Sunday, August 18, 2024

2.36 - சீரார் கழலே - sIrAr kazhalE - (இரும்பூளை)


149) 2.36 - சீரார் கழலே - sIrAr kazhalE - (இரும்பூளை)

சம்பந்தர் தேவாரம் - 2.36 - சீரார் கழலே - திருவிரும்பூளை - (வினாவுரை) (பண் - இந்தளம்)

sambandar tēvāram - 2.36 - sīr ār kaḻalē - tiruvirumbūḷai - (vināvurai) (paṇ - indaḷam)


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses:

PDF: https://drive.google.com/file/d/1wqEFfV_x4jxU81-nGfivmoixQjU7slj3/view

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/RVJXwOhzHc8

Part-2: https://youtu.be/Kl8rUTi_Ulw

Part-3: https://youtu.be/shM41x2TfBc

***
English translation (meaning) :

https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_036.HTM


V. Subramanian

================

This has verses in Tamil, English, Devanagari, and Telugu scripts.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.36 - திருவிரும்பூளை - (வினாவுரை) (பண் - இந்தளம்)


திருவிரும்பூளை : இக்கால வழக்கில் "ஆலங்குடி". கும்பகோணத்திலிருந்து தெற்கே 18 கிமீ தூரத்தில் உள்ள தலம். நீடாமங்கலத்திலிருந்து வடக்கே 8 கிமீ தூரத்தில் உள்ளது. பூளை என்ற செடி தலமரமான காரணத்தால் இத்தலம் "இரும்பூளை" என்ற பெயர் பெற்றது.


பதிக வரலாறு : ஞானசம்பந்தர் திருவாறை வடதளியைத் தரிசித்துப் பின், திருவிரும்பூளையை அடைந்து பாடியருளிய பதிகம் இது. வினாவுரை என்று சுட்டப்பெறும் பதிகங்களில் ஒன்று இது.


வினாவுரை - My note:

தேவாரத்தில் சில பதிகங்களை "வினாவுரைப் பதிகம்" என்று குறிப்பிடுவர். இப்பதிகங்களில் ஈசனது கோலத்தையும் செயல்களையும் பாடி, அவற்றின் காரணம் என்னவோ என்று ஈசனையோ மற்ற அடியார்களையோ வினவுவது போன்ற அமைப்பு இருக்கும்.

1.4 - மைம்மரு பூங்குழல்

1.6 - அங்கமும் வேதமும்

1.51 - வெங்கணானை ஈருரிவை (but books do not mark it as வினாவுரை)

1.7 - பாடக மெல்லடி

2.4 - கரையுலாம் கடலில்

2.36 - சீரார் கழலே

2.37 - சதுரம் மறைதான் (but books do not mark it as வினாவுரை)

3.38 - வினவினேன் அறியாமையில்

7.6 - படங்கொள் நாகம் (but books do not mark it as வினாவுரை)

முதலிய பதிகங்கள் இவ்வாறு உள்ளன.

----------


"tiru-irumbūḷai" devotees welcome Sambandar

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 400

தேவர்பிரா னமர்ந்ததிரு விரும்பூளை சென்றெய்தக்

காவணநீ டோரணங்க ணாட்டியுடன் களிசிறப்பப்

பூவணமா லைகணாற்றிப் பூரணபொற் குடநிரைத்தங்கி

யாவர்களும் போற்றிசைப்பத் திருத்தொண்ட ரெதிர்கொண்டார்.


Word separated:

தேவர்-பிரான் அமர்ந்த திருவிரும்பூளை சென்றெய்தக்,

காவணம் நீள்-தோரணங்கள் நாட்டி, உடன் களிசிறப்பப்

பூ-வண-மாலைகள் நாற்றிப், பூரண-பொற்குடம் நிரைத்து, அங்கு

யாவர்களும் போற்றிசைப்பத் திருத்தொண்டர் எதிர்கொண்டார்.


