Friday, July 1, 2022

8.5 - திருவாசகம் - திருச்சதகம் - 1-10 - thiruvAsagam - thiruchadhagam

111) 8.5 - திருவாசகம் - திருச்சதகம் - 1-10 - thiruvAsagam - thiruchadhagam

திருவாசகம் - திருச்சதகம் - பதிகம் 8.5 – (1-10 - மெய்யுணர்தல்)

tiruvāsagam - tiruccadagam - padigam 8.5 - (1-10 - mey uṇardal )


Here are the links to verses and audio of this padhigam's discussion:

Verses: PDF: 8.5 - திருவாசகம் - திருச்சதகம் - 1-10 - thiruvAsagam - thiruchadhagam

***

On YouTube:

Tamil discussion:

Part-1: https://youtu.be/H-E3sRPpJu0

Part-2: https://youtu.be/Dmw1J8lhmy0

English discussion:

Part-1:

Part-2:

***

V. Subramanian

===================== ================

This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.


திருவாசகம் - திருச்சதகம் - 8.5 - (songs 1-10 - மெய்யுணர்தல்)


திருச்சதகம் - இது அந்தாதித்தொடை அமைந்த 100 பாட்டுகளால் ஆன பகுதி. ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒரு செய்யுள் அமைப்பில் அமைந்து 10 வகைச் செய்யுள்களால் ஆன பகுதி.


திருவாசகத்தில் இந்தத் திருச்சதகப் பகுதியைப் "பத்தி வைராக்கிய விசித்திரம்‌" என்றும், இச்சதகத்தில் முதற்பத்தை "மெய்யுணர்தல்" என்றும் முன்னோர் குறித்துள்ளனர்.

தண்டபாணி தேசிகர் எழுதிய திருவாசக விளக்கவுரை நூலில் காணும் குறிப்பிலிருந்து:

பத்தியையும்‌ வைராக்கியத்தையும்‌ வியக்கத்தக்க தன்மையின்‌ வைத்து விளக்கிச்‌ செல்வதால்‌, இதன்‌ கருத்து "பத்தி வைராக்கிய விசித்திரம்‌" எனப்பட்டது. ( பக்தி - இறைவன்மேல் அன்பு; வைராக்கியம்‌ - உலகப்‌ பொருள்கள்மேல் இருந்த பற்று நீங்குதல்).

மெய்யுணர்தல்‌ - நிலையான இன்பத்தையும்‌ இன்பப்பொருளாகிய இறைவனையும்‌ அனுபவத்தால் உணர்தல்‌. ( மெய்‌ - அநாதிநித்தியப்‌ பொருளாகிய இறை. உணர்தல் - தேகாதி பிரபஞ்சங்களைக்‌ கண்டு நீங்கி, இறைவனை உணர்தல்‌).

==========


திருவாசகம் - திருச்சதகம் - 8.5 - (songs 1-10 - மெய்யுணர்தல் )

(கட்டளைக் கலித்துறை - meter)

பாடல் எண் : 1

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்

கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.


பாடல் எண் : 2

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்

நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்

எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறினிறைவா

உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே.


பாடல் எண் : 3

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்துருகி

மத்த மனத்தொடு மாலிவன் என்ன மனநினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவருந்

தத்தம் மனத்தன பேசவெஞ் ஞான்றுகொல் சாவதுவே.


பாடல் எண் : 4

சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி

ஆவவெந் தாயென் றவிதா விடும்நம் மவரவரே

மூவரென் றேயெம்பி ரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல்

தேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே.


பாடல் எண் : 5

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன்

அவமே பிறந்த அருவினை யேனுனக் கன்பருள்ளாஞ்

சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின் திருவடிக்காம்

பவமே யருளுகண் டாயடி யேற்கெம் பரம்பரனே.


பாடல் எண் : 6

பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி யேயிறைஞ்சி

இரந்தவெல் லாம்எமக் கேபெற லாமென்னும் அன்பருள்ளம்

கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்கும்

நிரந்தர மாயரு ளாய்நின்னை ஏத்த முழுவதுமே.


பாடல் எண் : 7

முழுவதுங் கண்டவ னைப்படைத் தான்முடி சாய்த்துமுன்னாள்

செழுமலர் கொண்டெங்குந் தேடவப் பாலனிப் பாலெம்பிரான்

கழுதொடு காட்டிடை நாடக மாடிக் கதியிலியாய்

உழுவையின் தோலுடுத் துன்மத்தம் மேல்கொண் டுழிதருமே.


பாடல் எண் : 8

உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும்

இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின்

உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக்

கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே.


