93) 4.5 - மெய்யெலாம் வெண்ணீறு - திருவாரூர் - meyyelAm veNNIRu - Thiruvarur
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.5 – மெய்யெலாம் வெண்ணீறு - திருவாரூர் - (பண் - காந்தாரம்)
tirunāvukkarasar tēvāram - padigam 4.5 – meyyelām veṇṇīṟu - tiruvārūr - (paṇ - kāndāram)
Here are the links to verses and audio of this padhigam's discussion:
Verses: PDF: 4.5 - மெய்யெலாம் வெண்ணீறு - திருவாரூர் - meyyelAm veNNIRu - Thiruvarur
English translation – by V.M.Subramanya Ayyar: https://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS4_005.HTM
***
On YouTube:
Tamil discussion:
Part-1: https://youtu.be/nTIC17pkgHM
Part-2: https://youtu.be/lI-ovFZwQY4
English discussion:
***
You can find audio clips of Odhuvar singing this padhigam here:
Dharmapuram Swaminathan - https://www.youtube.com/watch?v=f9spnLmErhE
Madurai Pon. Muthukumaran: https://www.youtube.com/watch?v=fnFr_fsw2_0
***
V. Subramanian
===================== ================
This has verses in Tamil, English, Devanagari, Telugu scripts. Please print the pages you need.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.5 – திருவாரூர் - "பழமொழிப் பதிகம்" - (பண் - காந்தாரம்)
திருவாரூர் - மிகவும் பழமை மிக்க தலம். மிகப் பெரிய கோயில். (தஞ்சாவூரிலிருந்து கிழக்கே 60 கிமீ தூரத்தில் உள்ள தலம்; மயிலாடுதுறையிலிருந்து தெற்கே 40 கிமீ தூரத்தில் உள்ள தலம்).
Note: In this padhigam, Thirunavukkarasar thinks about his past and laments his folly of not worshiping Siva and following Jainism for a very long time. He concludes each song with a proverb analogy.
----------
Thirunavukkarasar sings "proverb" padhigam in Thiruvarur
#1489 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 224
செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின் முன்றேவா சிரியன் சார்ந்து
"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு மாரூ ரரைக்
கையினாற் றொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனே" னென்
றெய்தரிய கையறவாற் றிருப்பதிக மருள்செய்தங் கிருந்தா ரன்றே.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.5 – திருவாரூர் - "பழமொழிப் பதிகம்" - (பண் - காந்தாரம்)
(அறுசீர் விருத்தம் - meter)
பாடல் எண் : 1
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு மாரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே.
பாடல் எண் : 2
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த வாரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே.
பாடல் எண் : 3
பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங் குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி யாட்கொண்டு பிணிதீர்த்த வாரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே.
பாடல் எண் : 4
குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார் நகைநாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பாறலையிற் றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவ லருள்செய்யு மாரூ ரரைப்
பண்டெலா மறியாதே பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே.
பாடல் எண் : 5
துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற் றிடவுண்ட ஏழை யேனான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து பொருட்படுத்த வாரூ ரரை
என்னாகத் திருத்தாதே யேதன்போர்க் காதனா யகப்பட் டேனே.
பாடல் எண் : 6
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போது மடியவர்கட் காரமுதா மாரூ ரரை
எப்போதும் நினையாதே யிருட்டறையின் மலடுகறந் தெய்த்த வாறே.
பாடல் எண் : 7
கதியொன்று மறியாதே கண்ணழலத் தலைபறித்துக் கையி லுண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த வாரூரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகி யுய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே.
பாடல் எண் : 8
பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோடிக் கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை யாட்கொண்ட வாரூ ரரைப்
பாவியே னறியாதே பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே.
பாடல் எண் : 9
ஒட்டாத வாளவுணர் புரமூன்று மோரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை யாரூரி லம்மானை யார்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கி னேனே.
பாடல் எண் : 10
மறுத்தானொர் வல்லரக்க னீரைந்து முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை யெழின்முளரித் தவிசின்மிசை யிருந்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை யாரூரி லம்மானை யாலால முண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே.