Sambandar goes inside the temple and worships Siva

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 401

வண்டமிழின் மொழிவிரகர் மணிமுத்தின் சிவிகையினைத்

தொண்டர்குழாத் தெதிரிழிந்தங் கவர்தொழத்தா முந்தொழுதே

யண்டர்பிரான் கோயிலினை யணைந்திறைஞ்சி முன்னின்று

பண்டருமின் னிசைப்பதிகம் பரம்பொருளைப் பாடுவார்,


Word separated:

வண்-தமிழின் மொழி-விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்

தொண்டர்-குழாத்து எதிர் இழிந்து, அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே,

அண்டர்-பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி, முன் நின்று,

பண்-தரும் இன்னிசைப்-பதிகம் பரம்பொருளைப் பாடுவார்,


Sambandar sings a padhigam (in the form of questions)

பெரியபுராணம் - 12.28 - திருஞானசம்பந்தர் புராணம் - 402

நிகரிலா மேருவரை யணுவாக நீண்டானை

நுகர்கின்ற தொண்டர்தமக் கமுதாகி நொய்யானைத்

தகவொன்ற வடியார்க டமைவினவித் தமிழ்விரகர்

பகர்கின்ற வருமறையின் பொருள்விரியப் பாடினார்.


Word separated:

நிகர்-இலா மேரு-வரை அணு ஆக நீண்டானை,

நுகர்கின்ற தொண்டர்-தமக்கு அமுது ஆகி நொய்யானைத்,

தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவித், தமிழ்-விரகர்

பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்.


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.36 - திருவிரும்பூளை - (வினாவுரை) (பண் - இந்தளம்)

(தனனா தனனா தனனா தனதானா - Rhythm)

பாடல் எண் : 1

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்

வாரார் முலைமங் கையொடும் முடனாகி

ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன்

காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே.


Word separated:

சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர்,

வார் ஆர் முலை-மங்கையொடும் உடன் ஆகி

ஏர் ஆர் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

கார் ஆர் கடல்-நஞ்சு அமுது-உண்ட கருத்தே.


பாடல் எண் : 2

தொழலார் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்

குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி

எழிலா ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன்

கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே.


Word separated:

தொழல்-ஆர் கழலே தொழு-தொண்டர்கள் சொல்லீர்,

குழல் ஆர் மொழிக்-கோல்வளையோடு உடன் ஆகி

எழில் ஆர் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

கழல்தான் கரிகானிடை ஆடு-கருத்தே.


பாடல் எண் : 3

அன்பா லடிகை தொழுவீ ரறியீரே

மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி

இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்

பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.


Word separated:

அன்பால் அடி கைதொழுவீர் அறியீரே,

மின்போல் மருங்குல் மடவாளொடும் மேவி

இன்பாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

பொன்போல் சடையில் புனல் வைத்த பொருளே.


பாடல் எண் : 4

நச்சித் தொழுவீர் கணமக் கிதுசொல்லீர்

கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி

இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன்

உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.


Word separated:

நச்சித் தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர்,

கச்சிப் பொலி-காமக்கொடியுடன் கூடி

இச்சித்து இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

உச்சித் தலையில் பலிகொண்டு உழல்-ஊணே.


பாடல் எண் : 5

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்

நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி

எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்

புற்றா டரவோ டென்புபூண் டபொருளே.


Word separated:

சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர்,

நல்-தாழ்-குழல் நங்கையொடும் உடன் ஆகி,

எற்றே, இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

புற்று-ஆடு-அரவோடு என்பு பூண்ட பொருளே.


பாடல் எண் : 6

தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்

சேடார் குழற்சே யிழையோ டுடனாகி

ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்

காடார் கடுவே டுவனா னகருத்தே.


Word separated:

தோடு ஆர் மலர் தூய்த் தொழு-தொண்டர்கள் சொல்லீர்,

சேடு ஆர் குழற்-சேயிழையோடு உடன் ஆகி

ஈடாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

காடு ஆர் கடு-வேடுவன் ஆன கருத்தே.


பாடல் எண் : 7

***** This verse is lost *****


Word separated:

***** This verse is lost *****


பாடல் எண் : 8

ஒருக்கும் மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர்

பருக்கை மதவே ழமுரித் துமையோடும்

இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன்

அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே.


Word separated:

ஒருக்கும் மனத்து அன்பர்-உள்ளீர் இது சொல்லீர்,

பருக்-கை மத-வேழம் உரித்து, உமையோடும்

இருக்கை இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியவாறே.


பாடல் எண் : 9

துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர்

கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி

இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்

முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.


Word separated:

துயராயின நீங்கித் தொழும் தொண்டர் சொல்லீர்,

கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி

இயல்பாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே.