பாடல் எண் : 9

பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்

சிவனெம் பிரானென்னை ஆண்டுகொண் டானென் சிறுமைகண்டும்

அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே

புவனெம் பிரான்தெரி யும்பரி சாவ தியம்புகவே.


பாடல் எண் : 10

புகவே தகேனுனக் கன்பருள் யானென்பொல் லாமணியே

தகவே எனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை

மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்தியண் ணாவமுதே

நகவே தகுமெம் பிரானென்னை நீசெய்த நாடகமே.

==================

Word separated version:


திருவாசகம் - திருச்சதகம் - 8.5 - (songs 1-10 - மெய் உணர்தல் )

(கட்டளைக் கலித்துறை - meter)

பாடல் எண் : 1

மெய்தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு என்

கைதான் தலை வைத்துக், கண்ணீர் ததும்பி, வெதும்பி உள்ளம்

பொய்தான் தவிர்ந்து, உன்னைப், "போற்றி; சயசய; போற்றி" என்னும்

கைதான் நெகிழ விடேன்; உடையாய்; என்னைக் கண்டுகொள்ளே.


பாடல் எண் : 2

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு; குடிகெடினும்

நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்

எள்ளேன், திருவருளாலே இருக்கப் பெறின்; இறைவா;

உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது, எங்கள் உத்தமனே.


பாடல் எண் : 3

உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்து-உருகி,

மத்த மனத்தொடு, மால் இவன் என்ன மன-நினைவில்

ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து, எவரும்

தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்றுகொல் சாவதுவே.


பாடல் எண் : 4

சாவ முன்னாள் தக்கன், வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி

"ஆவ; எந்தாய்" என்று அவிதா இடும் நம்மவர் அவரே

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு, மண்மேல்

தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம், திரிதவரே.


பாடல் எண் : 5

தவமே புரிந்திலன்; தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்;

அவமே பிறந்த அருவினையேன், உனக்கு அன்பருள் ஆம்

சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம்

பவமே அருளு-கண்டாய் அடியேற்கு, எம் பரம்பரனே.


பாடல் எண் : 6

பரந்து, பல் ஆய்-மலர் இட்டு, முட்டாது அடியே இறைஞ்சி,

இரந்த எல்லாம் எமக்கே பெறல் ஆம் என்னும் அன்பர் உள்ளம்

கரந்து-நில்லாக் கள்வனே, நின்றன் வார்-கழற்கு அன்பு எனக்கும்

நிரந்தரமாய் அருளாய், நின்னை ஏத்த முழுவதுமே.


பாடல் எண் : 7

முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன்னாள்

செழுமலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன்; இப்பால் எம்பிரான்,

கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக், கதியிலியாய்,

உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே.


பாடல் எண் : 8

உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும்

இழிதரு காலம் எக்காலம் வருவது? வந்ததற்பின்,

உழிதரு காலத்த, உன் அடியேன் செய்த வல்வினையைக்

கழிதரு காலமும் ஆய், அவை காத்து, ம்மைக் காப்பவனே.


பாடல் எண் : 9

பவன் எம்பிரான்; பனி மா-மதிக்-கண்ணி, விண்ணோர் பெருமான்;

சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்;

அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப்-பரிசே,

புவன், எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.


பாடல் எண் : 10

புகவே தகேன் உனக்கு அன்பருள் யான்; என் பொல்லா-மணியே;

தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப்-புன்மையரை

மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா; அமுதே;

நகவே தகும், எம்பிரான்; என்னை நீ செய்த நாடகமே?

===================== ===============

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


tiruvāsagam - tiruccadagam - 8.5 - (songs 1-10 - mey uṇardal )

(kaṭṭaḷaik kalittuṟai - meter)


pāḍal eṇ : 1

meydān arumbi, vidirvidirttu, un virai ār kaḻaṟku en

kaidān talai vaittuk, kaṇṇīr tadumbi, vedumbi uḷḷam

poydān tavirndu, unnaip, "pōṭri; sayasaya; pōṭri" ennum

kaidān negiḻa viḍēn; uḍaiyāy; ennaik kaṇḍugoḷḷē.


pāḍal eṇ : 2

koḷḷēn purandaran māl ayan vāḻvu; kuḍigeḍinum

naḷḷēn ninadu aḍiyāroḍu allāl; naragam puginum

eḷḷēn, tiruvaruḷālē irukkap peṟin; iṟaivā;

uḷḷēn piṟa deyvam unnai allādu, eṅgaḷ uttamanē.