============ ============
Word separated version:
Thirunavukkarasar sings "proverb" padhigam in Thiruvarur
#1489 - பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 224
செய்ய-மா-மணி ஒளி-சூழ் திரு-முன்றில்-முன் தேவாசிரியன் சார்ந்து,
"கொய்-உலாம் மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால் தொழாது-ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன்" என்று
எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து-அங்கு இருந்தார் அன்றே.
திருநாவுக்கரசர் தேவாரம் - பதிகம் 4.5 – திருவாரூர் - "பழமொழிப் பதிகம்" - (பண் - காந்தாரம்)
(அறுசீர் விருத்தம் - meter)
பாடல் எண் : 1
மெய்-எலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யல்-ஆம் என்று எண்ணி உறி-தூக்கி உழி-தந்து என் உள்ளம் விட்டுக்
கொய்-உலாம் மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால் தொழாது-ஒழிந்து, கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே.
பாடல் எண் : 2
என்பு இருத்தி நரம்பு தோல் புகப் பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள்செய்த ஆரூரர்தம்
முன்பு இருக்கும் விதி இன்றி, முயல்-விட்டுக் காக்கைப்பின் போனவாறே.
பாடல் எண் : 3
பெருகுவித்து என் பாவத்தைப் பண்டு-எலாம் குண்டர்கள்தம் சொல்லே கேட்டு,
உருகுவித்து, என் உள்ளத்தின் உள்-இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்துப், பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்தம்
அருகு இருக்கும் விதி இன்றி, அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே.
பாடல் எண் : 4
குண்டனாய்த் தலை பறித்துக் குவி-முலையார் நகை நாணாது உழிதர்வேனைப்
பண்டமாப் படுத்து என்னைப் பால் தலையில் தெளித்துத் தன் பாதம் காட்டித்
தொண்டு-எலாம் இசை-பாடத் தூ-முறுவல் அருள்செய்யும் ஆரூரரைப்
பண்டு-எலாம் அறியாதே பனி-நீரால் பாவை-செயப் பாவித்தேனே.
பாடல் எண் : 5
துன்-நாகத்தேன் ஆகித், துர்ச்சனவர் சொல் கேட்டுத், துவர் வாய்க் கொண்டு **
என்-ஆகத் திரிதந்து ஈங்கு இருகை ஏற்றிட உண்ட ஏழையேன் நான்
பொன்-ஆகத்து அடியேனைப் புகப்-பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே.
(** துன்னாகத்தேன் = துன் நாகத்தேன் / துன் ஆகத்தேன்)
பாடல் எண் : 6
பப்பு ஓதிப் பவணனாய்ப் பறித்தது-ஒரு தலையோடே திரிதர்வேனை
ஒப்பு-ஓட ஓதுவித்து என் உள்ளத்தின் உள்-இருந்து அங்கு உறுதி காட்டி
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை
எப்போதும் நினையாதே, இருட்டு-அறையில் மலடு கறந்து எய்த்தவாறே.
பாடல் எண் : 7
கதி-ஒன்றும் அறியாதே கண்-அழலத் தலை பறித்துக் கையில் உண்டு
பதி ஒன்றும் நெடுவீதிப் பலர் காண நகை-நாணாது உழிதர்வேற்கு
மதி தந்த ஆரூரில் வார்-தேனை வாய்-மடுத்துப் பருகி உய்யும்
விதி-இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினித்-தீக் காய்ந்தவாறே.
பாடல் எண் : 8
பூவையாய்த் தலை பறித்துப் பொறி அற்ற சமண்-நீசர் சொல்லே கேட்டுக்
காவி-சேர் கண்-மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே பாழூரில் பயிக்கம் புக்கு எய்த்தவாறே.
பாடல் எண் : 9
ஒட்டாத வாள்-அவுணர் புரம்-மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானைக், காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானைச் சாராதே, தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே.
பாடல் எண் : 10
மறுத்தான்-ஒர் வல்-அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித் தவிசின்மிசை இருந்தான்றன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே, கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே.
