Sunday, December 6, 2015

2.41 - மண் புகார் வான் புகுவர் - திருச்சாய்க்காடு - Thiruchaykkadu

21) padhigam 2.41 - திருச்சாய்க்காடு - Thiruchaykkadu
2.41 - மண் புகார் வான் புகுவர்

Verses - PDF: 2.41 - மண்புகார் வான்புகுவர் - maṇ pugār, vān puguvar

********
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/K2AqJHdUZ0E
Part-2: https://youtu.be/DMvp5TkW6KE

********
For English translation of this padhigam - by V. M. Subramanya Ayyar - at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS2_041.HTM

திருச்சாய்க்காடு - Thiruchaykkadu - சாயாவனேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=506

V. Subramanian
==================== ===============

Verses in original Tamil version & word separated Tamil / English / Devanagari / Telugu scripts

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.41 - திருச்சாய்க்காடு ( பண் : சீகாமரம் )

Background:

திருவலம்புரத்தை வழிபட்ட திருஞானசம்பந்தர், நீர்வளம் நிறைந்த சீர்வளர் சாய்க்காட்டைத் தொழுதற்கு நினைந்து சென்று, திருப்பல்லவனீச்சரத்தைப் பாடிப் பரவிப், பொன்னி சூழ் புகாரில் திருசாய்க்காட்டைத், திருத்தொண்டர் பலரும் எதிர்கொள்ளச் சென்று, வானளாவி உயர்ந்த திருவாயிலுள் வலங்கொண்டு, புகுந்து பணிந்து போற்றியது இத்திருப்பதிகம் .

----------

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=254

"திருமுறைத்தலங்கள்" - பு.மா. ஜெயசெந்தில்நாதன் - நூலிலிருந்து:

திருச்சாய்க்காடு (சாயாவனம்) - சோழநாட்டு (வடகரை)த் தலம்.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோயில். சாய் - கோரை. பசுமை + சாய் = பைஞ்சாய். (பைஞ்சாய் என்னும்) கோரை மிகுந்திருந்த தலமாதலின் சாய்க்காடு என்று பெயர் பெற்றதென்பர். காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறுதலங்களுள் இதுவும் ஒன்று. (ஏனையவை திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, ஸ்ரீ வாஞ்சியம்). இயற்பகை நாயனார் தம் மனைவியை இத்தலத்து எல்லைவரை அழைத்துவந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது வரலாறு.

சீர்காழி - பூம்புகார்ச் சாலையில் இத்தலம் உள்ளது. திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவு. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது.

---------

#2019 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 121

பன்னகப் பூணி னாரைப் பல்லவ னீச்ச ரத்துச்

சென்னியால் வணங்கி யேத்தித் திருந்திசைப் பதிகம் பாடிப்

பொன்னிசூழ் புகாரி னீடு புனிதர்தந் திருச்சாய்க் காட்டு

மன்னுசீர்த் தொண்ட ரெல்லா மகிழ்ந்தெதிர் கொள்ளப் புக்கார்.


#2020 - பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 122

வானள வுயர்ந்த வாயி லுள்வலங் கொண்டு புக்குத்

தேனலர் கொன்றை யார்தந் திருமுன்பு சென்று தாழ்ந்து

மானிடந் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண்பு கா"ரென்

றூனெலா முருக வேத்தி யுச்சிமேற் குவித்தார் செங்கை.

--------------


சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.41 - திருச்சாய்க்காடு ( பண் : சீகாமரம் )


பாடல் எண் : 1

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்

கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்

விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்

தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.


பாடல் எண் : 2

போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்

சாய்க்காடே பதியாக வுடையானும் விடையானும்

வாய்க்காடு முதுமரமே யிடமாக வந்தடைந்த

பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.


பாடல் எண் : 3

நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்

சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே

பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப

நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.


பாடல் எண் : 4

கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற

தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்

மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்

பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.


பாடல் எண் : 5

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்

பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பான்மதியந்

தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்

ஓங்கினா ரோங்கினா ரெனவுரைக்கு முலகமே.