பாடல் எண் : 10

துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர்

பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி

இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன்

அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.


Word separated:

துணை நன்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள் சொல்லீர்,

பணை-மென்-முலைப் பார்ப்பதியோடு உடன் ஆகி

இணை-இல் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

அணைவு-இல் சமண் சாக்கியம் ஆக்கியவாறே.


பாடல் எண் : 11

எந்தை யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்

சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன்

செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார்

பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.


Word separated:

எந்தை இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

சந்தம் பயில் சண்பையுள் ஞான-சம்பந்தன்

செந்தண்- தமிழ் செப்பிய பத்து இவை வல்லார்

பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே.

=====================================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


Sambandar reaches Thiruvaigavur and sings a padhigam

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 240

visayamaṅgaiyiniḍam agaṇḍru, meyyar-tāḷ

asaivu-il vaigāvinil aṇaindu pāḍip-pōndu,

isai vaḷar ñānasambandar eydinār,

disaiyuḍai āḍaiyar tiruppuṟambayam.


"tiru-irumbūḷai" devotees welcome Sambandar

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 400

dēvar-pirān amarnda tiruvirumbūḷai seṇḍreydak,

kāvaṇam nīḷ-tōraṇaṅgaḷ nāṭṭi, uḍan kaḷisiṟappap

pū-vaṇa-mālaigaḷ nāṭrip, pūraṇa-poṟkuḍam niraittu, aṅgu

yāvargaḷum pōṭrisaippat tiruttoṇḍar edirgoṇḍār.


Sambandar goes inside the temple and worships Siva

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 401

vaṇ-tamiḻin moḻi-viragar maṇimuttin sivigaiyinait

toṇḍar-kuḻāttu edir iḻindu, aṅgu avar toḻat tāmum toḻudē,

aṇḍar-pirān kōyilinai aṇaindu iṟaiñji, mun niṇḍru,

paṇ-tarum innisaip-padigam paramboruḷaip pāḍuvār,


Sambandar sings a padhigam (in the form of questions)

periyapurāṇam - 12.28 - tiruñānasambandar purāṇam - 402

nigar-ilā mēru-varai aṇu āga nīṇḍānai,

nugargiṇḍra toṇḍar-tamakku amudu āgi noyyānait,

tagavu oṇḍra aḍiyārgaḷ-tamai vinavit, tamiḻ-viragar

pagargiṇḍra arumaṟaiyin poruḷ viriyap pāḍinār.


sambandar tēvāram - padigam 2.36 - tiruvirumbūḷai - (vināvurai) (paṇ - indaḷam)

(tananā tananā tananā tanadānā - Rhythm)

pāḍal eṇ : 1

sīr ār kaḻalē toḻuvīr idu seppīr,

vār ār mulai-maṅgaiyoḍum uḍan āgi

ēr ār irumbūḷai iḍam koṇḍa īsan

kār ār kaḍal-nañju amudu-uṇḍa karuttē.


pāḍal eṇ : 2

toḻal-ār kaḻalē toḻu-toṇḍargaḷ sollīr,

kuḻal ār moḻik-kōlvaḷaiyōḍu uḍan āgi

eḻil ār irumbūḷai iḍam koṇḍa īsan

kaḻaldān karigāniḍai āḍu-karuttē.


pāḍal eṇ : 3

anbāl aḍi kaidoḻuvīr aṟiyīrē,

minbōl maruṅgul maḍavāḷoḍum mēvi

inbāy irumbūḷai iḍam koṇḍa īsan

ponbōl saḍaiyil punal vaitta poruḷē.


pāḍal eṇ : 4

naccit toḻuvīrgaḷ namakku idu sollīr,

kaccip poli-kāmakkoḍiyuḍan kūḍi

iccittu irumbūḷai iḍam koṇḍa īsan

uccit talaiyil paligoṇḍu uḻal-ūṇē.


pāḍal eṇ : 5

suṭru ārndu aḍiyē toḻuvīr idu sollīr,

nal-tāḻ-kuḻal naṅgaiyoḍum uḍan āgi,

eṭrē, irumbūḷai iḍam koṇḍa īsan

puṭru-āḍu-aravōḍu enbu pūṇḍa poruḷē.