============ ============
Word separated version:
( Note: ṟ - strong (trill) ‘ra’ ; ḻ - ‘ழ’ - retroflex letter in Tamil / Malayalam )
Thirunavukkarasar sings "proverb" padhigam in Thiruvarur
#1489 - periya purāṇam - tirunāvukkarasu nāyanār purāṇam - 224
seyya-mā-maṇi oḷi-sūḻ tiru-muṇḍril-mun dēvāsiriyan sārndu,
"koy-ulām malarccōlaik kuyil kūva mayil ālum ārūraraik
kaiyināl toḻādu-oḻindu kani irukkak kāy kavarnda kaḷvanēn" eṇḍru
eydariya kaiyaṟavāl tiruppadigam aruḷseydu-aṅgu irundār aṇḍrē.
tirunāvukkarasar tēvāram - padigam 4.5 – tiruvārūr - "paḻamoḻip padigam" - (paṇ - kāndāram)
(aṟusīr viruttam - meter)
pāḍal eṇ : 1
mey-elām veṇṇīṟu saṇṇitta mēniyān tāḷ toḻādē
uyyal-ām eṇḍru eṇṇi uṟi-tūkki uḻi-tandu en uḷḷam viṭṭuk
koy-ulām malarccōlaik kuyil kūva mayil ālum ārūraraik
kaiyināl toḻādu-oḻindu, kani irukkak kāy kavarnda kaḷvanēnē.
pāḍal eṇ : 2
enbu irutti narambu tōl pugap peydiṭṭu ennai ōr uruvam ākki,
inbu irutti, munbu irunda vinai tīrttiṭṭu en uḷḷam kōyil ākki,
anbu irutti aḍiyēnaik kūḻāṭkoṇḍu aruḷseyda ārūrardam
munbu irukkum vidi iṇḍri, muyal-viṭṭuk kākkaippin pōnavāṟē.
pāḍal eṇ : 3
peruguvittu en pāvattaip paṇḍu-elām kuṇḍargaḷdam sollē kēṭṭu,
uruguvittu, en uḷḷattin uḷ-irunda kaḷḷattait taḷḷip pōkki,
aruguvittup, piṇi kāṭṭi āṭkoṇḍu piṇi tīrtta ārūrardam
arugu irukkum vidi iṇḍri, aṟam irukka maṟam vilaikkuk koṇḍavāṟē.
pāḍal eṇ : 4
kuṇḍanāyt talai paṟittuk kuvi-mulaiyār nagai nāṇādu uḻidarvēnaip
paṇḍamāp paḍuttu ennaip pāl talaiyil teḷittut tan pādam kāṭṭit
toṇḍu-elām isai-pāḍat tū-muṟuval aruḷseyyum ārūraraip
paṇḍu-elām aṟiyādē pani-nīrāl pāvai-seyap pāvittēnē.
pāḍal eṇ : 5
tun-nāgattēn āgit, turccanavar sol kēṭṭut, tuvar vāyk koṇḍu **
en-āgat tiridandu īṅgu irugai ēṭriḍa uṇḍa ēḻaiyēn nān
pon-āgattu aḍiyēnaip pugap-peydu poruṭpaḍutta ārūrarai
en āgattu iruttādē ēdan pōrkku ādanāy agappaṭṭēnē.
(** tunnāgattēn = tun nāgattēn / tun āgattēn)
pāḍal eṇ : 6
pappu ōdip pavaṇanāyp paṟittadu-oru talaiyōḍē tiridarvēnai
oppu-ōḍa ōduvittu en uḷḷattin uḷ-irundu aṅgu uṟudi kāṭṭi
appōdaikku appōdum aḍiyavargaṭku āramudu ām ārūrarai
eppōdum ninaiyādē, iruṭṭu-aṟaiyil malaḍu kaṟandu eyttavāṟē.
pāḍal eṇ : 7
gadi-oṇḍrum aṟiyādē kaṇ-aḻalat talai paṟittuk kaiyil uṇḍu
padi oṇḍrum neḍuvīdip palar kāṇa nagai-nāṇādu uḻidarvēṟku
madi tanda ārūril vār-tēnai vāy-maḍuttup parugi uyyum
vidi-iṇḍri madiyiliyēn viḷakku irukka minminit-tīk kāyndavāṟē.