பாடல் எண் : 6

சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்

தீந்தாக மெரிகொளுவச் செற்றுகந்தான் றிருமுடிமேல்

ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழு மலைமகடோள்

தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.


பாடல் எண் : 7

மங்குல்தோய் மணிமாட மதிதவழு நெடுவீதிச்

சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்

கொங்குலா வரிவண்டின் னிசைபாடு மலர்கொன்றைத்

தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.


பாடல் எண் : 8

தொடலரிய தொருகணையாற் புரமூன்று மெரியுண்ணப்

படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்

தடவரையாற் றடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை

இடவகையா வடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.


பாடல் எண் : 9

வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும்

ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை

தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்

தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.


பாடல் எண் : 10

குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் குலோவிப்போய்

அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரு மலர்தூற்றுந்

திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்

புறங்காட்டி லாடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.


பாடல் எண் : 11

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்

அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச்

சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்

எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே.

============================= ============================


Word separated version:

#2019 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 121

பன்னகப் பூணினாரைப் பல்லவனீச்சரத்துச்

சென்னியால் வணங்கி ஏத்தித், திருந்து-இசைப் பதிகம் பாடிப்,

பொன்னி-சூழ் புகாரில் நீடு புனிதர்தம் திருச்சாய்க்காட்டு

மன்னு-சீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்-கொள்ளப் புக்கார்.


#2020 - பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 122

வான்-அளவு உயர்ந்த வாயிலுள் வலங்கொண்டு புக்குத்,

தேன்-அலர் கொன்றையார்தம் திரு-முன்பு சென்று தாழ்ந்து,

மான் இடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண் புகார்" என்று

ஊன்-எலாம் உருக ஏத்தி, உச்சி-மேல் குவித்தார் செங்கை.

--------------

சம்பந்தர் தேவாரம் - பதிகம் 2.41 - திருச்சாய்க்காடு ( பண் : சீகாமரம் )

பாடல் எண் : 1

மண் புகார், வான் புகுவர், மனம் இளையார், பசியாலும்

கண் புகார், பிணிறியார், கற்றாரும் கேட்டாரும்,

விண் புகார் எ வேண்டா, வெண்-மாட நெடு-வீதித்

தண்-புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.


பாடல் எண் : 2

போய்க் காடே மறைந்துறைதல் புரிந்தானும், பூம்புகார்ச்

சாய்க்காடே பதியாக டையானும், விடையானும்,

வாய்க்-காடு முதுமரமே டமாக வந்து-டைந்த

பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே.


பாடல் எண் : 3

நீ நாளும் நன்-நெஞ்சே நினை-கண்டாய், ஆர் அறிவார்

சா-நாளும் வாழ்-நாளும்? சாய்க்காட்டு எம் பெருமாற்கே

பூ நாளும் தலை சுமப்பப், புகழ்-நாமம் செவி கேட்ப,

நா நாளும் நவின்று ஏத்தப், பெறலாமே நல்-வினையே.


பாடல் எண் : 4

கட்டு அலர்த்த மலர் தூவிக் கைதொழுமின், பொன்யன்ற

தட்டு அலர்த்த பூஞ்செருந்தி கோங்கு அமரும் தாழ்-பொழில்வாய்

மொட்டு அலர்த்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்-பூம்-

பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே.


பாடல் எண் : 5

கோங்கு அன்ன குவி-முலையாள் கொழும்-பணைத்-தோள் கொடி-டையைப்

பாங்கு என்ன வைத்துகந்தான், படர்-சடைமேல் பால்-மதியம்

தாங்கினான், பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்-நிழல்-கீழ்

ஓங்கினார் ஓங்கினார் எரைக்கும் உலகமே.


பாடல் எண் : 6

சாந்தாக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை முன்

தீந்து ஆம் எரி-கொளுவச் செற்றுகந்தான், திரு-முடிமேல்

ஓய்ந்து ஆ மதி-சூடி, ளி திகழும் மலைமகள் தோள்

தோய்ந்து ஆகம் பாகமா டையானும் விடையானே.