pāḍal eṇ : 6

tōḍu ār malar tūyt toḻu-toṇḍargaḷ sollīr,

sēḍu ār kuḻaṟ-sēyiḻaiyōḍu uḍan āgi

īḍāy irumbūḷai iḍam koṇḍa īsan

kāḍu ār kaḍu-vēḍuvan āna karuttē.


pāḍal eṇ : 7

***** This verse is lost *****


pāḍal eṇ : 8

orukkum manattu anbar-uḷḷīr idu sollīr,

paruk-kai mada-vēḻam urittu, umaiyōḍum

irukkai irumbūḷai iḍam koṇḍa īsan

arakkan uram tīrttu aruḷ ākkiyavāṟē.


pāḍal eṇ : 9

tuyarāyina nīṅgit toḻum toṇḍar sollīr,

kayal ār karuṅgaṇṇiyoḍum uḍan āgi

iyalbāy irumbūḷai iḍam koṇḍa īsan

muyalvār iruvarkku eri āgiya moymbē.


pāḍal eṇ : 10

tuṇai nanmalar tūyt toḻum toṇḍargaḷ sollīr,

paṇai-men-mulaip pārppadiyōḍu uḍan āgi

iṇai-il irumbūḷai iḍam koṇḍa īsan

aṇaivu-il samaṇ sākkiyam ākkiyavāṟē.


pāḍal eṇ : 11

endai irumbūḷai iḍam koṇḍa īsan

sandam payil saṇbaiyuḷ ñāna-sambandan

sendaṇ- tamiḻ seppiya pattu ivai vallār

bandam aṟuttu ōṅguvar pānmaiyinālē.

=====================================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam)


"tiru-irumbūḷai" devotees welcome Sambandar

पॆरियपुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 400

देवर्-पिरान् अमर्न्द तिरुविरुम्बूळै सॆण्ड्रॆय्दक्,

कावणम् नीळ्-तोरणङ्गळ् नाट्टि, उडन् कळिसिऱप्पप्

पू-वण-मालैगळ् नाट्रिप्, पूरण-पॊऱ्‌कुडम् निरैत्तु, अङ्गु

यावर्गळुम् पोट्रिसैप्पत् तिरुत्तॊण्डर् ऎदिर्गॊण्डार्.


Sambandar goes inside the temple and worships Siva

पॆरियपुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 401

वण्-तमिऴिन् मॊऴि-विरगर् मणिमुत्तिन् सिविगैयिनैत्

तॊण्डर्-कुऴात्तु ऎदिर् इऴिन्दु, अङ्गु अवर् तॊऴत् तामुम् तॊऴुदे,

अण्डर्-पिरान् कोयिलिनै अणैन्दु इऱैञ्जि, मुन् निण्ड्रु,

पण्-तरुम् इन्निसैप्-पदिगम् परम्बॊरुळैप् पाडुवार्,


Sambandar sings a padhigam (in the form of questions)

पॆरियपुराणम् - 12.28 - तिरुञानसम्बन्दर् पुराणम् - 402

निगर्-इला मेरु-वरै अणु आग नीण्डानै,

नुगर्गिण्ड्र तॊण्डर्-तमक्कु अमुदु आगि नॊय्यानैत्,

तगवु ऒण्ड्र अडियार्गळ्-तमै विनवित्, तमिऴ्-विरगर्

पगर्गिण्ड्र अरुमऱैयिन् पॊरुळ् विरियप् पाडिनार्.


सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.36 - तिरुविरुम्बूळै - (विनावुरै) (पण् - इन्दळम्)

(तनना तनना तनना तनदाना - Rhythm)

पाडल् ऎण् : 1

सीर् आर् कऴले तॊऴुवीर् इदु सॆप्पीर्,

वार् आर् मुलै-मङ्गैयॊडुम् उडन् आगि

एर् आर् इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

कार् आर् कडल्-नञ्जु अमुदु-उण्ड करुत्ते.


पाडल् ऎण् : 2

तॊऴल्-आर् कऴले तॊऴु-तॊण्डर्गळ् सॊल्लीर्,

कुऴल् आर् मॊऴिक्-कोल्वळैयोडु उडन् आगि

ऎऴिल् आर् इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

कऴल्दान् करिगानिडै आडु-करुत्ते.