pāḍal eṇ : 3

uttaman, attan, uḍaiyān aḍiyē ninaindu-urugi,

matta manattoḍu, māl ivan enna mana-ninaivil

ottana ottana solliḍa ūrūr tirindu, evarum

tattam manattana pēsa eññāṇḍrugol sāvaduvē.


pāḍal eṇ : 4

sāva munnāḷ takkan, vēḷvit tagar tiṇḍru, nañjam añji

"āva; endāy" eṇḍru avidā iḍum nammavar avarē

mūvar eṇḍrē embirānoḍum eṇṇi viṇ āṇḍu, maṇmēl

dēvar eṇḍrē iṟumāndu, enna pāvam, tiridavarē.


pāḍal eṇ : 5

tavamē purindilan; taṇmalar iṭṭu muṭṭādu iṟaiñjēn;

avamē piṟanda aruvinaiyēn, unakku anbaruḷ ām

sivamē peṟum tiru eydiṭrilēn; nin tiruvaḍikku ām

bavamē aruḷu-kaṇḍāy aḍiyēṟku, em parambaranē.


pāḍal eṇ : 6

parandu, pal āy-malar iṭṭu, muṭṭādu aḍiyē iṟaiñji,

iranda ellām emakkē peṟal ām ennum anbar uḷḷam

karandu-nillāk kaḷvanē, niṇḍran vār-kaḻaṟku anbu enakkum

nirandaramāy aruḷāy, ninnai ētta muḻuvadumē.


pāḍal eṇ : 7

muḻuvadum kaṇḍavanaip paḍaittān muḍi sāyttu munnāḷ

seḻumalar koṇḍu eṅgum tēḍa appālan; ippāl embirān,

kaḻudoḍu kāṭṭiḍai nāḍagam āḍik, kadiyiliyāy,

uḻuvaiyin tōl uḍuttu, unmattam mēlgoṇḍu uḻidarumē.


pāḍal eṇ : 8

uḻidaru kālum, kanalum, punaloḍu, maṇṇum, viṇṇum

iḻidaru kālam ekkālam varuvadu? vandadaṟpin,

uḻidaru kālatta, un aḍiyēn seyda valvinaiyaik

kaḻidaru kālamum āy, avai kāttu, emmaik kāppavanē.


pāḍal eṇ : 9

bavan embirān; pani mā-madik-kaṇṇi, viṇṇōr perumān;

sivan embirān ennai āṇḍugoṇḍān, en siṟumai kaṇḍum;

avan embirān enna, nān aḍiyēn enna, ip-parisē,

buvan, embirān teriyum parisu āvadu iyambugavē.


pāḍal eṇ : 10

pugavē tagēn unakku anbaruḷ yān; en pollā-maṇiyē;

tagavē, enai unakku āṭkoṇḍa tanmai? ep-punmaiyarai

migavē uyartti, viṇṇōraip paṇitti; aṇṇā; amudē;

nagavē tagum, embirān; ennai nī seyda nāḍagamē?

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam; )


तिरुवासगम् - तिरुच्चदगम् - 8.5 - (songs 1-10 - मॆय् उणर्दल् )

(कट्टळैक् कलित्तुऱै - meter)


पाडल् ऎण् : 1

मॆय्दान् अरुम्बि, विदिर्विदिर्त्तु, उन् विरै आर् कऴऱ्‌कु ऎन्

कैदान् तलै वैत्तुक्, कण्णीर् तदुम्बि, वॆदुम्बि उळ्ळम्

पॊय्दान् तविर्न्दु, उन्नैप्, "पोट्रि; सयसय; पोट्रि" ऎन्नुम्

कैदान् नॆगिऴ विडेन्; उडैयाय्; ऎन्नैक् कण्डुगॊळ्ळे.


पाडल् ऎण् : 2

कॊळ्ळेन् पुरन्दरन् माल् अयन् वाऴ्वु; कुडिगॆडिनुम्

नळ्ळेन् निनदु अडियारॊडु अल्लाल्; नरगम् पुगिनुम्

ऎळ्ळेन्, तिरुवरुळाले इरुक्कप् पॆऱिन्; इऱैवा;

उळ्ळेन् पिऱ दॆय्वम् उन्नै अल्लादु, ऎङ्गळ् उत्तमने.


पाडल् ऎण् : 3

उत्तमन्, अत्तन्, उडैयान् अडिये निनैन्दु-उरुगि,

मत्त मनत्तॊडु, माल् इवन् ऎन्न मन-निनैविल्

ऒत्तन ऒत्तन सॊल्लिड ऊरूर् तिरिन्दु, ऎवरुम्

तत्तम् मनत्तन पेस ऎञ्ञाण्ड्रुगॊल् सावदुवे.