pāḍal eṇ : 8
pūvaiyāyt talai paṟittup poṟi aṭra samaṇ-nīsar sollē kēṭṭuk
kāvi-sēr kaṇ-maḍavārk kaṇḍu ōḍik kadavu aḍaikkum kaḷvanēṇḍran
āviyaip pōgāmē tavirttu ennai āṭkoṇḍa ārūraraip
pāviyēn aṟiyādē pāḻūril payikkam pukku eyttavāṟē.
pāḍal eṇ : 9
oṭṭāda vāḷ-avuṇar puram-mūṇḍrum ōr ambin vāyin vīḻak
kaṭṭānaik, kāmanaiyum kālanaiyum kaṇṇinoḍu kālin vīḻa
aṭṭānai, ārūril ammānai, ārvac ceṭrak kurōdam
taṭṭānaic cārādē, tavam irukka avam seydu tarukkinēnē.
pāḍal eṇ : 10
maṟuttān-or val-arakkan īr-aindu muḍiyinoḍu tōḷum tāḷum
iṟuttānai, eḻil muḷarit tavisinmisai irundāṇḍran talaiyil oṇḍrai
aṟuttānai, ārūril ammānai, ālālam uṇḍu kaṇḍam
kaṟuttānaik karudādē, karumbu irukka irumbu kaḍittu eyttavāṟē.
============ ============
Word separated version:
( Note: ऎ = short ‘e’; ऒ = short ‘o’; ऱ = strong (trill) ‘ra’ - ṟ ; ऴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam; )
Thirunavukkarasar sings "proverb" padhigam in Thiruvarur
#1489 - पॆरिय पुराणम् - तिरुनावुक्करसु नायनार् पुराणम् - 224
सॆय्य-मा-मणि ऒळि-सूऴ् तिरु-मुण्ड्रिल्-मुन् देवासिरियन् सार्न्दु,
"कॊय्-उलाम् मलर्च्चोलैक् कुयिल् कूव मयिल् आलुम् आरूररैक्
कैयिनाल् तॊऴादु-ऒऴिन्दु कनि इरुक्कक् काय् कवर्न्द कळ्वनेन्" ऎण्ड्रु
ऎय्दरिय कैयऱवाल् तिरुप्पदिगम् अरुळ्सॆय्दु-अङ्गु इरुन्दार् अण्ड्रे.
तिरुनावुक्करसर् तेवारम् - पदिगम् 4.5 – तिरुवारूर् - "पऴमॊऴिप् पदिगम्" - (पण् - कान्दारम्)
(अऱुसीर् विरुत्तम् - meter)
पाडल् ऎण् : 1
मॆय्-ऎलाम् वॆण्णीऱु सण्णित्त मेनियान् ताळ् तॊऴादे
उय्यल्-आम् ऎण्ड्रु ऎण्णि उऱि-तूक्कि उऴि-तन्दु ऎन् उळ्ळम् विट्टुक्
कॊय्-उलाम् मलर्च्चोलैक् कुयिल् कूव मयिल् आलुम् आरूररैक्
कैयिनाल् तॊऴादु-ऒऴिन्दु, कनि इरुक्कक् काय् कवर्न्द कळ्वनेने.
पाडल् ऎण् : 2
ऎन्बु इरुत्ति नरम्बु तोल् पुगप् पॆय्दिट्टु ऎन्नै ओर् उरुवम् आक्कि,
इन्बु इरुत्ति, मुन्बु इरुन्द विनै तीर्त्तिट्टु ऎन् उळ्ळम् कोयिल् आक्कि,
अन्बु इरुत्ति अडियेनैक् कूऴाट्कॊण्डु अरुळ्सॆय्द आरूरर्दम्
मुन्बु इरुक्कुम् विदि इण्ड्रि, मुयल्-विट्टुक् काक्कैप्पिन् पोनवाऱे.