पाडल् ऎण् : 3

अन्बाल् अडि कैदॊऴुवीर् अऱियीरे,

मिन्बोल् मरुङ्गुल् मडवाळॊडुम् मेवि

इन्बाय् इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

पॊन्बोल् सडैयिल् पुनल् वैत्त पॊरुळे.


पाडल् ऎण् : 4

नच्चित् तॊऴुवीर्गळ् नमक्कु इदु सॊल्लीर्,

कच्चिप् पॊलि-कामक्कॊडियुडन् कूडि

इच्चित्तु इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

उच्चित् तलैयिल् पलिगॊण्डु उऴल्-ऊणे.


पाडल् ऎण् : 5

सुट्रु आर्न्दु अडिये तॊऴुवीर् इदु सॊल्लीर्,

नल्-ताऴ्-कुऴल् नङ्गैयॊडुम् उडन् आगि,

ऎट्रे, इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

पुट्रु-आडु-अरवोडु ऎन्बु पूण्ड पॊरुळे.


पाडल् ऎण् : 6

तोडु आर् मलर् तूय्त् तॊऴु-तॊण्डर्गळ् सॊल्लीर्,

सेडु आर् कुऴऱ्‌-सेयिऴैयोडु उडन् आगि

ईडाय् इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

काडु आर् कडु-वेडुवन् आन करुत्ते.


पाडल् ऎण् : 7

***** This verse is lost *****


पाडल् ऎण् : 8

ऒरुक्कुम् मनत्तु अन्बर्-उळ्ळीर् इदु सॊल्लीर्,

परुक्-कै मद-वेऴम् उरित्तु, उमैयोडुम्

इरुक्कै इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

अरक्कन् उरम् तीर्त्तु अरुळ् आक्कियवाऱे.


पाडल् ऎण् : 9

तुयरायिन नीङ्गित् तॊऴुम् तॊण्डर् सॊल्लीर्,

कयल् आर् करुङ्गण्णियॊडुम् उडन् आगि

इयल्बाय् इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

मुयल्वार् इरुवर्क्कु ऎरि आगिय मॊय्म्बे.


पाडल् ऎण् : 10

तुणै नन्मलर् तूय्त् तॊऴुम् तॊण्डर्गळ् सॊल्लीर्,

पणै-मॆन्-मुलैप् पार्प्पदियोडु उडन् आगि

इणै-इल् इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

अणैवु-इल् समण् साक्कियम् आक्कियवाऱे.


पाडल् ऎण् : 11

ऎन्दै इरुम्बूळै इडम् कॊण्ड ईसन्

सन्दम् पयिल् सण्बैयुळ् ञान-सम्बन्दन्

सॆन्दण्- तमिऴ् सॆप्पिय पत्तु इवै वल्लार्

बन्दम् अऱुत्तु ओङ्गुवर् पान्मैयिनाले.

=====================================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


"tiru-irumbūḷai" devotees welcome Sambandar

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 400

దేవర్-పిరాన్ అమర్న్ద తిరువిరుంబూళై సెండ్రెయ్దక్,

కావణం నీళ్-తోరణంగళ్ నాట్టి, ఉడన్ కళిసిఱప్పప్

పూ-వణ-మాలైగళ్ నాట్రిప్, పూరణ-పొఱ్కుడం నిరైత్తు, అంగు

యావర్గళుం పోట్రిసైప్పత్ తిరుత్తొండర్ ఎదిర్గొండార్.


Sambandar goes inside the temple and worships Siva

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 401

వణ్-తమిఴిన్ మొఴి-విరగర్ మణిముత్తిన్ సివిగైయినైత్

తొండర్-కుఴాత్తు ఎదిర్ ఇఴిందు, అంగు అవర్ తొఴత్ తాముం తొఴుదే,

అండర్-పిరాన్ కోయిలినై అణైందు ఇఱైంజి, మున్ నిండ్రు,

పణ్-తరుం ఇన్నిసైప్-పదిగం పరంబొరుళైప్ పాడువార్,


Sambandar sings a padhigam (in the form of questions)

పెరియపురాణం - 12.28 - తిరుఞానసంబందర్ పురాణం - 402

నిగర్-ఇలా మేరు-వరై అణు ఆగ నీండానై,

నుగర్గిండ్ర తొండర్-తమక్కు అముదు ఆగి నొయ్యానైత్,

తగవు ఒండ్ర అడియార్గళ్-తమై వినవిత్, తమిఴ్-విరగర్

పగర్గిండ్ర అరుమఱైయిన్ పొరుళ్ విరియప్ పాడినార్.


