण्ड्र

नल्-अच्चु इट्रु अम्बलमे नण्णामुन्, नन्नॆञ्जे,

तिल्लैच् चिट्रम्बलमे सेर्.


पाडल् ऎण् : 2

"कडु अडुत्त नीर् कॊडुवा", "काडि ता" ऎण्ड्रु

नडुनडुत्तु ना अडङ्गा मुन्नम्, पॊडि अडुत्त

पाऴ्क्-कोट्टम् सेरामुन्, पन्-माडत् तॆन्-कुडन्दैक्

कीऴ्क्कोट्टम् सॆप्पिक् किड.


पाडल् ऎण् : 3

कुन्दि नडन्दु, कुनिन्दु ऒरु कै कोल् ऊण्ड्रि,

नॊन्दु इरुमि एङ्गि नुरैत्तु एऱि वन्दु उन्दि

-आऱु वाय्-आऱु पायामुन्, नॆञ्जमे,

ऐयाऱु वायाल् अऴै.


पाडल् ऎण् : 4

काळै वडिवु ऒऴिन्दु, कैयऱवोडु ऐयुऱवाय्,

नाळुम् अणुगि नलियामुन्, पाळै

अविऴ्-कमुगम् पूञ्जोलै आरूरऱ्‌कु आळाय्क्

कविऴ्ग मुगम्, कूम्बुग ऎन् कै.


पाडल् ऎण् : 5

वञ्जि अन नुण्-इडैयार् वाळ्-तडम्-कण् नीर् सोरक्,

कुञ्जि कुऱङ्गिन्मेल् कॊण्डिरुन्दु, "कञ्जि

अरुत्तॊरुत्ति * कॊण्डुवा" ऎन्नामुन्, नॆञ्जे,

तिरुत्तुरुत्तियान् पादम् सेर्.

(* अरुत्तॊरुत्ति = अरुत्त ऒरुत्ति)


पाडल् ऎण् : 6

कालैक् करै-इऴैयाल् कट्टित्, तन् कै आर्त्तु,

मालै तलैक्कु अणिन्दु, मैयॆऴुदि, मेल् ओर्

परुक्-कोडि मूडिप्, पलर् अऴा-मुन्नम्,

तिरुक्कोडिगा अडै नी सॆण्ड्रु.


पाडल् ऎण् : 7

माण्डु, वाय् अङ्गावा मुन्नम्, मडनॆञ्जे,

वेण्डुवाय् आगि, विरैन्दु ऒल्लैप् पाण्डवाय्त् *

तॆन्-इडैवाय् मेय सिवनार् तिरुनामम्

निन्-इडैवाय् वैत्तु निनै.

(* पाण्डवाय्त् = पाण्डु अवाय्त्)


पाडल् ऎण् : 8

तॊट्टुत् तडवित् तुडिप्पु ऒण्ड्रुम् काणादु,

पॆट्टप् पिणम् ऎण्ड्रु पेर् इट्टुक्, "कट्टि

ऎडुङ्गळ् अत्ता" ऎन्नामुन् एऴै मड-नॆञ्जे

नॆडुङ्गळत्तान् पादम् निनै.


पाडल् ऎण् : 9

अऴुगु तिरि-कुरम्बै आङ्गु अदु विट्टु आवि

ऒऴुगुम् पॊऴुदु अऱिय ऒण्णा; कऴुगु

कऴित्तु उण्डु अलैयामुन् काविरियिन् तॆन्बाल्

कुऴित्-तण्डलैयानैक् कूऱु.


पाडल् ऎण् : 10

पडि मुऴुदुम् वॆण्-कुडैक्कीऴ्प् पार्-ऎलाम् आण्ड

मुडि-अरसर् सॆल्वत्तु मुम्मै कडि इलङ्गु

तोडु एन्दु कॊण्ड्रैयन्दार्च् चोदिक्कुत् तॊण्डु-पट्टु

ओडु एन्दि उण्बदु उऱुम्.