पाडल् ऎण् : 3
पॆरुगुवित्तु ऎन् पावत्तैप् पण्डु-ऎलाम् कुण्डर्गळ्दम् सॊल्ले केट्टु,
उरुगुवित्तु, ऎन् उळ्ळत्तिन् उळ्-इरुन्द कळ्ळत्तैत् तळ्ळिप् पोक्कि,
अरुगुवित्तुप्, पिणि काट्टि आट्कॊण्डु पिणि तीर्त्त आरूरर्दम्
अरुगु इरुक्कुम् विदि इण्ड्रि, अऱम् इरुक्क मऱम् विलैक्कुक् कॊण्डवाऱे.
पाडल् ऎण् : 4
कुण्डनाय्त् तलै पऱित्तुक् कुवि-मुलैयार् नगै नाणादु उऴिदर्वेनैप्
पण्डमाप् पडुत्तु ऎन्नैप् पाल् तलैयिल् तॆळित्तुत् तन् पादम् काट्टित्
तॊण्डु-ऎलाम् इसै-पाडत् तू-मुऱुवल् अरुळ्सॆय्युम् आरूररैप्
पण्डु-ऎलाम् अऱियादे पनि-नीराल् पावै-सॆयप् पावित्तेने.
पाडल् ऎण् : 5
तुन्-नागत्तेन् आगित्, तुर्च्चनवर् सॊल् केट्टुत्, तुवर् वाय्क् कॊण्डु **
ऎन्-आगत् तिरिदन्दु ईङ्गु इरुगै एट्रिड उण्ड एऴैयेन् नान्
पॊन्-आगत्तु अडियेनैप् पुगप्-पॆय्दु पॊरुट्पडुत्त आरूररै
ऎन् आगत्तु इरुत्तादे एदन् पोर्क्कु आदनाय् अगप्पट्टेने.
(** तुन्नागत्तेन् = तुन् नागत्तेन् / तुन् आगत्तेन्)
पाडल् ऎण् : 6
पप्पु ओदिप् पवणनाय्प् पऱित्तदु-ऒरु तलैयोडे तिरिदर्वेनै
ऒप्पु-ओड ओदुवित्तु ऎन् उळ्ळत्तिन् उळ्-इरुन्दु अङ्गु उऱुदि काट्टि
अप्पोदैक्कु अप्पोदुम् अडियवर्गट्कु आरमुदु आम् आरूररै
ऎप्पोदुम् निनैयादे, इरुट्टु-अऱैयिल् मलडु कऱन्दु ऎय्त्तवाऱे.
पाडल् ऎण् : 7
गदि-ऒण्ड्रुम् अऱियादे कण्-अऴलत् तलै पऱित्तुक् कैयिल् उण्डु
पदि ऒण्ड्रुम् नॆडुवीदिप् पलर् काण नगै-नाणादु उऴिदर्वेऱ्कु
मदि तन्द आरूरिल् वार्-तेनै वाय्-मडुत्तुप् परुगि उय्युम्
विदि-इण्ड्रि मदियिलियेन् विळक्कु इरुक्क मिन्मिनित्-तीक् काय्न्दवाऱे.
पाडल् ऎण् : 8
पूवैयाय्त् तलै पऱित्तुप् पॊऱि अट्र समण्-नीसर् सॊल्ले केट्टुक्
कावि-सेर् कण्-मडवार्क् कण्डु ओडिक् कदवु अडैक्कुम् कळ्वनेण्ड्रन्
आवियैप् पोगामे तविर्त्तु ऎन्नै आट्कॊण्ड आरूररैप्
पावियेन् अऱियादे पाऴूरिल् पयिक्कम् पुक्कु ऎय्त्तवाऱे.
पाडल् ऎण् : 9
ऒट्टाद वाळ्-अवुणर् पुरम्-मूण्ड्रुम् ओर् अम्बिन् वायिन् वीऴक्
कट्टानैक्, कामनैयुम् कालनैयुम् कण्णिनॊडु कालिन् वीऴ
अट्टानै, आरूरिल् अम्मानै, आर्वच् चॆट्रक् कुरोदम्
तट्टानैच् चारादे, तवम् इरुक्क अवम् सॆय्दु तरुक्किनेने.