సంబందర్ తేవారం - పదిగం 2.36 - తిరువిరుంబూళై - (వినావురై) (పణ్ - ఇందళం)

(తననా తననా తననా తనదానా - Rhythm)

పాడల్ ఎణ్ : 1

సీర్ ఆర్ కఴలే తొఴువీర్ ఇదు సెప్పీర్,

వార్ ఆర్ ములై-మంగైయొడుం ఉడన్ ఆగి

ఏర్ ఆర్ ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

కార్ ఆర్ కడల్-నంజు అముదు-ఉండ కరుత్తే.


పాడల్ ఎణ్ : 2

తొఴల్-ఆర్ కఴలే తొఴు-తొండర్గళ్ సొల్లీర్,

కుఴల్ ఆర్ మొఴిక్-కోల్వళైయోడు ఉడన్ ఆగి

ఎఴిల్ ఆర్ ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

కఴల్దాన్ కరిగానిడై ఆడు-కరుత్తే.


పాడల్ ఎణ్ : 3

అన్బాల్ అడి కైదొఴువీర్ అఱియీరే,

మిన్బోల్ మరుంగుల్ మడవాళొడుం మేవి

ఇన్బాయ్ ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

పొన్బోల్ సడైయిల్ పునల్ వైత్త పొరుళే.


పాడల్ ఎణ్ : 4

నచ్చిత్ తొఴువీర్గళ్ నమక్కు ఇదు సొల్లీర్,

కచ్చిప్ పొలి-కామక్కొడియుడన్ కూడి

ఇచ్చిత్తు ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

ఉచ్చిత్ తలైయిల్ పలిగొండు ఉఴల్-ఊణే.


పాడల్ ఎణ్ : 5

సుట్రు ఆర్న్దు అడియే తొఴువీర్ ఇదు సొల్లీర్,

నల్-తాఴ్-కుఴల్ నంగైయొడుం ఉడన్ ఆగి,

ఎట్రే, ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

పుట్రు-ఆడు-అరవోడు ఎన్బు పూండ పొరుళే.


పాడల్ ఎణ్ : 6

తోడు ఆర్ మలర్ తూయ్త్ తొఴు-తొండర్గళ్ సొల్లీర్,

సేడు ఆర్ కుఴఱ్-సేయిఴైయోడు ఉడన్ ఆగి

ఈడాయ్ ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

కాడు ఆర్ కడు-వేడువన్ ఆన కరుత్తే.


పాడల్ ఎణ్ : 7

***** This verse is lost *****


పాడల్ ఎణ్ : 8

ఒరుక్కుం మనత్తు అన్బర్-ఉళ్ళీర్ ఇదు సొల్లీర్,

పరుక్-కై మద-వేఴం ఉరిత్తు, ఉమైయోడుం

ఇరుక్కై ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

అరక్కన్ ఉరం తీర్త్తు అరుళ్ ఆక్కియవాఱే.


పాడల్ ఎణ్ : 9

తుయరాయిన నీంగిత్ తొఴుం తొండర్ సొల్లీర్,

కయల్ ఆర్ కరుంగణ్ణియొడుం ఉడన్ ఆగి

ఇయల్బాయ్ ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

ముయల్వార్ ఇరువర్క్కు ఎరి ఆగియ మొయ్మ్బే.


పాడల్ ఎణ్ : 10

తుణై నన్మలర్ తూయ్త్ తొఴుం తొండర్గళ్ సొల్లీర్,

పణై-మెన్-ములైప్ పార్ప్పదియోడు ఉడన్ ఆగి

ఇణై-ఇల్ ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

అణైవు-ఇల్ సమణ్ సాక్కియం ఆక్కియవాఱే.


పాడల్ ఎణ్ : 11

ఎందై ఇరుంబూళై ఇడం కొండ ఈసన్

సందం పయిల్ సణ్బైయుళ్ ఞాన-సంబందన్

సెందణ్- తమిఴ్ సెప్పియ పత్తు ఇవై వల్లార్

బందం అఱుత్తు ఓంగువర్ పాన్మైయినాలే.

=====================================


No comments:

Post a Comment