पाडल् ऎण् : 11

कुऴीइयिरुन्द सुट्रम् कुणङ्गळ् पाराट्ट,

वऴीइयिरुन्द अङ्गङ्गळ् ऎल्लाम् तऴीइयिरुन्दुम्,

"ऎन् आनैक्कु, आआ, इदु तगादु" ऎन्नामुन्

तॆन्-आनैक्का अडै नी सॆण्ड्रु.


पाडल् ऎण् : 12

कुयिल् ऒत्तु इरुळ्-कुञ्जि कॊक्कु ऒत्तु, इरुमल्

पयिलप् पुगामुन्नम्, नॆञ्जे, मयिलैत्

तिरुप्-पुन्नैयङ्-गानल् सिन्दियाय् आगिल्,

इरुप्, पिन्नै अङ्गान्दु इळैत्तु.


पाडल् ऎण् : 13

काळैयर्गळ् ईळैयर्गळ् आगिक्, करु-मयिरुम्

पूळै ऎनप् पॊङ्गिप्, पॊलिवु अऴिन्दु, सूळैयर्गळ्

ओगाळम् सॆय्यामुन्, नॆञ्जमे, उञ्जेनै

मागाळम् कै-तॊऴुदु वाऴ्त्तु.


पाडल् ऎण् : 14

इल्लुम् पॊरुळुम् इरुन्द मनै अळवे;

सॊल्लुम् अयलार् तुडिप्पु अळवे; नल्ल

किळै कुळत्तु नीर् अळवे; किट्रिये नॆञ्जे,

वळैगुळत्तुळ् ईसनैये वाऴ्त्तु.


पाडल् ऎण् : 15

अञ्जनम् सेर् कण्णार् अरुवरुक्कुम् अप्-पदमाय्क्,

कुञ्जि वॆळुत्तु, उडलम् कोडामुन्, नॆञ्जमे,

पोय्क् काडु कूडप् पुलम्बादु, पूम्बुगार्च्

चाय्क्काडु कै-तॊऴु नी सार्न्दु.

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


ఐయడిగళ్ కాడవర్-కోన్ నాయనార్ - సేత్తిర వెణ్బా - పదిగం 11.5 - (Songs 1 - 15)

(వెణ్బా - meter)

పాడల్ ఎణ్ : 1

ఒడుగిండ్ర నీర్మై ఒఴిదలుమే ఉట్రారుం

కోడుగిండ్రార్; మూప్పుం కుఱుగిట్రు; నాడుగిండ్ర

నల్-అచ్చు ఇట్రు అంబలమే నణ్ణామున్, నన్నెంజే,

తిల్లైచ్ చిట్రంబలమే సేర్.


పాడల్ ఎణ్ : 2

"కడు అడుత్త నీర్ కొడువా", "కాడి తా" ఎండ్రు

నడునడుత్తు నా అడంగా మున్నం, పొడి అడుత్త

పాఴ్క్-కోట్టం సేరామున్, పన్-మాడత్ తెన్-కుడందైక్

కీఴ్క్కోట్టం సెప్పిక్ కిడ.


పాడల్ ఎణ్ : 3

కుంది నడందు, కునిందు ఒరు కై కోల్ ఊండ్రి,

నొందు ఇరుమి ఏంగి నురైత్తు ఏఱి వందు ఉంది

-ఆఱు వాయ్-ఆఱు పాయామున్, నెంజమే,

ఐయాఱు వాయాల్ అఴై.


పాడల్ ఎణ్ : 4

కాళై వడివు ఒఴిందు, కైయఱవోడు ఐయుఱవాయ్,

నాళుం అణుగి నలియామున్, పాళై

అవిఴ్-కముగం పూంజోలై ఆరూరఱ్కు ఆళాయ్క్

కవిఴ్గ ముగం, కూంబుగ ఎన్ కై.


పాడల్ ఎణ్ : 5

వంజి అన నుణ్-ఇడైయార్ వాళ్-తడం-కణ్ నీర్ సోరక్,

కుంజి కుఱంగిన్మేల్ కొండిరుందు, "కంజి

అరుత్తొరుత్తి * కొండువా" ఎన్నామున్, నెంజే,

తిరుత్తురుత్తియాన్ పాదం సేర్.