पाडल् ऎण् : 10
मऱुत्तान्-ऒर् वल्-अरक्कन् ईर्-ऐन्दु मुडियिनॊडु तोळुम् ताळुम्
इऱुत्तानै, ऎऴिल् मुळरित् तविसिन्मिसै इरुन्दाण्ड्रन् तलैयिल् ऒण्ड्रै
अऱुत्तानै, आरूरिल् अम्मानै, आलालम् उण्डु कण्डम्
कऱुत्तानैक् करुदादे, करुम्बु इरुक्क इरुम्बु कडित्तु ऎय्त्तवाऱे.
============ ============
Word separated version:
( Note: ఱ = strong (trill) ‘ra’ - ṟ ; ఴ = ‘ழ’ - ḻ - retroflex letter in Tamil / Malayalam / old Kannada / old Telugu; )
Thirunavukkarasar sings "proverb" padhigam in Thiruvarur
#1489 - పెరియ పురాణం - తిరునావుక్కరసు నాయనార్ పురాణం - 224
సెయ్య-మా-మణి ఒళి-సూఴ్ తిరు-ముండ్రిల్-మున్ దేవాసిరియన్ సార్న్దు ,
"కొయ్-ఉలాం మలర్చ్చోలైక్ కుయిల్ కూవ మయిల్ ఆలుం ఆరూరరైక్
కైయినాల్ తొఴాదు-ఒఴిందు కని ఇరుక్కక్ కాయ్ కవర్న్ద కళ్వనేన్" ఎండ్రు
ఎయ్దరియ కైయఱవాల్ తిరుప్పదిగం అరుళ్సెయ్దు-అంగు ఇరుందార్ అండ్రే.
తిరునావుక్కరసర్ తేవారం - పదిగం 4.5 – తిరువారూర్ - "పఴమొఴిప్ పదిగం" - (పణ్ - కాందారం)
(అఱుసీర్ విరుత్తం - meter)
పాడల్ ఎణ్ : 1
మెయ్-ఎలాం వెణ్ణీఱు సణ్ణిత్త మేనియాన్ తాళ్ తొఴాదే
ఉయ్యల్-ఆం ఎండ్రు ఎణ్ణి ఉఱి-తూక్కి ఉఴి-తందు ఎన్ ఉళ్ళం విట్టుక్
కొయ్-ఉలాం మలర్చ్చోలైక్ కుయిల్ కూవ మయిల్ ఆలుం ఆరూరరైక్
కైయినాల్ తొఴాదు-ఒఴిందు, కని ఇరుక్కక్ కాయ్ కవర్న్ద కళ్వనేనే.
పాడల్ ఎణ్ : 2
ఎన్బు ఇరుత్తి నరంబు తోల్ పుగప్ పెయ్దిట్టు ఎన్నై ఓర్ ఉరువం ఆక్కి,
ఇన్బు ఇరుత్తి, మున్బు ఇరుంద వినై తీర్త్తిట్టు ఎన్ ఉళ్ళం కోయిల్ ఆక్కి,
అన్బు ఇరుత్తి అడియేనైక్ కూఴాట్కొండు అరుళ్సెయ్ద ఆరూరర్దం
మున్బు ఇరుక్కుం విది ఇండ్రి, ముయల్-విట్టుక్ కాక్కైప్పిన్ పోనవాఱే.
పాడల్ ఎణ్ : 3
పెరుగువిత్తు ఎన్ పావత్తైప్ పండు-ఎలాం కుండర్గళ్దం సొల్లే కేట్టు,
ఉరుగువిత్తు, ఎన్ ఉళ్ళత్తిన్ ఉళ్-ఇరుంద కళ్ళత్తైత్ తళ్ళిప్ పోక్కి,
అరుగువిత్తుప్, పిణి కాట్టి ఆట్కొండు పిణి తీర్త్త ఆరూరర్దం
అరుగు ఇరుక్కుం విది ఇండ్రి, అఱం ఇరుక్క మఱం విలైక్కుక్ కొండవాఱే.
పాడల్ ఎణ్ : 4
కుండనాయ్త్ తలై పఱిత్తుక్ కువి-ములైయార్ నగై నాణాదు ఉఴిదర్వేనైప్
పండమాప్ పడుత్తు ఎన్నైప్ పాల్ తలైయిల్ తెళిత్తుత్ తన్ పాదం కాట్టిత్
తొండు-ఎలాం ఇసై-పాడత్ తూ-ముఱువల్ అరుళ్సెయ్యుం ఆరూరరైప్
పండు-ఎలాం అఱియాదే పని-నీరాల్ పావై-సెయప్ పావిత్తేనే.