பாடல் எண் : 7

மங்குல்-தோய் மணி-மாட மதி-தவழும் நெடு-வீதிச்,

சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்,

கொங்குலா வரி-வண்டு இன்னிசை பாடு மலர்-கொன்றைத்

தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே.


பாடல் எண் : 8

தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி-ண்ணப்,

பட-ரவத்து எழில்-ரம் பூண்டான், பண்டு அரக்கனையும்

தட-வரையால் -வரைத்-தோள் ஊன்றினான் சாய்க்காட்டை

இடவகையா டைவோம் என்று எண்ணுவார்க்கு இர் இலையே.


பாடல் எண் : 9

வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும்

ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை;

தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம் பெருமானைத்

தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.


பாடல் எண் : 10

குறங்கு ஆட்டும் நால்-விரலில் கோவணத்துக்குலோவிப்போய்

அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர்-தூற்றும்

திறம் காட்டல் கேளாதே, தெளிவுடையீர் சென்று அடைமின்

புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.


பாடல் எண் : 11

நொம்-பைந்து புடைத்து ஒல்கு நூபுரம்-சேர் மெல்-அடியார்

அம்-பந்தும் வரிக்-கழலும் அரவம் செய் பூங்காழிச்

சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்

எம்பந்தம் எனக் கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே.

================== ==========================

Word separated version:

( Note: - strong (trill) ‘ra’ ; - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )


#2019 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 121

pannagap pūṇināraip pallavanīccarattuc

cenniyāl vaṇaṅgi ēttit, tirundu-isaip padigam pāḍip,

ponni-sūḻ pugāril nīḍu punidardam tiruccāykkāṭṭu

mannu-sīrt toṇḍar ellām magiḻndu edir-koḷḷap pukkār.


#2020 - periya purāṇam - tiruñāna sambandar purāṇam - 122

vān-aḷavu uyarnda vāyiluḷ valaṅgoṇḍu pukkut,

tēn-alar koṇḍraiyārdam tiru-munbu seṇḍru tāḻndu,

mān iḍam tarittār tammaip pōṭruvār "maṇ pugār" eṇḍru

ūn-elām uruga ētti, ucci-mēl kuvittār seṅgai.

--------------

sambandar tēvāram - padigam 2.41 - tiruccāykkāḍu ( paṇ : sīgāmaram )

pāḍal eṇ : 1

maṇ pugār, vān puguvar, manam iḷaiyār, pasiyālum

kaṇ pugār, piṇi aṟiyār, kaṭrārum kēṭṭārum,

viṇ pugār ena vēṇḍā, veṇ-māḍa neḍu-vīdit

taṇ-pugārc cāykkāṭṭu em talaivan tāḷ sārndārē.


pāḍal eṇ : 2

pōyk kāḍē maṟaindu uṟaidal purindānum, pūmbugārc

cāykkāḍē padiyāga uḍaiyānum, viḍaiyānum,

vāyk-kāḍu mudumaramē iḍamāga vandu-aḍainda

pēykku āḍal purindānum, periyōrgaḷ perumānē.


pāḍal eṇ : 3

nī nāḷum nan-neñjē ninai-kaṇḍāy, ār aṟivār

sā-nāḷum vāḻ-nāḷum? sāykkāṭṭu em perumāṟkē

pū nāḷum talai sumappap, pugaḻ-nāmam sevi kēṭpa,

nā nāḷum naviṇḍru ēttap, peṟalāmē nal-vinaiyē.


pāḍal eṇ : 4

kaṭṭu alartta malar tūvik kaidoḻumin, pon iyaṇḍra

taṭṭu alartta pūñjerundi kōṅgu amarum tāḻ-poḻilvāy

moṭṭu alartta taḍandāḻai murugu uyirkkum kāvirip-pūm-

paṭṭinattuc cāykkāṭṭu em paramēṭṭi pādamē.


pāḍal eṇ : 5

kōṅgu anna kuvi-mulaiyāḷ koḻum-paṇait-tōḷ koḍi-iḍaiyaip

pāṅgu enna vaittu ugandān, paḍar-saḍaimēl pāl-madiyam

tāṅginān, pūmbugārc cāykkāṭṭān tāḷ-niḻal-kīḻ

ōṅginār ōṅginār ena uraikkum ulagamē.