पाडल् ऎण् : 4

साव मुन्नाळ् तक्कन्, वेळ्वित् तगर् तिण्ड्रु, नञ्जम् अञ्जि

"आव; ऎन्दाय्" ऎण्ड्रु अविदा इडुम् नम्मवर् अवरे

मूवर् ऎण्ड्रे ऎम्बिरानॊडुम् ऎण्णि विण् आण्डु, मण्मेल्

देवर् ऎण्ड्रे इऱुमान्दु, ऎन्न पावम्, तिरिदवरे.


पाडल् ऎण् : 5

तवमे पुरिन्दिलन्; तण्मलर् इट्टु मुट्टादु इऱैञ्जेन्;

अवमे पिऱन्द अरुविनैयेन्, उनक्कु अन्बरुळ् आम्

सिवमे पॆऱुम् तिरु ऎय्दिट्रिलेन्; निन् तिरुवडिक्कु आम्

बवमे अरुळु-कण्डाय् अडियेऱ्‌कु, ऎम् परम्बरने.


पाडल् ऎण् : 6

परन्दु, पल् आय्-मलर् इट्टु, मुट्टादु अडिये इऱैञ्जि,

इरन्द ऎल्लाम् ऎमक्के पॆऱल् आम् ऎन्नुम् अन्बर् उळ्ळम्

करन्दु-निल्लाक् कळ्वने, निण्ड्रन् वार्-कऴऱ्‌कु अन्बु ऎनक्कुम्

निरन्दरमाय् अरुळाय्, निन्नै एत्त मुऴुवदुमे.


पाडल् ऎण् : 7

मुऴुवदुम् कण्डवनैप् पडैत्तान् मुडि साय्त्तु मुन्नाळ्

सॆऴुमलर् कॊण्डु ऎङ्गुम् तेड अप्पालन्; इप्पाल् ऎम्बिरान्,

कऴुदॊडु काट्टिडै नाडगम् आडिक्, कदियिलियाय्,

उऴुवैयिन् तोल् उडुत्तु, उन्मत्तम् मेल्गॊण्डु उऴिदरुमे.


पाडल् ऎण् : 8

उऴिदरु कालुम्, कनलुम्, पुनलॊडु, मण्णुम्, विण्णुम्

इऴिदरु कालम् ऎक्कालम् वरुवदु? वन्ददऱ्‌पिन्,

उऴिदरु कालत्त, उन् अडियेन् सॆय्द वल्विनैयैक्

कऴिदरु कालमुम् आय्, अवै कात्तु, ऎम्मैक् काप्पवने.


पाडल् ऎण् : 9

बवन् ऎम्बिरान्; पनि मा-मदिक्-कण्णि, विण्णोर् पॆरुमान्;

सिवन् ऎम्बिरान् ऎन्नै आण्डुगॊण्डान्, ऎन् सिऱुमै कण्डुम्;

अवन् ऎम्बिरान् ऎन्न, नान् अडियेन् ऎन्न, इप्-परिसे,

बुवन्, ऎम्बिरान् तॆरियुम् परिसु आवदु इयम्बुगवे.


पाडल् ऎण् : 10

पुगवे तगेन् उनक्कु अन्बरुळ् यान्; ऎन् पॊल्ला-मणिये;

तगवे, ऎनै उनक्कु आट्कॊण्ड तन्मै? ऎप्-पुन्मैयरै

मिगवे उयर्त्ति, विण्णोरैप् पणित्ति; अण्णा; अमुदे;

नगवे तगुम्, ऎम्बिरान्; ऎन्नै नी सॆय्द नाडगमे?

================ ============

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )


తిరువాసగం - తిరుచ్చదగం - 8.5 - (songs 1-10 - మెయ్ ఉణర్దల్ )

(కట్టళైక్ కలిత్తుఱై - meter)


పాడల్ ఎణ్ : 1

మెయ్దాన్ అరుంబి, విదిర్విదిర్త్తు, ఉన్ విరై ఆర్ కఴఱ్కు ఎన్

కైదాన్ తలై వైత్తుక్, కణ్ణీర్ తదుంబి, వెదుంబి ఉళ్ళం

పొయ్దాన్ తవిర్న్దు, ఉన్నైప్, "పోట్రి; సయసయ; పోట్రి" ఎన్నుం

కైదాన్ నెగిఴ విడేన్; ఉడైయాయ్; ఎన్నైక్ కండుగొళ్ళే.