పాడల్ ఎణ్ : 5
తున్-నాగత్తేన్ ఆగిత్, తుర్చ్చనవర్ సొల్ కేట్టుత్, తువర్ వాయ్క్ కొండు **
ఎన్-ఆగత్ తిరిదందు ఈంగు ఇరుగై ఏట్రిడ ఉండ ఏఴైయేన్ నాన్
పొన్-ఆగత్తు అడియేనైప్ పుగప్-పెయ్దు పొరుట్పడుత్త ఆరూరరై
ఎన్ ఆగత్తు ఇరుత్తాదే ఏదన్ పోర్క్కు ఆదనాయ్ అగప్పట్టేనే.
(** తున్నాగత్తేన్ = తున్ నాగత్తేన్ / తున్ ఆగత్తేన్)
పాడల్ ఎణ్ : 6
పప్పు ఓదిప్ పవణనాయ్ప్ పఱిత్తదు-ఒరు తలైయోడే తిరిదర్వేనై
ఒప్పు-ఓడ ఓదువిత్తు ఎన్ ఉళ్ళత్తిన్ ఉళ్-ఇరుందు అంగు ఉఱుది కాట్టి
అప్పోదైక్కు అప్పోదుం అడియవర్గట్కు ఆరముదు ఆం ఆరూరరై
ఎప్పోదుం నినైయాదే, ఇరుట్టు-అఱైయిల్ మలడు కఱందు ఎయ్త్తవాఱే.
పాడల్ ఎణ్ : 7
గది-ఒండ్రుం అఱియాదే కణ్-అఴలత్ తలై పఱిత్తుక్ కైయిల్ ఉండు
పది ఒండ్రుం నెడువీదిప్ పలర్ కాణ నగై-నాణాదు ఉఴిదర్వేఱ్కు
మది తంద ఆరూరిల్ వార్-తేనై వాయ్-మడుత్తుప్ పరుగి ఉయ్యుం
విది-ఇండ్రి మదియిలియేన్ విళక్కు ఇరుక్క మిన్మినిత్-తీక్ కాయ్న్దవాఱే.
పాడల్ ఎణ్ : 8
పూవైయాయ్త్ తలై పఱిత్తుప్ పొఱి అట్ర సమణ్-నీసర్ సొల్లే కేట్టుక్
కావి-సేర్ కణ్-మడవార్క్ కండు ఓడిక్ కదవు అడైక్కుం కళ్వనేండ్రన్
ఆవియైప్ పోగామే తవిర్త్తు ఎన్నై ఆట్కొండ ఆరూరరైప్
పావియేన్ అఱియాదే పాఴూరిల్ పయిక్కం పుక్కు ఎయ్త్తవాఱే.
పాడల్ ఎణ్ : 9
ఒట్టాద వాళ్-అవుణర్ పురం-మూండ్రుం ఓర్ అంబిన్ వాయిన్ వీఴక్
కట్టానైక్, కామనైయుం కాలనైయుం కణ్ణినొడు కాలిన్ వీఴ
అట్టానై, ఆరూరిల్ అమ్మానై, ఆర్వచ్ చెట్రక్ కురోదం
తట్టానైచ్ చారాదే, తవం ఇరుక్క అవం సెయ్దు తరుక్కినేనే.
పాడల్ ఎణ్ : 10
మఱుత్తాన్-ఒర్ వల్-అరక్కన్ ఈర్-ఐందు ముడియినొడు తోళుం తాళుం
ఇఱుత్తానై, ఎఴిల్ ముళరిత్ తవిసిన్మిసై ఇరుందాండ్రన్ తలైయిల్ ఒండ్రై
అఱుత్తానై, ఆరూరిల్ అమ్మానై, ఆలాలం ఉండు కండం
కఱుత్తానైక్ కరుదాదే, కరుంబు ఇరుక్క ఇరుంబు కడిత్తు ఎయ్త్తవాఱే.
============ ============
No comments:
Post a Comment