pāḍal eṇ : 6

sāndāga nīṟu aṇindān, sāykkāṭṭān, kāmanai mun

tīndu āgam eri-koḷuvac ceṭru ugandān, tiru-muḍimēl

ōyndu āra madi-sūḍi, oḷi tigaḻum malaimagaḷ tōḷ

tōyndu āgam pāgamā uḍaiyānum viḍaiyānē.


pāḍal eṇ : 7

maṅgul-tōy maṇi-māḍa madi-tavaḻum neḍu-vīdic,

caṅgu elām karai porudu tirai pulambum sāykkāṭṭān,

koṅgu ulā vari-vaṇḍu innisai pāḍu malar-koṇḍrait

toṅgalān aḍiyārkkuc cuvarkkaṅgaḷ poruḷ alavē.


pāḍal eṇ : 8

toḍal ariyadu oru kaṇaiyāl puram mūṇḍrum eri-uṇṇap,

paḍa-aravattu eḻil-āram pūṇḍān, paṇḍu arakkanaiyum

taḍa-varaiyāl taḍa-varait-tōḷ ūṇḍrinān sāykkāṭṭai

iḍavagaiyā aḍaivōm eṇḍru eṇṇuvārkku iḍar ilaiyē.


pāḍal eṇ : 9

vaiyam nīr ēṭrānum malar uṟaiyum nānmuganum

aiyanmār iruvarkkum aḷappu aridāl avan perumai;

taiyalār pāṭṭu ōvāc cāykkāṭṭu em perumānait

teyvamāp pēṇādār teḷivuḍaimai tēṟōmē.


pāḍal eṇ : 10

kuṟaṅgu āṭṭum nāl-viralil kōvaṇattukku ulōvippōy

aṟam kāṭṭum samaṇarum sākkiyarum alar-tūṭrum

tiṟam kāṭṭal kēḷādē, teḷivu uḍaiyīr seṇḍru aḍaimin

puṟaṅgāṭṭil āḍalān pūmbugārc cāykkāḍē.


pāḍal eṇ : 11

nom-paindu puḍaittu olgu nūburam-sēr mel-aḍiyār

am-pandum varik-kaḻalum aravam sey pūṅgāḻic

cambandan tamiḻ pagarnda sāykkāṭṭup pattinaiyum

embandam enak karudi ēttuvārkku iḍar keḍumē.

================== ==========================

Word separated version:

( Note: = short ‘e’; = short ‘o’; = strong (trill) ‘ra’ - ṟ ; = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam)


#2019 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 121

पन्नगप् पूणिनारैप् पल्लवनीच्चरत्तुच्

चॆन्नियाल् वणङ्गि एत्तित्, तिरुन्दु-इसैप् पदिगम् पाडिप्,

पॊन्नि-सूऴ् पुगारिल् नीडु पुनिदर्दम् तिरुच्चाय्क्काट्टु

मन्नु-सीर्त् तॊण्डर् ऎल्लाम् मगिऴ्न्दु ऎदिर्-कॊळ्ळप् पुक्कार्.


#2020 - पॆरिय पुराणम् - तिरुञान सम्बन्दर् पुराणम् - 122

वान्-अळवु उयर्न्द वायिलुळ् वलङ्गॊण्डु पुक्कुत्,

तेन्-अलर् कॊण्ड्रैयार्दम् तिरु-मुन्बु सॆण्ड्रु ताऴ्न्दु,

मान् इडम् तरित्तार् तम्मैप् पोट्रुवार् "मण् पुगार्" ऎण्ड्रु

ऊन्-ऎलाम् उरुग एत्ति, उच्चि-मेल् कुवित्तार् सॆङ्गै.

--------------

सम्बन्दर् तेवारम् - पदिगम् 2.41 - तिरुच्चाय्क्काडु ( पण् : सीगामरम् )

पाडल् ऎण् : 1

मण् पुगार्, वान् पुगुवर्, मनम् इळैयार्, पसियालुम्

कण् पुगार्, पिणि अऱियार्, कट्रारुम् केट्टारुम्,

विण् पुगार् ऎन वेण्डा, वॆण्-माड नॆडु-वीदित्

तण्-पुगार्च् चाय्क्काट्टु ऎम् तलैवन् ताळ् सार्न्दारे.