పాడల్ ఎణ్ : 2

కొళ్ళేన్ పురందరన్ మాల్ అయన్ వాఴ్వు; కుడిగెడినుం

నళ్ళేన్ నినదు అడియారొడు అల్లాల్; నరగం పుగినుం

ఎళ్ళేన్, తిరువరుళాలే ఇరుక్కప్ పెఱిన్; ఇఱైవా;

ఉళ్ళేన్ పిఱ దెయ్వం ఉన్నై అల్లాదు, ఎంగళ్ ఉత్తమనే.


పాడల్ ఎణ్ : 3

ఉత్తమన్, అత్తన్, ఉడైయాన్ అడియే నినైందు-ఉరుగి,

మత్త మనత్తొడు, మాల్ ఇవన్ ఎన్న మన-నినైవిల్

ఒత్తన ఒత్తన సొల్లిడ ఊరూర్ తిరిందు, ఎవరుం

తత్తం మనత్తన పేస ఎఞ్ఞాండ్రుగొల్ సావదువే.


పాడల్ ఎణ్ : 4

సావ మున్నాళ్ తక్కన్, వేళ్విత్ తగర్ తిండ్రు, నంజం అంజి

"ఆవ; ఎందాయ్" ఎండ్రు అవిదా ఇడుం నమ్మవర్ అవరే

మూవర్ ఎండ్రే ఎంబిరానొడుం ఎణ్ణి విణ్ ఆండు, మణ్మేల్

దేవర్ ఎండ్రే ఇఱుమాందు, ఎన్న పావం, తిరిదవరే.


పాడల్ ఎణ్ : 5

తవమే పురిందిలన్; తణ్మలర్ ఇట్టు ముట్టాదు ఇఱైంజేన్;

అవమే పిఱంద అరువినైయేన్, ఉనక్కు అన్బరుళ్ ఆం

సివమే పెఱుం తిరు ఎయ్దిట్రిలేన్; నిన్ తిరువడిక్కు ఆం

బవమే అరుళు-కండాయ్ అడియేఱ్కు, ఎం పరంబరనే.


పాడల్ ఎణ్ : 6

పరందు, పల్ ఆయ్-మలర్ ఇట్టు, ముట్టాదు అడియే ఇఱైంజి,

ఇరంద ఎల్లాం ఎమక్కే పెఱల్ ఆం ఎన్నుం అన్బర్ ఉళ్ళం

కరందు-నిల్లాక్ కళ్వనే, నిండ్రన్ వార్-కఴఱ్కు అన్బు ఎనక్కుం

నిరందరమాయ్ అరుళాయ్, నిన్నై ఏత్త ముఴువదుమే.


పాడల్ ఎణ్ : 7

ముఴువదుం కండవనైప్ పడైత్తాన్ ముడి సాయ్త్తు మున్నాళ్

సెఴుమలర్ కొండు ఎంగుం తేడ అప్పాలన్; ఇప్పాల్ ఎంబిరాన్,

కఴుదొడు కాట్టిడై నాడగం ఆడిక్, కదియిలియాయ్,

ఉఴువైయిన్ తోల్ ఉడుత్తు, ఉన్మత్తం మేల్గొండు ఉఴిదరుమే.


పాడల్ ఎణ్ : 8

ఉఴిదరు కాలుం, కనలుం, పునలొడు, మణ్ణుం, విణ్ణుం

ఇఴిదరు కాలం ఎక్కాలం వరువదు? వందదఱ్పిన్,

ఉఴిదరు కాలత్త, ఉన్ అడియేన్ సెయ్ద వల్వినైయైక్

కఴిదరు కాలముం ఆయ్, అవై కాత్తు, ఎమ్మైక్ కాప్పవనే.


పాడల్ ఎణ్ : 9

బవన్ ఎంబిరాన్; పని మా-మదిక్-కణ్ణి, విణ్ణోర్ పెరుమాన్;

సివన్ ఎంబిరాన్ ఎన్నై ఆండుగొండాన్, ఎన్ సిఱుమై కండుం;

అవన్ ఎంబిరాన్ ఎన్న, నాన్ అడియేన్ ఎన్న, ఇప్-పరిసే,

బువన్, ఎంబిరాన్ తెరియుం పరిసు ఆవదు ఇయంబుగవే.


పాడల్ ఎణ్ : 10

పుగవే తగేన్ ఉనక్కు అన్బరుళ్ యాన్; ఎన్ పొల్లా-మణియే;

తగవే, ఎనై ఉనక్కు ఆట్కొండ తన్మై? ఎప్-పున్మైయరై

మిగవే ఉయర్త్తి, విణ్ణోరైప్ పణిత్తి; అణ్ణా; అముదే;

నగవే తగుం, ఎంబిరాన్; ఎన్నై నీ సెయ్ద నాడగమే?

================ ============


No comments:

Post a Comment