(* అరుత్తొరుత్తి = అరుత్త ఒరుత్తి)


పాడల్ ఎణ్ : 6

కాలైక్ కరై-ఇఴైయాల్ కట్టిత్, తన్ కై ఆర్త్తు,

మాలై తలైక్కు అణిందు, మైయెఴుది, మేల్ ఓర్

పరుక్-కోడి మూడిప్, పలర్ అఴా-మున్నం,

తిరుక్కోడిగా అడై నీ సెండ్రు.


పాడల్ ఎణ్ : 7

మాండు, వాయ్ అంగావా మున్నం, మడనెంజే,

వేండువాయ్ ఆగి, విరైందు ఒల్లైప్ పాండవాయ్త్ *

తెన్-ఇడైవాయ్ మేయ సివనార్ తిరునామం

నిన్-ఇడైవాయ్ వైత్తు నినై.

(* పాండవాయ్త్ = పాండు అవాయ్త్)


పాడల్ ఎణ్ : 8

తొట్టుత్ తడవిత్ తుడిప్పు ఒండ్రుం కాణాదు,

పెట్టప్ పిణం ఎండ్రు పేర్ ఇట్టుక్, "కట్టి

ఎడుంగళ్ అత్తా" ఎన్నామున్ ఏఴై మడ-నెంజే

నెడుంగళత్తాన్ పాదం నినై.


పాడల్ ఎణ్ : 9

అఴుగు తిరి-కురంబై ఆంగు అదు విట్టు ఆవి

ఒఴుగుం పొఴుదు అఱియ ఒణ్ణా; కఴుగు

కఴిత్తు ఉండు అలైయామున్ కావిరియిన్ తెన్బాల్

కుఴిత్-తండలైయానైక్ కూఱు.


పాడల్ ఎణ్ : 10

పడి ముఴుదుం వెణ్-కుడైక్కీఴ్ప్ పార్-ఎలాం ఆండ

ముడి-అరసర్ సెల్వత్తు ముమ్మై కడి ఇలంగు

తోడు ఏందు కొండ్రైయందార్చ్ చోదిక్కుత్ తొండు-పట్టు

ఓడు ఏంది ఉణ్బదు ఉఱుం.


పాడల్ ఎణ్ : 11

కుఴీఇయిరుంద సుట్రం కుణంగళ్ పారాట్ట,

వఴీఇయిరుంద అంగంగళ్ ఎల్లాం తఴీఇయిరుందుం,

"ఎన్ ఆనైక్కు, ఆఆ, ఇదు తగాదు" ఎన్నామున్

తెన్-ఆనైక్కా అడై నీ సెండ్రు.


పాడల్ ఎణ్ : 12

కుయిల్ ఒత్తు ఇరుళ్-కుంజి కొక్కు ఒత్తు, ఇరుమల్

పయిలప్ పుగామున్నం, నెంజే, మయిలైత్

తిరుప్-పున్నైయఙ్-గానల్ సిందియాయ్ ఆగిల్,

ఇరుప్, పిన్నై అంగాందు ఇళైత్తు.


పాడల్ ఎణ్ : 13

కాళైయర్గళ్ ఈళైయర్గళ్ ఆగిక్, కరు-మయిరుం

పూళై ఎనప్ పొంగిప్, పొలివు అఴిందు, సూళైయర్గళ్

ఓగాళం సెయ్యామున్, నెంజమే, ఉంజేనై

మాగాళం కై-తొఴుదు వాఴ్త్తు.


పాడల్ ఎణ్ : 14

ఇల్లుం పొరుళుం ఇరుంద మనై అళవే;

సొల్లుం అయలార్ తుడిప్పు అళవే; నల్ల

కిళై కుళత్తు నీర్ అళవే; కిట్రియే నెంజే,

వళైగుళత్తుళ్ ఈసనైయే వాఴ్త్తు.


పాడల్ ఎణ్ : 15

అంజనం సేర్ కణ్ణార్ అరువరుక్కుం అప్-పదమాయ్క్,

కుంజి వెళుత్తు, ఉడలం కోడామున్, నెంజమే,

పోయ్క్ కాడు కూడప్ పులంబాదు, పూంబుగార్చ్

చాయ్క్కాడు కై-తొఴు నీ సార్న్దు.

=====================================