पाडल् ऎण् : 2

पोय्क् काडे मऱैन्दु उऱैदल् पुरिन्दानुम्, पूम्बुगार्च्

चाय्क्काडे पदियाग उडैयानुम्, विडैयानुम्,

वाय्क्-काडु मुदुमरमे इडमाग वन्दु-अडैन्द

पेय्क्कु आडल् पुरिन्दानुम्, पॆरियोर्गळ् पॆरुमाने.


पाडल् ऎण् : 3

नी नाळुम् नन्-नॆञ्जे निनै-कण्डाय्, आर् अऱिवार्

सा-नाळुम् वाऴ्-नाळुम्? साय्क्काट्टु ऎम् पॆरुमाऱ्‌के

पू नाळुम् तलै सुमप्पप्, पुगऴ्-नामम् सॆवि केट्प,

ना नाळुम् नविण्ड्रु एत्तप्, पॆऱलामे नल्-विनैये.


पाडल् ऎण् : 4

कट्टु अलर्त्त मलर् तूविक् कैदॊऴुमिन्, पॊन् इयण्ड्र

तट्टु अलर्त्त पूञ्जॆरुन्दि कोङ्गु अमरुम् ताऴ्-पॊऴिल्वाय्

मॊट्टु अलर्त्त तडन्दाऴै मुरुगु उयिर्क्कुम् काविरिप्-पूम्-

पट्टिनत्तुच् चाय्क्काट्टु ऎम् परमेट्टि पादमे.


पाडल् ऎण् : 5

कोङ्गु अन्न कुवि-मुलैयाळ् कॊऴुम्-पणैत्-तोळ् कॊडि-इडैयैप्

पाङ्गु ऎन्न वैत्तु उगन्दान्, पडर्-सडैमेल् पाल्-मदियम्

ताङ्गिनान्, पूम्बुगार्च् चाय्क्काट्टान् ताळ्-निऴल्-कीऴ्

ओङ्गिनार् ओङ्गिनार् ऎन उरैक्कुम् उलगमे.


पाडल् ऎण् : 6

सान्दाग नीऱु अणिन्दान्, साय्क्काट्टान्, कामनै मुन्

तीन्दु आगम् ऎरि-कॊळुवच् चॆट्रु उगन्दान्, तिरु-मुडिमेल्

ओय्न्दु आर मदि-सूडि, ऒळि तिगऴुम् मलैमगळ् तोळ्

तोय्न्दु आगम् पागमा उडैयानुम् विडैयाने.


पाडल् ऎण् : 7

मङ्गुल्-तोय् मणि-माड मदि-तवऴुम् नॆडु-वीदिच्,

चङ्गु ऎलाम् करै पॊरुदु तिरै पुलम्बुम् साय्क्काट्टान्,

कॊङ्गु उला वरि-वण्डु इन्निसै पाडु मलर्-कॊण्ड्रैत्

तॊङ्गलान् अडियार्क्कुच् चुवर्क्कङ्गळ् पॊरुळ् अलवे.


पाडल् ऎण् : 8

तॊडल् अरियदु ऒरु कणैयाल् पुरम् मूण्ड्रुम् ऎरि-उण्णप्,

पड-अरवत्तु ऎऴिल्-आरम् पूण्डान्, पण्डु अरक्कनैयुम्

तड-वरैयाल् तड-वरैत्-तोळ् ऊण्ड्रिनान् साय्क्काट्टै

इडवगैया अडैवोम् ऎण्ड्रु ऎण्णुवार्क्कु इडर् इलैये.


पाडल् ऎण् : 9

वैयम् नीर् एट्रानुम् मलर् उऱैयुम् नान्मुगनुम्

ऐयन्मार् इरुवर्क्कुम् अळप्पु अरिदाल् अवन् पॆरुमै;

तैयलार् पाट्टु ओवाच् चाय्क्काट्टु ऎम् पॆरुमानैत्

तॆय्वमाप् पेणादार् तॆळिवुडैमै तेऱोमे.


पाडल् ऎण् : 10

कुऱङ्गु आट्टुम् नाल्-विरलिल् कोवणत्तुक्कु उलोविप्पोय्

अऱम् काट्टुम् समणरुम् साक्कियरुम् अलर्-तूट्रुम्

तिऱम् काट्टल् केळादे, तॆळिवु उडैयीर् सॆण्ड्रु अडैमिन्

पुऱङ्गाट्टिल् आडलान् पूम्बुगार्च् चाय्क्काडे.


पाडल् ऎण् : 11

नॊम्-पैन्दु पुडैत्तु ऒल्गु नूबुरम्-सेर् मॆल्-अडियार्

अम्-पन्दुम् वरिक्-कऴलुम् अरवम् सॆय् पूङ्गाऴिच्

चम्बन्दन् तमिऴ् पगर्न्द साय्क्काट्टुप् पत्तिनैयुम्

ऎम्बन्दम् ऎनक् करुदि एत्तुवार्क्कु इडर् कॆडुमे.

================== ==========================

Word separated version:

( Note: = strong (trill) ‘ra’ - ; = ‘ழ’ - - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )

#2019 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 121

పన్నగప్ పూణినారైప్ పల్లవనీచ్చరత్తుచ్

చెన్నియాల్ వణంగి ఏత్తిత్, తిరుందు-ఇసైప్ పదిగం పాడిప్,

పొన్ని-సూఴ్ పుగారిల్ నీడు పునిదర్దం తిరుచ్చాయ్క్కాట్టు

మన్ను-సీర్త్ తొండర్ ఎల్లాం మగిఴ్న్దు ఎదిర్-కొళ్ళప్ పుక్కార్.


#2020 - పెరియ పురాణం - తిరుఞాన సంబందర్ పురాణం - 122

వాన్-అళవు ఉయర్న్ద వాయిలుళ్ వలంగొండు పుక్కుత్,

తేన్-అలర్ కొండ్రైయార్దం తిరు-మున్బు సెండ్రు తాఴ్న్దు,

మాన్ ఇడం తరిత్తార్ తమ్మైప్ పోట్రువార్ "మణ్ పుగార్" ఎండ్రు

ఊన్-ఎలాం ఉరుగ ఏత్తి, ఉచ్చి-మేల్ కువిత్తార్ సెంగై.

--------------

సంబందర్ తేవారం - పదిగం 2.41 - తిరుచ్చాయ్క్కాడు ( పణ్ : సీగామరం )

పాడల్ ఎణ్ : 1

మణ్ పుగార్, వాన్ పుగువర్, మనం ఇళైయార్, పసియాలుం

కణ్ పుగార్, పిణి అఱియార్, కట్రారుం కేట్టారుం,

విణ్ పుగార్ ఎన వేండా, వెణ్-మాడ నెడు-వీదిత్

తణ్-పుగార్చ్ చాయ్క్కాట్టు ఎం తలైవన్ తాళ్ సార్న్దారే.


పాడల్ ఎణ్ : 2

పోయ్క్ కాడే మఱైందు ఉఱైదల్ పురిందానుం, పూంబుగార్చ్

చాయ్క్కాడే పదియాగ ఉడైయానుం, విడైయానుం,

వాయ్క్-కాడు ముదుమరమే ఇడమాగ వందు-అడైంద

పేయ్క్కు ఆడల్ పురిందానుం, పెరియోర్గళ్ పెరుమానే.


పాడల్ ఎణ్ : 3

నీ నాళుం నన్-నెంజే నినై-కండాయ్, ఆర్ అఱివార్

సా-నాళుం వాఴ్-నాళుం? సాయ్క్కాట్టు ఎం పెరుమాఱ్కే

పూ నాళుం తలై సుమప్పప్, పుగఴ్-నామం సెవి కేట్ప,

నా నాళుం నవిండ్రు ఏత్తప్, పెఱలామే నల్-వినైయే.


పాడల్ ఎణ్ : 4

కట్టు అలర్త్త మలర్ తూవిక్ కైదొఴుమిన్, పొన్ ఇయండ్ర

తట్టు అలర్త్త పూంజెరుంది కోంగు అమరుం తాఴ్-పొఴిల్వాయ్

మొట్టు అలర్త్త తడందాఴై మురుగు ఉయిర్క్కుం కావిరిప్-పూం-

పట్టినత్తుచ్ చాయ్క్కాట్టు ఎం పరమేట్టి పాదమే.


పాడల్ ఎణ్ : 5

కోంగు అన్న కువి-ములైయాళ్ కొఴుం-పణైత్-తోళ్ కొడి-ఇడైయైప్

పాంగు ఎన్న వైత్తు ఉగందాన్, పడర్-సడైమేల్ పాల్-మదియం

తాంగినాన్, పూంబుగార్చ్ చాయ్క్కాట్టాన్ తాళ్-నిఴల్-కీఴ్

ఓంగినార్ ఓంగినార్ ఎన ఉరైక్కుం ఉలగమే.


పాడల్ ఎణ్ : 6

సాందాగ నీఱు అణిందాన్, సాయ్క్కాట్టాన్, కామనై మున్

తీందు ఆగం ఎరి-కొళువచ్ చెట్రు ఉగందాన్, తిరు-ముడిమేల్

ఓయ్న్దు ఆర మది-సూడి, ఒళి తిగఴుం మలైమగళ్ తోళ్

తోయ్న్దు ఆగం పాగమా ఉడైయానుం విడైయానే.


పాడల్ ఎణ్ : 7

మంగుల్-తోయ్ మణి-మాడ మది-తవఴుం నెడు-వీదిచ్,

చంగు ఎలాం కరై పొరుదు తిరై పులంబుం సాయ్క్కాట్టాన్,

కొంగు ఉలా వరి-వండు ఇన్నిసై పాడు మలర్-కొండ్రైత్

తొంగలాన్ అడియార్క్కుచ్ చువర్క్కంగళ్ పొరుళ్ అలవే.


పాడల్ ఎణ్ : 8

తొడల్ అరియదు ఒరు కణైయాల్ పురం మూండ్రుం ఎరి-ఉణ్ణప్,

పడ-అరవత్తు ఎఴిల్-ఆరం పూండాన్, పండు అరక్కనైయుం

తడ-వరైయాల్ తడ-వరైత్-తోళ్ ఊండ్రినాన్ సాయ్క్కాట్టై

ఇడవగైయా అడైవోం ఎండ్రు ఎణ్ణువార్క్కు ఇడర్ ఇలైయే.


పాడల్ ఎణ్ : 9

వైయం నీర్ ఏట్రానుం మలర్ ఉఱైయుం నాన్ముగనుం

ఐయన్మార్ ఇరువర్క్కుం అళప్పు అరిదాల్ అవన్ పెరుమై;

తైయలార్ పాట్టు ఓవాచ్ చాయ్క్కాట్టు ఎం పెరుమానైత్

తెయ్వమాప్ పేణాదార్ తెళివుడైమై తేఱోమే.


పాడల్ ఎణ్ : 10

కుఱంగు ఆట్టుం నాల్-విరలిల్ కోవణత్తుక్కు ఉలోవిప్పోయ్

అఱం కాట్టుం సమణరుం సాక్కియరుం అలర్-తూట్రుం

తిఱం కాట్టల్ కేళాదే, తెళివు ఉడైయీర్ సెండ్రు అడైమిన్

పుఱంగాట్టిల్ ఆడలాన్ పూంబుగార్చ్ చాయ్క్కాడే.


పాడల్ ఎణ్ : 11

నొం-పైందు పుడైత్తు ఒల్గు నూబురం-సేర్ మెల్-అడియార్

అం-పందుం వరిక్-కఴలుం అరవం సెయ్ పూంగాఴిచ్

చంబందన్ తమిఴ్ పగర్న్ద సాయ్క్కాట్టుప్ పత్తినైయుం

ఎంబందం ఎనక్ కరుది ఏత్తువార్క్కు ఇడర్ కెడుమే.

================== ==========================


No comments:

Post a Comment